Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுது மாத்தையாவும் சுடுபாணும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அட என்னைப் போல வேற யாரோவும் செய்யுறாங்க...ம்ம்ம் :)

சாஸ்த்ரியின் ஊர் நினைவும் வேர்நினைவும் புத்தகமாக வெளிவருகிற நாளை எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் புத்தகமாக வெளியிடுவதென்றால் நானே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்யலாம். இளமையை மீண்டும் ஒருமுற வாழ்ந்துபார்க்க உதவும் எழுத்துக்கள். மீழ வாழ்ந்த இளமை நினைவுகள் எங்கள் எழுத்துகளில் வந்தால் கொப்பி பண்ணியதாகச் சொல்ல மாட்டீர்கள் தானே.

காணிக்குள்ள என்ன இருந்தது?

சுண்டல், ஒரேயொரு புளியமரம். புளியமரத்தில் என்ன இருந்தது என்று கேட்காதீர்கள். இருந்ததை மம்மல் பொழுதில் கண்டதோடு காணி விற்றாகிவிட்டது. வாங்கியவர் கண்டாரோ தெரியவில்லை.

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்த்ரியின் ஊர் நினைவும் வேர்நினைவும் புத்தகமாக வெளிவருகிற நாளை எதிர்பார்க்கிறேன். தமிழகத்தில் புத்தகமாக வெளியிடுவதென்றால் நானே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்யலாம். இளமையை மீண்டும் ஒருமுற வாழ்ந்துபார்க்க உதவும் எழுத்துக்கள். மீழ வாழ்ந்த இளமை நினைவுகள் எங்கள் எழுத்துகளில் வந்தால் கொப்பி பண்ணியதாகச் சொல்ல மாட்டீர்கள் தானே.

உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் ஜெயபாலன் ஆனால் எனக்கு புத்தகம் அடிக்கிற யோசனை எல்லாம் இல்லை. புஸ்பராஜாவின் போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புத்தகத்தில் அவர் எழுதிய பல தவறான தகவல்கள் அல்லது அவர்பற்றிய மிகைப்படுத்தலை சுட்டிக்காட்டி போராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் என்றுநான் எழுதிய வற்றை மேலும் பல தகவல்களுடன் சேர்த்து புத்தகமாக வெளியிட ஒரு யோசனை உள்ளது பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் ஜெயபாலன் ஆனால் எனக்கு புத்தகம் அடிக்கிற யோசனை எல்லாம் இல்லை. புஸ்பராஜாவின் போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற புத்தகத்தில் அவர் எழுதிய பல தவறான தகவல்கள் அல்லது அவர்பற்றிய மிகைப்படுத்தலை சுட்டிக்காட்டி போராட்டத்தில் எனது(பொய்) சாட்சியம் என்றுநான் எழுதிய வற்றை மேலும் பல தகவல்களுடன் சேர்த்து புத்தகமாக வெளியிட ஒரு யோசனை உள்ளது பார்க்கலாம்.

நன்றி சாஸ்திரி. உங்கள் நினைவுகள் பதிவாகவேணும் என்பதே இன்னும் என் ஆலோசனை. புலம்பெயர்ந்த தமிழர்களின் சயசரித பதிவுகளில் பிறந்த நாடு பற்றிய உங்கள் பதிவுகளும் புகுந்த நாடு பற்றிய பநண்பர் பொ.கருணாகரமூர்த்தியின் (பெர்லின் இரவுகள்) பதிவுகளும் சிறந்துள்ளது. உங்கள் வரலாற்று விமர்சனத்தை வாசிக்க காத்திருக்கிறேன்.

அன்புடன்

ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா இந்தப்பாண் இருக்குதே எதோட வேண்டும் என்றாலும் சாப்பிடலாம்.அப்படி இரு சிறப்பு பாணுக்கு.ஊரில இருக்கிற மீன் ரின்னில நல்லா பச்சைமிளகாய் வெங்காயம் எல்ாம் போட்டு ஒரு வம்பல் செய்து அதோடு பாணைச் சாப்பிட்டால்.ம்ம்ம் எழுதவே வாயூறி விசைப்பலகை எல்ாம் :unsure::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரியார் உங்கடை கதை பழசையெல்லாம் கிளறிவிட்டுட்டுது :rolleyes:

இருந்தாலும் பாணுக்குள்ளை இருக்குற வண்டு புழுக்களை அரைகுறையாய் நுள்ளி எறிஞ்சு போட்டு அமுக்குற சுகமே தனி :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் உங்கடை கதை பழசையெல்லாம் கிளறிவிட்டுட்டுது :(

இருந்தாலும் பாணுக்குள்ளை இருக்குற வண்டு புழுக்களை அரைகுறையாய் நுள்ளி எறிஞ்சு போட்டு அமுக்குற சுகமே தனி :D

ஒய் கு.சா நீர் சங்கக் கடையிலை கூப்பன்புள்ளிக்கு பாண் வாங்கியிருக்கிறீர் எண்டு விளங்குது. சங்கத்திலை அவங்கள் போடுற பாணிலைதான் வண்டு பூச்சியள் எல்லாம் கனக்க இருக்கிறது.நான் மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கம் போடற பாண் வாங்கிறேல்லை வாங்கினால் சுது மாத்்தையாட்டை அடுத்ததாய் பண்டத்தெருப்பு(பண்டத்தரிப்ப

Edited by sathiri

பாணில வண்டு இருந்தாலும் பரவாயில்லை, அளவெட்டி பேக்கரியில செய்த பாணில மூக்கில இருந்துவாற .... காஞ்சு போயிருந்தது, அன்றில இருந்து என்ர அக்கா பாண்சாப்பிடுவதில்லை ஆனால் நான் இப்பவும் சாப்பிடுறனான். :lol::rolleyes:

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

என்டாலும் உந்தச் சப்பை வெதுப்பியைச்(ரோஸ் பாண்) சாப்பிடுகிற சுகமே தனி சுகம். சிட்னிக்கு வந்தாலும் வெதுப்பியினை வாங்கிச் சாப்பிடக்கூடியதாக இருந்தாலும் உந்தச் சப்பைப் பாணைக் (வெதுப்பியை) காணமுடியாமல் இருக்கிறது. ரொன்டோவில வாங்கிச் சாப்பிட்டேன்.

சாத்திரி குறிப்பிட்ட கொத்தளாவளை வெதுப்பகத்தில் வாங்கி உண்ட அனுபவமிருக்கிறது. இலங்கையினை விட்டு இந்தியாவில் கொஞ்சக்காலம் வசித்த போது ரோஸ் பாண் சாப்பிடும் அனுபவம் கிடைக்கவில்லை. ஆனால் கொட்டிவாக்கம் பகுதியில் ஈழத் தமிழர் ஒருவரிடமிருந்து பெறலாம் என்று கேள்விப்பட்டு அங்கு சென்று வாங்கிச் சாப்பிட்ட அனுபவம். இந்தியா இராணுவகாலத்தில் இணுவில் கந்தசுவாமி கோவிலில் 45 நாட்கள் மேற்கு இணுவில் மக்களுடன் அகதியாக இருந்தபோது ,அங்கு வந்த வெதுப்பகக்காரரிடமிருந்து 4மடங்கு விலையில் வாங்கிச் சாப்பிட்ட அனுபவமும் இருக்கிறது.

சுது மாத்தையாவும் சுடுபாணும்.பாண் சாப்பிடுற விசயத்திலை நாங்கள் ஓரளவுபரவாயில்லை ஆனால் பாணும் பருப்புக்கறியும் இல்லையெண்டால் சிங்களவர் உயிரை விட்டிடுவாங்கள்.

இது தமிழர்களது பார்வை சாத்திரியாரே!

kiribathaq7.jpg

சிங்களவர்களது முக்கிய உணவு கிரிபத் ( தேங்காய் பால் கலந்த வெள்ளை அரிசி சோறு )

மற்றும் மிரிஸ் சம்பள் (அரைத்த மிளகாய் சம்பல்).

அல்லது நெத்தலி சம்பள்

சிகப்பு கிழங்கு

மற்றும் கெவும் (கொண்டை பணியாரம்)

இவைதான் முக்கியமான உணவு.

பாண்

கொழும்பில் வாழும் சிங்கள மக்களது உயர்வான உணவு முறை.

போர்த்துகேரால் அறிமுகமானது.

போர்த்கேயர் கொழும்புக்கு தரையிறங்கிய போது

கோட்டை இராஜதானியில் இருந்த அரசனிடம் போய்

மக்கள் இப்படி சொன்னார்கள்:

"கல்லை (பாண்) சாப்பிட்டு இரத்தம் (வைன்) குடிக்கும்

வெள்ளை மனிதர்கள் கடலோரத்தில் தரையிறங்கி நிற்கிறார்கள்" என்று.

இது சரித்திரம்.........இவற்றை மாற்ற யாராலும் முடியாது.

இப்போது கூட சிங்கள கிராமங்களிலும்

உயர் சிங்கள மக்களதும்

முக்கிய உணவு பாண் இல்லை.

சிறிமா காலத்தில் மரவெள்ளிக் கிழங்காகியது.

கொழும்பு கடைகளில்

கால் இறாத்தல் பாணும் பருப்பும் ( அதிகமானால் 50சதம்)

தற்போதைய மெக்டொனால் போன்ற பாஸ்ட் பூட் அந்நாளில்..... :icon_mrgreen:

தமிழர்களை சிங்களவர்கள்

பனங்கொட்டை : தோசை வடை என்றது போல

( பனையால் கிடைத்த பனங்கிழங்கு : ஒடியல் : சக்கரை : கள்ளு.......போன்றவற்றை உணவுக்காக எடுத்ததால்)

சிங்களவர்கள் கொழும்பு கடைகளில் குறைந்த விலை உணவாக பாண் சாப்பிட்டதால்

இப்படி சிங்களவர்களை அழைத்தார்கள் :icon_mrgreen:

அதற்கும் காரணமுண்டு

தமிழர்கள் தோசைக் கடைகளை திறந்த போது

அவர்கள் தமிழர் சாப்பாட்டு கடைகளுக்கு போகாமல்

சிங்களவர்களது சாப்பாட்டு கடைகளில் போய் சாப்பிட்ட கோபத்தால்

தமிழ் சாப்பாட்டு கடைக்காரர்கள்

தமிழர்கள் இவ் வார்த்தைகளை பாவித்தார்கள்.

பழையவற்றை மீட்டும் போது

பலதையும் எழுதியுள்ளீர்கள். :icon_mrgreen:

அதை நாமே தொடரும் போதும்

அந்த வார்த்தைகளை மறக்கவில்லை பார்த்தீர்களா?

இன்னொரு முக்கிய விடயம்

தமிழர்களே

தமிழர் கடைகளில் சாப்பிடாமல்

சிங்களவர் கடைக்கு போனதுக்கு காரணம்

மிஞ்சிய சாப்பாடுகளை

தோசைக் கடைகளில்

வடை : முறுக்கு : போன்ற அவதாரங்களாக்கிதை சகிக்க முடியாமலேயாகும் :lol:

கே.எஸ். பாலசந்திரன் அவர்களது தனி நடிப்பில் அத்தனை அவதாரமும் குறித்து

வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தார். :lol::):lol:

இது அது.........

எதையாவது எழுதும் போது

அது குறித்த தேடல் நமக்கு முதலில் தேவை

தவறானவை ஒரு போதும் பதிவுகளாகக் கூடாது.

அதில் கவனம் தேவை

நன்றி!

Edited by AJeevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் உங்கடை ஆதங்கம் விழங்கிது என்னுடைய கதையள் எல்லாமே என்னுடைய அனுபவங்கள் மற்றது என்னுடைய பார்வையிலேயே எழுதப்படுறதாலை சில நேரம் மற்றவர்கள் பார்வைக்கு பிழையாக இருக்கலாம். அல்லது உடன்படாமல் இருக்கலாம். மற்றபடி எனக்கு கிராமத்து சிங்களவர்களுடனான அனுபவங்கள் குறைவு நான் இருந்ததெல்லாம் வத்தளை பகுதிகளில் அடுத்ததாய் என்னுடைய சிங்கள நண்பர்கள் பெரும்பாலும் பேகர்(போத்துக்கல் சிங்கள கலப்பினர்) மற்றது வத்தளை பகுதிகளில் கிறீஸ்தவ சிங்களவர்கள்

சிங்களவரின்ரை பேக்கறிகயள் எரிஞ்சது.அந்த நேரம் புளொட் எண்டொரு இயக்கம் இருந்தது கனபேருக்கு ஞாபகம் இருக்கும். அவையள் சிங்களவர் விட்டிட்டு போன கன பேக்கறியளை எடுத்து தாங்கள் நடத்திச்சினம்.அதாலை அந்த இயக்கம் என்ன நோக்கத்திற்காக தங்கடை இயக்கத்தை தொடங்கிச்சினமோ அந்த நோக்கத்தின்ரை ஒரு பகுதிநிறைவேறிச்சிது.

ஏன் சாத்து உங்களுக்கு இந்த கொலை வெறி...??

இதவிட அவங்களை சோத்து பாசல் எண்டு நீங்கள் நேரடியாகவே சொல்லி இருக்கலாம்... :huh:

அஜீவன் உங்கடை ஆதங்கம் விழங்கிது என்னுடைய கதையள் எல்லாமே என்னுடைய அனுபவங்கள் மற்றது என்னுடைய பார்வையிலேயே எழுதப்படுறதாலை சில நேரம் மற்றவர்கள் பார்வைக்கு பிழையாக இருக்கலாம். அல்லது உடன்படாமல் இருக்கலாம். மற்றபடி எனக்கு கிராமத்து சிங்களவர்களுடனான அனுபவங்கள் குறைவு நான் இருந்ததெல்லாம் வத்தளை பகுதிகளில் அடுத்ததாய் என்னுடைய சிங்கள நண்பர்கள் பெரும்பாலும் பேகர்(போத்துக்கல் சிங்கள கலப்பினர்) மற்றது வத்தளை பகுதிகளில் கிறீஸ்தவ சிங்களவர்கள்

சாஸ்திரியாரே

இது ஆதங்கம் அல்ல. யதார்த்தம்.

கதை என்றாலும் இது உண்மைதானே?

யாவும் கற்பனை இல்லையே?

தமிழனை சிங்களவன் என்று எப்படி உடன்பட முடியாதோ

சிங்களவனை தமிழன் என்றும் உடன்பட முடியாது.

நான் சிங்களத்தில் படித்தவன்

ஆனால் நான் சிங்களவனில்லை!

நம் குழந்தைகள் இந் நாடுகளில்

அந்த நாட்டு மொழியை அவர்கள் போலவே பேசும்

அதற்காக அவர்கள் அந்த நாட்டுக்காரராக முடியாது.

அவர்கள் அந்நாட்டு குடியுரிமையை கூட பெறலாம்.

ஆனால் ஒரிஜின் நம் நாடுதானே?

இதற்கு உடன்பட முடியுமா?

நாம் சில யதார்த்தங்களை நமக்கு ஏற்ற விதத்தில் புனையலாகாது. அது தவறு.

சிங்களவர்களில் உடரட்ட சிங்கள ( கண்டி சிங்களவர்) பகத்த ரட்ட சிங்கள ( கரையோர சிங்களவர்) என இரண்டு பகுதியினர் உள்ளனர்.

நான் மேலே சொன்ன உணவு கூட கண்டி சிங்கவருடைய உணவு முறை மட்டுமே.

கரையோர சிங்களவரது உணவு பத்தல (வத்தாளை கிழங்கு அல்லது சீனி கிழங்கு : றோஸ் நிறமாக இருக்கும்)நமக்கு இராசவள்ளி கிழங்கு மாதிரி

கொஸ் : தெல் : பொலோஸ் ( பலா : ஈரப்பலாக்காய்) போன்றவை இவை நமது மரவெள்ளிக் கிழங்கு : பனங் கிழங்கு மாதிரி

பேகர் அல்ல பர்கர் Burgher

போர்த்துகேய கலப்பினர் பர்கர் அல்ல.

ஒல்லாந்தர் மற்றும் ஒல்லாந்த கலப்பினர்தான் பர்கர் ( ஏனைய ஆசிய நாடுகளில் யுரேசியன்.)

The word 'Burgher' comes from the Dutch/German word Vrij Burgher, meaning "free citizen" or "town's dweller"

அதைத்தான் டச்சில் (கொலண்ட் பாசையில்) பர்கர் என்றும்

ஜெர்மன் மொழியில் பூர்கர் (Bürger)

அதாவது நாட்டின் குடியுரிமையாளன் என்பார்கள்.

சிங்களவரோடு கலந்தவர்கள் பர்கர் அல்ல.

அவர்களை சப்பத்து லங்சி என்பர்

அதாவது சப்பாத்து கரப்பான் என்பார்கள்.

இவை உங்களுக்கு எந்தளவு தெரியுமோ தெரியாது?

நீங்கள் சேர்ந்து இருந்த இடத்தில்

வாழ்ந்த இடத்தில் நடந்தவற்றையே

ஏதோ இருந்ததாம் என்று எழுதுகிறீர்கள்.

இக் களத்தில் இருக்கும் பலரது பின்னணி பலருக்கு தெரியும்

அதை நான் எழுத விரும்பவில்லை.

நம் மூதாதையர் உண்மைகளை மறைத்த காரணத்தால்தான்

நாம் இந்தியாவில் இருந்து வந்த மக்களாக

உலகத்தின் கண்களுக்கு காட்டப்பட்டோம்.

அன்று வன்னியன் இருந்தான்

இராஜராஜ சோழன் இருந்தான் என்கிறோம்.

தவறு இழைத்தோரை தவறிழைத்தனர் என சுட்டிக் காட்டுவதில் தவறில்லை.

ஆனால் சரித்திரங்களை மறைப்பது

மாபெரும் தவறு.............

அடுத்து யாரோ சொன்னதை கேட்டு

நாம் எழுதுவதும் தவறு!

இராணுமே இல்லாத நாடு சுவிஸ் என்று

வைரமுத்து சொன்னதும் தவறு

சுவிஸ் பேசுவேன் என தமிழ் திரைப்படத்தில் ரம்யா சொன்னதும் தவறு

சுவிஸில் இராணுவம் உண்டு

ஆனால் யுத்தத்துக்கு போவதில்லை.

சுவிஸ் குடியுரிமை பெற்றவர்கள் 18 வயதுக்கு பின்னர்

கட்டாய இராணுவ பயிற்சிக்கு செல்ல வேண்டும்.

(ஒரு சில காரணிகளால் சிலருக்கு விதி விலக்கு உண்டு)

சுவிஸில் ஜெர்மன் : இத்தாலி: பிரென்ஞ் மற்றும் ரொமானிஸ் என 4 மொழிகள் உண்டு.

சுவிஸ் என ஒரு மொழி இல்லை.

இது போல நாம் சொல்வதை

நம் குழந்தைகளும் விபரம் தெரியாதவர்களும்

நம்பி விடுவார்கள்.

எனவே உங்கள் எழுத்துக்கள் தவறு இழைக்கக் கூடாது.

உங்கள் நிலை அப்படியானது!

நன்றி!

ஏன் சாத்து உங்களுக்கு இந்த கொலை வெறி...??

இதவிட அவங்களை சோத்து பாசல் எண்டு நீங்கள் நேரடியாகவே சொல்லி இருக்கலாம்... :huh:

ஆரம்பத்தில் இதிலிருந்த தலைவர்கள் யார் என்று

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேளுங்கள்!

விடை கேட்டால் பேசவே மாட்டீர்கள்.

புதிய புலிகள் என்று ஒரு இயக்கம் இருந்ததாம்

அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் இருந்தார்களாம்

அதிலிருந்த பலர் இல்லையாம்

ஒருவர் மட்டும் இன்னும் அதே வேகத்தில்....

அவர்கள் யாரென்று தேடினால் விடை கிடைக்கும்..........

நாமெல்லாம் ஒன்றுபட வேண்டும் எனும் நேரத்திலும்

நமது பொது எதிரியை விட்டு

நமக்குள்ளே இன்னும் பிரச்சனை??? :(:D

சேர்ந்து சாப்பிட்டவங்களுக்கிட்டயே

கேள்வி கேட்கிறீங்களே தயா?

Edited by AJeevan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விளக்கத்திற்கு நன்றிகள் அஜீவன் நான் முன்னரே எழுதியது போல எனக்கு சிங்கள் மக்களின் கலை கலாச்சாரம் அல்லது அவர்களின் வரலாறு பற்றிய அறிதலில் அவ்வளவு ஆர்வம் இல்லை ஆனால் நிகழ்கால நான் கண்டவற்றின் பதிவுகளேதான் என்கதைகள் நான் கொழும்பில் நின்ற காலங்களில் மற்றும் நாட்டின் சூழ்நிலை விலை வாசி ஆகியவற்றால் பெரும்பாலான சிங்களவர்களின் உணவு பாணும் பருப்பும்தான்.அதே போல ஈழ விடுதலைப்போராட்ட இயக்கங்கள் பற்றிய அறிதல் மற்றும் அனுபவங்கள் நிறையவே உண்டு 83 கலவரத்தின் பின்னர் யாழ் குடாவில் இருந்த பெரும்பாலான பேக்கறிகளை புளொட் இயக்கம் எடுத்து நடத்தியது என்பது யாழ் குடாநாட்டு மக்கள் எல்லருக்குமே தெரிந்ததுதான்.அந்த நிகழ்வைமட்டுமதான் எழுதினேன் மற்றபடி இங்கு புளொட் இயக்கத்தின் தோற்றம் பரிவு வளர்ச்சி அழிவு என்று முழு நடவடிக்கைகளையும் விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்லது அப்பிடி இன்னமும் எழுதிக்கொண்டிருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. :huh:

ஆரம்பத்தில் இதிலிருந்த தலைவர்கள் யார் என்று

உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கேளுங்கள்!

விடை கேட்டால் பேசவே மாட்டீர்கள்.

புதிய புலிகள் என்று ஒரு இயக்கம் இருந்ததாம்

அதில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் இருந்தார்களாம்

அதிலிருந்த பலர் இல்லையாம்

ஒருவர் மட்டும் இன்னும் அதே வேகத்தில்....

அவர்கள் யாரென்று தேடினால் விடை கிடைக்கும்..........

நாமெல்லாம் ஒன்றுபட வேண்டும் எனும் நேரத்திலும்

நமது பொது எதிரியை விட்டு

நமக்குள்ளே இன்னும் பிரச்சனை??? :huh::(

சேர்ந்து சாப்பிட்டவங்களுக்கிட்டயே

கேள்வி கேட்கிறீங்களே தயா?

எனது அண்ணா TEA எனும் தம்பாபிள்ளை மகேஸ்வரனின் அமைப்பில் இருந்தவர்... முன்னர் LTTE யை மக்கள் T எண்டு அழைப்பது வழக்கம்... அப்படி TEA ல இருந்த எனது அண்ணாவை ஊரில இருந்த PLOTE காறர் ( எல்லாம் தெரிந்த சொந்தமும் தான்) புலி எண்டு இளுத்து போட்டு அடிச்சதை என்னால மறக்க முடியவில்லை...!!

அடிச்ச கூட்டத்துக்கு TEA க்கு LTTE க்கும் வித்தியாசம் தெரிய இல்லை.. முதல்நாள் வீடுவீடா எங்கட வீட்டுவளியவும் வாங்கின பாசலும் ஞாபகத்துக்கு வர இல்லை...!! அப்ப எனக்கு தமிழீழம் சாத்தியமோ எண்ட கேள்வி எல்லாம் வந்தது...!!

எதுவுமே செய்யாமல் ஆள் கணக்குக்கு சேர்த்து வைக்கிறதுக்கு பேர் போராட்டம் இல்லை....

கப்பலிலை ஆயுதம் வருகுது எண்டு சொல்லி கொண்டு திரிஞ்ச ஆக்களை எல்லாம் ஞாபகம் வைத்து இருக்கிறேன்...!! கோட்டையிலை இருந்து ஆமி வெளிக்கிடும் போது யாழ்ப்பாண நகரிலை இருந்து தப்பி ஓடும் ஆக்களையும் பாத்து இருக்கிறன், (அப்ப மறிச்சு சண்டை போட கோட்டையை நோக்கி ஓடின பெண் போராளியளையும் பாத்து இருக்கிறன்)... , யாழ் நகருக்கை செல் அடிச்சா பதுங்க ஆஸ் பத்திரிக்கு முன்னாலை மட்டும் அரன் அடிச்ச ஆக்களையும் பாத்து இருக்கிறன் (கோட்டையை சுத்தி போட்ட காவல் அரண்களையும் பாத்து இருக்கிறன்) ...!!

நாங்கள் தான் முதல் தலைவர்கள் எண்டதையும் விட எதுவும் செய்யாமல் இருந்து குலைந்து போனவை நாங்கள் எண்டு வேணும் எண்டா பெருமை படலாம்... எல்லாரையும் போல எங்களுக்கு புலி பல்லை புடுங்காம விட்டா பாஞ்சு இருப்பம் எனும் வீரக்கதைகள் கேட்டு அலுத்து போச்சு...!!

இயலாமை , கையாலாகாத்தனம் என்பதை எல்லாரும் காரணங்கள் சொல்லி மறைக்க முயல்வதை ரசிக்கலாம் பாராட்ட முடியாது....!!

அந்த நிகழ்வைமட்டுமதான் எழுதினேன் மற்றபடி இங்கு புளொட் இயக்கத்தின் தோற்றம் பரிவு வளர்ச்சி அழிவு என்று முழு நடவடிக்கைகளையும் விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்லது அப்பிடி இன்னமும் எழுதிக்கொண்டிருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை. :huh:

PLOTE அமைப்பால் எமது போராட்டத்துக்கு ஏற்பட்ட இளப்பு மறக்க பட கூடியது அல்ல...!! பண்டிதர் அண்ணா முதல் நிறைய காட்டி கொடுப்புக்களுக்கு போராட்டம் விலை கொடுத்தது...!!

இந்திய இராணுவம் போன பின்னர் ஈழப்போரின் ஆரம்ப பகுதியில் பொருளாதார தடை இலங்கை படைகளால் ஏற்படுத்த பட்ட போது வவுனியாவின் வளியால் , வன்னி ஊடாக போன பாரவூர்திகள் கடத்தப்பட்டன, கப்பம் அறவிடப்பட்டன...! எல்லாம் PLOTE யின் கைவரிசை...!!

அந்த வளியால் வந்த மூத்தாட்டி ஒருவரிடம் கேட்டார்களாம் "லக்ஸ்பிறே" ( பால்மா) வில புட்டு அவிக்க முடியுமோ எண்டு...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.