Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

இதென்னடா சாத்திரி ஊரிலை காணிவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச்சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ எண்டு யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத்தாலியறுப்பு.இது பொதுவான தமிழரின்ரை இல்லையில்லை இந்துக்களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை எண்டு சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய் தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும் வடிவாத்தெரியும்.அது பொதுவா நடக்கிற ஒரு சடங்குதானே அதுக்கேன் ஆலோசனை எண்டு யோசிக்கிறீங்கள் எனக்கு விழங்குது. ஆனால் எங்கடை பெட்டையளை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக்குடுத்து கலைச்சு விடாமல்இப்ப காலமாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டதுபெரிய தப்பா போச்சுது.

எங்களுக்கு சமமாமுன்னேறி்கொண்டுவந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிறதுக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்சு காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக்கூடாது எண்டினம். போன முறையான் ஒரு பேப்பரிலை படிச்சிருப்பீங்கள் யாழிலையும்போட்டு வெட்டி பிறகுபோட்டு திருப்பவும் வெட்டி காணாமல் போட்டுது. யெர்மனியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா.எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம். கட்டுரையை படிச்சஎனக்கு வந்த கோபத்திலை ஒரு பேப்பரை சுக்குநூறா கிழிச்சு எறிஞ்சுபோட்டன்.கட்டுரையை எழுதினவாவின்ரை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியைபோட்டிட்டு நடுச்சாமத்திலை போனடிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப்போட்டு.

இந்த புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக்காரனிட்டை கோட்சூட் போடுறது முள்ளுக்கரண்டியாலை சாப்பிடுறது வைன்கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும்.இனிம

  • Replies 69
  • Views 12.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஐடியா மன்னன்" சாத்து வாழ்க :D:D

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஐடியா மன்னன்" சாத்து வாழ்க :D:D

எங்கை.... எங்கை... எங்கை.... மாலை மரியாதை பொன்னாடை எல்லாம் எங்கை :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி

யாரய்யா உம்மிடம் தாலியறுக்க ஆலோசனை கேட்ட அந்த உத்தமி. (தாலி இப்ப யாருடைய கழுத்திலும் இல்ல. அது லொக்கரில அல்லோ இருக்குது.) அதை அறுக்கிறதும் விடுறதும் அவரவர் உணர்வுப+ர்வமான விடயம். கணவன் இவ்வாவிட்டால் அவன் கட்டிய தாலி சுமை என்று யார் சொன்னது?

போற போக்கப் பார்த்தால் பிள்ளையளையும் அறுத்து விடுறத்துக்கு சடங்கு தொடங்குவினம் போலக் கிடக்கு.

நல்ல வேளை ஆத்தா நான் தாலி அறுத்திற்றன் எண்டு செற்றியில ஏறி துள்ள விடஇல்ல.

கணவன் இறந்தா மனைவி உடன் கட்டை ஏறுறது போல மனைவி இறந்தா கணவனும் உடன் கட்ட ஏறலாம்தானே? அப்பிடி எண்டா நாங்க ரெடி நீங்க ரெடியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சாத்திரி

யாரய்யா உம்மிடம் தாலியறுக்க ஆலோசனை கேட்ட அந்த உத்தமி. (தாலி இப்ப யாருடைய கழுத்திலும் இல்ல. அது லொக்கரில அல்லோ இருக்குது.) அதை அறுக்கிறதும் விடுறதும் அவரவர் உணர்வுப+ர்வமான விடயம். கணவன் இவ்வாவிட்டால் அவன் கட்டிய தாலி சுமை என்று யார் சொன்னது?

போற போக்கப் பார்த்தால் பிள்ளையளையும் அறுத்து விடுறத்துக்கு சடங்கு தொடங்குவினம் போலக் கிடக்கு.

நல்ல வேளை ஆத்தா நான் தாலி அறுத்திற்றன் எண்டு செற்றியில ஏறி துள்ள விடஇல்ல.

கணவன் இறந்தா மனைவி உடன் கட்டை ஏறுறது போல மனைவி இறந்தா கணவனும் உடன் கட்ட ஏறலாம்தானே? அப்பிடி எண்டா நாங்க ரெடி நீங்க ரெடியா?

கண்மணியக்கா இப்பிடியெல்லாம் நீங்கள் கதைக்கக்கூடாது பிறகு எங்கடை சமூதாயத்திலை இருந்து ஒதுக்கி வைச்சிடுவம். நீங்கள் மட்டும்தான் தாலியறுக்க வேணும் ஏணெண்டால் எங்களிட்டைத்தான் தாலியே இல்லையே அப்ப எப்பிடி அறுக்கிறதாம்.அதே மாதிரி பெண்கள் மட்டும்தான் உடன் கட்டையேறவேணும். மனிசிமார் செத்தால் நாங்கள் ஜாலியாய் அடுத்த கலியாணம் கட்டிக்கொண்டு போய்க்கொண்டேயிருப்பம்.பெண

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியை ஒரு பேப்பரில விகடம் பண்ண விட்டதும் தான் விட்டாங்க.. சாத்திரி இப்ப எல்லாம் விகடப் புரட்சி பண்ண புறப்பட்டிட்டார். பெண்ணிலைவாதிகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறார். :D:D

சாத்திரியின் மூளைக்குள்ள மூலைக்குள்ள கூட இருப்பதெல்லாம்.. இப்ப.. இவைதான்..! :lol::lol:

Edited by nedukkalapoovan

அட பாவிங்களா அங்க தொடங்கி இங்க தொடங்கி கடைசியில் பெண்களின் தாலியைக் கூட விட்டு வைக்கவில்லையா

இது நல்லாவேயில்லை சாத்திரி :D:D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த விழாவுக்கு? சாப்பாடு என்ன சைவமா அசைவமா :D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த விழாவுக்கு? சாப்பாடு என்ன சைவமா அசைவமா :D:lol:

அடடா கலியாண வீடா செத்தவீடா எண்டு எந்தக் கவலையுமே இல்லாமல் சாப்பாட்டிற்கெண்டே ஒரு கூட்டம் அலையிது எண்டு இப்பதான் தெரியிது . சரி உங்களிற்காக ஒரு ஆடு அடிச்சு விருந்து வைச்சால் போச்சு :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இந்த விழாவுக்கு? சாப்பாடு என்ன சைவமா அசைவமா :rolleyes::lol:

ஜோவ் இந்தபிரச்சனை பேப்பரிலை வந்ததாலை ஒரு அந்தியொட்டியும் இரண்டு பிறந்தநாள் சாப்பாட்டிற்கும் போகமுடியவில்லை என்று வைத்தெரிச்சலிலை இருக்கிறம்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கை.... எங்கை... எங்கை.... மாலை மரியாதை பொன்னாடை எல்லாம் எங்கை :rolleyes::lol:

உண்ணாணை என்னாலை மாலை பொன்னாடை இதுக்கெல்லாம் வசதியில்லை ஒரு பழைய நாலு முழவேட்டி இருக்கு என்னமாதிரி போர்த்தி விடவோ :D:D:lol::(

அறுவைக்கு கண்டனங்கள்.

*அறுக்க ஆலோசனை சொன்ன சாத்திரியின் கலாச்சார சீர் கேட்டுக்கு ஒரு பேப்பரை நாங்கள் கொழுத்தவுள்ளோம்.

*சாத்திரியின் தாலியறுப்பை ஐரோப்பிய அரிச்சந்திரன் சாட்சியாக கண்டிக்கிறோம்.

*இந்துக்கடவுளான சிவபெருமான் *** குடும்பம் சகிதம் இனிவரும் காலங்களில் தாலியறுப்பு ஊரைவிட்டு ஒதுக்கல் போன்ற சடங்குகளையும் செய்யவுள்ளொம்.

*இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யாமல் ஆச்சிமாரை இலண்டன் **** நகரிலிருந்து இறக்குமதி செய்யும்படி வேண்டுகிறோம்.

* ஒரு பெப்பருக்கும் ஒரு பேப்பரின் ஆசிரியர் குழுவிற்கும் சாத்திரிக்கும் தொல்லை கொடுக்கும் முகமாக ஏவலாளிகள் பலரை நியமித்து தொல்லைபேசியில் தொல்லை கொடுக்கவுள்ளொம். (இதில் கலந்து கொள்வோருக்க இலவசமாக கள்ள கிறடிட்காட் , வீசாக்காட், இலவச விமானச்சீட்டு , மற்றும் அல்ககோல்35வீதத்திற்கு மேற்பட்ட குடீவகைகளும் வழங்குவோம்)

* லண்டனில் புறோக்கர் இருக்க வேற புறோக்கரை சாத்திரி நாடியதால் புறோக்கர் சாத்திரி மீது கடுப்பாகி ஒரு பேப்பரை புறக்கணிக்கிறார்.

மேலும் சாத்திரியின் தாலியறுப்பு ஆலோசனைகள் மீது இந்துக்கடவுள் சிவபெருமான் *** சாட்சியாக பேய் ஏவப்படும் என்பதனையும் தெரிவிக்கிறோம்.

இங்ஙனம்

அகில உலக அரிச்சந்திரன் கழகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் தப்பித்தவறி ஊருக்குப் போன லக்கேஜில யாழ்ப்பாணம் போச்சுதாம்..

அதை நல்லூர் திருவிழாவுக்க நகை உருவுற ஒருத்தர் பார்த்திட்டு...

ஒரே உருவலாம்... பெண்கள் பலர் தாலியையும் கொடியையும் காணேல்ல என்று ஒப்பாரியாம்.

உடன.. உருவின வரை.. ஒரு இளைஞர் குழாம் மடக்கிப் பிடிச்சு.. இரண்டு தட்டுத்தட்டி.. விசாரிச்ச இடத்தில அவர் சொன்னாராம்..

யோவ் கன்றி பூட்ஸ்.. வெஸ்ரேன் போன எங்கட ஜனங்கள் சொல்லித் தான் தாலியை கொடியை எவ்வளவோ கஸ்டத்துக்கும் மத்தியில தெரிஞ்சு அறுக்கிறன்... கோயில் குளமாப் பாத்து.. பொண்டு பிள்ளைகளுக்கு மன உழைச்சல் வராம ஒரு சமூகப் புரட்சிப் பணி ஆற்றுறன்.. நீங்க என்னடான்னா.. என்னை பிடிச்சு மொத்து மொத்தென்று மொத்திறீங்க.. விடுங்கடா என்று கையை உதறிப்போட்டு.. இடுப்பில செருகி இருந்த ஒரு பேப்பரை தூக்கிப் போட்டாராம் இளைஞர்கள் முன்னாடி.

அதைப் பார்த்த இளைஞர் குழாம் வாயடைச்சுப் போச்சுதாம்..!

இளைஞர் குழாம் பார்த்தது வேற ஒன்றுமில்லயாம்... ஒரு பேப்பரில முக்கால் வாசிப் பக்கமும் நிரப்பியுள்ள தாலியும் அறுப்பும் இந்துமத(மு)வும் சாயும் கோவில் கோபுரங்களும் தானாம். அட என்ன ஒரு .. அலசல்... சா அலட்டல் என்று நினைச்சிட்டு இளைஞர் குழாம் நீ நல்லா உருவப்பா.. வெளிநாட்டில இருந்து உப்படி எழுதிறவையே இஞ்ச தாலியும் செய்யக் காசு அனுப்பினம் கோவில் கட்ட, திருவிழாவுக்கு கொட்டியும் கொடுக்கினம் என்று பிடிச்சவரை கொண்டு போய் அடியார்கள் கூட்டத்துக்க பத்திரமா கரை சேர்த்தனராம்...! :D:rolleyes:

( எல்லாரும் அளக்கிறாங்க நாங்களும் அளந்து நம்ம விலாசத்தைக் காட்டுவம் என்று முயற்சிக்கிறம்..! கோவிக்காம படிங்க அடிக்காதீங்க... திட்டாதீங்க. எல்லாம் ஒரு இமேஜுக்குத்தானே....!) :lol:

Edited by nedukkalapoovan

ஊர் வரையும் ஒருபேப்பரை கொண்டு சேத்த அன்பர்களுக்கு ஒரு பேப்பரில் எவ்வளவு அன்பு பாத்தழுங்களா நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் வரையும் ஒருபேப்பரை கொண்டு சேத்த அன்பர்களுக்கு ஒரு பேப்பரில் எவ்வளவு அன்பு பாத்தழுங்களா நெடுக்ஸ்.

ஊரில சொல்வாங்க தாலி கழற்றி வைக்கிறது என்றுதான் தாலி அறுக்கிறது.. நல்லூர் திருவிழாவுக்க கள்ளர்தான்..! ஒரு பேப்பரில அப்படிக் கள்ளர் சிலர் இடம்பிடிச்சிருக்கலாம் இல்லையோ என்றுதான் ஊருக்குக் கொண்டு போனன் பேப்பரை. அது கள்ளன்ர கையில சிக்குமென்று கனவிலும் நினைக்கேல்ல..! :lol:

அதுமட்டுமன்றி தாலி அடிமைச் சின்னமோ.. அவமானச் சின்னமோ அல்ல. இல்ல ஒழுக்கத்தைக் கட்டிக்காக்க பெண்களைக் கண்காணிக்க அணியப்படும் CCTV யோ அல்ல. கற்பு என்பது ஒழுக்கம். அது மனசோட இருக்கிற விடயம். ஒரு நிலையான மனசே இல்லாதவங்ககிட்ட ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுறதில அர்த்தமில்ல...! :D

தாலி என்பது அன்பை ஞாபகத்தைப் பதிய வைக்க என்று அணியும் ஒரு அடையாளம்..! இப்ப எல்லாம் நாங்க டேற்றிங் என்று போய்.. ஒரு கிஸ் அடிச்சிட்டு... வாறமே.. ஏன் காரைக் கொண்டு போய் சந்துகளுக்க நிப்பாட்டிட்டு எலிச்சத்தம் போட்டு.. எலிகளைக் கூப்பிடுறமே.. அதெல்லாம்.. எதுக்கு... ஒரு அடையாளம். டேட்டிங் போகனதுக்கு...! அப்படித்தாங்க அந்தக் காலத்தில தாலியைப் போட்டு திருமண பந்தத்தை அடையாளம் பண்ணிச்சினம். ஆண்களுக்கும் கடுக்கன்.. அதுஇதென்று போட்டிருக்கினம்.. அதை ஆண்கள் மறந்திட்டினம்.. பெண்கள் மட்டும் இப்ப அதைப் போடனுமோ என்று.. புரட்சி பண்ணினம்.

எனக்கு ஒன்று மட்டும் விளங்கல்ல.. தாலியைக் கழற்றினாப் போல.. பெண்களுக்கு வீரமும் விவேகமும் 100 மடங்கு அதிகரிக்குமென்று எந்த ஆராய்ச்சியில கண்டறிஞ்சவை.. எண்டதுதான்..! தாலி என்பதுதான் பெண்களை அடிமைப்படுத்தி வைச்சிருக்கும் நவீன ரோபோ என்றதை எப்படிக் கண்டறிஞ்சினம் எண்டதுதான் எனக்கு விளங்கேல்ல. :D

ஒரு பேப்பரில காரங்களும் காரிகளும் எழுதின வேடிக்கை ஒன்றைச் சொல்லுறன் கேளுங்கோ.. ஒரு அன்பர் கேட்கிறார் ஏன் உங்களுக்கு இந்துமதமும் தாலியும் தான் எப்பவும் இழிச்சவாய்த்தனமா தெரியுதோ என்று. அதற்கு காரங்களும் காரிகளும் சொல்லினம்.. மற்ற மதங்களைப் பற்றி யாரும் எழுதிறதில்லை.. எழுதி அனுப்புங்கோ போடுறம் என்று. ஏதோ இந்து மதத்தைப் பற்றி பிற ஆக்கள் எழுதிக் குவிக்கிற கணக்கா ஒரு தோற்றப்பாடு. அவையிட உள்வீட்டு ஏஜெண்டுகள் தான்.. உதுகளை எழுதிறதே. அதுமட்டுமன்றி.. சமூகத்தில் உள்ள வேடதாரிகளின் வேடத்தை கலைக்க பாடுபடும் வகையில உதுகளைப் போடினமாம்.

நல்ல காரியம் தான். அவை போட்டுள்ள வேடத்தை யாராம் கலைக்கிறது..???! :D:o

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்றது நியாயம் தான், ஒரு பேப்பர் காரர் தாலியறுக்கிறது உடன்கட்டையேறுறது பற்றி மட்டும் எழுதி தனிய ஒரு மதத்த மட்டும் சாடக் கூடாது. மோதிரம் உருவுறது , வாழ்க்கைத் துணை இறந்த பிறகு இன்னொரு துணை தேடுறது மாதிரியான மற்றைய பிற்போக்கு மதப் போக்குகளையும் சாடி எழுத வேணும்!

(சாத்திரி, எல்லாரும் ஒரு பேப்பர் ஒரு பேப்பர் என்டிறாங்கள், எனக்கு அமெரிக்காவில ஒரு பேப்பர் கிடைக்கிற மாதிரி ஏதாவது வழி செய்ய ஏலாதே? அல்லது வெப்பில வாறது முழு ஒரு பேப்பர் தானா?)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சொல்றது நியாயம் தான், ஒரு பேப்பர் காரர் தாலியறுக்கிறது உடன்கட்டையேறுறது பற்றி மட்டும் எழுதி தனிய ஒரு மதத்த மட்டும் சாடக் கூடாது. மோதிரம் உருவுறது , வாழ்க்கைத் துணை இறந்த பிறகு இன்னொரு துணை தேடுறது மாதிரியான மற்றைய பிற்போக்கு மதப் போக்குகளையும் சாடி எழுத வேணும்!

(சாத்திரி, எல்லாரும் ஒரு பேப்பர் ஒரு பேப்பர் என்டிறாங்கள், எனக்கு அமெரிக்காவில ஒரு பேப்பர் கிடைக்கிற மாதிரி ஏதாவது வழி செய்ய ஏலாதே? அல்லது வெப்பில வாறது முழு ஒரு பேப்பர் தானா?)

வணக்கம் ஜஸ்ரின் இணையத்தில் ஒரு பேப்பர் முழுமையாக தரவேற்றப்படுவதில்லை ஒரு பேப்பர் தளத்தினுள் போய் பார்த்தால் கனடா அலுவலகத்தின் அல்லது இங்கிலாந்து அலுவலகத்தின் விலாசம் மின்னஞ்சல் முகவரி உள்ளது அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் விலாசத்தை குடுத்தால் அனுப்பி வைப்பார்கள். அடுத்ததாக நான் ஒரு பேப்பரிற்கான பிரான்சின் ஆசிரியர் மட்டும்தான். அதே நேரம் சாதாரணமாய் அடிக்கிற அஞ்லி பிரசுரத்திற்கே பல விமர்சனங்கள் எழும்போது பல அஞ்சலி பிரசுரத்தை சேத்து அடிச்சமாதிரி 50 பக்கத்திலை சமூகத்தின் பிரதி பலிப்பாய் வெளிவருகிற ஒரு பேப்பருக்கு கட்டாயம் பல்லாயிரம் விமர்சனங்கள் விசனங்கள் விசமங்கள் வரத்தான் செய்யும் . அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். அடுத்ததாக நான் எழுதுபவைகள் தனியாக இந்து மதத்தின் மூடநம்பிக்கைளை பற்றி மட்டுமல்ல மற்றைய மதங்களினதும் ஏன் பெரியரிசம் நாத்திகம் பேசுகிறவர்களின் புரளிகளையும் சேர்த்துதான் எழுதுகிறேன் . கடந்த காலங்களில் கவனித்திருப்பீர்கள் அது மட்டுமல்ல இந்த நாடகத்தையும் கேட்டுப்பாருங்கள் நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33072

  • கருத்துக்கள உறவுகள்

தாலியறுக்க சில ஆலோசனைகள்.

ஆஆஆஆஆ.... இது நகைச்சுவையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆ.... இது நகைச்சுவையா?

அப்ப அறுக்காமல் விடுறதா நகைச்சுவை :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பலவந்தமாக பெண்களின் உரிமைகளில் தலையிடுவது தவறு என்ற கோணத்தில் எடுத்துரைத்த சாத்திரிக்கு நன்றிகள். சிலர் குழம்புவது போலச் சாத்திரி தாலி கட்டக் கூடாது என்று சொல்ல வரவில்லை என நினைக்கின்றேன். கணவன் மரணிக்கின்றபோது பலவந்தமாக அதைக் கழட்ட வைக்கின்றதைத் தான் கண்டிக்கின்றார் என நினைக்கின்றேன்.

அது நியாயமானதும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

பலவந்தமாக பெண்களின் உரிமைகளில் தலையிடுவது தவறு என்ற கோணத்தில் எடுத்துரைத்த சாத்திரிக்கு நன்றிகள். சிலர் குழம்புவது போலச் சாத்திரி தாலி கட்டக் கூடாது என்று சொல்ல வரவில்லை என நினைக்கின்றேன். கணவன் மரணிக்கின்றபோது பலவந்தமாக அதைக் கழட்ட வைக்கின்றதைத் தான் கண்டிக்கின்றார் என நினைக்கின்றேன்.

அது நியாயமானதும் கூட.

நீங்கள் சிலர் என்று குறிப்பிடுவது யாரை என்று தெரியாததால் நானும் இதற்குள் கருத்தெழுதியவன் என்ற வகையில் எனது விளக்கத்தைச் சொல்ல வேண்டியவனாகிறேன்.

தாலி அறுப்பு என்ற பதப்பிரயோகம் வலிந்த ஒரு திணிப்பு அல்லது குறித்த விடயத்தை விம்பப் பெருப்பிப்புச் செய்ய புனையப்பட்ட ஒன்று என்று.. என்னை யாரென்றும் அறியாத உறவுகள் இக்களம் வழி தொடர்பு கொண்டு இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் அளித்தனர்.

(அத்தலைப்பு யாழில் இருந்து எடுக்கப்பட்டும் விட்டது)

உண்மையில் தாலி அறுப்பு என்ற சம்பவம் ஒன்றே நடைபெறவில்லை என்றும்.. வயதான ஒருவர் வழமையினைச் செய்யுங்கள் என்று மொழிந்ததாகவும்.. வற்புறுத்தலோ.. வன்முறை ரீதியான அறுப்போ நிகழவில்லை என்றும் விளக்கமளித்திருந்தனர்.

தனிப்பட்ட விபரங்கள் உட்பட.. பல செய்திகள் அதில் தரப்பட்டிருந்தன. மிகவும் மனவேதனையோடு அந்த விளக்கம் எழுதப்பட்டிருந்தது. அதில் குறித்த செய்தியால் பாதிக்கப்பட்ட குறித்த சகோதரியின் நிலை பற்றிய குறிப்பும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

ஊரில் கூட தாலி அறுப்புச் செய்வதில்லை. தாலியைக் கழற்றி தான் வைப்பார்கள்.

அது தனிமனித சுதந்திரம் என்பதை இலகுவாகப் பிரச்சாரம் செய்யும் நாம்.. அந்தத் தனிமனித உரிமையை அனுபவிக்க அனுமதிக்கிறமா என்று சிந்திப்பதில்லை.

தாலி அறுப்பை கண்டிப்பது போன்ற ஒரு நிலையில் உங்களின் தனிப்பட்ட எண்ணங்களை இன்னொருவரின் மீது திணிப்பதும் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதற்கு ஒப்பானதே. அறு என்று சொல்லவும் முடியாது. கழற்றுவது குற்றம் என்றும் சொல்ல முடியாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவர் பாதிக்கப்பட்டவரே..!

உங்கள் அபிப்பிராயங்கள் வெளியிடும் போது..அடுத்தவரின் சோக நிலையை உணர்ந்து அவர்களுக்கு மேலும் வலியூட்டத் தக்க வடிவங்களில் செய்யாதீர்கள். குறிப்பாக ஊடகங்கள் நடத்துபவர்கள்.. குறித்த பெண்ணின் படத்தைக் கூட அவரின் அனுமதியின்றி இங்கு பிரசுரித்து செய்தி வெளியிட்டதாக குறிப்பு உண்டு.

தமிழ் ஊடகங்கள் சிலவற்றின் மீது குறித்த நாடுகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக இல்லை என்பது தெரிகிறது. காரணம் முறையான பதிவுகள் கண்காணிப்புகள் இடம்பெற்றிருப்பின் இவ்வாறான தனிநபர் விரோத நிலை சமூக புரட்சி என்ற வடிவில் வெளிப்பட்டிருக்காது.

எனவே ஊடகங்கள் வைத்திருப்போர்.. அடுத்தவர்களின் சுயத்தை உங்கள் சுய விளம்பரத்துக்காக பயன்படுத்தும் இழிதொழிலைச் செய்யாதீர்கள். இப்படியான ஊகடவியலாளர்களும்.. படைப்பாளிகளும் எதிர்காலத்தில் உங்களின் தனிப்பட்ட கருத்துருவாக்கத்தின் மீது செலுத்தும் அக்கறையைக் காட்டினும்... உங்களின் கருத்துருவாக்கம் யாரேனும் தனிநபரின் சுயத்தைப் பாதிக்கும் வகையில் அமையுமா என்று சிந்தித்து படைப்புக்களை செய்திகளை வெளியிட முனையுங்கள்..!

அடுத்தவர்களின் தனியுரிமையில் கைவைக்க ஊடகத்துறை சார்ந்தவைக்கோ.. படைப்பாளிகளுக்கோ இல்ல சமூகப் புரட்சியாளர்கள் என்ற தோறணையில் வலம் வருபவர்களுக்கு அருகதை கிடையாது. அப்படிச் செய்வது சட்ட ரீதியான பின் விளைவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும் ஆபத்தைக் கொண்டது..!

ஒரு தனிமனிதனின் ஆழ்மனதில் உள்ள கவலையையும் துன்பத்தையும் வலியையும் பொருட்படுத்தாமல் இந்த விடயத்தை அதே தலைப்பிடலோடு சாத்திரி இங்கிணைத்ததும் அதை நகைச்சுவையாக்கி மகிழ்வதிலும் எனக்கு உடன்பாடில்லை..! இதைக் கீழ்த்தரமான ஒரு செயலென்றே கருதுகின்றேன்.

சமூகத்தை விழிப்புணர்வு செய்யுறம் என்ற தொனியில் ஒரு சிலரை பகடைக்காயாக்கி சிலர் தமக்குள் மகிழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. சமூகத்தை நோக்கி பொதுப்படையாகச் சொல்ல வேண்டிய விடயத்தை.. சாத்திரி.. பழைய தலைப்புக்கு புதிய விபரணம் அளித்திருப்பது ஏற்புடையதல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஜஸ்ரின் இணையத்தில் ஒரு பேப்பர் முழுமையாக தரவேற்றப்படுவதில்லை ஒரு பேப்பர் தளத்தினுள் போய் பார்த்தால் கனடா அலுவலகத்தின் அல்லது இங்கிலாந்து அலுவலகத்தின் விலாசம் மின்னஞ்சல் முகவரி உள்ளது அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் விலாசத்தை குடுத்தால் அனுப்பி வைப்பார்கள். அடுத்ததாக நான் ஒரு பேப்பரிற்கான பிரான்சின் ஆசிரியர் மட்டும்தான். அதே நேரம் சாதாரணமாய் அடிக்கிற அஞ்லி பிரசுரத்திற்கே பல விமர்சனங்கள் எழும்போது பல அஞ்சலி பிரசுரத்தை சேத்து அடிச்சமாதிரி 50 பக்கத்திலை சமூகத்தின் பிரதி பலிப்பாய் வெளிவருகிற ஒரு பேப்பருக்கு கட்டாயம் பல்லாயிரம் விமர்சனங்கள் விசனங்கள் விசமங்கள் வரத்தான் செய்யும் . அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். அடுத்ததாக நான் எழுதுபவைகள் தனியாக இந்து மதத்தின் மூடநம்பிக்கைளை பற்றி மட்டுமல்ல மற்றைய மதங்களினதும் ஏன் பெரியரிசம் நாத்திகம் பேசுகிறவர்களின் புரளிகளையும் சேர்த்துதான் எழுதுகிறேன் . கடந்த காலங்களில் கவனித்திருப்பீர்கள் அது மட்டுமல்ல இந்த நாடகத்தையும் கேட்டுப்பாருங்கள் நன்றி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33072

ஐயோ சாத்திரி, நான் நெடுக்கரக் கடிக்கத் தான் அப்பிடி எழுதினனான், சத்தியமா உங்கடயும் ஒரு பேப்பரில வரும் யாருடையவும் முற்போக்கான கருத்துக்களுக்கு ஆதரவாளன் நான்.பின்ன நொட்ட நொடுக்குப் பிடிக்கவே நான் ஒரு பேப்பர் தேடி அலையுறன் எண்டு நினைச்சியள்? மேலும், தகவலுக்கு நன்றி, நான் எடுக்க முயற்சி செய்யுறன். பிரான்ஸில் இருக்கிற என்ர மூத்த சகோதரம் ஒரு பேப்பர் பற்றிப் பேசப் பேச எனக்குப் பொறாமை தான் வருகுது.

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

தாங்கள் சொல்வது போன்ற ஒரு மடல் எனக்கும் வந்திருந்தது. ஆனால் பலவந்தமாக பறித்தெடுத்தல் தொடர்பாகவே நான் சொல்லவருவது. அவ்வாறன சம்பவங்களில் மனைவி அழுவது என்பது சம்பிர்தாயமா உண்மையாகவோ என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்தப் பெண்ணை முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிடாமல் செய்கின்ற நிகழ்வையும் கண்டிருக்கின்றேன். அப்படி வந்தால் நேரடியாகச் சொல்லாமல் குத்திக் காட்டுவதன் மூலம் செய்வார்கள். இது உங்களின் பார்வையில் பலவந்தப்படுத்தலாகப் படுமோ தெரியவில்லை. ஆனால் மறைபுகப் பலவந்தப்படுத்தலாகவே பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

தாங்கள் சொல்வது போன்ற ஒரு மடல் எனக்கும் வந்திருந்தது. ஆனால் பலவந்தமாக பறித்தெடுத்தல் தொடர்பாகவே நான் சொல்லவருவது. அவ்வாறன சம்பவங்களில் மனைவி அழுவது என்பது சம்பிர்தாயமா உண்மையாகவோ என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆனால் அந்தப் பெண்ணை முக்கியமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளவிடாமல் செய்கின்ற நிகழ்வையும் கண்டிருக்கின்றேன். அப்படி வந்தால் நேரடியாகச் சொல்லாமல் குத்திக் காட்டுவதன் மூலம் செய்வார்கள். இது உங்களின் பார்வையில் பலவந்தப்படுத்தலாகப் படுமோ தெரியவில்லை. ஆனால் மறைபுகப் பலவந்தப்படுத்தலாகவே பார்க்க முடியும்.

மூடநம்பிக்கைகள் என்பது எமது சமூகத்துக்குத்தான் சொந்தமானவை என்பது தவறானது. உலகெங்கும் அது பல்வேறு வடிவங்களில் உள்ளன. அதையெல்லாம் இனங்காட்டுவதும்.. மக்களை அவை தொடர்பில் சரியான அறிவியல் விளக்கங்களூடு எளிமையான வடிவில் சிந்திக்க தூண்டுவதும் அவற்றில் இருந்து விடுபடச் செய்வதும் வரவேற்க வேண்டிய விடயம். :lol:

ஆனால் அதை அடுத்தவரின் சுயத்தில் கை வைக்காது செய்ய வேண்டும்.

புலம்பெயர் நாடெங்கும் 21 வயதுக்கு 40 வயதுக்கு விசேட பிறந்தநாள் கொண்டாடினம்.. இதில என்ன அறிவியல் இருக்குது..???! எத்தனைப் புலம்பெயர்ந்த பின்னாக்குகள் இதைச் செய்யினம். உதுகளைப் பற்றி எவர் பேசினம் இங்க..???! பேச மாட்டினம் ஏனென்றால் அவையிட பிள்ளைகளையும் இவையையும் மேற்குலக மூடநம்பிக்கைகள் நவநாகரிகம் என்ற வடிவில வலுவாக பீடித்திருக்கும் என்பதால... இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மை உள்ள சமூகப் போலிப் புரட்டுவாதிகளை புரட்சிவாதிகளா இனங்காட்டிறதில எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. என்னதான் தத்துவம் பேசினாலும் தன்னை அறிவியலின் படி ஒழுங்கமைக்காதவன்/ள் சொல்லுறதெல்லாம் புரட்டுத்தான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

மொழியை விட உணர்வுபூர்வமானதும், சம்பிர்தாயங்களும் தான் நாம் தமிழர் என்ற எண்ணப்பாட்டைக் காக்க உதவுகின்றது என்பதை நான் மறுக்கவில்லை. அதை நிறையவே நம்புகின்றேன்.

இன்றைக்கு மொரியசியஸ், தென்னாபிரிக்கா தொடக்கம் பலர் தங்களை மொழி மறந்தாலும் தமிழர் என்று அடையாளம் செய்வதற்குத் துணை நிற்பது மதங்கள் தான். ஏன் என்றால் மொழி என்பது ஊடகம் மட்டுமே. ஆனால் பக்தி என்பது உணர்வுபூர்வமானது, அதை இலகுவில் அழித்துவிட முடியாது.

( இதைப் பற்றி விவாதக்கட்டுரை ஒன்று எழுதத் தான் வேணும்)

இன்றைக்கு நாங்கள் ஒன்றிணைந்திருப்பது தமிழீழம் என்ற உணர்வுபூர்வ செயற்பாட்டால் தான். அதற்காக உணர்வுபூர்வ எல்லாவற்றையும் காக்கவேண்டும் என்ற தேவை எமக்கில்லை.

தாலியறுத்து ஒரு பெண்ணை மூலைக்குள் நிறுத்தி வைப்பதோ, ஒதுங்கச் செய்வதோ சம்பிர்தாயம் என்பதற்குள் அடக்கமுடியவில்லை. அப்படிச் செய்வதாக இருந்தால் மனைவி மரணித்தால் ஆண்களுக்கு ஏன் அவ்வாறன தடைகள் இல்லை??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.