Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு

செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008

திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது.

புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது.

திருச்சி அருகே பேரூரில் இந்தப் புத்தர் கோவில் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இலங்கை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனா கலந்து கொண்டார். அவருடன் இலங்கையைச் சேர்ந்த புத்த பிக்குகள் சிலரும் கலந்து கொண்டனர்.

இங்கு புத்தர் கோவிலும், கதிர்காமம் முருகன் கோவிலும் கட்டப்படவுள்ளன.

நிகழ்ச்சியில் ஜெயலத் ஜெயவர்த்தனா பேசுகையில், இந்தத் திட்டத்தால் இரு நாட்டு கலாச்சார உறவுகளும் மேலும் வலுவடையும். இந்த திட்டத்தில் அரசியல் எதுவும் இல்லை. முற்றிலும் மதம் தொடர்பான திட்டமே இது.

கதிர்காமத்தில் உள்ள முருகன் கோவிலைப் போலவே இங்கும் உருவாக்கப்படும். கதிர்காமம் போன்ற முருகன் கோவில் இலங்கையைத் தாண்டி கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அனுராதபுரத்திலிருந்து போதி மரத்தின் ஒரு கிளை கொண்டு வரப்பட்டு இங்கு நடப்பட்டுள்ளது என்றார். போதி மரக் கிளையை புத்த பிக்குகள் சேர்ந்து நட்டனர்.

இந்தத் திட்டத்தின் இயக்குநரும், சிங்கள அமைப்பின் தலைவருமான டாக்டர் சீவலி அனுநாயகா தேரோவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போதி மரத்தின் கிளை இந்தியாவிலிருந்துதான் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. இப்போது அதை நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வந்துள்ளோம். நன்றிக் கடனுடன் திருப்பிக் கொடுக்கிறோம்.

தமிழகத்தில் கட்டப்படும் 3 புத்தர் கோவில்களுக்குமான திட்டத்திற்கு நான் தலைவராக செயல்படவுள்ளேன். 3 ஆண்டுகளில் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டு விடும் என்றார் தேரோ.

பெரியார் தி.க. தொண்டர்கள் போராட்டம்:

இதற்கிடையே பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இந்தக் கோவில் கட்டும் பணியை எதிர்த்து போராட்டம் நடத்தினர். கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்த வந்த அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...-performed.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமா?

  • கருத்துக்கள உறவுகள்

அங்கும் சமஸ்கிருதத்தில் பூசை வைக்கட்டும் பார்ப்போம்.ஒட்ட நறுக்கி விட்டுவிடுவார்கள் குடும்பியை.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், போதி மரத்தின் கிளை இந்தியாவிலிருந்துதான் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டது. இப்போது அதை நாங்கள் மீண்டும் இந்தியாவுக்கே கொண்டு வந்துள்ளோம். நன்றிக் கடனுடன் திருப்பிக் கொடுக்கிறோம்

அனுநாயக்க தேரோவுக்கு நல்ல மனசு. <_<:(

  • கருத்துக்கள உறவுகள்

அங்கும் சமஸ்கிருதத்தில் பூசை வைக்கட்டும் பார்ப்போம்.ஒட்ட நறுக்கி விட்டுவிடுவார்கள் குடும்பியை.

அப்படியென்றால் பாளியில் வழிபாடு செய்தால்.... வாலைச் சுறுட்டுவார்களோ? ஏனென்றால் பௌத்த ஆலயங்களில் வழிபாடு செய்வது என்பது பாளிமொழியிலே தானே.

நாங்கள் எண்டா உவர் அனுநாயக் தேரரின்ரை குடலை உருவி மாலையா போட்டிருப்பம். உவை கருணாநிதி வைகோ திருமா ராமதாஸ் எல்லாரும் என்ன செய்யினம்? தமிழ் இன உணர்வு இல்லாதவையா இருக்கினமே.

ஏதோ கடசி சமஸ்கிருதத்திலாவது பூசை செய்தாலும் பறவாயில்லை.

என்ன தூயவன் ளொள்ளா...?? சைவம் எண்டால் என்ன பௌத்தம் எண்டால் என்ன எல்லாமே வட இந்தியன் தெற்கிலை திணிச்சது... ஆனால் பௌத்த விகாரங்களிலை மணிகள் இல்லாததாலை நாங்கள் பௌத்தத்தை எதிர்க்க வேண்டியதில்லை...

ஒரு வேளை மணி மட்டும் இருத்துது எங்கட வாயளாலையே ஆட்ட மாட்டமா என்ன...??

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் அண்ணை

கம்னூசியம், மாக்கிசம் எல்லாம் தமிழருக்குள் தானோ உருவெடுத்ததோ? அங்கே மணி ஒண்டுமில்லையோ? அங்கே ஏதும் இரும்புச்சாமான் மாட்டுப்பட்டால் அமெரிக்காவிற்கு எறிய உதவும். பொறுக்கி வைச்சுக் கொள்ளுங்கோவன்

அப்படியென்றால் அண்ணை

கம்னூசியம், மாக்கிசம் எல்லாம் தமிழருக்குள் தானோ உருவெடுத்ததோ? அங்கே மணி ஒண்டுமில்லையோ? அங்கே ஏதும் இரும்புச்சாமான் மாட்டுப்பட்டால் அமெரிக்காவிற்கு எறிய உதவும். பொறுக்கி வைச்சுக் கொள்ளுங்கோவன்

உதுதான் புலம்பெயந்த செம்மறியளை எனக்கு கண்ணிலை காட்டுறது இல்லை... ஊரிலை இருக்கும் மட்டும் எதை சொன்னாலும் தலைய ஆட்டுவினம் இப்ப பாருங்கோ... !

இப்ப பாத்தீங்கள் எண்டால் புதுவை அண்ணை ஒரு பேட்டியிலை ஏன் பக்தி பாடல் எழுதுறனான் எண்டு ஒரு கதையை சொன்னவர்... அதிலை கடவுள் எதிரியான அவர் மதத்தை எப்படி அழிக்கிறது எண்டதுக்கு வளியை பூடக்கமாய் சொல்லி இருக்கார்... தமிழீழ போராட்டத்திலை சைவம் அழிப்பு எண்டது ஒரு அம்சம்.... எங்கையாவது கோயில் மணிகள் தென்பட்டா சொல்லுங்கோ புலம் பெயந்தவை வெளிக்கிடுவம்...

ஏதாவது விளங்கிச்சா...??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெளத்தம் எனும் மதம் தமிழ்நாட்டிற்குப் பதியதானதொன்றல்ல. ஆனால் தமிழ் நாட்டில் இன்னும் ஏன் இந்தியாவில் இராமருக்காக வரிந்துகட்டிக்கொண்டு கூத்தாடும் இந்து மதப் பிரியர்களின் அசாத்தியமான மெளனம் பல கேள்விகளுக்கு விடையைத் தருகின்றன.

கோயில் வழிபாட்டுத்தலங்கள் கட்டப்படுவதை தமிழ்நாடு எதிர்க்காது. தென்னிந்தியா என்று சுற்றுலா விளம்பரங்கள் வாயிலாக நுழைந்தாலோ அல்லது தமிழ்நாடு என்று அறிவதற்காகத் தேட முயன்றாலோ கிடைப்பது கோயில்கள் பற்றிய பதிவுகள்தான். அதாவது பக்தி மயக்கத்தில் வாழும் மனிதர்களின் பிரதேசமாகவே தமிழ்நாடு விளம்பரப்படுத்தப்படுகிறது.

இதை சிங்கள புத்திஜீவிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களும்(பார்ப்பனிய மேலாதிக்கம்) இதனுடன் ஒத்துப்போவதுதான் இவர்களது வேசத்தைக் கலைக்கிறது. முன்னர் பாரதி பாடினான் ''சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைத்ததிடுவோம்..." என்று இதை நிறைவேற்றும் முடிவிற்கு இந்த கொள்கை வகுப்பாளர்கள் வந்துவிட்டார்கள் போலும்.

1. இலங்கையில் தமிழர்களை இல்லாது ஒழித்து அதை சிங்களமயமாக்கிவிடும் சிங்களப் பேரினவாதத்திற்குத் துணை போதல்.

2. ஆதாம் -இராமர் பாலத்தைக் கட்டி புதிய மானிலமாக சிறலங்காவை உள்வாங்கல்

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

1. மதரீயான பிரச்சனையாக சிறிலங்காவின் தொடர் நிகழ்வுகளை இவர்கள் பார்க்கவில்லை. (மலேசியத் தமிழர்களுக்காக (இந்துகளுக்காக) நீலிக் கண்ணீர்வடிக்கும் இந்துத்துவவாதிகள் இலங்கை இந்துக்கள் தொடர்பாக வாயைத் திந்ததே இல்லை.) இஸ்லாபியருக்காக வெகுண்டெழு் இந்த இந்துத்துவவாதிகள் பெளத் விகாரங்களின் புதிய வரவைக் கண்டுகொள்ளவே இல்லை.

2. தனது நாட்டின் கொருருளாதாரத்திற்ககாக கையேந்தி வாழும் இலங்கை இந்தியாவில் பெளத்த விகாரையைகக் கட்டிக் கொடுப்பதென்பது சாதாரண நிகழ்வல்ல.

3. இங்கு சிங்களத்திற்கும் வட இந்தியக் கொள்கை வகுப்பாளர்களிடத்தும் காணப்படும் இறுக்க உணர்வு எப்படிச் சாத்தியமாகிறது எனக் கேள்வி எழும்புகிறதல்லவா?

இது மதங்களால் ஏற்பட்டதன்று மொழிக் குடும்பத் தொடர்பால் வருகிறதென்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தமிழ் எனும் திராவிட மொழிக்கானதும் - சமஸ்கிரதம் எனும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினதுக்குமான (தற்போது இரு மொழிகளும் செம்மொழியாக ஏற்கப்பட்டுள்ளன) பரம்பரை மோதல் வழியிலேயே இவர்களது இணைவை நோக்க முடிகிறது.

நீண்ட மொழிவழிக் குழும மோதலில் தமிழின எதிரிகள் கைகோர்த்து களமிறங்கும் இவ்வேளையில் உலகத் தமிழினம் விழிப்புற்று எழ வேண்டிய தருணமிது.

சுழியனின் வாதம் சரியே.. கூப்பாடு போடுபவர்கள் தங்கள் அரசியல் சுயநலனுக்கு மட்டுமே.

புத்த கோவில் கட்டுவது ஒன்றும் தப்பு இல்லை. ஆனால் அது இலங்கை போல் இனவாதிகளின் கூடாரம் ஆகிவிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சுழியன்

இந்துத்துவம் என்பது குரல் கொடுக்காமல் போனதற்கு யார் காரணம் என்று எழுதுவதில் எவ்வித பிரச்சனையுமில்லை. அதை யாழ்கள நிர்வாகம், ஆதரவளிக்கின்றார்களையும் ஆதரவளிக்காமல் செய்கின்ற வேலை எனக் கத்தரிக்காமல் விடுமாக இருந்தால் தயார். ஈழப்பிரச்சனை தொடர்பாக இந்தியாவில் இருந்து நீலிக்கண்ணீர் வடிப்பர்கள், ஈழத்தமிழர்கள் மரணங்களைத் தடுக்க பேனையையும், வார்த்தைகளையும் விட என்ன செய்தார்கள்?

இந்து மதத்தில மெய்மறந்து திளைக்கிறவை 3 விடையங்களில கெட்டிக்காறர்.

-1- தங்களாலை ஒண்டை ஏன் செய்ய முடியவில்லை பங்களிக்க முடியவில்லை எண்டு நியாயப்படுத்துவதில். சுத்தி வழைச்சு இறுதியில மற்றவையாலான் தங்களாலை ஒண்டும் செய்ய முடியவில்லை இல்லாட்டி வெட்டி விழுத்தியிருப்பம் எண்டு முடிவுரை எழுதுவினம்.

-2- மேல இருந்து குதித்த அவதாரங்கள் மாதிரி மற்றவை ஏன் ஒண்டையும் செய்யவில்லை; எண்ட மேலோட்டமான கேள்விகள் கேட்பதில் கெட்டிக்காறர்.

-3- வேறு யாராவது உழைப்பின் பலன்களினுள் இந்து மதத்தை புகுத்தி இந்து மதத்தின் மகிமையால் தான் உதுகள் எல்லாம் முடிஞ்சது எண்ணிற ஒட்டுண்ணி வேலைகளிலும் வலு கெட்டிக்காறர்.

அவையின்ரை நேரமும் மனிதவளமும் இப்படியான மோசடிகளை அரங்கேற்றுவதிலும் அதை நியாயப்படுத்துவதிலும் வியாக்கியானங்கள் பேசுவதிலும் தான் போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் ஒரு மெய்யியல்வாதி. அவன் சிங்களவனும் அல்ல பேரினவாதியும் அல்ல. அதுமட்டுமன்றி புத்தன் இந்திய மண்ணை தாய் மடியாகக் கொண்டவன். அவனுக்கு மதச் சுதந்திரத்தை அங்கீகரித்திருக்கும் இந்திய தேசத்தில் இந்திய மண்ணில் கோவில் கட்டிறதில எந்தத் தப்பும் இல்ல.

ஆனால் தமிழர்கள் மீது அடக்குமுறைப் போர் செய்யும் இன அழிப்புப் போர் செய்யும் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு உசுப்பேத்தும் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது கூட்டத்தினர் ( அவர் அல்லது அவர்கள் அக்கூட்டத்தின் விதிவிலக்காகக் கூட இருக்கலாம்) சுயமரியாதைக் கொள்கை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகளின் வாரிசு அரசாளும் தமிழகத்தில் புத்தனுக்கு "கோவில்" கட்டிறதுதான் கொஞ்சம் சங்கடமான விடயம். ஒருவேளை பெளத்தம் தான் தமிழர்களின் ஆதி மதம் என்று இன்னும் சில மாதங்களில் சட்டசபையில் திமுக அறிஞர்கள் அறிவிக்கப் போகிறார்களோ என்னவோ..??! <_<

அப்படியே தமிழகம் தான் சிங்களவர்களுக்கும் தாய்வீடு.. என்று அறிவிச்சாலும் ஆச்சரியப்படக் கூடாது. இதெல்லாம் அரசியலில் சகஜம். :(

மற்றும்படி.. மக்களின் மத சுதந்திரத்தை அவர்கள் விரும்பும் வடிவில் பெற அனுமதிக்க வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமையாகும். அதை மீறுவது அல்லது மக்களிடம் திணிப்பது தவறானது.

தமிழில் தேவாரம் பாடனும் என்றது வரவேற்கத்தக்கது. அதை மக்களின் கருத்துக்கணிப்போடு நாடு பூரா (தமிழகம் பூரா) சட்டமாக்க வேணுமே தவிர ஒரு கோவிலுக்கு என்று திணிப்பது தவறானது. அதுபோலவே இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் (ஒன்றில் இந்து மதத்தை எதிர்த்து அல்லது ஆதரித்து) என்பதும் மக்களின் அடிப்படை மத உரிமைகளை துஸ்பிரயோகம் செய்யும் செயலாகும்..! :)

Edited by nedukkalapoovan

இந்து மதத்தில மெய்மறந்து திளைக்கிறவை 3 விடையங்களில கெட்டிக்காறர்.

-1- தங்களாலை ஒண்டை ஏன் செய்ய முடியவில்லை பங்களிக்க முடியவில்லை எண்டு நியாயப்படுத்துவதில். சுத்தி வழைச்சு இறுதியில மற்றவையாலான் தங்களாலை ஒண்டும் செய்ய முடியவில்லை இல்லாட்டி வெட்டி விழுத்தியிருப்பம் எண்டு முடிவுரை எழுதுவினம்.

-2- மேல இருந்து குதித்த அவதாரங்கள் மாதிரி மற்றவை ஏன் ஒண்டையும் செய்யவில்லை; எண்ட மேலோட்டமான கேள்விகள் கேட்பதில் கெட்டிக்காறர்.

நல்லா செஞ்சு இருக்கியள். தாங்கள் ஒரு இந்து மதத்திலை திளைச்சவர் எண்டு சொல்ல இதை விட விளக்கம் தேவை இல்லை. நீங்கள் எப்பவுமே இதைதான் தாங்கள் செய்கிறீர்கள் எனும் தெளிவு இருக்குது. சந்தோசம்.

Edited by அகிலன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எண்டா உவர் அனுநாயக் தேரரின்ரை குடலை உருவி மாலையா போட்டிருப்பம்.

இது விதண்டாவாதம்

  • கருத்துக்கள உறவுகள்

விதண்டாவாதம் புரிபவர்களிடம் விவாதிப்பது என்பது எருமை மாட்டின் மேல் மழை பெய்வதற்குச் சமன் என்று பெரியோர்கள் கூறியுள்ளார்கள் கறுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்தியா

இலங்கையை அடிமையாக்குகிறதா???

இல்லை

இலங்கை இந்தியாயை அடிமையாக்குகிறதா???

ஒன்றுமே புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களில் கம்னூசியம், திராவிடம் பேசுபவர்கள் கெட்டிக்காரர்கள்.

1. என்றைக்குமே தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற இவர்களுக்கு உருப்படியாக ஒரு கொள்கையோ, தோதாரியோ இருந்தது கிடையாது.மேலே அடிவருடித்தனமாக எழுதுவது போல, மற்றவர்களைப் பார்த்துத் திட்டுறது தான் முழு நேரத்தொழில். கம்னூசியக்காரன் எது நடந்தாலும், அமெரிக்காவைப் பார்த்துத் திட்டுவான். திராவிடக்காரன் பார்ப்பானி என்றோ, இந்து மதத்தைப் பார்த்தோ திட்டுவான்.

2. என்றைக்குமே தமிழ் மக்களுக்காக எதுவே செய்ததில்லை. உங்களைக் காக்க வந்த இரட்சகர்கள் என்பார்கள். இருக்கின்ற கோவணத்தையும் புடுங்கிக் கொண்டு போவார்கள்.

3. சொல்வதற்கும் செயலுக்கும் எவ்வித சம்பந்தமும் இருக்காது. தமிழ் பெயர் வைப்போம் என்பார்கள்.மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் தமிழில் இல்லாத பெயர் வைப்பார்கள். தங்களுடைய பெயர் கூடத் தமிழாக இருக்காது. அதற்கு ஆனால் " அம்மா, அப்பா வைத்த பெயரை மாத்த இயலாது" விளக்கம் வேறு கொடுப்பார்கள்.

4. இரத்தத்தின் இரத்தமே, உடன்பிறப்பே என்று பாசமழை பொழிவார்கள். ஆனால் இரத்தம் சிந்தும்போது, கவிதையோ, கட்டுரையோ எழுதுவற்குமட்டும் பேனை திறப்பார்கள். அதிலும் கூட உன் மரண வேதனையைப் பார்க்கின்ற என்னால் இன்னும் 4 கவிதை எழுதத் தோணுது என்பார்கள்.

5. வெள்ளையனுக்கு எப்படிக் காலை நக்கலாம், அவனிடம் எப்படிப் பெயர் வாங்கலாம் என ஓடித் திரிவார்கள்.

6. ஈழப்போராட்டத்திற்கு பிற தளங்களில், முக்கியமாக இந்து மத அமைப்புக்களிடம் வந்தால் உடனே அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, ஆதரவு கிடைக்கவிடாமல் செய்வார்கள். அப்படிக் கிடைத்தால், பேனையை மட்டுமே திறக்கின்ற அவர்களுக்கு வேறு வேலை வந்திடும் என்ற பயம் போலும்.

7. பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றைக் கூடத் தெரியாமல் ஒப்பாரி வைப்பார்கள். கண்ணை மூடித் தங்களுக்குத் தெரிவது கூடத் தான் காட்சி என்பார்கள். கரிகாலன் கட்டிய கோவிலோ, கல்வெட்டோ போத்துக்கேசரால் தான் திட்டமிடப்பட்டது என்று நம்பும்படியாக எழுதுவார்கள்.

இங்கு எழுதப்பட்டிருக்கும் வியாக்கியானங்களின் சாரம்சம் இது தான்.

இந்து அமைப்புகள் எந்த விதமான நடவடிக்கைகளோ குரல் கொடுக்கும் முயற்சியிலோ இறங்காததற்கு காரணம் திராவிட அமைப்புகள் பகுத்தறிவு இயக்கங்கள். இந்து அமைப்புகளிற்கு அடிப்படையில் எந்த பொது நலனோ உணர்வோ ஈழத்தமிழரோடு இல்லை என்ற உண்மை வசதியாக முடிமறைப்பு.

திராவிட இயக்கங்கள் செய்த கவனயீர்ப்புப் போராட்டங்கள், கலைஞர் தனமனிதனாக இல்லாது முதலமைச்சராக இரங்கல் கவிதையை உத்தியோக பூர்வமாக வெளியிட்டதற்கும் இடையில் உள்ள வித்தியாசம் போன்றவற்றை கவனத்தில் கொள்ளாத புலம்பல்.

--

அதாவது தாங்கள் தலையில் தூக்கி வைத்தும் ஆடும் மதத்தினால் ஒற்றுமையைக் கொண்ட அமைப்புகள் எதையும் செய்யவில்லை என்பதற்கான காரணத்தையும் திராவிட இயக்கங்களில் தான் போடுகிறார்கள். அதேவேளை திராவிட இயக்கங்கள் இதுவரை செய்தவற்றையும் அது சுயஅரசியல் தான் வேறு ஒன்றுமில்லை என்று தீர்ப்பும் வழங்கி திருப்த்தி கண்டு கொள்வார்கள்.

இந்தியாவில இருக்கிற இந்து அமைப்புகள் ஏன் ஈழத்தமிழரிற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பதற்கு வைக்கப்படும் விளக்கம் மாற்றுக் கருத்துக்காறர் தமது தனிப்பட்ட கோபதாபங்கள் கடந்த கால மனக்கசப்புகளிற்காக ஒட்டுமொத்த போராட்டத்தையும் எதிர்பதற்கு கொடுக்கும் விளக்கம் போன்றது.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உவர் ஒருத்தர் இந்துசமயத்தை வசைபாடனும் என்றா மட்டும் தெளிவோட வந்திடுறார். மற்றும் படி.....??!

உவரின் சிந்தனைப்படி இந்து சமயம் தான் இந்தியா தமிழ் மக்களின் அவலம் குறிச்சு குரல் கொடுக்காம இருக்கக் காரணமாம். அப்ப ஏனாம் மற்ற மதத்தை கொண்ட நாடுகள் அல்லது மதச்சார்பற்ற நாடுகள் இன்னும் தமிழர்களுக்காக குரல் கொடுக்கேல்ல. பக்கத்தில வேற நாடுகள் இல்லையோ..??! :lol::lol:

Edited by nedukkalapoovan

தமிழீழ மக்கள் இந்து மதத்துக்காக சண்டை பிடிக்க இல்லை... அதாலை இந்துத்துவ தலைவர்களின் ஆதரவை கேட்க்கவும் இல்லை, மதசாயம் பூசி கொள்ள விரும்பவும் இல்லை...

ஆனா தமிழர் தலைமை எண்டு திராவிடர் தலைவர்களுக்கு எல்லாம் ஆதரவு கரம் வேண்டி கேட்டும் சிலரால்தான் கை கொடுக்க கொஞ்சம் மனம் வைத்து இருக்கிறார்கள்... ( நெடுமாறன் அண்ணா காங்கிரஸ், திருமா தாழ்த்த பட்ட தமிழர் தலைவர்)

கேட்டும் கொடுக்காத ஆதரவுக்கும், வேண்டாம் எனும் ஆதரவுக்கும் வித்தியாசம் இருக்குங்கோ...!

தமிழில் தேவாரம் பாடனும் என்றது வரவேற்கத்தக்கது. அதை மக்களின் கருத்துக்கணிப்போடு நாடு பூரா (தமிழகம் பூரா) சட்டமாக்க வேணுமே தவிர ஒரு கோவிலுக்கு என்று திணிப்பது தவறானது. அதுபோலவே இந்து மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் (ஒன்றில் இந்து மதத்தை எதிர்த்து அல்லது ஆதரித்து) என்பதும் மக்களின் அடிப்படை மத உரிமைகளை துஸ்பிரயோகம் செய்யும் செயலாகும்..! :lol:

நண்பர் நெடுக்க்ஸ் ..! தஞ்சை பெரிய கோவில் உட்பட சில கோவில்களில் தமிழில் அர்ச்சனை உண்டு (பூசகர் உங்களிடம் கேட்பார்.) சிதம்பரம் அப்படி அல்ல. அது ஒரு தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் உண்டு. கோவிலில் ஒரு பக்தியும் இல்லை, ஒழுங்கும் இல்லை. வெளிஊரில் இருந்து வருபவர்களிடம் காசு அடிப்பது தான் அவர்களது வேலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.