Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் புத்திஜீவிகள் குழு லண்டனிலிருந்து இங்கு வருகை

"வெளிநாட்டில் வதியும் இலங்கைப் புத்திஜீவிகளின் குழு பிரிட்டன்' என்ற பெயரில் தமிழ், முஸ்லிம் பிரமுகர்களைக் கொண்ட குழு ஒன்று கடந்த ஒரு வாரகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசி வருகின்றனர் என்று தெரியவருகின்றது.

தமிழ் ஜனநாயகக் காங்கிரஸின் தலைவர் ஆர்.ஜெயதேவன், பிரிட்டன் இந்து ஆலயங்களின் சம்மேளனத் தலைவர் என்.சச்சிதானந்தன், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான திருமதி ஆர்.பாலசுப்பிரமணியம், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, லண்டன் ஈழப்பசுபதீஸ்வரர் ஆலய அறங்காவலர் கே.விவேகானந்தன், டென்மார்க் தமிழ்ச் சமூக அமைப்பைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்குமாரபிள்ளை, பிரிட்டன் ஸ்ரீலங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் சொலிஸிட்டர் எஸ்.எம்.எம். பஷீர், பிரிட்டன் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மன்றத்தின் தலைவர் என்.மொஹமட், வடமாகாணத்திலிருந்து இடம்பெயர வைக்கப்பட்ட முஸ்லிம்களின் நோர்வேச் சங்கத்தின் எம்.ஆர்.எம்.காசிம் ஆகியோரைக் கொண்ட குழுவே இலங்கையில் தற்போது சுற்றுப் பயணம் செய்கிறது.

யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு உட்படப் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், மக்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்கள் எனப் பல தரப்பினரையும் சந்தித்து உரையாடிவரும் இக்குழுவினர், இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசுடனும் ஜனாதிபதியுடனும் இணைந்து தீர்வு காண்பதற்கு பல தரப்பினரையும் வற்புறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் = உதயன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, இப்படியொரு பிரிவுத் தலைவரும் வருகை தருகின்றாரா? தலைவர் பிரிட்டன் ஜெயிலில். பிரிவுத்தலைவர் சுற்றுலாவில் .

  • கருத்துக்கள உறவுகள்

அடபாவிகளா.. லண்டனில கோயில் வைச்சு சனத்தை மேய்க்கிறவனும்.. காட்டிக் கொடுத்திட்டு லண்டனில பதுங்கினவனும்.. வடக்கில இருந்து எழும்பச் சொன்னதன் தார்ப்பரியம் புரியாம தொப்பி பிரட்டினவனும்.. தமிழ் மக்களுக்கான புத்திசீவிகள்.. முடியல்ல சாமி முடியல்ல..!

உதுகள உங்க லண்டனில ஏன் நாயே என்றும் எவனும் மதிக்கிறதில்ல.. உதுகள்..ஊர் சனத்துக்கு விடுப்புக்காட்ட.. அங்க சனத்துக்கு ஜனநாயகம் போதிக்க சிறீலங்கா அரச பிரதிநிதிகளா வருகினம் போல. உவையட்டத்தான் ஆனந்த சங்கரியும்.. டக்கிளசும் அடிக்கடி விசிட் அடிக்கிறவை போல லண்டனில..! :lol:

அன்பான தாயக மக்களே.. உங்களுக்கு ரோசம் மானம் இருந்தா.. புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்திட்டு.. சிங்களவனுக்கு அரிவருடிப் பிழைக்கும்.. உந்த புத்தி சீவிகளை முதலில.. அடிச்சு விரட்டுங்கோ..! இவர்கள் போலிப் பித்தலாட்டக்காரர்கள்..! விளம்பரம் தேடிகள்..! அப்படி சொல்ல ஆசைதான்.. ஆனா நீங்கள்.. இதைச் செய்வியளோ...??! :D

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரிட்டன் பிரிவுத் தலைவர் கே.சுப்பையா, இப்படியொரு பிரிவுத் தலைவரும் வருகை தருகின்றாரா? தலைவர் பிரிட்டன் ஜெயிலில். பிரிவுத்தலைவர் சுற்றுலாவில் .

ஊரில சுருட்டினதுகள லண்டனில முதலீடு செய்ய ஒவ்வொரு காட்டிக் கொடுப்பாளனுக்கும் ஒவ்வொரு நாட்டில பிரதிநிதி இருக்கிறான். அவனுக்கும் அவன்ர குடும்பத்துக்கும் வருமானம் வருகுதில்ல. சும்மா இருப்பானா..??! :D:D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ், சரியான போட்டி! இனிச் சுந்தரியாரின் பாடும், கக்கிளசின் பாடும் அம்பேல்!

சபாஷ், சரியான போட்டி! இனிச் சுந்தரியாரின் பாடும், கக்கிளசின் பாடும் அம்பேல்!

இவர்கள் அவர்களின் கைக்கூலிகளாகவும் இருக்கலாம்.

இதுல சுவிஸ் எலிக் குஞ்சு ரஞ்சன் இல்லையோ?

புத்திசீவிகள்... வாங்கோ வாங்கோ

வராதேங்கோ எண்டா விடவே போறியழ்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை யார் புத்தி ஜீவிகள் என்று சொன்னது. காட்டி கொடுக்கிறவன், நயவஞ்சகர்கள் எல்லாம் உதயனுக்கு புத்திஜீவிகளாக போயிற்றுது.காலம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நுனாவிலான், உதயன் கூட ஒரு நக்கலுக்கு எழுதியிருக்கலாம். யார் கண்டார் ? மனோரஞன், இன்னும் உயிருடந்தான் இருக்குதா? சந்திரிக்கா போனதோடு அதுவும் ஓடீட்டுது எண்டு நினைத்தேன்.

இறைவன், நீங்கள் சொன்ன மாதிரி இவர்களும் ஏற்கனவே இங்குள்ள புத்திஜீவிகளுடன்( வேறு யார், நம்ம சுந்தரியாரும் கக்கிளசும் தான்) சேர்ந்து மகிந்தவின் சிந்தனையை பட்டி தொட்டி தோரும் பரப்புவார்கள். என்ன ஒரு எஜமான விசுவாசம் ?! புல்லரிக்குது!!!!!

எல்லா கள்ளனும் ஒண்ட்டா வந்திருக்குதுகள் போல இருக்கு

அலிபாபாவும் திருட்டு ஜீவிகளும் இதற்குள்ளே நம் யாழ்கள திருட்டு ஜீவிகளும் இடம்பிடிக்கலாம்.

இ(வர்களை)துகளை என்ன செய்வது?????

பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரி அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் கருணாவுக்கு மீண்டும் அரசியல் உயிர்கொடுக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்களே என்று கூறிக்கொண்டு லண்டனிலிருந்தும் டென்மார்க்கிலிருந்தும் சில தமிழர்கள் சிறிலங்காவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

லண்டனிலிருந்து ஜெயதேவன், கிருஷ்ணன், விவேகானந்தன், பஷீர் மற்றும் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், டென்மார்க்கிலிருந்து குமாரதுரை, நோர்வேயிலிருந்து ........... ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்கு சென்றுள்ளனர். பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் துணையுடனேயே இவர்கள் அங்கு சென்றுள்ளனர்.

வடக்கில் அமையவிருக்கும் இடைக்கால நிர்வாக சபையையொட்டி புதிய ஆளுநர் நியமிக்கப்படவிருக்கிறார். அந்தப் பதவிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி அவர்களை நியமிக்கவேண்டும் என்றும் அதுவே புலம்பெயர்ந்த தமிழர்களின் விருப்பம் என்றும் அரசுக்கும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரிவிப்பதற்காகவே தாம் கொழும்பு செல்லவிருப்பதாக தெரிவித்திருந்த இந்த குழுவினர், மறைமுகமாக மற்றுமொரு அட்டவணையுடனேயே சென்றிருப்பதை அறிந்துகொண்ட கொழும்புத் தலைமை இவர்களை சந்திக்க விரும்பவில்லை என்றும் அரசின் அதிகார மட்டத்தில் யாரும் இவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனந்தசங்கரியை ஆளுநாக நியமிக்கக்கோரவே தாம் கொழும்பு செல்வதாகக் கூறிச் சென்ற இவர்கள் அங்கு சென்றபின்னர் தமது உண்மையான நோக்கத்தை தெரிவித்தபோது, இவர்களது விஜயத்துக்கு ஏற்பாடு செய்த இலங்கை தூதரக வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்து விட்டனவாம்.

கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவிருக்கின்றது. அந்தத் தேர்தலில் யார் வெற்றியடைவார்கள் என்பது இப்போதே தெரிந்ததுதான். அதனால் அந்த சபையின் முதல்வராக கருணாவுக்கு முடிசூட்ட விரும்பும் இவர்கள் கருணாவை திரும்ப அழைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காகவே அங்கு சென்றனர் என்ற விடயமே தூதரக வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது.

இதனை அறிந்துகொண்ட அரச தலைமை இவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டது. இதனால் ஏமாற்றடடைந்த இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம், வவுனியா என்று சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் விஷேசம் என்னவென்றால் இவர்களை மட்டக்களப்புக்கு செல்லவும் அரசு அனுமதிக்கவில்லை என்பதுதான்.

தம்மை நம்பி வந்த கருணாவுக்கு உதவவேண்டும் என்பதற்காக சர்வதேச சட்டங்களையும் மீறி அரசாங்கமே ராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்று அவரை லண்டனுக்கு அனுப்பிவைத்தது. ஆனால் அவரோ, லண்டனில் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதும் அரசியல் தஞ்சம் கோரினார்.

அரசியல் தஞ்சம் கோரிய ஒருவர் தான் எப்படி பிரிட்டனுக்குள் வந்தேன் என்பதை மிக இலகுவாகவே மாற்றியிருக்கலாம். நான் கொழும்பிலும் வாழ முடியாததால், பயண முகவர் ஒருவரிடம் பணத்தைக் கொடுத்தேன், அவரே என்னை விமானநிலையத்தில் கொண்டுவந்து ஏற்றிவிட்டார் என்று சர்வசாதாரணமாக கூறியிருக்கலாம். அரசியல் தஞ்சம் கோருகின்ற ஒவ்வொரு தமிழர்களும் இதைத்தான் கூறுகின்றார்கள்.

பெரும்பாலான அகதிகள் மற்றவர் பாஸ்போர்ட்டில் வந்தவர்கள்தான். ஆனால் கருணாவோ, தான் கொழும்பில் அரசாங்கத்தின் பாதுகாப்பில்தான் இருந்தேன் என்றும் கோத்தபாய ராஜபக்ஷதான் தனக்கு பாஸ்போட்; ஏற்பாடுகளைச் செய்து அனுப்பிவைத்தார் என்றும் அவர்களை சர்வதேசத்திற்கு காட்டிக் கொடுத்தார்.

காட்டிக்கொடுத்த கருணாவை மீண்டும் நம்புவதற்கு எந்த முட்டாளும் கூட சம்மதிக்கமாட்டான் என்பதைக்கூட புரிந்துகொள்ளாத இவர்கள் தம்மை புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகளாக சித்தரிக்க முயல்வதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு பெரிய இழுக்கு.

தீப்பொறி!

என்; தனிப்பட்ட மடலுக்கு வந்த செய்தியிது. நன்றி : ஈழத்தமிழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.