Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களே இல்லாத நாடு.

Featured Replies

வத்திக்கான் உலகம் இல்லை அப்பு. உலகம் பெருசு, வெளியில வாங்கோ. சின்ன வட்டத்துக்குள்ள நின்று சீறீலதில்ல பிரயோசனம் இல்லை. இங்கிலிசுல சொல்லுவாங்கள், வேக் அப் அன்ட் சிமெல் த கொபி என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வத்திக்கான் உலகம் இல்லை அப்பு. உலகம் பெருசு, வெளியில வாங்கோ. சின்ன வட்டத்துக்குள்ள நின்று சீறீலதில்ல பிரயோசனம் இல்லை. இங்கிலிசுல சொல்லுவாங்கள், வேக் அப் அன்ட் சிமெல் த கொபி என்று.

நானும் அறிவன் உலகம் பரந்தது என்று. அதிலும் மனிதனே இல்லாத உலகம் பெரியது என்றும் அறிவன். மனிதன் உள்ள உலகில்.. பெண்களே இல்லாத ஒரு உலகம் உள்ளதையும் அறியத்தானே வேணும் பொன்னியாரே..! :D

நீங்கள் தேடும் உலகம் மிக மிக சிறியது என்பது தான் எனது கருத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேடும் உலகம் மிக மிக சிறியது என்பது தான் எனது கருத்து.

அகலக் கால் வைச்சு.. முகமாலையில் அடிவாங்கின ஆமிக்காரன் போல ஆக நான் தயாரில்லையே..! :D

பொம்பிளையல் இல்லாத இடமா?

அப்பாடா! அப்ப அங்க நிறைய நிம்மதியாவும் அமைதியாவும் இருக்கலாம்...

ஆனா.. அவங்களால ஆம்பிளைகளுக்கு கரைச்சல் வராதெண்டு எப்பிடி நம்பிறது? இல்லை காலம் கெட்டு கிடக்கு அதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கதைத்தால் பின்னாடி கரைச்சல் .

இந்த தகவல் உண்மையில் சரியா????? :(

நான் அறிந்த தகவல்படி இங்கு குடும்பம் நடத்துவதற்கு தடை ஆனால் கன்னியாஸ்திரிகள் (பெண்கள்) இருக்கின்றார்கள். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த தகவல் உண்மையில் சரியா????? :(

நான் அறிந்த தகவல்படி இங்கு குடும்பம் நடத்துவதற்கு தடை ஆனால் கன்னியாஸ்திரிகள் (பெண்கள்) இருக்கின்றார்கள். :unsure:

பெண்கள் வத்திக்கானில் வாழ முடியாது. 2007 ல் சில தொழில்வாய்ப்புக்கள் சில பெண்களுக்கு வழங்கப்பட்டன.

பெண்களுக்கு அங்கு நிரந்தர வாழுரிமை இருப்பதாகத் தெரியவில்லை. அதுமட்டுமன்றி.. பெண்களுக்கு அங்கு வாக்குரிமையும் இல்லை..! :)

http://www.populstat.info/Europe/vaticang.htm

Edited by nedukkalapoovan

ம்ம்...சரி வந்துட்டன் தாத்தா..வணக்(கம்) :) ..ம்ம்..இப்ப சொல்லுறியள் போப் பாண்டவர் இருக்கிற படியா அங்க பெண்கள் இருக்க கூடாது என்று சட்டம் ஒகே தானே..(யாழ்கள மெம்பர்ஸ் கச் டிஸ் பொயின்ட்).. :wub:

அப்ப தாத்த போப் பாண்டவர் பயப்பிடுறாறோ??இல்லாட்டி ஏன் அவர் இருக்கிற இடத்தில மட்டும் பெண்கள் இல்ல அப்படி அவர் பயப்பிடுற நேரம் அவர் சும்மாவே இருக்கலாம் பாருங்கோ :lol: ..இப்ப நீங்க சொல்லுவியள் பெண்கள் இருந்தா ஏதாச்சும் செய்து போப் பாண்டவரை கூட வெறும் பாண்டவர் ஆகிடுவாங்க என்று :unsure: ..அப்ப நான் கேட்கிறன் அவ்வளதிற்கு ஆண்கள் வீக்கா என்று??

பிறகு தாத்தா எங்கையோ கேட்ட மாதிரி இருக்கு பெண்கள் கற்பனை திறன் இன்றி இருந்தவையோ என்று.. :( (ம்ம்..ஒரு வேளை இருந்திருக்கலாம்)...ஆனா பாருங்கோ ஆண்களின் கற்பனையில் அதாவது ஓவியத்தை எடுத்து கொண்டா என்ன சிற்பத்தை எடுத்து கொண்டா என்ன.. :wub: (பெண்களை தானே மனதில் நிறுத்து செய்து இருக்கிறார்கள்)...இத பற்றி என்ன சொல்லுறியள் என்ட அன்பு தாத்தாவே.. :lol:

இப்ப பாருங்கோ தாத்தா ஆத்தில மீன் இருக்கு அதனாடி ஆத்திற்கு வலிக்குது என்று மீன்களை எல்லாம் எடுக்க முடியுமா என்ன.. :( (எடுத்தா ஆத்தின்ட அழகு என்னாகிறது தாத்தா :D )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா மரமும் இயற்கை பொண்ணும் இயற்கை தான்" :wub:

கிரிமினல் லோயர்

ஜம்மு பேபி!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கண்ணா மரமும் இயற்கை பொண்ணும் இயற்கை தான்"

கண்ணா பேராண்டி.. உந்த வயசில பன்னிக்குட்டியும் அழகாத்தான் தெரியும். :wub:

ஏப்பா மரமும் இயற்கை.. பெண்ணும் இயற்கை என்றீங்களே.. ஆண் மட்டும் என்ன செயற்கையா.. அவனும் இயற்கைதானே..! முடியல்ல...! :unsure:

போப்பாண்டவர் பயப்பிடுறதில நியாயம் இருக்குது. ஏன்னா.. பெண்களை அனுமதிச்சமெண்டு வச்சுக்குங்க.. அவங்க அன்பாப் பழகிறாப் போல பழகி.. தாங்களாவே ஆண்கள் மேல கையக் காலப் போட்டிட்டு.. ஐரோ ரேப் பண்ணிட்டான் என்று கூச்சல் போட்டாங்க என்று வைச்சுக்குங்க.. சில ஆண்கள் ஆக்கி வைச்சுள்ள சட்டங்கள்.. பெண்களுக்காகத்தான் பேசுமே தவிர உண்மைக்காகப் பேசாது..! அப்படி இருக்கிற உலகத்தில பெண்களை கொஞ்சம் அங்கிணைக்கு விலத்தி வைச்சுக்கிறது... ஒரு சேவ்ரி மெசர்..! நம்மள நாமளே கலங்கப்படுத்திக்காம இருக்கிற ஒரு நகர்வு.

நான் எல்லாம் பப்பிளிகில.. சொந்தங்களுக்க பெண்களோட பேசுவன்.. பழகுவன்.. பட்.. ஒரு டிஸ்ரன்ஸ் மெயிரெயின் பண்ணிக்குவன். பிகோஸ்.. நாளைக்கு நாமளும் பாதிக்கப்பட்டு வீதியில விடப்பட்டிரக் கூடாதில்ல. இப்ப எல்லாம் பெண்கள் ரெம்பக் கில்லாடிகள்.. வலியவே வந்து வலியவே உறவாடி.. வலிந்து காரியம் சாதிச்சதும்.. வலிந்து உறவை வெட்டிட்டு.. அடுத்த உறவாடலுக்கு போயிடுவாங்க. சோ.. எதுக்கும் போப்பாண்டவர் போன்ற சமூகப் பிரமுகர்கள் கொஞ்சம் கவனமா இருப்பது நல்லம். ஏன்னா பிரபலங்கள் மேல கையக் காலப் போட்டா தங்களுக்கு என்னென்ன கிடைக்கும் என்றதை பெண்கள் நங்கு அறிவார்கள். :wub::(

சினிமாக்காரர்கள்.. தொழிலதிபர்கள்.. அரசியல் தலைவர்கள் எல்லாம் எப்படி அழகிகள் கூட.. அழிஞ்சிட்டு இருக்காங்க. அப்படி ஆகக் கூடாது என்ற பயம் போப்பாண்டவருக்கு இருப்பது நியாயம் தானே. அழகிகள் சும்மா ஆக்களில்ல.. நம்ம குரு விவேகானந்தர் முன்னாலேயே ஒருத்தி நிர்வாணமா ஆடினாளாம். உடன சுவாமிகள் எழுந்து பகுத்தறிவு என்றிட்டு தானும் நிர்வாணம் ஆட்டம் போடவில்லை. மாறாக சுவாமிகள் சொன்னாராம்.. உன்னை நான் பெண்ணாகப் பார்க்கவில்லை.. எனக்கு உயிர் கொடுத்த தாயாகப் பார்கிறேன் என்று. அத்தோட அழகி ஓடியே போயிட்டாளாம்..! :wub:

எனக்கு சிறுவயதிலேயே பெண்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது அம்புலிமாமாவில வந்த ஒரு தொடர்கதை. அதில எனக்குப் பிடித்த ஓர் இளவரசன்.. எதிரி நாடுகளை பல சவால்களை சந்தித்து வென்று கொண்டே போவான். அதில் ஒரு எதிரி பல வழிகளில் அந்த இளவரசனை தோற்கடிக்க நினைப்பான்.அதில ஒன்று அழகிய பெண்களை நிர்வாணமா அவன் முன்னால ஆட வைத்து அவனை பாலியல் ரீதியா மயக்கி.. அவர்களின் அடிமையாக்கி கொல்வதுதான் திட்டம். ஏலவே பல எதிரிகளை பல களமுனைகளில் வென்ற இளவரசன்.. இந்தப் பெண்களிடம் மயங்கான்.... இப்படிப் பட்ட பெண்களிடம் மயங்கக் கூடாது என்று நான் நினைச்சிட்டு இருக்கேக்க.. அவன் கதையின் படி நான் எதிர்பார்க்காத வகையில் அந்தப் பெண்களிடம் மாட்டிடுறான். எனக்கு ரெம்ப வொறியாப் போச்சுது. ஆனால் இளவரசன் மாட்டினது அப்பெண்களோட உடலை ரசிக்க அல்ல. அவன் இந்தத் திட்டத்தின் பின்னணிக்கு யார் பொறுப்பு என்று அறிந்து அந்தப் பெண்களைப் பயன்படுத்தியே அந்த அரசனை அழிக்கத்தான் என்று பின்னர் புரிந்து கொண்டேன். அந்த அரசனை அழித்துவிட்டு அந்தப் பெண்களிடம் சொல்வான்.. பெண்களே நீங்கள் உங்கள் அழகைக் காட்டி என்னை கவர்ந்த அழிக்கலாம் என்று நினைத்தீர்கள்.. ஆனால் எனது தாய்க்கு நிகரான உங்களின் அழகை.. கேவலப்படுத்தியவனை அழிக்கவே நான் முனைந்தேன் என்றான் அந்த இளவரசன்.

அப்படி ஒரு மன உறுதியை வளர்த்துக்கனும் என்பதுதான் என் விருப்பமும்..! :)

Edited by nedukkalapoovan

த கிரேட் இளவரசன். சீ நெடுக் தாத்தா.

தாத்தா விழிப்புணர்வை ஏற்படுத்தியது அம்புலிமாமா கதை தான் என்னும் போது பெருமையாக இருக்குங்கோ.

கடைசியில் இளவரசன் வென்றுட்டானா தாத்தா?

விவேகானந்தர் கதை சூப்பர்ப். நன்றிகள் பல தெரியாத விடயங்களை அழகாக சொல்லும் நெடுக் தாத்தாக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த கிரேட் இளவரசன். சீ நெடுக் தாத்தா.

தாத்தா விழிப்புணர்வை ஏற்படுத்தியது அம்புலிமாமா கதை தான் என்னும் போது பெருமையாக இருக்குங்கோ.

கடைசியில் இளவரசன் வென்றுட்டானா தாத்தா?

விவேகானந்தர் கதை சூப்பர்ப். நன்றிகள் பல தெரியாத விடயங்களை அழகாக சொல்லும் நெடுக் தாத்தாக்கு நன்றிகள்

நம்ம இளவரசன் வெல்லாமல் இருப்பானா. நான் நினைக்கிறேன் (தலைப்பு சரியாக ஞாபகமில்லை) "மாயத் தீவு" என்ற தலைப்பில் அந்தத் தொடர்கதை வந்திருக்கனும்.. என்று..! :unsure:

Edited by nedukkalapoovan

நம்ம இளவரசன் வெல்லாமல் இருப்பானா. நான் நினைக்கிறேன் (தலைப்பு சரியாக ஞாபகமில்லை) "மாயைத் தீவு" என்ற தலைப்பில் அந்தத் தொடர்கதை வந்திருக்கனும்.. என்று..! :(

ஓ மாயைத் தீவோ? மாயத் தீவோ? எது சரி தாத்தா.

சரி இறுதியில் என்ன சொல்ல வாறீங்க.

பெண்கள் இல்லாத நாட்டில் ஆண்கள் வாழ்வது இன்பமா துன்பமா? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ மாயைத் தீவோ? மாயத் தீவோ? எது சரி தாத்தா.

சரி இறுதியில் என்ன சொல்ல வாறீங்க.

பெண்கள் இல்லாத நாட்டில் ஆண்கள் வாழ்வது இன்பமா துன்பமா? :unsure:

மாயத்தீவு என்றுதான் நினைக்கிறேன்.

பெண்கள் இல்லாத நாட்டில் என்றால்.. அம்மா இல்லாதது துன்பம்.. மற்றும்படி இன்பம்..! :)

அம்மா என்றால் நான் ஒரு தரம் அழக்கூட அனுமதிக்காங்க. ஆனால்.. வேறு பெண்கள் என்றால்.. நான் அழுவதையே ரசிப்பாங்க..! :(

Edited by nedukkalapoovan

மாயத்தீவு என்றுதான் நினைக்கிறேன்.

பெண்கள் இல்லாத நாட்டில் என்றால்.. அம்மா இல்லாதது துன்பம்.. மற்றும்படி இன்பம்..! :D

அம்மா என்றால் நான் ஒரு தரம் அழக்கூட அனுமதிக்காங்க. ஆனால்.. வேறு பெண்கள் என்றால்.. நான் அழுவதையே ரசிப்பாங்க..! :)

:lol: ஏன் மற்றும்படி துன்பம் :unsure::unsure:

ம்ம் தாயும் தாரமும் எப்போதும் வேறு வேறு தானே. தாய்க்கு தன் மகனில் கண்ணீர் வந்தால் அவாவின் கண்ணிலும் கண்ணீர் வரும்.

ஆனால் பெண்கள் அதை அதிசயமாக பார்ப்பாங்க.

அது என்ன தாத்தா பெண்கள் என பன்மையில் சொன்னீங்க. அப்போ நிறைய பெண்கள் உங்கள் கண்ணீரை ரசிச்சிருக்கிறாங்களா :unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஏன் மற்றும்படி துன்பம் :unsure::unsure:

ம்ம் தாயும் தாரமும் எப்போதும் வேறு வேறு தானே. தாய்க்கு தன் மகனில் கண்ணீர் வந்தால் அவாவின் கண்ணிலும் கண்ணீர் வரும்.

ஆனால் பெண்கள் அதை அதிசயமாக பார்ப்பாங்க.

அது என்ன தாத்தா பெண்கள் என பன்மையில் சொன்னீங்க. அப்போ நிறைய பெண்கள் உங்கள் கண்ணீரை ரசிச்சிருக்கிறாங்களா :unsure::lol:

நமக்கும் பெண்களுக்கும் ஒத்துப்போறதே கிடையாது..! பெண்கள் திட்டினது என்று அழுவதில்லை.. அது அவைட பிரச்சனை. ஆனால் நம்மள புரிஞ்சுக்கினம் இல்லையே என்று வருத்தப்படுவதுண்டு.. அது சிலவேளைகளில் கண்ணீரை வரவழைச்சிடும்..! :)

Edited by nedukkalapoovan

நமக்கும் பெண்களுக்கும் ஒத்துப்போறதே கிடையாது..! பெண்கள் திட்டினது என்று அழுவதில்லை.. அது அவைட பிரச்சனை. ஆனால் நம்மள புரிஞ்சுக்கினம் இல்லையே என்று வருத்தப்படுவதுண்டு.. அது கண்ணீரை வரவழைச்சிடும்..! :unsure:

உங்களை புரிஞ்ஞ்சிக்கிறா இல்லையா.

உதாரணத்துக்கு தாத்தா ஐந்தறிவுள்ள ஜீவன்களின் வாழ்க்கை கூட ஏன் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு இல்லை. இப்ப ஒரு நாய் பூனை இபப்டியான விலங்குகளை எடுத்தால் அதுகள் எவ்வளவு சந்தோசமாக இருகுதுகள். அட ஏன் இப்போ குருவி ஒன்று மலர் மேல் காதல் கொண்டால் கூட அதுகள் புரிஞ்சு கொள்ளுதுகள். ஏன் இந்த மனித வர்க்கத்தில் அதிலும் ஆண் பெண் இபப்டி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருத்தர் புரியாமல் புண்படுத்துகிறார்கள்.

அட சிலர் சொல்லுவினம் நாம் நல்லா புரிஞ்சுகொண்ட நண்பர்கள் / காதலர்கள்/ தம்பதியினர் இப்படி சொன்னாலும் அவர்களுக்குள் ஒரு சிறு விடயத்திலாவது ஒரு முரண்பாடு இருக்கும் இருக்கலாம். இல்லையா தாத்தா :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை புரிஞ்ஞ்சிக்கிறா இல்லையா.

உதாரணத்துக்கு தாத்தா ஐந்தறிவுள்ள ஜீவன்களின் வாழ்க்கை கூட ஏன் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு இல்லை. இப்ப ஒரு நாய் பூனை இபப்டியான விலங்குகளை எடுத்தால் அதுகள் எவ்வளவு சந்தோசமாக இருகுதுகள். அட ஏன் இப்போ குருவி ஒன்று மலர் மேல் காதல் கொண்டால் கூட அதுகள் புரிஞ்சு கொள்ளுதுகள். ஏன் இந்த மனித வர்க்கத்தில் அதிலும் ஆண் பெண் இபப்டி ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருத்தர் புரியாமல் புண்படுத்துகிறார்கள்.

அட சிலர் சொல்லுவினம் நாம் நல்லா புரிஞ்சுகொண்ட நண்பர்கள் / காதலர்கள்/ தம்பதியினர் இப்படி சொன்னாலும் அவர்களுக்குள் ஒரு சிறு விடயத்திலாவது ஒரு முரண்பாடு இருக்கும் இருக்கலாம். இல்லையா தாத்தா :unsure:

புரிஞ்சு கொள்ளாததற்குக் காரணம்.. சுயநலமா இருக்கலாம். ஏன்னா தாய் பிள்ளையை இலகுவா புரிஞ்சுக்கிற மாதிரி பிற பெண்கள் புரிஞ்சுக்கிறதில்ல. ஏன்னா தாய்க்கு பிள்ளையிடம் சுயநலம் எழுவது மிக மிகக் குறைவு. ஆனால் பிற பெண்களிடம்.. தன் சுயநலம் முன்னிலை பெறும் போது.. அது பல் வேறுவழிகளில் பூர்த்தியாகும் போது.. அடுத்தவையை புரிஞ்சுக்க வேண்டிய தேவை வராதில்லையா..! இதுதான் பிரச்சனையே பல குடும்பங்களில்..! எனது பிரச்சனை அல்ல இது..! :unsure:

எனது பிரச்சனை என்பது.. எனக்கு பெண்களோட ஒத்துப்போறதே இல்லை..! சோ.. அதை விட்டுத்தள்ளுங்க. பொதுவா சொல்லுறன்..! :unsure:

ஆண்கள் இல்லாத நாடு இருக்கின்றதோ. அங்கை போய் வாழ்க்கையை தொடங்கிடாலம்;

நம்ம நெடுக்ஸ், வத்திக்கானில் வதியுருமை வேண்டித்தர முடியாதா? பிறகு நாங்கள் அவரை போப்யாய் போனவன் என்று கூப்பிடலாம்.

நம்ம நெடுக்ஸ், வத்திக்கானில் வதியுருமை வேண்டித்தர முடியாதா? பிறகு நாங்கள் அவரை போப்யாய் போனவன் என்று கூப்பிடலாம்.

என்ன நம்ம..(குரோ)..டென்சனா இருக்கிறார்..மனிசியிட்ட காலம ஏச்சோ.. :unsure: (சரி..சரி)..உங்கையாவது வீரத்தை காட்டுங்கோ.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

சீஸ்யா, இதுக்கெல்லாம் ரென்சனா? பழகி புளித்த விடயம் அப்பு..

சீஸ்யா, இதுக்கெல்லாம் ரென்சனா? பழகி புளித்த விடயம் அப்பு..

ஓ..பெரியவா நீங்க சொன்னா சரி தான் பாருங்கோ :unsure: ..(மனிசி புளிக்காம இருக்க மட்டும் சந்தோஷம் பாருங்கோ).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

கண்ணா பேராண்டி.. உந்த வயசில பன்னிக்குட்டியும் அழகாத்தான் தெரியும்.

ஏப்பா மரமும் இயற்கை.. பெண்ணும் இயற்கை என்றீங்களே.. ஆண் மட்டும் என்ன செயற்கையா.. அவனும் இயற்கைதானே..! முடியல்ல...!

ம்ம்..தாத்தா பன்னி குட்டி கூட அழகா தான் தெரியுது தாத்தா..(ஆனா அது ஆண் பன்னி குட்டியோ பெண் பன்னி குட்டியோ என்று தான் தெரியல பாருங்கோ).. :(

ம்ம்..ஆணும் இயற்கை தான் தாத்தா நான் எதற்கு மரத்தையும்,பொண்ணையும் கம்பயர் பண்ணிணான் என்றா..(இரண்டிற்குமே மனசு என்பது கிடையாது அல்லோ :unsure: )..எப்பவுமே எட்டி நின்று பார்த்தா இரண்டும் அழகு என்று சொல்ல வந்தனான் பாருங்கோ..(இது எப்படி இருக்கு)...

ம்ம்..அப்ப ஒரு சேவ்டி மெசரிற்காக தான் போப் பாண்டாவர் இருக்கிற இடத்தில பொண்ணுங்க இல்ல என்று சொல்லுறியள் ம்ம்..எற்று கொள்ள கூடியதாக தான் இருக்கு பாருங்கோ.. (ஆனாலும் நாம கலங்கபடாம இருக்கனும் என்று ஒதுக்கி வைக்கிறோம் என்றா)...நம்மில நமக்கு நம்பிக்கை இல்லாத மாதிரியும் இருக்கு பார்க்க எனிவே நீங்க சொல்லுறதை ஏற்று கொள்ளுறன்.. :unsure:

பட்..தாத்தா போப் பாண்டவர் ஒவ்வொரு நாடுகளிற்கு விஜயம் செய்யிறார் அல்லோ..(அங்க எத்தனை பெண்களை காண்கிறார் தானே :unsure: )..அப்ப எல்லாம் ஒன்னுமே நடக்கல்ல தானே தாத்தா..அப்படி பார்க்கும் போது போப் பாண்டவர் மேல நம்பிக்கை இல்லாம தான் பெண்களை அந்த இடத்தில இருந்து வெளியேற்றின மாதிரி இருக்கு அல்லோ இதுவும் ஒருவகை மனித மீறல் அல்லோ..(இத பற்றி என்ன சொல்லுறியள்??)...

ஓமோம்..தாத்தா வலு கவனமா தான் இருக்கிறார்..(பெண்களோட ஒரு ஸ்டிரண்ட் மெயின்டேன் பண்ணுறது நன்னது தான் பாருங்கோ)...பெண்கள் வந்து உறவாடி பிறகு காய் வெட்டி விட்டு தாவிடுவீனம் என்று சொல்லுறியள் ஒகே நானும் அக்ரி பண்ணுறன்..(அவை வந்து அப்படி உறவை வைக்கும் போது ஆண்கள் எல்லாம் ஜம்மு பேபி மாதிரி பேபிகளா தாத்தா ஒன்னுமே தெரியாத பச்சபுள்ளைகளா)..?? :wub:

அப்படி பார்த்து ஸ்டிரண்ட் மெயின்ட் பண்ணுறது எல்லாம் ஆண்களின் இயலாமையை தான் காட்டுது பாருங்கோ பெண்கள் அப்படி இல்லையே.. :unsure:

சினிமா காரங்க.தொழிலதிபர் எல்லாம் ஏன் அழகிகள் கூட அழியிறாங்க அது அவங்களின்ட வீக் பொயின்ட் அதற்கு நாம பொண்ணுகளை குறை சொல்ல முடியாது..(வீட்ட திறதிட்டு போனா கள்ளன் களவெடுக்க தானே செய்வான் தாத்தா அது கள்ளனின்ட பிழை இல்லையே)?? :lol:

ம்ம்..பார்த்தீங்களா விவேகானந்தர் எவ்வளவு அழகா சொல்லி அந்த பெண்ணை திறத்தினார்..(அவர் உண்மையா ஆண் மகன் என்று சொல்லாலம்)..என்ன தாத்தா நான் சொல்லுறது சரி தானே..எல்லாரையும் போல விவேகானந்தரும் அன்னைக்கு அவா டான்ஸ் ஆடக்க ஸ்டிரண்ட் மேயின்டேன் பண்ணுறது என்று நழுவி இருந்தார் என்றா அந்த பெண்ணின் ஆட்டம் தொடர்ந்திருக்கும் அல்லவா..சோ பிழை வந்து ஆண்களிடம் தான் இருக்கு... :)

இப்ப பாருங்கோ வெயில் நம்மளை சுடுது என்று போட்டு ஒதுங்கி நிற்கவா நினைக்கிறோம்..(ஒரு குடையை எடுத்து கொண்டு நடக்க தானே பார்கிறோம்)...அத மாதிரி தான் இதுவும் விளங்கிச்சோ தாத்தா..!!

ம்ம்..தாத்தா அம்புலிமாமா கதை எல்லாம் வாசிக்கிறனியளோ..(சொல்லவே இல்ல பாருங்கோ)...நன்ன கதை நெடுக்ஸ் தாத்தா கேட்க "கை" தட்டலாம் போல இருக்கு..அந்த இளவரசனை பாராட்டலாம் அத விட்டு போட்டு முற்றும் துறந்து போன புத்தனை நான் பாராட்ட மாட்டன் அது பயத்தில..(ஆனா இவன் எத்தனை பேர் ஆடினாலும் தான் கொண்ட இலட்சியத்தில கண்ணா இருந்திருக்கிறான்)..சோ கீ இஸ் கிரேட்.. :lol:

ம்ம்..அத மாதிரி தான் பொண்ணுகளும் ஆண்களை வைத்து சாதிக்கிறாங்க முன்னுக்கு வாறாங்க..(அதுக்கு இளிச்ச வாய் ஆண்கள் பல் இளிச்சு கொண்டு இருந்தா என்ன செய்யலாம் தாத்தா)..சோ அவைய பிழை சொல்ல படாது எல்லா பிழையும் நம்மளிள தான் இருக்கு பாருங்கோ..(நம்மள என்றா மேல்சில)...

ம்ம்..இப்ப விளங்கிச்சோ தாத்தாவிற்கு.. :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.