Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருவன் அல்லது ஒருத்தி ஒருத்தரை காதலிக்கும்போது அந்தக் காதலை யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவேணும்?

இப்ப நீங்கள் ஒருத்தரை காதலிச்சால் அந்தக் காதலை நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவே 26 members have voted

  1. 1. இப்ப நீங்கள் ஒருத்தரை காதலிச்சால் அந்தக் காதலை நீங்கள் யார் யாரிடம் எல்லாம் கட்டாயம் சொல்லவேணும்?

    • காதலிக்கப்படுபவரிடம் மட்டும்
      11
    • காதலிக்கப்படுபவரிடமும் அவர் பெற்றோரிடமும்
      0
    • காதலிக்கப்படுபவர் + அவர் பெற்றோர் + மற்றும் குடும்ப அங்கத்தவர்களிடம்
      2
    • மேற்கூறிய அனைத்தும் மற்றும் காதலிக்கப்படுபவரின் நண்பர்களிடமும்
      0
    • மேற்கூறிய அனைத்தும் மற்றும் போலீசாரிடமும்
      1
    • மேற்கூறிய அனைத்தும் மற்றும் சமயத் தலைவரிடமும்
      0
    • போலீசாரிடம் மட்டும்
      6
    • காதலிக்கப்படுவரின் நண்பர்களிடம் மட்டும்
      0
    • காதலிக்கப்படுபவரை காதலிப்பவர்களிடம் மட்டும்
      3
    • தெருவில போறவன் வாறவன் எல்லாருக்கும் சொல்லவேணும்
      3

Please sign in or register to vote in this poll.

Featured Replies

[color="#000080"

அப்படி நடந்தால் அவர்களை பார்த்து "எங்கிருந்தாலும் வாழ்க" என்று பாடிவிட்டு வர வேண்டியதுதான். :D:D:D

அப்ப நீங்க கவரிமான் இல்லையா?

பெரியமனசு தான் போங்க ;)

கிகிகிகி

  • Replies 57
  • Views 10.2k
  • Created
  • Last Reply

வண்ணத்தமிழ் வணக்(கம்) குருவே :D ...அப்ப நம்ம குரு யாரோவ "சைட்" அடிக்கிறார் போல சரி சரி நடகட்டும் நடகட்டும்...நம்மன்ட வாழ்த்துக்கள் குருவிற்கு..சரி எனி விசயதிற்கு போவோம் என்ன.. :D

ஓமோம் காதலிக்கிறது சரியான கஷ்டமான வேலை காதலித்தா பிறகு காதலியை வைத்து கொள்ளுறது அத விட கஷ்டம் பாருங்கோ..நான் என்னும் யாரையும் பார்த்து இன்னும் மயங்காதால நேக்கு காதல் வரல்ல இன்னும் பாருங்கோ அப்படி மயக்கம் வந்தா நான் யாரிட்ட சொல்லுவன் என்டு தானே உங்க கேள்வி நன்ன கேள்வி... :D

எல்லாத்தை விட காதலிக்க போறதா முடிவெடுத்திடியள் என்றா நல்ல இன்சுரன்ஸ் கம்பெனியா..(காப்புறுதி நிறுவனம்)..பார்த்து ஒரு பொலிசியை எடுக்கிறது நன்னது என்று நினைக்கிறன்.. :D (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் எல்லாம் ஒரு பாதுகாப்பு தான்)..

பிறகு யாரிடம் காதலை சொல்லுறது என்டா கட்டாயமா காதலியிட்ட மட்டும் சொல்லி போடாதையுங்கோ..(பிறகு ஓவரா "பிலிம்" காட்டுவீனம் சொல்லிட்டன்) :D .. ஆனபடியா பேசாம காதலியின்ட அப்பா அல்லது அம்மாவிட்ட போய் கேட்கிறது அவையள் முதலில யோசிப்பீனம் தான் பிறகு ஏதாச்சும் சொல்லுவீனம் தானே "ஒம்" என்று சொல்லிச்சீனம் என்றா அவாவிற்கு பின்னால போறது இல்லாட்டி இன்னொருவாவிற்கு பின்னால போறது... :D

எப்படி நம்ம யோசனை கட்டாயமா நான் யாரையாச்சும் காதலித்தா இப்படி தான் செய்வேன்..(ஆனா தனிய எல்லாம் போக மாட்டன் யாரையாச்சும் கூட்டி கொண்டு தான் போவன் :D )..

பொலிஸ்காரனின்ட்ட எல்லாம் சொல்ல ஏலாது ஏனேன்டா அவனும் பொண்ணுகளுக்கு தான் "சப்போர்ட்" பண்ணுவார்கள் ஆனபடியா நாம இப்படி தான் செய்வோம்...(யாரும் என்ன மாதிரி செய்து பார்க்க போறியள் என்டா செய்து போட்டு சொல்லுங்கோ என்ன).. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா காதலை சொல்லனும் என்று இல்ல உணர்ந்தாலே போதும்" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

தெருவில் போறவன் வாறவன் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதற்கு கணிசமான் வாக்குகள் விழுந்திருக்கு .

காதல் என்பது தனிப்பட்ட விடயம் ,தெருவில் போறவன் வாறவன் எல்லாரும் அறிவதால் என்ன பிரயோசனம்.

அப்ப நீங்க கவரிமான் இல்லையா?

பெரியமனசு தான் போங்க ;)

கிகிகிகி

ஓ நன்றி நன்றி... :D

நான் கவரிமானே... ஆனால் இதர்க்கு எல்லாம் மனம் கலங்க மாட்டேன்.

உலகில் ரசிக்க நிறையவே இருக்கு.... :D:D

காதலன்.. காதலி.. இவங்களைத்் தவிர எவருக்குமே இந்த விடயம் தெரியக் கூடாது.. :D இவங்க தங்க சொந்தக் கால்லயே வாழ்வில் நிற்க முடியும்னா.. பெற்றோரிடம் அனுமதி கேட்கலாம்.. அவங்க அனுமதிக்கலையோ.. பரவாயில்லை.. தங்க வாழ்க்கையை தாங்களே அமைக்கவேண்டியதுதான்.. :D

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரிடமும் சொல்லாமல் விடுவதே மேலானது....காதலிப்பவரை கண்டால் மற்றப்பக்கம் பார்த்து கொண்டு செல்வது சிறந்தது... காதலிக்காமல் இருக்கின்றது தான் சிறந்த வாழ்க்கை....

(தமிழ் பெண்ணை அல்லது ஆணை காதலித்தால் மட்டும்....)

காதலன்.. காதலி.. இவங்களைத்் தவிர எவருக்குமே இந்த விடயம் தெரியக் கூடாது.. :D .. :D

ஓ நான் நினைத்தேன் வேறு ஆட்களை திருமணம் செய்தால் பிரச்சனை வராமல் இருக்க என்று.....

Edited by chumma....

ஓ நான் நினைத்தேன் வேறு ஆட்களை திருமணம் செய்தால் பிரச்சனை வராமல் இருக்க என்று.....

சும்மா சொன்னா சும்மாவா இராது.. அப்படியும் இருக்கலாம்தானே.. ?! :D

  • தொடங்கியவர்

ஓ நான் நினைத்தேன் வேறு ஆட்களை திருமணம் செய்தால் பிரச்சனை வராமல் இருக்க என்று.....

ஓ அப்பிடியும் ஒரு சிக்கல் இருக்கிதோ? :lol:

முரளி உங்களுக்கு ஐரோப்பாவில மாட்டாதது கனடாவில மாட்டீற்றுதுபோல

யோசிக்காம (I LOVE YOU) சொல்லீருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதலைப்பட்சமா காதலித்தால் முதலில நண்பர் வட்டாரத்தில "போட்டு வைக்க" வேணும். முன்பதிவு செய்யுறது காதலுக்கு மிக அவசியம். :wub:

எதிர்த் தரப்பும் மசியும்போல தென்பட்டால் உங்கள் வாக்கை உடனே செலுத்தாமல் கொஞ்சம் சொல்லுற மாதிரியும் சொல்லாமலும் இழுத்தடிச்சு அவர் வாயால் முடிந்தால் வர வைக்க வேணும். ஏலாமல் போனால் நாமளே சொல்லவேண்டியதுதான். எல்லாத்துக்கும் கால நிர்ணயம் அவசியம். அவக்கெண்டு சொல்லவும் கூடாது. ஜவ்வு மாதிரி இழுக்கவும் கூடாது. :(

நல்ல அனுபவம் போல.... :wub:

எனக்கும் இதே கருத்து தான்.

முதலில் பொலிசுக்கு பின் காத்லியின் தாய்க்கு பின் அப்பவுக்கு பின் அவர்களின் சொந்தக்காரர்களுக்கு அதன் பின் றோட்டில போய்வாற எல்லோருக்கும் சொல்ல வேண்டும் பின் காதலிக்கு சொல்ல வேண்டும். அப்பத்தான் காதலித்த பின் கைவிட்ட மாட்டாங்க எக்கோ.....

முரளி உங்களுக்கு ஐரோப்பாவில மாட்டாதது கனடாவில மாட்டீற்றுதுபோல

யோசிக்காம (I LOVE YOU) சொல்லீருங்கோ

(i love you) என்று சொல்லும் பின் icu வாட்டுக்கு போகாமல் இருந்தால் சரி....

  • 2 weeks later...
:lol: ஒருத்தியாக இருந்தால் முதலில் என்னிடம் சொல்லட்டும். எனக்கு விருப்பமில்லாமல் விட்டால் வேறு எவரையாவது காதலிக்க சொல்லூகிறேன்.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மாப்பு :( எனக்கொரு உதவி வேணும்

எனக்கு தெரிஞ்ச ஒராளின்ரை மோளுக்கு காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி இப்ப குஞ்சுகுருமனை பெத்தெடுக்கிற நிலைமையிலை இருக்குது sad0141.gif இதை ஆரிட்டை சொல்லி அழுறது :D

  • தொடங்கியவர்

கருத்து எழுதின ஆக்கள் கேட்டதில மிகவும் மோசமான ஒரு கேள்விய கேட்டு இருக்கிறீங்கள் கு.சா அண்ணா. :D எனக்கு இதுக்கு பதில் தெரிய இல்ல. வேணுமெண்டால் இதப்பிறக்கப்போற குழந்தைக்கு சொல்லி அழலாமோ? :(

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி மாப்பு :( எனக்கொரு உதவி வேணும்

எனக்கு தெரிஞ்ச ஒராளின்ரை மோளுக்கு காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி இப்ப குஞ்சுகுருமனை பெத்தெடுக்கிற நிலைமையிலை இருக்குது sad0141.gif இதை ஆரிட்டை சொல்லி அழுறது :D

கருத்தடை மாத்திரைகளை சாதனங்களை கட்டிக்கொண்டு அழச் சொல்லுங்கோ. அடுத்த காதலிலாவது கணக்குப் பிழைக்காம ஊரை ஏய்க்க வசதியா இருக்கும்..! :lol::(

தம்பி மாப்பு :( எனக்கொரு உதவி வேணும்

எனக்கு தெரிஞ்ச ஒராளின்ரை மோளுக்கு காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி இப்ப குஞ்சுகுருமனை பெத்தெடுக்கிற நிலைமையிலை இருக்குது sad0141.gif இதை ஆரிட்டை சொல்லி அழுறது :D

கு சா முதலில நல்ல டொக்கரிட்டை(முதலில குஞ்சு குருமான் சரியா இருக்கோ எண்டு பாக்க) பிறகு பொடியனிட்டை ( இல்லை முதலில கொன்போம் ஆக்கணும் இல்லையா)

பிறகு பெடியின்ர அம்மா அப்பாவிடம் பெடியின்ர சாகசத்தை கடைசியா பெத்தவளிட்டை (மாரடைப்பு வராமல் இருக்க )

யோவ் சாத்து எங்கையப்்பா போய்ட்டீர் களம் களைகட்டுது...... ம...பா :(

தம்பி மாப்பு எனக்கொரு உதவி வேணும்

எனக்கு தெரிஞ்ச ஒராளின்ரை மோளுக்கு காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி இப்ப குஞ்சுகுருமனை பெத்தெடுக்கிற நிலைமையிலை இருக்குது sad0141.gif இதை ஆரிட்டை சொல்லி அழுறது :D

அட...எங்கன்ட குருவிட்ட உதவி கேட்டிருகிறியள் தாத்தா அவர் இத கூட செய்யவா மாட்டார் :wub: ..எப்படி அந்த பிள்ள வடிவே தாத்தா.. :lol: (யாரிட்டையும் சொல்லி அழாதையுங்கோ)..நன்ன ஒரு தேதியா பாருங்கோ குரு வாழ்க்கை கொடுப்பார் உங்கன்ட நண்பனிட மோளுக்கு.. :(

குருவே எனக்காக இதை கூடவா செய்ய மாட்டியள்.. :wub: (என்ன முறைத்து பார்க்கிறது விளங்குது சரி சரி நான் உந்த பக்கம் எனி வரமாட்டன்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எனக்கு தருகின்ற குருதட்சணையாக எனது சீடன் இந்த அபலைப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பார் என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். :D கு.சா அண்ணா பொம்பிளைய சிட்னிக்கு போறதுக்கு பெட்டி, படுக்கை எல்லாத்தையும் உடன ஒழுங்குபடுத்தச்சொல்லுங்கோ. யாழ் சார்பில இந்த நல்ல விசயத்த நாங்கள் நடாத்திவைப்பம். :lol:

எனக்கு தருகின்ற குருதட்சணையாக எனது சீடன் இந்த அபலைப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பார் என்பதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். :D கு.சா அண்ணா பொம்பிளைய சிட்னிக்கு போறதுக்கு பெட்டி, படுக்கை எல்லாத்தையும் உடன ஒழுங்குபடுத்தச்சொல்லுங்கோ. யாழ் சார்பில இந்த நல்ல விசயத்த நாங்கள் நடாத்திவைப்பம். :D

குரு கேட்டு நான் செய்யாம இருப்பனோ :) ..ஆனாலும் பாருங்கோ குருவே..நான் இன்னும் வயசிற்கு வரல்ல பாருங்கோ அப்படி இருக்கும் போது நான் எப்படி குருவே அந்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்க முடியும்.. :D

ஆனபடியா..

அந்த பெண்ணிற்கு நீங்கள் தான் நல்லதொரு துணையாக மாறனும் பாருங்கோ.. :D (உங்கன்ட அன்பு சீடனிற்காக இதை கூடவா நீங்க செய்ய மாட்டியள்)..எப்ப உங்களுக்கு வசதி எண்டு சொன்னா..கல்யாண ஏற்பாட்ட தொடங்கலாம் பாருங்கோ.. :D

கு.சா தாத்தா அந்த பிள்ளையின்ட பெட்டி,படுக்கை எல்லாத்தையும் கட்ட சொல்லுங்கோ கனடாவிற்கு..(ஒமோம் குருவே யாழ் கள சார்பில பேஷா எங்கன்ட நெடுக்ஸ் தாத்தா முன் நின்று நடத்தி வைப்பார் கல்யாணத்தை).. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

எனது சீடன் வயசுக்கு வந்தபின்னர் குறிப்பிட்ட இந்த அபலைப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பார் என்பதை அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றேன். அதுவரை மாதா, மாதம் குறிப்பிட்ட பெண்ணுக்கு $1500 அவுஸ்திரேலியன் உதவித்தொகை கொடுப்பார் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். எனது சீடன் வயசுக்கு வந்ததும், குறிப்பிட்ட இந்தப்பெண்ணுடன் தமிழ்நெறி முறையில் சபேசன் அண்ணா தலைமையில், யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜேர்மனியில் கோளாகலமாக திருமணவைபவம் நடைபெறும். முதன்முறையாக சாமத்தியவீடும், கலியாணவீடும் எனது சீடனுக்கு ஒரேநேரத்தில் நடைபெறுவதை நினைக்கும்போது ஆனந்தக்கண்ணீர் வருகின்றது :wub:

எனது சீடன் வயசுக்கு வந்தபின்னர் குறிப்பிட்ட இந்த அபலைப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பார் என்பதை அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றேன். அதுவரை மாதா, மாதம் குறிப்பிட்ட பெண்ணுக்கு $1500 அவுஸ்திரேலியன் உதவித்தொகை கொடுப்பார் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். எனது சீடன் வயசுக்கு வந்ததும், குறிப்பிட்ட இந்தப்பெண்ணுடன் தமிழ்நெறி முறையில் சபேசன் அண்ணா தலைமையில், யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜேர்மனியில் கோளாகலமாக திருமணவைபவம் நடைபெறும். முதன்முறையாக சாமத்தியவீடும், கலியாணவீடும் எனது சீடனுக்கு ஒரேநேரத்தில் நடைபெறுவதை நினைக்கும்போது ஆனந்தக்கண்ணீர் வருகின்றது

ம்ம்..குருவே வயசு நான் வந்தா பிறகு அந்த பெண்ணிற்கு வாழ்க்கை கொடுக்கலாம் தான்..ஆனா அந்த பெண் பாட்டியா போயிடுவா அல்லோ.. :lol:

பிறகு எப்படி குருவே முடியும் பாருங்கோ.. :lol:

ஆனபடியா குருவே அந்த பெண்ணிற்கு நீங்க தான் வாழ்க்கை கொடுக்கலாம் பாருங்கோ..(என்ன நான் சொல்லுறது சரி தானே குருவே).. <_<

வேண்டுமென்டா அந்த உதவி தொகையை நான் கொடுக்கிறன்..(ஆனா நீங்க கல்யாணம் கட்டுங்கோ என்ன)..குருவிற்காக நான் உதவி தொகையை கூட அவாவிற்கு கொடுக்கமாட்டனா என்ன.. :lol:

ஆனா ஒன்னும் மட்டும் நான் தான் மாப்பிள்ள தோழன் சொல்லி போட்டன்..(சரி குருவின்ட விருப்பபடியே சபேஷன் மாமாவே கல்யாணத்தை தமிழ் முறை படி முன்னின்று நடத்தி வைக்கட்டும்) :lol: ..அதோட இன்னொரு விசயம் என்னவென்டா நான் வயசிற்கு வரும் போது குருவிற்கு கல்யாணமும் நினைத்து கூட பார்க்க முடியல்ல. :lol:

எல்லாமே ஒரே நேரத்தில நடக்குது என்ன..(அதோட அண்ணியை கண் கலங்காம கடசி வரைக்கும் காப்பாத்தனும் சொல்லி போட்டன்).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இல்லை பரவாயில்லயாம். தனக்கு திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார் மாதிரி சின்னக் கொழந்தைதான் கணவனா வேணுமாம் எண்டு அந்தப்பொண்ணு கு.சா அண்ணாவிட்ட சொல்லிதாம்.... சீடன்.. குருவுக்கு மரியாதை கொடுத்து குரு சொல்லிறமாதிரி நடந்தால்தான் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிது. பிறகு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ எனக்கு தெரியாது. குருபாவம் பொல்லாதது. குருசாபமும் பொல்லாதது. எண்டபடியால் குழப்படி சொல்லாமல் குரு சொல்லிறத கேட்டு நடவுங்கோ. உங்களுக்கு உண்மையில விருப்பம் இல்லை எண்டால் சுண்டல் அன்ணாமூலம் இந்த அபலைப்பெண்னுக்கு ஒரு எதிர்காலம் அமைச்சு குடுக்கலாம்... :lol: :lol:

ஓ..அப்படியோ சொன்னவா குருவே.. :lol: (அவாவிற்கு திருஞான சம்பந்தர் மாதிரி சின்ன பிள்ள தான் கணவனா வாறது இருகட்டும்)..ஆனா நேக்கு ஒளைவை பாட்டி எல்லாம் வேண்டாமப்பா..(அட நான் யாழில வாற ஒளைவை பாட்டியை சொல்லவில்லை).. :D

ஒமோம் குருவிற்கு மரியாதை கொடுக்காமலா அது எல்லாம் பேஷா தரலாம் பாருங்கோ :lol: ..ஆனா குரு எனக்கு நல்லதொரு பெட்டையா எண்ட வயசிற்கு ஏத்ததாய் தேடி பிடித்து தந்தா :D ..அதுக்கு பிறகு குரு என்ன சொன்னாலும் கேட்பன் அல்லோ..ஆனபடியா இன்னையில இருந்து நேக்கு நன்ன பொண்ணா தேடுங்கோ என்ன.. :D

ம்ம்..சுண்டல் அண்ணாவிற்கு இருக்கிற ஆட்களை சமாளிக்கிறதே பெரிய விசயமா இருக்கு..(இதில இந்த பாட்டி வேறய்யா பாவம் அவர்) :) ..ஆனபடியா குருவே பேசாம நீங்களே வாழ்க்கையை கொடுத்து விடுங்கோ...(கல்யாண செலவு முழுக்க நானே ஏற்று கொள்ளுறன்).. :lol:

அப்புறம் கல்யாணதிற்கு பிறகு யாழ்கள பக்கம் வருவியள் தானே... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அடடா குருஜி! நான் அவசரப்பட்டு ஆர்வக் கோளாறில வாக்களிச்சிட்டன். பிறகுதான் எனக்கொரு சந்தேகம் வந்தது. இந்தச் சந்தேகம் நிச்சயமா கு.சாவுக்கும், சின்னாவுக்கும் வந்திருக்கும். ஆனால் பயத்தில பறையலபோல கிடக்கு.

அதாவது குருஜி! நாம காதலிக்கிறதை முதலில மனைவிக்கோ அல்லது அவ புருசனுக்கோ சொல்லத் தேவையில்லையா? அல்லது அது அவசியமில்லையென்று விட்டுட்டீங்களா?

(ஜம்மு கவனம்! குரு என்ன சொல்கிறார் என்டால், திருஞானசம்பந்தர் கல்யாணம் செய்த கையோட முதலிரவும் காணாமல் கல்யாணப் பந்தலோடும் மனைவி, உறவினருடனும் சேர்ந்து அப்படியே பரலோகம் போனவர். அந்தப் பெண் முதலிரவு, உறவுஎல்லாம் கண்டிட்டா. நீங்கள்தான்....!)

(ஜம்மு கவனம்! குரு என்ன சொல்கிறார் என்டால், திருஞானசம்பந்தர் கல்யாணம் செய்த கையோட முதலிரவும் காணாமல் கல்யாணப் பந்தலோடும் மனைவி, உறவினருடனும் சேர்ந்து அப்படியே பரலோகம் போனவர். அந்தப் பெண் முதலிரவு, உறவுஎல்லாம் கண்டிட்டா. நீங்கள்தான்....!)

அட..எண்ட சுவி பெரியப்பா.. :D (எங்க பெரியப்பா காணாம போயிட்டியள்)..யாரிட்டையும் காதலை செப்ப போயிட்டியளோ யாருக்கு தெரியும்..(எப்படி சுகமோ).. :lol:

அட..திருஞானசம்பந்தர் பரலோகம் போனார் நான் நன்னா போனன் அப்படி போறதா இருந்தா குருவையும் இழுத்து கொண்டு போகமாட்டன் :unsure: ..முதலிரவை பரலோகத்தில வைத்து கொள்ளுறது தானே பெரியப்பா உது என்ன பெரிய விசயமே :rolleyes: ஆனா நான் சின்ன பிள்ள இப்படி எல்லாம் கதைத்தா..அம்மா ஏசுவா அல்லோ.. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.