Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தோட நிற்கிற தொலைக்காட்சி எது?

Featured Replies

பனா... தீனா...வூனா ... மிகப்பெரிய ததே ஊடகம்?? உதை யாருட்டைச் சொல்லி அழ??

ஜேர்மனி பூசாரியும், ஐபிசி கலவையும் இணைந்து வந்தவுடனை நாங்கள் ததேஊ என்று நினைத்திட வேண்டுமாம்?

உந்த ஐபிசியிலையும், பழைய ரிரிஎன்னிலும் சில கும்பல் நல்ல வாழ்க்கை வாழுது!!!! பெயர் ததே!!! ஒண்டுக்கு மூடுவிழா நடத்தி ஒரு வருசமாக ஒண்டுமில்லாமல்(சுருட்டிக் கொண்டு இருந்து விட்டு, கையும் கடிக்கத் தொடங்கீட்டுது போலிருக்குது) இப்ப எது ததேயாம்???

எவ்வளவு காலத்துக்கு உந்த பதவிக்காகவும், பணத்துக்காகவும் எமாற்றிக் கொண்டு சில கும்பல்கள் புலத்தில் இருக்கப்போகிறார்களோ????? யாம் அறியோம் பராபரமே!!!!

இவர்களின் இந்தக் கூத்துகள் நிச்சயமாக இவர்களை சரியாக வழி நடத்த யாருமில்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது!!!

  • Replies 78
  • Views 15k
  • Created
  • Last Reply

புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் உருவாக வேண்டும்.

அப்போதுதான் பல கலைஞர்கள் உருவாகுவார்கள்.

வாய்ப்புகள் இன்றி இருக்கும் கலைஞர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

அப்போதுதான்

ஒரே ஒரு ஊடகத்தால்

சிலரை கொத்தடிமை தன்மையோடு வேலை வாங்கும் நிலை கூட

இல்லாதொழியும்.

ஒரே ஒரு தமிழ் ஊடகம் மட்டும் இருப்பது பல வகைகளில் ஆபத்தானது.

ஒரு ஊடகம் தடையானால்

இன்னொரு ஊடகம் அந்த பணியை தொடர வேண்டும்.

அதற்கான நிலைமைகளை தமிழ் ஊடகங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதற்கான செயல்பாடுகளை நினைப்போர் இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

முத்திரை குத்திக் கொண்டு மற்ற ஊடகங்களை இல்லாதொழிக்கும் நிலை மாற வேண்டும்.

அதை செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு யாருக்கு உண்டு என்று

நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ளத் தேவையில்லை?

தமிழர்களை பிரித்து சுயலாபம் தேடுவோர்

அதை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அல்லது

சம்பந்தப்பட்டவர்கள் அது குறித்து கரிசனை எடுத்து

அதை தடுக்க முயல வேண்டும்.

தமிழனுக்கு எதிரி அடுத்த இனத்தில் இருப்பதை விட

தமிழனுக்கு எதிரி தமிழனே!

இதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இருக்க முடியாது.

தமிழர் ஊடகம் ஒன்று வருவதைப் போல

இலங்கை அரசும் புலம் பெயர் நாடுகளில்

மாற்றுக் கருத்து கொண்டோரை வைத்து

தமிழ் ஊடகங்களை உருவாக்க முயல்கிறார்கள்.

இங்கே

மாற்றுக் கருத்துக் கொண்டேரை விட

தமிழ் ஊடகங்களால் ஒதுக்கப்பட்டவர்களை தேடும் படலம் தொடங்கி இருக்கிறது.

இதையெல்லாம் சிந்திக்கும் அறிவு வாய் சவடால் விடுவோருக்கு இருக்காது?

அசைவம் என்பதில் பிரச்சனையில்லை

சிலர் எலும்பையும் கழுத்தில் கோர்த்துக் கொண்டு சாப்பிட்டதால் வந்த வினை

இப்போது கூட யாருக்கும் படிப்பினையாகத் தெரியவில்லை?

அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்?

இல்லாவிட்டால்

நேற்று நடந்தது நாளை நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஒரு தமிழ் ஊடகம் வருவதற்காக

இருக்கும் ஊடகங்களை எதிரிகளாக்க நினைக்காதீர்கள்?

இன்று வரை அவர்கள் கரம் கொடுத்து இருக்கிறார்கள்.

அவர்கள் கரங்களை முறிக்க நினைக்காதீர்கள்.

அவர்கள் கரம் பற்றி தமிழர் புலத்திலாவது ஒற்றுமையாக முன்னேறும் வழிக்கு

முட்டாவது கொடுங்கள்.

பல ஆதரவாளர்களை தமிழர் இழந்ததற்கு இதுவும் ஒரு காரணம்?

அமைதியாக இருப்பவனை

அல்லது ஆதரவாக நிற்பவர்களை எதிரிகளாக்க

சுயநல நோக்கோடு பலர் அன்று தொட்டு செயல்பட்டே வந்திருக்கிறார்கள்.

வேற்று முத்திரைகளை குத்தி அன்னியப்பட வைத்திருக்கிறீர்கள்?

இவை குறித்து சிந்தியுங்கள்?

சும்மா அதிருதில்ல

எங்கட வருது

அவங்கட வருது எல்லாம் தேவையில்லை.

சிலர் செய்யும்

தான் தோன்றித்தனமான விளம்பரங்கள்

பலரை மீண்டும் யோசிக்க வைத்துள்ளது.

அடுத்த தடைக்கு வழி தேடுகிறார்கள்?

சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா?

ஐரோப்பாவுடன்

ஏனைய நாடுகள் இணையும் போது

ஐரோப்பிய சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டிய நிலை

அந்த நாடுகளுக்கு ஏற்படுகிறது.

இப்போது இணையாமல் இருக்கும் நாடுகள்

இணையும் தருணங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

அது காலத்தின் கட்டாயம்.

பலம் பொருந்திய

பண பலம் கொண்ட நாடுகளே

ஒன்றிணைய நினைக்கும் போது

தமிழர்கள் மட்டும் இணையாமல் இருப்பது

ஏன் என்று புரியவில்லை?

ஐரோப்பிய ஒன்றிய இணைவுகள் ஏற்படும் போது

மீண்டும் அதே பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்?

அது தேவையற்ற ஒன்று!

அதற்கான கவனம் ஆரம்பத்திலேயே தேவை.

Edited by AJeevan

http://www.yarl.com/forum3/index.php?showtopic=32501

அஜீவன்,

"விடிய விடிய ராமர் கதை, விடிந்த பின் .... என்ன முறையாம்?" என்பதை மாதிரி தான் உந்த ஊடகக் கதையும்!! இதை ததே புலத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் மட்டுமல்ல. களத்தில் இருப்பவர்களும் சிந்திக்கிறார்கள் இல்லை!!!! வேதனை!!!!!!

இங்கு உந்த ததே ஊடகங்களை ஒரு மாபியா பாணியில் சிலர் வைத்திருக்கப் பார்க்கிறார்கள்!!! பதவி/பணம் என்பவற்றை ருசித்தவர்கள்!!!

Edited by சோழன்

ஏன் ஜ.பி.சி வானொலி கூட நிகழ்ச்சிகள் தரம் குறைந்து எந்த அரசியல் விளிப்பூட்டல் கருத்துக்களும் இல்லாமல் ஜங்கரன் சினிமா வோடு நேரத்தை கழிப்பதாக பல நேயர்கள் குறை பட்டுக்கொள்கிறார்கள்.

அதுவும் இரவு 7மணியில் இருந்து ஒலிபரப்பாகும் லண்டன் நேயர்களுக்கான இரு மணி நேர ஒலிபரப்பு சும்மா வீணடிக்கப்படுவதாக குறை கூறுகின்றார்கள். மக்களை விழிப்பாக அரசியலோடு சேர்த்து வைத்திருக்க வேண்டிய கடமை இவை போன்ற வானொலிகளுக்கு உண்டு.

தமிழ் மக்களூக்கிடையே கருத்துரை பரப்பல் புலம் பெயர் நாடுகளில் கிட்டதட்ட இல்லாமல் போய்விட்டது என்ற நிலை தான் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில தமிழ், தமிழ்த்தேசியம் என்று கதைக்கிற சிலரின் வீடுகளில் இருப்பது சன் தொலைக்காட்சி. எங்கட தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு தர மாட்டினம்.ஒருவேளை இவர்களுக்கு தேசியத்தோடு நிற்கிற தொலைக்காட்சி சன் தொலைக்காட்சியா?.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு

எங்களின் தொலைக்காட்சி பார்க்கவில்லை என்ற உங்களின் ஆதங்கம் நியாயமானது தான். ஆனால் அதற்காக மற்றய ஊடகங்களைப் பார்க்காதே என்பது எல்லாம் சரியாகப்படவில்லை. சன்ரீவியைப் புறக்கணி என்பது அவசியமற்ற விடயம்.( குறுக்ஸ் தலைப்புப் போடாத வரைக்கும்:lol:)

எங்களின் வீட்டில் இருக்கின்ற சம்பவத்தைச் சொல்கின்றேன். என்னுடைய இரு சகோதரிகளில் ஐரோப்பாவில் வாழ்கின்ற சகோதரியின் பிள்ளைகள் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அவர்கள் அருகில் தமிழர்களும் இல்லை. தமிழ் வகுப்புக்களும் இல்லை. ஆனால் வடஅமெரிக்காவில் உள்ள சகோதரியின் பிள்ளைகள் தமிழில் பேசுவதற்குத் தடக்குப்படுவார்கள். பல தடவை ஏதோ அவர்கள் சொல்ல நான் வேறு புரிதலைக் கொண்டும் இருக்கின்றேன். இத்தனைக்கும் கனடாவில் நிறையத் தமிழர்கள், பிள்ளைகளுக்கு புதன் கிழமை அரசாங்கம் கற்பிக்கின்ற தமிழ்மொழிக் கல்விக்கும், ஞாயிற்றுக் கிழமை தமிழ் கல்வியகத்திற்கு(அக்கடமி) தமிழ் படிக்கவும் செல்கின்றார்கள்.

அப்படியிருந்தும் தமிழில் பெரியளவில் மாற்றம் வரவில்லை.

ஏன் என்றால் ஐரோப்பாவில் வீட்டில் தொலைக்காட்சியில் தமிழ் படங்கள், நாடகங்கள் தான் பார்ப்பார்கள். கனடாவில் பெரியளவில் இல்லை.

மொழி என்பது தொடர்ந்து பழக்கப்படும்போது, அல்லது அதில் குழந்தை காட்டுகின்ற ஈடுபாட்டால் தான் மொழிக்கு இசைவாக்கமாகும். குழந்தையை மேசையில் இரு;ததி தமிழ் படி என்றால் அது அவர்களுக்கு சுமையாகத் தான் மாறும்.

இதை ஏன் சொல்கின்றேன் என்றால் ஏதோ தமிழ் படங்களை, நிகழ்ச்சிகளைப் பார்த்து, தமிழைக் கொஞ்சக்காலமாவது பிராணத்தை எடுக்க விடுங்கள்.

அதைப் பார்க்காதே, இதைப் பார். இதைப் பார்க்காதே, அதைப் பார் என்று திட்டுப் போட்டு, நம்மவர்கள் தலையிடி வேண்டாம் என்று தங்கள் நாட்டு மொழில் அழிந்து போக வைக்காதீர்கள்.

ஏதொ பார்த்துத் தொலையட்டும். எல்லாத்துக்கும் விமர்சனம் வேண்டாம்.

தரிசனத்தில் தொழினுட்ப ரீதியாகவும் வழங்கப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் பல குறைபாடுகள் இருப்பது உண்மை. ஆனால் தமிழ் தேசியத்திற்கெதிரான செயற்பாடுகள் எதையும் அவர்கள் செய்யவில்லை. மாறாக தேசியம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை உரையாடல்களைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு தோலைக்காட்சிச் சேவையை ஆரம்பிப்பது தவறல்ல. ஆனால் இருக்கின் ஊடகத்திற்குத் துரோகிப் பட்டம் கட்டுவது தவறு (துரோகியாகச் செயற்படாத ஊடகத்திற்கு)

பல வேளைகளில் மண்டையை பிய்த்துக் கொள்ளும் விடயம்

பலர் தேசியம் என்று பேசும் வார்த்தை?

இப்போது தேசியத்துக்கு சார்பான தொலைக் காட்சி?

எமது யுத்த நிலவரம் குறித்து பேசுவது

நாட்டில் நடப்பதை மழுப்ப வார்த்தை ஜாலங்கள் புரிவது

இவற்றைத்தான் தேசியம் என்பதாய் உணர்கிறேன்.

ஒரு கட்சியை

அல்லது

ஒரு இயக்கத்தை

எமக்கு சார்பானவர்களை மட்டும் பேசுவது தேசியம் ஆகாது?

ஒரு நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் பற்றி பேசுவது

அவர்களுக்காக செயல்படுவது இதுதான் தேசியம்.

அனைத்து தமிழர் குறித்தும்

செயல்படுவது தமிழர் தேசியம்.

இல்லை என்றால் அது கட்சி?

அவன் சார்பானவனாகட்டும்

எதிரியாகட்டும்

சும்மா அவதூறு வார்த்தைகளை தவிர்த்து

நமது நியாயங்களை எடுத்துரைப்பது முக்கியமானது.

அதுவே பலன் தரும்.

அடுத்து நமக்கு சார்பாக இருப்பவனையும் எதிரியாக்க முனையும்

செயல்பாடுகளில் ஈடுபடுவது

தேசியமா?

புலம் பெயர் தமிழ் ஊடகங்களில்

நான் பார்த்த முக்கிய பிரச்சனை

திரைக்கு முன்னால் பேசக் கூடியவர்களை

அல்லது பணம் சேர்க்க கூடியவர்கள் மட்டுமே

இங்கு முக்கியமாக இருக்கிறார்கள்.

தேர்வு செய்கிறார்கள்.

தொழில் நுட்ப ரீதியாக எந்த அறிவும் இல்லாதவர்கள்

ஊடகங்களை நிர்வகிக்கிறார்கள்.

இதுவே ஏனைய தொலைக் காட்சிகள் பலம் பெறுவதற்கான காரணம்.

சண் தொலைக் காட்சியின் மாறன்

அன்று தொடங்கிய பூமாலை மாத வீடியோ சஞ்சிகை

கலைஞரின் அச்சுறுத்தலுக்கு பின்னும்

இன்றும் நம்பர் வண்தான்.

எத்தனை பேர் போனாலும் வந்தாலும்

அதை தொழில் நுட்ப ரீதியாக வீழ்த்த முடியாத நிலை.

அதை

வெற்றி பெற வைக்க முடிந்தவர்கள் வருகிறார்கள்.

பாதிப்பேர் கலைஞர் தொலைக் காட்சிக்கு

போய் விட்ட பின்னும்

பார்ப்பவர்களை இன்றும் கவர்ந்து நிற்கிறது சண்.

நம் தொலைக்காட்சிகள்

எவ்வளவு தூரம் பயணித்திருக்கின்றன என பார்த்தால்

சிந்தித்தால் உங்களுக்கே விடை கிடைக்கும்?

வந்த தினத்தை விட

அடுத்த நாள் மோசமாக இருக்கும்?

வந்தவர்கள்

கொத்தடிமையாக்கப்படுகிறார்

Edited by AJeevan

ஐரோப்பாவில் 4 புதிய தமிழ் தொலைக்காட்சிகள்?

சுவிஸில் 1

லண்டனில் 1

பிரான்ஸில் 2

சுவிஸ் மற்றும் பிரான்ஸிலிருந்து ஒளிபரப்பு

வெகு விரைவில்?

ஐரோப்பாவுக்குள் பல தொலைக் காட்சிகள் உருவாவது மகிழ்ச்சிக்குரியது.

பல கலைஞர்கள் உருவாக இது வாய்ப்பாக அமையும்.

இன்று ஐரோப்பாவில் உள்ள பல ஊடகங்களுக்கு

சுவிஸ் விளம்பரங்களே உதவுகின்றன.

அந்த வகையில் சுவிஸில் ஒரு தமிழ் தொலைக் காட்சியின் ஜனனம் என்பது

பலர் மனதிலும் இருந்த கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கிறது.

நல்ல தரமான படைப்புகள் இவை தர வேண்டும்.

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் 4 புதிய தமிழ் தொலைக்காட்சிகள்?

சுவிஸில் 1

லண்டனில் 1

பிரான்ஸில் 2

சுவிஸ் மற்றும் பிரான்ஸிலிருந்து ஒளிபரப்பு

வெகு விரைவில்?

இந்த செய்தி உண்மையா?

இவற்றில் ஏது இலவச தொலைக்காட்சி ?

இந்த செய்தி உண்மையா?

இவற்றில் ஏது இலவச தொலைக்காட்சி ?

அட பாவமே?

இலவசமா? :D

நேற்று ஒரு இடத்தில் வைத்து

தரிசனம் தொலைக் காட்சியை பார்க்க நேரிட்டது.

எனது வீட்டில் சட்லைட் பூட்ட தடை

எனவே நேற்று இந்த வாய்ப்பு கிடைத்தது.

மக்கள் தொலைக் காட்சிதான் தரிசனமாக வருகிறது!?

வீரப்பன் தொடருக்கு அடுத்து

செய்தி ஒளிபரப்பானது.

செய்தியில் கூட ஒட்டுக் குழுக்கள் என்ற வார்த்தையை பாவித்தது

பொறுப்பானவர்களுக்கு தொலைக் காட்சி தர்மமே இல்லாததை காட்டியது?

அப்படியான வார்த்தைகளை பொதுசன ஒளி - ஒலிபரப்புகளில்

தவிருங்கள்.

தனிப்பட்ட கருத்து வேறு

ஊடக தர்மம் வேறு

இவற்றை நாம் பாவிக்க இடங்களுண்டு.

ஒரு குழந்தை இதற்கு விளக்கம் கேட்டால்

என்ன பதில் சொல்வது?

குழந்தைகள் மேலத்தெய தொலைக் காட்சிகளையும்

எம்மையும் எடைபோடும்?

............................ :D

தவிரவும்

செய்தி வாசித்தவரது

தமிழ் உச்சரிப்பே சரியாக வரவில்லை?

இவர்களை பார்த்து

நம் குழந்தைகள் தவறாகவே தமிழ் கற்கும்?

தேசியம் குறித்து பேசும் எமது செய்தியாளர்கள்

டை கோட்டை

எப்போது கைவிடுவார்கள்?

ஆண்கள் மேலைத்தேய உடையணிந்தால்

பெண் செய்தி வாசிப்போரும்

மேலத்தேய உடைகளை அணிய விடலாமே?

என்னுள் எழுந்த கேள்விகள் இவை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியம் குறித்து பேசும் எமது செய்தியாளர்கள்

டை கோட்டை

எப்போது கைவிடுவார்கள்?

இதை பற்றி நானும் யோசிக்கிறனான்.

அதுசரி சுவிசில் இருந்து தொலைக்காட்சி உறுதிப்படுத்தப்பட்ட செய்தியா..?

இதை பற்றி நானும் யோசிக்கிறனான்.

அதுசரி சுவிசில் இருந்து தொலைக்காட்சி உறுதிப்படுத்தப்பட்ட செய்தியா..?

ஆம்.

தை பொங்கலுக்கு வர வேண்டும்.

சில வேளை சற்று தாமதமானாலும் வரும்.

இது ஒரு வர்த்தக தொலைக்காட்சி

அஜீவனிற்கு சற்றலைற் டிஸ் வீட்டில பூட்டத் தடை என்றதும் நல்ல விசயம் தான். வெளியில எங்கையோ அந்தரத்தில ஒருக்கா பாத்ததுக்கே இத்தனை கேள்விகள் எண்டா வீட்டில ஆறுதலாக இருந்து பார்த்தா :D

தவிரவும்

செய்தி வாசித்தவரது

தமிழ் உச்சரிப்பே சரியாக வரவில்லை?

இவர்களை பார்த்து

நம் குழந்தைகள் தவறாகவே தமிழ் கற்கும்?

தேசியம் குறித்து பேசும் எமது செய்தியாளர்கள்

டை கோட்டை

எப்போது கைவிடுவார்கள்?

ஆண்கள் மேலைத்தேய உடையணிந்தால்

பெண் செய்தி வாசிப்போரும்

மேலத்தேய உடைகளை அணிய விடலாமே?

என்னுள் எழுந்த கேள்விகள் இவை?

இதை எல்லாம் சொல்ல கூடாது ? சொன்னா உங்களுக்கு யூத கால விளக்கம், கூடவே துரோகிபட்டம் என கனக்க கிடைக்கும் :D

அஜீவனிற்கு சற்றலைற் டிஸ் வீட்டில பூட்டத் தடை என்றதும் நல்ல விசயம் தான். வெளியில எங்கையோ அந்தரத்தில ஒருக்கா பாத்ததுக்கே இத்தனை கேள்விகள் எண்டா வீட்டில ஆறுதலாக இருந்து பார்த்தா :D

:D ம்

என் விதி அது :D

சொல்ல வேண்டிய அனைத்தும் சொல்லி களைச்சு போனாங்க.........

அஜீவன் சிங்களவன்

தமிழன் என்று அகதி அந்தஸ்த்து கேட்டிருக்கிறான் என்று

போலீஸுக்கு பெட்டிசன் எல்லாம் போட்டாங்க......

இதை விட

நான் செய்து கொடுக்கும் விளம்பரங்களை

தொலைக் காட்சியில் போட மாட்டோம்.

என்று விளம்பரதாரருக்கு அட்வைஸ் பண்ணினவர்கள்

இன்று ஒதுக்கப்பட்டு இருக்கிறாங்க.

இல்லாமலே போனாங்க.........

இதுக்கு மேல எத்தனையோ செய்தாங்க...........

இப்பவும் தொடராம இல்ல.

நான்தான் மாறவே இல்ல :D

நான் வாழுறது சுவிஸில்

நான் வேலை செய்றது சுவிஸ்காரங்களோட.

சுவிஸ் ஊடகங்களுக்கு

அது நான் தேடியது................

தமிழ் என் தாய் மொழி

தமிழ்ல ஏதாவது படைப்பு ஒன்று செய்தா

அல்லது ஏதாவது செய்தா

அது பொழுது போக்குக்கு..................

என் ஆத்ம திருப்திக்கு.

யாழ்ல எழுதுறது கூட அப்படித்தான்.

இந்த லிங் கூட யாழ்ல முன் பக்கத்துக்கு வரல்ல.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry373627

யாரும் கோபப்படக் கூடாது.

ஒரு குப்பை தனத்தை எழுதுங்க

அது முன்பக்கத்துக்கு வரும்?

நல்லது வராது?

இனி நம்ம ஜனம் எங்க முன்னேறுறது? :wub:

கூட்டணி காரங்களை

எப்படி நாம ஒதுக்கினோமோ

அது மாதிரி

நாளைய சமுதாயம்

இப்படி இருந்தா நம்மையும் ஒதுக்கும்?

இதை நம்ம வீட்டிலயே பிள்ளைகளுக்கு

சொல்லி பாருங்க............

புரிஞ்சா இப்பவே காறித் துப்பும்!

விளம்பரமில்லாமல் உதவுறது உதவி

அதை யாருக்கு செய்ய வேணுமோ செய்றன்.

உண்மை பேசணும்.

அது தர்மம்.

நான் இங்க வரும் போது

யாரும் பிளைட் ஏத்தி விடல்ல.

இறங்கும் போது வவேற்கவும் இல்ல.

அதனால

துரோகி - எதிரி எது வேணாமானாலும் சொல்லட்டும்

வந்த நாடு சோறு போடுது

நான் சாகா வரம் பெற்றவனில்ல.

யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தா

நிம்மதியா தூங்கலாம்...............

அது சாவா வந்தாலும் சந்தோசம்தான். :D

Edited by AJeevan

இந்த லிங் கூட யாழ்ல முன் பக்கத்துக்கு வரல்ல.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry373627

யாழின் முன் பக்கத்திலிருக்கும் இணைப்புகள் RSS மூலம் தானியங்கியாக இணைக்கப்படுகிறது. கருத்துக் களத்திலுள்ள எல்லாப் பகுதிகளும் இவ்வாறு இணைக்கப் படுவதில்லை.

இப்போது முன் பக்கத்தில் தெரிகிறது.

யாழின் முன் பக்கத்திலிருக்கும் இணைப்புகள் RSS மூலம் தானியங்கியாக இணைக்கப்படுகிறது. கருத்துக் களத்திலுள்ள எல்லாப் பகுதிகளும் இவ்வாறு இணைக்கப் படுவதில்லை.

இப்போது முன் பக்கத்தில் தெரிகிறது.

மனிதன்தான் யந்திரத்தை இயக்குகிறான்

யந்திரம் மனிதனை இயக்குவதில்லை. :wub:

மனது வைத்தால் எல்லாம் முடியும்.

தமிழன்

அனைத்தையும் போராடியே பெற வேண்டி இருப்பதற்கு

தங்கள் பதில் சான்று இணையவன்.

இருந்தாலும் நன்றி!

நான் செய்யும் தமிழ் ஒலிபரப்பு குறித்த பதிவு

ஒரு (முதல்) முறை மட்டுமே முன் பக்கத்துக்கு வந்தது.

அதன் பின்னர் அது வரவே இல்லை.

எமது ஒலிபரப்பு தமிழனை அழிக்கும் ஒலிபரப்பல்ல.

எனது சிங்கள ஒலிபரப்பில்

விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய உதவுங்களேன் என்று

இலங்கையின் சில முக்கிய புள்ளிகள்

சூரிச் பெளத்த விகாரையில் வைத்து

என்னிடம் கேட்ட போது

"நான் தமிழன்.

எமது நியாயங்களை கேட்கும் புலிகள்

செய்வதில் சில தவறுகள் இருந்தாலும் கூட

தமிழர்களின் உரிமைகளுக்கு போராடும்

அவர்களை எதிர்க்க மாட்டேன்." என்று

பகிரங்கமாக சொன்னேன்.

என்னோடு பேசியவர்களுக்கு நான் தமிழன் என்றே தெரியாது.

காரணம் நான் தமிழை விட சிங்களம் நன்றாகவே பேசுவேன்.

நான் சிங்களத்தில் கல்வி கற்றவன்.

அதை என் நண்பர்கள் அறிவர்.

எனவே

என் சிங்கள நண்பர்கள் கூட

அவர்களுக்கு என்னை பற்றி கூறிய போது வியந்தார்கள்.

இத்தாலியில் இருந்து வரும்

சிங்கள தொலைக் காட்சிகளுக்கும்

இலங்கையில் இருக்கும் சிங்கள தொலைக் காட்சி சேவைகளும் கூட

இங்கிருந்து பணிபுரிய கேட்ட போது மறுத்து விட்டேன்.

நான் அங்கு திரைப்படங்கள் செய்வது வேறு இது வேறு.........

அரசியல் வாழ்வு என் விருப்பமல்ல.

அப்படி இருக்கும் என்னை இருட்டடிப்பு செய்து

என்ன சாதிக்கப் போகிறார்கள்?

நான் ஒரு முறை ஆரம்ப தமிழ் ஒளிக்கு

மாவீரர் நாள் நிகழ்வை ஒளிப்பதிவு செய்ய போன போது

எனக்கு அனுமதி கொடுக்க மறுத்தார்கள்.

நல்ல வேளையாக நோர்வேயிலிருந்து வந்திருந்த

சர்வே அவர்கள் எனக்கு அனுமதி தந்தார்.

மன உழைவோடு ஒளிப்பதிவு செய்து

தமிழ் ஒளிக்கு தொகுத்து அனுப்பினேன்.

அப்படி ஒளிப்பதிவு செய்து தொகுத்து அனுப்பிய

மாவீரர் நாளை கூட

TRT தமிழ் ஒளி தொலைக் காட்சி

நயவஞ்கமாக

அதில் பணி புரிந்த அனைவரது பெயர் உள்ள

இறுதி டைட்டிலிலை வெட்டி விட்டு

தயாரிப்பு

TRT தமிழ் ஒளி என போட்டு பெயர் வாங்கிக் கொண்டது.

கேவலம்?

அது TRT பிரான்ஸ் நிர்வாகத்துடன்

உதைபந்தாட்ட நிகழ்வு குறித்த சர்ச்சையால்

முறிந்திருந்த காலம்.............

நான் விலகிக் கொண்டேன்.

சிறிது காலத்தின் பின்னர்

TRT பறிமுதலானது.

நான் முந்திக் கொண்டேன் :lol:

இப்படியான எவரும் தொடர்ந்து இருக்க முடியாது.

இயற்கை எதிலும் ஒரு நியாயத்தை காட்டும் என்பது

உண்மைதான்.

விடுதலைப் புலிகளின் பல நாட்டிய - இசை நிகழ்ச்சிகளை

TRT க்காக ஒளிப்பதிவு (பொறுப்பாக) செய்தேன்.

காலஞ்சென்ற தமிழ் செல்வனின் உறவினர் ஒருவரை (ரகு)

நான் ஒளிப்பதிவாளராக அழைத்து வந்த போது

அவருக்கு ஒளிப்பதிவு செய்ய விட வேண்டாம் என்று

இப்போது ஒதுக்கப்பட்டிருக்கும் ஆணிவேர் TTN பிரபா சொன்னார்.

நான் என் வேலை எனக்கு தெரியும் என்று துரத்தி விட்டேன்.

இப்படியான பலரால்தால்

சும்மா இருப்பவர்கள் கூட எதிரிகளாவது?

இது குறித்து

என்னை சந்தித்த

சேரலாதன் மற்றும் குயிலினியிடம் பகிரங்கமாகவே

சொன்னேன்.

அன்று என்னோடு மோதிய முரளி கூட

கனடாவில் சந்தித்து பேசினார்.

இன்று அவர் நிலை என்ன?

அன்று அவர் நிலை என்ன?

இப்படி பலர் இருக்கிறார்கள்?

நேரம் வரட்டும் சொல்ல வேண்டிய இடத்தில்் சொல்வேன்.

உலகம் சுழலும்

உண்மை ஒரு நாள் வெல்லும்.

பயணம் தொடரும்............

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

உங்க ஆதங்கம் புரிகிறது அஜீவன்.

தமிழர்களுக்கு இடையே தமிழர்களுக்கு இப்படி பிரச்சனை நிறையவே இருக்கிறது.

வேலை தேடி வெள்ளையனிடம் சென்றால் வெளிநாட்டார் எண்டு வேலை தரமாட்டாங்கள்.

சரி நம்மவரிடமாவது வேலை கேட்டு போனால் காப்பிலி எண்டு நினைச்சு வேலையும் தரமாட்டேன் என்கிறார்கள்.

  • 2 weeks later...

தற்போது உள்ள தொலைக்காட்சியில் எதுவுமே தேசியதிற்கு ஆதரவு இல்லை தரிசனம் உட்பட! வெகு விரைவில் தேசியத்திற்கு ஆதரவான புது தொலைக்காட்சி வரவுள்ளது. காத்திருங்கள் !

நீங்க சொல்கிறது சரியாத்தான் இருக்கு போல கிடக்கு . நோர்வேக்கு தரிசனம் நியமித்துள்ள முகவரை பார்க்க தெரிகிறது. அந்த முகவருக்கும் தேசியத்திற்கும் சம்பந்தம் இல்லாதவர்.

அத்தோடு நோர்வேயில் இருக்கும் தரிசனம் முகவர் பழைய ரி.ரி.ன் சந்தாரரிடம் தொடர்பு கொள்ளும் போது இரகசிய தொலைபேசி இலக்கம் ஊடாகவே தொடர்பு கொள்கிறார். அதனால் தரிசனம் மீது நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்று ஒரு இடத்தில் வைத்து

தரிசனம் தொலைக் காட்சியை பார்க்க நேரிட்டது.

எனது வீட்டில் சட்லைட் பூட்ட தடை

எனவே நேற்று இந்த வாய்ப்பு கிடைத்தது.

அஜீவன் இப்போது ஒரு சற்றலைற் இருக்கின்றது. ஒரு மெல்லிய பெட்டி போன்றிருக்கும்

. அதை நீங்கள் பாவிக்கலாம்.

சற்றலைற் போல் தெரியாது. 300 சுவிஸ் பிராங் மீடியா மாக்கற்றில் விற்பனையாகின்றது.

புதுசா ரிரின் வர இருந்த்து உண்மை தான் ஆனால் கடசியாக பரிஸில் நடந்த கூட்டத்தில் பிரச்சனையாகி விட்டட்தாம் அதை விட தரிசனத்தையே தொடர்த்து திறம் பட செய்ய சொல்லி அடவைஸ் வந்த்தாம் ஆனால் பழைய ரிரின் சிலருக்கூ தரிசனத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை என்றதால அவர்கள் கட்டாயம் தங்கள் நிர்வாகத்தில் ஒரு ரிவி ஆரம்பிக்க வேண்டும் என்று ஒற்றை க்காலில் நிக்கிறார்கள் அதுக்கு பின் தான் இந்த அறிக்கை வந்த்து

பாரிஸில் தோடங்கும் ரிரின் தூரோகிகளின் என்று

இப்போழுது தெரிகிறதா புலம் நாட்டில் எபப்டி தமிழ்தேசியம் வியாபரம் ஆகி விட்டது என்று

நானிப்பவே என்னை தயார் படித்தி கொள்கிறேன்

சொறிநாய் கருணா தொடங்க போகும் ரிவியில் ஒரு சிறந்த நிகழ்ச்சி தொக்குப்பாளராக

உங்களுக்கு மாணம் ரோசம் ஏதும் இல்லை என்றால் என்னோடு வாருங்கள் போய் கழிவு கருணாவின் காலில் போய் விழுவோம்,,,,,,,,,,,,,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.