Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடரும் உங்கள் பகிர்வுகளுக்கு நன்றி.

  • Replies 510
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

Posted

நன்றி சுமோ உற்சாகமூட்டலுக்கு.

-----------------------------------------------------------------------------------------------------------

  மேரிக்யூரி (1867-1934)
 

 
போலோனியம், ரேடியம் இரண்டையும் கண்டுபிடித்து அறிவியல் உலகில் நிகரில்லா இடத்தைப் பெற்றவர் மேரிக்யூரி. இவரது இயற்பெயர் 'மான்யா ஸ்கோலோடாவ்ஸ்கா'.
போலந்து நாட்டின் 'வார்சா' நகரில் 07-11-1867 அன்று இவர் பிறந்தார். இவரின் தந்தை பெயர் 'பிளாடிஸ்லாவ் ஸ்கோலோடாவ்ஸ்கா'.
உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர் மேரிக்யூரி (1883). இயற்பியல் எம்.எஸ்.ஸி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் (1893). கணிதம், எம்.எஸ்.ஸி இரண்டாம் நிலையில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெற்றார் (1894). பின்னர் இயற்பியல் முனைவர் பட்டத்தையும் பெற்றார் (1903). 
இவர் பாடம் கேட்ட ஆசிரியரான 'பியூரிக்யூரி' என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் (1895).
'போலோனியம்' இவரால் கண்டுபிடிக்கப்பட்டது (1898). அதே வருடத்தில் குளோரினிலிருந்து 'ரேடியம்' கண்டுபிடித்தார்.
இதில் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்த பின் 'ரேடியம்' என்பது குளோரினிலுள்ள தனித்துவமான மூலக்கூறு என்பதை கண்டறிந்து வெற்றி பெற்றார் (1902).
'சார்போன்' என்னுமிடத்திலுள்ள இயற்பியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார் (1903). இவரது கணவர் 'பியூரிக்யூரி' சாலை விபத்துல் மரணம் எய்தியதும் இப்பதவியில் 'மேரிக்யூரி' அமர்த்தப்பட்டார்.
பிரேஸில்,பெல்ஜியம், ஸ்பெயின், செக்கோஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் பயணங்கள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் (1918).
இவர், இவரது கணவர் 'பியூரிக்யூரி' மற்றும் 'ஹென்றி பாக்யூரல்' ஆகிய மூவருக்கும் சேர்த்து இயற்பியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1903).
லண்டனிலுள்ள 'ராயல் சொஸைட்டி' மேரிக்யூரிக்கு டேவி பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு வேதியியல் பிரிவு நோபல் பரிசு வழங்கப்பட்டது (1911).
1931 ஆம் வருடம் வரை இவருக்கு பல்வேறு விருதுகள், பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
உலக அளவில் இவர் 'ரேடியம் லேடி' என்ற பெயரில் புகழ்வாய்ந்தவராக பாராட்டப்பட்டார் என்பது சிறப்புச் செய்தியாகும்.
இவரது மகள் 'ஐரின் ஜூலியட் க்யூரி'யும் வேதியியலுக்காக நோபல் பரிசு வாங்கியவர் (1935).
உலகப் புகழ் வாய்ந்த இம்மாதரசி இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தினார் .
அறுபத்து ஏழு ஆண்டுகள் வாழ்ந்து பிரான்ஸிலுள்ள 'சான்செல்லிமாஷ்' என்னும் ஊரில் 04-07-1934 அன்று காலமானார்.
கல்வி பெற்று, அறிவியல் ஆராய்ச்சிகளில் இன்று ஈடுபட்டு வரும் பெண்களின் ஆதர்ஷமாக மேரிக்யூரி விளங்கி வருகிறார் என்பது சிறப்புச் செய்தியாகும்.
 
Posted

குழந்தை அழுகையை நிறுத்த

 
crying-baby.jpg

சிலசமயம் உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியவே தெரியாது. நீங்களும் பால்புட்டியை கொடுத்து பார்பீர்கள், பாட்டு பாடி பார்பீர்கள், ஏன் பல்ட்டி கூட அடித்து காண்பிப்பீர்கள், ஆனால் அழுகை நின்ற பாடு இருக்காது.

அந்த மாதிரி சமயத்தில், குழந்தையின் அழுகையை அழகாக உங்கள் செல்போன்-ல் பதிவு செய்து குழந்தைக்கு போட்டு காட்டவும். இப்போது குழந்தை கப்சிப் என்று இருக்கும்.

குழந்தை கட்டுப்படுத்துவது என்பது என்றுமே மலை போன்ற காரியமாகும், அப்படி இருக்கையில், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மருந்துக்கள் நிறைந்த டப்பா அல்லது டானிக் ஆகிவற்றை என்னதான் குழந்தைக்கு எட்டாமல் வைத்தாலும், அதில் ஒரு அழு மூஞ்சி பாப்பா போட்டோ-வை ஒட்டி  வைத்தால், அந்த டப்பா தவறி கீழே விழுந்திருந்தாலும் குழந்தை அதை எடுக்காது.

 

http://tamilkizham.blogspot.ca/2011/10/blog-post_8062.html

  • 2 weeks later...
Posted

ஜப்பானைப் பற்றிய அரிய அற்புதத் தகவல்கள்

 

 vidhai2virutcham.com
 

1.ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொருநாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பாடசாலை மற்றும்கழிவறைகளை சுத்தம் செய்கிறார்கள்.

 

2.ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும் போது விசேட பை ஒன்றினை கட்டாயமாக எடுத்துச் செல்வர்.

 

3. ஜப்பானில் சுகாதார ஊழியர்கள் “சுகாதார பொறியியலாளர்” என அழைக்கப்படுகிறார். அவரது சம்பளம் அமெரிக்க டொலரில் 5000/- இலிருந்து 8000/-வரை ஆகும். ஒரு சுத்தபடுத்துனர் எழுத்து மற்றும் வாய்மொழி மூல பரீட்சையின் பின்னரே தெரிவு செய்யப்படுகிறார்.

 

4. ஜப்பானில் இயற்கை வளங்கள் என்று எதுவும் இல்லை.அத்துடன் வருடத்தி ற்கு நூற்றுக்கணக்கான பூமி அதிர்ச்சிகள் அங்கு ஏற்படுகின்றன.ஆனால் ஜப்பா ன்தான் உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகும்.

 

5. ஜப்பானில் முதலாம் ஆண்டு தொடக்கம் ஆறாம் ஆண்டு வரையான மானவர்களுக்கு மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

 

6. ஜப்பான் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் தங்களுக்கென்று வேலைக்காரர்கள் வைத்துக் கொள்வதில்லை. பெற்றோரே வீட்டையும் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்வர்.

 

7.ஜப்பான் பாடசாலைகளில் முதலாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு வரைபரீட்சைகளே இல்லை.கல்வியின் நோக் கம் விடயங்களை அறிந்து கொள்ளவும் ஒழுக்க நெறிகளை கற்றுக் கொள்ளவும் தானே தவிர பரீட்சை மூலம் அவர்களை தரப்படுத்த வல்ல என்கிறார்கள்.

 

8. ஜப்பானில் மக்கள் உணவுக் கடைகளில் எந்தவிதத்திலும் உணவை வீணாக்காமல் தமக்குத்தேவையானதை அளவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். உணவு வீணாதல் என்பதே அங்கு இல்லை.


9.ஜப்பானில் சராசரியாக ஒரு வருடத்தில் புகையிரதங்கள் தாமதமாக வந்த நேரம் ஆகக் கூடியது சுமார் 7 வினாடிகள் மாத்திரமே.

 

10. ஜப்பானில் மாணவர்கள் பாடசாலையில் சாப்பிட்ட பின் உடனேயே அங்கேயே பல் துலக் குகிறார்கள்.அவர்களுக்கு சாப்பிடும் உணவு சரியாக சமிபாடு அடைய வேண்டும் என்பதற்காக சாப்பிடுவதற்கு அரை மணித்தியாலம் ஒதுக்கப்படுகிறது.

- Harish Mani on facebook

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல செய்திகளை தரும் நுணாவிலுக்கு நன்றிகள்.

  • Like 1
  • 2 weeks later...
Posted

ஆறு கால் ஆச்சரியம்  

நாம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போதோ அல்லது நாம் கவனிக்காமலோ ஒரு சில உணவுத் துகள்கள் கீழே சிந்திவிட்டால், கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு எறும்புக் கூட்டமே வந்து சேர்ந்து விடுவதைப் பார்த்திருக்கலாம். இது எப்படி நடக்கிறது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? எறும்புகளுக்குக் கண்கள் கூட ரொம்பத் தெளிவாகத் தெரியாது. ஆனால் மோப்ப உணர்வு அதிகம். இது மட்டுமில்லாமல் ஓரிடத்தில் உணவு இருப்பதைப் பார்க்கும் முதல் எறும்பு, அத்துகளின் அருகே சென்று தன் தலையில் உள்ள ஆண்டெனா போன்ற உறுப்பால் அதைத் தொட்டுப் பார்க்கிறது. அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்செல்லும்போது உடலின் பின்பகுதியிலிருந்து ஃபெரமோன் என்ற வேதிப்பொருளைத் தரையில் கோடுபோல இட்டுக்கொண்டே செல்கிறது. இந்தக்கோடு அதன் கூடு வரை நீளும். இதை மோப்பம் பிடிக்கும் மற்ற எறும்புகளும் அந்தத் தடத்தை பின்பற்றிச் சென்று, உணவு இருக்கும் இடத்தை விரைவாகச் சென்றடைந்து விடுகின்றன.

எறும்புகள் ராணுவ வீரர்களைப் போல எப்போதும் சாரிசாரியாக ஊர்ந்து செல்வதன் மூல ரகசியம் ஃபெரமோன் என்ற வேதிப்பொருள்தான். அந்தக் கோட்டை தவறவிட்டால், வழி தெரியாமல் போய்விடும்.எறும்புகள் போடும் இந்த ஃபெரமோன் பாதை எப்போதும் வளைந்து வளைந்துதான் இருக்கும். இடையே சில இடங்களில் நீர் சொட்டிக்கொண்டிருப்பது போன்ற சிறுசிறு ஆபத்துகள் இருந்தாலும் கூட, உணவு கிடைத்துவிட்டால் எறும்புக் கூட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாது.இதை நீங்கள் நேரில் பார்க்கும்போது கவனித்திருக்கலாம்.

உணவைச் சேகரித்து வைப்பது எறும்பின் வேலைகளில் மிக முக்கியமானது. ஆனால் இப்படி சேகரித்துவைக்கும் உணவு, மழைக்காலத்தில் பூசனம் பூத்து கெட்டுப்போய் விடாமல் இருக்க அவை ஒரு வேதிப்பொருளை பயன்படுத்துகின்றன. அந்த வேதிப்பொருளும், அதன் இயல்பும் தற்போது கண்டறியப்பட்டு மருந்து தயாரிப்பில், அது பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு எறும்பின் காலனியில் முகப்பில் இருக்கும் காவலாளி எறும்பு, அங்கே வரும் ஒவ்வொரு எறும்பையும் முகர்ந்து பார்த்துவிட்டு, அது தனது குழுவைச் சார்ந்ததா என்று உறுதி செய்த பிறகே, உள்ளே செல்ல அனுமதிக்கும். எறும்புகள் நகர்ந்து செல்லும்போது சில நேரம் ஆண்டெனாவை, மற்றொரு எறும்பின் தலையில் வைத்து, தங்கள் கூட்டத்தைச் சேர்ந்தது தானா என்று பரிசோதிப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம்.

உணவுப் பாதை போடுவது போலவே, ஆபத்து ஏற்படுவதையும் வேறொரு வேதிப்பொருளை வெளியிட்டு சிப்பாய் எறும்புகள் எறும்புக் காலனிக்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுகின்றன. இதை அறிந்து மற்ற எறும்புகள் தப்பிச் செல்லும். அதேபோல ஆண் எறும்பை இனப்பெருக்கம் செய்ய ஈர்க்கவும் ராணி எறும்புகள் ஒரு வகை ஃபெரமோனை வெளியிடுகின்றன.

இப்படியாக வழிகாட்ட, ஆண் எறும்பை ஈர்க்க, எச்சரிக்கை செய்ய என  பல்வேறு செயல்பாடுகளுக்காக எறும்பு வெளியிடும் எல்லா வேதிப்பொருளும் ஃபெரமோன்தான். ஆனால், ஒவ்வொரு செயல்பாட்டுக்கான ஃபெரமோனின் வகையும் வேறுபட்டிருக்கும். இந்த வேறுபாட்டை வைத்தே, மற்ற எறும்புகள் விஷயத்தை புரிந்துகொள்கின்றன. இப்படியாக எறும்புகளின் வாழ்க்கையில் வேதியியல் மிகப்பெரிய பங்காற்றுகின்றது.

இந்தியாவில் 1903இல் பணிபுரிந்த ராணுவ அதிகாரியான கர்னல் பிங்காம் எழுதிய புத்தகம்தான் இந்தியாவில் எறும்புகளைப் பற்றிப் பேசிய முதல் புத்தகம். அதற்குப் பிறகு ஏறக்குறைய நூறாண்டுகள் ஆகியும்கூட, எறும்புகள் பற்றிய விரிவான நூல்கள் அதிகமாக வரவில்லை. சமீபத்தில் ஆன் அ டிரையல் வித் ஆண்ட்ஸ் என்ற குறிப்பிடத்தக்க புத்தகத்தை பெங்களூரைச் சேர்ந்த அஜய் நரேந்திராவும் சுனில் குமாரும் எழுதியுள்ளனர்.

தமிழகத்தில் நமக்குத் தெரிந்தவை சிவப்பு நிற சிறிய நெருப்பெறும்பு, உருவத்தில் சற்றுப் பெரியதாக இருக்கும். கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் கருப்பு நிற கட்டெறும்பு, மரத்தில் இருக்கும் வெளிர் சிவப்பு நிற சூவை எறும்பு, சிறிய பிள்ளையார் எறும்பு ஆகிய நான்கு வகைகள்தான். கட்டெறும்பு பெரும்பாலும் மாமரங்களில் அதிகம் இருக்கும்.

சுள்ளெறும்பு என்று அழைக்கப்படும் சிவப்பு எறும்புகளும், கட்டெறும்புகளும் எதிரி என்று கருதுபவர்களைக் கடிக்கும்.அப்போது உடலில் படும் வேதிப்பொருளால் நமக்கு சிறிது நேரம் வலிக்கிறது. அந்த வேதிப்பொருளின் வீரியம் குறையும் வரை வலிக்கும். சாமி எறும்புகள் எனப்படும் கறுப்பு எறும்பு பெரும்பாலும் கடிப்பதில்லை. கூசுவது போல ஓடிச் சென்று விடும். சில நேரம் பளிச்சென்ற நிறம் ஏதுமில்லாமல் சிறியதாக, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் எறும்புகளைப் பார்த்திருக்கலாம். அவை முழு வளர்ச்சி அடையாத குட்டி எறும்புகள்.

எறும்புப்புற்றில் சேர்த்து வைத்திருந்த தானியங்களை வறுமையால் வாடிய மனிதர்கள் சிலர் எடுத்து, சமைத்து உண்டதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. அதே போல மழைக்காலங்களில் ஈசலைப் பிடித்து பொரித்துச் சாப்பிடும் பழக்கம் தமிழகத்தில் உண்டு. பழைய சங்கப் பாடல் ஒன்று “புற்றீசல் பிடித்துப் பொரியாக்கி” என்ற வரியுடன் வருகிறது. எனவே, அந்தக் காலத்தில் இருந்தே ஈசல்களைப் பிடித்து உண்ணும் பழக்கம் இருப்பது தெரிய வருகிறது. சமீபகாலத் திரைப்பட பாடல்களிலும் கூட இது தொடர்பாக குறிப்பு இருக்கிறது. இப்போதும் கிராமங்களில் ஈசலைப் பிடித்துச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.

(“துளிர்” பிப்ரவரி  மாத இதழில் வெளிவந்த கட்டுரை).

Posted (edited)

  நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்


 

 

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
  • human_body_370.jpgபெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
  • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 60,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
  • நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
  • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
  • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
  • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
  • மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
  • ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
  • இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
  • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
  • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
  • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
  • நமது மூளை 80% நீரால்  ஆனது.
  • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
  • நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
  • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
  • பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
  • மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
  • மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்              31 நிமிடங்கள்

மூளை               10 நிமிடங்கள்

கால்கள்              4 மணி நேரம்

தசைகள்              5 நாட்கள்

இதயம்               சில நிமிடங்கள் 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18722:2012-02-27-05-09-28&catid=1258:2011-01-29-14-03-30&Itemid=516

 

Edited by nunavilan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நுணா, 60,000  மைல்கள் எனத் திருத்தி விடுங்கள்!

 

உலகத்தின் சுற்றளவு 25,000  மைல்கள் தானே!

 

பகிர்வுக்கு நன்றிகள், நுணா! :D

Posted

நன்றிகள் புங்கையூரான்.பிழை திருத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

புளூடூத் பெயர் வரக் காரணம்
 
 
 
bluetooth-logo.jpg



900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

http://www.grindstedtamil.com/2013/02/blog-post_18.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

---------

  நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்

 

 

 

  • மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்              31 நிமிடங்கள்

மூளை               10 நிமிடங்கள்

கால்கள்              4 மணி நேரம்

தசைகள்              5 நாட்கள்

இதயம்               சில நிமிடங்கள் 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18722:2012-02-27-05-09-28&catid=1258:2011-01-29-14-03-30&Itemid=516

 

பலது ஆச்சரியமான தகவல்கள் நுணாவிலான்.

தசைகள் ஐந்து நாட்கள்... செயலிழக்காமல் இருக்கும் என்பது, சரியான தகவலா நுணா

Posted (edited)

3. Muscle movement

Although the brain may die, other areas of the nervous system may still be active. Nurses report seeing reflex action, which involves nerves sending signals to the spinal cord and not the brain, leading to muscle twitches and spasms after death. Some even say they've seen shallow chest movements after death. (Although maybe the doctor fell down on the job for that one.)

 

மூளை இறந்து இருக்கலாம் என்றாலும், நரம்பு மண்டலத்தின் மற்ற பகுதிகளில் இன்னும் செயலில் இருக்கலாம். செவிலியர் மரணத்திற்கு பின்னர் தசை twitches மற்றும் பிடிப்பு வழிவகுத்தது, மூளை முதுகு மற்றும் சிக்னல்களை அனுப்பும் நரம்புகள் உள்ளடக்கிய அனிச்சை செயல், பார்த்து அறிக்கை. சில கூட அவர்கள் மரணத்திற்கு பின்னர் ஆழமற்ற மார்பு இயக்கங்கள் பார்த்தேன் என்று. 

 

 

 

http://io9.com/5862418/10-bodily-functions-that-continue-after-death

Edited by nunavilan
  • 3 weeks later...
Posted

உலகின் மிக பெரிய மின்தடை

 
               நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும், மின் தொகுப்புகளில், நேற்று ஒரே நேரத்தில் கோளாறு ஏற்பட்டதால், டில்லி, மேற்கு வங்கம் உட்பட, 22 மாநிலங்கள் இருளில் மூழ்கின. நாட்டில் உள்ள, 60 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

                 நாடு முழுவதும் உள்ள மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்தந்த பிராந்தியங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் தொகுப்புகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், குறிப்பிட்ட அளவுகளில் பிரித்து வினியோகிக்கப்படுகிறது.

                 மின்சாரத்தை பிரித்து அனுப்பும் பணியை செய்வதற்காக, நாட்டில், வடக்கு, கிழக்கு, வட கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய மின் தொகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தெற்கு மின் தொகுப்பைத் தவிர, மற்ற மின் தொகுப்புகள், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், வட மாநிலங்களுக்கு மின்சாரம் அளிக்கும், வடக்கு மின் தொகுப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், டில்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் இருளில் மூழ்கின.

 மின்தடையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்: 

வடக்கு மண்டலம்: பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர்.

கிழக்கு மண்டலம்: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம்.

வடகிழக்கு மண்டலம்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா.

fo0801-india-outages-940.jpg

.மெட்ரோ ரயில் சேவை முடங்கியது

                    டெல்லி, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் முடங்கியது. . ரயில்கள் ஆங்காங்கே பாதியில் நின்றன. சுரங்கப்பாதைகளில் ரயில் நின்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எமர்ஜென்சி மின்சார சப்ளையை பயன்படுத்தி. பாதி வழியில் நின்ற ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2 மணி நேரத்துக்கு பிறகே மெட்ரோ ரயில் மின் சப்ளை சீரானது.

நடுவழியில் நின்ற 300 ரயில்கள்

                   ஒரே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கியதால் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மின்சாரம் அடியோடு தடைபட்டது. இந்த மின்சார தடை காரணமாக வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வே கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டன.

india-power-failure-10.jpg

                     ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்கள் நடுவழியில் நின்றன   நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்தவர்கள் உணவு, குடிநீரின்றி அவதிப்பட்டனர்.

india-power-failure-03.jpg

சுரங்கங்களில் தொழிலாளர்கள் தவிப்பு

                     திடீர் மின்தடை காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், ''பர்த்வான் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுரங்கத்தில் இருக்கும் அவர்கள் அங்கிருந்து மேலே வருவதற்கு லிப்ட்கள் பயன்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் லிப்ட்கள் இயங்கவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். மின்சப்ளையை சீராக்கி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல்

                   திடீர் மின் தடை காரணமாக டெல்லியில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் சிரமப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

india-power-failure-07.jpg?w=940
india-power-failure-09.jpg
india-power-failure-04.jpg

.காரணம் என்ன?

              ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக அளவு மின்சாரத்தை, மின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக் கொண்டதே, நேற்றைய பிரச்னைக்கு காரணம் என, தெரியவந்துள்ளது. குறிப்பாக, கிழக்கு மின் தொகுப்பிலிருந்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட, கூடுதலாக 3,000 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், அடுத்தடுத்த மின் தொகுப்புகளில் ஏற்பட்ட கோளாறு, 22 மாநிலங்கள் இருளில் மூழ்க காரணமாக ஆகி விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பு, உலகில் இதுவரை நடந்த மின் துண்டிப்புகளில், மிகப் பெரிய அளவிலானது என, மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்தியாவை பொறுத்தவரை, ஒரே நேரத்தில், மூன்று மின் தொகுப்புகளில், அடுத்தடுத்து கோளாறு ஏற்படுவது, இதுவே முதல் முறை.

* வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் உள்ள மின் தொகுப்புகள், 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டு செல்லும் திறன் கொண்டவை.

* உ.பி., பீகார், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள், தங்களுக்கு அனுமதிக்கபட்ட அளவை விட, அதிகமான மின்சாரத்தை, மின் தொகுப்பில் இருந்து எடுக்கவில்லை என, மறுத்துள்ளன.

*மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர். ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.

*இந்தியா முழுவதும் மின் தடை ஏற்பட்டாலும் மும்பையில் பாதிப்பு இருக்காது. குறிப்பாக தெற்கு மும்பையில். அங்குதான் பங்குச் சந்தை, சர்வதேச விமான நிலையம், உயர் நீதிமன்றம், கவர்னர், அமைச்சர்கள் என விஐபிகளின் வீடுகள் இருக்கின்றன.

மேற்கு மின் தொகுப்பில் மும்பை இணைந்துள்ளது. அதில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதிலிருந்து விலகி, வேறு மின் சப்ளை மூலம் மும்பை இயங்கத் தொடங்கும். அதற்கேற்ப அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம் இந்த வசதியை அளித்துள்ளது. இதேபோல் டெல்லியிலும் வசதி ஏற்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கோரியுள்ளார்.

இதுவரை உலகில் ஏற்பட்ட மிக பெரிய மின்தடைகள்:

July 31, 2012: வடஇந்தியா முழுவதிலும் 22 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.  உலகிலேயே மிக பெரிய மின் தடை என்ற பெயரும் பெற்றது.

July 30, 2012: வடைண்டியாவிற்கு மின்சாரம் வழங்கும் வடக்கு பவர்  செயலிழந்தது, 8 மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டது. 370 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

Nov. 10, 2009: Paraguay-Brazil எல்லையில் உள்ள நீர் மின் நிலையத்தை புயல் தாக்கியது. இதனால் பிரேசிலில் 60 மில்லியன் மக்களும் பராகுவேயில் 7 மில்லியன் மக்களும் மின்சாரம் இன்றி தவித்தனர்.

January-February 2008: சீனாவில் உள்ள Chenzhou நகரத்தில் புயல் தாக்கியதால் 4 மில்லியன் மக்கள் இரண்டு வாரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டவர்களில் 11 தொழிலாளர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

November 2006: ஜெர்மன் பவர் கம்பெனியின் உயர் மின் கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் இல் 10 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 18, 2005: இந்தோனேசிய வில் பவர் கிரிடில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 100 மில்லியன் மக்கள் 5 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 12, 2004: Greece இல் 7 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Sept. 28, 2003: Switzerland இல் உயர்  மின்கடத்தியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 95% இத்தாலி மின்சாரம் தடைபட்டது. 55 மில்லியன் மக்கள் 18 மணிநேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்.

Aug. 14, 2003: மத்திய அமெரிக்காவில் மின்கடதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அமெரிக்காவின் 8 மாநிலங்கள் மற்றும் கனடாவில் 50 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 11, 1999: Brazil’s Sao Paulo மாநிலத்தில் துணை மின்நிலையத்தில் மின்னல் தாக்கியதால் 97 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்

March 1989: கனடா மற்றும் அமெரிக்காவின் சிலபகுதிகளில் சூரிய மின்காந்த புயல் தாக்கியதால் 6 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி தவித்தனர்.

July 13, 1977: நியூயார்க் நகரத்தில் துணை மின் நிலையத்தில் மின்னல் தாக்கியதால் மின்தடை ஏற்பட்டது 8 மில்லியன் மக்கள் 25 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர்

Nov. 9, 1965: துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நியூயார்க் நகரம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகள் மின்தடை ஏற்பட்டது. 25 மில்லியன் மக்கள் 14 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்தனர். இதை தழுவி  “Where Were You When the Lights Went Out?” பிரபலமான திரைப்படமும் எடுக்கப்பட்டது.

நன்றி: தினகரன், தினமலர், national post, daily news analysis

  • Like 1
  • 3 weeks later...
Posted

 
  •  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன் குட்டி கன்று என்று ம் அழைக்கப்படுகிறது.
பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்துகொ டுக்காது.
பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.
பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்க வல் லது.
ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
 
ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8 மணி நேரம் அதனை அசைபோடவு ம் பசுவுக்குத் தேவை.
அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50 முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
 
பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல் லது.
 
மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின் றது.
பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உண வை ஜீரணிப்பதற்காக 4 பகுதி கள் உள்ளன.
மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.
பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. 
தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
கறக்கும் பசு மாடு  ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுர ந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
 
பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.
 
உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலக ச்சாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்.

 

http://thachankurichymail.blogspot.in/2012/10/blog-post_7666.html

 

  • 3 weeks later...
Posted

திறமைசாலியாக வளர்வது எப்படி?t.gif

listen.gif

 

1%25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25A
 
“எண்ணியவன் உறங்களாம்

எண்ணங்கள் உறங்குவதில்லை” -வேதாத்திரி மகிரிஷி

மனித வாழ்க்கையின் இறுதி லட்சியம் என்ன?
ஏழைக்கு என்னென்ன தேவைகள்?
வாழ்க்கைக்கான வசதிகள் இருந்தும் ஏன் சிலருக்கு மனதிருப்தி இல்லை?
மனத்தின் ஏக்கங்கள் என்னென்ன?
பணம் நிறைய கிடைத்தாலும் சில வேலைகளை விரும்புவதில்லை ஏன்?
இக்கேள்விகளுக்கான பதில்களுக்கு வருமுன் ஒரு சரித்திர நிகழ்வைப் பார்ப்போம்.
சரித்திர நிகழ்வு :

அதிகாலை செய்தித் தாளைப் புரட்டினார் அந்த மாபெரும் விஞ்ஞானி. “மரண வியாபாரி மரணம்” என்று தலைப் பிட்டு அதன்கீழே அவருடைய போட்டோவைப் பார்த்தார். மனதில் அதிர்ச்சி.

நான் இறந்துவிட்டால் இப்படித்தான் உலகம் என்னைப் பற்றி பேசுமா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. இனி தன் பெயரை எப்படி பேச வேண்டும் என்ற புதிய முடிவை எடுத்தார். இன்றும் உலகத்திலேயே உயர்ந்த பரிசான நோபல்பரிசை உருவாக்கிய விஞ்ஞானி ஆல்பர்ட் நோபல்தான் அவர்.

வேறொருவர் இறந்தபோது இவர் என எண்ணி தவறான மரண செய்தியை செய்தித்தாள் வெளி யிட்டதால் வந்த மனத்திருப்பம்.

வெடி மருந்ததைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் சாதனைப் படைத்தார். அதன் மறுபக்கம், வெடிமருந்தால் எண்ணற்றகொலைகள் ஆல்பர்ட் நோபலின் உடன்பிறந்த சகோதரும் அவ்வெடிக்குப் பலி.

அதற்கு மனதில் நொந்துக் கொண்டிருந்த ஆல்பர்ட் நோபலுக்கு ‘மரணவியாபாரி மரணம்’ என்ற பட்டத்தைப் பார்த்ததும் மனதில்தோன்றிய இறுதி லட்சிய தேவைக்காக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் தானமாக வழங்கி “இந்த உலகத்தின் அமைதி, வளர்ச்சிக் காக யார் யார் பயன் படுகிறார் களோ அவர்களுக்கு நோபல் பரிசு வழங்குங்கள்” என்று அறிவித்தார்.

நோபல் பரிசு விஞ்ஞானியின் இறுதி லட்சியம், ஏழைகளின் தேவைகள், மனதிருப்தியின்மை, மனிதனின் ஏக்கங்கள், போன்றவற்றை மனயியலின் அடிப்படையில் பொருளாதார நிபுணர் மாஸ்லோ விளக்குகிறார்.

மாஸ்லோ விதிகள்:

வயிற்றுப்பசி தீராத மனிதனுக்கு மூன்று வேளை சாப்பாடு என்ற தேவை.

2. உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை என்று அடைந்தவுடன் இதெல்லாம் நிலையா என்பதற்கு தேவையான உத்திரவாதம் என்ற பாதுகாப்பு தேவை.
3. அப்படியே பாதுகாப்பு தேவை நிறைவேறிவிட்டாலும் அடுத்ததாக நமது அன்பை, மன உணர்வுகளை பகிர்ந்து கொள்பவர் யார் என்ற ஏக்கத்தில் பிறக்கும் அன்பு தேவை.
4. உறவுகள், நண்பர்கள் என வளர்ந்து அன்பு வட்டம் வந்துவிட்டால் அதன் பின் சமுதாயத்தில் தான் உயர்ந்தவன் என்று மற்றவர் பாராட்ட வேண்டும் என்ற மரியாதை தேவை.
5. உயர்ந்த அந்தஸ்துடன் மரியாதை களுடன் வாழ்கின்ற மனிதனுக்கும் தன்னுடைய தனித்தன்மை என்ன? தன்னைப் பற்றி இந்த உலகம் எப்படி பேசவேண்டும் என்ற தனித்தன்மை தேவை.
இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் உள் உணர்வுகளைத் தூண்டி அதன் விளைவாக அவன்தன் வாழ்வின் இலட்சியத்தை அடைய உதவுவதுதான் மேலாண்மையின் அடிப்படை.
ஒரு தேவை நிறை வேறிய பின்னர் அடுத்த தேவையை நாடுவதுதான் மனித இயல்பு. அந்த தேவைகளின் அடிப்படையில் ஒரு மனிதனுக்குத் தகுந்த இலக்கைக் கொடுத்தால் அவன் மேலும் உற்சாகமாக செயல்படுவான்.
அதன்மூலம் அவன் வாழ்வும் உயரும். அந்த நிர்வாகமும் வளரும்.
இதைத்தான் திருவள்ளுவர் செயலின் தன்மை, செய்யும்முறை, செய்பவரின் திறன் இவற்றை இணைத்து ஆராய்ந்து எந்த செயலுக்கு யார் பொருத்தம் என்பதை அறிந்து அவரிடம் விடுவதே சிறந்த மேலாண்மை என்றார்.
“இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்கண் விடல்”

– திருக்குறள்.

http://sjkt-keruh.blogspot.ca/2011/04/blog-post_4690.html

Posted

தெருவோரம் உட்கார்ந்திருந்த இளவரசர்!        

30-abudhabi-300.jpg

 

ஒரு பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்!

பள்ளிக்கு வெளியே செய்வதறியாது தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர் வரும் வரை அவருக்கு துணையாக அபுதாபி இளவரசர் ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

அபுதாபியின் இளவரசரும் இராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் காரில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு பள்ளிக்கு வெளியே சிறுமி ஒருவர் தொலைந்தது போன்று தனியாக நின்று கொண்டிருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த இளவரசர் காரை நிறுத்துமாறு கூறி தனது உதவியாளருடன் அந்த சிறுமி அருகே சென்று நீ ஏன் இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு சிறுமிஇ தனது தந்தை வந்து அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் இன்னும் வரவில்லைஇ அதனால் தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

சிறுமியை தனது காரில் வீட்டில் இறக்கிவிடுவதாக இளவரசர் தெரிவித்தார். அதற்கு சிறுமியோ முன் பின் தெரியாதவர்களுடன் பேசக் கூடாது என்று தனது தந்தை தெரிவித்துள்ளதாக கூறினார்.

உடனே உதவியாளர் அச்சிறுமியிடம் இவர் யாரோ அல்ல அபுதாபியின் இளவரசர் என்று கூறினார். அதற்கு சிறுமிஇ அது எனக்குத் தெரியும். ஆனால் பழக்கமில்லாதவர்களுடன் செல்லக் கூடாது என்று என் தந்தை கூறியுள்ளார் என்றார்.

இதைக் கேட்ட இளவரசர் சிரித்துவிட்டார். சிறுமியின் தந்தை வரும்வரை அவருக்கு துணையாக சாலையோரத்தில் அமர்ந்திருந்தார்.

இளவரசர் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

 

 

http://www.sampanthan.com/2010-01-01-21-33-15/182-2013-01-30-17-19-23.html

  • 1 month later...
  • 2 weeks later...
Posted

நேதாஜி ஹிட்லரை சந்தித்தார்

 
இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் - பிரபாவதி தேவி தம்பதிகளின் 9-வது குழந்தையாக 23-1-1897-ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

லண்டனுக்குச் சென்று ஐ.சி.எஸ் (தற்போதைய ஐ.ஏ.எஸ்) படிப்பு படித்தார். முதல் வகுப்பில் தேறினார். ஆனால் வெள்ளையர் ஆட்சியில் கலெக்டராக வேலை பார்க்கப்பிடிக்காமல், "ஐ.சி.எஸ்" பட்டத்தை வாங்காமலேயே இந்தியா திரும்பினார். காந்தியை சந்தித்தார். காங்கிரசில் சேர்ந்தார். சுபாஷ் சந்திரபோசும், நேருவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சுத்திரப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நேதாஜி, பர்மாவில் மாண்டலே என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பின், 1938-ம் ஆண்டு ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சட்டமன்றங்களைக் கைப்பற்றினால் மட்டும் போதாது. வெள்ளையர்களை வெளியேற்ற தீவிரமாகப் போராட வேண்டும்" என்று வீர உரை நிகழ்த்தினார். 

அவர் புகழ் நாடெங்கும் பரவியது. அவரை "நேதாஜி" (தலைவர்) என்று மக்கள் அழைத்தனர். நேதாஜியின் தீவிரவாதப்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு -குறிப்பாக மகாத்மா காந்திக்குப் பிடிக்கவில்லை. 1939-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக நேதாஜி அறிவித்தார். 

அவரை எதிர்த்து, பட்டாபி சீத்தாராமையாவை காந்தி நிறுத்தினார். கடும் போட்டியில், நேதாஜி வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, "பட்டாபியின் தோல்வி, என் தோல்வி" என்று கூறினார். இதனால் மனம் புண்பட்ட நேதாஜி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆயினும், காங்கிரசுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட "பார்வர்டு பிளாக்" என்ற அமைப்பை உருவாக்கினார். 

இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரிட்டிஷ் அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. 

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 

1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரிய பிரளயமே ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. 

நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசிய போலீசார் சாதாரண உடையில் 24 மணி நேரமும் வட்டமிட்டபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். 

வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கல்கத்தாவிலிருந்து 40 மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில் நிலையத்துக்குச் சென்றார். 

"சயாதீன்" என்ற பெயரில், ரெயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். 17-ந்தேதி பெஷாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்தார். அங்கே அவருடைய நண்பர்கள் காத்திருந்தனர். அவர்கள் நேதாஜியை ஒரு காரில் அழைத்துச் சென்றார்கள். மூன்று நாள் கழித்து பட்டாணியர் போல் மாறுவேடம் அணிந்து, நேதாஜி ஒரு காரில் பயணமானார். 

ரகமத்கான் என்ற நண்பர் உடன் சென்றார். கார் நெடுந்தூரம் சென்றது. கார் செல்ல முடியாத பாதையில் இருவரும் நடந்து சென்றார்கள். மறுநாள் மாலை இந்தியாவின் எல்லையைக் கடந்து ஒரு கிராமத்தை அடைந்தார்கள். அன்று இரவு ஒரு மசூதியில் தங்கினார்கள். மறுநாள் காலை எழுந்ததும், மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். காட்டிலும், கரடுமுரடான மலைப்பாதைகளிலும் நடந்து, ஒரு ரோட்டை அடைந்தார்கள். 

அங்கு ஒரு லாரியில் ஏறி, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் போய்ச் சேர்ந்தார்கள். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டார். தான் யார் என்பதையும், இத்தாலிக்கு செல்ல விரும்புவதையும் தெரிவித்தார். அவர்கள் இது பற்றி இத்தாலி அரசுக்கு தகவல் அனுப்பினார்கள். பதில் வர தாமதமாயிற்று. எனினும் நேதாஜி பொறுமையுடன் பல நாட்கள் காத்திருந்தார். 

இறுதியில் அவரை அழைத்துச்செல்ல ரோமில் இருந்து இரண்டு தூதர்களை இத்தாலி அரசு அனுப்பி வைத்தது. மார்ச் 18-ந்தேதி காலை, நேதாஜி, அந்த இருவருடன் காரில் புறப்பட்டார். காபூல் வரை துணைக்கு வந்த அவர் நண்பர் ரகமத்கான், இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றார். நேதாஜிக்கு, பிரயாண அனுமதிச்சீட்டை இத்தாலி அனுப்பியிருந்தது. 

அதன் உதவியால், ரஷிய எல்லைக்குள் நேதாஜியும், மற்ற இருவரும் நுழைந்தனர். ரஷியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, ரெயில் மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். 

அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விஷயமே பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிந்தது! ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வாதிகாரி ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 
 

 

Posted

மர்லின் மன்றோ

 

Marilyn-Monroe-marilyn-monroe-12891202-2   உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ , அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. 

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார். பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார்.

மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 5-8-1962-ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது.

அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர். அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.

டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.

அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது. தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிரபல ஆங்கில நடிகை சோபியா லாரன் இந்த செய்தியை கேட்டு கண்ணீர் விட்டு அழுதார். மற்றொரு ஆங்கில நடிகையான ஜீனா லோலாபிரி கிடா கூறும்போது, "இது பெரிய அதிர்ச்சியான செய்தி. நான் இதற்காக மிகவும் வருந்துகிறேன். அவர் (மர்லின் மன்றோ) மிகவும் நல்லவர்" என்று சொன்னார்.

அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது.

 

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

259 X உங்கள் வயது X  39ஐ  பெருக்கி வரும் விடையை பாருங்கள் நீங்களே ஆச்சரியப் படுவீர்கள்.
வீட்டிலிலுள்ள மற்றைய குடும்ப அங்கத்தவர்களின் வயதையும் பெரிக்கிப் பாருங்கள். :)

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

538964_508882952481710_2065344290_n.jpg

 

 

அது தானோ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று சொல்வது :lol:

Posted
சாப்பிட்டபின் செய்யக்கூடாதவைகள்
1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும்கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும்.
 
10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
 
2. அதேபால், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bலொஅடெட் நித் ஐர்) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
 
3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hஅர்டெனிங்) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
 
4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Dஒன்’ட் ளோசென் Yஒஉர் Bஎல்ட்). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.
 
5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
 
6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல நானே கேட்டுள்ளேன்.
ஆனால், 1989௯0 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டாக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார்.
நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது!
 
7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும். மருத்துவத் துறையில் "நவீன மூட நம்பிக்கைகள்" பலவும் இதுபோல உண்டு. எனவே, மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக!
 
Posted

இப்படியும் பாம்புகள்!

 

 

எமது ஊரில் உள்ள தண்ணீர்ப் பாம்பு போல ஐரோப்பாவில் உள்ள ஒரு பாம்பு ஐரோப்பிய புல் பாம்பு. இந்த பாம்பு விசத்தன்மை இல்லாதது.

இது தண்ணீரில் அநாயசமாக நீந்தும். வருடத்தில் நிறைய நாட்கள், குளிர்கால உறக்கத்தை மேற்கொள்ளுகிறது. அதாவது, அசைவின்றி அப்படியே கிடக்கும். உணவு உண்ணாது. எதுவும் செய்யாது, மூச்சு விடுவதைத் தவிர..! ஆனால் எதிராளியிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள பல அற்புதமான நடவடிக்கைகளைக் கையாளுகிறது.

சிந்தனைத் திறன் உள்ள மனிதன் போல, தேர்ந்த நடிகன் போல என்று கூட சொல்லலாம். நீண்ட நேரம் நீருக்குள்ளேயே இருந்து எதிரியிடமிருந்து தப்பிக்கப் பார்க்கும் சில சந்தர்ப்பங்களில் தன் உடலை முடிந்தவரை உப்பி, பயமுறுத்தப் பார்க்கும். சிலசமயம் வேகமாய் சீறும். வேறு பல சமயங்களில் பூண்டு அல்லது பெருங்காய மணமுடைய மலத்தை வெளியேற்றி எதிராளியை விரட்ட முயற்சிக்கும். அதுவும் பலிக்கவில்லை என்றால், கடைசியாக ஒரு போர்க்கால தந்திரத்தை அஸ்திரத்தை எடுத்து வீசும்...!

என்ன யுக்தியாக இருக்கும் சொல்லுங்களேன்...!

மூளையை கசக்கி யோசித்து விட்டீர்களா? அந்தப் புல்வெளிப் பாம்பு செத்தது போல நடிக்குமாம்; என்ன நம்புகிaர்களா? உண்மைதான். அப்படியே உடம்பைத் திருப்பி போட்டு வாயைப் பிளந்து, நாக்கை வெளியில் நீட்டி, உண்மையாகவே செத்துவிட்டது போல நம்மையும் மிஞ்சி நடிக்கும். சுமார் 15 நிமிடங்கள் அப்படியே கிடக்குமாம். எதிராளி பாம்பு செத்துவிட்டது என நம்பிக் கம்பி நீட்டிவிடும். எப்படி இருக்கிறது?

 

வாழை மரங்கள்

வாழை மரங்கள் உண்மையில் மரங்கள் இல்லை. அதாவது வாழை மரம் என்று நாம் கூறுவது தவறு. அது ஒரு தாவரம். ஏன் எனில் மரங்களில் உள்ளது போல் கடினமான தண்டுப் பகுதியோ, கிளைகளோ இருப்பதில்லை.

தாவரங்களைப் போல பூத்துக் காய்த்தபின் இறந்துவிடுகின்றன. எனவே உலகிலேயே பெரிய தாவரம் வாழை மரம் என்று கூறப்படுகிறது. வாழை அதன் வகையில் தாவரம் என்றாலும், நமக்கு அது மரம் என்றுதானே அறிமுகமானது. எனவே அவ்வாறே இதில் கூறுவோம். வெப்பம் மிகுந்த ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப் பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.

வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 இலட்சம் தொன் வாழைப்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன. ஜப்பானில் பாரம்பரிய கிமோனோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை. முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான். IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள். முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள். ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம்.  இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன். இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார். உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும். வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே. இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து. மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.
    • இதில் ஜோக் என்ன தெரியுமா… நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன். அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர். பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர். அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன். ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை. கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது. வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.  
    • சிரியாவில் முன்பு தலையை மூடும்படி கட்டாயபடுத்தும் அப்பாவோ சகோதரனோ கணவனோ இல்லாவிட்டால் பெண்கள்  சுதந்திரமாகவே இருந்தனர்.இனி முஸ்லிம் மத குழுக்கள் ஆட்சியில் ஹிஜாப் தான்
    • கட்சிக்குள் தான் வீரம் என்றில்லாமல் கட்சிக்கு வெளியிலும் வீரத்தை காட்ட வேண்டும்.   புத்தர் சிலை வைப்பு குறைந்து விட்டது என நினைத்தேன். ஆங்காங்கே இப்படி குழப்பவாதிகளும் தமது செயலை தொடர்கின்றனர்.
    • அரச செலவில்  இவ்வளவு எண்ணிக்கையில் சமையல்காரர்களெனில் அவர்களும்  நீக்கப்பட வேண்டும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.