Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜம்மு பேபியுக்கு சிட்னி முருகன் கோயிலில நடந்த கலியாணம்... !

Featured Replies

அட.. இண்டைக்கு சீடனுக்கு பதிலா குருவே வந்திட்டார் கதை சொல்லிறதுக்கு. :)

அது வேற ஒண்டும் இல்லையுங்கோ அண்மையில ஏப்பிரல் அஞ்சாம் திகதி எங்கட ஜம்மு பேபியுக்கு சிட்னியில நடந்த இரகசியமான கலியாணம் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் எண்டு நினைக்கிறன்.

முதலில பேபிகள் கலியாணம் கட்டிறதே தவறு. ஆனா... இந்தக்கலிகாலத்தில எல்லாம் சரி, பிழை பார்த்தா நடக்கிது? இல்லைதானே? ஜம்மு பேபி வாழ்க்கையிலையும் இப்படி ஒரு எதிர்பாராத சறுக்கல் வந்திட்டிது. என்ன செய்யுறது? விதி யாரை விட்டு வச்சிது! :D

இனி கதைக்கு வருவம்....

(ஜம்மு பேபி மொண்டூசரிக்கு போய் வாறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே. அங்க என்ன நடந்திச்சிது எண்டால் எங்கண்ட பேபியுக்கு இன்னொரு பேபியோட ஒரு இது வந்திட்டிது. ஆரம்பத்தில அது சும்மா ஒரு இதுவாத்தான் இருந்திச்சிது. ஆனா பேபியோட படிக்கிற வேறு சில பொறாமை பிடிச்சபேபிகள் இந்த விசயத்தை டீச்சருக்கு போட்டு குடுத்துட்டிதுகள். கடைசியில இது ஜம்மு பேபியிண்ட அப்பாவிண்ட காதுக்கு போட்டிது. பேபியிண்ட வில்லன் அதுண்ட அப்பா எண்டுறவிசயம் எல்லாருக்கும் தெரியும்தானே? அப்ப அப்பா என்ன செய்தார் எண்டால் இவன இப்படியே விட்டா சரிவரான், உருப்படமாட்டான், சீரழிஞ்சு போவான் எண்டு நினைச்சுப்போட்டு ஜம்முபேபியின் எதிர்காலம் பற்றி கதைப்பதற்காக உடனடியா பேபிக்கு முன்னாலையும், பின்னாலையும் திரியுற சுண்டலை கூப்பிட்டார்...)

சுண்டல்: அங்கிள் கூப்பிட்டனீங்களோ?

அப்பா: ஓமப்பன். எனக்கு ஒரு உதவி செய்வீரோ?

சுண்டல்: சொல்லுங்கோ அங்கிள்..

அப்பா: நான் உவன் ஜம்முவுக்கு ஒரு கலியாணம் செய்துவைக்கலாம் எண்டு யோசிக்கிறன். நான் சொன்னால் உவன் கேட்கமாட்டான். நீர்தான் இத பக்குவமா உவனுக்கு எடுத்துச் சொல்லி கலியாணத்துக்கு சம்மதிக்க வைக்கவேணும்...

சுண்டல்: (திகைப்பு...)... அது வந்து...

அப்பா: சொல்லும் பரவாயில்ல...

சுண்டல்: அவன் இப்பத்தானே மொண்டூசரிக்கு போறான். இப்ப ஏன் கலியாணம் எல்லாம்.... ?

அப்பா: ஏன் உமக்கு தெரியாதே? எங்கண்ட நாயன்மார்களே அந்தக்காலத்தில அஞ்சு பத்து வயதுகளில கலியாணம் செய்து இருக்கிறீனம். எண்ட பிள்ளையும் சின்ன வயசில கலியாணம் கட்டி நாயன்மார் மாதிரி இப்பிடி பொப்பியூலரா வாறதில என்ன பிழை இருக்கிது..?

சுண்டல்: :) (அமைதி..)

அப்பா: (சுண்டலுக்கு ஜம்முபேபி பற்றி பல விசயங்களை கூறி உடனடியாக கலியாணம் செய்துவைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்குகின்றார்...)

(கடைசியில... கலியாண ஒழுங்குகளும் எல்லாம் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்று முடிஞ்சிது...)

(ஏப்பிரல் அஞ்சாம் திகதி அதிகாலை சுண்டல் ஜம்முவை நித்தாவால் தட்டி எழுப்புகின்றார்..)

சுண்டல்: டேய் ஜம்மு... டேய் ஜம்மு..

ஜம்மு: யாரடா அவன்... (சுண்டலுக்கு காலால் உதைவிழுகின்றது...) ஆ... ஏய் என்ன விடு என்ன விடு... (நித்தாவில் பிதற்றல்..)

சுண்டல்: (கோவம் வருகின்றது. பேபியின் காதில் பலமாகச் சுண்டுகின்றார்...) டேய் அது நானடா... உண்ட சுண்டல் அண்ணா... பாவனா பாவனா... பாவனா வந்து இருக்கிறா

சிட்னியுக்கு...

ஜம்மு: (பதறி அடிச்சு நித்தாவால் எழும்பி.. ) இப்ப என்ன சொன்னீங்கள்? இப்ப என்ன சொன்னீங்கள்? பாவனாவா? பாவனாவா? எங்க? எங்க? :icon_mrgreen:

சுண்டல்: (மனதினுள்... ஆ வேர்க் அவுட் ஆயிடிச்சு...) இஞ்சதான் எங்கண்ட சிட்னி எயார்போர்டில வந்து நிக்கிறாவாம். வேற எங்கையோ போகேக்க இடைவழியில ரெண்டு

மணித்தியாலம் டிரான்சிட்டில நிக்கிறா...

ஜம்மு: ஆ அப்பிடியா.. (சந்தோசம்..) உடன வாங்கோ போவம்.. (பதற்றம்..)

சுண்டல்: இப்பிடியே எப்பிடி போறது? முதலில இந்த வேட்டி, சால்வைய கட்டு..

ஜம்மு: வேட்டி, சால்வையா? என்னத்துக்கு...

சுண்டல்: எங்கட யாழ் நண்பர்கள் வட்டம் சார்பில நீ தான் பாவனாவுக்கு தமிழ் முறைப்படி மாலை போட்டு எயார்போர்டில வாழ்த்து சொல்லப்போறாய்... அதுதான்..

ஜம்மு: (கிடுகிடு எண்டு பல்லு மினுக்கி குளிச்சு... வேட்டி, சால்வைய கட்டிப்போட்டு..) சரி வாங்கோ போவம் உடன. பாவனா போகபோறா..

சுண்டல்: ஓம் போகப்போறா, போகப்போறா... அதுக்கு முதலில இந்த தலைப்பாகையையும் போடு...

ஜம்மு: என்னத்துக்கு?

சுண்டல்: அப்பதானே பாவனா எங்களப் பார்த்து ஈழத்தமிழர்கள் எண்டு கொஞ்சம் இம்ப்ரஸ் ஆவா!

ஜம்மு: அப்ப சரி... (தலைப்பாகை.. மிச்சம் கழுத்து செயினுகள் எல்லாம் பேபியுக்கு மாட்டுபடுகிறது...)

சுண்டல்: சரி சரி வா போவம்.. பாவனா போகப்போறா...

(சுண்டல் வீட்டு அறைக்கதவை திறக்க... வாசலில்... ஒரு சின்னப்பெடியன் மாப்பிளைத் தோழன் கோலத்தில் ஜம்முபேபியின் காலை இறுக்கிப்பிடிச்சு தண்ணீரால் கழுவ.. வெளியில வீடியோக்காரங்கள் படம் எடுக்க ஜம்மு பேபிக்கு ஒரே குழப்பம்...)

ஜம்மு: சுண்டல் அண்ணா வட் இஸ் திஸ்? வட் த ஹெல் ஆர் யூ டூயிங்? கூ ஆர் தீஸ் டேர்டி பெலோஸ்? :(:lol:

(திடீரெண்டு புத்துமாமா வேட்டி சால்வையுடன் தோன்றுகின்றார்..)

புத்துமாமா: அது ஒண்டும் இல்லையப்பு. இண்டைக்கு உனக்கு கலியாணம் கட்டிவைக்கப்போறம்...

ஜம்முபேபி: மை காட்... (ஸ்பீச்லெஸ்... சிறிது நேரத்துக்கு பின்.. சத்தமாக) இதுக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டன்.

அப்பா: இனி இவரோட ஒரு கதையும் இல்ல... தம்பி சுண்டல், புத்தன் ரெண்டு பேரும் ஆள இறுக்கிப்பிடிச்சு தூக்கி காரில ஏத்துங்கோ..

ஜம்புபேபி: டேய் என்ன விடுங்கடா டேய்...

அப்பா: அவனிண்ட வாயுக்க ஒரு லொலிப்பொப்ப வச்சு விடு தம்பி...

(லொலிப் பொப் இரண்டு ஜம்முபேபியின் வாயினுள் வைக்கப்படுகின்றது. பேபி இப்போது அமைதி அடைகின்றது..)

(பின்னர்...)

(ஜம்மு பேபி இப்போது லிமோசினில் ஏற்றப்படுகின்றது.. லிமோசினுக்க கந்தப்பு, ஈழவன், அரவிந்தன், சபேசன் இன்னும் பல யாழ்கள உறவுகள் கூல் டிரிங்க்ஸ் குடிச்சுக்கொண்டு ஜாலியா இருக்கிறீனம்... ஜம்மு பேபியுக்கு பிடிச்ச "முன்பே வா என் அன்பே வா.." என்ற பாடல் பெரிய சத்தமாக லிமோசின் ஸ்பீக்கரில் ஒலிக்கின்றது. எல்லாரும் ஜம்முபேபிக்கு உற்சாகம் கொடுக்கின்றார்கள்..)

கந்தப்பு: தம்பி இன்னும் ரெண்டு மணித்தியாலத்தில உனக்கும் உண்ட மொண்டூசரி கேர்ள் பிரண்டுக்கும் சிட்னி முருகன் கோயிலில கலியாணம்.. (ஒரு சின்னச்சிரிப்பு...)

சபேசன்: அதுவும் தமிழ் முறைப்படி செய்யப்போறம்..

புத்துமாமா: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது! எண்டு குரள் சொல்லேக்க நீ பொம்பிளையிண்ட கழுத்தில தாலிய கட்டவேணும்..

சுண்டல்: ஆனா பேபியிண்ட அண்ணன் நான் தான் குறள சொல்லுவன்..

புத்தன்: இல்ல மாமா நாந்தான் சொல்லுவன்..

சபேசன்: அப்ப நான் ஒருத்தன் ஏனாம் இஞ்ச இருக்கிறன்? குறள நாந்தான் சொல்லுவன்..

ஈழவன்: ஏனப்பா இதுக்கு சண்டை.. எல்லாரும் சேர்ந்தே சொல்லலாமே!

அரவிந்தன்: குட் ஐடியா ஈழவன்.. :icon_mrgreen:

ஜம்முபேபி: (மெளனம்.. தீவிர யோசனை...)

(சுண்டல் லிமோசினை ஓடுகின்றார். அப்பா முன் இருக்கையில் இருக்கின்றார். புத்தன் ஜம்முவை கண்காணிச்சுக்கொண்டு அவர் அருகில் இருக்கின்றார். சுமார் நாற்பது நிமிடங்களின் பின் லிமோசின் சிட்னி முருகன் கோயிலை சென்று அடைகின்றது..)

இன்னிசை: வாங்கோ வாங்கோ அண்ணா.. மாப்பிளைக்கோலத்தில என்னமா அழகா இருக்கிறீங்கள். எண்ட கண்ணே பட்டிடும்போல இருக்கிது...

கனிஷ்டா: ஆஹா... எண்ட அண்ணாவுக்கு முன்னால இவங்கள் சூரியா எங்க.. விஜய் எங்க... எங்க அந்த ஆரர்த்திய காட்டுங்கோ..

அம்மா: அப்பன். வாங்கோடி... எண்ட செல்லம்.. நான் உங்கண்ட தாடிக்கு திரும்பவும் திரும்பவும் சொன்னனான். அவர்தான் உங்களுக்கு ஒரு கால்கட்டு போடவேணும் எண்டு ஒற்றைக்காலில பிடிவாதமா இருந்து இந்தக் கலியாணத்த ஒழுங்குபடுத்தினவர். குழப்படி செய்யாமல் மம்மி, தாடி விருப்பப்படி எல்லாம் நல்லபடியா அமைய ஒத்துழைப்பு தாங்கோ செல்லம்...

ஜம்முபேபி: (மெளனம்.. தீவிர யோசனை...)

(மணவறையில் ஐயருக்கு பதிலாக ஐயர் இருக்கும் இடத்தில் சபேசன் அவர்கள் உட்கார்ந்து இருக்கின்றார்.)

சுண்டல்: சரி மினக்கட நேரம் இல்ல. உவன் ஜம்மு கொஞ்சம் வித்தியாசமான ஆள். நேரத்துக்கு நேரம் என்னசெய்வான் எண்டு அவனுக்கே தெரியாது. ஏதாவது இசகு பிசகா குழப்படி ஏதாச்சும் நடக்கும்முன்ன்னம் பொம்பிளையக் கூட்டிகொண்டு வாங்கோ..

புத்தன்: ஐயர்... மன்னிக்கவும்...சபேசன்... என்ன சும்மா வாய வச்சுகொண்டு இருக்கிறீங்கள். மந்திரம் சொல்லாட்டிலும் கொஞ்ச திருக்குறளாவது சொல்லலாம் தானே?

சுண்டல்: நீங்கள் வேற... அவருக்கு அந்த "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை.." எண்ட குரள் தவிற வேறஒண்டும் தெரியாதாம்..

புத்தன்: சரி அப்ப கடைசி பொன்மொழிகளாவது சொல்லலாம் தானே? இப்படியே சும்மா உம் எண்டு வாய வச்சு இருந்தால் நல்லாவா இருக்கும். கலியாணத்துக்கு வந்த சனத்துக்கு போர் அடிக்கப்போகிது..

(திடீரெண்டு கையில் சிறுதுண்டு பேப்பருடன் இன்னிசை ஓடிவருகின்றார்.. )

இன்னிசை: இந்தாங்கோ இந்தாங்கோ மாமா...

புத்தன்: என்ன பிள்ள இது?

இன்னிசை: யாழ் இணையத்தில இனியவளிண்ட பொன்மொழிகள் எண்டு ஒரு பகுதி இருக்கிதுதானே? அதில எனக்கு பிடிச்ச சிலத நான் மனபாடம் செய்து இந்தப்பேப்பரில நினைவுபடுத்தி எழுதிவச்சு இருக்கிறன். திருக்குறள் தெரியாட்டி இதச்சொல்லுங்கோ..

புத்தன்: பாத்தீங்களே எண்ட மருமகள் எவ்வளவு ஸ்மார்ட் எண்டு. தம்பி சபேசன் இந்தாரும் பிடியும்... இதையாவது சொல்லும்...

(சபேசன் மைக்கில் பொன்மொழிகள் சொல்கின்றார்..)

சுண்டல்: எங்க இன்னும்தான் பொம்பிளைய காண இல்ல?

புத்தன்: வாறா வாறா கொஞ்சம் அமைதியா இரும்...

(பொம்பிளை வருகின்றா... இன்னிசையும், கனிஸ்டாவும் இருமருங்கிலுமாக மணமகளை அழைத்து வருகின்றார்கள்.. முன்னால் மொண்டூசரி பிள்ளைகள் கைகளில் ஒளித்தீபங்கள் ஏந்திக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக அணியாக வருகின்றார்கள்..)

(இப்போது வழமையாக கலியாணவீடுகளில் அடிக்கப்படும் புகைக்குண்டு அடிக்கப்படுகின்றது... எல்லா இடமும் புகைமண்டலம் பரவுகின்றது.. சிறிது நேரத்தின் பின்.. )

சுண்டல்: ஆ... ஐயோ..! புத்து மாமா... ஜம்மு பேபியக் காண இல்ல...

இன்னிசை: ஆ ஐயோ..! நாங்கள் கூட்டியந்த பொம்பிளையையும் காண இல்ல...!

(எல்லாரும் ஜம்முபேபியையும், மணமகளையும் காணவில்லை என்று பதறுகின்றார்கள்... )

(சில நிமிடங்களின் பின்...)

(சுண்டல் ஓடிவந்த லிமோசின் கலியாண மண்டப வாசலில் நிக்கின்றது. உள்ளே ஜம்முபேபியும், மொம்பிளையும் லிமோசினுள் இருந்து கைகாட்டுகின்றார்கள்.. )

ஜம்முபேபி: (எல்லாரையும் பார்த்து உரக்க கத்துகின்றது) கண்ணா நாங்கள் ஒருவரை எப்படி ஏமாத்துறம் எண்டுறது அல்ல... எப்போது ஏமாத்துறம் எண்டுறது தான் முக்கியம்.. ! அப்ப நான் வரட்டா.. ! :D

அப்பா: டேய் டேய் படுபாவி.... பொம்பிளையக்கூட்டிக்கொண்டு எங்க போறன் எண்டு எங்களுக்கு ஒருக்கால் சொல்லீட்டாவது போடா பு**போக்கு... :)

பொம்பிளை: நாங்கள் மொண்டூசரிக்குத்தான் போறம் மாமா. படிப்பு முடிஞ்சாப்பிறகு திரும்பி வந்து கலியாணம் கட்டுறம். இபோதைக்கு மொண்டூசரியில ஓடிப்பிடிச்சு விளையாடப்போறம். எங்களப்பற்றி ஒண்டும் யோசிக்காதிங்கோ... :D

புத்துமாமா: பாத்து... பாத்து பிள்ள... ! உவனுக்கு காரில கண்டம் எண்டு சாதகத்தில சொல்லி இருக்கிது. எங்கையாவது மோட்டுத்தனமா லுமோசினக்கொண்டுபோய் மோதப்போறான். அவனவிடாமல் நீ வாங்கி ஓடு பிள்ள..

(பொம்பிளை லிமோசினை ஓட.. ஜம்புபேபி தனக்கு நித்தா வருகின்றது என்று சொல்லிவிட்டு பின்னால் போய் படுக்கின்றது. லிமோசீன் மொண்டூசரிக்கு போகின்றது..)

கதையுக்காக ஒரே ஒரு சின்னப் பாடல்...

-யாவும் கற்பனை-

Edited by முரளி

  • Replies 73
  • Views 10.3k
  • Created
  • Last Reply

ஜம்மு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் திருமணத்தை ரகசியமாக நடத்திவிட்டீர்களே. சீரும் சிறப்புடனும் பல்லாண்டு வாழ னாழ்த்துக்கள்>

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு கலியாணமா ?

என்ன கதை இது . கன நாள் காணவில்லை . அப்ப உண்மையாகத்தான் இருக்கும்.

ஜம்மு பேபியை மணமுடித்த பாக்கியவதி கொடுத்து வைத்தவள் .

திரு . திருமதி ஜமுனா புதுமண தம்பதியர்களுக்கு நீங்கள் சகல சிறப்பும் பெற்று , மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நீண்ட நாள் வாழ வாழ்த்துகின்றேன்

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லவே இல்லை....

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க.....

கண்ணா கல்யாணம் பண்ணிக்கிறது முக்கியமில்ல.....கடைசி வரை அடிவாங்காம தப்பிக்கிறதுதான் முக்கியம்....

ஒரு காமெடிக் கதை வாசிச்ச திருப்தி..!

முரளி ... வாழ்த்துக்கள்....!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கற்பனை கதை. முரளி பாராட்டுக்கள்.

ஹீஹீஹீஹீஹீ முரளி நல்லாக கற்பனை பண்ணி நகைச்சுவையாக எழுதி இருக்கிறீங்க.

பாவம் ஜம்மு. காய்ச்சலில் வீட்டுக்குள் இருக்கிற பேபியை இபப்டி விடியவும் நித்திரையாலை எழுப்பி. வேட்டி என்றால் என்ன என்றே தெரியாத பேபியை சிட்னி முருகன் கோயிலில் கொண்டு போய் .......................

சூப்பர் கற்பனை

பேபியின் நிலாக்கா இல்லாமல் ஒரு கல்யாணம் நடந்திடுமா என்ன :lol:

Edited by வெண்ணிலா

அது தானே பார்த்தேன் சும்மா அலட்டுற ஜம்முவை காணவில்லை இப்ப அந்த அலட்டலை முரளி நல்லா செய்கிறார் சிஷ்யனை மிஞ்சிய குரு ஏதோ உருபடியா கல்யாணம் கட்டி இருந்தா காணும் வாழ்துகள் :lol:

அது தானே பார்த்தேன் சும்மா அலட்டுற ஜம்முவை காணவில்லை. ஏதோ உருபடியா கல்யாணம் கட்டி இருந்தா காணும் வாழ்த்துக்கள்...

ஜம்முபேபிக்கு பேபி கிடைக்கும் நாளும் இனி வரப்போகிறது. வெகுவிரைவில் எல்லாம் நடக்க வாழ்த்துகிறேன்.. பெண் யார்.. யாழ்களத்தில் சந்தித்தவரா? இருந்தாலும் இப்படி ரகசியமாக...... சிட்னியில் கூட கனபேருக்கு தெரியாதாம்..?

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா:

ஹீஹீஹீஹீஹீ முரளி நல்லாக கற்பனை பண்ணி நகைச்சுவையாக எழுதி இருக்கிறீங்க.

பாவம் ஜம்மு. காய்ச்சலில் வீட்டுக்குள் இருக்கிற பேபியை இபப்டி விடியவும் நித்திரையாலை எழுப்பி. வேட்டி என்றால் என்ன என்றே தெரியாத பேபியை சிட்னி முருகன் கோயிலில் கொண்டு போய் .......................

சூப்பர் கற்பனை

பேபியின் நிலாக்கா இல்லாமல் ஒரு கல்யாணம் நடந்திடுமா என்ன

நான் வாழ்த்திய வாழ்த்துக்களை திரும்ப எடுத்துக்கொள்கின்றேன் . ஏப்பிரல் மாதம் முழுக்க கவனமாக இருக்க வேண்டும் போல் உள்ளது .

ஜம்முபேபிக்கு வெகுவிரைவில் எல்லாம் நடக்க வாழ்த்துகிறேன்..

ஜம்மு இனி அடிக்கடி யாழ்களத்திற்கு வரமாட்டார் என்று நினைக்கிறேன். திருமண அழைப்பிதழை யாழ்களத்தில் தந்திருக்கலாம்.. முன்பும் ஒரு திருமணம் இப்படி யாழ்களத்தில் நடந்த ஞாபகம்.. ஜம்மு எப்படி புது வாழ்க்கை பிடித்திருக்கிறதா? காதல் திருமணமா?

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிளை.. நல்ல கற்பனை.. பாத்து.. ஜம்மு பேபி கனடாக் கதை எழுதிடப் போகுது.. :lol:

ஜம்முபேபி: (எல்லாரையும் பார்த்து உரக்க கத்துகின்றது) கண்ணா நாங்கள் ஒருவரை எப்படி ஏமாத்துறம் எண்டுறது அல்ல... எப்போது ஏமாத்துறம் எண்டுறது தான் முக்கியம்.. ! :(

அப்ப நான் வரட்டா.. ! :lol:

-யாவும் கற்பனை-

முரளி

அபாரமானகற்பனை :(

முரளி... சிரிச்சு சிரிச்சு வாய் நோகுது :lol::( :( :(

:lol::(:( ஜம்மு பேபி பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். பதினாறு என்று சொன்னது செல்வங்களை, பிள்ளைகளை அல்ல சொல்லிப்போட்டன். பிள்ளைகளை அளவோடு பெற்று, சிறப்பாக வளர்த்து ஆளாக்க வாழ்த்துக்கள். இது எப்படி இருக்கு? :(:D:lol:

:(:D:lol: ஜம்மு பேபி பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன். பதினாறு என்று சொன்னது செல்வங்களை, பிள்ளைகளை அல்ல சொல்லிப்போட்டன். பிள்ளைகளை அளவோடு பெற்று, சிறப்பாக வளர்த்து ஆளாக்க வாழ்த்துக்கள். இது எப்படி இருக்கு? :lol::lol::(

ஜமுனா ஒரு மகளும் ஒரு மகனும் காணும்.. காதலித்து கைபிடித்த மனைவி நியூசிலாந்தில் வாழும் அழ்கிய தமிழ் மகள் என்கிறார்கள் உண்மையா?

முரளி... சிரிச்சு சிரிச்சு வாய் நோகுது :lol: :lol: :lol: :lol:

உண்மையாக திருமணம் நடந்துவிட்டது. அதற்கு ஏனையா சிரிக்கிறீர்கள்..

இதுதான் காமடி..முரளி எழுதியது உண்மை..

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையா? பெண் நியூசிலாந்தில் வாழும் சசி... என்றும் பெயர் அடிபடுகுது.. நீங்கள் ஒருபக்கம் கதையை திருப்புகிறீர்கள்.

எனக்கு எப்படியண்ணா தெரியும். முரளி யாவும் கற்பனை என்றல்லவா போட்டிருக்கிறார். :D இது உண்மையாக இருந்தால் ஜம்முவுக்கு எனது வாழ்த்துக்கள். :(

இவ்வளவு நடந்தும் ஜம்முவின்ர பதிலைக் காணேல்ல. அவர் இப்ப ஏதோ இக்கட்டில இருக்கிறார் எண்டு மட்டும் தெரியுது. :lol:

இது அநியாயம் :P

முரளி....

கதை ரொம்ப நன்னா இருக்கு.... என்னாலை முடியேல்லை....

அதிலை பாருங்கே ஜம்மு பேபி சொன்ன பஞ்: அசத்தல்.

ஆனா... சபேசனுக்கு ஒரு குறள் மட்டும்தான் தெரியும் எண்டு எழுதினது கொஞ்சம் ஓவர். ஆனா தாலி கட்டுறது தமிழரின் பண்பாடில்லையாம். எப்படி சபேசன் அதை அனுமதித்தார். மாலை மட்டும்தான் மாத்தவேணும் எண்டு சொல்லி வெளிநடப்புச் செய்திருக்க வேணுமல்லோ?

சபேசனோடை நெடுக்கு தயா தூயவன் ஆக்களிலை ஒராளை விட்டிருந்தா கண்ணாணம் நன்னா நடந்திருக்கும்.

இது அநியாயம் :P

உண்மைதான் தூயா..எங்களுக்கு சொல்லாமல் ஜமுனா திருமணம் செய்துகொண்டது அநியாயம் தான்.. விடாதீர்கள்..

வாழ்த்துக்கள் ஜம்மு அண்ணா... சொல்லவே இல்ல...[/color]..(அவருக்கே தெரியுமோ தெரியாது... தான் தாலி கட்டுவன் எண்டு...கீகீகீ) :(

ஜம்மு காய்ச்சலில படுத்துக்கிடக்க இங்கு ஜம்முவ வைச்சு காமடி நடக்குது

ஜம்மு வந்து எல்லாருக்கும் இருக்குது பஞ்ச்

ஜம்மு காய்ச்சலில படுத்துக்கிடக்க இங்கு ஜம்முவ வைச்சு காமடி நடக்குது

ஜம்மு வந்து எல்லாருக்கும் இருக்குது பஞ்ச்

ஜம்மு..பாவம் ..மனையாளின் கைப்பிடிக்குள்.. வருவதாவது..

  • கருத்துக்கள உறவுகள்

டேய் ஜம்மு மாப்பி மூலம் எனக்கு பிலிம் காட்டுறியா!!!புலி வருது புலி வருது என்று கடைசியா உண்மையா புலி வந்திடுமோ தெரியவில்லை :(

புத்தின் புஞ்

"கண்ணா கல்யாணம் கட்டுறது பெரிய வேளை இல்லை அத கடைசி மட்டும் கொண்டு இழுக்கிறது தான் முக்கியம்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.