Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க மொரிசியஸ் தமிழர்கள் மொழிமீது கொண்ட பற்றினாலே தமிழர்களாக இருக்கிறார்கள். மதம் மீது பக்தி மட்டும் கொண்டிருந்தால் தாம் தமிழர் என்ற அடையாளம் இழந்திருப்பார்கள்.

மொரிசீயஸ்.. தென்னாபிரிக்காவில்.. சைவ- இந்து ஆலயங்களின் இருப்புத்தான் தாம் தமிழர்கள் என்ற இன அடையாள நிலையை இன்னும் தக்க வைத்திருக்கிறது. மொழி வழக்கம் இழந்த நிலையிலும்.. தமிழர்கள் என்ற இன உணர்வை.. சைவ-இந்து மத சுதந்திரம் தான் காத்து நிற்கிறது. ஈழத்தில் கூட தமிழைக் காத்த பெருமை.. ஆறுமுகநாவலர் போன்ற சைவ அடியார்களைச் சாரும்..!

தென்னாபிரிக்காவில் உள்ள இந்து ஆலயங்கள்..!

http://www.shaivam.org/siddomain/toi_southafrica.htm

Edited by nedukkalapoovan

  • Replies 123
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

அன்பை வளர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்துமதத்தைக் கடைப்பிடிப்பதில் பெருமைகொள்வதாகக் கூறும் நீங்கள் இப்படி மற்றய மதம் மீது கொலைவெறியுடன் இருப்பது புரியவில்லை!

கொலைவெறியா? பைபிளில் இருக்கின்றதைச் சொன்னபிற்பாடு தான் குறித்தவர் இப்படி ஆகிவிட்டார் என்பது எப்படிக் கொலை வெறியாகும். அப்படியென்றால் நீங்கள் இந்து மதத்தைப் பற்றிக் கற்பனைக் கதைகள் விடுவது அதே கொலைவெறியுடனா?

கொலைவெறியா? பைபிளில் இருக்கின்றதைச் சொன்னபிற்பாடு தான் குறித்தவர் இப்படி ஆகிவிட்டார் என்பது எப்படிக் கொலை வெறியாகும். அப்படியென்றால் நீங்கள் இந்து மதத்தைப் பற்றிக் கற்பனைக் கதைகள் விடுவது அதே கொலைவெறியுடனா?

என்னை ஒரு இந்து என்று நான் சொல்லிக்கொள்ளவில்லை. உங்களின் மற்றைய மதம் தொடர்பான வெளிப்பாட்டினைத்தான் கேட்டிருந்தேன்.

மொரிசீயஸ்.. தென்னாபிரிக்காவில்.. சைவ- இந்து ஆலயங்களின் இருப்புத்தான் தாம் தமிழர்கள் என்ற இன அடையாள நிலையை இன்னும் தக்க வைத்திருக்கிறது. மொழி வழக்கம் இழந்த நிலையிலும்.. தமிழர்கள் என்ற இன உணர்வை.. சைவ-இந்து மத சுதந்திரம் தான் காத்து நிற்கிறது. ஈழத்தில் கூட தமிழைக் காத்த பெருமை.. ஆறுமுகநாவலர் போன்ற சைவ அடியார்களைச் சாரும்..!

தென்னாபிரிக்காவில் உள்ள இந்து ஆலயங்கள்..!

http://www.shaivam.org/siddomain/toi_southafrica.htm

கம்போடியா தாய்லாந்து போன்றவற்றிலும் இந்துக் கோயில்கள் உள்ளன..

மொரிசீயஸ் தென்னாபிரிக்கா போன்றவற்றில் தமிழர் என்ன இன அடையாளத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பது தமிழன் என்ன உணர்வு மட்டுமே... ஈழத்தில் சைவத்தைக் காத்த பெருமையே ஆறுமுகநாவலரைச் சாரும் :lol:

அதென்ன சைவஇந்து என்று இன்னொன்றா?! :D

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பற்றி தரக் குறைவாக விமர்சனம் செய்துள்ள தமிழ்லினுக்ஸின் செய்கை கண்டிக்கத்தக்கது.

மதவெறி உங்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்பதற்கு இது சான்று.

நடேசன் அவர்கள் சுடரொளி பத்திரிகைக்கு சொன்ன விடயத்தில் சர்ச்சை ஒன்றும் இல்லை.

சுடரொளிப் பத்திரிகை நடேசன் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில்தான் அது. சுடரொளிப் பத்திரிகை தானாகவே நடேசன் அவர்களை தொடர்பு கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டது என்பது இதில் குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்ஸ புத்தாண்டில் தான் செய்யவிருப்பதைப் பற்றி பேசி வரும் நிலையில் விடுதலைப் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று அறிய சுடரொளி கேள்வியைக் கேட்டது.

உலகில் நிறைய புத்தாண்டுகள் வருகின்றன. ஜனவரி1 அன்று நடேசன் அவர்களிடம் "இந்த புத்தாண்டிற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்" என்று கேட்டிருந்தாலும், அவரிடம் தற்பொழுது சுடரொளிக்கு சொன்ன பதில்தான் வந்திருக்கும்.

சித்திரையில் ஒரு புத்தாண்டு வருவதை யாரும் மறுக்கவில்லையே. அதை தமிழ் புத்தாண்டு என்று சொல்வது பற்றித்தான் கருத்து வேறுபாடு இருக்கிறது.

நடேசன் அவர்கள் தன்னுடைய பதிலில் "தமிழ் புத்தாண்டு" என்ற சொல்வதை தவிர்த்திருப்பதை நாம் இதில் கவனிக்க வேண்டும்.

இதே கேள்வியை ஒரு பத்து வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தால், "தமிழ் புத்தாண்டு" என்றே சொல்லியருப்பார்கள்.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் மிகப் பெரியது. இது குறித்து எமக்கு போதுமான திருப்தி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நடேசன் அவர்கள் தன்னுடைய பதிலில் "தமிழ் புத்தாண்டு" என்ற சொல்வதை தவிர்த்திருப்பதை நாம் இதில் கவனிக்க வேண்டும்.

அடடா என்ன ஒரு திருப்தியான பதில் தேடல். அப்ப நடேசன் அண்ணன் சிங்களப் புத்தாண்டை இட்டு தமிழ் மக்களுக்கு வாழ்த்தினவரோ..??! நடேசன் அண்ணா சித்திரைத் திருநாள் என்று மொழியவில்லை. தமிழ் மக்களை நோக்கி புத்தாண்டு என்பது.. தமிழ் மக்கள் கொண்டாடும் புத்தாண்டு என்பதை.. எனி சபேசன் அண்ணாச்சிக்கு சமன்பாடு போட்டு நிறுவினால் தான் புரியுமோ என்னமோ..??! என்னமா.. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டது என்றாங்கப்பா.

உலகமே சொல்லும் தமிழ்நெட்.. உதுக்கெல்லாம் தெளிவான பதிலைச் சொல்லிட்டு. அதை அப்படியே மூடி மறைச்சிட்டு.. சங்கதி.. புதினத்தை.. பதிவை இழுத்தது.. ஏன்...??! சங்கதி.. சுடரொளியில் சுட்டு மூலம் கூடப் போடாமல் போட்டதை.. அப்புறம் அதுக்கு மேல எடிட் பண்ணிட்டுது. புதினம் பதிவைச் சொல்லத் தேவையில்ல. அவைக்கு சுயமா என்ன செய்யுறமென்றது இல்லை..! யாரேன் எழுதிக் கொடுக்கிறதை போடுறதும்.. சிங்கள ஆங்கில தளங்களில் வாறதை போடுறதும் தான்.. பிரதான செய்திகள்.

தமிழ்நெட் அப்படியன்று..! அதற்கென தனியான இடம் சர்வதேச அரங்கில் உண்டு. ஈழத்தமிழர்கள் பற்றிய செய்திகளை வெளியிடும் சர்வதேச ஊடகங்கள்.. புதினம்.. சங்கதியை.. பதிவை மேற்கோள் காட்டியதா வரலாறில்லை. ஆனால்.. தமிழ்நெட் ரொயிட்டர் தொடங்கி சி என் என் வரைக்கும் செய்திக்கான ஆதாரமாக உள்ளது..!

அதுபோக.. ஏராளமான மக்கள் பழைய படி புத்தாண்டாகவே தமிழகத்திலும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

கருணாநிதி கோவில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பித்தான் பார்த்தார். இன்று புத்தாண்டுப் பூசை செய்வது சட்ட விரோதம் என்று. ஆனால் மக்கள் சித்திரைத் திருநாள் விசேட பூசைகள் செய்து வழிபட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டத்திணிப்புக் காரணமாக மக்கள் இன்றைய நாளை சித்திரைத் திருநாளாக்கி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். கருணாநிதியாரின் திணிப்பை மக்கள் வேறுவடிவில்.. புறக்கணித்திருப்பதையே இது காட்டுகிறது. சட்டத்தின் பிடிக்குள் சிக்காது மக்கள் சிந்தித்துச் செயற்பட்டுள்ளனர்.

------------------------

சித்திரை திருநாள்: கோவில்களில் வழிபாடு வழக்கமான உற்சாகம் குறைவு

சென்னை: சித்திரை திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இருப்பினும் இன்று தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததால், கோவில்களில் வழக்கமாக புத்தாண்டுக்கு செய்யப்படும் பூஜைகள் செய்யப்படவில்லை.

சித்திரை முதல் நாள்தான் இதுநாள் வரை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது.

இதையடுத்து இன்று தமிழ்ப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படவில்லை. மாறாக சித்திரைத் திருநாளாக தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடினர்.

சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இருப்பினும் வழக்கமாக புத்தாண்டுக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படவில்லை. பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

கோவில்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கம் போல இல்லை. இருப்பினும் பலர் தமிழ்ப் புத்தாண்டாகவே நினைத்து இன்று கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டதைக் காண முடிந்தது.

பாஜக நூதனப் போராட்டம்

மதுரையில், பாஜகவினர் தல்லாகுளம், தமுக்கம் மைதானம் எதிரே உள்ள தமிழன்னை சிலை முன்பு கூடி, சிலைக்கு மாலை அணிவித்து பஞ்சாங்கம் படித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்ப் புத்தாண்டை தமிழக அரசு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2008/04...i-festival.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மொரிசீயஸ் தென்னாபிரிக்கா போன்றவற்றில் தமிழர் என்ன இன அடையாளத்தை நிலைநிறுத்தி வைத்திருப்பது தமிழன் என்ன உணர்வு மட்டுமே... ஈழத்தில் சைவத்தைக் காத்த பெருமையே ஆறுமுகநாவலரைச் சாரும் :lol:

அதென்ன சைவ-இந்து என்று இன்னொன்றா?! :D

மொழி ஆதிக்கம்.. கலாசார.. நாகரிக ஆதிக்கம் எதுவுமே தமிழர் சார்ந்து இல்லாத சூழலில்.. தமிழன் என்ற உணர்வு எப்படிப் பிறக்கும்.. மந்திரத்திலா..??! அங்கு தமிழர்களை அவர்களின் பாரம்பரிய மத அடையாளமும்.. அனுட்டானமும் தான் தாம் தமிழர் என்பதை நினைத்து நிற்கச் செய்திருக்கிறது. புலம்பெயர் தேசங்களில் கூட கோவில்களை அண்டித்தான் புலம்பெயர் மக்களின் தமிழுணர்வு என்பது இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. புகலிடத்தில் பிறந்து தமிழ் மொழியே அறியாத பிள்ளை கூட கோவில்களுக்குப் போய்.. தமிழன் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள தமிழர்கள் வழிநடத்தும் பல கோவில்கள் தான் செயலுருக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. புகலிடத்தில் பல இடங்களில் கோவில்களே.. தமிழ் மொழி இலசவக் கல்வியை வழங்குகின்றன. தமிழர் பாரம்பரிய கலை வடிவங்களைப் போதிக்கும் கலைக்கூடங்களாக விளங்குகின்றன. புலம்பெயர் தேசத்தில் தமிழ் மொழியைக் கற்பிக்கும்.. மத எதிர்ப்பாளர்கள் நடத்தும் நிலையம் ஒன்றை.. காட்டுங்கள் பார்க்கலாம். :lol::lol:

ஈழத்தில் நாவலன் உருவாக்கிய பாடசாலைகளும்.. இந்துக்கல்லூரிகளும்.. இன்றும் சாதனையின் உச்சியில் இருக்கின்றன.. தமிழுணர்வின் அடிநாதமாக.. ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியா இருக்கின்றன என்றால்.. அதற்குக் காரணமே.. மத உணர்வோடு ஒருங்கிணைந்த தமிழுணர்வுதான்...! கிறீஸ்தவப் பாடசாலைகள் கூட (ஆங்கில மொழி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு) தமிழ் மொழியை உள்வாங்கிக் கொண்டு.. நிமிர்ந்திருக்கின்றன. கிறீஸ்தவ மதத்துக்கும்.. தமிழுணர்வை ஊட்டிய பங்கு ஈழத்தை பொறுத்தவரை உண்டு. இஸ்லாத்துக்கும் உண்டு..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனின் கருத்து:

இந்து மதம் தான் செய்தது. இந்து மதம் செய்தது என்பதில் வேறுபாடு உண்டு. நான் இந்து மதத்தைப் பற்றிக் கதைப்பதால் அதைப் பற்றித் தான் சொல்ல இயலும். பைபிளைப் பற்றிக் கதைத்த பின் கல்லடிபட்ட நாய் மாதிரித் திரிவது அழகா?

இதற்கான பதில்:

வார்த்தைகளில் கட்டுப்பாடில்லாமல் மற்றவர்களை நாய்க்கும் பேய்க்கும் ஒப்பிடும் உங்களைப் போன்றவர்களின் தகுதி மிகத் தெளிவாக விளங்குகின்றது. ஆரோக்கியமான வாதத்தில் இத்தகைய கையாலாகாத் தனங்களால் மற்றவர்களை வெற்றிபெற முயல்வது சுத்த அநாகரிகம். உங்கள் உள்வீட்டுச் சண்டைக்குள் நான் மூக்கை நுழைத்தது பெரிய தப்பென உணர்கிறேன். உங்களுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் ஒரு கும்பிடு. நீங்கள் எதையும் எழுதுங்கள். நீங்களே உங்கள் சாம்ராச்சியத்தின் அதிபதி. வணக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தை முதல்நாள் தான் தமிழர்களின் புத்தாண்டு தொடக்க நாள் என்றாலும்,

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் புத்தாண்டு: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர விஎச்பி முடிவு

ஸ்ரீரங்கம்: சித்திரை மாதத்தின் முதல் நாளன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்குத் தடை விதித்த தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச துணைத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்ப்புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்வதற்கு தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இது மத நம்பிக்கைக்கும், மக்களின் உரிமைகளுக்கும் எதிரான செயலாகும். மத வழிபாடுகள், பாரம்பரியங்களுக்கு எதிராக உத்தரவிட அறநிலையத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை.

மாநில அரசின் இச்செயல் அரசியல் லாபம் கருதி மேற்கொள்ளப்பட்டதாகும்.

எனவே அறநிலையத்துறையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வி.எச்.பி. சார்பில் வழக்கு தொடரப்படும் என்றார் வேதாந்தம்.

http://thatstamil.oneindia.in/news/2008/04...-directive.html

Edited by nedukkalapoovan

மதவாதம் காலைச்சுற்றின பாம்பு..! கடிக்காமல் விடாது..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒட்டுமொத்தமாக சித்திரைவருட சிறப்பு நிகழ்சிகளை

புறக்கணித்த பிரகாசமான சூரியத்தொலைக்காட்சி

தனது சந்தா அட்டைக்கான விளம்பரத்தில்"சித்திரை புதுவருடத்திற்கான விசேட விலைகழிவு" என குட்டி எழுத்தில் விளம்பரம் செய்கின்றார்கள். :D

மதவாதம் காலைச்சுற்றின பாம்பு..! கடிக்காமல் விடாது..!

மதநிந்தனையும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான மதத்துவேசமும் அதையும் விட மோசமான பாம்பு.

ஆளையே விழுங்கி விடும்

Edited by vettri-vel

மதநிந்தனையும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான மதத்துவேசமும் அதையும் விட மோசமான பாம்பு.

ஆளையே விழுங்கி விடும்

மதமே ஒரு துவேசம் தானே..!

மதமே ஒரு துவேசம் தானே..!

அது நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறையை பொறுத்தது. உணவே நஞ்சாவதுண்டு அளவு கடந்து சாப்பிட்டால்! அதற்காக உணவே வேண்டாம் அது நஞ்சாகி என்னை கொன்றுவிடும் என்பது பேதமை!

மின்சாரம் ஒளி தரும் விளக்காகவும் முடியும்! ஆளையே தூக்கி அடிக்கவும் முடியும்! அது கையாளும் தன்மையை பொறுத்தது

***

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி

அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி

இதன் அர்த்தம் புரிந்தால் வாழ்வின் தத்துவம் புரியும்.

இந்த குறள்களும் தரும் நல்ல விளக்கங்கள்!! !!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

Edited by vettri-vel
மேலே தணிக்கை செய்யப்பட்டு கருத்திற்கான பதில் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

மதமே ஒரு துவேசம் தானே..!

மதங்கள் மீது பழிபோடுவதும், சம்பந்தமில்லாததற்குக் குற்றச்சாட்டிக் கொண்டிருப்பதும் மதத்துவசம் தானே

நீங்கள் மதம்தான் எல்லாம் என்று துவேசிக்கின்றீர்கள்...! அதனால் நான் மதம் ஒரு துவேசம் என்று கூறுவதில் தப்பே இல்லை..!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புத்தாண்டு:தையா? சித்திரையா?

சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்த வாதப் பிரதிவாதங்கள்.

13/04/2008

தற்போது நடைமுறையில் இருக்கும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, இனிமேல் தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக கணக் கிடப்படும் என்று தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த பின்னணியில், சித்திரை முதல்நாளில் தமிழக நிலவரம் எப்படியாக இருந்தது என்பதை தொகுத்து தருகிறார் தமிழக செய்தியாளர் டி.என். கோபாலன்.

தை முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்ற தமிழக அரசின் அறிவிப்பு இலங்கையில் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய குழப்பத்தை எதிர்நோக்கும் வகையில், அகில இலங்கை இந்துமா மன்றம் என்கிற ஒரு அமைப்பு மார்ச் மாதம் கொழும்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது. இது தொடர்பான செய்திகளை பெட்டகமாக தொகுத்து தருகிறார் கொழும்பு செய்தியாளர் கருணாகரன்

23/01/2008

இனிமேல் தைமுதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்கிற தமிழக அரசின் அறிவிப்பு குறித்து, இந்துத்வ கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்

தை மாதம் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு துவங்குவதாக இனிமேல் கணக்கிடப்படும் என்று தமிழக அரசு இப்போது அறிவித்திருப்பதன் அவசியம் என்ன என்று தமிழகத்தை ஆளும் திமுகவைச்சேர்ந்த தமிழறிஞர் மா நன்னன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதற்கு மாற்றாக, இனிமேல் தை மாதம் முதல் நாளிலிருந்து மிழ் புத்தாண்டு துவங்குவதாக கணக்கிடப்படும் என்று தமிழக ஆளுநன் பர்னாலா அவர்கள் ஜனவரி மாதம் 23 ஆம் தேதி அறிவித்திருக்கிறார். இது குறித்து தமிழக செய்தியாளர் டி.என். கோபாலன் வழங்கும் செய்திக்குறிப்பை இங்கே கேட்கலாம்.

செவ்விகளைக் கேட்க பின்வரும் இணைப்பிற்கு செல்லுங்கள்

http://www.bbc.co.uk/tamil/highlights/stor...ilnewyear.shtml

இது வரை தை பொங்கல் தினம் தான் வருசமாக வர வேண்டும் என்று வாதாடுவோரிடம் கேட்கபட்ட அல்லது சொல்லப்பட்ட விளக்கங்களங்களுக்கு அதாவது ஆரியருடைய புதுவருடம் என்றால்

ஏன் ஆரியர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கிற வட இந்திய மானிலங்களில் கொண்டாடப்படுவதில்லை?

ஏன் திராவிட இனத்தவர் என தூக்கி கொண்டாடும் தென்னிந்திய மானிலங்களான ஆந்திரா கர்னாடாகா போன்றவற்றில் கூட கொண்டாடப்படுவதில்லை?

ஏன் ஈழத்தவர்கள், மலையாளிகளும், தமிழ் நாட்டவர்களும், தமிழர்களினால் வரலாற்று காலந்தொட்டு செல்வாக்குக்கு உட்பட்டவர்கள்/ உடபடுத்தபட்டவர்களுமான சிங்கள்வரும் மட்டும் கொண்டாடுகிறார்கள்?

இந்த அடிப்படைகளை கூட பகுத்தறிய முடியாது கொண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுவது போலும், கிளிப்பிள்ளை போலும் சித்திரையில் வரும் புதுவருடம் ஆரியருடையது என சொல்லி வருவதால் எந்த பயனும் இல்லை. அதற்கு தன்சாவூர் பொம்மை போல தலையாட்டி ஜால்ரா போடுவது கூட பகுத்றிவு இல்லை.

சொல்லப்போனால் தமிழகத்தில் நடந்தது அரசியலில் தமது பெயரை நிலைக்க செய்ய நடந்த ஒரு கூத்து.

Liberate Calendar

A Calendar is conceived and designed by logic and astronomy rather than emotions and myths of politics. If people don’t understand the calendar they follow, educate them. If any section of the society thinks that the calendar is its prerogative, liberate the calendar, rather than mutilating it or abandoning it. If there is any problem in the calendar it has to be investigated and corrected by a forum of astronomers, climatologists and environmental scientists, sitting along with traditional astronomers historians and Tamil scholars. Any society, which doesn’t care to investigate and understand its own heritage of science, is not going to make any progress. It will always remain in slavery.

..........

.........

Mr. Karunanidhi has reportedly termed the existing calendar as Sanskrit calendar.

By shifting the commencement of New Year, has the Tamil Nadu government could able to change any of the fundamentals of the solar calendar, as the critics of Pagnchaangkas (almanacs) are boasting about?

How are they going to fix the Thaip-pongkal without almanacs? How are they going to fix the beginnings and endings of the Tamil months?

Are they going to depend on the Gregorian calendar to fix these dates? Can a Tamil calendar exist without its own concepts, principles, methodology and calculations?

All have to once again turn back to the traditional almanacs.

As said earlier, names and terms do not matter, but the concepts matter.

The central government of India has long back established an institution for correctly fixing the almanacs. It brings out a standard almanac called Rashtreeya Panchang.

It is high time the Tamil Nadu government should consider rendering the traditional almanac terms and astronomical principles in Tamil.

Many Tamils think that Pagnchaangka is alien to them. A host of ‘pure’ Tamil technical terms and names can be found if one can skip through the pages of the Tamil Nika’ndus and literature. Again it is not merely the terms, but the Tamils understanding them.

If the Tamil Nadu government wants to liberate the knowledge from a narrow section of the society, it has to engage itself in producing learned people in such matters from a broad spectrum of the society. Such efforts are more important than the symbolic shift of the commencement of the year.

.........

...........

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25309

Edited by KULAKADDAN

ஏன் ஆரியர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கிற வட இந்திய மானிலங்களில் கொண்டாடப்படுவதில்லை?

ஏன் திராவிட இனத்தவர் என தூக்கி கொண்டாடும் தென்னிந்திய மானிலங்களான ஆந்திரா கர்னாடாகா போன்றவற்றில் கூட கொண்டாடப்படுவதில்லை?

ஏன் மலையாளிகளும், தமிழ் நாட்டவர்களும், தமிழர்களினால் வரலாற்று காலந்தொட்டு செல்வாக்குக்கு உட்பட்டவர்கள்/ உடபடுத்தபட்டவர்களுமான சிங்கள்வரும் மட்டும் கொண்டாடுகிறார்கள்?

மிக நல்ல கேள்விகள். அத்தோடு என்னுமொரு கேள்வியையும் சேர்பது நல்லது. தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடும் இந்த ஆண்டுகளின் பெயர் ஒன்று கூட தமிழ் இல்லை அது ஏன்? இது எப்படி தமிழ்புத்தாண்டு ஆகின்றது?

பகுத்தறிவை விட மேம்பட்ட அறிவுள்ளவர்கள் இவ்வாறான கேள்விகளுக்கு விடையளித்தால் அறிவு குறைந்தவர்கள் விளங்கி திருப்தி அடைவார்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் குளம்.

அற்பமான ஒரு புராணக்கதையை வைத்துக் கொண்டு நாளை மாற்ற வேண்டும் என்பதன் பின்ணனியில் அரசியல் இல்லாமல் இல்லை. நாளைய உலகத்திற்கு தமிழர் ஆண்டு 2008ம் திகதியில் இருந்து தான் கணிக்கப்பட்டது எனும்போது அந்த வரலாறு சுருங்கிப் போகப் போகின்றது.

தமிழ் மக்களில் ஒரு காலத்தில் சமஸ்கிருத அலை வீசியது என்பதை மறுக்கமுடியாது. மறைக்கமுடியாது. ஆண்டுகளும் அவ்வாறே சமஸ்கிருதப்பெயர்களில் தாவியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்போது எல்லாம் நம்மவர்கள் என்ன ஐனவரி, பெப்ரவரி என்று தானே மாதங்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். நான் "ரியுஸ்டே" வாறன்,"வெனிஸ்டே"

போறன் என்று கதைக்கவும் செய்கின்றார்கள். எனவே இதை ஆங்கிலப் பிரச்சனை என்று எதிர்காலத்திலும் போராடுவார்களோ

ஆனால் ஒரு விடயத்தை இவர்கள் மறந்துவிட்டனர். மீண்டும் ஒரு தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் வருவார். திரும்பவும் வரலாறு மாற்றப்படும். அப்போது எல்லாத்தையும் குழப்பியய பெருமையைத் திரு கருணாநிதி ஐயா பெற்றுக் கொள்வார்.

ஐயா சுபன்

ஏன் உங்களின் பெயரில் இருந்து இங்கிருக்கின்ற எத்தனை பேருடைய பெயர்கள் சுத்தத் தமிழில் இருக்கின்றன? ஏன் நீங்கள் எல்லாம் ஆரியரில் இருந்து வந்தவர்களா?

மிக நல்ல கேள்விகள். அத்தோடு என்னுமொரு கேள்வியையும் சேர்பது நல்லது. தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடும் இந்த ஆண்டுகளின் பெயர் ஒன்று கூட தமிழ் இல்லை அது ஏன்? இது எப்படி தமிழ்புத்தாண்டு ஆகின்றது?

பகுத்தறிவை விட மேம்பட்ட அறிவுள்ளவர்கள் இவ்வாறான கேள்விகளுக்கு விடையளித்தால் அறிவு குறைந்தவர்கள் விளங்கி திருப்தி அடைவார்கள் அல்லவா?

இந்த புளித்து போன கேள்வியை விட்டால் வேறு ஒன்றுமே கிடைப்பதில்லையா :wub::rolleyes:

இந்த கேள்வியை கேட்க முதல் தமிழ் நெட் கட்டுரையை ஒரு முறை வாசித்திருக்கலாமே சுபன். :icon_mrgreen:

இதற்கு விளக்கம் தர பகுத்தறிவோ அல்லது அதற்கு மேலான அறிவோ தேவையில்லை. சாதாரண மக்கள் வாழ்வை அவதானித்தாலே அறிய முடியும்.

சமஸ்கிருதம் ஒரு நிலையில் தமிழகத்து சமயம் சார் மொழியாக செல்வாக்கு பெற்ற போது அதில் இருந்து பெயரை தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் வைப்பது ஒன்றும் நடந்திருக்க முடியாத விசயமில்லை.

ஏன் இன்றும் கூட தமிழர்கள்

சபெஸ், தினேஷ், ரமேஷ், சன்சீவ்காந், ....... என்று வட மொழி சார் பெயர்களை நாகரீகம் என்று கருதி வைக்கும் போது அன்றைய பொழுதில் வத்திருக்க முடியாதா?

எனவே இப்படி பெயர் வைத்தவர்களை ஆரியர் என்போம் :unsure:

ஏன் இன்றும் தமிழ் கிறீஸ்தவர்கள் தமது பெயரோடு விக்ரர், அலெக்ஸ், மரியா என்ற இலத்தின் மொழி சார் / கிறிஸ்தவம் சார் பெயர்களை வைத்தால் தான் தாம் கிறீஸ்தவர்களாக இருப்போம் என நம்பும் போது அந்த நேரத்தில் அப்படி நடந்திருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லையே?

இவர்களை இனி ஐரோப்பியர் என்போமா? :huh:

தைப்பொங்கல் தான் வருட பிறப்பு, சித்திரையில் வரும் வருடப்பிறப்பு அல்ல என கிளி பிள்ளை போல சொல்வதிலும், சித்திரை வருடப்பிறப்பும், தைப்பொங்கலும் தமிழருடைய பண்டிகைகள் தான். ஏன் சித்திரை வருட பிறப்பு தமிழர்களுடையதாக தான் இருக்கும் என்போருடைய கருத்துக்களையும் வாசித்து சிந்தித்து பார்க்கலாமே. ஏன் அதுக்கு பகுத்தறிவு இடம் கொடுக்காதோ?

Edited by KULAKADDAN

தமிழ் மக்களில் ஒரு காலத்தில் சமஸ்கிருத அலை வீசியது என்பதை மறுக்கமுடியாது. மறைக்கமுடியாது. ஆண்டுகளும் அவ்வாறே சமஸ்கிருதப்பெயர்களில் தாவியிருக்கும் என்பதில் ஐயமில்லை.- தூயவன்

நான் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் என்று எடுத்துக்கொண்டால், அறுபது ஆண்டின் பெயர்களும் ஒன்றும் மிச்சமில்லாமல் தாவி விட்டதா?

தாவக்கு முதல் இருந்த பெயரில் ஒன்று இரண்டாவது ஒரு குறிப்பிலும் இல்லையா?

ஒரு உதாரணத்திற்கு

மதுரை சொக்கரும் சொக்கியும் சுந்தரரேசரும் மீனாட்சியும் ஆனதில் சொக்கர் சொக்கி என்பது முற்கால பெயர் என்பது வரலாற்றில் உள்ளது அவ்வாறே..

அண்ணமலையார்-அருணாசலேஸ்வரர்

ராசராசனின் தஞ்சை பெரிய கோயில் பெருவுடையார் - பிரகதீஸ்வரர்

பொய்யிலி அப்பர்- சத்தியவாகீசர்

தாமரைக்கண்ணன்-புண்டரீகாட்சன்

திருமெய்யம்-சத்தியமூர்த்தி

மருந்தீசன்-அர்ஜீனவனேஸ்வரர்

வாடாமலர் மங்கை- அஸோகுசாம்பாள்

இவ்வாறு மாற்றப்பட்ட தமிழ்கடவுள்களின் உரிய பெயரை தமிழில் அறியக்கூடியவாறு உள்ளது. ஏன் இந்த ஆண்டுகளின் உரியபெயரை அறியமுடியவில்லை என்பதே எனது சந்தேகம். தமிழ்புத்தாண்டு என்றும் தமிழ் சிங்களபுத்தாண்டு என்றும் கொண்டாடும் போது அதன் வரலாற்றை, தாற்பரியத்தை அறிந்து கொள்வதில் என்ன தவறு? இந்து புத்தாண்டு என்று இருந்தால் இவ்வாறு கேட்கவேண்டிய அவசியம் ஏற்படாது. தமிழ்புத்தாண்டு என்பதால் சந்தேகங்களை கேட்கின்றேன்.

இவ்வாறு கேட்பதற்கான ஆர்வம் குளக்கட்டானின் கேள்வியில் இருந்தே அதிகமானது

ஏன் ஆரியர்கள் என்று சொல்லப்படுபவர்கள் பெரும்பான்மையாக இருக்கிற வட இந்திய மானிலங்களில் கொண்டாடப்படுவதில்லை?

ஏன் திராவிட இனத்தவர் என தூக்கி கொண்டாடும் தென்னிந்திய மானிலங்களான ஆந்திரா கர்னாடாகா போன்றவற்றில் கூட கொண்டாடப்படுவதில்லை?

ஏன் மலையாளிகளும், தமிழ் நாட்டவர்களும், தமிழர்களினால் வரலாற்று காலந்தொட்டு செல்வாக்குக்கு உட்பட்டவர்கள்/ உடபடுத்தபட்டவர்களுமான சிங்கள்வரும் மட்டும் கொண்டாடுகிறார்கள்?

இந்தக்கேள்விகள் தமிழர்கள் மட்டும் கொண்டாடும் வருடம் என்பதை அளுத்தமாக வலியுறுத்துவதால் கேட்கின்றேன்

வடஇந்தியாவிலும் இந்துக்கள் உள்ளனர். கேரளா ஆந்திரா போன்றவற்றிலும் இந்துக்கள் உள்ளர் ஆனால் தமிழர் கொண்டாடுவது பிரித்தறியப்படும் போது தமிழ்ப் பொருளை அறிய நினைப்பது நல்லவிசயம் தானே?

சைவம் வலிமையுடன் இருந்தபோது உருவாக்கப்பட்ட ஒன்றாகினும் (ஏனெனில் தமிழ் பேசும் முஸ்லீம்களோ தமிழ்பேசும் கிருத்துவர்களுக்கோ இது புதுவருடம் இல்லை) கடந்த நூற்றாண்டுவரை சைவம் தமிழை இழந்ததில்லை. சைவமும் தமிழும் என்றுதான் நகர்ந்தது. அவ்வாறு இருக்கும்போது இவ்வாண்டுகள் சரியான முறையில் தமிழ் பெயருடன் விளங்கியிருக்கும். ஆனால் இல்லையே ஏன்?

இந்தக்கேள்விகள் இங்கு நான் அறிதல் நோக்கத்துக்காகவே முன்வைக்கின்றேன். எனக்கு உண்மையில் குழப்பமாக இருப்பதால் முன்வைக்கின்றேன். யாராவது சந்தேகத்தை தீர்த்தால் தெரியாததை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

அல்லது சூரியனை மையமாக வைத்து தமிழர் பாரம்பரியமாக கடைப்பிடித்த வருடங்கள் பெயர்கள் இன்றி இருந்து பின்னர் தமிழல்லாத பெயர்களும் புராணங்களும் திணிக்கப்பட்டதா?

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் தனி இலக்கங்கள் உள்ளது. ஆனால் அதற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத ஆங்கில இலக்கங்களைப் பாவிக்கின்றோம். இப்போது அந்த இலக்கங்கள் பற்றிச் சிலருக்குத் தெரிந்திருப்பதால் ஏதோ அது பற்றிக் கொஞ்சம் தகவல் தெரியும். அதுவும் இல்லாவிட்டால் தமிழ் இலக்கங்கள் என அழிந்து போனது இல்லையென்றாகிடுமா?

அறிய விரும்புகின்ற உங்களுடைய ஆர்வம் என்பதைப் பாராட்டுகின்றேன். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்காவிட்டால், உடனே தையிற்கு மாற்ற வேண்டியதேவை என்ன?

வரலாறு தெரியாமல் காலம் காலமாகக் கொண்டாடுவதற்கான வரலாற்றை அறியாமல் ஏன் அதை மாற்ற முற்படவேண்டும். அது அற்பத்தனமான சிந்தனை தானே?

கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் சித்திரைப் புத்தாண்டை வருடப்பிறப்பாக எடுத்ததில்லைத் தான். ஆனால் தைப்பொங்கலையும் அவர்கள் எடுத்ததில்லை. அவர்கள் தங்களுக்கு என்று தனித்தனிப் புத்தாண்டு வைத்திருக்கின்றார்கள். அல்லாவைத் தவிர எவரையும் தொழமாட்டோம் என்கின்ற இஸ்லாமியர்கள் தைப்பொங்கலை ஏற்பார்களா என்பது சந்தேகமே.

எனவே தான் இவ்விடயத்தில் எவ்வித முஸ்லீம் அமைப்புக்களும் வாய் திறக்கவில்லை.

சொக்கி என்று சுருங்குதல், வடமொழி மாற்றமா? அது போல அண்ணாமலை என்பது வடமொழியில் அருணாஸ்வர் என்று எப்படி மொழிமாற்றமாகும்?

இதை தானே மேலே நான் இணைத்த தமிழ் நெட் கட்டுரை சொல்கிறது சுபன். பெயர்கள் தமிழ் இல்லை அது தான் பிரச்சனை என்றால் அறிந்தவர்கள் கூடி பழைய நிகண்டு, இலக்கியம் போன்றவற்றில் இருந்து தமிழ் பெயர்களை தேடி பிடியுங்கள். அதை விட்டு கலாச்சாரத்தை பழமையான பாரம்பரிய செல்வத்தை (heritage) கொல்லாதீர்கள் என்று. அந்த கட்டுரையை நான் முழுமையாக இந்த பகுதியில் இணைக்கவில்லை. திரை கடலோடி பகுதியில் இணைத்துள்ளேன்.

We all know that when occasions come to put both the Western calendar and the Tamil calendar, in speech and writing, we differentiate them as English and Tamil dates: ‘Thamizhukku paththaam thikathi (10th day of Tamil calendar), Thamizhukku Aava’ni maasam (August-September of the Tamil calendar), Thamizhukku Pirapava Aa’ndu (The year named Pirapava in Tamil. In old usage the reference is often in the number of years of the Salivaakana Era).

The writer is aware that some of the terms used are from Sanskrit. When not desirable, they can always be replaced by Tamil terms. But, the point here is how the Tamils who use the calendar perceive the concept, design and calculation of the calendar in terms of Tamil identity and not in terms of any religious identity.

Similarly, the same calendar is a Sinhala calendar to Sinhalese, Thai calendar to Thais and Cambodian to Cambodians. They don’t call it a Buddhist calendar. The calendar followed by Muslims is Arab calendar. The calendar universally used by every one of us today is not Christian calendar, but Roman calendar, corrected by Pope Gregory, hence, Gregorian calendar.

.

.

.

.

.....

Thaip-pongkal and Chiththiraip-puththaa’ndu are equally religious if any want to colour them with religion. For that matter, Thaip-pongkal is more religious since it is associated with the ritual of offering new rice to the Sun God. Some may say it is part of Vedic Hinduism called Saura. There can also be views that Thaip-pongkal reflects only the agrarian side of the Tamil culture, neglecting its great maritime traditions.

Chiththiraip-puththaa’ndu (the April New Year) is not connected to any myth.

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25309

சித்திரை புத்தாண்டு ஏனைய இந்து பண்டிகைகளான தீபாவ்ளி, நவராத்திரி, கந்த சஷ்டி போன்றவை போல எந்த புராண கதையுடனும் தொடர்பு படாது இருப்பது கூட சித்திரை புத்தாண்டு ஆரிய கலப்பற்றது என்பதை உறுதி படுத்தும்.

Edited by KULAKADDAN

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.