Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்.

Featured Replies

ஈழவன் இணைத்துள்ள படங்கள் எல்லாம் பெரியார் தொண்டர்கள் புதுதில்லி பாராளுமன்றம் எதிரில் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் எடுக்கப்பட்டவை......

இதில் கலந்து கொண்டுள்ள கொளத்தூர் மணி 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்

எனது நண்பனும் இதில் கலந்து கொண்டிருந்தான்

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்பது சகோதரன் ஈழவனுக்கு நன்கு தெரியும் ஆனாலும் நாங்கள் பெரியரை மதிக்கிறோம் காரணம் ..... வைக்கத்தில் அவர் தாழ்த்தப்பட்டோரை கோவிலுக்குள் தானே அழைத்துச்சென்றார்.....

ச்

சிலருக்கு பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகாகவே பெரியாரை எதிர்கின்றார்கள் பெரியாரின் மற்றைய கொள்கைகள் இவர்களுக்கு புரிவதில்லை அப்படியானவர்கள் இன்னும் சாதிய கொள்கையில் இருந்து மீள முடியாதவர்களோ என எண்ணவும் தோன்றுகின்றது.நானும் கடவுள் நம்பிக்கை உடையவன்

யூதர்களை பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டும் எம் தமிழினம் மட்டும்தான்

முஸ்லீம்,கிறிஸ்தவன்,இந்து,நா

Edited by ஈழவன்85

  • Replies 107
  • Views 10.3k
  • Created
  • Last Reply

வெற்றிவேல் தமிழகத்தில் பெரியார் தொண்டர்கள் எப்போதாவது ஈழப்போராட்டததை...இந்துத்துவ எதிர்ப்போடு தொடர்பு படுத்தியிருந்தனரா????

அது வேறு இது வேறு ..... இந்துத்துவத்தை எதிர்ப்பவர்கள் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது தவறா???

ஈழ ஆதரவு போராட்டங்களில் எப்போதாவது மத எதிர்ப்பு கடவுள் மறுப்பு பற்றி பேசப்பட்டுள்ளதா???

அல்லது இந்துத்துவா பற்றியாவது எதிர்த்துப்பேசுயுள்ளனரா???

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயைக்கூட அவரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலை காரணமாக பெரியார் தொண்டர்கள் விமர்சிப்பதில்லை என்ற உண்மையாவது தெரியுமா உங்களுக்கு :wub:

ஐயா வேலவரே! இங்கே களத்தில் எதற்கெடுத்தாலும் இந்து மத துவேசம் கக்கும் சிலரின்

கருத்துக்களை நீங்கள் வாசிப்பது இல்லை போல் உள்ளது. அவர்களுக்கு தான் பதில் அளிக்கப்பட்டுள்ளதே தவிர திரு.ஈ.வே.ராவையோ அவர் கொள்கையை சேர்ந்தவர்களுக்கோ எதிரான விமர்சனம் இல்லை நமது பதில் . இன்னும் சொல்லப் போனால் எனது கருத்துக்களில் எவரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் பழக்கமும் கிடையாது.

திரு. ஈ.வே.ரா அவர்களுடன் எனக்கு கொள்கை முரண்பாடு உள்ளது. மறுக்கவில்லை! ஆனால் அதற்காக அவரை எந்த இடத்திலும் நான் தரக்குறைவாக விமர்சித்ததில்லை. யாழ் களத்தில் நான் வைத்துள்ள 600 க்கு மேற்பட்ட கருத்துக்களிலும் திரு ஈ.வே.ரா வை தரக்குறைவாக விமர்சித்தது கிடையாது.

நீங்கள் சொல்கின்ற திராவிட கழகங்களில் உயர் பொறுப்புகள் வகிப்பவர்களில் சிலர் நமது நெருங்கிய தோழர்கள் தான்.

ஈழப்போராட்டம் என்பது சர்வதேச தளத்தில் ஒரு பரந்து பட்ட களத்தில் முன்னெடுத்து செல்லப்பட வேண்டிய போராட்டம். அப்படியான ஒரு போராட்டம் வெற்றி பெறுவதற்கு பல் வேறுபட்ட மத நம்பிக்கைகளையும், சமூக, பொருளாதார பின்னணி கொண்டவர்களையும் அணைத்து செல்ல வேண்டியது அவசியம். ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் நின்று கொண்டு தங்கள் கொள்கைகளுடன் ஒத்து வராதவர்கள் மேல் சேறு பூசுவதும், பொய் பிரசாரங்கள் செய்து மதமாற்றத்திற்கு சூழ்ச்சி செய்வதும் ஈழப் போராட்டததி்ற்கு நிச்சயம் நன்மை பயக்காது என்ற எனது கருத்தை தான் பதிய வைத்துள்ளேன்.

ஈழப் போராட்டத்தின் இன்றைய தளம் சர்வதேசமாகும். திரு ஈ.வே.ரா வின் போராட்டம் போல் ஒரு மாநில எல்லைகளுக்கு் உட்பட்டதல்ல எங்கள் தலைவர் நடத்தும் ஈழப்போராட்டம்.

ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீதோ , மத நம்பிக்கைகள் மீதோ சேறு வாரி இறைப்பது இன்றைய சர்வதேச தளங்களில் அருவருப்போடு தான் பார்க்கப்படும். எம்மை மேற்கு நாடுகளில் பாசிசவாதிகளாக காட்ட முனையும் சிங்களத்தின் பிரசாரத்திற்கு தான் அது துணை போகும்

Edited by vettri-vel

சிலருக்கு பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகாகவே பெரியாரை எதிர்கின்றார்கள் பெரியாரின் மற்றைய கொள்கைகள் இவர்களுக்கு புரிவதில்லை அப்படியானவர்கள் இன்னும் சாதிய கொள்கையில் இருந்து மீள முடியாதவர்களோ என எண்ணவும் தோன்றுகின்றது.நானும் கடவுள் நம்பிக்கை உடையவன்

பெரியாரின் கொள்கைகள் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ எனக்கு தெரியாது. இவர்களின் கொள்கைகளால் தான் இன்றும் தமிழகத்தில் சாதி அரசியல் கொடி கட்டி பறக்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக உள்ளதோ அந்த சாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தாவிட்டால் எந்த கட்சியும் வெல்ல முடியாது என்ற நிலையை தமிழகத்தின் பெருவாரி தொகுதிகளில் ஏற்படுத்தி வைத்து இருப்பது இந்த திராவிட கழகங்கள் தான்.

வாழ்வதற்கு அல்ல! ஒரு பிணத்தை சுடுகாட்டில் கொண்டு சென்று எரிப்பதற்கு கூட தமிழகத்தில் சாதி சான்றிதழ் தேவை என்பதை அறிவீர்களா?! இது தான் 40 வருட திராவிட கழகங்களின் ஆட்சி சாதியை ஒழித்த லட்சணம்!

ஏதாவது ஒரு திராவிட கழக உயர்வகுப்பு தலைவர் சேரியில் வாழும் ஒரு ஏழை தலித்திற்கு தன் மகனையோ மகளையோ திருமணம் செய்து வைத்ததை இந்த 40 வருட திராவிட கழக ஆட்சியில் முடிந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்.

ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்லடி மகளே எனும் போலி திராவிட தலைவர்கள் பலருடன் எனக்கு நேரிடையாகவே பரிச்சயம் உண்டு

Edited by vettri-vel

பெரியார் தொண்டர்கள் வேறு திக,.தி.முக, அ.தி.மு.க வேறு...

சரி இப்போது சொல்லுங்கள் பெரியார் கட்சி தொடங்கியதால் தான் தமிழகத்தில் சாதி உணர்வு தலை தூக்கியது இல்லையா....

அதற்கு முன்பெல்லாம் பிராமணரும் ஏனைய தாழ்த்தப்பட்டோரும் கொஞ்சிக்குலாவிக்கொண்டு இருந்தனர் பெரியார் தான் அவர்களுக்கிடையே பகை மூட்டி விட்டார் இல்லையா....

தமிழனுக்கு இருந்த சாதி உணர்வை பெரியாரால் மாற்ற இயல வில்லை என்பதே உண்மை ... இப்படி தமிழன் இருக்கும் வரை 1000 பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது...

தலைப்புக்கு வருவோம் நான் இன்றைய செய்தி தாளை நன்றாக த்தேடிப்பார்த்து விட்டேன் அதில் பெர்னாண்டோ புள்ளே பற்றி எந்த செய்தியும் இல்லை... தொலைக்காட்சி மழை காரணமாக கேபிள் இணைப்பு இல்லாமல் உள்ளது..

விட்டால் வெற்றிவேல் தில்லை திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் பாட இயலாததற்கும் கேரள குருவாயூரில் அமைச்சர் வயலார் ரவியின் பேரனுக்கு பெயர்சூட்டும் விழா நடந்ததற்கு....தீட்டு கழிப்பு பரிகாரம் நடத்தப்பட்டதற்கும் பெரியார் தான் காரணம் அப்படித்தானே???

மொட்டையாக வாதங்களை எடுத்து விடக்கூடாது

கருணானிதியின் மருமகள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர் தெரியுமா???

உங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக நிலமை தெரியுமா???

ஈழத்தில் இன்று சாதியை ஒழிப்பதில் புலிகளால் கூட இயலுமா என்ற எண்ணம் எனக்கு உங்கள் பதிவுகளை படித்த்தால் வருகிறது

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயைக்கூட அவரின் ஈழத்தமிழர் ஆதரவு நிலை காரணமாக பெரியார் தொண்டர்கள் விமர்சிப்பதில்லை என்ற உண்மையாவது தெரியுமா உங்களுக்கு :wub:

அதே பால்தகரே தனது தேர்தல் வெற்றிக்காய் மாகாராஸ்ரிய மக்களை தமிழக தமிழர்களுக்கு எதிராய் உசுப்பேத்தி அடித்து விரட்ட வைத்தார் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்...!

நீங்கள் மேலே குறிப்பட்டவற்றுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்...... ஏன் இப்படி காழ்ப்புணர்ச்சியில் உளறுகிறீர்கள்

பொதுவாக இந்தியாவில் உள்ள சராசரி அரசியலே தமிழகத்திலும் உள்ளது....

பெரியாரின் கொள்கைகள் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ எனக்கு தெரியாது. இவர்களின் கொள்கைகளால் தான் இன்றும் தமிழகத்தில் சாதி அரசியல் கொடி கட்டி பறக்கிறது. ஒரு தொகுதியில் எந்த சாதி பெரும்பான்மையாக உள்ளதோ அந்த சாதியை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தாவிட்டால் எந்த கட்சியும் வெல்ல முடியாது என்ற நிலையை தமிழகத்தின் பெருவாரி தொகுதிகளில் ஏற்படுத்தி வைத்து இருப்பது இந்த திராவிட கழகங்கள் தான்.

வாழ்வதற்கு அல்ல! ஒரு பிணத்தை சுடுகாட்டில் கொண்டு சென்று எரிப்பதற்கு கூட தமிழகத்தில் சாதி சான்றிதழ் தேவை என்பதை அறிவீர்களா?! இது தான் 40 வருட திராவிட கழகங்களின் ஆட்சி சாதியை ஒழித்த லட்சணம்!

ஏதாவது ஒரு திராவிட கழக உயர்வகுப்பு தலைவர் சேரியில் வாழும் ஒரு ஏழை தலித்திற்கு தன் மகனையோ மகளையோ திருமணம் செய்து வைத்ததை இந்த 40 வருட திராவிட கழக ஆட்சியில் முடிந்தால் காட்டுங்கள் பார்க்கலாம்.

ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்லடி மகளே எனும் போலி திராவிட தலைவர்கள் பலருடன் எனக்கு நேரிடையாகவே பரிச்சயம் உண்டு

தமிழகத்தில் இருந்த இரட்டை டம்ளர் முறை பெரியார் தொண்டர்களால் தான் ஒழிந்தது என்பேன் உங்களால் மறுக்க முடியுமா???

ஏதோ 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் சாதிப்பாகுபாடின்றி வாழ்ந்தது போலவும் பெரியார் வந்து சாதிப்பாகுபாட்டை புகுத்தியது போலவும் நீங்கள் பேசுவது ???!!! உங்கள் சுயரூபத்தை புரிந்து கொள்ள உதவுகிறது...

தேவையின்றி நெடுக்காலப்போவான் பெரியார் தொண்டர்களை சீண்டுகிறார்...

இதனால் தான் நான் பல மாதங்கள் யாழில் பதிவுகள் இடுவதில்லை ஆனால் இதற்கும் பதில் எழுதாவிட்டால் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றாகி விடும்.

ஈழத்திலும் சாதி ஒழியாது எல்லா தமிழனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நன்கு புரிந்து கொண்டேன்.

அதே பால்தகரே தனது தேர்தல் வெற்றிக்காய் மாகாராஸ்ரிய மக்களை தமிழக தமிழர்களுக்கு எதிராய் உசுப்பேத்தி அடித்து விரட்ட வைத்தார் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்...!

அதற்கு இப்போ என்ன ???

எனவே தி.க வினர் பால்தாக்க்ரேயையும் எதிர்க்க வேண்டுமா???

இப்போது அங்கே வடக்கத்தி இந்தி பேசும் மக்கள் தாக்கப்பட்டபோதும் தமிழர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்.....

ப்

உங்களுக்கெல்லாம் பெரியார் தொண்டர்களை சீண்டாவிட்டால் தூக்கம் வராதோ..

இந்த தலைப்பில் பதிவு இட்டதன் நோக்கம் என்ன ???

எக்கேடோ கெட்டு ஒழியுங்கள் எனக்கு உங்களைப்பற்றி க்கவலை இல்லை.....

நாங்கள் என்றும் உண்மையான சராசரி ஈழத்தமிழனுக்கு என்றும் துணை நிற்போம்

திராவிடர் ஆரியர் என நாமே நமக்குள் மண்ணை போடுவோம்.ராமசாமி என பெரியாரை எதிலும் வம்புக்கு இழுப்பதை நிர்வாகம் கவனத்தில் எடுக்க வேண்டும் தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் பெரியாரை திட்டுவது ஆரோக்கியமானது அல்ல

பெரியார் எண்டு மட்டும் சொல்வதை விட்டு யாரையுமே எண்டு உங்களின் பதம் வந்து இருந்தால் சரியானதாக இருந்து இருக்கும்...

நீங்கள் இட்ட செய்திக்கு சமாந்தரமாக இன்னும் ஒரு செய்தி....

http://www.puthinam.com/full.php?2b34OOA4b...cf1e02cceKcYo3e

ஆர்ப்பாட்டத்துக்கு பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.

ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுத உதவி வழங்கும் இந்திய அரசையும், அதைத் தடுத்து நிறுத்தாத தமிழக அரசையும் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பழ.நெடுமாறன், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

Edited by தயா

40 ஆண்டுகள் முன்பு தலித்துகள் பிணத்தை பிராமணர்கள் தானே சுமந்து சென்று எரித்தனர்....

நீங்கள் மேலே குறிப்பட்டவற்றுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்...... ஏன் இப்படி காழ்ப்புணர்ச்சியில் உளறுகிறீர்கள்

பொதுவாக இந்தியாவில் உள்ள சராசரி அரசியலே தமிழகத்திலும் உள்ளது....

தமிழகத்தில் இருந்த இரட்டை டம்ளர் முறை பெரியார் தொண்டர்களால் தான் ஒழிந்தது என்பேன் உங்களால் மறுக்க முடியுமா???

ஏதோ 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் சாதிப்பாகுபாடின்றி வாழ்ந்தது போலவும் பெரியார் வந்து சாதிப்பாகுபாட்டை புகுத்தியது போலவும் நீங்கள் பேசுவது ???!!! உங்கள் சுயரூபத்தை புரிந்து கொள்ள உதவுகிறது...

எக்கேடோ கெட்டு ஒழியுங்கள் எனக்கு உங்களைப்பற்றி க்கவலை இல்லை.....

நாங்கள் என்றும் உண்மையான சராசரி ஈழத்தமிழனுக்கு என்றும் துணை நிற்போம்

ஆஹா! 60 வருட கொள்கை பிரச்சாரம் 40 வருட மாநில ஆட்சி, இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகும் இரட்டை டம்ளரை மட்டும் ஒழித்து விட்டோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய சாதனை.

:wub:^_^:unsure:

அதுவும் முற்றாக ஒழியவில்லை நண்பரே. நெய்வேலி போன்ற பிரதேசங்களில் இன்னும் நடைமுறையில் தான் உள்ளது.

வேறு உலக புரட்சிகளின் சரித்திரத்தை எடுத்துப்பாருங்கள் . 60 வருட காலத்தில் என்ன என்ன சாதித்தார்கள் என்பது புரியும்

கருத்துக்களோடு கருத்துக்களை மோத விடுங்கள். "எக்கேடோ கெட்டு ஒழியுங்கள் எனக்கு உங்களைப்பற்றி க்கவலை இல்லை..." என்றெல்லாம் நீங்கள் புலம்புவது உங்கள் கொள்கை வரட்சியை தான் காட்டுகிறது.

இந்திய சுதந்திரத்துக்கு எதிராக குரல் கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்து, திராவிட நாடு என்று ஒரு கோசத்தை எழுப்பி, அதையும் உருப்படியாக முன்னெடுக்காது, மானில ஆட்சியின் சுவை கண்டதும் மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்று ஒரே அடியாக பல்டி அடித்து, திராவிடம் என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்ற தோற்றத்தை டெல்லி ஆட்சியாளர்களிடம் ஏற்படுத்தியதால் தானே, ஈழப் போராட்டத்திற்கு ஆப்படித்து விட சிங்கள இனவெறியர்களுடன் டெல்லி இன்றுவரை கை கோர்த்துள்ளது

Edited by vettri-vel

அதற்கு இப்போ என்ன ???

எனவே தி.க வினர் பால்தாக்க்ரேயையும் எதிர்க்க வேண்டுமா???

இப்போது அங்கே வடக்கத்தி இந்தி பேசும் மக்கள் தாக்கப்பட்டபோதும் தமிழர்கள் பாதுகாப்பாகவே இருந்தனர்.....

ப்

உங்களுக்கெல்லாம் பெரியார் தொண்டர்களை சீண்டாவிட்டால் தூக்கம் வராதோ..

இந்த தலைப்பில் பதிவு இட்டதன் நோக்கம் என்ன ???

எக்கேடோ கெட்டு ஒழியுங்கள் எனக்கு உங்களைப்பற்றி க்கவலை இல்லை.....

நாங்கள் என்றும் உண்மையான சராசரி ஈழத்தமிழனுக்கு என்றும் துணை நிற்போம்

ரென்சன் ஆகாதீங்க....!

நான் முதலிலை ஈழத்தவன், பிறகு தமிழன்... எப்பவுமே திராவிடன் கிடையாது... எனது மூதாதைகள் யாராவது இருந்து இருந்தாலும் கூட

தமிழகத்தினரின் ஆதரவுகள் தமிழருக்கு தமிழர் எனும் தார்மீகத்தில் நடந்து கொண்டு இருப்பவை.... அதைதான் எல்லாரும் வேண்டியும் நிக்கிறார்கள்... அந்த ஆதவுக்கு திராவிடம் , ஆரியம் சாதியம் எண்று நீங்கள் எல்லாம் கற்பிக்கும் அர்த்தம் தான் அந்த ஆதரவை கேவலப்படுத்துகிறது....

தானே நடக்காத மூஞ்சூறு விளக்குமாறு ( துடைப்பம்) காவிச்சுதாம் எண்டு ஒரு பழமொழி சொல்வார்கள்... திராவிடம் எண்டு ஈழத்தவன் சொல்வது எனக்கு அப்பிடித்தான் கேக்குது...

நண்றாக சாப்பிட்ட பிறகு ஒரு ஏவறை( ஏப்பம் எண்டு தமிழ் நாட்டில் சொல்வார்கள்) வரும்... அதை எங்கட ஊரிலை புளிச்சல் ஏப்பம் எண்டு சொல்வார்கள்... அதுமாதிரி எங்கட பிரச்சினைகள் எல்லாம் முடிந்தால் அதன் பிறகு ஒருவேளை நான் கூட திராவிடம் பற்றி புளிச்சல் ஏப்பம் விடும் நிலை வரலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலும் சாதி ஒழியாது எல்லா தமிழனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நன்கு புரிந்து கொண்டேன்.

முற்றிலும் உண்மை.. அழுத்தங்கள், போரினால் ஏற்படும் துன்பங்கள் போன்றவையால் நீறு பூத்த நெருப்பாக உள்ளே ஒழிந்துள்ளது.. துன்பங்கள் நீங்கி இன்பமான காலம் வர "மீண்டும் தொடங்கும் மிடுக்கு".

முற்றிலும் உண்மை.. அழுத்தங்கள், போரினால் ஏற்படும் துன்பங்கள் போன்றவையால் நீறு பூத்த நெருப்பாக உள்ளே ஒழிந்துள்ளது.. துன்பங்கள் நீங்கி இன்பமான காலம் வர "மீண்டும் தொடங்கும் மிடுக்கு".

நீங்கள் ஈழத்திலை வாழ்த்து நெடுங்காலம் ஆச்சுது எண்டு தெரியுது...! இராணுவ கட்டுப்பாட்டு பகுதியிலையே மக்கள் மாறி நீண்ட காலம்... !

திருமண விடயங்களில் மக்கள் இன்னும் மாறவில்லை உண்மை.. ஆனால் மாற்றி விடுவார்கள் அதுவும் உண்மை....!

அது சரி.. திராவிடத்தை எதிர்ப்பவன் சாதியத்தை விரும்புகிறான் என்பது என்ன புது சமன்பாடாக இருக்குதே...??? இதை எப்ப நிறுவினீர்கள்...??? ஏதாவது கலாநிதி பட்டத்துக்கு முயற்ச்சி செய்கிறீர்களோ..??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஈழத்திலை வாழ்த்து நெடுங்காலம் ஆச்சுது எண்டு தெரியுது...! இராணுவ கட்டுப்பாட்டு பகுதியிலையே மக்கள் மாறி நீண்ட காலம்... !

ஆமாம் "Time tunnel" குள்ளால் பறந்து எதிர்காலத்தில் வாழ்கிறேன்..

திருமண விடயங்களில் மக்கள் இன்னும் மாறவில்லை உண்மை.. ஆனால் மாற்றி விடுவார்கள் அதுவும் உண்மை....!

ஒருதரும் மாற்றமுடியாது. தானாகத்தான் மாறும்.. அப்போது நீங்களும் நானும் உயிரோடு இருக்கமாட்டோம்.

அது சரி.. திராவிடத்தை எதிர்ப்பவன் சாதியத்தை விரும்புகிறான் என்பது என்ன புது சமன்பாடாக இருக்குதே...??? இதை எப்ப நிறுவினீர்கள்...??? ஏதாவது கலாநிதி பட்டத்துக்கு முயற்ச்சி செய்கிறீர்களோ..??

மற்றவன் என்ன சிந்திப்பான் என்று மற்றவனின் மூளைக்குள் புக முயற்சிப்பதை விட்டுவிட்டு வைக்கப்படும் கருத்துக்களுக்கு உங்கள் சொந்த மூளையைப் பாவித்து கருத்தாடுங்கள்.. சொல்லாத விடயங்களைச் சொன்னமாதிரி எழுதுவது, பின்னர் அதையே உண்மையாக்குவது என்பது "திரித்தல்"..

அப்போ திராவிடத்துக்கு எதிரான கருத்துக்கள் தான் வைக்க படுகின்றன... ஆனால் அதை சாதியத்துக்கு ஆதரவான கருத்துக்களாக எப்படி இனம் கண்டு வேலவனுக்கு ஆதரவை வளங்கினீர்கள் எண்டு நீங்கள்தான் சொல்ல வேணும்....!

ஏதோ உங்கட கருத்துக்கு வலு சேர்க்க ஈழத்தவர் மீது இல்லாத கரியை எப்படி பூசுகிறீர்கள் எண்று கேட்ப்பது தவறே இல்லை...

//ஈழத்திலும் சாதி ஒழியாது எல்லா தமிழனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று நன்கு புரிந்து கொண்டேன்.//

வேலவன் ,

உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன்.யாழ்க்களத்

// உண்மையில் இவர்களின் குரல் ஈழ ஆதரவுக் குரலா அல்லது ஏதேனும் தேவைகளுக்கு எழுகின்ற குரலா அல்லது சிங்கள அரசு சொல்வது போல புலிகளில் இவர்களும் சந்தேகமா என்பதை தெளிவுபடுத்தத்தான் அக்குறிப்பிட்டேன்.//

மேலே திரு நெடுக்கலபோவான் இந்த தலைப்பைத் திறந்தற்கான காரணாமகக் கூறியது.அதாவது திராவிடக் கட்சிகள் எதோ உள் நோக்கதுக்காகத் தான் ஆதரவு தருகின்றன் என்பதைக் காட்ட.அப்படியாயின் ஏன் அவர்கள் உங்களுக்கு ஆதரவு தரவில்லை என்று புலபுகிறீர்கள் என்பதே எங்கள் கேள்வி.உங்கல் கபட்த் தனமும் இதில் வெட்ட வெளிச்சமாகிறது.

உங்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டம் முக்கியமில்லை,திராவிடக் கட்சிகள் மேல் அவதூறு செய்ய வேண்டும் என்னும் சாதிய சமய வெறியே மேல் ஓங்கி இருக்கிறது.இதனைத் தான் இந்தக் கருத்தாடல் இங்கு நிருபித் திருக்கிறது. :wub:

கலைஞர் தன்னுடைய குடும்பத்தில் கலப்புத் திருமணம் நடந்திருக்கிறது என்பதை பல முறை சொல்லுபவர். தமிழ் நாட்டின் சூழ்நிலைக்கு அவ்வாறான பரப்புரை தேவையாக இருக்கிறது. நாம் ஈழக் கண்ணாடியோடு அதைப் பார்க்கின்ற போது எமக்கு அது தவறாக தெரிகிறது.

அடுத்தது

நான் மீண்டும் மீண்டும் சொல்கின்ற ஒரு விடயம்தான். இந்து மதம் பற்றியோ, பார்ப்பனியம் பற்றியோ நாம் பேசுகின்ற போது, பதிலுக்கு திராவிட கழகங்களையும் தந்தை பெரியாரையும் இழிவு செய்வது சிறுபிள்ளைத்தனம். சிந்தனை வறட்சியை உங்களுடைய செய்கை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.

ஒருவர் கருத்துச் சொல்லும் போது, அதற்கு ஒரு சாயத்தை பூசுவது சரியல்ல. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னால், உடனடியாக என்னைப் கம்யூனிஸ்ற் என்று சாயம் பூச முடியாது. ஆனால் இங்கே சாயம் பூசுவதோடு, தேவையில்லாமல் கார்ல் மார்க்ஸையும் திட்டுகிறார்கள்.

இந்த நிலையை எண்ணி வேதனையோடு நகைக்கத்தான் முடியும்

விடுதலைப் புலிகளைப் போன்று நாமும் தமிழர்களுக்கு எதிரானவைகளை இனம் காணும் போதும், அவைகளை இனம் காட்டும் போது, ஓடி வந்து திராவிடர் கழகங்கள் மீது சம்பந்தமில்லாமல் பாய்கிறார்கள்.

திராவிடர் கழக அன்பர்கள் இவைகளை படித்தால், அவர்களுக்கு உண்மையில் தங்கள் மீது சிலர் தேவையின்றி பாய்வதன் அர்த்தம் புரியாமல் முழிப்பார்கள்.

"அவன் இந்து மதத்திற்கு அடித்தான், நான் பதிலுக்கு திராவிடர் கழகத்திற்கு அடி கொடுத்து விட்டேன்" என்ற நீங்கள் குரூரமாக திருப்தி அடைவதைப் பார்க்கின்ற போது, நீங்கள் இப்போதைக்கு உருப்படப் போவதில்லை என்று தெரிகிறது.

நீங்கள் இப்படியே சம்பந்தமில்லாத இடங்களுக்குப் போய் அடித்துக் கொண்டு இருங்கள். நீங்கள் உண்மையிலேயே செய்ய வேண்டிய பணிகளை உணரும் போது காலம் கடந்து போய் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் ஆரிய்ம, திராவிடம் என்பது இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் முரண்பாட்டால் ஏற்பட்ட விளைவுகளால் தானே தவிர, இந்திய மண்ணின் அடிப்படையை வைதது அல்ல. அவர்கள் எதற்கெடுத்தாலும், ஆரியம், திராவிடம் என்ற வாதத்தை முன்னெடுத்துச் செல்வதில்லை. அது பிரச்சனைகளுக்கான தீர்வையும் தரப்போவதில்லை.

தமிழ்தேசியம் தொடர்பாகப் போராட்டத்தை முன்னெடுத்தவராக ராமசாமியைக் கட்டி ஏமாற்ற முனையும்போது தான், அதற்காக தலைவரையும், அவரையும் ஒப்பிடுவது தொடர்பாகச் சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.ஈழத்தில

அமெரிக்காவும், இஸ்ரேலும் சீனாவும் பாகிஸ்தானும் எதன் அடிப்படையில் சிங்களத்துடன் கைகோர்த்து உள்ளதோ அதன் அடிப்படையில் தான் இந்தியாவும் கை கோர்த்து உள்ளது. அதற்கு பிரதேச வல்லாண்மை, இராணுவ பொருளாதார நலன்கள் என்று பெயர்

அதற்கு ஆரிய முலாம் பூச முனைவது தோற்றுப்போன திராவிட கொள்கைகளை தமிழர்கள் மேல் திணிப்பதற்கான சூழ்ச்சி மட்டும் அல்ல, ஈழத்தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் உள்ள பிரிவினையை மேலும் மேலும் விபரீதமாக்கும் சிங்களத்தின் சூழ்ச்சிக்கும் துணைபோவது ஆகும். இன்று டெல்லியில் ஈழப்பிரச்சினை சம்பந்தப்பட்ட விவகாரங்களை இத்தனை சிக்கலாக்கி வைத்திருப்பது டெல்லி South Block இல் இருந்து செயற்படும் திராவிடர்களான கேரளத்தை சேர்ந்த உயரதிகாரிகளே ஒழிய வட இந்திய அதிகாரிகள் இல்லை.

இது போன்ற பிரசாரங்கள் உச்சமடைவது எனது அரசியல் கணிப்புகளில் பெரும் அச்சம் விளைவிக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். காலம் பதில் சொல்லட்டும்.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிகளை அனுபவித்துக் கொண்டே சில பகுத்தறிவு தோழர்கள் ஆரியவாதம் பேச முடியும். சிறை செல்ல முடியும். சீக்கிரத்தில் வெளியில் வந்து மேடைகளில் நீட்டி முழங்கவும் முடியும். ஆனால் ஈழத்தமிழர்கள் நடத்திக்கொண்டிருப்பது ஜீவமரணப் போராட்டம். இங்கு கரணம் தப்பினால் மரணம். ஆகவே நாம் எடுத்து வைக்கும் அடிகள் கவனமாக இருக்க வேண்டும்.

சில வேளைகளில் அரசியலில், பலவீனமான நண்பனின் நட்பை விட பலமான எதிரியின் பகையை குறைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக இருப்பதுண்டு. இந்த கணிதம் புரியப்படாமல் போனால் சோகம் தான்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க வேண்டும் சுகன்

உங்களுடைய கருத்தில் எவ்விதமான உருப்படியான தீர்வையும் நான் காணவே இல்லை. வழமைபோல ஆரியம் இப்படித் தான் செய்யும் என ஒரு வித முளைச்சலவை செய்யப்பட்ட கற்பனையோடு கருத்தினை கொண்டு செல்வதாகவே தோன்றுகின்றது. சிங்களவர்கள் ஆரியர், அதனால் தான் இந்தியா ஆரியப்போக்கோடு நடந்து கொள்கின்றது என்ற வாதத்திற்கான சான்றினையும் காணமுடியவில்லை. வெறுமனே உறுதிப்படத் தெரிவிக்கின்ற ஒரு வெறுமையையே காணமுடிகின்றது.

இந்தியா, இந்துத்துவ, ஆரியவாதத்தை வலியுறுத்தவேண்டுமானால் நேபாளத்தில் நடந்த மன்னர் ஆட்சியை அழிக்கத் துணை போயிருக்கத் தேவையில்லை. கிறிஸ்தவ சார்புள்ள மாக்கிசவாதியான பிரசன்னாவிற்குத் துணைபோக வேண்டிய தேவை எதுவுமே இல்லை.

வெளிப்படையாகச் சொல்லப்போனால் இலங்கை என்ற மண்ணில் புலிகள் யாருக்குமே விலைபோகமாட்டார்கள் என்பது இந்தியா சுட்டுக் கொண்ட அனுபவம். எனவே இலங்கையரசை எல்லாத் தரப்பும் விலை வாங்க முயற்சிக்கின்றது. அதனால் தான் சீனா, இந்தியா, யப்பான், தொடக்கம் அனைத்து நாடுகளும் இலங்கையரசை நாடுகின்றன. அந்த வகையில் இந்தியாவும் விதிவிலக்கல்ல.

தமிழ்- சிங்களப் பிரச்சனையில் ஆரியம், திராவிடம் என்பது இரு சமூகங்களையும் பிரித்துக்காட்டுவதற்கான தேவைகளின் வெளிப்பாடாகும். புலிகளும் அதற்காகத் தான் இவற்றை மேடைகளில் பாவித்தும் இருக்கின்றார்கள். அதைத் தவிர மற்றய தேவைகளுக்காக அல்ல.

இலங்கையில் ஆட்சி செய்த சிங்களத் தலைவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ மதத்தைப் பின்ணனியாகக் கொண்டவர்கள் தாம், பண்டாரநாயக்கா, ஜேஆர், சந்திரிக்கா, ரணில், ஏன் இப்போது உள்ள மகிந்த கூடக் கிறிஸ்தவமதத்தில் இருந்து பௌத்தமதத்திற்கு மாறியவர் தான்.

இப்படிப் பார்க்கையில் சிங்களப் பேரினவாதம் கிறிஸ்தவ அடிப்படையில் வந்ததாக வாதிடுவது நியாமாகுமா? அப்படித் தான் உங்களால் வாதிட முடியுமா?

தமிழீழத்தை இந்தியாவில் இருந்து எப்போதும் பிரித்துத் தனியே கொண்டு சென்று வைக்க முடியாது. அது செய்கின்ற குற்றங்களைச் சுட்டிக்காட்டும், அதே வேளை அதை நட்பு நாடாக மாற்றுவதே எம் நாட்டிற்கான தேவையாகவும் இருக்கும்.

இந்தியாவைக் கட்டுப்படுத்துகின்ற சக்திகளாக திராவிடத்தில் உதித்த மலையாள, இத்தாலிய, சார்தாஜிகளாக இருக்கின்றபோது வெறுமனே ஆரியம், இந்துத்துவம் என்று எத்தனை காலம் தான் ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகின்றீர்கள்

மன்னிக்க வேண்டும் சுகன்

உங்களுடைய கருத்தில் எவ்விதமான உருப்படியான தீர்வையும் நான் காணவே இல்லை. வழமைபோல ஆரியம் இப்படித் தான் செய்யும் என ஒரு வித முளைச்சலவை செய்யப்பட்ட கற்பனையோடு கருத்தினை கொண்டு செல்வதாகவே தோன்றுகின்றது. சிங்களவர்கள் ஆரியர், அதனால் தான் இந்தியா ஆரியப்போக்கோடு நடந்து கொள்கின்றது என்ற வாதத்திற்கான சான்றினையும் காணமுடியவில்லை. வெறுமனே உறுதிப்படத் தெரிவிக்கின்ற ஒரு வெறுமையையே காணமுடிகின்றது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் சீனாவும் பாகிஸ்தானும் எதன் அடிப்படையில் சிங்களத்துடன் கைகோர்த்து உள்ளதோ அதன் அடிப்படையில் தான் இந்தியாவும் கை கோர்த்து உள்ளது. அதற்கு பிரதேச வல்லாண்மை, இராணுவ பொருளாதார நலன்கள் என்று பெயர்

தூயவன் மற்றும் வெற்றிவேலின் இந்தக் கருத்துக்கள் உங்கள் பார்வையாக உள்ளது. அதே நேரம் இவ்வாறே எம்மை நாம் சமாதானப்படுத்தி ஏமாறுகின்றோம் என்பதே உண்மையாக உள்ளது. கடந்த கால வரலாறாக உள்ளது.

இந்தியாவின் நலன்களுக்காக ஈழத்தமிழர்கள் அனைவரும் பலியாக வேண்டூமா? எம்மை உள்ளடக்கியதாக இந்தியாவின் நலன்கள் பேணப்பட வாய்பில்லையா? இந்தியாவுக்கு எத்தனை சந்தர்ப்பங்கள் இதற்காக அமைந்தது? இலங்கை இந்திய ஒப்பந்தம் முதற்கொண்டு எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்ததே. இந்தியாவை நம்பி தமிழர் தரப்பு ஆயுதங்களை ஒப்படைத்தபோது ஈழப்பிரச்சனையில் ஒரு தீர்வை ஏன் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை?

சிங்களத்தை விட ஈழத்தமிழர்களாலேயே இந்தியாவின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று கடந்த முப்பது வருடங்களில் ஈழத்தமிழர்கள் நிருபித்துள்னர். ஆயுதம் ஒப்படைத்தது முதல் அகிம்சை போராட்டங்கள் வரை சகித்துக்கொண்டது கொஞ்சமல்ல. இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் தமிழர் தரப்பு உறவு கொண்டதில்லை. இந்தியாவை உள்வாங்கியே இதுவரை காலமும் போராட்டம் நகர்ந்துள்ளது. இனியும் நடக்கும். ஈழம் அமைவதே இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு உகந்தது என்பதை இந்தியாவில் பலரும் எடுத்துச்சொல்லியுள்ளனர். இலங்கை இந்தியாவுக்கு நம்பிக்கையாக இருந்ததும் இல்லை. இருக்கப்போவதும் இல்லை.

இந்தியாவின் திராவிட ஆரிய பிரச்சனைகளுக்குள் இது காலவரையில் புலிகள் மூக்கை நுழைத்ததும் இல்லை திராவிடக்கொள்கைகளை ஈழத்தில் பரப்பியதும் இல்லை. பிராமண எதிரப்பை காட்டியதும் கிடையாது. மார்சிசம் முதலாளித்துவம் என்ற வாதங்களை தூக்கியதும் கிடையாது. ஈழத்தமிழர்களின் பிரச்சனைகள் எதுவோ அதற்கான தீர்வு எதுவோ அதை எதிர்நோக்கியே புலிகள் தமது போராட்டத்தை நகர்த்தினார்கள். இன்றும் அதன் போக்கில் மாற்றமில்லை. ஆனால் இந்தியாவின் போக்கில் சிங்களத்துக்கான அளவுக்கதிகமான உதவியும் தமிழின விரோதப்போக்கும் அதன் இராணுவ நலன்களுக்கு அப்பாற்பட்ட நகர்வை சுட்டிக்காட்டுகின்றது.

இந்தியாவின் ஈழத்தமிழர்கள் மீதான வேற்றுமை உணர்வுக்கான காரணத்தை அதன் ராணுவ நலன்கள் சார்ந்தது என்று இறுதித் தமிழன் அழியும் வரை நாம் பூசிமொழுகிக்கொண்டிருக்க முடியாது. அதற்கப்பால் அதன் நகர்வுகளை எடுத்துக் கூறவேண்டியதும் அவசியம்.

நாம் ஒன்றை திறம்படச்செய்கின்றோம் அதுவானது கேள்வியின்றி ஆரியத்தை ஏற்றுக்கொள்வது. அதற்செயற்பாடுகளுக்கு வேறு காரணங்கள் சொல்லி நாம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்வத

தயா, மற்றும் வெற்றிவேல் என்னிடம் ஏதாவது கேட்கிறீர்கள்... நான் பதில் சொன்னால் இதையெல்லாமா சொல்லிக்காட்டுவது என்கிறீர்கள்..

வெற்றிவேல் கேட்டது எந்த திராவிடக்கட்சித்தலைவன் தன்னை விட தாழ்ந்த சாதிப்பெண்ணை தன் மகனுக்கு கட்டி வைத்தான் என்று... அதற்கான பதிலே அழகிரிக்கு காந்தி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை மணமுடித்து வைத்தார் என்பது..

உடனே எத்தனை கோடிக்கு அந்தப்பெண் அதிபதி என ஒரு மட்டமான கேள்வி.... இதற்கும் நான் பதி சொல்ல வேண்டுமா???

காந்தி அழகிரி ஒன்றும் சீமான் வீட்டு ப்பெண் அல்ல..... இதற்கும் ஒரு வீணாப்போன கேள்வி கேளுங்கள் ..

பின்னர் உங்களுக்கு நான் எக்கேடோ கெட்டுப்போங்கள் என்று சொல்லாமல் என்ன சொல்வது??

இன்னொன்று பெரியாரும் அவர் வழி வந்ததாக சொல்லிக்கொள்ளும் தலைவர்களும் ஒன்றல்ல இதை நன்றாக விளங்கிக்கொள்ளுங்கல் முதலில்....

பின்னர் தயா என்பவர் விதண்டாவதமாக கூறுவது போல் ஈழத்தமிழர்களை திராவிடர் என்பதால் அல்ல பெரியார் தொண்டர்கள் ஆதரிப்பது..... ஈழத்தமிழன் எங்கள் தொப்புள் கொடி உறவு ... நாங்களெல்லாம் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் என்பதால் தான்.

நான் மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டேன் பெரியார் தொண்டர்கள் தமிழீழ ஆதரவு போராட்டங்களில் ...மத எதிர்ப்பையஓ அல்லது கடவுள் மறுப்பியோ எப்போதும் சொன்னது கிடையாது..... அவர்கள் போராட்டங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட தமிழின விடுதலை பற்றி மட்டுமே பேசுவார்கள்

இதன் மூலம் ஈழத்தில் பெரியார் கொள்கைகளை பரப்ப வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது..

நான் 2 டம்ளர் முறை ஒழிப்பும் ஒரு சாதனை என்றேனே தவிர அது மட்டும் தான் என்று கூறவில்லை வெறிவேல் தன் குறுகிய எண்ணத்தில் இருந்து விடுபடுவாராக....

உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு பதிலையும் நீங்களே சொல்லி விட்டீர்கள் நன்றி

ஆஹா! 60 வருட கொள்கை பிரச்சாரம் 40 வருட மாநில ஆட்சி, இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகும் இரட்டை டம்ளரை மட்டும் ஒழித்து விட்டோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய சாதனை.

:(:wub::wub:

அதுவும் முற்றாக ஒழியவில்லை நண்பரே. நெய்வேலி போன்ற பிரதேசங்களில் இன்னும் நடைமுறையில் தான் உள்ளது.

வேறு உலக புரட்சிகளின் சரித்திரத்தை எடுத்துப்பாருங்கள் . 60 வருட காலத்தில் என்ன என்ன சாதித்தார்கள் என்பது புரியும்

கருத்துக்களோடு கருத்துக்களை மோத விடுங்கள். "எக்கேடோ கெட்டு ஒழியுங்கள் எனக்கு உங்களைப்பற்றி க்கவலை இல்லை..." என்றெல்லாம் நீங்கள் புலம்புவது உங்கள் கொள்கை வரட்சியை தான் காட்டுகிறது.

இந்திய சுதந்திரத்துக்கு எதிராக குரல் கொடுத்து, ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்து, திராவிட நாடு என்று ஒரு கோசத்தை எழுப்பி, அதையும் உருப்படியாக முன்னெடுக்காது, மானில ஆட்சியின் சுவை கண்டதும் மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என்று ஒரே அடியாக பல்டி அடித்து, திராவிடம் என்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது என்ற தோற்றத்தை டெல்லி ஆட்சியாளர்களிடம் ஏற்படுத்தியதால் தானே, ஈழப் போராட்டத்திற்கு ஆப்படித்து விட சிங்கள இனவெறியர்களுடன் டெல்லி இன்றுவரை கை கோர்த்துள்ளது

Edited by வேலவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே தாங்கள் வசிக்கும் நாட்டில் இலவச தண்டல் காசை எடுத்துக் கொண்டு சாதி மதம் என்று புலம்புறாங்க :( . சரியான லுசு பசங்க தான் :wub:

நான் எழுதியது சில நண்பர்களுக்கு விளங்கவில்லை என்று நினைக்கிறேன்

சில விடயங்களை தருகிறேன். இவைகளை சொன்னது யார் என்று உங்களால் சொல்ல முடியாமா?

1.பார்ப்பானை மந்திரியாக வைத்திருந்தால் ஆட்சி முறைகள் கெட்டுப் போகும். ஒரு சூத்திரனை மந்திரியாக்கினால் உனக்கு தக்க துணையாக இருப்பான்

2. அறியாமை மிக்க பார்ப்பனர்களுக்கு உச்சிக் குடுமியும் பூணூலும் மண்ணுலகுக்கு கேடு. இதனை பகுத்துணர்ந்து ஆள்பவன் பார்ப்பனர்களின் உச்சிக் குடுமியையும் பூணூலையும் அறுத்து எறிய வேண்டும்

3. நல்லறிவு இல்லாமலும், ஆய்ந்துணரும் தன்மை இல்லாமலும், கடவுளைப் பற்றிய உண்மை அறியாமலும் இருக்கின்ற மூடர்கள்தான் பார்ப்பனர்கள்.

4. சூத்திரன் வேதம் ஓதுவதை கேட்டால் அவன் காதில் ஈயத்தை ஊற்று, ஒரு வரியை ஞாபகத்தில் வைத்தால் அவன் நாக்கை வெட்டு போன்ற வாசகங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் காட்டுமிராண்டித்தனமாகும்

5. பாம்பு தான் கடித்த விசத்தை திருப்பி எடுப்பது போன்று, பார்ப்பான் இந்து மதத்திற்குள் விட்ட விசத்தை தானே திருப்பி எடுக்க வேண்டும்

6. தமிழ் மக்களுக்கு நஞ்சினும் கொடிய தீது புரிந்தவர்கள் பார்ப்பனர்கள். இவர்களை தம் பக்கம் அண்ட விடாது விழிப்பாக இருப்பது தமிழர்களின் கடமையாகும்

இவைகளை கூறியவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?

1. தந்தை பெரியார் 2. வீரமணி 3. பா. நடேசன் 4. கலைஞர்

சரியான விடையின் கீழ் கோடிடுக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.