Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

சமஸ்கிருதம் ஒரு நிலையில் தமிழகத்து சமயம் சார் மொழியாக செல்வாக்கு பெற்ற போது அதில் இருந்து பெயரை தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் வைப்பது ஒன்றும் நடந்திருக்க முடியாத விசயமில்லை.

தமிழ் மக்களில் ஒரு காலத்தில் சமஸ்கிருத அலை வீசியது என்பதை மறுக்கமுடியாது. மறைக்கமுடியாது. ஆண்டுகளும் அவ்வாறே சமஸ்கிருதப்பெயர்களில் தாவியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இதுவல்ல. இந்த பதிலுக்கு உரிய கேள்வியை நான் கேட்கவும் இல்லை.

செல்வாக்கு செலுத்துவது தாவுவது என்று வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் உண்மைகளை மறைப்பது அபத்தம். தமிழ் தீண்டத்தகாத மொழி என்றும் அது கடவுளுக்கு பூசை செய்ய ஏற்ற மொழி அல்லவென்றும் பொய்கதைகள் சொல்லியே சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது. கடவுள் வழியால் மிக இலகுவாக திணிக்கப்பட்டது. தமிழில் கடவுளை பூசித்தால் கடவுளுக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று தீட்டு நீக்குவதற்கு புனருத்தராணம் செய்து தீட்டு நீக்கும் ஒரு முறை உண்டு. தமிழில் கடவுள் வாழ்த்து பாடியதற்காக மேடையை கழுவி தீட்டு நீக்கிய சம்பவங்களும் வரலாற்றில் உண்டு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பது மதவாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அவ்வாறே கடவுள் பெயர் முதற்கொண்டு கலாச்சாரம் பண்பாடு போன்ற இனத்துவத்தின் அடயாளங்கள் சிதைக்கப்பட்டது. இதை சாதரண விசயமாக செல்வாக்கு செலுத்தியது , அலைவீசியது , தமிழ் தாவியது என்று நோக்க முடியாது. இனத்துக்கென்று உள்ள தனித்துவத்தை தேடுவது கடமை. அதை அறிய முற்படுவதும் அவசியம். அதற்கு முடிந்தால் உதவி செய்யுங்கள்.

  • Replies 123
  • Views 23.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதில் எவ்வித உண்மையுமில்லை. ஏன் என்றால் சமஸ்கிருதத்தைத் தாய் மெரியாகக் கொண்டவர்கள் என்று என்றைக்குமே ஒரு சமூதாயக்குழுமம் இருந்ததில்லை. அது ஒரு பேச்சு ஊடகமாகவும் என்றைக்குமே பாவிக்கப்பட்டதுமி;ல்லை.

அப்படியிருக்கின்றபோது, அதை மக்களில் செல்வாக்குச் செலுத்த வைக்கவேண்டிய தேவையில்லை. ஆயினும் மத இணைப்பு, அல்லது மந்திரங்களை பேசாமொழியில் எழுதி வைக்க வேண்டும் என்ற தோற்றப்பாடு தோற்றம் பெற்றபோது தான் சமஸ்கிருதம் என்ற மொழி உருவாகியிருக்கலாம். எனவே சமஸ்கிருதத்தின் தோற்றப்பாடு என்பது இது நூல்கள், இலக்கியங்களை எழுதி வைக்கவும், மந்திரம் போன்றவற்றை எழுதி வைக்கவும் சொல்லவுமே பயன்பட்டது.

அதன் செல்வாக்கினால் மொழிச் சிதைவு ஏற்பட்டது. இன்றைக்குப் பார்த்தால் ஆங்கிலம் எவ்வாறு தவிர்க்கமுடியாத பொதுமொழியாகியதோ, அன்று வழிபாடுகளில் செல்வாக்குச் செலுத்திய சமஸ்கிருதத்தின் செல்வாக்கும், அதிகமாகவே இருந்தது.

எனவே தெரிந்து கொண்டு இன்று ஆங்கிலத்தை;த தவிர்க்கமுடியாதவர்களாக நாம் உள்ளோம். ஆனால் அன்று இதற்கான பின்விளைவுகளைப் பற்றிப் புரியாதவர்களாக நம்மவர்கள் இருந்தார்கள். அதனால் சமஸ்கிருதம் ஆக்கிரமித்தது.

மற்றும்படி புகுத்தினார்கள், தமிழை அழிக்க முயற்சி செய்தார்கள் என்பது எல்லாம் ஆரிய எதிர்ப்பு என்ற அரசியல் கோசத்துக்காகப் போடப்படும் ஏமாற்று வேலை. ஏன் என்றால் வடஇந்தியர்கள் கூட இதைத் தாய்மொழியாகக் கொண்டதில்லை

அதை தான் நானும் சொல்கிறேன். சரியாக எமது பாரம்பரியத்தை படித்து பிழை இருந்தால் திருத்தலாம். அதை தான் தமிழ் நெட் கட்டுரையும் சொல்கிறது. அரசியல் காரணங்களுக்காக இருப்பதை தொலைத்துவிட்டு தேடி பிடிக்க முடியாது. தேடாமலே இல்லை என்று சொல்ல எந்த ஆதாரம் இருக்கிறது? வெறும் பெயர் தானா?

உங்களை பொன்று தான் நானும் தமிழை 10 ஆம் வகுப்பு வரை தான் பாடமாக படித்தேன். மற்றும் படி ஏனையவை வாசித்து அறிந்து கொண்டவை தான்.

நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இதுவல்ல. இந்த பதிலுக்கு உரிய கேள்வியை நான் கேட்கவும் இல்லை.

நீங்கள் கேட்ட கேள்விக்கு தான் ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். வேற்று மொழியில் பெயர் வைப்பது நாகரீகம் என இன்று வரை தமிழர் கருதும் போது அன்றைய தமிழர் வருடத்துக்கு சமஸ்கிருத பெயர் வைத்ததில் வியப்பில்லையே?

செல்வாக்கு செலுத்துவது தாவுவது என்று வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போல் உண்மைகளை மறைப்பது அபத்தம். தமிழ் தீண்டத்தகாத மொழி என்றும் அது கடவுளுக்கு பூசை செய்ய ஏற்ற மொழி அல்லவென்றும் பொய்கதைகள் சொல்லியே சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது. கடவுள் வழியால் மிக இலகுவாக திணிக்கப்பட்டது. தமிழில் கடவுளை பூசித்தால் கடவுளுக்கு தீட்டுப்பட்டுவிடும் என்று தீட்டு நீக்குவதற்கு புனருத்தராணம் செய்து தீட்டு நீக்கும் ஒரு முறை உண்டு. தமிழில் கடவுள் வாழ்த்து பாடியதற்காக மேடையை கழுவி தீட்டு நீக்கிய சம்பவங்களும் வரலாற்றில் உண்டு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பது மதவாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. அவ்வாறே கடவுள் பெயர் முதற்கொண்டு கலாச்சாரம் பண்பாடு போன்ற இனத்துவத்தின் அடயாளங்கள் சிதைக்கப்பட்டது. இதை சாதரண விசயமாக செல்வாக்கு செலுத்தியது , அலைவீசியது , தமிழ் தாவியது என்று நோக்க முடியாது. இனத்துக்கென்று உள்ள தனித்துவத்தை தேடுவது கடமை. அதை அறிய முற்படுவதும் அவசியம். அதற்கு முடிந்தால் உதவி செய்யுங்கள்.

பிறகு ஏன் ஆட்டோடு மாட்டை கலப்பது போல் விவாததை வேறொரு தளத்துக்கு இழுத்து செல்ல கருத்தை எழுதியிருக்கிறீர்கள்.

Edited by KULAKADDAN

வேற்று மொழியில் பெயர் வைப்பது நாகரீகம் என இன்று வரை தமிழர் கருதும் போது அன்றைய தமிழர் வருடத்துக்கு சமஸ்கிருத பெயர் வைத்ததில் வியப்பில்லையே?

இவ்வாறு நாம் எமது வரலாற்று வழியை அணுக முடியாது என்றே கருதுகின்றேன்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் - என்று சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற கோயில் தில்லை கோயில். இதில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய தேவார ஓலைச் சுவடிகளை தில்லை நடராசன் கோயிலுக்குள்ளே தீட்சதப் பார்ப்பனர்கள் ஒரு அறையில் போட்டு பூட்டி வெளியே பரப்பாமல் இருட்டடிப்பு செய்து விட்டனர். ஓலைச் சுவடிகள் பல கரையானுக்கு உணவாகிவிட்டன. தேவாரப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த ராஜராஜசோழன், அந்தப் பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்க விரும்பி, நம்பியாண்டார் நம்பியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

தில்லை தீட்சதர்களிடம், அரசன், தேவார ஓலைச் சுவடிகளைக் கேட்டபோது, தீட்சதப் பார்ப்பனர்கள் தர மறுத்துவிட்டனர். இறந்து போன அப்பரும், சுந்தரரும், சம்பந்தரும் நேரில் வந்து கேட்டால் தான் தருவோம் என்று வீம்பு பேசினர். உடனே ராஜராஜசோழன், அந்த மூவரின் சிலைகளைக் கொண்டு வந்து நிறுத்தி, இதோ வந்துள்ளார்கள், தேவாரத்தை கொடு என்று கேட்கவே, ‘இவை சிலைகள்’ என்று தீட்சதர்கள் மறுக்கவே ராஜராஜசோழன் - நடராஜனும் சிலையாகத்தானே நிற்கிறார் என்று திருப்பிக் கேட்டான். ஆத்திரமுற்ற மன்னன், தேவாரம் பூட்டப்பட்டிருந்த அறையின் கதவுகளை உடைத்து, உள்ளே இருக்கும் ஓலைச்சுவடிகளை வெளியே கொண்டு வந்தான். இதுவே வரலாறு; உண்மை இவ்வாறு இருக்க -

தீட்சதர்கள் சம்மதத்தோடு ராஜராஜசோழன் மீட்டான் என்பது - காதில் பூ சுற்றும் கதை. இப்போது கிடைத்துள்ள தேவாரப் பாடல்கள் அப்போது ராஜராஜசோழனால் மீட்கப்பட்ட கறையான் தின்றது போக, எஞ்சியிருந்தவைதான். ராஜராஜசோழன் கதவை உடைத்து, தேவார ஓலைச் சுவடிகளைக் கைப்பற்றாமல் இருந்திருப்பானேயானால், தேவாரம் முழுவதுமே கரையானுக்கு இரையாகியிருக்கும்! பிரபல திரைப்பட இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தயாரித்த ராஜராஜசோழன் திரைப்படத்திலே - இப்படி கதவை உடைத்து மன்னன் உள்ளே புகும் காட்சி வைக்கப்பட்டிருந்ததும், சிவாஜி கணேசன் ராஜ ராஜசோழனாக நடித்ததும் - தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதை விட வரலாற்றின் ஒரு காலத்தில் தமிழ் ஓலைச்சுவடிகள் பெரும்பான்மை திட்டமிட்டு அழிக்கப்பட்டதை பலர் எழுதியுள்னர்.

நாம் எமது தனித்துவத்தின் மீதான ஆக்கிரமிப்பை ஒரு சாதரண பழக்கவழக்கம் சார்ந்ததும் எமது இயல்பான குணமுமாக அணுக முடியாது. இன்றைய ஆங்கில மோகமும் சரி எம்மை விட உயர்நதவர் யாரோ அவரின் அடையாளங்கள் எதுவோ அதை நோக்கி ஓடப்பழகிவிட்டோம் என்பதை விட வரலாற்றில் ஒரு காலகட்டத்தின் சூழ்சியால் ஏற்பட்ட விழைவு என்று தான் கருதமுடியும்.

சாதியில் உயர்நதவனையும் அவனது செயற்பாட்டையும் நாடி தாழ்ந்தவன் நகரவும். உயர்நவன் அவனை விட உலகில் எவன் உயர்ந்தவன் என்று கருதுகின்றானோ அவனை நோக்கி நகரவும் பழக்கப்படுத்தப்பட்டவர்கள்.

இதில் ஏராளமான விடயங்கள் மதரீதியாக செய்யப்பட்ட சூழ்ச்சிகளாகவே உள்ளது. கடவுளின் பெயரால் வஞ்சகமாக நடந்தவைகள்.

நாம் எமக்கென்ற தனித்துவ அடயளங்களை இறை நம்பிக்கையுடன் சாரந்து கட்டி வளர்த்துள்ளோம். மொழி கலை பண்பாடு என்று இவைகளை விவரிக்கலாம்.

இறை நம்பிக்கை மீது அடிவிழும் போது ஆக்கிரமிப்பு ஏற்படும் போது அனைத்தும் தளர்வடைந்துள்ளதை காண முடியும்.

உதாரணமாக வரலாற்றில் மிக முந்திய காலத்தில்

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே

என்று திருமூலர் கூறியது மிக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. சிவனுக்கு பூசை செய்யும் அதிகாரம் பார்ப்பனனுக்கு போனால் அரசனும் அழிந்து தேசமும் நாசமாகும் என்பதே இதன் பொருள். பிற்பட்ட காலத்தில் இதுவே நடந்தது.

எமது தனித்துவத்தை நிலைநாட்ட எது கருவியானதோ எது உறுதுணையானதோ அதன் மூலமே தனித்துவத்தை சிதைத்தார்கள். இன்று நாம் தமிழ்வருடப்பிறப்பிற்கு தமிழ் அடயாளத்தை தேடுகின்றோம். தொலைந்ததிற்கு காரணம் கற்பிக்கின்றோம் அல்லது வருடப்பிறப்பையே மாற்றுகின்றோம். ஆனால் உண்மை ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை யாரும் நாடுவதில்லை. அதை நோக்கிய தேடல் செய்வதில்லை.

தமிழகத்தில் திராவிட சார்பு அரசுகள் இருந்தபோதும் அது எஞ்சியுள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்கவோ அல்லது அதனூடாக வரலாற்றை தேடவோ போதியளவு முனையவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இன்று உள்ள ஆத்திகம் நாத்திகம் இரண்டிற்கும் ஊடகாத்தான் உண்மையான வரலாற்றுப்பாதைக்கு போக முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் என்னைத்தையோ தேடினமாம். ஆனால் அவை தேடிறது எல்லாம்.. பார்ப்பர்னமாம். அதென்னடா பார்பர்னமென்றால்.. அதுக்கு என்ன அறிவியல் அடையாளம் என்றால் பாம்பாம்... முடியல்ல..! :icon_mrgreen::rolleyes:

நீங்கள் சுயமா உருப்படியா தேடமாட்டியல் என்பது தெரியும்..

இப்படித் தேடினதுக்கையாவது.. உருப்படியா உங்கள் வாதத்துக்கு நீங்கள் தேடிவைத்துள்ள அறிவியல் அல்லது வரலாறு சார்ந்த உண்மைகளால் பிழைக்களைச் சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்.. சும்மா பிராமண எதிர்ப்பை கக்கிக் கொண்டு திரியாம..!

"The move of the Tamil Nadu government has shifted the commencement of the year from one reference point to the other, i.e., from Chiththiraip-puththaa’ndu to Thaip-pongkal.

There is nothing wrong in shifting the commencement of the year from one reference point to the other.

But the question is why.

What is wrong with the existing reference point?

Both the points are equally secular. They represent the two major secular festivals of Tamils. Both reflect the culture and contribution of Tamils.

In fact a Sinhala gentlemen has sent us a touching feedback to say how the Tamils have introduced the solar New Year (the April New Year) to Sinhalese. He also tells us about the Pallavas introducing this calendar and the New Year to Southeast Asian Cultures.

Thaip-pongkal and Chiththiraip-puththaa’ndu are equally religious if any want to colour them with religion. For that matter, Thaip-pongkal is more religious since it is associated with the ritual of offering new rice to the Sun God. Some may say it is part of Vedic Hinduism called Saura. There can also be views that Thaip-pongkal reflects only the agrarian side of the Tamil culture, neglecting its great maritime traditions.

Chiththiraip-puththaa’ndu (the April New Year) is not connected to any myth.

Why should the Tamils lose a calendar of their culture and a fervent major festival of theirs?

Thaip-pongkal has already gained the Tamil image internationally, even though it is Thaip-poosam in Malaysia and Singapore. There is no need to add the tag of New Year to make Thaip-pongkal a Tamil National Day.

There is no reference in the Changkam literature for taking Thaip-pongkal as the commencement of a year."

"The writer thanks all feedbacks on the previous column."

http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25309

இதையும் படியுங்கள்...

http://kundumani.blogspot.com/2008/01/blog-post_13.html

-------------

யாழில மற்றும் ஊடுருவியுள்ள பேப்பர்கள் வழிய..சமீப காலமா ஒரு கும்பல் செய்து வந்த போலிப் பிரச்சாரமெல்லாம்.. ஒரே அடியா.. மண்ணோட மண்ணாய் போயிட்டு இருக்குது. நாங்கள் சுட்டிக்காட்டியதை எல்லாம் திரிபு.. சரிவு என்று புலம்பிக்கொண்டு திரிஞ்சவை.. இப்ப என்ன செய்யலாம்.. என்று சிந்திங்கோ. தமிழ்நெட் அடுத்த வருசத்துக்க இந்தக் கட்டுரையை மாற்றி எழுத சபேசண்ணன் தலைமையில் இது விடயமா ஒரு ஆய்வு செய்து தமிழ்நெட்டுக்கு சமர்ப்பியுங்களன்..! தமிழ்நெட் அதை ஆய்வுசெய்து ஏற்றுக் கொண்டால் மாற்றும் தானே. இல்ல பிடரியில பிடிச்சு தள்ளிவிடும்.. ஓடி ஒளியுங்கோ..! சமூகத்தில தலைகாட்டப்படாது..! :unsure:

Edited by nedukkalapoovan

முன்னைய ஆண்டுகளில் தீபாவளி சமயத்தில் தீபாவளி தமிழர் பண்டிகையா? அதை கொண்டாடலாமா? என்பது தான் விவாதமாக இருந்தது. தற்போது சித்திரை புத்தாண்டு முக்கியத்துவம் பெற்று விட்டது. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய ஆண்டுகளில் தீபாவளி சமயத்தில் தீபாவளி தமிழர் பண்டிகையா? அதை கொண்டாடலாமா? என்பது தான் விவாதமாக இருந்தது. தற்போது சித்திரை புத்தாண்டு முக்கியத்துவம் பெற்று விட்டது. :rolleyes:

இவை தற்செயலாக.. விளம்பரத்துக்கு என்றாக.. புகழுக்கு என்றாக.. அல்லது முற்போக்குக்கு என்றாக எழுதப்படுவதாக மட்டும் கருதிட முடியாது.

இவை திட்டமிட்டு.. ஒரு தரப்பால் காலங்காலமாக எழுப்பப்பட்டு வந்த சந்தேகங்கள் கலந்த தமிழர் பாரம்பரியம் பற்றிய குழப்பகரமான தகவல் பரிமாற்ற செயற்பாட்டின் தொடர்சியாக நீள்கின்றன...! அத்தோடு இந்து மத எதிர்ப்பாளர்கள் பாசறையில் இருந்து இவை புடமிடப்படுகின்றன..! பார்பர்னம் என்ற கற்பனை சித்தாந்தத்தை காரணம் காட்டி.. தமிழ் மக்களிடையே பிராமண சமூகத்தை பிரித்துக்காட்டி.. அவர்களை இலக்கு வைத்து ஏவப்படுகின்றன. இப்படி இதன் பின்னால் தனிய பிரச்சாரம் என்ற நிலைக்கு அப்பால்.. சிலரின் அரசியல்.. சமூக.. ஆதாயங்கள் பொதிந்திருக்கின்றன. சமூக விரோத நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் தமிழுணர்வாளர்கள் என்ற அழகிய சோடனை மிக்க இனத்துவ உணர்வுமிக்க.. பதத்தால் போர்த்தி மூடப்பட்டுள்ளன.

உண்மையில் அவர்களுக்கு இத்திருநாட்கள் தொடர்பில் தமிழர் பாரம்பரிய அடையாளங்களை ஆதார பூர்வமாகத் தேடிச் சமர்ப்பித்தல் அல்லது இனங்காட்டல் அல்லது அதற்கான அறிவியல், வரலாற்றுச் சான்று தேடல் என்பது அவசியமாக இருக்கவில்லை. மாறாக புராணங்கள்.. இதிகாசங்கள்.. கட்டுக்கதைகள்.. மூடநம்பிக்கைகள்.. ஜோதிடம் இவற்றை ஆதாரமாக வைத்தே இவ்வகை விவாதங்கள் இந்து மதம் மற்றும் பிராமண சமூகத்தை இலக்கு வைத்து ஆரம்பிக்கட்டுள்ளன.அவை மிகப் பலவீனமான ஆதார தளங்கள். அதனால் தான் காலத்துக்கு காலம் எழும் இவர்களின் புனைவு வாதங்கள் காலப்போக்கில் நலிந்து சிதைவடைந்து வருகின்றன.

இருந்தாலும்.. இதனால் ஏற்பட்ட குழப்பத்தின் பெறுதிகள்.. இணைய உலகில்.. இலவசமாக காட்சிப்படுத்தப்பட உள்ள சூழலில்.. மக்களைச் சென்றடைய.. அவை இணையத்தில் தவழும் குழுக்களிடையே அதிகம் ஆதிக்கம் செய்கின்றன. சில பத்திரிகைகளும் தங்களின் நலன் நாடி இவற்றைக் காவுகின்றன.

அதுமட்டுமன்றி... புதுமை.. மாறுபாடு இவற்றை எதிர்பார்க்கும் இளைய சந்ததியிடம்.. இப்படியான செய்திகளை உணர்ச்சி மிக்க வடிவில் நவீனத்துவத்துடன் சமர்ப்பித்துவிடும் துடிப்பு சிலரிடம் இருக்கிறது.

அதற்குக்காரணம் இல்லாமலும் இல்லை. இளைய சமூகம் ஏன் எதற்கு என்ற கேள்விக்கு இடமில்லாமல்.. விடயங்களை உள்வாங்கிக் கொள்ளும் என்று இப்படிச் செயற்படும் பலர் நினைத்துத்தான் இவற்றை இளைய சமூகத்தை மையப்படுத்தி புதுமை முற்போக்கு என்று எழுத ஆரம்பித்தனர்.

ஆனால் அது இன்றைய தலைமுறையிடம் சாத்தியமில்லை. இன்றைய அறிவியல் உலகு.. உண்மைகளை.. திரிபுகளை.. சோடிப்புகளை இனங்காண்பதை இலகுவாக்கியுள்ள நிலையில்.. இது குறிப்பிட்டவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதும் அதனால் தான் அவர்களின் இயங்கு தளம் அடிக்கடி மாறுபடக் காரணமாகியுள்ளது..!

எனினும்.. இந்த நீண்ட காலக் குழப்பங்களுக்கு.. ஒரு அறிவியல் ரீதியான.. வரலாற்றியல் ரீதியான.. முடிவு தேவை. இன்றேல் அவை தமிழர்களின் பல பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விடும். சிலருக்கு பார்பர்னம் என்ற கற்பனைச் சித்தாந்தம் சிதைக்கப்பட வேண்டும் என்ற வெறி.. தமிழர்களின் பாரம்பரிய சிதைவை இனங்காட்ட மறுக்கிறது. அதன் தொடர்சியே இவை.

இவற்றுக்கு படிப்படியாக ஒரு ஓய்வு நிலை வரும். அதற்கு விளிப்புணர்வும்.. சரியான ஆதார அளிப்பும்.. உறுதுணையாக அமையும்..! அதுவரை இவ்வகை குழப்பங்கள்.. புயற் சின்னங்கள் போல.. காலத்துக்கு காலம் சில இடங்களில் நிலைகொண்டு.. நகரத்தான் செய்யும்..! அந்தப் புயற்சின்னங்களில் சிக்கி சில குப்பைகள் சிந்துப்படுவது தவிர்க்க முடியாதுதான்..! ஆனால் தெளிவு என்ற அமைதியை இந்தப் புயற்சின்னங்கள் ஆதாரங்களை தேட வைத்து பெற்றுத் தரும் என்பதை நம்பலாம். அதற்கான ஆரம்பம் பல தளங்களில் ஏற்பட்டு வருகின்றது.. முன்னரும் ஏற்பட்டுள்ளன..!

இப்படியானவர்களின் செயற்பாடுகள் மக்களில் குழப்பத்தின் மத்தியில் உள்ள ஒரு சிறு பகுதியினரிடத்தில் மட்டும் எடுபட்டிருக்கிறது..! அவர்களுக்கும் தெளிவை ஊட்டுவதே இன்றைய தேவை..! எதிர்காலத்தில் இப்படிக் குழப்பங்கள் உருவாக்க இடமளிக்காத வகைக்கு சான்றுகளை இனங்காண்பதும் அவசியம்..! அது தமிழரின் பாரம்பரிம் மற்றும் வரலாற்றியல் சான்று தேடுதலோடு.. இனங்காண்பதோடு பொதிருந்திருத்தல் தமிழர்களின் இன அடையாளத்துக்கும் வலுச்சேர்க்கும்..! :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லாவியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத்தானே

சிவனுக்கு பூசை செய்யும் அதிகாரம் பார்ப்பனனுக்கு போனால் அரசனும் அழிந்து தேசமும் நாசமாகும் என்பதே இதன் பொருள்.

:icon_mrgreen::rolleyes:

திருமந்திரத்தையே திரிக்க நினைக்கின்றவர்களுக்கு :unsure:

(அர்ச்சனை என்றால் முறையிட்டு வணங்கல் என்று அர்த்தம் வரும் )

வேதம் ஓதும் வேதியர்கள் இறையிடம் சென்று முறையிடும் அளவுக்கு ஆட்சி நடத்தினால் அரசுக்கு அழிவு வரும் என்பது இதன் பொருள். அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றாகும் என்று சிலப்பதிகாரமும் சொல்கிறது

கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் இருக்கும் இன்னொரு திருமந்திரம்

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்

வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்

நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

(வேதியர்கள் பிறப்பால் வருவதாக வேதங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்லிக்கொண்டு திரிபவர்கள் திருடர்கள். அது வேறு விடயம், மற்றும், இன்று வேதங்களை விற்று பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சங்கரமடத்தின் வியாபாரிகள் கூட்டத்தை வேதியர்கள் என்று நினைத்து விடாதீர்கள் )

திருமூலர் திருமந்திரத்தில் வேறு என்ன சொல்லி இருக்கிறார் என்று கீழே பாருங்கள்

1. வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்க்களே.

பொருள்: [ வேதத்தை விடவும் அறம் ஒன்றில்லை. ஓதத்தகுந்த அறம் எல்லாம் வேதத்திற்குள் அடக்கம்

வாதத்தை விட்டு விட்டு அறிஞர்கள், வளமிகுந்த வேதத்தை ஓதியே வீடு (முக்தி) பெற்றார்கள் ]

2. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து

ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

3. அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே.

தமிழ் மொழிக்கும் வடமொழிக்கும் சைவநெறிக்கும் இடையிலான உறவை சொல்ல திருமூலரையும் விட தகுதி படைத்தவர்கள் யாரும் இங்கு களத்தில் இருக்க மாட்டார்கள் என்பது இந்த சிறியவனின் அபிப்பிராயம்

இன்னும் 100 உதாரணங்கள் தரலாம். நேரம் தான் தட்டுப்பாடு.

சரி தூய தமிழ் சொல்லான பார்ப்பான் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா? இல்லை அதற்கும் விளக்கம் வேண்டுமா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விளக்கம் வெற்றி. நானும் சுகன் எழுதனதைப் பார்த்து அப்படித் தான் இருக்குமோ என்று பயந்துவிட்டேன். தங்களுடைய வார்த்தை வித்தைகளாலும், அரைகுறை விளக்கங்களாலும், மக்களை ஏமாற்றலாம் என நன்றாகவே இவர்கள் தெரிந்து அதையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தலைப்பை விட்டுத் திசை மாறுதல் தொடர்பாகச் சுகன் அடிக்கடி கதைப்பார். ஆனால் இதில் புத்தாண்டு தொடர்பாகக் கதைக்க வெளிக்கிட்ட அவரால், தக்க பதில் சொல்ல முடியாத காரணத்தர்ல தலைப்பை வழமையான பார்ப்பான எதிர்ப்பு என்ற கோசத்தினூடாகக் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றார்.

மேலே சுகன் தந்த தேவாரங்கள் தொடர்பான வரலாறு சபேசனால் தரப்பட்ட ஒன்று. அவர் கையில் இவைகள் மட்டுப்பட்டால் என்ன நிலை வரும், எப்படி எல்லாம் வசனங்களை மாற்றிப் போடுவார் என்பது தெரிந்த ஒன்று தானே

தூயவன்! கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் இருக்கும் இன்னொரு திருமந்திரம்

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்

வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்

நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

அது மட்டும் இல்லை, வேதங்கள் உரைக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முறைப்படி

ஓதுபவர்களை நிந்தனை செய்பவர்களின் கதியை பற்றி திருமூலர் திருமந்திரத்தில் என்ன சொல்கிறார் என்று

கீழே பாருங்கள்

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

இவர்களின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் பதில் இருக்கிறது. நேரம் தான் கிடைப்பதில்லை. பல்கலைக்கழகத்தில்

இது எனது இறுதி ஆண்டு. ஒரு Research Project எல்லா நேரத்தையும் விழுங்கி கொண்டிருக்கிறது.

Edited by vettri-vel

தூயவன்! கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் இருக்கும் இன்னொரு திருமந்திரம்

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்

வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்

நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

அது மட்டும் இல்லை, வேதங்கள் உரைக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முறைப்படி

ஓதுபவர்களை நிந்தனை செய்பவர்களின் கதியை பற்றி திருமூலர் திருமந்திரத்தில் என்ன சொல்கிறார் என்று

கீழே பாருங்கள்

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

இவர்களின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் பதில் இருக்கிறது. நேரம் தான் கிடைப்பதில்லை. பல்கலைக்கழகத்தில்

இது எனது இறுதி ஆண்டு. ஒரு Research Project எல்லா நேரத்தையும் விழுங்கி கொண்டிருக்கிறது.

என்ன வெற்றி வேல் ..! இப்படி பூச்சாண்டி காட்டும் நிலைக்கு வந்திட்டிங்களே...அப்ப நிந்தனை செய்பவரெல்லாம் புலையராப் பிறப்பினமா...? ரொம்பத்தான்....!

என்ன வெற்றி வேல் ..! இப்படி பூச்சாண்டி காட்டும் நிலைக்கு வந்திட்டிங்களே...அப்ப நிந்தனை செய்பவரெல்லாம் புலையராப் பிறப்பினமா...? ரொம்பத்தான்....!

இதை நீங்கள் திருமூலரிடம் தான் கேட்கவேண்டும்.

அவசரமாக சந்திக்கவேண்டும் என்றால், சீக்கிரமே சந்திக்கலாம். பிரச்சினை ஒன்றும் இல்லை

:icon_mrgreen::rolleyes::unsure:

இதை நீங்கள் திருமூலரிடம் தான் கேட்கவேண்டும்.

அவசரமாக சந்திக்கவேண்டும் என்றால், சீக்கிரமே சந்திக்கலாம். பிரச்சினை ஒன்றும் இல்லை

:icon_mrgreen::rolleyes::unsure:

அவ்வளவு கொலை வெறி....! :huh::wub::lol:

அவ்வளவு கொலை வெறி....! :icon_mrgreen::rolleyes::unsure:

உங்கள் புத்தி உங்களுக்கு!!! :huh::

யோகம் தியானம் என்றெல்லாம் சில வழிகள் உண்டு.

Edited by vettri-vel

உங்கள் புத்தி உங்களுக்கு!!! :icon_mrgreen::

யோகம் தியானம் என்றெல்லாம் சில வழிகள் உண்டு.

திருமூலரை சந்திக்கவா? :rolleyes:

திருமூலரை சந்திக்கவா? :icon_mrgreen:

சீவனார் வேறு சிவனார்

வேறிலை சீவனார் சிவனாரை

அறிவாராகில் சீவனாரே சிவனராவார்

இது புரிந்தால் அது புரியும்

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடசியில திருவள்ளுவரையும் மத விசுவாசத்தில கடிச்சுப் போட்டாரு. :rolleyes:http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25309

கி பி அரவிந்தனை வேறை துணைக்கு இழுத்திருக்காரு :icon_mrgreen:

இப்படி முட்டாள் தனமான பாடல்களை படித்ததால் தான் ஒரு கும்பல் தாழ்த்தப்பட்டோர் எல்லாம் ஏதோ பாவம் செய்தவர்கள் என்றும்....

ஒரு கூட்டம் கடவுளின் தலையில் இருந்து பிறந்தது எனவும் மற்ற சிலர் அவரின் பிற உறுப்புக்களில் இருந்தெல்லாம் பிறந்தனர் என்று பிறப்பால் மனிதனை உயர்த்தி தாழ்த்தி வந்தது அயோக்கிய நயவஞ்சக கும்பல்...

அவர்களுக்கு வக்காலத்து வாங்கி தாழ்த்தப்பட்டோரை பிறப்பை வைத்து இகழும் ஒரு பாடலை.... ஏதோ பெரிய உன்னத பாடல் போல் சொல்வது ....துன்பப்படும் மக்கள் எல்லாம் ஏதோ பாவம் செய்தவர்கள் என்பது போல் சித்தரிப்பது என்ன நியாயம் வெற்றி வேல் ஜி :icon_mrgreen:

தூயவன்! கிட்டத்தட்ட அதே அர்த்தத்தில் இருக்கும் இன்னொரு திருமந்திரம்

ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்

தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்

வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்

நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே.

அது மட்டும் இல்லை, வேதங்கள் உரைக்கும் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முறைப்படி

ஓதுபவர்களை நிந்தனை செய்பவர்களின் கதியை பற்றி திருமூலர் திருமந்திரத்தில் என்ன சொல்கிறார் என்று

கீழே பாருங்கள்

மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்

நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு

வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

இவர்களின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் பதில் இருக்கிறது. நேரம் தான் கிடைப்பதில்லை. பல்கலைக்கழகத்தில்

இது எனது இறுதி ஆண்டு. ஒரு Research Project எல்லா நேரத்தையும் விழுங்கி கொண்டிருக்கிறது.

Edited by வேலவன்

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடசியில திருவள்ளுவரையும் மத விசுவாசத்தில கடிச்சுப் போட்டாரு. :rolleyes:http://www.tamilnet.com/art.html?catid=99&artid=25309

கி பி அரவிந்தனை வேறை துணைக்கு இழுத்திருக்காரு :icon_mrgreen:

இது மதம் சார்ந்த விவாதம் அல்ல. உங்களுக்கு ஆரிய திராவிட கண்ணாடியை போட்டு பார்த்தால் எல்லாம் அப்படி தான் தெரியும். கொன்சம் ஆறுதலா இருந்து யோசிக்கலாமே? கட்டுரை சொல்ல வரும் விடயத்தை கூட ஆற அமர சிந்தித்து பார்க்க முடியாமல் நீங்கள் போட்டிருக்கும் கண்ணாடி தடுக்கிறது. :unsure:

சுபன் மற்றும் சிலருக்கு களம் முழுக்க கொட்டி கிடக்கும் ஆரிய-திராவிட/ பார்பனம் என்ற விடயத்தை இந்த தலைப்புக்குள்ளும் திணித்து தலைப்பை திசை மாற்றாமல் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்து விவாத்தை கொண்டு செல்ல முயற்சியுங்கள். அதை விடுத்து களம் முழுவதும் கொட்டி கிடப்பது போல் இந்த தலைப்பையும் பிரயோசனமற்ற தலைப்பாக மாற்றமல் இருந்தால் நலம்.

இப்போது எஞ்சியிருக்கும் தேவாரங்கள் எப்படி சோழ மன்னனால் காப்பாற்றப்பட்டது என்பதை நான் மேற்கோள் காட்டியிருந்தேன். ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதை உங்களால் சிந்திக்க முடியவில்லை.

பறைய குலத்தை சேர்நத திருவள்ளுவருக்கு வெள்ளை வஸ்திரமும் பூணுலும் போட்டு உருவப்படுத்தி திருக்குறளை நம்மவர் படிப்பார்கள். திருக்குறளை திரிவுபடுத்த முடியாதபோது திருவள்ளுவரையே பார்பானாக சித்தரித்தது வெளிப்படையான விசயம்.

திருமூலர் சித்தர் மரபில் மூத்தவர். வேதங்களை எதிர்த சித்தர்கள் சாதியடிப்படையில் பஞ்சமர் என்று அவர்களும் அவர்கள் பாடல்களும் ஒதுக்கிவைக்கப்பட்டதை முனைவர் க. கைலாசபதியின் சித்தர் தத்துவம் என்னும் ஆய்வு குறிப்பிட்டு காட்டுகின்றது.

சித்தர்களைப் பற்றிக் காய்தல் உவத்தல் இன்றி ஆராய்ந்தவர்கள் யாவரும் ஏகோபித்த குரலிற் கூறுவது இதுதான். சித்தர்களைப் பற்றியும் அவர்களது இரசாவாதத்தைப் பற்றியும் எழுதிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையிலே, கும்பகோணம் கே.சி. வீரராகவ ஐயர் இவ்வாறு கூறியுள்ளார்:

"பெரும்பாலான சித்தர்கள் சங்கரரின் ஒருமைவாதத் தத்துவத்தையும் இந்துக்களின் விக்கிரக வழிபாட்டையும் எதிர்த்து மறுத்தவராகவே காணப்படுகின்றனர்."

இவ்வாறு சித்தர்கள் வைதிக சமயத்தை எதிர்த்து நிற்கவும், வைதிக நெறியினரும் அவர்களைத் தள்ளி வைத்தனர். மிகச் சமீபகாலம் வரை சைவ சித்தாந்திகளும் சித்தர் நூல்களை விலக்கி வைத்திருந்தனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய கா.சு. பிள்ளை முதலிய சிலரே சித்தர் பாடல்களும் கற்கத் தகுந்தன எனக் கூறுத் தொடங்கினர். மரபு வழி வரும் கருத்துக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் இரு மேற்கோள்கள் அமையும்.

"இதுகாறும் சைவ சாத்திர வரிசையிலே நுழைவதற்கு இடம் பெறாத பஞ்சம நிலையிலே நிற்கும் சித்தர் நூல் அவ்வியாசத்தில் அக்கிரஸ்தானம் பெற்றுவிட்டது.

"சைவ சமயத்தைத் தாபித்து உபகரித்த சைவ சமய குரவர்கள் கற்பித்த வழியைக் கைப்பிடித்து ஒழுகும் சைவ மக்களும் சித்தர் நூலை நோக்கவும் இசைவாரா? ஒருகாலும் இசையார்."

மேற்கூட்டிய இரு கூற்றுக்களும் முறையே வி.சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, திருநெல்வேலி மா. சாம்பசிவ பிள்ளை ஆகியோரால் திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்னும் நூலிற் கூறப்பட்டவை.

தமிழரிடையே நிலவிய சாதியமைப்பின்படி, பஞ்சமர் நால் வருணத்துக்குப் புறம்பான வருணத்தார்; சித்தர்களைப் பஞ்சம நிலையில் உள்ளோர் என்று கூறுவது உற்று நோக்கத்தக்கது. சுருங்கக் கூறின், வைதிக சமய எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்துக் கூறப்படுகிறது. வைதிக சமயிகளின் கோபாவேசத்திற்குக் காரணம் எமக்குத் தெரிந்ததே. இடைக்காலச் சமுதாயம் வேத வாழ்க்கையை மூலாதாரமாய்க் கொண்டு வருணாசிரம தருமத்தின் அடிப்படையிற் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. வேத வழக்கொடு மாறுபடும் எதுவும் ஆக்குரோசத்துடன்கண்டிக்கப்ப

இவ்வளவும் இந்த தலைப்பில் கொட்டி தலைப்பை திசை மாற்றுவதை விட நான் கேட்ட 3 கேள்விக்கும், ஏன் சித்திரை புதுவருடம் எந்த புராண கதைகளுடனும் சம்பந்த படாது தனித்து நிக்கிறது? நீங்கள் சொல்வது போல் ஆரிய மயப்பட்டிருந்தால் அதற்கும் ஒரு புராண கதை இருக்குமே?

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லது பெயர் சம்பந்தமான ஒரே ஒரு கேள்வியை கேட்டு விட்டு இப்படி தேவையற்று தலைப்பை திசை மாற்ற பந்தி பந்தியாக எழுதி குவிப்பதில் பிரயோசனம் இல்லை.

சொல்ல போனால் தைப்பொங்கல் தினத்தை தான் ஏனைய வட இந்தியர்களும் மகர சங்கிரந்தி என்று ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகிரனர். சித்திரை வருடம் தான் ஆரியருடைய எந்த பண்டிகையுடனும் சேரது தனித்து நிற்கிறது. எனவே அதை அழித்து விட்டு ஆரியர்களும் கொண்டாடும் தைப்பொங்கலை வருட பிறப்பாக்கி விட்டால் அந்த குறையும் தீர்ந்து விடும் என்ற அவா போன்று தான் தெரிகிறது. :icon_mrgreen::rolleyes:

Edited by KULAKADDAN

இவ்வளவும் இந்த தலைப்பில் கொட்டி தலைப்பை திசை மாற்றுவதை விட நான் கேட்ட 3 கேள்விக்கும், ஏன் சித்திரை புதுவருடம் எந்த புராண கதைகளுடனும் சம்பந்த படாது தனித்து நிக்கிறது? நீங்கள் சொல்வது போல் ஆரிய மயப்பட்டிருந்தால் அதற்கும் ஒரு புராண கதை இருக்குமே?

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லது பெயர் சம்பந்தமான ஒரே ஒரு கேள்வியை கேட்டு விட்டு இப்படி தேவையற்று தலைப்பை திசை மாற்ற பந்தி பந்தியாக எழுதி குவிப்பதில் பிரயோசனம் இல்லை.

சொல்ல போனால் தைப்பொங்கல் தினத்தை தான் ஏனைய வட இந்தியர்களும் மகர சங்கிரந்தி என்று ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகிரனர். சித்திரை வருடம் தான் ஆரியருடைய எந்த பண்டிகையுடனும் சேரது தனித்து நிற்கிறது. எனவே அதை அழித்து விட்டு ஆரியர்களும் கொண்டாடும் தைப்பொங்கலை வருட பிறப்பாக்கி விட்டால் அந்த குறையும் தீர்ந்து விடும் என்ற அவா போன்று தான் தெரிகிறது

அப்படி ஒரு எண்ணம் எனக்கில்லை. அதை நான் முதலில் சுட்டிக்காட்டியுள்ளேன்

எமது தனித்துவத்தை நிலைநாட்ட எது கருவியானதோ எது உறுதுணையானதோ அதன் மூலமே தனித்துவத்தை சிதைத்தார்கள். இன்று நாம் தமிழ்வருடப்பிறப்பிற்கு தமிழ் அடயாளத்தை தேடுகின்றோம். தொலைந்ததிற்கு காரணம் கற்பிக்கின்றோம் அல்லது வருடப்பிறப்பையே மாற்றுகின்றோம். ஆனால் உண்மை ஒன்று உள்ளது என்ற நம்பிக்கையை யாரும் நாடுவதில்லை. அதை நோக்கிய தேடல் செய்வதில்லை.

ஏன் சித்திரை புதுவருடம் எந்த புராண கதைகளுடனும் சம்பந்த படாது தனித்து நிக்கிறது?

புராணக்கதைகளுடன் சம்மந்தப்படாமல் தனித்து நிற்கின்றது என்பது உறுதிப்பட்டால் ஏன் பிரச்சனை வரப்போகின்றது?

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

'ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா? என்று கேட்டார். அதற்குக் கண்ணன், "நான் இல்லாத பெண்ணை வரிக்க" என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி "நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்" என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் "பிரபவ முதல் அட்சய" இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்."

(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை

தமிழ்புத்தாண்டு பற்றிய மெல்போன் சபேசனின் ஆக்கத்தில் இருந்து..

எமது புத்தாண்டுக்கு இந்தவிளக்கம் சரியா அல்லது தமிழ் புத்தாண்டுக்கான சரியான விளக்கம் இருக்கா?

தமிழ் புத்தாண்டுக்கான சரியான விளக்கத்தை தேடுவது கடமையாகின்றது. இவ்வாறான அடிப்படையில் திரிவுபடுத்தல்கள் சூழ்சிகள் அழிக்கப்பட்ட வரலாற்றுச்சுவடுகளை சுட்டிக்காட்டுவது இவ்விடயத்தில் திசை திருப்பல் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். புத்தாண்டுக்கான விளக்கம் எழுத்துவடிவில் இவ்வாறே இருந்தால் இதை தமிழர் அடயாளமாக முன்வைப்பது சரியாகுமா? இல்லை எனில் உரிய விளக்கம் தேடுவது பிழையாகுமா? பஞ்சாங்கம் முதல் அனைத்தும் இந்த வருடங்களின் பெயர்களை உச்சரிக்கின்றது. இது சாதராண விசயம் என்று புறந்தள்ளிவிட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புத்தாண்டுக்கான சரியான விளக்கத்தை தேடுவது கடமையாகின்றது. இவ்வாறான அடிப்படையில் திரிவுபடுத்தல்கள் சூழ்சிகள் அழிக்கப்பட்ட வரலாற்றுச்சுவடுகளை சுட்டிக்காட்டுவது இவ்விடயத்தில் திசை திருப்பல் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். புத்தாண்டுக்கான விளக்கம் எழுத்துவடிவில் இவ்வாறே இருந்தால் இதை தமிழர் அடயாளமாக முன்வைப்பது சரியாகுமா? இல்லை எனில் உரிய விளக்கம் தேடுவது பிழையாகுமா? பஞ்சாங்கம் முதல் அனைத்தும் இந்த வருடங்களின் பெயர்களை உச்சரிக்கின்றது. இது சாதராண விசயம் என்று புறந்தள்ளிவிட முடியுமா?

அற்பத்தனமான ஒரு புராணக்கதையை முன்னிறுத்தி, புத்தாண்டு என்னதையே இல்லாமல் செய்கின்றேன் என்பதை விட, 60 ஆண்டுகளின் பெயரையும் தமிழ்பெயரில் மாற்றி தொடர்ந்து பேணுவதில் என்ன குறை உண்டு. புத்தாண்டையே இல்லாமல் செய்வதை விட 60 ஆண்டுகளையும் மாற்றுவதில் என்ன குறை கண்டீர்.

திவரவும் அவுஸ்ரேலியாச் சபேசன் ஒரே கட்டுரையைத் தான் திருப்பித் திருப்பி எழுதுவார். என்ன தான் சொன்னாலும். மாதாந்தம் கட்டுரை வரவேண்டுமே என்ற கவலை அவருக்கு.

பார்பான் என்ற சொல்லை தூக்கினாலே பார்பானை விட அதிகமாக நீங்கள் பதறியடிப்பீர்கள் என்பதும் நிச்சயமாக கருத்துக்களை மறுதலிப்பீர்கள் என்பதும் தெரிந்ததே. நான் முன்வைத்த கருத்தின் நோக்கம் தமிழை தேடியது. ஏன் தமிழில் தமிழ் வருடங்களின் பெயர்கள் இல்லை என்பதை தேடியது. அதற்கு நீங்கள் சொல்லும் காரணம் தமிழ் தாவிவிட்டது. இப்போது தமிழர் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது போல் சமஸ்கிருதத்தில் வைத்திருப்பார்கள். அதில் வியப்பில்லை என்பதே ஆகும். இது தமிழரை சர்வசாதாரணமாக குற்றம் சொல்லி ஆரியத்துக்கு வக்காலத்து வாங்கும் போக்கு. சோழ மன்னன் கதவை உடைத்து தமிழ்த் தேவாரங்களை மீட்டான் புலம் பெயர் தமிழன் கஸ்ரப்பட்டு காசு செலவழித்து ஐயர்களை பொன்சர் பண்ணி தனக்கு தெரியாத மொழியில் பூசை வைக்கின்றான். கேட்ட தமிழ்த்தேசியம்?

வழமையாக எதற்கெடுத்தாலும் பார்ப்பானைக் குற்றம் சாட்டுகின்ற உங்களின் செயல் எனக்குப் பழக்கப்பட்டதாக இருந்தாலும், இந்தப் பாடலில் இருந்த மயக்கம் உண்மையாகவே பார்ப்பானி என்பதையே சொல்ல வருகின்றதோ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருந்தாலும், வழமை போலவே உங்களின் திரிக்கப்பட்ட வாதம் என்பதை நிருபித்த வெற்றிக்கு நன்றிகள்.

தமிழ் தேசியம் என்பது கோவிலில் மந்திரம் ஓதுவதால் வரப்போவதில்லையே. அடுத்த சமுதாயத்தையும் தமிழில் கொண்டு செல்வதால் தான் வரும். கோவிலில் ஓதுகின்ற மந்திரங்கள் யாரையும் பாதிக்கப் போவதில்லை. அதைக் கேட்டுத் தமிழ் மொழியும் அழியாது. ஆனால் இன்றைய உலகத்தில் பிறமொழியில் படிக்கின்ற குழந்தைகள் தமிழ் தெரியாமல் இன அழிவுக்கு உள்ளாகின்றார்கள் பாருங்கள். அப்போது தான் தமிழ்த் தேசியம் பாதிக்கின்றது. அதில் கூட உங்களுக்குத் தெளிவில்லை. அந்த இலட்சணத்தில் தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்க....

பறைய குலத்தை சேர்நத திருவள்ளுவருக்கு வெள்ளை வஸ்திரமும் பூணுலும் போட்டு உருவப்படுத்தி திருக்குறளை நம்மவர் படிப்பார்கள். திருக்குறளை திரிவுபடுத்த முடியாதபோது திருவள்ளுவரையே பார்பானாக சித்தரித்தது வெளிப்படையான விசயம்.

உங்களுக்குஎன்னுமொரு விளக்கமும் சொல்ல வேண்டும். திருவள்ளுவர் ஒளவையாரின் சகோதரர். திருக்குறளைச் சபை ஏற்றியதில் ஒளவையாரும் முக்கிய பங்கு வகித்தார். அது நிற்க, பூணூல் என்பது பிராமணனுக்கு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் மரத்தொழில், நகைத்தொழில் செய்கின்ற ஆச்சாரிகள், கூடப் பூணூல் அணிவதுண்டு. அக்காலத்தில் ஆண்கள் வெறுமேலோடு திரிந்தார்கள் என்பதால் படித்தவர்களையும், உயர்தொழில் வகிப்பவர்களையும் அடையாளம் செய்யப் பூணூல் அணிவார்கள். அப்படிப்பட்டவர்கள் அந்தணர்கள் எனவும் கௌரவிக்கப்பட்டார்கள்.

அதை விட முக்கியமான செயல் செய்கின்றபோதும் பூணூல் அணிவார்கள். மரணவீடுகள், தீட்சை கேட்கின்ற போது எல்லாம் பூணூல் அணிவதுண்டு.

ஆனால் நாம் அதைக் கைவிட்டு விடப் பிராமணர்கள் மட்டும் தான் தொடர்ந்து பேணுகின்றார்கள். நீங்களும் யாரும் திராவிடம், கத்தரிக்காய் கதைப்பவனின் கதையைக் கேட்டு வெகுளித்தனமாக எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள்.

இங்கே திருவள்ளுவரைச் சாதியாக நோக்குவது தாங்கள் தான். என்ன சாதியாக இருப்பினும், அவரது சகோதரி அரசமேடைகளில் மதிப்புரியவராக இருந்தார் என்பது கு.தக்கது

//As all of us follow the Gregorian calendar for all practical purposes, there is no official compulsion to use the Tamil Nadu government’s calendar. People can ignore it. //

மேல தமிழ் நெற் எழுதி இருப்பது. நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கு இன்றும் கொலைகள் கொள்ளைகள் நாளந்தம் நடந்து கொண்டிருக்கிறது.எவருமே பாவிக்காத தமிழ்க் கலண்டரை முன் வைத்து இரண்டு கட்டுரை போடுவதும் எவருமே பாவிக்காத தமிழ் ன்ஆட்டு அரசின் கலண்டரைப் பற்றியும் தமிழ் நெற் கவலைப் படுவது எதற்காகா?

இந்த விவாதம் தேவையா? இதனால் யாருக்கு என்ன பலன்? :D

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.