Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் - பேக்கர் மாமா சங்கரியார் தமிழக தலைவர்களுக்கு அறிவுரை!

டெல்கியில் தெருத் தெருவாக அலைந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவு திரட்டி முடித்துவிட்டு. சென்னை திரும்பினர் அந்த மூன்று பேரும். சென்னையில் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளாததால் தாங்களே ஒரு பெயரைச் சூட்டி “இந்திய - இலங்கை அமைதி நடவடிக்கை” பற்றிய கருத்தரங்கு என்று கூறி (என்ன இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யுத்தமா நடைபெறுகிறது அமைதி நடவடிக்கை மேற்கொள்ள?) வழக்கம் போல் சிங்கள இனத்தை நியாயப்படுத்தி யாழ்ப்பாணத்தாரை இழிவு படுத்தியும் பேசியுள்ளார் சங்கரிய!

அவரது பேச்சு இதோ:-

இங்கே (தமிழக) சில கட்சிகள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சொந்த லாபங்களுக்காக, அவர்கள் அனைத்தையும் தங்களுடையது என்று கோருகின்றனர். சிங்களவரை சவோனிஸ்ருக்கள் (CHAUVINIST(மிருகபலத்தில் மூடநம்பிக்கை கொண்டவர்கள்) என்றும் கூறுகின்றனர். ஒருவேளை அவர்கள் அப்படியிருந்தால் ஒரு பொறி போதும் மோசமான பின்விளைவுகள் ஏற்பட!

தமிழர்கள் சிங்களவர்களால் பெருமளவு பாதிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழவேண்டிய 50 வீதமான தமிழர்கள் இப்போது சிங்கள மக்கள் மத்தியில்தான் வாழ்கின்றனர். இதற்கு நான் பல உதாரணங்கள் எடுத்துச் சொல்லமுடியும். மொத்தத்தில் தமிழர்கள் சிங்கள மக்களால் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. இவை அனைத்தும் விசமத்தனமான பிரசாரங்கள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

முன்னொருகாலத்தில் சிங்கள இராணுவம் கடுமையாக நடந்து கொண்டதுதான். ஆனால் இப்போது அப்படியில்லை. தமிழர்களை தங்களது சொந்தங்களாகவும்;, அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு உரிமை வழங்க வேண்டும் என்றும் சிங்கள மக்கள் எண்ணுகின்றனர்.

தமிழ் நாட்டில் இருக்கும் சில தலைவர்கள் இதையெல்லாம் பார்ப்பதில்லை. இதைத் தொடர்ந்தும் அனுமதித்தால் நாடு சுடுகாடான நிலையைத்தான் காண முடியும்.

விடுதலைப் புலிகளின் விபரீத நோக்கம் தெரியாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகின்றனர் சில தலைவர்கள். இது தொடர்ந்தால் “தமிழகத்திலும் ஓரு யாழ்ப்பாணம் உருவாகும்” ஆபத்து உள்ளது.

இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. ஆனால் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு “யாழ்பாணம்” உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் இங்கு கூடியிருக்கிறோம்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தலைவர்கள் அவர்களை அறியாமல் இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களது ஆதரவுப் பேச்சால் தமிழகத்தில் ஒரு யாழ்ப்பாணத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது.

இந்தமாதிரிப் பேசும் தலைவர்களை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும் அவர்களால் எதிர்காலத்தில் பெரும் ஆபத்து உள்ளது. அவர்களின் ஆதரவுப் போர்வையில் தென்மாநிலங்களில் விடுதலைப் புலிகள் பரவும் வாய்ப்பு அதிகம் அப்படிப் பரவும் போது அவர்கள் இங்கும் பிரச்சினை செய்வார்கள். ரணகளம் ஏற்படும் ஆபத்து உள்ளது.

இலங்கையில் எல்லாத் தமிழர்களும் அமைதியாக வாழ வேண்டும் என்றுதான் 99 சதவீத சிங்களவர்கள் நினைக்கின்றனர். தமிழர்கள் நின்மதியாகவே வாழக்கூடாது என்று சிங்களவர்கள் எண்ணுகின்றனர் என்று பரப்புவதெல்லாம் பொய்யான பிரசாரம். அதில் சிறிது கூட உண்மை கிடையாது.

சிங்கள இராணுவத்தின் மீது இதுவரை பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதலை புலிகள் நடத்தியுள்ளனர். ஆனால் பதிலடியாக எந்த ஒரு சிங்கள அமைப்பும் புலிகள் மீது தற்கொலை படைத்தாக்குதல் நடத்தவேயில்லை.

தங்களுக்கு ஏதோ ஏகோபித்த ஆதரவு இருப்பதாக புலிகள் சொல்கின்றனர். கிளிநொச்சியில் அவர்கள் போட்டுள்ள இரும்புக் கதவைத் திறந்துவிட்டால் அப்புறம் தெரியும் அவர்களின் கதி!

இவைதான் பணங்கள்ளு பிரியர் சங்கரியவின் பேச்சு! ஏனைய இருவரும் ஒப்புக்குச் சப்பாணி போன்று இந்தியா உதவ வேண்டும். இந்தியா தனது பாதுகாப்பைப் பலப்படுத்த இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கவேண்டும் என்று ராஜபக்சேக்கு ஆதரவு தெரிவிப்பதை உறுதிப்படுத்திவிட்டு கிளம்பிவிட்டனர்.

இப்போது ஆனந்தே சங்கரியவின் உரையைப் பார்ப்போம்:-

புலிகளுக்கு இந்தியாவில் ஆதரவுக் கொடுத்தால் யாழ்ப்பாணம் உருவாகிவிடும். இந்தக் கூற்றை உண்மையில் யார் சொல்லியிருக்கவேண்டும்? ஓர் சிங்களப் பேரினவாதிதான் இதனைச் சொல்வார்.

யாழ்பாணத் தமிழர்கள் என்ன அப்படியான கொடியவர்களா? அவர்களைக் காட்டி ஆனந்தே சங்கரிய பயமுறுத்தும் அளவுக்குப் பயங்கரமாகவா யாழ்ப்பாண மக்கள் வாழ்கின்றனர். இன்று யாழ்ப்பாண மக்கள் அரசப் படைகளின் கைகளிலும் ஈ.பி.டி.பி.யின் கால்களுக்குள்ளும் சிக்கிக் கொண்டு அவஸ்தைப் படுவதை பனங்கள்ளுப் பிரியர் ஆனந்தே சங்கரிய அறிந்திருக்கவில்லையா? யாழ்ப்பாணம் இருப்பது சிங்கள இராணுவத்தின் கைகளில் என்பதை கிழட்டுச் சங்கரிய மறந்து பழக்கதோசத்தில் (சிங்களவரது பணத்திலும் பாதுகாப்பிலும் வாழ்வதால்) உளறியவை இந்தப் பேச்சு!

சிங்களவரால் தமிழர்கள் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகவில்லை. ஆனந்தே சங்கரியவுக்கு இது பொருந்தும். ஏனென்றால் சாப்பாடு வழங்குவதே சிங்கள இராணுவம்தான். இராணுவம் தமிழர்களை எப்படியெல்லாம் வதைக்கிறது என்பதை சங்கரிய எடுத்துரைத்தால் பின்னர் சோற்றுக்கு என்னசெய்வார் சங்கரிய? அவரது பார்வையில் இராணுவம் என்பது சிங்களவர் அல்லாத தொழிலாளர்கள் என்பது சங்கரியவின் சின்னப்புத்தியில் ஆழமாகப் பதிந்துள்ளது.

அண்மைக்காலமாக பூசா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் இளைஞர்களில் 150 க்கும் மேற்பட்டவர்களை எப்படிச் சித்திரவதை செய்தார்கள் என்று சங்கரிய கேள்விப்படவில்லையா?

ஆறரையடி உயரத்துக்கு இரண்டு சுவர்களுக்குமிடையில் இரும்புக்கம்பி பொருத்தப்பட்டிருந்தது. கொண்டு செல்லப்பட்ட இளைஞர்களில் 150 பேரைத் தெரிவு செய்து அவர்களது கைகளில் விலங்கு மாட்டப்பட்டு அந்த விலங்குகளை ஆறரையடி உயரத்திலிருந்த இரும்புக்கம்பிகளில் பொருத்தப்பட்டது. தண்ணீh உணவு இன்றி இப்படியாக மூன்று நாட்களாக அந்த இளைஞர்கள் நின்ற கொண்டே இருந்தனர்.

பலர் மயங்கி அந்த விலங்கிலேயே தொங்கிக் கொண்டிருந்தனர். அப்படி மயங்கியவர்களை மட்டுமே பின்னர் சிறைக்கூண்டுக்குள் தள்ளினர். ஒரு புலியைப் பிடிக்க 150 தமிழர்கள் சித்திரவதை அனுபவித்தனர். இந்தச் சித்திரவதையைச் செய்தவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த காட்டுவாசிகளா செய்தனர். சிங்களப் பொலிசார்தானே. இப்படி தொங்கவிடப்பட்டவர்களை தமது இஸ்டப்படி பலமணிநேரமாக முறைவைத்துத் தாக்கினர் பொலிசாரும் இராணுத்தினரும். பொலிசாரும் இராணுவமும் சங்;கரியவுக்கு இப்போது சகோதரபயாக்களாகி விட்டனர்.

இலங்கையில் எல்லாத் தமிழர்களும் அமைதியும் பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று 99 சதவீத சிங்களவர் நினைக்கின்றனர். சிங்களவரின் மனச்சாட்சியாகத்தான் சங்கரிய சுற்றித் திரிகிறார். சங்கரிய எப்படி வாழ்கிறாரோ அப்படியே அனைத்துத் தமிழ் மக்களும் வாழவேண்டும் என்று சிங்களவர்கள் சார்பாக சங்கரிய சிந்திக்கிறார். சங்கரிய தனது மனச்சாட்சியை மகிந்தாவிடம் அடவு வைத்துவிட்டுத்தானே இப்படிப் பேசுகிறார்!

இராணுவத்துக்கு எதிராக தற்கொலைப் படைத்தாக்குதலை புலிகள் நடத்தியுள்ளனர். ஆனால் எந்தச் சிங்கள அமைப்பும் தற்கொலைப்படைத் தாக்குதலை புலிகளுக்கு எதிராக நடத்தவில்லை! சங்கரியவின் சிந்தனை எப்படி என்பதை இதன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இராணுவத்தில் தமிழர்கள் யாரும் கிடையாது. சிங்கள இனத்தைப் பாதுகாப்பது இராணுவம் மட்டுமல்ல ஏனைய படைகளும் சேர்ந்துதான். முப்படைகளையும் தவிர வேறு அமைப்பு அவர்களுக்குத் தேவைப்படாது போர் நடத்துவதற்கு. புலிகளைத் தாக்குவதென்றால் வன்னிக்குள் சென்றால்தான் தாக்கலாம். அவர்கள் சிங்களப் பகுதிகளுக்குள் ரோந்து சுற்றித்திரிவதில்லை. மடச்சாம்பிராணி சங்கரியவுக்கு பகுத்தறிந்து பார்க்கக் கூடத் தெரியவில்லை. மொத்தத்தில் சிங்கள சிப்பாய்களுடன் வாழ்க்கையை நடத்தும் சங்கரிய அந்தச் சிப்பாய்களில் ஒருவராகவே மாறிவிட்டார் என்பதைத்தான் இவரது பேச்சுக் காட்டுகிறது.

இந்தியாவைப் பாதுகாப்பது எப்படி என்று எடுத்துச் சொல்லத்தான் இந்த அழையாத விருந்தாளிகள் இந்தியா சென்று அறிவுரைகள் நிகழ்த்தியுள்ளனர்.

சங்கரியவின் பேச்சில் எங்களால் சகிக்கமுடியாத கூற்று, “தமிழகத்தில் ஒரு யாழ்ப்பாணம் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் இங்கு கூடியிருக்கிறோம்” என்ற இந்தக் கூற்றுத்தான்! அட பாவி!

இலங்கைத் தமிழர்களை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று கூறத்தானே தமிழகம் சென்றுள்ளாய்? லண்டன் கனடா போன்ற நாடுகளில் யாழ்ப்பாணம் உருவாகலாம்! ஆனால் தமிழகத்தில் உருவானால்தான் சங்கரியவுக்குப் பாதிப்பு! புலிகள் பயங்கரவாதிகள்தான். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவேண்டாம் என்று கூறுவதில் தப்பில்லை. இதற்கு யாழ்பாணமும் அந்த மக்களும் என்ன செய்தார்கள்? யாழ்ப்பாணத்தை எதற்காக உதாரணம் காட்டவேண்டும் சங்கரிய?

சங்கரிய கொழும்பு திரும்பியதும் அடுத்த பயணம் லண்டன் இல்லையென்றால் கனடாவாகத்தான் இருக்கும். இங்கு வரும்போது இலங்கைத் தமிழர்கள் சங்கரியவை செருப்பால் அடித்து விரட்டவேண்டும். அப்படிச் செய்தால்தான் ஆனந்தே சங்கரிய போன்றோர் திருந்துவர் அல்லது தாங்களே சிங்களவராக மாறிக் கொள்வர்!

பருத்தி வேந்தன்

theepori.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இராணுவத்தின் மீது இதுவரை பலமுறை தற்கொலைப்படைத் தாக்குதலை புலிகள் நடத்தியுள்ளனர். ஆனால் பதிலடியாக எந்த ஒரு சிங்கள அமைப்பும் புலிகள் மீது தற்கொலை படைத்தாக்குதல் நடத்தவேயில்லை.

அதற்காக நீ நடத்தலாம்தானே ஆனந்த சங்ககாரா அதற்கு வீரமான விந்திலிலிருந்து உருவாகவேண்டும். சங்ககாரவின் செயற்பாட்டை பார்த்தால் இனக்கலவரத்தில் உருவான கருப்போல இருக்கிறது.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின்

நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே

எஜமானர்கள் சங்கிலியில் கட்டிவைத்துக் கொண்டு எலும்புத் துண்டுகளைப் போடுகிறார்கள். அதற்காகக் குரைக்கிறது. விசுவாசமுள்ள "பட்டி"

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் துரோகிகள் கும்பல் என்ற பெயரால் சிறுவர் பெரியோர் என்று பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த வடபகுதிப் பெரியவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கிறார்களில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் விளங்குது, சங்கரியாருக்கு ஜெயலலிதாவில ஒரு கண் அதுதான் இப்பிடி உளறித் தள்ளுறேர் என்று. இந்த மனுசன் மண்டையப் போட்டா இந்து சமுத்திரத்தில கரைக்க விடக்கூடாது!!

இப்பதான் விளங்குது, சங்கரியாருக்கு ஜெயலலிதாவில ஒரு கண் அதுதான் இப்பிடி உளறித் தள்ளுறேர் என்று. இந்த மனுசன் மண்டையப் போட்டா இந்து சமுத்திரத்தில கரைக்க விடக்கூடாது!!

:D:D:D:D:lol::lol::lol: ..............................................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயது போய்க் கடைசிக்காலம் ஆகுது. அந்த நேரத்தில் மண்டையைப் போடும்போது 4 பேர் சேர்க்கின்றது உங்கள் எல்லோருக்கும் தப்பாகத் தோன்றுதோ? நீங்கள் ஒருவரும் செத்த வீட்டுக்கு வரமாட்டீர்கள். நாலு சிங்களச் சனத்தை வரவைக்க வேண்டுமென்றால் இப்படி ஒரு அறிக்கை விட்டு, காலம்காலமாகச் சிங்களவர்களை அண்டிப்பிழைத்த பெயரோடு மாண்டு போலாம்.

நீங்கள் எல்லாத்துக்கும் தடை போடுகின்றீர்கள். உருப்படுவீர்களா?

வயது போய்க் கடைசிக்காலம் ஆகுது. அந்த நேரத்தில் மண்டையைப் போடும்போது 4 பேர் சேர்க்கின்றது உங்கள் எல்லோருக்கும் தப்பாகத் தோன்றுதோ? நீங்கள் ஒருவரும் செத்த வீட்டுக்கு வரமாட்டீர்கள். நாலு சிங்களச் சனத்தை வரவைக்க வேண்டுமென்றால் இப்படி ஒரு அறிக்கை விட்டு, காலம்காலமாகச் சிங்களவர்களை அண்டிப்பிழைத்த பெயரோடு மாண்டு போலாம்.

அண்ணை சிங்களவன் என்ன கேனையனா?

இந்த பண்ணாடைகள் தமிழருக்கு எதிராக செயற்படுமட்டும்தான் சிங்களவன் எல்லாம் செய்வான். ஆனா... இவையாலை எந்தப் பயனுமில்லை எண்டா கழட்டி விட்டுடுவான். அதுக்கு நல்ல உதாரணம் கிழக்கின் விடிவெள்ளியை பிரித்தானியா சிறையில் கழி தின்ன வைத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை சிங்களவன் என்ன கேனையனா?

இந்த பண்ணாடைகள் தமிழருக்கு எதிராக செயற்படுமட்டும்தான் சிங்களவன் எல்லாம் செய்வான். ஆனா... இவையாலை எந்தப் பயனுமில்லை எண்டா கழட்டி விட்டுடுவான். அதுக்கு நல்ல உதாரணம் கிழக்கின் விடிவெள்ளியை பிரித்தானியா சிறையில் கழி தின்ன வைத்தது.

இயற்கை மரணம் என்றால் தான் சிங்கள மக்கள் பேசமாட்டார்கள். அதற்குத் தான் செயறகையாக உருவாக்க முனைகின்றேன். அப்படிச் செயற்கையாக மரணித்தால் என் மரணத்தை வைத்துக் கண்ணீர் வடித்து, அரசியல் இலாபம் தேட என் எசமானர்கள் தயாராகத் தான் இருக்கின்றார்கள். மானம்கெட்ட தமிழ்மக்கள் அதைக் கூடக் கண்டு கொள்ளாமல் விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தம்பி சில எழுத்துப் பிழைகள்.

பண்ணாடை என்பது பன்னாடை என்றும், கழி என்பது களி என்றும் தான் வரவேண்டும். பேச்சுத் தமிழைத் திருத்தவில்லை. அர்த்தப் பிழை மட்டும் தான் சொன்னேன்

இந்த ஜந்துக்கு அறளை பேந்துவிட்டது சிங்களத்துக்கு இப்படி விசுவாசம் காட்டுதே இந்த .....................

சரி எல்லாரும் திட்டும் போது நான்மட்டும் திட்டாமல் இருப்பது சரியில்லை...

அதனால எனது திட்டலையும் கண்டனத்தையும் திரிவிச்சு கொள்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: புலிகெசி:

இப்பதான் விளங்குது, சங்கரியாருக்கு ஜெயலலிதாவில ஒரு கண் அதுதான் இப்பிடி உளறித் தள்ளுறேர் என்று. இந்த மனுசன் மண்டையப் போட்டா இந்து சமுத்திரத்தில கரைக்க விடக்கூடாது

அப்போ எங்கே தான் கரைப்பதாம்.

எப்படித்தான் முடிகிறதோ.......

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா ???சொல்லவேயில்ல ?

அதுசரி எம்.ஜி.ஆர் பார்த்த இடமாச்சே, நாமும் பார்த்தலென்ன எண்டு அழுங்குச் சுந்தரி நினைச்சிருக்கும். வயசு போகப் போக எப்படியெல்லாம் ஆசை வருகுதெண்டு பாருங்கோவன் !!!@!! இன்னும் சிறிது நாள்ப் போனால் சினிமாவில நடிக்கச் சான்சு கேட்டாலும் கேட்கும்! வேணுமெண்டால் பிணமாக நடிக்கச் சொல்லுவாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.