Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணலாற்றில் வான் புலிகளிலின் இரு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

Featured Replies

விடுதலைப்புலிகளின் விமானப்படை மணலாற்றில் குண்டுவீச்சு

விடுதலைப்புலிகளின் விமானங்கள் மணலாற்றின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LTTE aircraft drop bombs in Welioya

LTTE aircrafts dropped three bombs at the Welioya Forward Defence Line in the North a short while ago but the military says it did not cause any major damage

ஆதாரம் Daily Mirror

Tigers stage air raid

Saturday, 26 April 2008

TAMIL Tiger rebels using light aircraft bombed two military targets in northeastern Sri Lanka on Sunday, security sources said.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) hit two targets in the Weli Oya region, where security forces had launched a fresh ground offensive against the rebels yesterday.

"They dropped three bombs at the two locations and flew back,'' a top military source said.

"The damage caused is insignificant, but the attack is symbolic and shows they have co-ordinates of military installations.''

http://www.ajeevan.ch/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan military officials in Colombo said Sunday that Liberation Tigers of Tamileelam (LTTE) had launched air attack on Sri Lanka Army (SLA) positions in Ma'nalaa'ru (Weli Oya) in the early hours of Sunday. This is the second time, after the Black Tiger raid on Anuradhapura airbase in October 2007, the Tigers have deployed their air wing combined with the their ground forces.

The LTTE is yet to release details of its aerial attack in the defensive operation in Ma'nalaaru.

பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மணலாற்றில் வான்புலிகள் வான்வழித் தாக்குதல்கள்

மணலாற்றில் சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகள் மீது சற்று முன்னர் தமிழீழ வான் படை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது. வான்புலிகள் மூன்று குண்டுகளை வீசியதாகத் தெரிவித்துள்ளது.

மேலதிக செய்திகள் தொடரும்...........

http://isoorya.blogspot.com/

மேலதிக விபரங்கள் ஏதாவது கிடைத்ததா?...

புலிகளின் இரண்டு விமானங்கள்; இன்று அதிகாலை1:40 மணியளவில் மணலாறு இராணுவ முன்னரங்க நிலைகளை நோக்கி குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் போது மூன்று குண்டுகள் போடப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிகின்றன. மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்ல.

ஜானா

மணலாற்றில் படைநிலைகள் மீது வான்புலிகள் தாக்குதல்

[ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 27, 2008 - 02:06 AM - GMT ]

மணலாற்றில் உள்ள சிறிலங்கா படைகளின் நிலைகளை இலக்கு வைத்து தமிழீழ வான்படைக்குச் சொந்தமான இரு தாக்குதல் வானூர்திகள் இன்று அதிகாலை குண்டு வீச்சினை மேற்கொண்டுள்ளன.

இரு வேறு பகுதிகளில் உள்ள படை நிலைகளே வான்புலிகளின் குண்டு வீச்சிற்கு இலக்காகியுள்ளன.

வான்புலிகளின் தாக்குதலினை சிறிலங்கா படைத்தரப்பு உறுதி செய்துள்ளது. தாக்குதலின்போது பாரிய சேதங்கள் எதுவும் படையினருக்கு ஏற்படவில்லையெனவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தமிழீழ வான்படையினரின் இத்தாக்குதல் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை மணலாற்று பகுதியில் இரு தரப்பினருக்குமிடையே இன்று அதிகாலை மோதல்கள் தொடங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

http://www.eelatamil.net/index.php?option=...1&Itemid=67

(இணைப்பு 3)

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள், இன்று அதிகாலை வெலிஓயா பிரதேசத்தில் குண்டு வீச்சை நடத்தியுள்ளன. வெலிஓயா இராணுவ முன்னரங்க நிலைகளை குறிவைத்து இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்களினால் 3 குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த குண்டுகள் வெடித்த பொழுதிலும், எந்தவிதமான சேதங்களும் பாதுகாப்புப் படைத் தரப்பினருக்கு ஏற்படவில்லை.

எனினும், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்படி, வெலிஓய 233 படையணி தலைமையகத்திற்கும், வெலிஓய பிராந்திய கட்டளையிடும் தலைமையகம் மீது ஒரே சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் குறித்த முகாம்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், காட்டுப் பிரதேசங்களிலேயே இந்த குண்டுகள் வெடித்துள்ளதாக படைத் தரப்பு தெரிவிக்கின்றது. இந்த குண்டுத் தாக்குதல்கள் காரணமாக எவரும் பாதிக்கப்படவில்லை.

அத்துடன் முன்னரங்க காவலரண் பகுதிகளுக்கு எந்த விதமான சேதமும் இடம்பெறவில்லையும் பாதுகாப்புத் தரப்பு தெரிவிக்கின்றது. விடுதலைப் புலி விமானங்களின் வருகை ரேடார் திரை மூலம் அறிந்த விமானப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானத்தை எதிர்கொள்ளும் வகையில், யுத்த விமானங்கள் அந்த பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டதாக விமான படையின் பேச்சாளர் விங் கொமாண்ட அன்ரு விஜயசூரிய தெரிவித்தார்.

இதனையடுத்து விடுதலைப் புலிகளின் விமானங்களின் விமானத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் விமானப் படைப் பேச்சாளர் கூறியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதற்கு முன்னரும் கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு எண்ணெயத் தாங்கி, அநுராதபுரம் விமானப்படைத் தாளம் மீது தமது விமானத் தாக்குதல்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://isoorya.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணலாற்றில் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் தமிழீழ வான் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

விடுதலைப்புலிகள் மணலாறு பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது மேற்கொண்ட விமான தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது...............

தொடர்ந்து வாசிக்க.........................................................

http://isoorya.blogspot.com/2008/04/4-6.html

பிந்திய செய்தி 2)

நேற்று(26) காலையில் வெலிஒய படைத் தரப்பு மணலாறு வழி விடுதலைப் புலிகளின் பகுதியை நோக்கி முன்னேறும் தாக்குதல் ஒன்றை நடத்த தொடங்கி இருந்ததாகவும், அதன் பின்னர் வெலிஒய படைக்கு சொந்தமான மல்ட்டி பெரல் வைப்பகம் ஒன்றை இலக்கு வைத்தே இன்று அதிகாலை(27) விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

சிங்கள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் விமான தாக்குதல்

கொழும்பு, ஏப். 27-: விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வலு வான தரைப்படை கள், கடற்படைகள் உள்ளன. புதிதாக அவர்கள் விமானப் படையையும் ஏற்படுத்தி இருந்தனர்.

சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்த படை வன்னி காட்டுப் பகுதியில் இயங்கி வருகிறது. அங்கு ரகசிய ஒரு தளமும் அமைத்துள்ளனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் விடுதலைப்புலிகள் விமானங்கள் சிங்கள ராணுவ முகாம்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தின.

இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள பெலிஒயா என்ற இடத்தில் 2 இடங்களில் சிங்கள் ராணுவ முகாம் இருக் கிறது. விடுதலைப்புலிகளிள் 2 விமானங்கள் இங்கு பறந்து வந்து குண்டுகளை வீசின. மொத்தம் 3 குண்டுகள் வீசப்பட்டன. பின்னர் விமானங்கள் பத்திரமாக அங்கிருந்து தப்பி சென்று விட்டன.

ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி முழு மையான தகவல்கள் வெளி வரவில்லை. ராணுவ அதி காரி ஒருவர் கூறும் போது ஒரே ஒரு வீரர் மட்டும் காயம் அடைந்துள்ளார். பெரிய சேதம் இல்லை என்றார். விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இன்னும் தகவல்கள வரவில்லை.

விடுதலைப்புலிகள் விமானம் தாக்கிய போது ராணுவம் தரப்பில் எதிர் தாக்குதல் நடந்ததா என்றும் தெரியவில்லை.

இந்த தாக்குதல் தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு சிங்கள ராணுவ விமானங்கள் வன்னி பகுதியில் விடுதலைப்புலிகள் முகாம் மீது குண்டுகளை வீசின. இதற்கு பதிலடியாக விடுதலைப்புலிகள் விமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

3 நாட்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவ முகாமை அதிரடியாக தாக்கி 150-க்கும் மேற்பட்ட சிங்கள வீரர்களை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து விமானம் மூலமும் தாக்குதல் நடத்தி சிங்கள ராணுவத்துக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுராதாபுரத்தில் சிங்கள விமானப்படை தளம் மீது முதல் விமான தாக்குதல் நடத்தினார்கள். 6 மாதத்துக்கு பிறகு இன்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.

விடுதலைப்புலிகளின் விமானப்படையை அழிக்கும் நோக்கத்துடன் சிங்கள விமானங்கள் அடிக்கடி வன்னி பகுதிக்கு சென்று தாக்கி வந்தன. ஓடு தளத்தை கடுமையாக சேதப்படுத்தி விட்டோம் இனி விடுதலைப் புலிகள் விமானப்படை செயல்படுவது கடினமானவை என்றும் சிங்கள ராணுவம் கூறி வந்தது.

இப்போது விமான தாக்குதல் நடத்தி இருப்பதன் மூலம் சிங்கள ராணுவம் கூறியது அனைத்தும் பொய் விமா னப்படை இன்னும் வலிமையாகவே இருக்கிறது என்பதை விடுதலைப்புலிகள் நிரூபித்து உள்ளனர்.

மூலம் விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

LTTE air raid in Welioya

(Lanka-e-News, 2008 April 27, 8.30 AM) LTTE air wing has reportedly launched two aerial attacks at Welioya Forward Defense Line today (27) around 1.40 AM. Army reports no damage from the LTTE aerial attack.

Security forces initiated an operation from Welioya into the LTTE held territory yesterday morning.

Unconfirmed sources said that a multi barrel rocket launching pad and head office of welioya have been the target of attacks.

Two LTTE aircrafts were used in the air attack.

-lankaenews

சன் நியூஸ் ல் புலிகளின் வான் தாக்குதலில் சிங்களப்படைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக சொல்கின்றனர்....

  • கருத்துக்கள உறவுகள்

வழமையா இராணுவத்தின் செய்திகளையும் அப்படியே சொல்லும் தட்ஸ்தமிழ்.. இந்தச் செய்தியில் தலை கால் இல்லாமல் புளுகித் தள்ளுகிறதே. இரவில் நடந்த தாக்குதலை பட்டப் பகல் எங்கிறது. இலக்குத்தவறாத தாக்குதலில் 6 இராணுவம் பலி என்று இராணுவம் சொன்னதாச் சொல்கிறது..!

-------------------

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் - 6 ராணுவத்தினர் பலி

கொழும்பு: இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடைய கடும் சண்டை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 165 இலங்கை ராணுவத்தினரை கொன்றதாக புலிகள் தெரிவித்தனர். ஆனால் அரசுத்தரப்பில் 48 பேர் உடல் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் 39 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை மணலாறு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் இன்று போர் விமானங்கள் கடுமையாக குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் 2 குண்டு வீச்சு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 6 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதலால் மணலாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீப காலமாக விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் புலிகள் இருந்து வந்த நிலையில் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் செக் நாட்டின் சிறிய ரக போர் விமானங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த விமானப்படை தாக்குதலில் இறங்கியது. இதுவரை 5 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி அனுராதபுரம் விமான தளத்தின் மீது தாக்குதல் நடந்தது.

அதன் பின்னர் விமானப் படைத் தாக்குதல் நடக்காமல் இருந்தது. இடையில், விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை முற்றிலும் அழித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்தது.

ஆனா ல்தற்போது மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது இலங்கை ராணுவத்தை அதிர வைத்துள்ளது. அதிலும் இந்த முறை நடந்த தாக்குதல் குறி தவறாமல் இருந்ததாக ராணுவமே கூறியுள்ளதால் புலிகளின் விமான பலம் இன்னும் குறையவில்ைல என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பகுதியில் ராணுவத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சண்டையில் பாலம்பிட்டி, தட்சணமாறாதமடு ஆகிய இடங்களில் 8 போராளிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வவுனியா மற்றும் மேற்கு வெலிஓயாவில் நடந்த மோதலில் 10 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் மன்னார் பகுதியில் பரப்பகந்தல் என்ற இடத்தில் 4 புலிகளை கொன்றதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 1 வருடமாக மணலாறு பகுதி வழியாக விடுதலைப்புலிகள் முகாம்களுக்குள் ராணுவத்தினர் முயற்சித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/04...ashes-army.html

விடுதலைப் புலிகள் மீண்டும் விமானத் தாக்குதல் 6 ராணுவத்தினர் பலி

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 27, 2008

கொழும்பு: இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடைய கடும் சண்டை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 165 இலங்கை ராணுவத்தினரை கொன்றதாக புலிகள் தெரிவித்தனர். ஆனால் அரசுத்தரப்பில் 48 பேர் உடல் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் 39 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கை மணலாறு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் இன்று போர் விமானங்கள் கடுமையாக குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் 2 குண்டு வீச்சு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் 6 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதலால் மணலாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சமீப காலமாக விமானத் தாக்குதலில் ஈடுபடாமல் புலிகள் இருந்து வந்த நிலையில் மீண்டும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளிடம் செக் நாட்டின் சிறிய ரக போர் விமானங்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த விமானப்படை தாக்குதலில் இறங்கியது. இதுவரை 5 முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி அனுராதபுரம் விமான தளத்தின் மீது தாக்குதல் நடந்தது.

அதன் பின்னர் விமானப் படைத் தாக்குதல் நடக்காமல் இருந்தது. இடையில், விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளத்தை முற்றிலும் அழித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்தது.

ஆனா ல்தற்போது மீண்டும் விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியிருப்பது இலங்கை ராணுவத்தை அதிர வைத்துள்ளது. அதிலும் இந்த முறை நடந்த தாக்குதல் குறி தவறாமல் இருந்ததாக ராணுவமே கூறியுள்ளதால் புலிகளின் விமான பலம் இன்னும் குறையவில்ைல என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பகுதியில் ராணுவத்தினர் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சண்டையில் பாலம்பிட்டி, தட்சணமாறாதமடு ஆகிய இடங்களில் 8 போராளிகள் கொல்லப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வவுனியா மற்றும் மேற்கு வெலிஓயாவில் நடந்த மோதலில் 10 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் மன்னார் பகுதியில் பரப்பகந்தல் என்ற இடத்தில் 4 புலிகளை கொன்றதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த 1 வருடமாக மணலாறு பகுதி வழியாக விடுதலைப்புலிகள் முகாம்களுக்குள் ராணுவத்தினர் முயற்சித்துவரும் நிலையில் இந்த தாக்குதல் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்
:) ஆகா......நெடுக்ஸ்சிற்கும், வசம்புக்கும், உள்ள ஒற்றுமையை பாருங்கள் ஒரே நேரத்தில் ஒரே செய்தியை பதிந்துள்ளீர்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய விமானத்தாக்குதலில் இரண்டு இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டன என்று பிபிசி சொல்கிறது..!

Tamil Tiger air strikes on bases

Tamil Tiger rebels have bombed military targets in the north-east of Sri Lanka using light aircraft.

Two military installations were hit by the rebels across the front line in the Welioya region, a security source said.

They dropped three bombs before flying back, the military said. Security forces have just launched a fresh drive against the Tigers in the area.

It was the fifth rebel aerial strike since the Tigers created an air force a year ago.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7369516.stm

(4ம் இணைப்பு)விமான தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் மணலாறு பகுதியில் உள்ள இராணுவ முகாம் மீது மேற்கொண்ட விமான தாக்குதலில் 6 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை 1.45 அளவில் மணலாறு படைமுகாமில் உள்ள போர் தளபாடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல் இரண்டு விமானங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டது எனவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலில் தமக்கு சேதங்கள் ஏற்படவில்லை என இலங்கை படையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

http://isoorya.blogspot.com/

மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்காப் படையின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

கடைசியா என்னதான் நடந்திச்சு?

புலிகளே கம்முனு இருக்கேக்க ஆமி ஏன் இப்படி துள்ளுது..?

என்ன வசிசுதா குழப்பமா இருக்கா?

உப்பிடித்தான் எனக்கும் இருந்தது... கடைசீல என்னவெண்டா... புலிகளின் இரண்டு விமானங்கள் 3 குண்டு போட்டதாம்...

மேலதிக விபரங்கள் படித்தரப்புதான் சொல்ல வேணும்... புலிகள் அங்க போக மாட்டாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விமானம் மூலம் தாக்குதல்

.

Sunday, 27 April, 2008 09:51 AM

.

கொழும்பு, ஏப். 27: இலங்கையில் ராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் இரண்டு லகு ரக போர் விமானங்கள் இன்று காலை குண்டு மழை பொழிந்து திடீர் தாக்குதல் நடத்தியதாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

வெளியோயா பகுதியில் நேற்று இலங்கையின் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும் இந்தத் தாக்குதல்களில் யாருக்கும் காயம் ஏற்படவோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

செக் குடியரசில் உருவாக்கப்பட்ட ஜெலின் இசட்143 ரக போர் விமானங்களை விடுதலைப் புலிகள் வைத்துள்ளனர். இந்த போர் விமானங்களை கொண்டு விடுதலைப் புலிகள் இலங்கை ராணுவத்தின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 5 முறை தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 22ம் தேதி கடைசியாக விடுதலைப் புலிகள் இலங்கையின் அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் விமானப் படையை முற்றிலும் அழிப்பதற்காக விமானங்களை குறிவைத்து தாக்கும் ஆயுதங்களை வாங்கியிருப்பதாக இலங்கை அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் இலங்கையின் வடக்கே உள்ள வெளியோயா என்ற இடத்தில் இன்று அதிகாலை 1.43 மணிக்கு விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இரண்டு லகு ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

இந்த விமானங்கள் இலங்கை ராணுவ நிலைகள் மீது 3 குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் வன்னியில் உள்ள மறைவிடத்திற்கு சென்று விட்டதாக இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கையின் வெளியோயா பகுதியில் நேற்று மாலை விடுதலைப் புலிகளின் பீரங்கி நிலைகள் மீது இலங்கை விமானப்ப டையின் சூப்பர்சானிக் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலையில் விடுதலைப் புலிகள் இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கையில் கடந்த சில தினங்களாகவே ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற மோதல் சம்பவங்களில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் ஒரு பகுதியை கைப்பற்றியிருப்பதாக ராணுவம் கூறியது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் மறுத்தனர்.

இதேபோல் மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மத தேவாலயம் ஒன்றையும் கைப்பற்றியிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ராணுவம் கூறியுள்ளது.

http://www.maalaisudar.com/newsindex.php?i...mp;%20section=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.