Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாரச்சி வாகனவிபத்தில் உயிரிப்பு

Featured Replies

நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி சற்று நேரத்திற்கு முன் தம்புத்தேகம என்னும் இடத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளாதாக தெரியவருகின்றது. இவருடன் வாகனத்தில் பயணித்த இவரது மெய்ப்பாதுகாவலர் இருவரும் உயிரழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த சூரியாராச்சி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதித்த சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது பாதுகாவலர் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும் மேலும் இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜானா

சதி வேலையா???

விபத்து தானா ஏற்பட்டதா? அல்லது விபத்து உருவாக்கப்பட்டதா?...

வாவ்வ்வ்வ்.... மகிந்தவிற்கு ஒரு ஓப் போடு!!!!

அடுத்தது யார்ர்??????....

அடுத்த விபத்து மங்களவுக்கோ அல்லது அனுராவுக்கோ..?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் இப்பதான் தனது வாலையே கடிக்கத் தொடங்கியுள்ளது. :):)

சிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியும் அவரது இரு மெய்ப்பாதுகாவல்களும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விபத்து டக்கிளசுக்கா அல்லது புள்ளே க்கா

  • கருத்துக்கள உறவுகள்

சிறீபதி சூரியாச்சியும் அவரது மெய்ப்பாதுகாவர்களும் வாகன விபத்தில் பலி!

[saturday February 09 2008 10:58:44 AM GMT] [saravanan]

இலங்கையின் அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியும் அவரது இரு மெய்ப்பாதுகாவல்களும் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகமப் பகுதி ஒன்றின் வளைவை இவர்களது வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோதே இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயணித்த வாகனம் பாதையை விட்டு விலகி அங்குள்ள மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிறீபதி சூரியராச்சியின் இரு மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நிலையில் சிறீபதி சூரியராச்சி தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்ததை தம்புத்தேகம மருத்துவமனை மருத்துவர் மொகான் பிறேமலந்த் உறுதிப்படுத்தியிருக்கின்றா

வாகனம் ஒரு வளைவில போய்க்கொண்டு இருக்கேக்க விபத்து நடந்ததாக எழுதப்பட்டு இருக்கிது. வளைவில உண்மையா விபத்து நடந்து இருக்குமோ இல்லாட்டி வளைவு சதி செய்வதற்கு இலகு என்றபடியால் அதில பொறி வைக்கப்பட்டு இருக்குமோ.. யாருக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாகனத்தில் இருந்த பிரபல சிங்கள வானொலி ஊடகவியலாளர்( isuru FM) ஒருவரும் இறந்ததாகவும், ஏதோ காரணத்துக்காக இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கனடிய வானொலி ஒன்று கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

* Sri Lanka MP Sripathi Sooriyarachchi killed in road accident

Saturday, February 9, 2008, 11:59 GMT, ColomboPage News Desk, Sri Lanka.

Feb 09, Galgamuwa: Parliamentarian Sripathi Sooriyarachchi was killed this afternoon in a fatal road accident at Madagama, in the Galgamuwa area.

According to police sources, the vehicle carrying MP Sooriyarachchi crashed into a tree around 1.15 PM after it slipped off the road at high speed. The vehicle was traveling from Anuradhapura to Colombo via Thambuththegama, said sources.

Two of the MP’s bodyguards have also been killed and another three who were in the vehicle have suffered serious injuries. The injured have been admitted to Kurunegala hospital, sources added.

Police said the road has been slippery due to rain, and the MP’s vehicle seemed to have lost control while taking a sharp turn at a very high speed.

Sripathi Sooriyarachchi MP was a former minister and a key figure in the breakaway Sri Lanka Freedom Party (Mahajana) faction. He was also a reputed lawyer and a retired Navy officer.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியாராச்சியின் வாகன விபத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

என்னப்பா எல்லோரும் எழுதுவதைப்பார்த்தால் ஏதோ சினிமாப்பாணியில் விபத்தை நடத்தியிருக்கிறார்கள் என்றோ கருதுகிறீர்கள்.?

அப்பிடித்தான் இஞ்சாலையும் கதைக்கிறாங்கள். மகிந்த & கோ வெற்றிகரமா சூரிய ஆராய்ச்சிக்கு சங்கு ஊதீட்டாங்கள் போல இருக்கிது. சிறீ லங்கா அரசியல் ஹொலிவூட் ரேஞ்சுக்கு எழும்பி இருக்கிது. பாராட்டுக்கள்! இதற்காக அயராது உழைத்த அனைவரும் கெளரவிக்கப்பட வேண்டியவர்கள்!

எனக்கு என்னவோ, காலஞ்சென்ற வேல்சு நாட்டு இளவரசி டயானா வின் மரணா உக்தியை இரவல் வங்கப்பட்டு இருக்குப்போல கிடக்கு.... இனி இப்புடித்தான் இருந்தாப்போல பாம்பு கடித்துசாவாங்கள்... மாரடைப்பால் சாவாங்கள்....

என்னவோ... ஆர் குத்தியெணடாலும் அரிசியானால் சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவியா ரேஞ்சிலே மகிந்தவும் சகோதரங்களும் அலுவல் பார்க்கிறாங்கள்.அதே நேரம் சிங்கள மக்களின் ஒரு பகுதியின் எதிர்ப்பை இவர்கள் விரைவில் உணர்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீபதி சூரியாச்சியும் அவரது மெய்ப்பாதுகாவர்களும் வாகன விபத்தில் பலி! (படங்கள் இணைப்பு)

[saturday February 09 2008 10:58:44 AM GMT] [saravanan]

இலங்கையின் அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியும் அவரது இரு மெய்ப்பாதுகாவல்களும் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகமப் பகுதி ஒன்றின் வளைவை இவர்களது வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோதே இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயணித்த வாகனம் பாதையை விட்டு விலகி அங்குள்ள மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிறீபதி சூரியராச்சியின் இரு மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த நிலையில் சிறீபதி சூரியராச்சி தம்புத்தேகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்ததை தம்புத்தேகம மருத்துவமனை மருத்துவர் மொகான் பிறேமலந்த் உறுதிப்படுத்தியிருக்கின்றா

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு ஒருவருட பூர்த்தியன்று ஸ்ரீபதி சூரியாராச்சி வாகனவிபத்தில் மரணம்

[10 - February - 2008]

*ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சி அமைச்சர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்த நிலையில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அமைச்சர் பதவிவகித்த ஸ்ரீபதி சூரியாராச்சியை அப்பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.

அச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருவருடம் நேற்று சனிக்கிழமை 9 ஆம் திகதியுடன் முடிவடைந்த தினத்தன்றே அவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீபதியுடன் பயணம் செய்த`இசுர' சிங்கள வானொலிச் சேவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.கே.சில்வா என்பவரும் உயிரிழந்துள்ளார்.

இவர் ஸ்ரீபதி எம்.பி.யின் நெருங்கிய நண்பரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவ்விபத்துச் சம்பவத்தில் ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி.யின் வாகனச் சாரதியான பிரியந்த சமரசிங்கவும் குணரட்ண என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவத்தை அறிந்த அமைச்சர்கள் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் வைத்தியசாலைக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

ஸ்ரீபதி சூரியாராச்சி வாகனத்தின் முன் ஆசனத்திலேயே இருந்துள்ளார். வாகனம் மிகவேகமாக சென்றமையே விபத்திற்கு காரணமென முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, களனி தொகுதி உட்பட கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இவரது மரணத்திற்கு அனுதாபம் தெரிவித்து வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பல்வேறு தரப்பினர் அனுதாபச் செய்திகளையும் வெளியிட்டுள்ளனர்.

http://www.thinakkural.com/news/2008/2/10/...s_page45628.htm

  • கருத்துக்கள உறவுகள்

டயானாவுக்கு நேர்ந்த கதி. சிலவேளை. எம் ஐ 15 றெயினிங் குடுத்திருக்குமோ!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீபதியின் வாகன விபத்தினைத் தொடர்ந்து அங்கு வெடிச்சத்தங்கள் கேட்டன: ஐ.தே.க.

அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியாராச்சியின் வாகன விபத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் முக்கிய உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது:

அனுராதபுரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியாராச்சியும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் கொல்லப்பட்டதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சதி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக நாம் நம்புகிறோம். ஏனெனில் விபத்தினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் துப்பாக்கி வெடிச்சத்தங்களும், குண்டுச் சத்தமும் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து எமது கட்சி அப்பகுதி கட்சி ஆதரவாளர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும், குண்டுச்சத்தமும் கேட்டதாக அவர்களும் தெரிவித்துள்ளனர்.

எனினும் உண்மையில் என்ன இடம்பெற்றது என்பது தொடர்பாக எம்மால் எதனையும் தற்போது தெரிவிக்க முடியாது.

சிறீபதி சூரியராச்சியின் வாகனம் வேகமாக சென்றாலும் அது பிரதான வீதியில் இருந்து விலகி வேறு ஒரு பொருளுடன் மோதி எவ்வாறு மூன்று பேருக்கு மரணத்தை எற்படுத்தி உள்ளது என்பதையும் புரிந்து கொள்வது கடினமானது என்றார் அவர்.

puthinam

மகேஸ்வரன் அவர்களின் கொலையாளியை கையும் மெயுமாக பிடிச்சுமே ஒண்டும் செய்ய முடியவில்லை இதுக்குள்ள குண்டு சத்தம் கேட்டது என்று சொல்லி கொலையாளிகளை பிடிச்ச மாதிரி தான் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Sun Feb 10 9:45:00 2008

வாகனம் அதிவேகத்தில் செலுத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாம்

முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியா ராய்ச்சி உட்பட நால்வர் உயிரிழந்தமைக்கு அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தப் பட்டமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகவும் வேகமாக பயணித்துக்கொண் டிருந்த ஸ்ரீபதி சூரியாராச்சியின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பாதையைவிட்டு விலகி வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்று டன் மோதியுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் அறியவந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மாஹோ பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமை யில் இந்த விபத்துத் தொடர்பான விசார ணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்க தெரிவித்தார்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.