Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“புருஷன் குடிச்சா அடி உதை தான்"

Featured Replies

purusan01ln6.png

டித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் வீட்டுக்குதவாது’ என்றொரு பழமொழி உண்டு. இதை யார் எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை. கேரள ஆதிவாசிப் பெண்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது, குடிகார கணவர்களை அடித்தே திருத்தியிருக்கிறார்கள். தவிர, கூட்டாகச் சேர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை ஊரை விட்டே அடித்துத் துரத்தியும் இருக்கிறார்கள். இது பற்றித்தான் கேரளாவில் பரபர பேச்சு.

கோவையிலிருந்து ஐம்பது கி.மீ. தூரத்திலுள்ளது ஆனைகட்டி. தமிழக_கேரள எல்லைப் பகுதியான இங்கிருந்து சுமார் 250 சதுர கி.மீ. தூரத்திற்கு அகண்டு நீண்டு கிடக்கிறது அட்டப்பாடி மலைகள். இங்கு சுமார் 180 இருளர் இன ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இங்கு வாழும் ஆண்கள், இருக்கின்ற இடத்தையும் சாராயத்திற்கே தாரை வார்த்தவர்கள். சுற்றிப் பார்க்க வந்தவர்களிடம் ஏமாந்து சீரழிந்து போனார்கள் இந்தப் பகுதி பெண்கள். இதனால் இங்குள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தன் அப்பா பெயரே தெரியாது. பலநூறு பெண்களுக்கு கணவன் யாரென்றே தெரியாது. இதைப் பார்த்த கேரள அரசாங்கம் கடுமையான சட்டங்களைத் தீட்டியது. கேரளாவில் அனைத்துப் பகுதிகளிலும் கள்ளுக்கடைகள் திறந்து வைக்கப்பட்டிருந்த போதும் கூட, இந்த அட்டப்பாடி பகுதிகளில் மட்டும் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தியது. தவிர, ஆதிவாசி நிலங்களை மற்றவர்கள் வாங்கினால் செல்லாது என்று விதிமுறை வகுத்தது.

இவர்களுக்காக ‘அகாட்ஸ்’ என்ற ‘அட்டப்பாடி மலைப்பகுதி மேம்பாட்டு சங்கம்’ என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடைபெறுகிறது. இதன் உச்சகட்டமாக இந்த அகாட்ஸ§க்காக கடந்த 2002_ம் ஆண்டு கிட்டத்தட்ட அறுநூறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, இதற்கான அலுவலகங்களும் அகழி என்ற கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆதிவாசி ஹாஸ்டல்களும், பள்ளிக்கூடங்களும், மருத்துவமனைகளும் ஏற்படுத்தப்பட்டன. அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாமே வந்து இதனைத் திறந்து வைத்தார். அப்போது வந்த நிதி ஆதாரத்தின் மூலம் இங்குள்ள ஆதிவாசி ஆண்களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. இதனால் இவர்களின் வறுமை நீங்கி பொருளாதார வளம் பெருகியது. ஆனாலும் ஆண்களிடம் அதே குடிப்பழக்கம் தொடர்ந்தது. குடிகாரக் கணவனிடமும், குடிகார அப்பாவிடமும் பெண்கள் அடி உதை பெறுவது மட்டும் நிற்கவில்லை.

இதனையடுத்து, ஆண்களை நெறிப்படுத்த ‘தாய்க்குலம்’ என்ற சங்கத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். இப்படி ஒன்றல்ல இரண்டல்ல; மொத்தமுள்ள 180 ஆதிவாசி கிராமங்களில் இன்றைய தேதிக்கு 111 கிராமங்களில் இச்சங்கக் கிளைகள் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பின் சட்டதிட்டப்படி குடிகார புருஷன் ஊருக்குள் வரக்கூடாது. அதை மீறி வந்தால் நூறு ரூபாய் அபராதம் கட்ட வேண்டும். அதையும் மீறி அந்தப் புருஷன் ஆண்பிள்ளை என்று முறுக்கிக்கொண்டு மல்லுக்கு நின்றால் மரத்தில் கட்டி வைத்து அடிதான்.

purusan02sw2.png

அதைப்பற்றி நம்மிடம் கதைகதையாய் விவரித்தார், ‘அகாட்ஸ்’ உதவி இயக்குனர்களில் ஒருவரான உஷா. இவர்தான் இந்தப் பெண்கள் அமைப்பை உருவாக்கி வழி நடத்திக்கொண்டிருப்பவர். ‘‘ ‘அகாட்ஸ்’ என்பது ஆளும் அரசாங்கத்தோட கட்டுப்பாட்டில் உள்ள சுதந்திரமான ஓர் அமைப்பு. குடித்துச் சீரழியும் கணவர்களைத் திருத்த ஆதிவாசிப் பெண்களை வைத்தே கலந்தாலோசித்துத்தான் இந்தத் ‘தாய்க்குலம்’ அமைப்பை உருவாக்கினோம். இதன் அடிப்படை முழக்கமே கணவர்கள் சீட்டாட்டம் ஆடி மோசம் போகக் கூடாது. யாரும் மது குடிக்க போகக்கூடாது. அப்படிப் போனவரை ஊருக்குள் விடக்கூடாது. பெண்களுக்கெதிரான குற்றங்களைக் கண்டித்துப் போராட வேண்டும் என்பதுதான்.

கிராமத்து ஆண்கள் சுமார் முந்நூறு பேர் அங்குள்ள இந்தத் ‘தாய்க்குல’ப் பெண்களால் திருத்தப்பட்டு ஒன்றுகூடி ஜனாதிபதி வந்து கலந்து கொண்ட விழாவின் போது, அவர் முன்னிலையிலேயே ‘அட்டப்பாடி பிரகடனம்’ என்ற பெயரில், ‘நாங்கள் இனி மதுவைத் தொடமாட்டோம். குடிக்க மாட்டோம். பெண்களைக் கண்களாக பாவிப்போம்!’ என்பன போன்ற உறுதி மொழிகளை எடுத்தனர். அதன்பிறகுதான் இந்த விஷயம் அனைத்து ஆதிவாசிப் பெண்களிடமும் பரவியது. இத்தனை கிளைச் சங்கங்களும் உருவாக்கப்பட்டன.

purusan03kg9.png

இப்படித் தொடங்கப்பட்ட அமைப்பில் உள்ள பெண்கள், ஆரம்பத்தில் குடிகாரக் கணவனை பேசித்தான் திருத்தப் பார்த்திருக்கிறார்கள். குடித்துவிட்டு ஊருக்குள் வரும் ஆண்களுக்கு நூறு ரூபாய் அபராதம் என்றும் போட்டிருக்கிறார்கள். அப்படியும் திருந்தாத ஆண்களை ஊருக்குள் விட மறுத்திருக்கிறார்கள். அதிலெல்லாம் திருந்திய ஆண்கள் ரொம்ப சொற்பம். அதன்பிறகுதான் கையை நீட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்பிறகு அவர்கள் பட்ட துன்பம் இருக்கிறதே... வார்த்தைகளால் சொல்லமுடியாது.

நரசிமுக்கு என்ற கிராமத்தில் மருதி என்ற ஆதிவாசிப் பெண்மணியின் கணவன் தினந்தோறும் குடித்துவிட்டு வந்து ஒரே ரகளையாம். இவருக்கு பூர்வீகத்தில் ஏழெட்டு ஏக்கர் நிலம் இருந்ததாம். அதையும் ஆதிவாசி அல்லாத ஒருவருக்கு விற்று விட்டாராம். இவர் அன்றாடம் எங்கே போய் கள்ளச்சாராயம் குடித்துக் கொண்டிருந்தாரோ, அங்கேயே சென்று கணவனை நையப்புடைக்க ஆரம்பித்துவிட்டார். அதில் கடுப்பான கணவன், அவளைப் போட்டுத் தாக்க, அங்கிருந்த அவனின் குடிகார நண்பர்களும், கள்ளச்சாராய வியாபாரிகளும், ஆபாசமாகத் திட்டியிருக்கிறார்கள்.

இதில் மேலும் ஆவேசமடைந்த மருதி, ‘நீ சாராயம் விற்கிறதுனாலதாண்டா அத்தனை பேரும் குடிச்சுட்டு குடும்பத்தையே கெடுக்கறானுக?’ என்று கேட்டுக் கொண்டே அங்கிருந்த சாராய கேன், ஊறல் பானைகளையெல்லாம் அடித்து உடைத்து துவம்சம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். அதில் ஆத்திரமுற்ற கள்ளச்சாராய வியாபாரிகள் அவளையே போட்டு அடித்திருக்கிறார்கள்.

தன் கண்ணெதிரே அடுத்தவர்களிடம் மனைவி அடிபடுவதைப் பார்த்த கணவன் துடித்துப் போய் அவர்களைத் தாக்கியிருக்கிறான். இறுதியில் மருதியையும், அவள் கணவனையும் அங்குள்ள மற்ற ‘தாய்க்குல’ப் பெண்கள் தடுத்து ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார்கள். நரசிமுக்கு கிராமத்தில் கள்ளச் சாராயம் விற்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றளவும் அந்த ஊரில் கள்ளச் சாராயம் என்பதே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மருதியின் கணவர் சுத்தமாகத் திருந்தி விட்டார்.

purusan04bmpmy3.png

இந்த சம்பவத்திற்குப் பிறகு துணிச்சலான பெண்கள் கள்ளச்சாராயப் பேர்வழிகளைப் பிடித்து போலீஸிலும் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனால் கள்ளச்சாராய கும்பல்களின் பகையைச் சம்பாதித்திருக்கிறார்கள் இந்தப் பெண்கள். ஆனால் போலீஸ் இவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறது. இந்தப் பெண்கள் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதை மட்டுமே கடமையாகக் கொண்டிருக்கவில்லை. எங்கெல்லாம் அப்பாவிகள் மீது தாக்குதல் நடக்கிறதோ, குற்றங்கள் நிகழ்கிறதோ அங்கெல்லாம் ஆஜராகி விடுகின்றனர்.

இப்போது அத்தனை கிராமங்களிலும் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. இருந்தாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.. இவர்களின் போக்கால் வெகுவாக பாதிக்கப்பட்ட லஞ்ச லாவண்யப் புள்ளிகள் இவர்களை ஒழித்துக்கட்ட அரசியல் ரீதியாகவும் முயற்சிகள் எடுக்கின்றனர். அதையும் முறியடிக்கப் போராடி வருகிறார்கள் இந்த அமைப்பினர். இவர்களின் செயல்பாட்டைக் கேட்டு வியந்து போய் கேரள, எஸ்.சி, எஸ்.டி. அமைச்சர் குட்டப்பன் நேரடியாகவே வந்து குறைகளைக் கேட்டார். ‘உங்களுக்கு நிறையப் பாதுகாப்பு வேணும். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்!’ என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார்!’’ என்றார், நம்மிடம் பேசிய உஷா.

இவரிடம் பேசியதையடுத்து, இந்தத் ‘தாய்க்குலம்’ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலரைச் சந்தித்தோம். “புருஷன்மார்களை அடிப்பது பற்றியெல்லாம் பேட்டி வேண்டாம். இதனால் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது’’ என்றார் தாவளம் பக்கமுள்ள வீட்டியூர் ஆதிவாசி கிராமத்தில் கள்ளச்சாராயத்தை ஒழித்த ஜானகி.

இப்படியோர் அமைப்பு தமிழகத்திலும் எப்போது உருவாகும்? ஏக்கத்தோடு திரும்பினோம் நாம்.

கா.சு.வே.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

அடித்து வளர்க்காத பிள்ளையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் வீட்டுக்குதவாது’ என்றொரு பழமொழி உண்டு. இதை யார் எப்படிப் புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை. கேரள ஆதிவாசிப் பெண்கள் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது, குடிகார கணவர்களை அடித்தே திருத்தியிருக்கிறார்கள். தவிர, கூட்டாகச் சேர்ந்து கள்ளச்சாராய வியாபாரிகளை ஊரை விட்டே அடித்துத் துரத்தியும் இருக்கிறார்கள். இது பற்றித்தான் கேரளாவில் பரபர பேச்சு.

குடிகார கணவர்களை அடித்தே திருத்திய அம்மணிகளை பாராட்டத்தான் வேணும்.

புருஷன் குடிச்சா அடி உதை தான்"

பொம்பிளை குடிச்சா என்ன கிடைக்குங்க :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்

பொம்பிளை குடிச்சா என்ன கிடைக்குங்க :rolleyes::lol:

அப்பவும் அடி உதை (ஆம்பிளைக்கு) தான். :rolleyes::lol::rolleyes::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால் எங்கடை முனியம்மாக்கள்(அதுதானப்பா எங்கடை மனுசிமார்)ஊரிலை இருக்கேக்கை தங்களுக்கு குடிகாரபுருசன் வரக்கூடாதெண்டு கோயில் கோயிலாயிருந்து உள்ள விரதமெல்லாம் புடிச்சுப்போட்டு இஞ்சை வந்திட்டினம்.

இப்ப என்னடாவெண்டால் அவையளும் எங்களோடை சேர்ந்து ரெட்வைன் பாவிக்கினம் :rolleyes:

ஏனெண்டால் உடம்புக்கு நல்லதாம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னடாவெண்டால் அவையளும் எங்களோடை சேர்ந்து ரெட்வைன் பாவிக்கினம் :rolleyes:

ஏனெண்டால் உடம்புக்கு நல்லதாம் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சில வீடுகளில் கணவர் குடிக்காவிட்டாலும் மனைவியிடமிருந்து அடி விழுகுதே..... என்ன கு.சா தெரியாது போல இருக்கிறா??

சில வீடுகளில் கணவர் குடிக்காவிட்டாலும் மனைவியிடமிருந்து அடி விழுகுதே..... என்ன கு.சா தெரியாது போல இருக்கிறா??

இது என்ன புதுக்கதையாய் இருக்கு, குஞ்சாச்சியிடம் அடி வேண்டினியளோ?

அட பாவமே இப்படி எல்லாம் நடக்குதோ :mellow: ....வழமையாவே நம்ம யாழ்கள தாத்தாமார் வீட்டை வாங்கி கட்டுறவை தான்.. :lol: (அது தானே எல்லாருக்கும் தெரிந்த விசயம் ஆச்சே :huh: )..என்றாலும் உந்த ஆதிவாசி பெண்களை பாராட்ட தான் வேண்டும் :( அது சரி வசபண்ணா உந்த ஆதிவாசி பெண்களிற்கும் நம்ம யாழ்களத்து ஆதிவாசிக்கும் ஏதாவது கனக்சன் இருக்குமோ :D இல்லை சும்மா கேட்டனான் யாரும் என்னவும் பாவிக்கட்டும் அடிவாங்கட்டும் கு.சா தாத்தா நான் வந்து ஸ்கோச்,வொட்கா போன்ற சாமன்களை பாலோட மிஸ் பண்ணி அடிக்கலாமோ :D இல்லை அப்ப தான் உடம்பிற்கு நல்லதாம்!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்க்கை என்பது உன்ட கையில வாழுறது உன் விருப்பம் மற்றவனை பற்றி யோசிக்காதே :lol: ...இதை ஏன் சொல்லுறேன் விளங்குதோ அது தான் சில பேர் குடித்தா தான் நாகரிகம் என்று சொல்லீனம் அதற்கு தான்..." :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.