Jump to content

அவள் ஒரு மாதிரி


Recommended Posts

பதியப்பட்டது

தொழுவத்திலிருந்து கட்டியிருந்த மாட்டின் அழுகுரல் கேட்டு நினைவு திரும்பினார் கந்தர்.

எண்ணக்கோவைகள் எங்கொங்கோ சுழன்று சம்பந்தம் சம்பந்தமில்லாத இடத்துக்கு சென்று திரும்பவும் தொடங்கிய இடத்துக்கு வந்து கொண்டிருந்தன. யோசிச்சு யோசிச்சு மண்டையை உடைச்சாலும் தீர்வில்லாமல் தவித்தார்.

இறந்த போன மனிசியையும் நினைத்து

http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post_21.html

Posted

இந்த சமூகம் ஒரு மாதிரி என்றபடியால் இயல்பாக சிரித்து விட்டு செல்லுவாள் என்பது நிச்சயம்

சின்னகுட்டி தாத்தா நல்லா இருந்தது கதை :lol: அதை விட கொண்டு சென்ற விதம் சூப்பர்..(தாத்தாவின்ட கதையில எழுத்து நடைக்காக ஓடோடி வந்து வாசிக்கிறனான் நேக்கு நல்லா விருப்பம் :huh: )..அதை போல் "அவள் ஒரு மாதிரி" என்ற கதை அவள் படலையை திறந்து வருமட்டும் அவளை கதையில் நகர்த்தி இறுதியில் அவளை எங்களுக்கு காட்டும் விதம் உங்களுக்கு உரிய பாணி வாழ்த்துக்கள் தாத்தா.. :o

சமூகத்தை பற்றி நன்றாக சொல்லி சென்றீங்க...அதிலும் மேலே சொன்ன வரியில் பல அர்த்தங்கள்.. இந்த சமூகத்திடம் கதைத்து நேரத்தை வீணாக்குவதை விட புன்சிரிப்பு ஒன்றில் பல வார்த்தைகளை சொல்லலாம் அது உண்மை தாத்தா... :o

"கறுப்பு" என்றாலும் அவளும் ஒரு பெண் அவளுக்கும் ஒரு இதயம் இருக்கும் என்பதனை இந்த சமூகம் எப்போது தான் புரிந்து கொள்ள போகுதோ.. :wub: .(சமூகம் புரிந்து கொள்ளுறதிற்குள்ள அவா மண்டையை போட்டிடுவா)....மறுபடி சந்திபோம் தாத்தா... :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"கறுப்பு" என்றாலும் அவளும் ஒரு பெண் அவளுக்கும் ஒரு இதயம் இருக்கும் என்பதனை இந்த சமூகம் எப்போது தான் புரிந்து கொள்ள போகுதோ.. .(சமூகம் புரிந்து கொள்ளுறதிற்குள்ள அவா மண்டையை போட்டிடுவா)....மறுபடி சந்திபோம் தாத்தா...

தோல் கறுப்பு என்பதற்காக வெறுக்கப்படும் மனிதர்களில் பெண்கள் மட்டும் தான் அடக்கம் என்றில்லை. தோல் கறுப்பு என்பதற்காக பெண்களால் வெறுக்கப்படும் பல ஆண்களும் அடக்கம். ஏன் ஓர் மனித குலமே அடக்கம்..! முதலில நீங்கள் இதைப் புரிஞ்சுக்கனும்..!

அதுமட்டுமன்றி தோலின்ர நிறத்திலதான் அழகு இருக்கென்று நினைக்கிறது மனித வாடிக்கையாக்கப்பட்டுள்ளது. வயதாக ஆக உருக்குலையும் புற அமைப்புகளில அழகைக் காட்டிறப்போவே.. இதை உணரனும். எத்தனை பேர் உண்மையா இயல்பா உணருறாங்க. சிலர் தான் கறுப்பை கலியாணம் செய்தன் என்று அதை புரட்சியா சொல்லிக்கினம்.. இது கூட அடிமனதில் உள்ள தோல் கறுப்பு என்ற தாழ்வு எண்ணத்தில் வெளிப்பாடுதானே..!

ஆனா உந்த வெள்ளைத் தோல் மாயையில இருந்து விடுபடுறது இப்படி அடுத்தவைக்கு புத்தி சொல்லேக்க மட்டும் சரியா இருக்கும்... தனக்கென்று வரேக்க...???! இப்படி எழுத்தில உலகத்தை ஏமாற்றி "புரட்சி" செய்யுற மாமன்னர்கள்/மன்னிகள் பலரை உலகம் கண்டிட்டுது..! :lol::wub:

Posted

தோல் கறுப்பு என்பதற்காக வெறுக்கப்படும் மனிதர்களில் பெண்கள் மட்டும் தான் அடக்கம் என்றில்லை. தோல் கறுப்பு என்பதற்காக பெண்களால் வெறுக்கப்படும் பல ஆண்களும் அடக்கம். ஏன் ஓர் மனித குலமே அடக்கம்..! முதலில நீங்கள் இதைப் புரிஞ்சுக்கனும்..!

அதுமட்டுமன்றி தோலின்ர நிறத்திலதான் அழகு இருக்கென்று நினைக்கிறது மனித வாடிக்கையாக்கப்பட்டுள்ளது. வயதாக ஆக உருக்குலையும் புற அமைப்புகளில அழகைக் காட்டிறப்போவே.. இதை உணரனும். எத்தனை பேர் உண்மையா இயல்பா உணருறாங்க. சிலர் தான் கறுப்பை கலியாணம் செய்தன் என்று அதை புரட்சியா சொல்லிக்கினம்.. இது கூட அடிமனதில் உள்ள தோல் கறுப்பு என்ற தாழ்வு எண்ணத்தில் வெளிப்பாடுதானே..!

ஆனா உந்த வெள்ளைத் தோல் மாயையில இருந்து விடுபடுறது இப்படி அடுத்தவைக்கு புத்தி சொல்லேக்க மட்டும் சரியா இருக்கும்... தனக்கென்று வரேக்க...???! இப்படி எழுத்தில உலகத்தை ஏமாற்றி "புரட்சி" செய்யுற மாமன்னர்கள்/மன்னிகள் பலரை உலகம் கண்டிட்டுது..!

ம்ம்ம்..நெடுக்ஸ் தாத்தா நீங்க சொல்லுறது சரி தான்..(ஆனா ஆண்களை விட குறிப்பாக எமது சமுகத்தில பெண்கள் கறுப்பு என்று சொல்லி ஒதுக்கிற வீதம் தான் அதிகம் பாருங்கோ :lol: )...பட் ஆண்கள் காக்காவை விட கறுப்பா இருந்து கொண்டு அவைக்கு வேயாரா பொண்ணு வேண்டுமாம் என்ன கொடுமை இது.. :D (ஆனா பொண்ணுக பாவம் இந்த குரோஸ் கூட எல்லாம் குடும்பம் நடத்த வேண்டி இருக்கு பாருங்கோ :( )..ம்ம்ம்..மனித குலம் அடக்கம் என்பதனை நான் தாத்தாவோடு ஒத்து போகிறேன்..(ஆனாலும் இதற்குள் தாழ்வு மனபாங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது உண்மை )..

ம்ம்ம்...கறுப்பை நாம கல்யாணம் கட்டினேன் என்று சொல்லுறவை எல்லாம்..(தங்களை சமுகத்தில பெரிய ஆட்கள் என்று காட்டி கொள்ள சொல்லுற டயலக்குகள் தாத்தா :wub: அதை எல்லாம் நாம கண்டு கொள்ள கூடாது சரியா :lol: )..

ம்ம்ம்...தாத்தா கறுப்பு தோலை பற்றி அடுத்தவைக்கு சொல்லக்க நல்லா தான் இருக்கும்..(ஆனா சைட் அடிக்கும் போது வெள்ளை தோளை தான் பார்க்க சொல்லும் என்ன தாத்தா :o )...ஆனா பாருங்கோ ஆனா பாருங்கோ அதே நிறத்தில் எங்களுக்கு ஒரு சகோதரி இருந்து..(நேக்கு இல்லை அக்சுவலா இருந்து :D )கறுப்பா இருந்து அவளை பார்த்து மற்றவை சொன்னா எப்படி இருக்கும் :o ...அது போல தானே ஏனைய பெண்களும் என்ன தாத்தா :D ..அதை பலர் நினைத்தாலே "எழுத்தில புரட்சி செய்யிற மாமன்னிகள்,மாமன்னர்கள்" எல்லாம் உருவாக வேண்டிய அவசியம் இருக்காது என்ன தாத்தா நான் சொல்லுறது சரி தானே..... :D

ஜம்மு பேபி சிட்டுவேசன் சோங்-

"கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு

சாமி கறுப்பு தான் சாமி சிலையும் கறுப்பு தான்

நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரு நெடுக்ஸ் தாத்தா கூட கறுப்பு தான்..

அழகு கறுப்பு தான்"

அப்ப நான் வரட்டா!!

Posted

//சின்னகுட்டி தாத்தா நல்லா இருந்தது கதை அதை விட கொண்டு சென்ற விதம் சூப்பர்..(தாத்தாவின்ட கதையில எழுத்து நடைக்காக ஓடோடி வந்து வாசிக்கிறனான் நேக்கு நல்லா விருப்பம் )..அதை போல் "அவள் ஒரு மாதிரி" என்ற கதை அவள் படலையை திறந்து வருமட்டும் அவளை கதையில் நகர்த்தி இறுதியில் அவளை எங்களுக்கு காட்டும் விதம் உங்களுக்கு உரிய பாணி வாழ்த்துக்கள் தாத்தா..//

வணக்கம் ஜமுனா ...பதிவை பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றிகள்

தொடர்ந்து உற்சாகபடுத்திறதுக்கு மிக்க நன்றிகள் :lol:

//இப்படி எழுத்தில உலகத்தை ஏமாற்றி "புரட்சி" செய்யுற மாமன்னர்கள்/மன்னிகள் பலரை உலகம் கண்டிட்டுது..! //

அப்படியா ..இருக்கட்டும்...இப்ப ஒன்றை மட்டும் சொல்லலாம்...எங்கள் வரலாற்றில் சும்மா வெறும் கைவேதாந்தியாக இருந்திட்டு மட்டும் வரவில்லை இந்த இணைய உலகத்துக்கு :wub:

தனிப்பட்ட தாக்குதலை தவிர்க்க பார்க்கவும் ...ஏனென்றால் நானும் ஒரு மாதிரி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னக்குட்டி உங்க கதை அழகு.

ம்...............கறுப்பியாய் பிறந்தால் அதன் பிரதிபலிப்புகள் எப்படி இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்.

Posted

நல்லாயிருக்கு சின்னக்குட்டி உங்கள் எழுத்துக்களிலும் ஒரு வித்தியாசம் அல்லது எழுத்துநடைப்பொலிவு தெரிகின்றது வெறுமனே முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையாகாது அந்தக் கதைக்கு ஏதாவது ஒரு சம்பவம் கட்டாயம் உந்துதலாக இருக்கும்உங்கள் இந்தக் கதைக்கும் அப்படி ஏதாவது இருக்கும் எண்டு நினைக்கிறன்

Posted

கதை நல்லாயிருக்கு சின்னகுட்டி தாத்தா. எங்களது சமுதாயம் கறுப்பு , சிவப்பு மட்டுமா பிரச்சனை.எமது சமுதாயம் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

Posted

சின்னக்குட்டி உங்க கதை அழகு.

ம்...............கறுப்பியாய் பிறந்தால் அதன் பிரதிபலிப்புகள் எப்படி இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும்.

வணக்கம் கறுப்பி ...பதிவை பார்வையிட்டு கருத்து கூறியதுக்கு மிக்க நன்றிகள்.

கறுப்பி என்று இணையத்தில் பெயர் வைத்தாபோலை நீங்கள் கறுப்பாக்கும், நாங்கள் நம்போணுமாக்கும்

Posted

நல்லாயிருக்கு சின்னக்குட்டி உங்கள் எழுத்துக்களிலும் ஒரு வித்தியாசம் அல்லது எழுத்துநடைப்பொலிவு தெரிகின்றது வெறுமனே முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையாகாது அந்தக் கதைக்கு ஏதாவது ஒரு சம்பவம் கட்டாயம் உந்துதலாக இருக்கும்உங்கள் இந்தக் கதைக்கும் அப்படி ஏதாவது இருக்கும் எண்டு நினைக்கிறன்

வணக்கம் சாத்திரி பதிவை பார்வையிட்டு கருத்துகூறியதுக்கு மிக்க நன்றிகள்

எனது எழுத்து நடை இப்பொழுது மெருகேறியிருக்கு என்று எனது கதைகளை அவதானித்து விமர்சித்து சிலாகித்தது நன்றி.... சாத்திரி எங்களின் அதிர்ஸ்டம் வயது கொஞ்சம் வந்தாப்போலை தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு ஏதாவது எழுதிறதுக்கு

உண்மையை சொல்லப்போனால் இன்னும் எனது சிறுகதை வடிவத்தில் இன்னும் திருப்தி இல்லை

மண்டையை போட முன்னமாவது ஒழுங்காக சிறுகதையை எழுதிவிடோணும் என்ற ஆசை இருக்கு

எல்லாம் ஒரு முயற்சி தானே பார்ப்பம்.

கதை நல்லாயிருக்கு சின்னகுட்டி தாத்தா. எங்களது சமுதாயம் கறுப்பு , சிவப்பு மட்டுமா பிரச்சனை.எமது சமுதாயம் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

வணக்கம் நுணாவிலான் பதிவை பார்வையிட்டு கருத்துகூறியதுக்கு நன்றிகள்

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சின்னக்குட்டி முன்பைவிட உங்க கதை இப்போ விளங்கக்கூடிய தமிழிலே எழுதுறிங்க. நல்லாருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை மனதில் ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.பெண்கள் மட்டும் இல்லை ஆணகளும் மற்றவர்களின் தேவையற்ற விமர்சனங்களை கன்டு கொள்ளாமல் தன்பாட்டில் இருந்தால் அவனும் ஒரு மாதிரிதான்.(ஆனால் இது வேற மாதிரி :wub: )உங்கள் சிறு கதை எழதும் முயற்ச்சி நிறைவேற வாழ்த்துகள்.

Posted

அவளது தன்னம்பிக்கையான பேச்சுக்களும் இந்த சமூகத்தின் விதிகளை அலட்சியம் செய்யும் பாவமும்

ந்நல்லாக எழுதி இருக்கிறீங்க சின்னக்குட்டி தாத்தா,

ம்ம் பெண்கள் நியாயத்தை கதைச்சாலே அவளுக்கு வாய் நீளம் என்போரும் அவள் சுதந்திரமாக தன்னில் நம்பிக்கை வைத்து தெருவில் இறங்கினால் அவள் ஆடுறாள் என்று சொல்லும் சமூகம் தற்போதும் இருக்கின்றதே. திருந்தாத சமூகம்.

கறுப்பாக இருக்கிறாளே உவளாஇக் கட்டி ஏதும் விசேசங்களூக்கு எப்படி கூட்டிச்செல்வது என்ற ரமேஷின் மனோநிலை தற்போதும் பல ஆண்கள் மத்தியில் இருக்கத்தானே செய்கிறது.

எனக்கென்னமோ பெண்கள் அடங்காமல் புரட்சியாக வாழ்வதில் தப்பில்லை என தோணுது.

Posted

//கதை மனதில் ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது//

வணக்கம் sageevan பதிவை பார்த்து கருத்து கூறி வாழ்த்தியதுக்கு மிக்க நன்றிகள்.

//ஆனால் இது வேற மாதிரி //

அது என்ன மாதிரிங்க :D

//எனக்கென்னமோ பெண்கள் அடங்காமல் புரட்சியாக வாழ்வதில் தப்பில்லை என தோணுது. //

அது :D

//நல்லாக எழுதி இருக்கிறீங்க சின்னக்குட்டி தாத்தா//

வணக்கம் வெண்ணிலா ...பதிவை வாசித்து பதிவோடை ஒட்டிய மேலதிக கருத்துகளை கூறியமைக்கும் நன்றிகள்

//சின்னக்குட்டி முன்பைவிட உங்க கதை இப்போ விளங்கக்கூடிய தமிழிலே எழுதுறிங்க. நல்லாருக்கு//

கறுப்பி மேலே சொன்னமாதிரி நல்லது கெட்டது சொன்னால் தானே எனக்கு உதவியாக இருக்கும் ....இவ்வளவு காலமும் சின்னக்குட்டி சார் உங்கள் கதை அழகு என்று நமீதா தமிழ் கதைச்சமாதிரி பதில் போட்டுக்கொண்டிருந்தீர்கள் ..உங்களிலும் இப்ப கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது :D:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி மேலே சொன்னமாதிரி நல்லது கெட்டது சொன்னால் தானே எனக்கு உதவியாக இருக்கும் ....இவ்வளவு காலமும் சின்னக்குட்டி சார் உங்கள் கதை அழகு என்று நமீதா தமிழ் கதைச்சமாதிரி பதில் போட்டுக்கொண்டிருந்தீர்கள் ..உங்களிலும் இப்ப கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது

தலையில ஐஸ் வைச்ச மாதிரி இருக்கு. :D

Posted

தலையில ஐஸ் வைச்ச மாதிரி இருக்கு. :D

ஜஸ்ஸா...அதுவும் தலையிலையா ..ஜலதோசம் பிடிச்சுக்க போது ...பார்த்துங்க :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கறுப்பி மேலே சொன்னமாதிரி நல்லது கெட்டது சொன்னால் தானே எனக்கு உதவியாக இருக்கும் ....இவ்வளவு காலமும் சின்னக்குட்டி சார் உங்கள் கதை அழகு என்று நமீதா தமிழ் கதைச்சமாதிரி பதில் போட்டுக்கொண்டிருந்தீர்கள் ..உங்களிலும் இப்ப கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது

நீங்களே சொல்லிட்டிங்க மனதில் பட்டதை இன்னும் சில மணித்தியாலங்களில் கேட்டு விடுகிறேன். கோவிக்க மாட்டிங்களே :D

Posted

நீங்களே சொல்லிட்டிங்க மனதில் பட்டதை இன்னும் சில மணித்தியாலங்களில் கேட்டு விடுகிறேன். கோவிக்க மாட்டிங்களே :D

ஏங்க கோவிக்கப்போறன். :D ..அப்படி என்னதான் கேட்க போறிங்கள்? :D

அது என்ன சில மணித்தியாலங்களில் என்று ... எலக்சன் றிசல்ட் அறிவிக்கிற மாதிரி :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏங்க கோவிக்கப்போறன். :D ..அப்படி என்னதான் கேட்க போறிங்கள்? :D

அது என்ன சில மணித்தியாலங்களில் என்று ... எலக்சன் றிசல்ட் அறிவிக்கிற மாதிரி :D

மாலைநேரங்களில் உடற்பயிற்சி செய்ய போவது வழமை அதுதான் மணித்தியாலங்களுக்கு பிறகு எண்டு எழுதினேன் .

சரி விசயத்துக்கு வாறனே. நீங்க சும்மாதானே சொன்னிங்க இப்ப கொஞ்சம் முன்னேற்றம் தெரியுதெண்டு

கறுப்பி மேலே சொன்னமாதிரி நல்லது கெட்டது சொன்னால் தானே எனக்கு உதவியாக இருக்கும் ....இவ்வளவு காலமும் சின்னக்குட்டி சார் உங்கள் கதை அழகு என்று நமீதா தமிழ் கதைச்சமாதிரி பதில் போட்டுக்கொண்டிருந்தீர்கள் ..உங்களிலும் இப்ப கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது

நான் எழுதிய கதை யையே வாசிக்கவில்லை :D ஒரு கருத்தும் எழுதலே எப்படி எப்படி ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=31744

இன்னும் கேள்வி கேட்கனும் சந்தர்ப்பம் வரேக்கை கேட்கிறேன்.

Posted

சின்னக்குட்டித்தாத்தா உங்கள் ஊர் உழவாரம் வாசிப்பேன். ஆனால் கருத்து எழுதவில்லை இதுவரை.

உங்கள் கதைகளில் முன்னேற்றம் தெரிகிறது.

கோவிக்கக்கூடாது. சம்பவ விபரிப்பில் இன்னும் ஆழமாக சொற்சேர்வை சேரலாம்.

"அவள் ஒரு மாதிரி " அவளைப்பற்றிய விபரிப்பில் இன்னும் பல விடயங்களை சொல்லலாம். கதையின் முடிவு இடையறுத்து முடிந்தது போலிருக்கிறது.

உங்கள் கதையில் வரும் கறுப்பிகள் எங்கள் ஊர்களில் பலர் வாழ்ந்தும் மடிந்தும் போயிருக்கிறார்கள். பலரது சுயம் மறைக்கப்பட்டு இன்னும் பல கறுப்பிகள் எங்களுக்குள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் , வாசியுங்கள் எழுத்து இன்னும் மெருகேறும்.

Posted

//சின்னக்குட்டித்தாத்தா உங்கள் ஊர் உழவாரம் வாசிப்பேன். ஆனால் கருத்து எழுதவில்லை இதுவரை.

உங்கள் கதைகளில் முன்னேற்றம் தெரிகிறது.

கோவிக்கக்கூடாது. சம்பவ விபரிப்பில் இன்னும் ஆழமாக சொற்சேர்வை சேரலாம்.

"அவள் ஒரு மாதிரி " அவளைப்பற்றிய விபரிப்பில் இன்னும் பல விடயங்களை சொல்லலாம். கதையின் முடிவு இடையறுத்து முடிந்தது போலிருக்கிறது.

உங்கள் கதையில் வரும் கறுப்பிகள் எங்கள் ஊர்களில் பலர் வாழ்ந்தும் மடிந்தும் போயிருக்கிறார்கள். பலரது சுயம் மறைக்கப்பட்டு இன்னும் பல கறுப்பிகள் எங்களுக்குள் இருக்கிறார்கள்.

தொடர்ந்து எழுதுங்கள் , வாசியுங்கள் எழுத்து இன்னும் மெருகேறும்.//

வணக்கம் சாந்தி அவர்கட்கு....முதற்கண் எனது பதிவை பார்வையிட்டு கருத்து கூறியமைக்கு மிக்க நன்றிகள்

பலரும் அறிந்த புலம் பெயர் எழுத்தாளர் பல காலமாக எழுதும் உங்களின் விமர்சனத்தை மனபூர்வூமாகவும் சந்தோசமாக ஏற்றுக்கொள்ளுகிறேன்

அவளை பற்றிய விபரிப்பில் நீங்கள் சொன்னமாதிரி விபரிப்புகள் காணது தான்

எழுதுறவன் எழுதுற கணத்தோடு அந்த சம்பவ கோவைகள் முடிந்து போய்விடுகின்றன. அதன் பின் வாசகனுக்கு ஏற்படும் விம்பங்கள் தான் சிறுகதையை தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கை இருப்பதால் எனது எல்லா கதை முயற்ச்சியிலும் அப்படித்தான் நான் செய்வது வளக்கம் ...எது எப்படியோ உங்களது விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன்

நீங்கள் சொல்லுவது உண்மை உருவாக்கும் படைப்பை உருவாக்க முனைவோர் நிறைய வாசிக்க வேண்டும் .இதற்க்கு. இவ்வளவு காலமும்.இந்த புலம் பெயர் சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை .... இப்ப தான் கொஞ்சம் வாசிக்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. உங்கள் ஆலோசனைக்கும் உற்சாகமூட்டலுக்கும் மிக்க நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரெண்டுபேருமே பெரிய எழுத்தாளர்கள் :huh:

Posted

ரெண்டுபேருமே பெரிய எழுத்தாளர்கள் :huh:

கப்பி அக்கா ....சும்ம சும்மா என்னை நக்கல் பண்ணிக்கொண்டிருக்கிறீங்கள்

வேண்டாம் விட்டுங்க ...அழுதிடுவன் :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.