Jump to content

காதலர் தினம் 2008: யாழ் இணையத்தில் காதல் - யாழ் காதல் இளவரசன் 2008 - யமுனா!!


Recommended Posts

Posted

பலரது காதல் தேல்வியில் முடிவதற்கு காரணம் அவர்களின் உறுதியில்லாத தன்மை..உறுதியுடன் இறுதி வரை போராடினால் வெற்றி உனக்கே....

  • Replies 229
  • Created
  • Last Reply
Posted

எல்லாருக்கும் வணக்கம்..

நாளை போட்டி இந்தநேரம் நடந்துகொண்டு இருக்கும். எல்லாரும் வந்து கலந்துகொள்ளுங்கோ.

கடந்தமுறை லெ.கேணல் பூட்டோ நினைவுப் போட்டி வைத்தபோது பெரும்பாலான கேள்விகள் யாழ் பற்றியே கேட்கப்பட்டது.

இந்த முறை யாழ் இணையத்தினுள் இருக்கும் காதல் பற்றிய சம்பவங்கள் பற்றி அதாவது யாழினுள் இருக்கும் காதல் பக்கங்கள் பற்றி கேள்வி கேட்பதை குறைக்கலாம் என்று தீர்மானித்து இருக்கின்றேன்.

நாளைக்கு எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரியாது. ஆனால் தற்செயலாக பிறகு பக்கங்கள் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்டு சேர்வர் டவுன் ஆகிப்போவதை தவிர்ப்பதற்கும், மற்றும் வேகம் இல்லாத நெட் இணைப்பை கொண்டவர்களும் போட்டியில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கும் முகமாகவும்.. யாழினுள் இருக்கும் விசயங்கள் பற்றி கேள்விகள் கேட்பது மிகக்குறைவாகவே இருக்கும்.

  • நான் கனடா கிழக்கு கரை நேரம் காலை ஏழு மணியில் இருந்து கேள்விகளை இங்கு பிரசுரிப்பேன்.
  • முதல் கேள்வி பிரசுரம் செய்யப்பட்டு அடுத்த கேள்வி பிரசுரம் செய்யப்பட முன் உங்கட பதிலை பதிய வேணும். அடுத்த கேள்வியும் கேட்கப்பட்ட பின் வரும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
  • சில கேள்விகளிற்கு யார் முதலில் சரியான பதிலை அளிக்கின்றார்களோ, அவர்களுக்கே புள்ளி வழங்கப்படும்.
  • கேட்கப்படும் ஒரு கேள்விக்கு பலர் சிறந்த விடைகளை அளிக்கும் பட்சத்தில், முதலாவதாக பதிலை பிரசுரிப்பவருக்கு புள்ளி வழங்கப்படும்.
  • போட்டியில் அ, ஆ, இ... என்று பல பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கை வித்தியாசப்படும்.
  • உதாரணமா, அ பகுதிக்கு ஒரு கேள்விக்கு 01 புள்ளி, ஆ பகுதிக்கு 03 புள்ளி, இ பகுதிக்கு 05 புள்ளி... இப்படி வழங்கப்படும்.
  • நீங்கள் பிரசுரம் செய்யும் விடைகளை பிரசுரம் செய்தபின் திருத்தம் (எடிட்) செய்ய முடியாது. எடிட் செய்யப்பட்ட விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. என்றபடியால பிரசுரம் செய்யமுன் - Add Reply பொத்தானை அழுத்தும் முன் உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

விரிவான போட்டி விதிகளை நாளை கூறுகின்றேன்.

இது பொழுதுபோக்கு, மகிழ்ச்சியை அடிப்படையாக வச்சு செய்யபடும் ஒரு போட்டி. இதில் கேட்கப்படும் கேள்விகளை அல்லது விடைகளை பார்த்துவிட்டு ஒருவரும் தயவுசெய்து மனக்கசப்பு / மனத்தாபம் அடையவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ் களம் கொஞ்சம் கலகலப்பாக இருக்கவேண்டும் என்பதே இந்த நேரடிப்போட்டி செய்யப்படுவதன் அடிப்படை காரணம்.

உங்களுக்கு போட்டி சம்மந்தமா ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கோ.

நன்றி!

Posted

கிளன்பிட்டாங்கைய்யா கிளம்பிட்டாங்க

நீங்களும் நாளைக்கு கிளம்பி வந்து கலந்துகொள்ளுங்கோ. பிஞ்சுல முத்தின குழந்தை எண்டபடியால் உங்களுக்கு இந்தப்போட்டிக்கு விடை அளிப்பது எல்லாம் வெறும் ஜுஜூப்பி யாதான் இருக்கும்...

Posted

இந்த மாப்பி கிழடுக்கு லொள்ளு கூடிப்போச்சு, நான் ரொம்ப நாளா யாழ் பக்கம் எட்டியெ பாக்கலப்பா

Posted

மாதிரிக் கேள்வி14: நீங்கள் உயிருக்கு உயிராக காதலிக்கும் உங்கள் காதலன்/ காதலியின் நாட்குறிப்பு - டயறி ஒன்று தற்செயலாக உங்கள் கையில் சிக்கிவிட்டது. இந்த நாட்குறிப்பில் உங்களிற்கு மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய உங்கள் காதலன் / காதலி பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் - சம்பவங்கள் பதியப்பட்டு இருக்கலாம். நீங்கள் டயறியை - நாட்குறிப்பை என்ன செய்வீங்கள்? (மிகச்சிறந்த கருத்திற்கு புள்ளி.. )

Posted

மாதிரிக் கேள்வி14: நீங்கள் உயிருக்கு உயிராக காதலிக்கும் உங்கள் காதலன்/ காதலியின் நாட்குறிப்பு - டயறி ஒன்று தற்செயலாக உங்கள் கையில் சிக்கிவிட்டது. இந்த நாட்குறிப்பில் உங்களிற்கு மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய உங்கள் காதலன் / காதலி பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் - சம்பவங்கள் பதியப்பட்டு இருக்கலாம். நீங்கள் டயறியை - நாட்குறிப்பை என்ன செய்வீங்கள்? (மிகச்சிறந்த கருத்திற்கு புள்ளி.. )

மற்றவர்களின் டயறியை அது யாhருடையதாக இருந்தாலும் அவர்களுடைய அனுமதியின்றி அதனை வாசிப்பது பண்பற்ற செயல் எனவே அந்த டயறியை காதலியிடம் இந்தாப்பா உன்னுடைய டயறி என்று கொடுத்துவிடுத்துவிடுவேன்

Posted

என்னை மிகவும் பாதிக்க கூடிய தகவல்கள் இருப்பின் போட்டோ கொப்பி எடுத்து விட்டு டயறி திருப்பி ஒன்றும் வாசிக்காதது போல் திருப்பி கொடுக்கபடும். என்னை பாதிக்காவிட்டால் உண்மையை சொல்லி மற்றவர்களின் நாட்குறிப்பை வாசித்தமைக்கு மன்னிப்பு கேட்பேன்.இது தான் நடை முறையில் யாரும் செய்வார்கள் என்பது எனது தாழ்மையான கருத்து.

Posted

உங்களின் கேள்வியின் படி அந்த நாகரீகமற்ற செயலை செய்தாயிற்று...அது என்னைப் பாதிக்கும் வரிகள் உள்ளமையால் அதனை இல்லாது அழித்துவிடுவேன்.. காதலி பண்பற்றவளாக அல்லது மறைக்ககூடாத உண்மையை மறைத்தவளாக உணரப்படுமானால் அவளை சந்தித்து விளக்கம் கேட்டு சரியான பதில் இல்லை என்றால் அவளை விலகிவிடுவேன்..சமாதானமாய் போகக்கூடிய பெருந்தன்மை எனக்கில்லை

Posted

அனைவருக்கும் பாராட்டுக்க்கள். இங்கு சரி, பிழை என்று விடை இல்லை. அவரவர் சொந்தக்கருத்து. எண்டாலும் போட்டி என்று வந்தால் கொஞ்சம் கருத்துக்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிவரும். நடைமுறையில் நடக்காத விசயங்களுக்கும் புள்ளி கொடுக்க முடியாது. இதேவேளை மனச்சாட்சி இல்லாத கருத்துக்களிற்கும் புள்ளி கொடுக்க முடியாது.

வேறு யாராவது வந்து வேறு ஏதாவது வித்தியாசமான பதில் தாறீனமோ எண்டு பாப்பம். கேள்விகள் தொடருது. நீங்கள் உங்களுக்கு விருப்பமான மாதிரிக்கேள்விகளை முயற்சித்து பாருங்கோ.

இங்கு நான் கேட்கும் கேள்விகள் எங்காவது இணையத்தில் சுட்டு எடுக்கப்பட்டவை அல்ல. அனைத்தும் எனது சொந்த சிந்தனையில் உருவாகுபவை. ஆனால் இதுபோன்ற கேள்விகளிற்கு பதில் தேட முயற்சிப்பது நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் பல விசயங்களிற்கும், பிரச்சனைகளிற்கும் தீர்ப்பதற்கு கைகொடுக்கும் என்று நினைக்கின்றேன். வேலை நேர்முகப் பரீட்சைக்கும் போகும்போது இதேபாணியிலான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படலாம்.

பேர்சனாலிட்டி டெஸ்டில் வழமையாக இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படும். மேலும்..

அழகு ராணிப் போட்டி போன்ற பெரிய போட்டிகளிலும் ஒவ்வொருத்தரின் பேர்சனாலிட்டியை டெஸ்ட் செய்ய இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவது நீங்கள் அறிந்ததே.

என்னைப் பொறுத்தவரை நீங்கள், நாங்கள் அனைவருமே ராஜாக்கள், ராணிகளே! :) என்றபடியால் இங்கு நீங்கள் கூறும் பதில்களையும் பெரிய, பெரிய விடைகளாகவே நீங்கள் கணித்துக்கொள்ளுங்கள்.

மாதிரிக் கேள்வி 15: நீங்கள் ஒருவரை உயிருக்கு உயிராக காதலிக்கின்றீங்கள் எண்டு வச்சுக்கொள்ளுவம். அவரும் / அவளும் உங்களை உயிருக்குயிராக காதலிக்கிறார். இந்தநிலையில துர் அதிர்ஸ்டவசமாக உங்களுக்கு கான்சர் - புற்றுநோய் இருப்பதாக கண்டுபிடிக்கப்படுகிது. டாக்டர்கள் நீங்கள் இன்னும் ஆறு மாதம்தான் உயிர் வாழ்வீங்கள் எண்டு சொல்லிப்போட்டீனம். நீங்கள் என்ன செய்வீங்கள்?

Posted

உங்களை உயிரா நேசிக்கிற பெண் உங்களுக்கு வியாதி என்றால் விலக மாட்டாள்..ஆனால் நீங்கள் காதலிக்கிற பெண் வாழ்க்கையும் வீணாய்ப்போவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.அதனால்..ச

Posted

முதலில் ஒரு பரீட்சை காதலன்/லி யிடம் செய்ய வேண்டும் அதாவது இப்படி ஒரு நோய் வந்தால் என்ன செய்வீர்கள் என சாடைமாடையாக கேட்கவேண்டும்.

1.ஒன்றில் டாலிங் உங்களை விட்டால் நான் உயிரை விட்டு விடுவேன் என்றால் நிச்சயமாக உண்மையை அவர் அறியும் வரை சொல்லாமல் இருப்பது நல்ல்லது.

2.விடை 1 ஐ தவிர ஏனைய எந்த விடைக்கும் உண்மையை கொஞ்சம் கொஞ்சமாக சொல்லலாம். தொடர்ந்து வாழ்வதற்கான தெரிவை அவரிடமே விட்டு விடலாம்.

Posted

மாதிரி கேள்விகள் நிறைவுக்கு வருகின்றன.

இன்னும் சில மணிநேரங்களில் "யாழ் இணையத்தில் காதல்" நேரடிப்போட்டி ஆரம்பமாகும்.

இதுவரை கருத்துக்கள் கூறிய, மற்றும் மாதிரிப் போட்டியில் ஆர்வத்துடன் பங்குபற்றிய யமுனா, அனி, நெடுக்காலபோவான், இறைவன் அண்ணை, சிவா அண்ணை, நுணாவிலான், வெண்ணிலா, கறுப்பி, ரசிகை, இன்னிசை, வானவில் மற்றும் முக்கியமாக விகடகவி அண்ணாச்சிக்கும் மிகுந்த நன்றிகள்.

மாதிரிப் போட்டியை கண்டு களித்தவர்களிற்கும் மிக்க நன்றிகள்.

தனிமடலில் போட்டி பற்றிய கருத்துக்களை எழுதி அனுப்பியவர்களிற்கும் நன்றிகள்!

நீங்கள் அனைவரும் போட்டியில் கலந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இனி....

போட்டி விதிமுறைகள்:

1. நான் கனடா கிழக்கு கரை நேரம் இன்று காலை ஏழு மணியில் இருந்து கேள்விகளை இங்கு பிரசுரிப்பேன்.

2. ஓர் கேள்வி பிரசுரம் செய்யப்பட்டு அடுத்த கேள்வி பிரசுரம் செய்யப்பட முன் உங்கட பதிலை பதிய வேணும். அடுத்த கேள்வியும் கேட்கப்பட்ட பின் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

3. சில கேள்விகளிற்கு யார் முதலில் சரியான பதிலை அளிக்கின்றார்களோ, அவர்களுக்கே புள்ளி வழங்கப்படும்.

4. கேட்கப்படும் ஒரு கேள்விக்கு பலர் சிறந்த விடைகளை அளிக்கும் பட்சத்தில், முதலாவதாக பதிலை பிரசுரிப்பவருக்கு புள்ளி வழங்கப்படும்.

5. போட்டியில் 1, 2, 3, 4, 5 என்று பல பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கை வித்தியாசப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் கேள்விகளிற்கு விடை அளிப்பதற்கு தரப்படும் கால அவகாசம் வித்தியாசப்படும்.

உதாரணமாக, அ பகுதிக்கு ஒரு கேள்விக்கு 01 புள்ளி, ஆ பகுதிக்கு 03 புள்ளி, இ பகுதிக்கு 05 புள்ளி... இப்படி வழங்கப்படும்.

6. நீங்கள் பிரசுரம் செய்யும் விடைகளை பிரசுரம் செய்தபின் திருத்தம் (எடிட்) செய்ய முடியாது. எடிட் செய்யப்பட்ட விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. என்றபடியால பிரசுரம் செய்யமுன் - Add Reply பொத்தானை அழுத்தும் முன் உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

7. ஒரு கேள்விக்கு ஒருவர் விடையை ஒருதரம் மட்டுமே பிரசுரம் செய்யமுடியும்.

8. இணையத்தில் இருந்து வெட்டி ஒட்டப்படும் கருத்துக்களிற்கு புள்ளி வழங்கப்படமாட்டாது. அனைத்தும் உங்கள் சொந்தக் கருத்தாக இருக்கவேண்டும்.

9. இது பொழுதுபோக்கு, மகிழ்ச்சியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் ஒரு போட்டி. இங்கு கேட்கப்படும் கேள்விகளை அல்லது விடைகளை பார்த்துவிட்டு ஒருவரும் தயவுசெய்து மனக்கசப்பு / மனத்தாபம் அடையவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். இதை போட்டியாக - ஓர் பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

போட்டியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பார்வையாளர்களாக பங்குபற்றி போட்டியில் பங்குபற்றுபவர்களிற்கு உற்சாகத்தை கொடுத்து, போட்டியை கண்டுகளித்து மகிழும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

போட்டியில் வெற்றி பெறுபவருக்கு யாழ் இணையத்தின் காதல் இளவரசன் / இளவரசி என்ற பட்டம் கொடுக்கப்படும். இந்தப்பட்டம் அடுத்தவருடம் ஜனவரி 2009 வரை செல்லுபடியாகும். :icon_mrgreen:

போட்டியில் புள்ளிகள் பெறப்படாத கேள்விகளிற்கான புள்ளிகள் எனது கணக்கில் சேர்க்கப்படும். போட்டியில் ஒருவரும் பங்குபற்றாது விட்டால் அல்லது கேள்விகளிற்கு சரியாக பதில் அளிக்காது விட்டால்... எனக்கு அதிக புள்ளிகள் கிடைக்கும் பட்சத்தில் எனக்கே நான் யாழ் இணையத்தின் காதல் இளவரசன் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள வேண்டிவரும். இந்த துர்ப்பாக்கிய நிலமையை நீங்கள் ஏற்படுத்தமாட்டீர்கள் என்று நினைக்கின்றேன். :):D

ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கோ.

போட்டியில் அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எல்லாரையும் போட்டியில் சந்திப்போம்.

நன்றி! வணக்கம்!

Posted

ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கோ.

இன்னும் எத்தணை மணீத்தியாலத்தில் போட்டி ஆரம்பமாகும்.

விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு போட்டியில் கலந்துகொள்ள விரும்புகிறேன்,

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துகள்

Posted

இப்போது கனடா கிழக்கு கரை நேரம் சரியாக அதிகாலை 1.40. போட்டி சரியாக கனடா கிழக்கு கரைநேரம் காலை 7.00 மணிக்கு அதாவது இன்னும் சுமார் ஆறு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களில் ஆரம்பமாகும் வெண்ணிலா...

Posted

இப்போது கனடா கிழக்கு கரை நேரம் சரியாக அதிகாலை 1.40. போட்டி சரியாக கனடா கிழக்கு கரைநேரம் காலை 7.00 மணிக்கு அதாவது இன்னும் சுமார் ஆறு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களில் ஆரம்பமாகும் வெண்ணிலா...

:icon_mrgreen: அப்போ நான் இப்போ போய் மீண்டும் நம்ம நேரம் 5 30 க்கு வாறன் போட்டிக்கு. :D நன்றி டாட்டா :)

Posted

போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துகள்

நன்றி கறுப்பி அக்கோய்.. இப்பிடியே சொல்லிப்போட்டு வெளியில நிக்காமல் நீங்களும் போட்டியில கட்டாயம் கலந்துகொள்ளவேணும்..

:icon_mrgreen: அப்போ நான் இப்போ போய் மீண்டும் நம்ம நேரம் 5 30 க்கு வாறன் போட்டிக்கு. :D நன்றி டாட்டா :)

சரி வெண்ணிலா.. இன்னும் ஒரு மணித்தியாலத்துக்க வந்து சேருங்கோ. போட்டியில வெற்றி பெற வாழ்த்துகள்!

Posted

முக்கிய குறிப்பு ஒண்டு என்னவெண்டால், போட்டி நடக்கேக்க எனது கணணியில் அல்லதுநெட்டில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அவை திருத்தம் செய்யப்பட்ட பின் போட்டி தொடரும்.

எண்டபடியால, போட்டியில கலந்துகொள்ளிற ஆக்கள் போட்டி நடக்கேக்க தற்செயலா நான் காணாமல் போனால் - தலைமறைவானால் யோசிக்காதிங்கோ.

நன்றி!

Posted

எல்லாருக்கும் கனடா காலை வணக்கம்...

எத்தனை பேர் போட்டியில கலந்துகொள்ள ரெடியாய் இருக்கிறீங்கள்?

ஒருக்கால் வந்து உங்கட தலைகள காட்டுவீங்களோ?

எத்தனை பேர் ஒளிஞ்சு நிக்கிறீங்கள்?

எனக்கே நான் காதல் இளவரசன் எனும் பட்டத்தை சூடும் நிலமை ஏற்படாத வகையில் நீங்கள் எல்லாரும் போட்டியில் கலந்துகொள்ளுவீங்கள் என்று நினைக்கின்றேன்..

இன்னும் சிறிது நேரத்தில எட்டு நிமிடங்களில நாங்கள் போட்டியுக்க போவம்...

அதுக்கு முதல்...

Posted

போட்டி விதிமுறைகள்:

1. நான் கனடா கிழக்கு கரை நேரம் இன்று இப்போது காலை ஏழு மணியில் இருந்து கேள்விகளை இங்கு பிரசுரிப்பேன்.

2. ஓர் கேள்வி பிரசுரம் செய்யப்பட்டு அடுத்த கேள்வி பிரசுரம் செய்யப்பட முன் உங்கட பதிலை பதிய வேணும். அடுத்த கேள்வியும் கேட்கப்பட்ட பின் முதலில் கேட்கப்பட்ட கேள்விக்கு வரும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

3. சில கேள்விகளிற்கு யார் முதலில் சரியான பதிலை அளிக்கின்றார்களோ, அவர்களுக்கே புள்ளி வழங்கப்படும்.

4. கேட்கப்படும் ஒரு கேள்விக்கு பலர் சிறந்த விடைகளை அளிக்கும் பட்சத்தில், முதலாவதாக பதிலை பிரசுரிப்பவருக்கு புள்ளி வழங்கப்படும்.

5. போட்டியில் 1, 2, 3, 4, 5 என்று பல பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையான கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்படும் புள்ளிகளின் எண்ணிக்கை வித்தியாசப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் கேள்விகளிற்கு விடை அளிப்பதற்கு தரப்படும் கால அவகாசம் வித்தியாசப்படும்.

உதாரணமாக, அ பகுதிக்கு ஒரு கேள்விக்கு 01 புள்ளி, ஆ பகுதிக்கு 03 புள்ளி, இ பகுதிக்கு 05 புள்ளி... இப்படி வழங்கப்படும்.

6. நீங்கள் பிரசுரம் செய்யும் விடைகளை பிரசுரம் செய்தபின் திருத்தம் (எடிட்) செய்ய முடியாது. எடிட் செய்யப்பட்ட விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. என்றபடியால பிரசுரம் செய்யமுன் - Add Reply பொத்தானை அழுத்தும் முன் உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

7. ஒரு கேள்விக்கு ஒருவர் விடையை ஒருதரம் மட்டுமே பிரசுரம் செய்யமுடியும்.

8. இணையத்தில் இருந்து வெட்டி ஒட்டப்படும் கருத்துக்களிற்கு புள்ளி வழங்கப்படமாட்டாது. அனைத்தும் உங்கள் சொந்தக் கருத்தாக இருக்கவேண்டும்.

9. இது பொழுதுபோக்கு, மகிழ்ச்சியை அடிப்படையாக வைத்து செய்யப்படும் ஒரு போட்டி. இங்கு கேட்கப்படும் கேள்விகளை அல்லது விடைகளை பார்த்துவிட்டு ஒருவரும் தயவுசெய்து மனக்கசப்பு / மனத்தாபம் அடையவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன். இதை போட்டியாக - ஓர் பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

போட்டியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் பார்வையாளர்களாக பங்குபற்றி போட்டியில் பங்குபற்றுபவர்களிற்கு உற்சாகத்தை கொடுத்து, போட்டியை கண்டுகளித்து மகிழும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

Posted

எல்லாருக்கும் கனடா காலை வணக்கம்...

எத்தனை பேர் போட்டியில கலந்துகொள்ள ரெடியாய் இருக்கிறீங்கள்?

:) காலை வணக்கம்

சரியான ரைம் க்கு எக்சாம் ஹோல் க்கு வந்துட்டேனா குருவே? :icon_mrgreen:

Posted

பகுதி 01: (முதலாவதாக பிரசுரிக்கப்படும் மிகச்சிறந்த கருத்துக்கு 01 புள்ளி) (கால அவகாசம் - 01 நிமிடம்)

கேள்வி 01. அன்பிற்கும் உண்டோ ...... ?

Posted

எல்லை குருவே (வந்துட்டோமல) :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.