Jump to content

அவையளுக்கு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கோம் தியேட்டரில் சிவாஜி படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் சிவா.யாரப்பா வந்தது என்று மனைவி புஷ்பாவின் குரல் கேட்டும்,கேட்காதவன் போல் சிவாஜி படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தான். இங்கை உத நிற்பாட்டுங்கோ எத்தனை தரம் தான் இதை போட்டு போட்டு பார்க்கிறியள் அலுக்கவில்லையோ உங்களுக்கு அப்படி என்ன தான் ஸ்ரேயவில் இருக்கு என்று அன்பு கலந்த அதட்டலாக கேட்டாள் புஷ்பா.

இல்லையப்பா நான் அவளை ரசிக்கவில்லை இந்த நம்மன்ட ரஜனியை தான் ரசித்தனான் என்னை விட பத்து வயசு கூட ஆனாலும் பாரும் மேக்கப் போட்டு எவ்வளவு இளமையாக இருக்கிறார் இளசுகளோடும் எவ்வளவு ஸ்டைலா டான்சும் ஆடுகிறார் பாரும் என்றவனை,இங்கப்பா சும்மா அலட்டாமல் யார் உங்க வந்தது என்று சொல்லுங்கோ.

நான் "ஸ்பாவில்" இருந்தனான் அதுகுள்ள இருந்தால் உங்களுக்கு தெரியும் தானே வெளியிளே வரவே விருப்பம் இருக்காது வேலைக்கு போயிட்டு வந்தது மேலேல்லாம் ஒரே அலுப்பா இருக்குது அது தான் அதுகுள்ள கொஞ்சம் கூட நேரம் ஸ்பேன்ட் பண்ணிணான் அது சரி இப்ப யார் வந்திட்டு போனது என்று சொல்லுங்கோ.

அது என்னுடைய பிரண்ஸ் அது தான் யார் என்று கேட்கிறேன்.எனக்கு விளங்குது யார் வந்தது என்று இங்கே அப்பா எங்களுக்கு வீட்டு கடன்,கார் கடன்,பிள்ளைகளின் படிப்பு சரியான பிரச்சினைகள் இருக்கு இதில அவைக்கும் காசு கொடுக்கிறது என்றா நாங்க எங்க போறது??என்று வழமையான பல்லவியை பாடி முடித்தாள் புஷ்பா.இந்த பிரச்சினையை தான் நானும் இரண்டும்,மூன்று தடவை சொல்லி ஒரு மாதிரி சமாளித்து விட்டன் ஆனால் இந்த முறையும் அப்படி சமாளிக்க மனம் இடமளிக்குது இல்லை இந்த முறை அவைகளுக்கு கொஞ்சமாவது கொடுக்க தான் வேண்டும் நீர் சொன்ன வீட்டு கடன்,கார் கடன் அந்த கடன் இந்த கடன் எல்லாம் இருக்கும் போது தானே "கோம் தியேட்டர்,சுவீமீங் பூல்,ஸ்பா" என்று எல்லாம் எங்களின்ட வீட்டிற்கு செய்தனாங்கள் ஆனால் அவைகளுக்கு கொஞ்சம் பணம் கொடுக்கிறது என்றா மனம் வருதில்லை என்ன?கொஞ்சம் உணர்ச்சிவசபட்டவனாக கேட்டான் சிவா.

சுவீமீங் பூல்.ஸ்பா,கோம் தியேட்டர் அந்த வசதிகளை தேவையில்லாம இதுகுள்ள எடுக்க வேண்டாம் இங்க நாங்க உழைக்கிறோம் ஒழுங்காக டக்ஸ் கொடுக்கிறோம் ஆனாபடியா அதுகளை அநுபவிக்க தானே வேண்டும் மேலும் இங்கே எல்லாரும் வசதியாக தான் இருக்கிறார்கள் என்றா புஷ்பா.

உவையள் ஊரில கொடுக்கு கட்டி கொண்டு பங்கு கிணத்தில குளித்து இரண்டு வருசதிற்கு ஒருக்கா டவுன் தியேட்டரில பஸ்சில படம் பார்த்து வந்த கோஷ்டிகளின் பிள்ளைகள் இவர்களுக்கு இப்ப.ஸ்பா,சுவிமீங் பூல்,கோம் தியேட்டர் எல்லாம் தேவைபடுகிறது ஆனால் "அவையளுக்கு கொடுக்கிறது என்றா மட்டும் சட்டம் கதைக்க வந்திடூவீனம்"என்று உரக்க கேட்க வேண்டும் போல இருந்தது சிவாவிற்கு இருந்தும் மெளனமாக இருந்தான் காரணம் அவனுக்கே புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உவையள் ஊரில கொடுக்கு கட்டி கொண்டு பங்கு கிணத்தில குளித்து இரண்டு வருசதிற்கு ஒருக்கா டவுன் தியேட்டரில பஸ்சில படம் பார்த்து வந்த கோஷ்டிகளின் பிள்ளைகள் இவர்களுக்கு இப்ப.ஸ்பா,சுவிமீங் பூல்,கோம் தியேட்டர் எல்லாம் தேவைபடுகிறது ஆனால் "அவையளுக்கு கொடுக்கிறது என்றா மட்டும் சட்டம் கதைக்க வந்திடூவீனம்"என்று உரக்க கேட்க வேண்டும் போல இருந்தது சிவாவிற்கு இருந்தும் மெளனமாக இருந்தான் காரணம் அவனுக்கே புரியவில்லை.

புத்து கேட்டீங்கப்பா ஒரு கேள்வி நாக்கப் புடுங்கிக்கறது போல..!

ஆனா..உந்தக் கதைகலெல்லாம் எருமை மாட்டில மழை பெய்யுறது போலத்தான்.. நம்ம சனத்தட்டைப் போய் சேரும்..! :icon_mrgreen:

Posted

நன்றி புத்தன் உங்கள் சிறு கதைக்கு.

சுவீமீங் பூல்.ஸ்பா,கோம் தியேட்டர் அந்த வசதிகளை தேவையில்லாம இதுகுள்ள எடுக்க வேண்டாம் இங்க நாங்க உழைக்கிறோம் ஒழுங்காக டக்ஸ் கொடுக்கிறோம் ஆனாபடியா அதுகளை அநுபவிக்க தானே வேண்டும் மேலும் இங்கே எல்லாரும் வசதியாக தான் இருக்கிறார்கள் என்றா புஷ்பா.

30 வருடம் போராட்டம் இழுபடுவதற்கு முதலாவது காரணம் எமது சுயநலம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதைக்குள் நல்லதொரு கரு புத்ஸ்!!! :wub::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துகளை பகிர்ந்து கொண்ட நெடுக்ஸ்,நுணாவிலன்,சுவி ஆகியோருக்கு நன்றிகள்.. :)

Posted

ஏன் பா சிவா மெளனமாக இருந்தாரு? ஹீஹீ நல்லா சொல்லி இருக்கிறேள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

புத்து மாமா. அண்ணாமார் வீட்டை போகேக்கை வீட்டுக்குள்ள இருந்து கொண்டு கதவை திறக்காத ஆக்களை பற்றியும் ஒரு கதை எழுதுங்கோவன்.

நல்லாயிருக்கு கதை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கதை. இங்கு சிட்னியில பலருக்கு 4 ,5 வீடுகள் இருக்கிறது. பணக்காரர்கள் இருக்கிற இடங்களில் எல்லாம் வீடுகள் வாங்கினாம். ஆனால் ஊருக்கு கொடுக்க வேணுமென்றால் தங்களால் முடியாது.வாங்கிய வீடுகளுக்கு வட்டி கட்ட வேணும் எங்கினம். கோயில் ,சாத்திரிமார், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் என்றால் அள்ளி அள்ளிக் கொடுக்கினம். உதுகளைத் திருத்த முடியாது. நாய் வாலை நிமிர்த்தமுடியுமா?

Posted

புத்தன் அண்ணாவின்

"அவையளுக்கு" வாசித்தேன்

குட்டி கதை என்றாலும்

படிபினை தர கூடியதாக

இருந்தது.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்துகளை பகிர்ந்து கொண்ட வெண்ணிலா,இன்னிசை,கந்தப்பு,கன

Posted

மாம்ஸ்.."அவையளுக்கு" என்ற குட்டிகதை மூலம் அவையள் படும் பாட்டை சோர்ட் அன்ட் சுவீட்டா சொல்லி போட்டியள் நன்னா இருக்கு வாழ்த்துக்கள் மாம்ஸ்.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.