Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியர் சிவக்குமார் பயங்கரவாத புலன் விசாரணைக்காக சரண்

Featured Replies

சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை வழக்கறிஞர் ஒருவர் ஊடாக இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள , பயங்கரவாத புலன் விசாரணைக்காக ஒப்படைத்ததாக சுதந்திர ஊடக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுனந்த தேசப்பரிய அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று சிவக்குமார் அவர்கள் " பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் தம்மை தேடி வந்த போது தாம் இல்லாததால், தான் வரும் வரை தமது குடும்பத்தில் இருவரை அழைத்துச் சென்று கல்கிஸ்ஸை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருப்பதாகவும் , தன்னை விசாரணைக்கு வரும்படி அவர்கள் அழைத்திருப்பதாகவும்" கூறினார்.

சுனந்த தேசப்பிரிய அவர்கள் ,இன்று பிற்பகல் ,தான் வழக்கறிஞர் சுதர்சன குணவர்தன அவர்களோடு சென்று சிவக்குமார் அவர்களை பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் வசம் ஒப்படைத்ததாகவும், அப்போது தம்மோடு சிறீலங்கா சுதந்திர ஊடகவியாலாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூரிய மற்றும் செயலாளர் பொத்தல ஜயன்த ஆகியோர் உடன் வந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

நேற்றிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ajeevan.ch/

Edited by AJeevan

இவை தான் கொழும்பில ஏசியில இருந்து கொண்டு போராட்டத்தையும் மக்களையும் விடுதலை அமைப்பையும் கொச்சை படுத்தி சரிநிகராக எழுதினவை.

இப்ப தெரியும் எது உண்மை என்று.

ஆனால் ஒன்று சிங்களம் எதை செய்தாலும் இதுகள் திருந்தபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான அறிவுரை கிடைக்கும். மகிந்த சிந்தனைக்கு ஆதரவாகப் புலிகளைப் பலமாகத் தாக்கிக் கட்டுரைகள் எழுத வெளிக்கிடுவினம்.. தப்பிப் பிழைக்கிறதுக்கு வழிகள் இல்லையே..

மன்னிக்கவும், சரிநிகர் போராட்டத்திற்கு எதிராக எப்போதும் எழுதியது இல்லை. மாற்று கருத்துகளுகான பத்திரிகையாக தமிழில் வந்த பத்திரிகை அது.

அது மோசமான பத்திரிகை என்றால், அதில் எழுதிய D.சிவராம் அவர்கள் மற்றும் தொடர்ந்து ராதிகா குமாரசமிக்கு பதில் எழுதிய பெண் புலிகளும் (தமிழினி உட்பட) மோசமானவர்களா???

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சரிநிகர்" மாத ஏட்டின் ஆசிரியரும், சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளருமான பி.சிவகுமார் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து ஏற்கனவே கைது செய்யப்பட்ட "சரிநிகர்" மாத ஏட்டின் பணியாளர்கள் 6 பேரும் தொடர்ந்தும் பயங்கரவாத குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

மன்னிக்கவும், சரிநிகர் போராட்டத்திற்கு எதிராக எப்போதும் எழுதியது இல்லை. மாற்று கருத்துகளுகான பத்திரிகையாக தமிழில் வந்த பத்திரிகை அது.

அது மோசமான பத்திரிகை என்றால், அதில் எழுதிய D.சிவராம் அவர்கள் மற்றும் தொடர்ந்து ராதிகா குமாரசமிக்கு பதில் எழுதிய பெண் புலிகளும் (தமிழினி உட்பட) மோசமானவர்களா???

மாற்றுக்கருத்து உள்ளவர்கள் என்று ஆரம்பத்தில் விடுதலை அமைப்பை வசை பாடிதான் எழுதினார்கள்.

பிறகு சிவராம் போன்றவர்களின் கட்டுரைகளை போட்டு நடுநிலை ஆகிக்கொண்டதாகவே காணப்பட்டது. ஒரு காலத்தில் மாற்று இயக்கத்தினரின்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், சரிநிகர் போராட்டத்திற்கு எதிராக எப்போதும் எழுதியது இல்லை.

அப்படியென்றால் ஆதரவாக எழுதி வந்ததா?

சரிநிகர் பெயருக்கேற்ப நடுநிலையோடு செயற்பட்டதாக/செயற்படுவதாக சொல்லப்பட்டாலும் அவர்களின் அரசியல் பலம் பெரிதாக இருக்கவில்லை. எந்தவித தாக்கங்களையும் சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்படுத்தவில்லை (ஒரு குறிப்பிட்ட சிலரைத் தவிர). எனவே சாதாரண பொதுமக்களின் அரசியல் மீது எந்தவித தாக்கங்களையும் ஏற்படுத்தாமல் செயற்படுத்தப்படும் எந்த வேலைத்திட்டங்களும் வெறும் பொழுதுபோக்காகவே இருக்கும்.

மகிந்த அரசு சரிநிகர் பத்திரிகையாளர்களையே நெருக்கடிக்கு உள்ளாக்குவதன் மூலம் அரசிற்கு ஆதரவற்ற ஒரு சிலரைக்கூட மெளனியாக்க முனைகிறது. ஏற்கனவே சிங்கள/ஆங்கிலப் பத்திரிகைகளை தங்களின் கருத்தியலுக்கு அடிபணிய வைத்துள்ளது. தற்போது "நடுநிலையாக" தமிழிலும் எழுதுவோர் மீதும் கைவைத்துள்ளது. தப்பிப் பிழைக்க மகிந்தவின் சிந்தனைகளுக்கு ஒத்தூதுவது அல்லது மெளனமாக இருப்பது, இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவது என்பனவற்றைவிட வேறு தெரிவுகள் இல்லை. எல்லாமே மகிந்தவின் சிந்தனைக்கு வெற்றியாகவே அமையும்!

சரிநிகர் தமிழ் தேசியம் பற்றி மிக நீண்ட கருத்தாடலை நடத்தி வந்தது. எந்த தமிழ் பத்திரிகையும் எழுதவே அஞ்ச அல்லது விரும்பாத காலதிலேயே ராசிக் பற்றியும் புளொட் மோகன் பற்றியும் , வந்தாறுமூலை அகதிகளின் கொலையில் 'கண் புடுங்கல்' வியாபாரம் பற்றியும் எழுதிய பத்திரிகை. புலிகள் பற்றிய தகுந்த விமர்சனங்களை வெளியிட்டு வந்தது. முக்கியமாக முஸ்லிம் மக்கள் வெலியேட்றம் பற்றி ஆய்வுகுட்பட்ட விமர்சங்களை நடத்தியது

D.சிவராம் இடையில் வந்து சரிநிகரில் எழுத ஆரம்பிததவர் அல்ல. 'தாராகி' எனும் பெயரில் ஐலன்ட் பத்திரிகயில் எழுதும் போதே சரிநிகரில் எழுதியவர்

சரிநிகரின் ஆரம்ப கால ஆசிரியர் குகதாசன் பிறேமாதா காலத்தில் கடத்தப்பட்டு (1990') இன்று வரை காண்ணாமல் போய் உள்ளவர்.

நாம் எல்லோரயும் தூறோகிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் எவரும் இல்லாமலே எம் சமூகத்தை விட போகின்ட்றோம்....

சரிநிகரில் தாரகி சிவராம் கட்டுரை எழுதினால் சரிநிகர் போராட்டத்துக்கு ஆதரவு என்று கூற முடியுமா? அப்படியானால் ஐலண் பத்திரிகையும் போராட்டத்திற்கு ஆதரவா? அல்லது நடுநிலையுடன் உள்ள பத்திரிகையா?

சரிநிகர் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து மேட்டுக்குடிகளின் கருத்தை பிரதிபலித்தது. மக்களை விமர்சனங்கள் என்ற போர்வையில் குழப்பியடித்தது. போராட்டத்தில் இருந்து விலகிநின்ற மேட்டுக்குடிகளின் போராட்டத்தில் பங்கெடுக்க முடியாத காழ்புணர்ச்சியை கக்கிகொண்டிருந்தது. இதை மூடி மறைக்க அவ்வப்போது நடுநிலை வேசம் போட்டனர். அது மக்களால் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றே.

UTHR என்னும் அமைப்பு இலங்கை அரசின் படுகொலைகளை மூடிமறைக்க பாடுபடவில்லையா? அதற்காக 5 வீதம் இலங்கை அரசின் கொலைகளையும் மனித உரிமை மீறலாக காட்டி 95 வீதம் போராட்டத்தை சிதைக்க பாடுபடவில்லையா? அதுபோல் தான் இந்த சரிநிகரும். புத்தியீவிகள் என்ற மமதையில் தங்களின் நடவடிக்கைகளை எல்லாத்தரப்பு மக்களும் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்று கனவுகாண்பவர்கள் ஆனால் அந்தக்காலம் எல்லாம் எப்போது மலையேறிவிட்டது.

இப்போதைய விசாரணை என்ற செய்தியும் ஒரு நாடகமாக இருக்கலாம். இப்படி ஒரு நாடகம் போட்டால் ஏதோ அரசுக்கு எதிராகவும் தமிழ்மக்களுக்கு ஆதரவாகவும் செயற்படுவது போல் பிரபலமாகலம். எவனை நம்பினாலும் சரிநிகர் கோஷ்டியை நம்பமுடியாது. இது சரிநிகர் பத்திரிகையை படித்தவன் என்ற அடிப்படையில் எனது கருத்து.

UTHR

இந்த அமைப்புக்கு ஊடக விபச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்?

அப்படியா...

என் கேள்விகள்

1. எம்மிடம் மேட்டுக்குடி எனும் ஒரு பிரிவு உள்ளதா?. அவர்களில் எவெறெனும் புலிகளில் இணையவிலையா?

2. 'யுரி'எச்'சி'ஆர்' அமைப்புகும் சரிநிகரை நடத்திய 'மேர்ஜ் அமைப்புக்கும்' என்ன சம்பந்தம்? அல்லது நீஙகள் சம்பந்த படுத்த விரும்புகிரீர்களா?

3. 'மேர்ஜ் அமைப்பின்' தலைவரின் மகள் தான் 'சுனிலா அபேசேகரா' என்பது தெரியுமா? அவர் யார், எந்தளவிட்கு தமிழ் மக்கள் மீதான் மனித உரிமை மீறல் மீது உலக கவனத்தை ஒருமுக படுத்துகிறார் என அறிவீர்களா?

4.'ஐலண்ட்' பத்திரிகையின் ஆரம்ப வாசகர்கலிள் அனேகர் தமிழர்களே. அவர்களின் ஆயுத வியாபாரம் தொடங்கும் வரைக்கும் மிகுந்த ஆதரவு தமிழ் மக்களிடம் இருந்ததை அறிவீர்களா?

5. சரிநிகரின் தமிழ் தேசியதிற்கு எதிரான கருத்தியல் எது என்று சொல்லுன்கள்...ஆதாரம் வையுங்கள்..(எழுந்தமானமாக சொல்லாமல்)

6. எந்த கருத்து, செய்தி, விமர்சனம் தமிழ் தேசித்திற்கு விரோதமாக போனது?

7. சரிநிகர் ஆசிரியர் கைதாக காரணமாக இருந்த அவர்கலின் இணைய தள முகவரியாவது தெரியுமா? எந்த அடிபடையில் இது நாடகம் என்கிரீர்கள்? என்ன ஆதாரம் உங்களிடம் உள்ளது? புலம் பெயர் இராணுவ பத்தி எழுத்தாளர்களின் ஆய்வு போல..... யாவும் ஊகம் தானா?

....ஆகக் குறைந்தடு சில ஆதாடம்ஙளையாவது காட்டுவீர்க்ளென நம்பிக்கையில்......

நிழழி...

(சரிநிகர் பத்திரிகையாளன்)

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தமிழ் மக்களை அரசியல் ரீதியாக விழிப்படைய வைக்க சரிநிகர் முனைந்ததாகத் தெரியவில்லை. "படித்தவர்களையும்" "புத்திசீவிகளையும்" வாசிக்கவைக்கும் நோக்கில்தான் செயற்பட்டது/செயற்படுகின்றது. ஆரம்பத்தில் ‘புலி எங்களைப் போராட விடவில்லை’ என்று தொடங்கியதுதான் சரிநிகர். எல்லா மாற்று இயக்க காரங்களையும் கொண்டு இருந்தது. புலிகளை தீவிரமாக விமர்சித்தும் வந்தது. காலப்போக்கில் பலர் (சேரனும் ஒருவர் என்று கதை அடிபடுகின்றது) புலிகளைக் கருத்தியல்ரீதியாக ஆதரிப்பது எண்ட தளத்துக்கு வந்தாலும் போராட்டத்தை ஆதரித்து எழுதுவதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இருந்த பலர் தற்போது கருத்து வேறுபாடுகளால் விலகிவிட்டனர்.. எனவே நோக்கம் திசைமாறித்தான் உள்ளது (அல்லது பலர் "தெளிவு" பெற்றார்களோ தெரியவில்லை!).

எப்படியோ சரிநிகர் ஆசிரியரை விசாரித்து விட்டுவிட்டார்கள்.. என்ன அறிவுரை கிடைத்தது என்பது போகப் போகக்தான் தெரியவரும்..

  • கருத்துக்கள உறவுகள்

1996 இல் வந்த சரிநிகர் இதழ் 107 இலுள்ள குறிப்பு தற்போதும் பொருந்தும்..

எழுதாதே!

மூச்சுவிடாதே! உனது பேனாவை மூடிவை! அரசாங்கத்தை புகழ்ந்து மட்டும் எழுது. உனது கருத்துக்களை சுதந்திரமாக எழுதின் பொலிஸ் கூண்டுகளுக்குள் நீ இருப்பது நிச்சயம். அதுவும் நீ சிறுபான்மையினனாய் இருப்பின் இன்னும் நிச்சயம்!

பத்திரிகை, எழுத்துச் சுதந்திரத்தைக் காப்பதாகக் கூறிப் பதவிக்கு வந்த சந்திரிகாவின் அரசும் அதன் பொலிஸ் இராணுவமும் 'அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் போல்' செயற்படுகின்றது.

கொழும்பிலிருந்து வெளிவரும் "மூன்றாவது மனிதன்" ஆசிரியரும் அதனை அச்சிடுபவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சஞ்சிகையை அச்சிட்டுக் கொடுத்தவர் ஒரு நாள் வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பத்திரிகை ஆசிரியர் எம்.பெளஸர் பொலிஸாரின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

"எத்தனை பிரதிகள் அடிக்கிறாய்?"

"நீ புலி ஆதரவாளனா?"

"வெளிநாடுகளுக்கு எத்தனை பிரதிகள் அனுப்புகிறாய்?"

"பின் அட்டையில் உள்ள கவிதையை ஏன் எழுதினாய்?"

"தற்கொலைப் பெண் புலிகளை நீ ஆதரிக்கிறாயா?"

"பின் அட்டையில் உள்ள படத்தை புலிகள் தந்தனரா?"

"இலங்கையில் அப்படி என்ன கொடுமை நடக்கிறது?"

"இனங்கள் பிரிந்து போவதை நீ ஊக்குவிக்கின்றாயா?"

போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. பத்திரிகை ஆசிரியரிடமும் அச்சிட்டவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

இச்சம்பவங்கள் இலங்கைக்குப் புதியன அல்ல. எதை எழுதினும், எதைப் பார்ப்பினும் எங்கும் எதிலும் புலிகள். புலிகள்!

சுதந்திரமாக நடமாட முடியாது! சுதந்திரமாக எழுத முடியாது. ஒன்று நீ புலியெனக் குற்றம் சாட்டப்படுவாய். அல்லது புலியாக ஆக்கப்படுவாய்!

எழுத்தாளர்களும் கலைஞர்களும் துப்பாக்கிகளுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டதாக வரலாறு இல்லை. தோற்றதாகவும் வரலாறில்லை. அடக்குமுறை அரசும் அதன் இராணுவமும் பொலிசும் எப்போதும் போல் இங்கும் வரலாற்றில் தோற்றுத்தான் போலும்!

- அம்ரிதா -

கடைசிப் பந்தியை மகிந்த பொய்யாக்குவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

சரிநிகரில் இருந்து சில பகுதிகள்

http://rekupthi.blogspot.com/2007/04/blog-post_12.html

http://sarinigarsara.blogspot.com/2006_03_01_archive.html

Edited by nunavilan

கைது செய்யப்பட்டது பத்திரிகையாளர், அதுக்குள்ளும் நமக்குள்ளே கருத்து வேற்றுமை இருக்கும் போது, பத்திரிகை என்றாலும் அதில் மாற்று கருத்து இருக்கத்தான் செய்யும்.

நுணா,,,,

முதல் 'லின்க்' சரிநிகரினதா அல்லது 'சமர்' சஞ்சிகையினதா? சமர் வேறு, சரிநிகர் வேறு,,,

*சரிநிகர் இந்திய ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்து எழுதி வந்த பத்திரிகை.

* சேரன் ஆரம்ப காலத்தில் ஆசிரியராக இருந்தவர்... ஆனால் அவை கனடா சென்ற (வந்த) பின் அவரின் புலி எதிர்ப்பு 'அரிப்பு'க்கு சரிநிகர் சரியாக வராமல் ஒதுங்கி கொண்டார்

*மூன்றாவது மனிதன் ஆசிரியர் பிரசுரித்த புகைப்படம் உண்மையிலேயே தற்கொடை போறாளியின் புகைப்படம் (அவ் ஆசிரியர் இபோது லண்டனில்)

*சரிநிகர் எல்லா மட்ட வாசகர்களை கொண்டது. ஆனால் மிக ஆழமான நடை கொண்டு இருந்தத்து. ஒரு தமிழ் சினிமாவிற்காக 3 மணி நேரம் செலவிடும் பலர் ஒரு தரமான கட்டுரையை நேரம் செலவழித்து புரிந்து கொள்ள தயங்கும் போது தான் அது கடினமாகின்ட்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி, சிவசேகரம் போன்றவர்களிடம் 'மித்திரனில்' /'விகடனில்' எழுதும் தரத்தை எதிர்பார்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

Nizhali, அவ்விணைப்பு தவறாக என்னால் இணைக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
சரிநிகர் பத்திரிகை என்பது படித்த மேதவி மேட்டுக்குடிகளின் பத்திரிகை. அது எப்போதும் அடித்தட்டு மக்களை மதித்த வரலாறு கிடையாது. ஈழத்தமிழர்களில் அடிமைக்குணம் என்பது மேட்டுக்குடிகளிடத்தும் புத்திஜீவிகளிடத்துமே அதிகம் உள்ளது. இந்த தரப்புகள் எப்போதும் தமிழர் தரப்பின் பிரச்சனைகளையே விமர்சித்துக்கொண்டிருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.