Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

Featured Replies

பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

தமிழர்களைப் படுகொலை செய்து வரும் சிங்களப் படைக்குத் துணைபோகும் இந்திய அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மெமோரியல் மண்டபம் முன் நடைபெற இருந்தது.

முதலில் காவல்துறையினர் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியளித்திருந்தனர். இன்று காலை அவ்வனுமதியை, சில சமூக விரோத சக்திகளும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதால், தடை விதிப்பதாய் கூறி, தடை விதிக்கப்பட்டது.

சென்னை மெமோரியல் மண்டபம் முன் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, தனித்தனிக் குழுக்களாய் பழ.நெடுமாறன், பெ.மணியரசன், பசுபதிபண்டியன் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது, காவல்துறையினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாய் கூறி, அங்கு வந்த 200 மேற்பட்ட தமிழீழ ஆதரவாளர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

தமிழர்களே... தமிழர்களே.. என்னை கல்லில் கட்டி கடலில் போட்டாலும் கட்டுமரமாக தான் மிதப்பேன். அதில் ஏறி நீவிர் பயணம் செய்யலாம். கவிழ்த்துவிடமாட்டேன். என்று ஆவேசமாக பேசுவதெல்லாம் முதல்வருக்கு கை வந்த கலை. கடைசியில் ஏமாறுவது என்னவோ தமிழர்கள் தான்.

கருணாநிதியிடம் கட்டுமரந்தானிருக்கிறது. அதை நம்பித்தான் அநேகமான தமிழக அரசியல்வாதிகள், அவரை எதிர்க்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். மத்தியரசின் நினைப்பின்படி அவரிடம் கட்டுமரமும் இல்லை. அது கருணாநிதிக்கு நன்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: தயா, நெடுக்கு,

இது உங்கள் கவனத்திற்கு !

நெடுமாறன் அண்ணா வெறும் பாலைத்தவிர தேனீர் கூட அருந்தாத மனிதர்.... சிறை எல்லாம் செண்று உடலை வருத்துவது வேதனையாக இருக்கிறது....!

ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு தரும் நல்லவர்களுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம்.

அதற்காக தமிழர்கள் கோவில் மணிகளை உருக்கி விற்று பேரீச்சம்பழம் வாங்கி சாப்பிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று நிறுவ முனையும் புரட்டுக்களை

ஏற்றுக்கொள்ள முடியாது :wub:

Edited by vettri-vel

கோவில் மணி கிலிக்கித் தான் தம்ழீழம் காணாலம் என்பதை எவரும் நம்புவது கிடையது.

இரண்டாம் உலக யுத்தகாலத்தில் கோவில் மணிகளை உரிக்கித் தான் யுத்த தளபாடங்களை இங்கிலாந்து உற்பத்தி செய்தது.

ஆயிரம் ஆயிரம் ஈழ மக்கள் அகதிகளாக இருக்க இடமோ சாப்பிட உணவோ இல்லாது இருக்கும் போது ஈழப்பதீஸ்வரனுக்கு ஆயிரம் பவுண்சில உணிடியல் கொட்டிக் குடுக்கிற ,பாரிசில பிள்ளையாருக்கு ஆயிரம் தேங்காய் உடைக்கிற மணி கிலுக்கிகள் இருக்கும் வரை எங்களைப் போன்றோர் இதன் பகட்டுத்தனத்தை புலத் தமிழரின் கிலுசு கெட்டத் தனத்தைச் சொல்லிக் கொண்டு தான் இருப்பம். :wub:

நாரதர் சொல்லுறமாதிரி எல்லா கோயிலையும் இளுத்து பூட்டினால் என்ன ஆகும் எண்டு ஒருக்கா யோசிச்சு பாத்தன்...

கடந்த முறை நீண்ட காலத்துக்கு பிறகு நானாக ஒரு கோயிலுக்கு (வாசல் வரைதான் ) போன்னான்.. அதுதான் ஞாபகத்திலை வந்தது...!!

அண்டு ஜனவறி 1 ம் திகதி கோயில் வாசலிலை வச்சு சில பெடியள் தமிழ்தாய் நாள்காட்டி விப்பாங்கள்.. அதை வாங்க வேணும் எண்டா கோயில் வாசல் வரைக்கும் போக வேண்டி இருக்கும் ஒரு ((வெறும் )) பத்து பவுண்ஸ் சை நீட்டினால் ஒரு நாள்காடி தருவாங்கள்...

என்ன கோயிலை அடிச்சு மூடினால் அந்த பெடிக்கு சனம் குடுக்கிற 10 பவுன்ஸ்கள் இல்லாமல் போகும் எனக்கு தமிழ் தாய் நாட்காட்டி கிடைக்காமல் போகும்... வீரம் பேசும் நாரதருக்கு ஒரு நட்டமும் இல்லை...!

கோயிலை மக்கள் கூடும் ஒரு இடமாய் எங்கட சனம் எப்பதான் உபயோகமாக சிந்திக்க போகுதோ தெரிய இல்லை...

நாரதர் சொல்லுறமாதிரி எல்லா கோயிலையும் இளுத்து பூட்டினால் என்ன ஆகும் எண்டு ஒருக்கா யோசிச்சு பாத்தன்...

கடந்த முறை நீண்ட காலத்துக்கு பிறகு நானாக ஒரு கோயிலுக்கு (வாசல் வரைதான் ) போன்னான்.. அதுதான் ஞாபகத்திலை வந்தது...!!

அண்டு ஜனவறி 1 ம் திகதி கோயில் வாசலிலை வச்சு சில பெடியள் தமிழ்தாய் நாள்காட்டி விப்பாங்கள்.. அதை வாங்க வேணும் எண்டா கோயில் வாசல் வரைக்கும் போக வேண்டி இருக்கும் ஒரு ((வெறும் )) பத்து பவுண்ஸ் சை நீட்டினால் ஒரு நாள்காடி தருவாங்கள்...

என்ன கோயிலை அடிச்சு மூடினால் அந்த பெடிக்கு சனம் குடுக்கிற 10 பவுன்ஸ்கள் இல்லாமல் போகும் எனக்கு தமிழ் தாய் நாட்காட்டி கிடைக்காமல் போகும்... வீரம் பேசும் நாரதருக்கு ஒரு நட்டமும் இல்லை...!

கோயிலை மக்கள் கூடும் ஒரு இடமாய் எங்கட சனம் எப்பதான் உபயோகமாக சிந்திக்க போகுதோ தெரிய இல்லை...

தயா நான் எழுதாதை எழுதி பல தடவைகள் நீங்கள் திரிப்புக்கலைச் செய்து வருகிறீர்கள்.

நான் எங்கே கோவில்களை மூட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்?

கோவில்கள் மக்கள் உடைமையாக்கப் பட வேண்டும்.கோவில் உண்டியல் தனியார் சொத்து அல்ல.அதே போல் தெருவில் தேங்காய் உடைப்பதனால் யாருக்கு என்ன பலன்? உண்டியல் காசு கடவுள் பெயரால் அல்லலுறும் மனிதர்களைச் சென்றடவைத நான் வரவேற்கிறேன்.

ஆகவே தொடர்ந்தும் நான் எழுதாதவற்றை நான் எழுதியதாக கூறி திரிப்புக்களைச் செய்ய வேண்டாம்.

கோவில்கள் மக்கள் கூடும் இடமாக மட்டும் இருப்பதில் எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.ஆனால் மக்கள் கூடி சில தனி முதலாளிகளுக்கு பணம் வழங்குவதோ அல்லது ஆயிரம் பவுண்ஸ் செல்வழித்து விழா எடுப்பதோ தேங்காய் உடைப்பதோ எந்தளவில் மனிதாபிமானம் உள்ள செயலாக இருக்கமுடியும்?

கோவில்கள் மக்கள் உடைமையாக்கப் பட வேண்டும்.கோவில் உண்டியல் தனியார் சொத்து அல்ல.அதே போல் தெருவில் தேங்காய் உடைப்பதனால் யாருக்கு என்ன பலன்? உண்டியல் காசு கடவுள் பெயரால் அல்லலுறும் மனிதர்களைச் சென்றடவைத நான் வரவேற்கிறேன்.

கோயிலை மக்கள் உடமை ஆக்கிறது எண்டா இங்கிலாந்து கோயில்களை பிறிட்டிஸ் அரசாங்கம் எடுத்து நடத்த வேணும் எண்டுறீயளோ...??

கோயில் பணம் எல்லாம் மக்களின் வரிபணம் ஆக்கலாம் நல்ல யோசனைதான்... இதைத்தானே இந்தியாவில் இந்து அறக்கட்டளையகம்கள் செய்கின்றன....! இங்கிலாந்திலை செய்தால் நிதி அமைச்சர் ரொம்ப சந்தோசப்படுவார்....!

நான் ஒண்டையுமே திரிக்க இல்லை... நீங்களே குழறுபடியாக கருத்துக்களை எழுதுகிறீர்கள்....!

கோயிலை மக்கள் உடமை ஆக்கிறது எண்டா இங்கிலாந்து கோயில்களை பிறிட்டிஸ் அரசாங்கம் எடுத்து நடத்த வேணும் எண்டுறீயளோ...??

கோயில் பணம் எல்லாம் மக்களின் வரிபணம் ஆக்கலாம் நல்ல யோசனைதான்... இதைத்தானே இந்தியாவில் இந்து அறக்கட்டளையகம்கள் செய்கின்றன....! இங்கிலாந்திலை செய்தால் நிதி அமைச்சர் ரொம்ப சந்தோசப்படுவார்....!

நான் ஒண்டையுமே திரிக்க இல்லை... நீங்களே குழறுபடியாக கருத்துக்களை எழுதுகிறீர்கள்....!

நான் எங்கே கோவில்களை மூட வேண்டு மென்று எழுதி இருக்கிறேன் என்பதைச் சுட்டிக் காட்டவும்.

யார் கருதுக்களைத் திரிக்கிறார்கள் என்று தெரியும்.

நான் எங்கே கோவில்களை மூட வேண்டு மென்று எழுதி இருக்கிறேன் என்பதைச் சுட்டிக் காட்டவும்.

யார் கருதுக்களைத் திரிக்கிறார்கள் என்று தெரியும்.

அப்ப நீங்கள் சொல்ல வாறது என்ன எண்டா புலம் பெயந்த நாடுகளிலை கோயில்கள் இருக்க வேணும் ... ஆனா அரசாங்கம் நடத்த வேணும் எண்டே..??? ^_^

ஈழத்துக்கு தேவை படும் போது கோயில் மணிகளை கழட்டி அரசாங்கமே தரும்... அதுதானே..?? :wub:

அப்ப நீங்கள் சொல்ல வாறது என்ன எண்டா புலம் பெயந்த நாடுகளிலை கோயில்கள் இருக்க வேணும் ... ஆனா அரசாங்கம் நடத்த வேணும் எண்டே..??? ^_^

ஈழத்துக்கு தேவை படும் போது கோயில் மணிகளை கழட்டி அரசாங்கமே தரும்... அதுதானே..?? :wub:

நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதிலைச் சொல்லுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

:wub: தயா, நெடுக்கு,

இது உங்கள் கவனத்திற்கு !

அட இவர்கள் "யேஸ் பாஸ்" என்று புரட்டி எடுக்கும் அடியாட்களா? சொல்லவேயில்லை! :(

  • கருத்துக்கள உறவுகள்

கோவில் மணி கிலிக்கித் தான் தம்ழீழம் காணாலம் என்பதை எவரும் நம்புவது கிடையது.

இரண்டாம் உலக யுத்தகாலத்தில் கோவில் மணிகளை உரிக்கித் தான் யுத்த தளபாடங்களை இங்கிலாந்து உற்பத்தி செய்தது.

ஆயிரம் ஆயிரம் ஈழ மக்கள் அகதிகளாக இருக்க இடமோ சாப்பிட உணவோ இல்லாது இருக்கும் போது ஈழப்பதீஸ்வரனுக்கு ஆயிரம் பவுண்சில உணிடியல் கொட்டிக் குடுக்கிற ,பாரிசில பிள்ளையாருக்கு ஆயிரம் தேங்காய் உடைக்கிற மணி கிலுக்கிகள் இருக்கும் வரை எங்களைப் போன்றோர் இதன் பகட்டுத்தனத்தை புலத் தமிழரின் கிலுசு கெட்டத் தனத்தைச் சொல்லிக் கொண்டு தான் இருப்பம். :(

திராவிடமோ, மாக்கிசம் புலம்பியோ, ஏன் கண்ணீர் கவிதை எழுதித் தான் தமிழீழம் காண்போம் என யாரும் கனவில் நினைத்தது கிடையாது.

ஈழபதீஸ்வரர் ஆலயத்தை ஜெயதேவன் அபகரிக்க முன்பு மணி கிலுக்குவதற்கு மட்டுமில்லாமல் அது ஒரு காலத்தில் தேவைப்பட்டது. தேசியம் பேசி நாட்டை விட்டு மாக்கிசம் பேசியவர் தப்பியோடி ஒதுங்கி விட, மதப் பற்றுள்ளவர்கள் புலத்தில் ஒன்றுசேரவும், நாட்டுக்குத் தேவையானதைப் பேசிக் கொள்ளவும் இந்த ஆலயங்கள் தான் தேவைப்பட்டது.

கனடாவிலும் கோவில் மணி கிலுக்கித் தான் தமிழன் ஒன்று சேருகின்றான்.

மோதகம், வடைக்காக வாசலில் வாய் திறந்து நின்றவர்களுக்கு அதை விட வேறு என்ன தெரிந்தப்போகுது என்பது நியாயமான ஒன்று தான்.

வயது முதிந்த காலத்திலும் தமிழின உணர்வு கொண்டு செயற்படும் திரு. நெடுமாறன் ஐயாவிற்கும், இதர சகோதரங்களுக்கு;ம நன்றிகள். உங்களின் உண்மையான அன்புக்கு நிகரகாக உலகத்தில் விலை மதிக்கக்கூடியதாக ஒன்றுமே இல்லை

nedumaran250_13122007.jpg

சிறீலங்காவுக்கு , இந்தியா ஆயுத உதவி செய்வதை நிறுத்துமாறு சென்னையில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை இந்திய அரசுக்கு எதிராக நடத்த முயன்ற போது தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களையும் அவரது ஆதரவாளர்கள் 164 பேரையும் இன்று சென்னை போலீஸார் கைது செய்தனர்.

மேலதிக தகவல்களுக்கு:

http://www.ajeevan.ch/content/view/1245/1/

நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதிலைச் சொல்லுங்கள் .

நீங்கள் எழுதினதுக்கு விளக்கம் என்ன எண்டுதானே கேட்டு இருக்கிறன்....???

இங்கிலாந்து கோயில்கள் அரச பொவுடமை ஆக்கவேணும்... , ஆனால் கோயில்களை மூட வேண்டாம்...! குறிப்பு இங்கிலாந்து சேர்ச்சுகள் மணிகளை உருக்கி ஆயுதம் செய்தார்கள்....!

இதன் நிகள்தகவுதான் என்ன..??? இதை விளங்கப்படுத்துங்கோ விடை கிடைக்கும்...!

அட இவர்கள் "யேஸ் பாஸ்" என்று புரட்டி எடுக்கும் அடியாட்களா? சொல்லவேயில்லை! :(

கை எடுத்தா கால் பிறீ...!! எப்படி வசதி..??

இங்கு 3 வேறு விடையங்கள் குழப்பிக் கொள்ளப்படுகிறது.

-1- ஒரு போராடும் தேசிய இனம் போராட்டத்தின் சவால்களை வெல்ல எப்படியான சிந்தனையோட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது. எமது இனம் விஞ்ஞான தொழில்நுட்ப மயப்பட்ட சிந்தனைகளை உள்வாங்கி மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கு பகுத்தறிவு அத்திவாரமாகிறது. இதற்கு பெரியாரின் சிந்தனைகள் உதவுகிறது. பெரியார் எம்மவர்கள் பின்பற்றும் மதம் மற்றும் ஏனைய மூடநம்பிக்கைகளை களைவதற்காக இயங்கியவர். எமது கலாச்சார பழக்கவழக்கப் பின்னணிகளில் இயங்கிய பெரியார் சிந்தனைகளின் மூலம் பகுத்தறிவை போதிக்க முற்படுவது பொருத்தமாகிறது. வேற்றினத்தவர்களின் பகுத்தறிவு சிந்தனைகளினூடாக இதைச் செய்ய முயன்றால் அதை வேறு விதமாக திசை திருப்ப அர்த்தப்படுத்த குழப்ப சந்தர்ப்பங்கள் அதிகமாகிறது.

தமிழ்நாட்டில் இந்தியாவில் பெரியார் மற்றும் திராவிட அமைப்புகள் எமக்காக குரல் கொடுக்கிறார்கள் என்பதற்காக நாம் பெரியார் சிந்தனைகளையோ பகுத்தறிவையோ தேட தேவையில்லை. எமது தேசிய பலத்தை கட்டியெழுப்ப எமக்கு பகுத்தறிவுச் சிந்தனை அத்தியாவசியமாகிறது.

புலம்பெயர்ந்த நாடுகளில் கோவில்கள் தமிழர்கள் கூடும் காலாச்சார இடமாக இருப்பதில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. இங்கு எப்பவும் வைக்கப்பட்ட விமர்சனம் கோவில் கட்டப்படுவது முதல் அங்கு நடக்கும் அருச்சனை திருவிழா என்று அனைத்திலும் நிரம்பி வழியும் ஆடம்பரங்கள். அந்த ஆடம்பரங்களில் விரயமடிக்கப்படும் எமது தேசிய பொருளாதார பலம். இதை மதநம்பிக்கை உடையவர்களே சீர்திருத்தம் செய்வார்களா?

இரண்டாம் உலகமா யுத்தத்தின் போது யேர்மனியிடம் அணுகுண்டு செய்யும் திட்டம் இருக்கிறது என்ற நிலையில் அதை சமச்சீர் செய்ய அமெரிக்கா (பிரத்தானியாவும் பங்களித்தது) வேகமாக அணுகுண்டு செய்யும் திட்டத்தை (Manhattan Project) ஆரம்பித்தது. யுத்தகாலத்தில் அமெரிக்க போன்ற நாடுகளுக்கே எவ்வளவோ வளத்தட்டுப்பாடுகள் இருந்தது. யுரேனியத்தை 235 செறிவு படுத்த மின்காந்த முறை ஒன்று பயன்படுத்தப்பட்டது. அதற்கு தேவையான கொயில்களை செய்வதற்கு போதிய கொப்பர் இல்லை என்ற நிலையில் அமெரிக்காவின் திறைசேரியில் சேமிப்பில் இருந்த பெறுமதி மிக்க சில்வர் 31 தொன்கள் கடனாக பெற்று கிரோசிமாவில் போடப்பட்ட little boy என்ற யுரேனியம் 235 அணுகுண்டு செய்து முடிக்கப்பட்டது. மின்காந்த முறையில் யுரேனியம் 235 செறிவாக்குவது வினைத்திறன் உள்ள முறையல்ல என்று யுத்தம் முடிந்த பின்னர் கைவிடப்பட்டது. அந்தகாலத்தில் கொப்பர் நிக்கல் போன்ற உலோகங்களிற்கு இருந்த தட்டுப்பாட்டினால் நாணயங்களில் அவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டது. பலமான நாடாக இருந்தவர்களே யுத்தம் என்று வந்து விட்டால் எல்லா வளங்களையும் பயன்படுத்தித்தான் போரிட்டார்கள். ஆனால் நாங்கள் செய்யும் விரையங்களும் அதற்கு சொல்லும் நியாயங்களும் இதே அதோ புலி அடிச்சு விழுத்தப் போகுது தனிநாடு இந்தா அந்தா வருகுது என்ற கற்பனைகளிலும் தான் எங்கடை கெட்டித்தனங்கள். இதற்கான விலையை கொடுக்கப் போபவர்கள் தாயகத்திலுள்ள மக்களும் போராளிகளும் தான் சுவார்சியமாக கதைத்து கட்டுரை எழுதிப் பொழுது போக்காட்டும் புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. ஏற்கனவே யோகரட்ணம் யோகி நிலவரம் நிகழ்ச்சியில் சொன்னது போல் தாயகத்தின் இழப்புகளும் அவலங்களும் தான் புலம்பெயர்ந்தவர்களை கொஞ்சமாவது எழுச்சி கொள்ள வைக்குது செயற்படத் தூண்டுது என்று. தாயகத்து அவலங்களும் இழப்புகளும் சர்வதேசத்தை எமது போராட்டத்தின் நியாயத்தை அறிந்து கொள்ள மாத்திரமல்ல புலம்பெயர்ந்த தமிழர்களையும் போராட்டத்தின் தேவைகளை உணர வைக்க உதவுகிறது இனியும் பாரிய அழிவுகளின் பின்னர் அறிய வைக்க உதவும் அது அதனால் ஆயிரம் ஆயிரம் தாயகத்து மக்களும் போராளிகளும் மாத்திரமல்ல ஒட்டு மொத்த போராட்டத்திற்கே காலம் கடந்த ஞானமாக மாறிவிடலாம்.

-2- தமிழர்கள் தம்மைத்தாமே ஆட்சி செய்து தமிழ்த் தேசியம் அடையளாம் என்பது என்ன என்பதை கல்வி கலாச்சார நிர்வாக மட்டங்களின் பேணியது நிலை நிறுத்தியது கடசியாக எப்போ? தமிழர் ஆட்சி தோற்டிக்கப்பட்ட பின்னர் வந்த பல விடையங்கள் இன்று எமக்கு மிகவு பரீட்சயமானதாகவும் அதன் மீது ஈர்ப்புள்ளதாகவும் இருக்கலாம். ஆனால் அவை ஒவ்வொன்றின் வரலாற்றுப் பின்னணிகளை ஆராய்ந்து அவற்றை நிராகரிப்பதற்குரிய தன்னாட்சி உரிமையைத் தொலைத்தவர்களாக பல சந்ததிகள் கடந்ததால் இன்று அவ்வாறு சிந்திப்பது கடினமானதாக இருக்கிறது.

இந்தப் பின்னணியில் தால் இராமாயணம் முதல் ஆரிய திராவிட விடையங்களைப் பார்க்க வேண்டும்.

சிங்கள பேரினவாதம் தான் போராட்டத்தைத் தூண்டியது. அந்தப் போராட்டத்தின் இறுதி இலக்கின் நியாப்பாடுகளை முழுமைப்படுத்தவும் அதற்காக தேசிய இன எழுச்சி மற்றும் அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளவும் இந்த வரலாற்றுத் திரிபுகளைப் பற்றி முதலில் நம் தெளிவு பெற வேண்டும்.

தமிழரின் தேசிய அடையாளங்கள் பழக்க வழக்கங்களை கேள்வி கேட்டு தேடல் செய்து மாற்றங்களை கொண்டு வருவது படிப்படியாக நடக்கிறது. இது பெரியர் மற்றும் திராவிட அமைப்புகளை திருப்த்திப்படுத்தவோ ஆனந்தப்படுத்தவோ நடக்கவில்லை. அதோபோல் இந்தியவையும் அதன் சக்த்தி வாயந்த இந்து அமைப்புகளும் கோவித்துக் கொள்வார்கள் என்று செய்யாது விடப்போவதும் இல்லை.

விடுதலை பெற்ற எல்லாத் தேசியங்களும் இப்படிப்பட்ட தேடல்களை செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் புகுத்திய திரிப்புகளை அகற்றினார்கள். கலாச்சார ரீதியில் ஒரு இனத்தின் அடையாளத்தை சிதைப்பது தான் ஆக்கிரமிப்பிற்கு சிறந்த வழி ஏன் என்றால் முக்கியமான மனிதவளம் சிதைக்கப்பட்டு விடும். அதை தமிழர்கள் மீது மிக வெற்றிகரமாக செய்துவிட்டார்கள் என்பதை இங்குள்ள கருத்துக்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

-3- இந்தியாவில் யார் எமக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள், எந்தப் பின்னணியைக் கொண்டவர்கள் எதிராக இயங்குகிறார்கள் என்பவை.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈ வே ராமசாமி என்ற உச்சரிப்புக்கு வெளியில் இருந்துதான் ஈழ விடுதலைப் போராட்டமே ஆரம்பமானது. கல்வி அறிவுபெற்ற சமூகத்தில் பகுத்தறிவு.. விடுதலை உணர்வு.. புரட்சிகர சிந்தனைகள் எழுவது இயல்பானது. அந்த வகையில் ஈழத்து மாணவ சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றே ஈழவிடுதலைப் போராட்டம் என்பதை அதன் வரலாறிந்தவர்கள் நங்கறிவர்.

ஈழத்தில் எந்த ஒரு கட்டத்திலும் தாடிக்கார ஈ வெ ராமசாமி போராட்டத்துக்கு முன்னோடியா மக்களிடம் காட்டப்பட்டதில்லை. அவரின் உப்புச்சப்பற்ற மொழிவுகள் கல்வி அறிவுபெற்ற ஒரு சமூகத்துக்கு தேவைப்பட்டதும் இல்லை..!

இந்தியாவில் தமிழகத்தில் அடிப்படைக் கல்வி அறிவு 56% அதே ஈழத்தில் 90%. ஈழத்தில் மக்கள் ஈ வெ ராமசாமி போன்றவர்களின் உளறல்களைக் காட்டிலும் சமூக அறிவியலூடு வாழ்க்கையை உணர கற்க வாய்ப்பைப் பெற்றிருந்தனர். மேற்குலக மட்டத்துக்கு அவர்களிடம் சிந்தனையோட்டம் இருந்தது.

மக்களிடம் மாற்றங்கள் என்பது நியாயப்பாடுகள்.. தேவைகள்.. என்பவற்றின் பால் கல்வி அறிவூட்டும் சிந்தனை எழுச்சிதான் புரட்சிகர எண்ணங்களை உருவாக்குகிறதே தவிர.. இவன் சொன்னான் அவன் சொன்னான் என்று மக்கள் மாற்றங்களை புரட்சிகளை செய்வதும் இல்லை தேடுவதும் இல்லை.

கலாசாரம் என்பதற்கு தெளிவான ஒரு நிலை உலகு எங்கனும் இருந்ததாக இல்லை. ஆனால் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் சமூகத்துக்கு சமூகம் இருந்துள்ளன. அவற்றை தக்க வைப்பது ஒரு சமூகத்தின் நடைமுறை உலகில் வரையறுக்கப்பட்டுள்ள இனத்துவ அடையாளத்துக்கு அவசியம். அந்த வகையில் தான் தமிழர்களின் கலாசார தூய்மைப்பாடு அதாவது விழுமியங்களின் அடையாளத் தேடல் செய்யப்படுகிறது. ஆனால் இன்னொரு வழியில் சமூகப் புரட்சி என்ற தோறணையில் தமிழர்களின் விழுமியங்களே இனங்காண முடியாதபடிக்கு பிற கலாசாரக் கலப்புக்கள் மூலம் கலாசார, பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில்.. பகுத்தறிவு என்று சிலரின் சமூகவியல் ஆழமற்ற கருத்துக்களை எல்லாம் மக்களிடம் திணிப்பதும் நடக்கிறது. இவை கண்டிக்கப்படுவதுடன் தவிர்க்கப்படவும் வேண்டும்.

மக்களுக்கு, கல்வி அறிவூட்டுவதுடன் நடைமுறை உலகில் வரையறுக்கப்பட்ட அம்சங்களை இனங்காண வைப்பதும் அதற்கு ஏற்ப வாழ்வியலை தீர்மானிக்க செய்வதும்.. எதிர்கால வாழ்வியலுக்கு ஏற்ப மாற்றங்களை விழுமிய இழப்புக்கள் இன்றி தேட வைப்பதுமே அவசியம். அதற்காக 60-70 வருட பழமை மிக்க கொக்கரிப்புக்களை எல்லாம் மக்களிடம் பகுத்தறிவென்று திணிப்பதிலும் நவீன கல்வியை புகட்டுவது மிக அவசியமானது. :D

Edited by nedukkalapoovan

குறுக்கர் சொல்லுறதிலை இருந்து ஒரு விடயம் நண்றாக விளகுகிறது...! அது போராட்டத்துக்கு ஒருதலைமை... அந்த தலைமையை பலப்படுத்த உங்கட அறிவுகளை வளர்க்க வேண்டும்.. அதுக்காக இன்னும் ஒரு தலைமையான பெரியாரின் சிந்தனைகளை பின் தொடரவேண்டுயது ஈழத்தவன் கட்டாயம்...! அப்பதான் எங்களை பலமாக்கி கொள்ளலாம்.... ! சரிதானே...!

சுருக்கம்மாக்க விளங்கிக்கொள்ள விரும்புபவர்கள் மட்டும் இதை வாசிக்கவும்

அதாவது தமிழீழ தேசிய தலைமைக்கு பெரியாரை போண்று சிறப்பான வளிநடத்தல் அறிவு எல்லாம் கிடையாது என்பதை கூறிக்கொள்கிறார்....

குறுக்ஸ் நல்ல தொகுப்பு

சிலருக்கு வரலாறு என்றால் என்ன தேசிய அடையாளம் எண்டா என்ன என்பது பற்றிய போதிய தெளிவு இன்மையாலும் சிறு வயது முதல் படிந்த படிபிக்கப்பட்ட சட்டகங்களுக்கு வெளியால் சிந்திக்கும் சுய சிந்தனைத் திறன் இன்மையாலும் ,இங்கு எதோ எழுத வேண்டும் என்னும் நோக்கஇல் அலமுவதும் புலம்புவதுமா இருகிறார்கள். தமது சட்டகங்களுக்கு அப்பால் சிந்திக்கும் திறன் அறவே இல்லை.

விடுதலைப்புலிகள் இதழில் , பேரா.சோஸ்காந்தன் எழுதிய வராலாற்றையும் தேசிய அடையாளத்தையும் விளக்கும் ஓர் கட்டுரையை இங்கே இணைதுள்ளேன் படிக்க வேண்டியவர்கள் படித்துப் பயன் பெறட்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=36335

தேசிய அடையாளம் என்பது ஒரு பொது வரலாற்றில் இருந்தே உருவாகிறது.இன்று சிறிலங்காவாகவும் இந்தியா ஆகவும் இருக்கும் இரண்டு நாடுகள் முன்னர் அவ்வாறு இருந்ததில்லை.இலங்கைத் தீவும் இந்தியா குறிப்பாக தென் இந்தியாவும் ஒரே பண்பாட்டுப் பிரதேசங்களாக இருந்தன.அதனால் தான் இலங்கை மீதி பல்வேறு தென் இந்திய மன்னர்கள் ஆட்ச்சி அதிகாரத்தைச் செலுத்தினர்.தென் இந்தியாவில் ஆரியர் வருகையால் ஏற்பட்ட சமஸ்கிரத மயமாக்கலும் தென் இந்தியாவில் ஏற்பட்ட மத நம்பிக்கைகளும் இலங்கை வாழ் மக்களிடமும் ஏற்பட்டது.இங்கே நாம் முன் நேற வேண்டுமாயின் எமது உண்மையான வரலாற்றை அறிவதுடன் , எமது ஆக்கிரமிப்பாளாரால் திணிக்கப்பட்ட வரலாற்று எச்சங்களைக் கருத்தியல் ரீதியாகக் க களைய வேண்டி இருக்கிறது.னாம் இந்த நவீன உலகில் முன்னோக்கி நகர இது அதியாவசியம் ஆகிறது.தேசிய அடையாளம் என்பது மாறிக்கொண்டு இருப்பது.காலத்துக்கு ஏற்றவற்றைத் தேடிக்கொள்வத்வும் காலத்துக்கு ஒவ்வாதனவற்றைக் கழித்துக் கொள்வதுவும் ஒரு இனம் எழுச்சி பெற்று வளர அத்தியாவசியமான கூறுகள்.பல் வேறு காலகட்டங்களில் இதனைப் பல்வேறு பேர் நிகழ்த்தி இருந்தனர்.

இதன் வழி வந்த ஒருவரே தந்தை பெரியார்.இங்கே இருப்பவர்கள் ஏன் இவ்வாறு முட்டி மோதிக் குழம்பிக்கொள்கின்றனர் என்பது நிதனமாகச் சிந்திக்கும் எவருக்கும் புலப்படாதா ஒரு விடயம்.எவ்வாறு சிங்கள இனப்பேரின வாதாம் சிங்கள மக்களுக்கு அந்தச் சட்டகத்துக்கு அப்பால் சிந்திக்க விடாமற் செய்கிறதோ அதே வகை நோய் இங்கு சிலருக்கும் இருக்கிறது என்பதே எனது முடிபு.இதற்கு அப்பால் சிந்திக்க முடியாதவர்களை களத்தில் நடக்கும் மாற்றங்கள் தான் மாற்றும்.எவ்வாறு தமீழ்ஈழம் என்பதே சிங்கள மக்களை பேரின்வாதா மாயையில் இருந்து விடுவிக்குமோ அதே போல் பகுதறிவின் பால் கட்டப்படும் தமிழீழம் இங்கிருப்போரை ஓர் நாள் மாற்றலாம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.