Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா நாட்டின் மதிப்புக்குரிய பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வெண்ணிலா இது தான் அந்த காண்டாமிருகம்.

தனது நாட்டுக்குடி மக்களிற்கு அந்த நாட்டின் தலைமை அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரிபன் கார்ப்பர் அவர்களே தமிழரின் பண்டிகை ஒன்றிற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் முதலாவது கனேடிய தலைமை அமைச்சராவார். கடந்த ஆண்டும் தனது வாழ்த்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரிபன் காரப்பரின் வாழ்த்திற்கு வரவேற்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக வசைபாடப்படுகிறது. இதன் உச்ச கட்டமாக மகிந்த ராஜபக்சவின் வாழ்த்தும் ஸ்ரிபன் கார்ப்பரின் வாழ்த்தும் எங்கள் கள உறவு ஒன்றிற்கு ஒரே மதிரித் தெரியுதாம். என்ன செய்ய.................... .........

உந்த தமிழோசைக்காரான் சும்மா எட்டப்பன் கூட்டம் ,சாதிக்கூட்டம் எல்லாம் ஏதோ பெரிய கூட்டங்கள் நடந்த மாதிரி செய்தி கொடுப்பாங்கள் .ஆனால் நேற்றையதினம் ஒஸ்லோவில் நடந்த முக்கிய ஈழத்தமிழரின் பிரச்சனை சார்பான மாநாடு பற்றி ஒரு மூச்சு கூட விடவில்லை. ...............................

இன்று இலண்டனில புத்தாண்டு நிகழ்ச்சியை சிங்கள அமைப்பு ஒழுங்கு செய்து காலை முதல் மாலை வரை நடத்தினவை அங்க சோத்துக்கு வழியில்லாம நக்கி பிழைக்கிற பெரிய தமிழர்களும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி, சோறு பிச்சை எடுத்தும் சாப்பிட்டவையாம்.

சிங்களதூதுவரும் வந்தவராம். இப்பிடி இழிசெயல்கள் எல்லாம் ஒளிச்சு நடக்குது.

ஓம் . வெண்ணிலா நல்ல வடிவான பிரதமர், ஆனால் சிறீல்ங்கா பிரதமரின் வடிவுக்கு என்ன குறைச்சல்.

உங்களிடம் றட்ணசிறியின் படம் இருந்தால் இணைத்து விடுங்கள்.

உங்களின் ஆசைக்காக இந்த கொடுமையான செயலை செய்கின்றேன்

Ratnasri%20Wickramanayake4.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் ஆசைக்காக இந்த கொடுமையான செயலை செய்கின்றேன்

Ratnasri%20Wickramanayake4.jpg

ஈழவன் வாழ்க்கையில் மிகப்பெரும் பாவம் செய்து விட்டீர்கள்.கர்த்தர் உங்களை மன்னித்து ஆசீர்வதிப்பாராக..ஆமென்.

அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

tny06.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த தமிழோசைக்காரான் சும்மா எட்டப்பன் கூட்டம் ,சாதிக்கூட்டம் எல்லாம் ஏதோ பெரிய கூட்டங்கள் நடந்த மாதிரி செய்தி கொடுப்பாங்கள் .ஆனால் நேற்றையதினம் ஒஸ்லோவில் நடந்த முக்கிய ஈழத்தமிழரின் பிரச்சனை சார்பான மாநாடு பற்றி ஒரு மூச்சு கூட விடவில்லை. ...............................

இன்று இலண்டனில புத்தாண்டு நிகழ்ச்சியை சிங்கள அமைப்பு ஒழுங்கு செய்து காலை முதல் மாலை வரை நடத்தினவை அங்க சோத்துக்கு வழியில்லாம நக்கி பிழைக்கிற பெரிய தமிழர்களும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி, சோறு பிச்சை எடுத்தும் சாப்பிட்டவையாம்.

சிங்களதூதுவரும் வந்தவராம். இப்பிடி இழிசெயல்கள் எல்லாம் ஒளிச்சு நடக்குது.

தமிழோசையின் நயவஞ்சம் என்றோ அறிந்தது தான். அதற்காக எட்டப்பர் புதுவருடம் கொண்டாடுகினம் என்ற செய்திக்கு என்ன சம்பந்தம்.

ஏன் உந்தத் துரோகிகள், எட்டப்பர் கூட்டம் எல்லாம் ஒரு காலத்தில் தமிழீழம் காணப் போறம் என்று போராடினவை என்பதற்காக, அது தப்பாகிடுமா? அத்தலைப்பினுள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று புரியவில்லை.

தினக்குரலின் ஆசிரியர் தலையங்கம்

சம்பிரதாயபூர்வ வாழ்த்துக்கள் விடிவை ஏற்படுத்தப் போவதில்லை

பிறக்கும் புத்தாண்டு வாழ்வின் இருள் நீங்கி ஒளிமயமானதாக பிரகாசிக்கட்டுமென்ற வாழ்த்துக்கள் அரசியல், மதத் தலைவர்களிடமிருந்து ஊடகங்கள் வாயிலாக வந்து குவிந்தவண்ணமுள்ளன.

இவை சம்பிரதாயபூர்வமானதானவையாக இருப்பினும் நல்லதே நடக்க வேண்டும் என்ற மனித மனங்களின் இயல்பான எதிர்பார்ப்புகளே இவை என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இலங்கையரைப் பொறுத்தவரை புத்தாண்டுப் பண்டிகையை துயரமான நினைவுகளுடனும் பதற்றத்துடனுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இலங்கை மக்களைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கனத்த இதயங்களுடனேயே நாட்களைக் கழிக்கும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடுதல், தடுத்துவைத்தல், இடம்பெயர்வு,பொருளாதாரப் பிரச்சினைகளென சொல்லொணா அவலங்களுடனேயே நாட்களை விரக்தியுடன் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு குடும்பங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இயற்கையை மீறிய இழப்புகளையும் அவலங்களையும் எதிர்கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இயல்பு வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்ற மக்களின் எதிர்பார்ப்பு கானல் நீராகவே உள்ளது.

தமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முடியாமல் ஏதோ ஒரு விதத்தில் துன்பங்கள் அவர்களைப் பாதித்து விடுகின்றன. அரசாங்கத்தினால் பிரஜைகளைப் பாதுகாக்க முடியாத அவல நிலையே தொடர்கின்றது. சட்டம் உரிய நடவடிக்கையை எடுக்குமெனவும் விசாரணைகள் நடத்தப்பட்டு உரியமுறையில் நீதி கிடைக்குமெனவும் அதிகாரத்திலுள்ளோரால் வழங்கப்படும் உறுதிமொழிகள் காற்றில் பறந்துவிடும் நிலைமையே பரவலாக காணப்படுகின்றது.

இனங்கள் மத்தியில் பிளவுகளை அதிகரிக்கும் விதத்திலேயே பெரும்பாலான அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். உள்ளொன்றும் உதட்டிலொன்றுமாகவே அதிகாரத்திலுள்ளோர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சகல சமூகங்களும் சமத்துவமாக நடத்தப்படுவதாகவும் பிரச்சினைகளை கலந்தாலோசனைஇ விட்டுக்கொடுத்தல்இ கருத்தொருமைப்பாட்டுடன் தீர்த்து வைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் உறுதிமொழிகள் ஏராளமாக அள்ளி வீசப்படுகின்றபோதும் நடைமுறையில் எந்தவொரு பலாபலன்களையும் மக்கள் அனுபவிப்பதாக தெரியவில்லை.

இலங்கையில் இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே எனவும் அதனை முறியடித்து வெற்றி கொண்டால் நாட்டில் வேறு எந்தப் பிரச்சினையையும் சுலபமாக எதிர்கொள்ள முடியுமெனவும் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் திரும்பத்திரும்பக் கூறிவரும் நிலைமையே தொடர்ந்தவண்ணம் உள்ளது.

இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏனைய சமூகங்களுக்கு உள்ள குறிப்பாக பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களுக்கு உள்ள உரிமைகள் இருக்கின்றதென்பதைப் பல அரசியல் தலைவர்கள் வெளிப்படையாகக் கூறுகின்ற போதும் அவர்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் எதிர்மாறானவையென்பதை கடந்த கால வரலாறு குறிப்பாக இலங்கைத்தீவு பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் அம்பலமாக்கியுள்ளன.

பொருளாதார நெருக்கடியால் சகல சமூகங்களும் பிரச்சினையை எதிர்நோக்குவது பொதுவான விடயமாகும். ஆனால்இ தமது இருப்புக்காகஇ உயிர் வாழ்வுக்காக அன்றாடம் அவலங்களை சந்தித்துக் கொண்டு காலம் கடத்துபவர்களாக தமிழ் மக்கள் உள்ளனர்.

"தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்று தம்மைத்தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்பவர்களாகவே பெரும்பாலானோர் உள்ளனர்.

வன்முறைகளிலிருந்தும் விடுபட்டு அமைதி வாழ்வை முன்னெடுப்பதற்கு தற்போது தமிழ் மக்களுக்கு ஒரேயொரு பற்றுக்கோடாக இருப்பது சர்வதேச சமூகமேயாகும். சர்வதேச சமூகத்தின் தலையீட்டுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதே முக்கியமான பிரச்சினையாகும். அதற்குரிய மனப்பக்குவம் அதிகாரத்திலுள்ளவர்கள் மத்தியில் வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். ஆனால்இ இலங்கையைப் பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அதற்குரிய பக்குவமும் முதிர்ச்சியும் குதிர்ந்து வருவதற்கான காலம் வெகு தொலைவில் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

காட்டு எருமையின் படம் இணைத்தமைக்கு நன்றி ஈழவன்.

"தைத் திருநாளே தமிழர்களின் புத்தாண்டு" என்ற செய்தியை கனடாப் பிரதமருக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த முறை அவர் தைத் திருநாளுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இன்று இலண்டனில புத்தாண்டு நிகழ்ச்சியை சிங்கள அமைப்பு ஒழுங்கு செய்து காலை முதல் மாலை வரை நடத்தினவை அங்க சோத்துக்கு வழியில்லாம நக்கி பிழைக்கிற பெரிய தமிழர்களும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி, சோறு பிச்சை எடுத்தும் சாப்பிட்டவையாம்.

சிங்களதூதுவரும் வந்தவராம். இப்பிடி இழிசெயல்கள் எல்லாம் ஒளிச்சு நடக்குது.

புதிய தலைப்பில் ஆரம்பித்துள்ளேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=37372

Edited by சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தைத் திருநாளே தமிழர்களின் புத்தாண்டு" என்ற செய்தியை கனடாப் பிரதமருக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த முறை அவர் தைத் திருநாளுக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மருந்து சாப்பிட்டால் சுகம் வரும்.

ஏதோ கனடாப் பிரதமர் சபேசன் பின்னால் கைகட்டி நிற்கின்ற ஆள் தானே பாருங்கோ. சொன்னவுடன் செய்திடுவார். அது சரி எப்படி அறிவித்தீர்கள். பக்கத்து மொழிக்காரன்(கன்னடன் என்றால் நீக்கிவிடுவன் என நிர்வாகம் எச்சரிக்கின்றது) வந்து எமக்குச் சொல்லித் தான் புதுவருடத்தை மாற்றிய நாங்கள் ஒரு வெட்கம் கெட்ட பிழைப்புக்கள் என்று சொல்லப் போறீங்களா?

மருந்து சாப்பிட்டால் சுகம் வரும்.

ஏதோ கனடாப் பிரதமர் சபேசன் பின்னால் கைகட்டி நிற்கின்ற ஆள் தானே பாருங்கோ. சொன்னவுடன் செய்திடுவார். அது சரி எப்படி அறிவித்தீர்கள். பக்கத்து மொழிக்காரன்(கன்னடன் என்றால் நீக்கிவிடுவன் என நிர்வாகம் எச்சரிக்கின்றது) வந்து எமக்குச் சொல்லித் தான் புதுவருடத்தை மாற்றிய நாங்கள் ஒரு வெட்கம் கெட்ட பிழைப்புக்கள் என்று சொல்லப் போறீங்களா?

கூல் டவுண் நைனா. :lol: புத்தாண்டு தினம் அண்டு கொஞ்சம் ரிலாக்ஷா இருங்கோ.

உங்களிற்கும், அமெரிக்க நாட்டு பிரசைகளிற்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்தசெய்தியை நான் இங்குதான் பார்த்தேன். தமிழ்நெட்டுக்கு போவது குறைவு. எமக்காக இந்த செய்தியை யாழுக்கு காவிவந்த உங்களிற்கு கனடா நாட்டு தமிழ் மக்கள் சார்பில் எமது நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.. :lol:

.......நாங்கள் ஒரு வெட்கம் கெட்ட பிழைப்புக்கள் என்று சொல்லப் போறீங்களா?

சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை வெட்கமில்லாமல் சொல்கின்றீர்களே சுடர். கன்னடமாயை நீங்க இப்புதுவருடத்தில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

அதை வெட்கமில்லாமல் சொல்கின்றீர்களே சுடர். கன்னடமாயை நீங்க இப்புதுவருடத்தில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

அதுதான் வெட்கம் கெட்டது எண்டாகிற்றே.... அதன் பிறகும் வெட்கமா... சிரிப்பாயில்ல :lol::lol:

நீங்க புதுவருடம் கொண்டாடினா உங்களுக்கு வாழ்த்துக்கள்.....

(வேறு சமயத்தவர் வேற்ற மொழியினர் அவர்களின் திருநாள்களைக் கொண்டாடும் போது அவர்களையும் வாழ்த்துவது முறை அது போன்றே இவ்வாழ்த்தும்்)

கனேடியப் பிரதமருக்கு நான் அறிவித்ததாக சொல்லவில்லையே. அறிவிக்க வேண்டியவர்கள் அதை செய்துள்ளார்கள். எல்லாவற்றையும் எம்மால் இப்பொழுது சொல்ல முடியாது.

கனடாவில் உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள். சில வேளை ஏதாவது சொல்லக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அணைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். :D

அணைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். :)

உங்களிற்கும் வாழ்த்துகள் சபேஸ்... இது எங்க சுட்ட படம்...

smoking_baby.gif

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்திரைப் புத்தாண்டாக இதை இந்துக்கள்(உலகம் முழுவதுமுள்ள இந்துக்களல்ல- தமக்கானதான மொழிவழி அடையாளத்தை இழந்ததையும் அறியாது மதவழி அடையாளத்துடன் இருக்கும்) தமது விருப்புக் கடவுளுக்கு பூசை செய்து(தமக்கானதான மொழியைத் தவிர்த்து) கொண்டாடும் இந்த நிகழ்வை மதநிகழ்வாக யாரும் ஒதுதுக்க வேண்டிய அவசியம் இல்லை.

கொண்டாட்டங்களில் மகிழ்வுற்று உற்சாகமடைவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

சிலகேள்விகள்

-. தமிழையும் தமிழ் இனத்தையும் இதில் கொண்டு வந்து இணைப்பதேன்?

- தமிழர்கள் என அடையாளமிடப்படுபவர்கள் வேறு மதங்களில் இல்லையா?

- இவ்வாறு இருக்கும் தமிழர்களது புத்தாண்டு ஏது?

- இந்த இந்துக்கள் ஏன் ஜனவரி1 என வரும் நாளில் கிறீஸ்தவப் புத்தாண்டு நிகழ்வுகளை கோவில் பூசைகளுடன் கொண்டாடுகிறார்கள்?

- எல்லா மதமும் சம்மதம் என விளம்பரம் செய்யும் இந்துகள் ஏன் இஸ்லாமியப் புத்தண்டு நாளில் தமது கோவில்களில் பூசை செய்வதில்லை?

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடியப் பிரதமருக்கு நான் அறிவித்ததாக சொல்லவில்லையே. அறிவிக்க வேண்டியவர்கள் அதை செய்துள்ளார்கள். எல்லாவற்றையும் எம்மால் இப்பொழுது சொல்ல முடியாது.

கனடாவில் உள்ளவர்களை கேட்டுப் பாருங்கள். சில வேளை ஏதாவது சொல்லக்கூடும்.

ஐயோ பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்க சுட்ட படம்...

வசிசுதா ஒரு இணைப்பு தந்திருந்தாரே... அதில தான்.

http://www.animationgold.com/avatar.htm

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்புக்குரிய ஸ்ரீபன் காப்பரின் வாழ்த்துக்கும் மகிந்த ராஜபக்ஷ விடுற வாழ்த்துக்கும் இடையில என்ன வித்தியாசம் இருக்கிது?

நம்மட ஓட்டு எப்பவும் லிபரலுக்கு தானுங்கோ. போனமாதமும் லிபரலுக்குத்தான் குத்தினனாங்கள்.

லிபரலுக்கு குத்துங்கோ, ஒன்ராரியோ மாகாண தேர்தலில் தமிழர் பீரதிநிதிகளை தோற்கடிக்க வைத்த பெருமை தமிழ் லிபரல் ஆதரவாளார்களுக்கு தான் சாாரும் அந்தவகையில உங்கள போல ஆக்களுக்கு நன்றி சொல்லனும்.

லிபரல், முதுகில குத்தும், கன்சேர்வேற்றிவ் நேர குத்தும் அவ்வளவு தான் வித்தியாசம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.