Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலிகாலம் என்பது இதைத்தானா

Featured Replies

இந்தப் பதிலுக்காகத் தான் நீர் இவ்வளவு தரமும் திருப்பித் திருப்பி ஒரே கதையைக் கேட்டுக் கொண்டிருந்தீர் எனத் தெரியும். கண்ணாடி வீட்டினுள் இருந்து கல்லெறிவது பற்றிச் சொன்னீரல்லவா? அவர்கள் எறிந்த கல் உடைத்த துவாரத்தினூடகத் தான் நான் பதிலுக்குக் கல்லெறிகின்றேன்.

அடுத்தவர்களால் கல்லெறிந்து நொறுக்கக் கூடிய கண்ணாடிகள் இருக்கிறதென்பதை இப்போதாவது ஒத்துக் கொள்கிறீர்களா?

அவற்றை மாற்றுவோம். அதன் பின் யாரும் கல்லெறிந்தாலும் எதுவும் செய்ய முடியாதல்லவா?

அதை விடுத்து தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக பிராமணிய சக்திகள் சொல்லகின்ற வலுவில்லாத காரணங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு திரிவதன் மூலம் எமது சமயத்தின் வீழ்ச்சிக்கும் அந்நிய மதங்களால் எம்மவர் கவரப்பட்டு மதம் மாறுவதற்கும் நீங்களும் துணைபோகின்றீர்கள்.

  • Replies 102
  • Views 15.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்கிருத சுலோகங்களை இனிமையாக மொழி பெயர்க்கும் தகுதி தமிழுக்கு அல்லது தமிழர்களுக்கு இல்லையென்று கூறப்பட்டது. அவற்றை ஏன் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். அதற்கான அவசியமென்ன? தேவாரத்தில் திருவாசகத்தில் திருமந்திரத்தில் மற்றும் திருமுறைகளில் பாசுரங்களில் இல்லாத பக்திச் சுவையையா சமஸ்கிருத சுலோகங்கள் தருகின்றன.

சரி கட்டாயம் மொழிபெயர்த்துத்தானிருக்க வேண்டும் என்றாலும், கம்பனறியாத, மணிவாசகர் அறியாத தேவார முதலிகள் மற்றம் புலவர்கள் நாயன்மார் அறியாத வடமொழியா, இனிமையா, புலமையா அந்தச் சுலோகங்களிலுண்டு.

ஏன் அவர்கள் அந்தக் காலத்திலேயே அதைச் செய்யவில்லை. காரணம் அந்தத் தேவையிருக்கவில்லை. தமிழிலே பக்திச் சுவை நிறையவுண்டு. இனிமையுண்டு. மாற்றானின் சுலோகத்தை நாம் மொழிபெயர்த்து அந்த இனிமையை இரவல் வாங்கவேண்டிய தேவை நமக்கிருக்கவில்லை.

இதையெல்லாம் கருத்திலெடுக்காது சும்மா வாயில் வந்தவாறெல்லாம் ஒரு பொதுக் களத்தில்? கருத்தெழுதுபவர்கள் உலகெங்குமிருந்து வரும் கேள்விக் கணைகளுக்குத் தப்பி உள்வீட்டுச் சண்டை நடத்த முடியாது. அப்படியானால் யாழ்க்களம் உங்கள் குஞ் சப்பு வீட்டுப் பிரமுகர்களுக்கு மட்டும்தான் உரியதென்றாகிவிடும்.

எங்கள் இனிய இந்து மதம் எப்படியா கீழ்த்தரமான பரப்புரைகள் மோசடிகளை மேற்குலத்திடம் இருந்து எதிர்கொள்கிறது என்று பாருங்கள்.

http://www.winnipegfreepress.com/special/a...p-4737039c.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்து சமயப் புராணக் கதைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லையென்றால் பைபிளில் உள்ள கதைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

புராணமும் இதிகாசமுமில்லாது இந்துசமயம் ஏது? வாசிக்க நகைப் பேற்படுத்தும் கருத்துக்களாயிருக்கின்றன.

வேதங்களும் ஆகமங்களும் சொல்லும் சுலோகங்களும் வழிபாட்டுமுறைகளும்தான் இந்த சமயத்தின் பூஜைகளுக்கும் யாகங்களுக்கும் அடிப்படை. அவற்றிற்கு முண்டு கொடுத்து நிற்கின்றன புராண இதிகாசங்கள்.

பிற்காலத்தில் உபநிடதங்கள் தோன்றி ஏக தெய்வக் கொள்கையை வலியுறுத்தின. ஆதிசங்கரர் உபநிஷத்துகளின் சாரமான அத்துவிதக் கோட்பாட்டை முன்வைத்து சைவ வைணவ சமயங்களை ஒன்றுபடுத்த முற்பட்டார்.

தத்துவங்கள் சமயமல்ல. ஆசார அனுஷ்டான விதிமுறைகளும் பூசை புனற்காரங்களுமே சமயமாகும்.

யோகத்தையும் ஞானத்தையும் இந்து சமயம் உரிமை கொண்டாட முடியாது. அவை புறச்சமயங்களான பௌத்தம் சமணம் போன்றவற்றிகும் உரியவை. அது மட்டுமன்றி புறச் சமயத்தவர்களாலேயே அதிகம் வளர்த் தெடுக்கப்பட்ட நெறிமுறைகள் அவை. மதங்கடந்த ஞானிகளே அவற்றை உருவாக்கினார்கள்.

பக்தியோகத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் கீதைசொல்லும் கருமயோகமும் ராஜயோகமும் இந்துக்களுக்கு (சைவ வைணவர்களுக்கு) மட்டும் உரியதல்ல. அது போல வேறு எந்த யோகத்தையும் இந்துக்கள் உரிமைகொண்டாட முடியாது.

கோயில், பூசை, விரதங்கள் வழிபாட்டு முறைகள் புராண இதிகாசங்கள், இவற்றைவிட்டால் இந்து சமயத்திற்கென்ற வேறு எதுவுமில்லை.

பார்ப்பனர்கள் எமது திருமுறைகளையும், திருப்பாசுரங்களையும் நிராகரிப்பதால் அவையும் இந்துசமயத்துக்கு உரியவையல்ல. ஆதலால் இன்றைய நிலையில்; பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் பூசைசெய்யும் கோயில்களுக்குத் தமிழர்கள் போகவேண்டிய அவசியமேயில்லை.

அவர்கள் தாம் விரும்பும் கடவுளர்களை வீட்டிலிருந்தவாறே திருமுறைகளாலும் திருப்பாசுரங்களாலும் சேவிக்க முடியும்.

ஆகவே சரியையும் வேண்டியதில்லை, கிரியையும் வேண்டியதில்லை. வீட்டிலேயே யோகத்திலிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆதலால் கோயிலிருக்கும் திசைக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வீட்டிலேயே பக்தியை வளர்ப்போமாக, முக்தியைப் பெறுவோமாக.

நாங்கள் என் கோயில்களைப் புறக்கணிக்க வேண்டும். பிறக அது பிராமணியர்களின் தனிச் சொத்தாகிவிடும்.

கோயிலுக்கப் போவோம். தேவாரம் உள்ளிட்ட திருப்பாசுரங்களால் கடவுளைத் தொழுவோம். கடவுளிடம் பேச அர்ச்சனை என்ற பெயரில் இடைத்தரகர்களை நியமிக்காமல் நாமே வணங்குவோம்.

மொத்தத்தில் பிராமணியர்களின் ஆதிக்கத்தில் இருந்து எமது சமயத்தை மீட்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இங்கு நியாயங்களும், தத்துவங்களும் பேசுகின்றவர்கள் உலகப்பொது மறையாம் பைபிளில் இருக்கின்ற அசிங்கங்களைப் பொத்திப்பொத்தி மறை என்று சொல்ல வருகின்றீர்கள் அப்படித் தானே? உங்களுடைய கருத்துக்களை எடுக்க வேண்டிய தேவை எனக்கில்லாத போதும் ஒரு சந்தேகம். இந்து மதத்தில் அடங்காத புராணக்கதைகளை இந்துமதக் கருத்துக்கள் எனச் சிலர் கோசம் போட்டபோது உங்களுடைய நியாயங்கள் எங்கு போயின?

எனவே இங்கே நியாயம் சொல்லுகின்றவர்களின் பின்ணனி நோக்குப் புரிகின்றது. பைபிளை வைத்துக் காலம் காலமாக ஏமாற்றி வியாபாராம் பேசிய கும்பல்களுக்குத் தோல்வி ஏற்படுத்தாமல் தடுக்கின்ற நாடகம் புரிகின்றது.

இது யாழ்களமானாலும் உலகிலுள்ள எல்லாத் தமிழர்களும் கருத்தெழுதும் களமாதலால் சும்மா மச்சான் மாரோடு சண்டைபிடிக்கும் சாக்கில் மற்றவர்களை ஸ்கிப் பண்ணிக்கொண்டு வாயில் வந்த படியெல்லாம் உலகப் பொது மறையான பைபிளைக் கேவலப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் (இந்துமத)ஊத்தைகளையும் பற்றிக் கேள்வி கேட்டால் பதில் சொல்லித்தானாகவேணடும்.

நண்பர் கரு வெளிப்படையாக அசிங்கத்தைப் புரட்ட வேண்டாம் என்கின்றார். என்ன செய்ய? எல்லாம் யஸ்ரினால் வந்த வினை

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இங்கே நான் பைபிளில் இருந்து இணைத்த வசனங்கள் தான் அவையே தவிர, தந்தையோடும், சகோதரனோடும் செய்கின்ற அசிங்கங்களை நான் சொந்தமாக எழுதவில்லை. அப்படிப்பட்ட அசிங்கமான சிந்தனை நீங்கள் சொல்லுகின்ற பொதுமறைக்குச் சொந்தமானது.

ஏதோ நான் தான் வாயில் வந்தபடி எழுதுவதாக நினைக்காதீர்கள். அதற்காகத் தான் பைபிள் இணைப்பு எல்லாம் கொடுத்து விட்டிருக்கின்றேன். சொல்லப் போனால் இது மேலோட்டமான அசிங்கம். என்னமும் நிறையத் தரவேண்டியிருக்கின்றது. பொய்கள்... கதைகளில் உள்ள குறைபாடுகள், ஒன்றுப் பின் முரணாகப் பேசுதல். உதாரணத்துக்கு "நானே தேவன்" என்பார். பிறகு பார்த்தால் "தேவனே, தேவனே என்னை ஏன் கைவிட்டீர்" என 3ம் சக்தியைத் தேவன் என்பார்.. என்று ஒரே பித்தலாட்டங்கள்..

சொல்லப் போனால் அசிங்கங்களின், சாக்கடைகளின் ஊற்று பைபிள்.

ஜேசுநாதர் வரலாறு பிறந்த பின்னர், 30 வயது வரைக்கும் இடையில் உள்ள வரலாறு எங்கு போய் விட்டது என்றால் திருதிரு என முழிப்பார்கள். அது வரைக்கும் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் எனக் கதை விடுவார்கள். பிறக்கும்போது அவர் கொண்டிருந்த தெய்வக் கனெக்சன் அறுபட்டுப் போய் 30 வயதில் திரும்பி வந்ததாம்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனிய இந்து மதம் எப்படியா கீழ்த்தரமான பரப்புரைகள் மோசடிகளை மேற்குலத்திடம் இருந்து எதிர்கொள்கிறது என்று பாருங்கள்.

http://www.winnipegfreepress.com/special/a...p-4737039c.html

ஏன் மேற்குலகில் 14 வயதில் டேற்றிங் அனுப்பி ஊர் முழுக்கத் தாசி ஆக்குவதில்லையோ? தேவதாசி சரி என்று சொல்லவரவில்லை. அது சமூகத்தில் இருந்து அகற்றப்ப்டடு வருகின்றது. ஆனால் அது பற்றிக் கதைக்க இவர்கள் யோக்கியம் உள்ளவர்களா?

சாய்பாபாவைப் பற்றிக் கதைக்கின்ற இவர்கள், பால்.தினகரன் போன்றவற்களைப் பற்றிக் கதைக்கமாட்டார்கள். தினகரன் மட்டும் என்ன மஜிக் காட்டுவதில்லையா? காதலா, காதலா என்ற படத்தில் இவரை கமல் நக்கலடித்தார். ஆனால் நேரே சொல்லப் பயத்தில், இந்துச் சாமியார் போலக் காட்டினார். ஏன் என்றால் இந்துக்கள் வாறவன் போறவனுக்கெல்லாம் கிள்ளுக்கீரை தானே?

எனக்கு பைபிளை வாசிக்க தலையை சுற்றும். அதை சுவரஸ்யமாக எழுதியிருக்க மாட்டார்கள். அத்தியாயம் போட்டு, எண்கள் போட்டு, கேள்விப்பட்டிராத தமிழ் சொற்களோடு இருக்கின்ற பைபிளை வாசிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

தூயவன் பொறுமையாக இருந்த வாசிக்கிறார் போல் இருக்கிறது. நல்லது. எனக்கு நாளைக்குப் பயன்படும்.

புராணங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தூயவன் சொல்கிறார். புராணங்கள் இல்லையென்றால் இந்து மதமே இல்லை. புராணங்கள்இல்லையென்றால் சிவனுக்கும் பார்வதிக்கும் என்ன சம்பந்தம்? பிள்ளையாருக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம்? இத்தனை கடவுள்களின் தோற்றத்திற்கும் அதன் உறவுமுறைகளுக்கும் புராணத்தை விட்டால், வேறு விளக்கம் ஏது?

சிவனுடைய உருவம் அப்படி இருப்பதன் காரணத்திற்கு புராணத்தை விட்டால் வேறு விளக்கம் ஏது? இந்து மதப் பண்டிகைகளுக்கு புராணத்தை விட்டால் வேறு காரணங்கள் ஏது?

புராணங்களை தூக்கி விட்டால் இந்து மதம்சூனியமாகி விடும்.

புராணங்களை நாம் தோலுரித்ததன் பிறகு அதற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லையென்கிறார்கள்.

புராணங்களை கிண்டல் செய்து, உருவ வழிபாட்டை எதிர்த்த ஞானிகள் பகுத்தறிவாளர்கள். சித்தர்கள் என்பவர்கள் இந்து மதத்தை எதிர்த்து கலகம் செய்தவர்கள். கடைசியில் இவர்கள் இறந்து பிறகு இந்து மதம் இவர்களை மோசடியாக உள்வாங்கி விட்டது.

"கலிகாலம் என்பது இதைத்தானா" என்பது ஆரம்ப இணைப்புச் செய்திக்குப் பொருந்துகிறதோ இல்லையோ அதனைத் தொடர்ந்து வரும் பிதற்றல்களுக்கு நன்கு பொருந்துகிறது. நான் அறிந்த வரை பைபிள் என்பது காட்டு மிராண்டிகளாக இருந்த மக்கள் எவ்வாறு திருத்தப்பட்டார்கள், திருந்தாவிடின் எவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள் போன்ற வரலாறுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. அவ்வரலாற்றில் காணப்படும் சிறுமைத்தனங்களைத்தான் சிலர் குறிப்பாகப் படிக்கிறார்கள் என்றால் அல்லாவிடின் அதனைப் பார்த்துத்தான் தவறிழைக்கிறார்கள் என அதன் தலைமை கருதினால் மாற்றங்களை உள்வாங்கவும் தலைமை தயங்குவதில்லை. இத்தலைமைகள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். குலம், இனம், மொழி கடந்து தலைமை உருவாக்கம் பெறுகிறது என்பது வெளிப்படை. மதம் என்பது மக்களுக்காகவே. அவை மக்களை நல்வழிப்படுத்த வேண்டுமே தவிர விதண்டாவாதக் கொள்கைளை கட்டிக்காப்பதற்காகவல்ல. காலவோட்டத்திற்கிணங்க மதங்கள் அதனோடினைந்து பரிணாமம் அடைய வேண்டும். இதற்கு லத்தீன் மொழியில் வழிபாடுகளை நிகழ்த்தி இம்மதம் பின்னர் அவ்வவ் மொழிகளில் வழிபட வகை செய்தமையை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். எனவே எங்கிருந்தும் நல்ல விடயங்களை பெறவேண்டுமே தவிர தீயவற்றையல்ல. நாலடியார் கூறுவது போல "நீரினை நீக்கி பாலினை அருந்தும் அன்னம் போல" இருப்பதே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் சபேசன்.

எல்லாத்தையும் இந்து மதம் உள்வாங்கிவிட்டது. உங்களைப் போன்றவர்களையும் இந்து மதம் தான் உள்வாங்கி வைத்திருக்கின்ற போது அவர்களை விட்டு வைத்தால் என்ன? :blink:

சித்தர்களும் சிவனை மையப்படுத்தி தியானம் இருந்தவர்களே. அவர்கள் தான் பல கோவில்களில் வழிகாட்டியாகவும் இருந்திருக்கின்றார்கள். பெரும்பாலன சித்தர்கள் எழுதிய பாடல்களும் அதையே சொல்கின்றன

நீங்கள் புராணங்களைப் பற்றிக் கதைத்த ஆரம்பகாலத்தில் இரு;நதே புராணங்கள் மதச் சிந்தனைகள் அல்ல என்பதைச் சொல்லி வந்திருக்கின்றேன். எனக்கு இப்பவும் ஞாபகமிருக்கின்றது. ஆரம்பத்தில் முருகன் சூரனை வதைத்தது சொல்கின்ற தத்துவம், ஆணவன், கன்மம், மாயைகளை அழிப்பது பற்றிய ஒரு கதை தான். புரிய வைக்க மக்களுக்கு அசுரனாகக் காட்டப்பட்டது என்று. மற்றய கதைகளும் இப்படி ஒரு காரணம் இருக்கலாம்.

நிற்க, ஆதிசங்கரர் எல்லா மதங்களையும் ஒன்றிணைத்ததால் தான் பிள்ளையார், பார்வதி, முருகனுக்குகிடையே மக்களுக்குப் புரிய வைக்கின்ற மாதிரிச் சம்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நேக்கு புரியலையே, நான் கிறித்தவன் கிடையாது இருந்தாலும் பைபிளில் இருந்த வசனங்களுக்காக கிறித்துசமயம் அதை ஏற்றுக்கொண்டதாகவோ ஊக்கப்படுத்துவதாகவோ கருதமுடியாது. இந்து சமயத்திலும்கூடத்தான் ஆண் பெண் உறவு பற்றிய பல நம்பமுடியாத கதைகள் உள்ளன.

மனிதனின் பரிணாம வளர்ச்சியின்படி இது போன்ற கதைகள் நிகழ்ந்திருக்க இன்றிலும் பார்க்க பழைய காலத்தில்தான் அதிக சந்தர்ப்பம் இருந்திருக்கமுடியும். எனவே எமது அனைவரது வம்சாவழியில் பலஆண்டுகாலம் பின்னோக்கிபார்த்தால் தந்தை-மகள், தாய்-மகன், சகோதர-சகோதரி களுக்கிடையிலான தாம்பத்திய உறவு கட்டாயம் நடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குச் சொல்கின்றீர்கள் ஒளவையார். சபேசன் புராணக்கதைகள் என்று தொடங்கும்போது சொல்லியிருந்தால் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

மேலும் பைபிளில் நான் இணைத்த கதைகளில் குறித்தவர்களின் அசிங்கத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்று எவ்விடத்திலும் குறிப்பிடவே இல்லை. சகோதரனின் வம்சாவழியை ஏற்படுத்து எனக் கர்த்தரே சொல்கின்றார். அதைத் தவிர மற்றய எந்த சந்தர்ப்பங்களிலும் யாரும் தண்டிக்கப்பட்டதாக குறிப்பிடப்படவே இல்லை

------------------------------------------------------------------------------------

நீங்கள் தப்பு ஏதும் செய்தால், கர்த்தர் உங்களின் மனைவியை வேறு ஒருவனோடு புணரச்செய்வாராம். ஆகவே கவனம்..

30. பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய்.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=28

Edited by தூயவன்

தவறுகளுக்காக அவர்களின் சந்ததிகள் தொடர்ந்து வதைக்கப்பட்டதான வரலாறுகள் பைபிளில் உண்டு. வரலாறுகளில் நல்லதும் உள்ளது, கெட்டதும் உள்ளது. நல்லவற்றை கைக்கொண்டு தீயவற்றைத் தவிர்ப்பது தான் நன்மை பயக்கும். கரும்பிருக்க இரும்பைக் கடிப்பானேன்? நல்ல விடயங்களைக் கைக்கொள்ளத் தயங்குவானேன்?

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் அதற்கான ஆதாரங்களை எதிர்பார்க்கின்றேன்.

http://www.tamil-bible.com/lookup.php?Book...&Chapter=38

8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.

9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.

10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.

இப்படிச் செய்யச் சொல்லி ஆணை போடுவதே கர்த்தர் தானுங்கோ. அவரைப் போய் யார் தண்டித்தார்களோ?

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கடவுளை ஒரு மனிதனாகவும் யார் யாரோடு சேர வேண்டுமென்னும் விதியை வகுத்தவனாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது அப்படியல்ல அந்த அந்தக் காலங்களில் இருந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மனிதனின் மனச்சாட்சியாக இருந்து செயற்படுபவரே கடவுள்.

மற்றும்படி கைலாய மலையில் கழுத்தில் பாம்போடு பக்கத்தில் யானை முகப் பிள்ளையை வைத்துக் கொண்டு நெறிமுறைகளை அவர் வகுத்துக்கொணடிருக்கவில்லை.

ஏசு பிரான் தன்னை யூதகளின் ராஜாவென்று கூறினார். அவரின் பிறப்புப்பற்றி அவருக்குத் தெரியாது ஆதலால் அவரைத் தேவகுமாரனென்று மற்றவர்கள் கூறியபோது அவர் அதை மறுக்காமல் கர்த்தரைத் தன் பிதாவாகப் போற்றினார். ஆனால் அவர் தன்னை மனுசகுமாரனென்றே கூறிக்கொண்டார். அவர் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு மறுநாள் நடக்கப்போகும் ஆக்கினைகளை எதிர்வுகூறி வியாகூலப்பட்டார். ஒரு மனிதனாகத் தச்சுத் தொழிலாழியாக வாழ்ந்த அவர் முப்பது வயதுக்குப் பிறகு அடைந்த ஞானத்தினால் பக்குவப்பட்டு மக்கள்முன் தோன்றினார். இங்கே எந்த ஒளிவு மறைவுமில்லை.

சிலுவையில் வேதனை தாங்காது துடித்தபோது மனுசகுமாரனான யேசு ஒரு மனிதனாகவே வேதனைப்பட்டு ~ஏலே ஏலே லாமா சபக்ஸ்தானி (என் பிதாவே என் பிதாவே என்னை ஏன் இவ்வுலகில் பிறப்பித்தீர்)| என்றவாறு உணர்விழந்தார்.

~நான் படப்போகும் வேதனைகளும் துன்பங்களும் மனித குலத்திற்காகவே. நான் உங்களுக்காக எல்லாப் பாவங்களையும் சுமக்கிறேன். எனது வழியில் கர்த்தரைப் போற்றி உங்கள் பாவங்களிலிருந்து விடுதலையடையுங்கள். நான் வழியும் சத்தியமும் ஜீவனுமானேன் என்னாலே என் பிதாவினிடத்தை அடையுங்கள் என்று மக்களுக்குக் கூறிச் சென்றார்| இன்று கோடிக்கணக்கானோர் அவரைத் தம் ரட்சகராகப் போற்றுகிறார்கள்.

ஆனால் மதவெறியர்களோ அவர் கூறியதைத் திரித்து அவர் தன்னை மட்டுமே ரட்சகராகப் போற்றும்படி கூறியதாகச் சொல்லி ஏனைய மகான்களையும் சமயங்களையும் இகழ்கின்றார்கள்.

இதற்கு ஏசு பிரானைப் பொறுப்பாக்க முடியாது. சைத்தான் வேதத்தைப் போதித்துப் பரப்புபவர்களே இதற்குப் பொறுப்பு.

புதிய ஏற்பாட்டில் மலைப்பிரசங்கம் எல்லாச் சமயத்தவர்களும் அனுபவித்துப் படிக்கக் கூடிய ஒரு பொக்கிசமாகும்.

பைபிளைக் குறை கூறுவது மிகவும் தவறு. அதனைத் திரிவு படுத்திவர்கள் அதன் பொதுத்தன்மையை அதாவது எல்லா மனிதர்களும் ஏற்கக்கூடிய அம்சங்களைத் திரிவுபடுத்திக் கெடுத்துக் கொண்டே செல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் அதற்கான ஆதாரங்களை எதிர்பார்க்கின்றேன்.

இப்படிச் செய்யச் சொல்லி ஆணை போடுவதே கர்த்தர் தானுங்கோ. அவரைப் போய் யார் தண்டித்தார்களோ?

தூயவா தனியொரு ஆளாக கலக்கி கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.one man army.

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி எல்லாத்துக்கும் இந்துமதம் தானா?

பைபிளில் நான் இதுவரைக்கும் இப்படி கேள்விபட்டதே இல்லையே.......

நன்றி இணைப்புக்களுக்கு.....

தாக்குதல் தொடரட்டும்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கடவுளை ஒரு மனிதனாகவும் யார் யாரோடு சேர வேண்டுமென்னும் விதியை வகுத்தவனாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். அது அப்படியல்ல அந்த அந்தக் காலங்களில் இருந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு மனிதனின் மனச்சாட்சியாக இருந்து செயற்படுபவரே கடவுள்.

மற்றும்படி கைலாய மலையில் கழுத்தில் பாம்போடு பக்கத்தில் யானை முகப் பிள்ளையை வைத்துக் கொண்டு நெறிமுறைகளை அவர் வகுத்துக்கொணடிருக்கவில்லை.

ஏசு பிரான் தன்னை யூதகளின் ராஜாவென்று கூறினார். அவரின் பிறப்புப்பற்றி அவருக்குத் தெரியாது ஆதலால் அவரைத் தேவகுமாரனென்று மற்றவர்கள் கூறியபோது அவர் அதை மறுக்காமல் கர்த்தரைத் தன் பிதாவாகப் போற்றினார். ஆனால் அவர் தன்னை மனுசகுமாரனென்றே கூறிக்கொண்டார். அவர் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்னதாகவே தனக்கு மறுநாள் நடக்கப்போகும் ஆக்கினைகளை எதிர்வுகூறி வியாகூலப்பட்டார். ஒரு மனிதனாகத் தச்சுத் தொழிலாழியாக வாழ்ந்த அவர் முப்பது வயதுக்குப் பிறகு அடைந்த ஞானத்தினால் பக்குவப்பட்டு மக்கள்முன் தோன்றினார். இங்கே எந்த ஒளிவு மறைவுமில்லை.

சிலுவையில் வேதனை தாங்காது துடித்தபோது மனுசகுமாரனான யேசு ஒரு மனிதனாகவே வேதனைப்பட்டு ~ஏலே ஏலே லாமா சபக்ஸ்தானி (என் பிதாவே என் பிதாவே என்னை ஏன் இவ்வுலகில் பிறப்பித்தீர்)| என்றவாறு உணர்விழந்தார்.

~நான் படப்போகும் வேதனைகளும் துன்பங்களும் மனித குலத்திற்காகவே. நான் உங்களுக்காக எல்லாப் பாவங்களையும் சுமக்கிறேன். எனது வழியில் கர்த்தரைப் போற்றி உங்கள் பாவங்களிலிருந்து விடுதலையடையுங்கள். நான் வழியும் சத்தியமும் ஜீவனுமானேன் என்னாலே என் பிதாவினிடத்தை அடையுங்கள் என்று மக்களுக்குக் கூறிச் சென்றார்| இன்று கோடிக்கணக்கானோர் அவரைத் தம் ரட்சகராகப் போற்றுகிறார்கள்.

ஆனால் மதவெறியர்களோ அவர் கூறியதைத் திரித்து அவர் தன்னை மட்டுமே ரட்சகராகப் போற்றும்படி கூறியதாகச் சொல்லி ஏனைய மகான்களையும் சமயங்களையும் இகழ்கின்றார்கள்.

இதற்கு ஏசு பிரானைப் பொறுப்பாக்க முடியாது. சைத்தான் வேதத்தைப் போதித்துப் பரப்புபவர்களே இதற்குப் பொறுப்பு.

புதிய ஏற்பாட்டில் மலைப்பிரசங்கம் எல்லாச் சமயத்தவர்களும் அனுபவித்துப் படிக்கக் கூடிய ஒரு பொக்கிசமாகும்.

பைபிளைக் குறை கூறுவது மிகவும் தவறு. அதனைத் திரிவு படுத்திவர்கள் அதன் பொதுத்தன்மையை அதாவது எல்லா மனிதர்களும் ஏற்கக்கூடிய அம்சங்களைத் திரிவுபடுத்திக் கெடுத்துக் கொண்டே செல்கிறார்கள்.

இதை இதைதான்....பைபிளின் புனித தன்மையை பாதுகாக்க இத்தனைபேர் சப்பைக்கட்ட்டு கட்டுகிறார்கள்....இந்து மதத்தை மட்டும் வாறவன் போறவன் எல்லாம் நக்கல் அடிக்கின்றீர்கள்....அதுவும் புராணக்கதைகளை காட்டி...

தூயவன் பைபிளில் இருப்பதை அப்படியே தந்திருக்கிறார்....

எங்கேயே ஐயா திரிச்சிருக்காங்க....

திரிச்சது இங்க இல்லை...அங்க.....

இளிச்சவாயாங்களா.....இந்துக்கள்

.....

பைபிளின் அசிங்கங்களை நிறுட்த்தாதீர்கள் தூயவன்....

இங்கே நிறைய பேர் பயப்படுவதை பார்த்தா இன்னும் நிறைய்ய மேட்டர் வரும்போல இருக்கே.....

நண்பர்களே தயவுசெய்து வீணான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்த்து நாங்கள் எல்லோரும் தமிழர்கள் என்று ஒன்று பட்டு நில்லுங்கள். இந்துமதம் இந்துமதத்தை எதிர்ப்போருக்கிடையிலான வாக்குவாதத்தில் கிறிஸ்தவர்களுடைய மனத்தையும் புண்படுத்துகிறீர்கள். எல்லோரும் ஒற்றுமையாக தமிழீழத்தின் விடிவை நோக்கி பாடுபடவேண்டிய காலம். உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமதம், கிருத்துவ மதம் இஸ்லாம், பௌத்தம் எல்லாத்தையும் தூக்கி உடப்பில போடுங்கையா...! அதோட பெரியாரையும் கழட்டி விடுங்கோ..! இங்க உள்ள சில நூறு சிங்களவன் என்னடா எண்டால் கன்சர்வேட்டிவ் எம். பி. மூலமா பெட்டிசன் குடுத்து புலிகளுக்கு எதிரா பாராளுமன்றத்தில கொண்டு வாறான். :icon_mrgreen: நாங்கள் மதத்தையும் பெரியாரையும் கட்டி அழுகிறம்.

ஆராலயும் கடவுள் இருக்கெண்டும் சொல்லேலாது.. இல்லையெண்டும் சொல்லேலாது. ஒரேவழி, பிள்ளையளை டிசிப்ளின் பண்ணுறதுக்கு மதத்தைக்காட்டி உபதேசிக்கலாம். வளர்ந்த பிறகு அவையளுக்கு என்ன செய்யவேணுமெண்டு தெரிய வரும். இதுக்குள்ள என்ன ஆயிரத்தெட்டு அடிபிடி? :icon_mrgreen:

Petition against LTTE terrorism submitted to Canada House of Commons

Canadian Parliamentarian Art Hanger yesterday (April 8) presented a civic petition against LTTE terrorist activities on the Canadian soil before the House of Commons. The MP who represents Calgary Northeast, speaking on the petition said that it is on the subject of eradicating terrorism with special reference to the Sri Lankan based terrorist organization Liberation Tigers of Tamil Eelam (LTTE).

`I am honoured to present a petition submitted to this House by 1,068 Canadian residents throughout the length and breadth of this country on the subject of eradicating the scourge of international terrorism, with special reference to Sri Lanka` MP Hanger said.

He further noted that the petitioners have expressed their appreciation of the ban imposed on LTTE terrorists by Canadian government in 2006, following similar action taken by the U.S.A., India, the UK and the EU, which recognized the true nature of this terrorist outfit.

Speaking about the petitioners` main concerns, MP Hanger said, ` the petitioners respectfully seek that Canada fully cooperate with the legal and democratically elected government of Sri Lanka that it live up to its legal obligations in combating international terrorism and take all measures to prevent the raising of funds within this jurisdiction for terrorist warfare in Sri Lanka`.

`I am pleased to table this petition for the consideration and necessary action of the House`, he concluded.

LTTE is a ruthless terrorist outfit fighting for a mono ethnic separate homeland for the Tamils living Sri Lanka since 1983. During its three decades terrorists campaign, over 70,000 Sri Lankan citizens have lost their lives. The outfit fund its terrorist activities mainly through their front organizations operating in developed countries including Canada. In its latest savagery, LTTE killed 14 civilians including a government minister, former national marathon champion, national athletic coach and many athletes including schoolchildren when it carried out a suicide bomb blast targeting a national sport event on last Sunday.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thooyavan... very good investigation for the people who talk nasty about hindusm. Nice work, keep it up and bring more detailed information.

தூயவா தனியொரு ஆளாக கலக்கி கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.one man army.

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி மாதிரி எல்லாத்துக்கும் இந்துமதம் தானா?

பைபிளில் நான் இதுவரைக்கும் இப்படி கேள்விபட்டதே இல்லையே.......

நன்றி இணைப்புக்களுக்கு.....

தாக்குதல் தொடரட்டும்.......

ஆரம்பம் அப்பா - மகள் உறவு பற்றித் தொடங்கி , இப்போ ஆளாளுக்கு சேறடிப்பதலேயே தொடர்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது அப்பா - மகள் உறவே பறுவாயில்லைப் போல் தோன்றுகின்றது. :icon_mrgreen::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் அப்பா - மகள் உறவு பற்றித் தொடங்கி , இப்போ ஆளாளுக்கு சேறடிப்பதலேயே தொடர்கின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது அப்பா - மகள் உறவே பறுவாயில்லைப் போல் தோன்றுகின்றது. :icon_mrgreen::icon_mrgreen:

சொன்னால் நம்பமாட்டீர்கள் மேலுள்ள கருத்துகளை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் இதைத்தான் நினைத்தேன்............. அட என்ன அதிசயம் வசம்பு அவர்கள் அப்டியே எழுதி வைத்திருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். வசம்பு பைபிளில் இருப்பதைப் படிச்சால், இது எல்லாம் தப்பில்லை போலத் தான் தோணும். சிலர் அதைப் புனிதம் என்கின்றார்கள்.

ஆமாம். வசம்பு பைபிளில் இருப்பதைப் படிச்சால், இது எல்லாம் தப்பில்லை போலத் தான் தோணும். சிலர் அதைப் புனிதம் என்கின்றார்கள்.

இதவிடக் கேவலமானவாகவும் வழிகாட்டுற இந்து மதத்தையும் தான் சிலர் புனிதம் என்கின்றார்கள்.

மதங்கள், பைபிள், குர்ரான், வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் எதுவுமே புனதம் அல்ல.

இவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைக்கு வாழ்ந்த மனிதனுக்கு ஏற்றபடியும், ஆன்றைக்கு ஆள்பவன் தொடர்ந்து ஆள்கின்ற படியும் உருவாக்கப்பட்டவைகள்.

இவைகளை இன்றைக்கும் பின்பற்ற நினைப்பவன் முட்டாள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.