Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலியாணத்துக்கு முன்/பின் ஒப்புநோக்கு.

Featured Replies

யாழ்கள உறவுகளே..... வணக்கம். இன்றைக்கு எனக்கு மனசில பட்ட விசயம் ஒன்றைப்பற்றி கருத்துகேட்கலாம் எண்டு நினைக்கிறன்.

என்னோட தோழர்களும் சரி.... தோழிகளும் சரி.... கலியாணத்துக்கு முதல் எதிர்கால கணவனைப்பற்றியோ இல்லை மனைவியைப் பற்றியோ கதைக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு, பாசம், காதல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையா உணர்களை வெளிப்படுத்துவினம். ஆனா கலியாணம் கட்டி ஒரு இரண்டு அல்லது மூன்று வருஷம் ஆன பிறகு ஏன்டா கட்டினம்.... நிம்மதி எல்லாம் போச்சு எண்டு கதைக்க கேட்டிருக்கிறேன்.

சிலர் சுதந்திரம் போச்சு எண்டு சொல்லுவினம்..... சிலரோ எண்ட தலையில கட்டிப்போட்டினம்.... என்னத்தை கண்டன் எண்டு நொந்து கொள்ளுவினம். இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது.... அல்லது இது ஒரு பிரச்சினை தானா?

என்னைப்பொறுத்த வரைக்கும் குடும்பத்தில இன்பதுன்பம் வந்து போகும். அது ஒரு சுழற்சி.... புரிதல் இருந்தால் அதுவே போதும் எண்டு நினைக்கிறன்..... அப்ப என்ன நினைக்கிறியள்.

அட..நம்ம தம்பியாக்கும்..(எப்படி அப்பு சுகமே?? :D )...ஓமோம் மனசில என்ன பட்டாலும் பேஷா கேட்கலாம் உங்க..(அதுகான்டி யாரையும் காதலிக்கிறேன் என்று சொல்லி அண்ணணுக்கு அடி வாங்கி தந்திடாதையுங்கோ).. :D

ஒன்னு கேட்டா கோவிக்க மாட்டியளோ..(ஏனப்பா தம்பி உதை விட சின்னனா எழுதி இருக்கலமே)..நிசமா முடியல்ல என்னால :D ..சரி எனி விசயதிற்கு வருவோம் என்ன..அட தம்பி கல்யாணமும் கட்டியாச்சோ சொல்லவே இல்ல பாருங்கோ உதை எல்லாம் என்னட்டா கேட்டா எனக்கு தெரிந்ததை சொல்லுறன் கேளுங்கோ என்ன?? :D

அட..எனக்கு கூட வாறவா பற்றி பல கனவு...(பாவனா மாதிரி வேற கற்பனை பண்ணி வைத்திட்டன்)..ஆனா நினைக்கிறது எல்லாம் நடக்குமா தம்பிபிபிபிபிபி :lol: ...ஓ என்ன பொறுத்தவரை வாறவா நன்ன தோழியா நேக்கு அரியண்டம் கொடுக்காம இருந்தா நன்னது..(என்ன எல்லாரும் பார்க்கிறியள் இது என்ட கனவு ஆனா நடக்காது என்று நேக்கு நன்னா தெரியும் பாருங்கோ அது தான் கனவாச்சும் காண்போம் என்டு).. :D

ஓ..கல்யாணதிற்கு பிறகு நடக்கிறது பற்றி சொல்லுறியளோ..எப்பவுமே பழக பழக பாலும் புளிக்கும் உது தெரியாதே என்ன..(நான் நினைக்கிறன் தம்பியை பார்த்து அவா சொல்லிட்டா போல அது தான் உவ்வளவு "பீலிங்ஸ்")...சரி சரி கவலைபடாதையுங்கோ என்ன இது எல்லாம் சகஜம்.. :D .

என்னென்டா எப்பவுமே பழம் மரத்தில இருக்க மட்டும் தான் அதன் மேல கண் இருக்கும் கையில வந்திட்டா அதுவும் சாதாரணம் தான் அத மாதிரி தான் இதுவும் எல்லாரும் கல்யாணதிற்கு பிறகு காதலிக்கிறதில்லை அது தான் பிரச்சினையே என்று நான் நினைக்கிறன்..(பிறகு நான் கல்யாணம் கட்டிட்டனோ என்று கேட்கிறதில்ல :D )..

ம்ம்..வாழ்க்கை என்னா சந்தோசம்,துக்கம் என்டு எல்லாம் வரும் போகும் சந்தோசத்தை நாம எப்படி பகிர்ந்து கொள்ளுறோமே அதே மாதிரி துன்பத்தையும் மனிசியோட..(கணவனோட)..பகிர்ந்து கொண்டு போனா அரைவாசி பிரச்சினை இருக்காது என்று நினைக்கிறன்... :D

அட எதையுமே பிரச்சினையா பார்க்காம அந்த பிரச்சினையில இருந்து எப்படி வெளியாள வாறது என்று மட்டும் பார்த்தா ஒரு பிரச்சினையும் இருக்காது பாருங்கோ என்ன தம்பி நான் சொல்லுறது..எல்லாம் சரி மனிசியிட்டோ இன்னைக்கு அடியோ அட நம்மளுகுள்ள என்ன சொல்லுங்கோ..(ஏனேன்டா அடிக்கிற கை தான் அணைக்குமாம் )...

ஆனபடியா இப்ப என்ன சொல்ல வாறேன் என்டா முதலில பார்க்கு போது "எங்கையோ பார்த்த மயக்கம் போல தான் இருக்கும்" அதில மயங்கினியளோ அவ்வளவு தான் ..ஒவ்வொரு நாளும் கதிரவன் கண் விழித்து பார்க்கும் போது உங்கள் மனைவியையும் புதுசாக பார்த்தா பிரச்சினை இருக்காது ஆனா அது ரொம்ப கஷ்டம் தான் பாருங்கோ..(எப்பவுமே அடுத்த வீட்டு ரோஜா தான் வாசண கூட என்ன :D )..

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா கல்யாணதிற்கு முன்னும் உன் கையில எதுவிமில்ல கல்யாணதிற்கு பிறகும் உன் கையில எதுவும் இல்ல இது தான் வாழ்க்கை"

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
:(:(:( ஜம்மு அண்ணா.... நான் இன்னும் கலியாணம் கட்டேல பாரும்(கட்டேக்க கட்டாயம் சொல்லுறன்... கிகீகிகீ).... ஜம்மு பேபி எண்டா.... பேபிட்ட தம்பியும் பேபி தானே.... எல்லாத்துக்கும் அனுபவம் வேணுமெண்டா... சுடலைக்கும் போறதுக்கு அனுபவம் கேட்பியள் போல இருக்கு.(அதுக்காக கேட்டிடாதயும் சொல்லிட்டன் :lol: )
  • கருத்துக்கள உறவுகள்

* ஓமோன்களின் தூண்டல் எப்பவும் சீரானதல்ல என்பதால்.. ஆணின் பாலியல் தொடர்பான பெண்ணிடம் உள்ள எதிர்பார்ப்பும் பெண்ணின் பாலியல் தொடர்பாக ஆணிடம் உள்ள எதிர்பார்ப்பும் மாறுபடுவது.

* ஆண் - பெண் இயற்கைத் தன்மை பற்றிய உண்மை வெளிப்படுத்தப்படாது செயற்கைத் தன்மை அல்லது போலித் தன்மை அல்லது அபரிமிதமான தோற்றம் அல்லது விம்பத்தை சிறுவயது முதலே காட்டி வருதல். ( ஊ+ம்: ஆணைப் பெண்ணை நெருங்கவிடாமல் வளர்த்தல்.. பெண்களைப் பற்றி மானே தேனே பூவே என்று வர்ணித்து அதன் படி சிந்தனையில் அவர்கள் பற்றிய மென்மைத் தோற்றத்தை எழுப்பல். ஆனால் அவர்களுக்குள் உள்ள பேய்க்குணம்.. காட்டுமிராண்டிக் குணம் போன்ற சாதாரண மனிதனுக்கு வரும் குணங்கள் மறைக்கப்படுதல். அவை எவ்வளவு காலத்துக்கு மறைக்கப்பட முடியும். ஒருவரை ஒருவர் நெருங்கும் போது இயல்புகள் இயல்பாக வெளிப்படச் செய்யும் தானே. )

* போலிக் கவர்ச்சியாக உடலை அழங்கரிப்பதும்.. போலித் தோற்றம் காட்டுவதும் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் கவர உதவலாம்.. ஆனால் அவர்களே நெருங்கிவிட்டு உண்மையைத் தரிசிக்கும் பொது அட இவ்வளவுதானா என்று ஏற்படும் சலிப்பு.

* தாய் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உள்ள உறவு அன்பை பாசத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் அதனைப் போல ஒரு ஆண் அல்லது பெண்ணிடம் அவற்றை எதிர்பார்க்கப் போய் அது கிடைக்காத போது ஏற்படும் ஏமாற்றம்.

* பேராசை. உலகில் உள்ள எல்லாம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று செயற்படும் ஆணும் பெண்ணும் அவற்றைத் தேடுவதில் செலவு செய்யும் நேரத்தை தங்களைத் தாங்கள் புரிந்து கொள்ள அல்லது நேசிக்க என்று செலவு செய்ய முன் வராமை. சுருங்கக் கூறின் ஒருவர் மற்றவர் மீது அக்கறை செய்யாமை.

* ஆரம்பத்தில் ஆண் - பெண் புரிந்துணர்வை வலிந்து ஏற்படுத்த முனைதல். ஆண் - பெண் புரிந்துணர்வு என்பது இயல்பாக எழ வேண்டும். சிலர் சில தேவைகளுக்காக ஏற்படுத்தும் வலிந்த புரிந்துணர்வுகள் (வேசங்கள்) தேவை முடிந்ததும்.. அருகிச் செல்வது.. காலப் போக்கில் இருவரிடையேயான ஈர்ப்பை இல்லாது செய்யும்.

* உளவியல் பாதிப்புக்கள். உ+ம்: திருமணம் ஆன பின்னும் அல்லது காதலித்த பின்னும்.. இன்னொரு ஆணை அல்லது பெண்ணை தேர்வு செய்யும் நோக்கம் இருத்தல். இப்படியானவர்களின் வாழ்வில் நிலையான உறுதியான போக்கு இருக்காது. அடிக்கடி ஆளை மாற்றுவது அவர்களுக்கு கூடிய திருப்தியாக இருக்கும். இது உளவியல் பாதிப்புக்களின் விளைவால் வருவது.

* பாலியல் எதிர்பார்ப்புக்கள். பாலியல் என்பதும் ஆளாளுக்கு வேறுபடுவது. சிலருக்கு அதீத பாலியல் விருப்புக்கள் இருக்கும் சிலருக்கு மிதமானதா இருக்கும். சிலருக்கு குறைபாடோடு இருக்கும். ஆரம்பத்தில் வெளிப்படாத குறைபாடுகள்... அல்லது இனங்காணப்படாத குறைபாடுகள் திருமணத்தின் பின்னர் வெளிப்படும் போது பாலியலை எதிர்பார்த்து வாழ்க்கையை அமைக்கும் ஆணும் பெண்ணும் அதில் திருப்தி இன்றி.. சலிப்படைதல் வெறுப்படைதல்.

* இயற்கையாக உள்ள பெண்களின் மனவோட்டம் உடல் சார்ந்த மன நிலைகள் பற்றிய உண்மைகள் அல்லது தன்மைகள் பற்றிய அறிவின்மை. அதேபோல் பெண்களிடம் ஆண்களின் உடல் சார்ந்த அவர்களின் மனநிலை சார்ந்த உண்மைகள் அல்லது தன்மைகள் பற்றிய அறிவின்மை. (பெண்களைப் பற்றிய மென்மையான அல்லது பதுமையான அல்லது அழகான பொய்த் தோற்றங்கள் இயற்கையான அவர்கள் பற்றிய உண்மையை அடையாளம் காணச் செய்யாமல் விடுதல்.)

* எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப தீர்வுகள் கிடைக்காமை. திருமணத்துக்கு முன் அல்லது ஆரம்பத்தில் ஆணும் பெண்ணும் இணைந்து பல கற்பனைத் திட்டங்களை போடுவர். அது காலப் போக்கில் நிறைவேறாத போது.. இவனைக் கட்டி என்னத்தைக் கண்டன்.. என்று புலம்பச் செய்வதும் விரக்தி நிலைக்குச் செல்வதும். இது ஒருவரைப் பற்றிய உண்மையான மதிப்பீடு செய்யும் ஆற்றல் இன்மையால் ஏற்படுவது.

* துணிவற்ற நிலை. ஆற்றல் அற்ற நிலை. பல ஆண்கள் வீட்டுச் சமையல் தொடங்கி பிள்ளை பராமரிப்பு வரை பெண்களில் தங்கி இருத்தல் (இதற்கு அம்மாமார் முக்கிய பொறுப்பு) இவை காலப்போக்கில் சலிப்பை வளர்க்கும். சில ஆண்கள் ஒவ்வொரு செயலுக்கும் முடிவெடுக்க மனைவியின் சொல்லுக்காக காத்திருக்கும் நிலை. இக்காத்திருப்பு காலப் போக்கில் சலிப்புக்கு வித்திடும்.

* அடுத்தவரை உதாரணமாக்கி அவரைப் போல வாழ விளைதல். தனக்குள்ள முயற்சி.. ஆளுமை.. தன்மை இவற்றை இனங்காணாமல்.. அடுத்தவனின் முன்னேற்றம் நிலை இவற்றை தானும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு செயற்பட ஆரம்பிக்கும் போதும் அதில் தோல்விகள் எழும் போது ஏற்படும் கசப்புணர்வுகள், ஒருவர் மீது மற்றவரின் இயலாமை வெளிப்படும் போது சலிப்புக்களாகின்றன.

* அடுத்தவரின் பேச்சுக்கு முக்கியம் அளித்தல். சிலர் தங்கள் நெருங்கிய நண்பர் அல்லது நண்பி சொல்லுறாள் என்று அதன் படி சுயசிந்தனையின்றி அல்லது தவறான எண்ணப்படி வழி நடத்தப்பட்டு கணவன் அல்லது மனைவி பற்றி தவறான எண்ணங்களை வளர்த்தல்.

* சுவாரசியமற்ற வாழ்க்கை முறை. பல ஆண்களும் பெண்களும் காலங்காலமா ஒரே மாதிரியே வாழ்தல். விடிய எழும்பிறது.. சாப்பிடுறது.. வேலைக்குப் போறது.. வீட்டுக்கு வாறது.. ரீவி பார்க்கிறது.. மீளச் சாப்பிடுறது.. போய் படுத்துக்கிறது.. அப்பப்ப குட்டியைப் போட்டுக்கிறது.. இதுவே வாழ்க்கை என்று வாழுதல். இது காலப்போக்கில் இதுதானா வாழ்க்கை என்ற சலிப்பை ஏற்படுத்தும். இவள்/இவன் இப்படித்தானா என்ற கேள்வியை எழுப்பும். இவன்/இவள் இவ்வளவுதானா என்று சிந்திக்க வைக்கும்.

* சுவாரசியத்தை ஒருவரிடம் மட்டும் எதிர்பார்த்தல். பெண்கள் ஆண்கள் தங்களை எப்பவும் ஆசுவாசப்படுத்திட்டு இருக்கனும் என்று நினைப்பினம்.. ஆனால் தங்கள் பங்குக்கு ஆணும் அதையே எதிர்பார்ப்பான் என்ற சிந்தனை அவர்களிடம் எழுவதே கிடையாது. நல்லா வேண்டிக் கொடுங்க விதம் விதமா.. வாங்கி வைச்சுக் கொள்ளுங்கள். அதற்கு ஈடா தான் ஈடுபாட்டு காட்டி அவனை ஆசுவாசப்படுத்த வேண்டும்.. தானும் அவனுக்கு சுவராசியமானதைச் செய்ய வேண்டும் என்ற தேவையை உணர்வதில்லை.

* வயதாதல் ஏற்படுத்தும் உளவியல் மற்றும் உடற் பெளதீக தோற்ற மாற்றங்கள் ஏற்படுத்தும் சமச்சீரற்ற நிலை. பெண்கள் விரைந்து உடலால் முதிர்ச்சியடைவதால்.. ஆண்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு அவர்களால் ஒத்திசைய முடியாத நிலை ஏற்படும் போது.. ஆணுக்கு அவர்களிடம் ஏற்படும் சலிப்பு. பெண்களுக்கும் இது ஏற்படலாம்.

* குழந்தைகள் பிறந்ததும்.. கணவன் அல்லது மனைவி கவனிப்பாரற்ற பொருளாகி விடுதல். குழந்தைகள் பிறந்ததும்.. நான் என்ர பிள்ளைக்காத்தானே வாழுறன் என்ற நிலையை ஏற்படுத்தி தங்கள் சுவாரசியமான வாழ்க்கையை உணராது தொலைத்து விடுதல்.

* அமையும் ஆணோ பெண்ணோ உளப் பிரச்சனை உள்ளவராக இருந்து அது மறைக்கப்பட்டிருந்தல் அல்லது இனங்காணப்படாமல் இருத்தல். திருமணத்தின் பின் எல்லாம் வெளிப்படும்..! காரணம் பெண் எங்கையோ பிறந்து இந்த ஆணிடம் வாழ வரும் போது.. காரிலும்.. பார்க்கிலும்.. யுனியிலும்.. சந்திச்சது போல அல்ல நடந்து கொள்ளப் போகினம். அவர்களின் நடத்தை 24 மணி நேரமும் ஒருவர் மீது மற்றவர் கண்காணிக்க அமைவதால் எல்லாப் பிரச்சனைகளும் குறைபாடுகளும் அப்ப தான் வெளிப்படும்.

பெற்றோருக்கு பழகிவிட்ட விடயங்கள்.. புதிதானவருக்கு.. பழகிடாது.

* தெவிட்டி விடும் உறவுகள். சில ஆணும் பெண்ணும் அளவுக்கு மிகுந்து நெருங்கி உறவாடிவிட்டு திருமணம் செய்வதால்... இவளிடம் இவ்வளவும் தான்.. என்று எண்ணி நடக்க முனைதல். இவர்கள் தான் அதிகம் இன்னொரு ஆணையோ பெண்ணையோ தேர்வு செய்ய அதிகம் வாய்ப்பைக் கொண்டுள்ளனர். மண முறிவுகளுக்கு முக்கியமாக இலக்காகும் பேர்வழிகள் இவர்கள். (காதல் என்று அல்லது திருமணத்தின் முன் கூடி வாழ்ந்து வரும் பேர்வழிகள்.)

* பொய், சந்தேகம். பொய்யிலேயே வாழ்ந்து பொய்யிலேயே மடிய எண்ணி வாழும் ஆண்களும் பெண்களும்.. அந்தப் பொய்யை இனங்காணும் போது பரஸ்பர நம்பிக்கை போய் சந்தேகம் எழுந்து.. போலித்தன்மை மிகைப்பட்டு.. ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலை.

* வற்புறுத்தி அல்லது கட்டாயப்படுத்தி மேற்கொள்ளப்படும் திருமணங்கள் அல்லது உறவுகள். ஒருவரின் இயல்பான விருப்புக்குப் புறம்பான இன்னொருவரை திருமணம் செய்யும் போது.. அது உள ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு உறவை ஏற்படுத்தல்.

* பெண்ணே/ ஆணே கதி என்று தனது சுயத்தை இழந்தல். சில ஆண்கள் கருவாட்டை கண்ட பூனை போல கலியாணம் கட்டிட்டா.. குறித்த பெண்ணை ஏதோ கடவுள் போல பாவிக்கிறதும்.. அவள் சொல்லுறதே வேதவாக்கு என்று நடக்கிறதும்.. தன்ர பாலியல் தேவைக்காகவே அவளுக்காக வழியிறதும்.. இது பெண்கள் பக்கமிருந்தும் வரலாம்.

* அடுத்தவரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்காத தன்மை. பிறைவேசி என்ற ஒன்று என்னட்ட இல்லை. நான் அவாக்கு எல்லாம் சொல்லுவன் என்று பெருமை பேச சில ஆண்கள் ஓட்ட வாயாய் இருக்கிறது.. அது பின்னர் அவர்களின் இயல்பை.. வழமையாக்கிட அது சலிப்பாகி விடும்.

* எதிலும் திருப்தியற்ற குற்றம் காணும் மனநிலையோடு மண வாழ்க்கையுள் நுளைதல்.

இப்படியும் இன்னும் பலவற்றை அடிக்கிட்டே போகலாம்..! இதையெல்லாம் கடந்து.. வாழுறது என்பது சாதாரண விசயம் அல்ல. அதற்கேற்ப ஒரு துணை கிடைப்பதும் இலகு அல்ல..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

அப்பப்பா.... நெடுக் பின்னிட்டியள் :lol: ..... ஆழமான ஆணித்தரமான கருத்துக்கள்.

கொக்குவிலான்,

நீங்கள் எழுதி இருப்பது

ஒரளவு உண்மை தான்.

காதல் திருமணமாக

இல்லாதுவிட்டால் எதிர்பார்புகளை

மனதில் வளர்பது

பாரதூரமான எதிர் விளைவுகளை

ஏற்படுத்தலாம்

என்பதே என் கருத்து.

பரஸ்பரம் விட்டுகொடுப்பு,

புரிந்துணர்வு,தியாகமனபாங்கு

இவைகள் குடும்பதில்

சிக்கல் வருவதை தவிர்க்கும். :(

ஜம்மு அண்ணா,

உங்களுக்கு அநுபவமெ

பேசுதோ திருமணம் ஆகி

பத்து வருடம் ஆகின தம்பதிகளிற்கு கூட

இந்த விசயம் எல்லாம் தெரியுமோ

தெரியாது,ஏதோ அநுபவபட்டவர் போல்

எழுதி இருக்கின்றீர்கள்.

"எங்கையோ பார்த்த மயக்கம் சரி"

இந்த பாட்டு மயக்கம் இன்னுமா

போகவில்லை. :lol:

நெடுக்ஸ்...அருமையான கருத்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , உங்களுடைய காரணங்கள் அனைத்தும் மிகவும் சரியானவை.

ஜம்மு அண்ணா.... நான் இன்னும் கலியாணம் கட்டேல பாரும்(கட்டேக்க கட்டாயம் சொல்லுறன்... கிகீகிகீ).... ஜம்மு பேபி எண்டா.... பேபிட்ட தம்பியும் பேபி தானே.... எல்லாத்துக்கும் அனுபவம் வேணுமெண்டா... சுடலைக்கும் போறதுக்கு அனுபவம் கேட்பியள் போல இருக்கு.(அதுக்காக கேட்டிடாதயும் சொல்லிட்டன்

ஓ..கல்யாணம் கட்டலையோ தம்பி..(அப்பவும் தம்பி சிரித்து கதைக்கும் போதே நினைத்தனான் :lol: )...கட்டக்க கட்டாயம் சொல்லுங்கோ எங்கிருந்தாலும் வந்திடுறன் சாப்பிட..(என்ன பார்க்கிறியள் வேறேன்னதிற்கு வாறது அதுக்குதானே)..அது சரி பொண்ணு பார்த்தாச்சோ எனி தானோ.. :icon_idea:

அட..ஜம்மு வந்து பேபி சரியோ ஆனா ஜம்முன்ட தம்பி பேபியோ யாருக்கு தெரியும்..(இது எப்படி இருக்கு பாருங்கோ)..என்ன குழப்பிட்டனோ அது நாம வழமையா செய்யிறது தானே.. :(

அட..கட்டாயம் எல்லாதிற்கும் அநுபவம் வேண்டும் :D ..(அநுபவத்தை விட சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது அல்லோ)..ஆனபடியா அண்ணா சொல்லுறதை கேட்கனும் என்ன.. :D

அட..நாம வழமையா ஊர் சுத்துற இடங்களிள் "சுடலையும்" ஒன்னு தான் என்ன பார்க்கிறீங்க...சும்மா சொல்ல படாது அங்க இருக்கிற அமைதி வேறேங்கையும் இல்ல. :( .(ஆனா என்ன கொஞ்சம் பயமா இருக்கும் இப்ப பழகி போச்சு அல்லோ)..தம்பி சுடலை பக்கம் போகவில்லையோ??.. :D

ஆனா என்ன அங்க போனா இரவிற்கு நித்தா வராது..கூட நாளா அந்த பக்கம் போகல்ல போகணும் பாருங்கோ..(இரவில ஒருக்கா போய் பார்க்க ஆசை தான்)..ஆனா போக ஏலாதே.. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு அண்ணா,

உங்களுக்கு அநுபவமெ

பேசுதோ திருமணம் ஆகி

பத்து வருடம் ஆகின தம்பதிகளிற்கு கூட

இந்த விசயம் எல்லாம் தெரியுமோ

தெரியாது,ஏதோ அநுபவபட்டவர் போல்

எழுதி இருக்கின்றீர்கள்.

"எங்கையோ பார்த்த மயக்கம் சரி"

இந்த பாட்டு மயக்கம் இன்னுமா

போகவில்லை. :D

அட...நம்ம தங்கச்சி..(என்ன சொன்னியள்??) :icon_idea: ..எல்லாம் ஒரு கேள்வி ஞானம் தான் பாருங்கோ..என்னத்தை எல்லாம் செய்யிறோம் உதை செய்ய மாட்டோமா என்ன..ஒமோம் விட்டுகொடுப்பு என்டு எல்லாம் சொல்லி இருக்கிறியள் வாசிக்க நன்னா இருக்கு :) ..சரி சரி கோவித்து போடாதையுங்கோ என்ன.. :(

ம்ம்..தங்கச்சி

பாட்டின் மயக்கமும் தீரவில்லை

பார்த்த மயக்குமும் தீரவில்லை..!! :(

அதில ஒரு வரி வருமே ஆகா என்ன ஒரு அருமையான வரி :lol: .."கண் திறந்து அவள் பார்க்கும் போது கடவுளையே நம்பும் மனசு என்டு"..அதுவல்லோ வரி தங்கச்சி.. :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓ..கல்யாணம் கட்டலையோ தம்பி..(அப்பவும் தம்பி சிரித்து கதைக்கும் போதே நினைத்தனான் :lol: )...கட்டக்க கட்டாயம் சொல்லுங்கோ எங்கிருந்தாலும் வந்திடுறன் சாப்பிட..(என்ன பார்க்கிறியள் வேறேன்னதிற்கு வாறது அதுக்குதானே)..அது சரி பொண்ணு பார்த்தாச்சோ எனி தானோ.. :icon_idea:

அட..ஜம்மு வந்து பேபி சரியோ ஆனா ஜம்முன்ட தம்பி பேபியோ யாருக்கு தெரியும்..(இது எப்படி இருக்கு பாருங்கோ)..என்ன குழப்பிட்டனோ அது நாம வழமையா செய்யிறது தானே.. :(

அட..கட்டாயம் எல்லாதிற்கும் அநுபவம் வேண்டும் :D ..(அநுபவத்தை விட சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது அல்லோ)..ஆனபடியா அண்ணா சொல்லுறதை கேட்கனும் என்ன.. :D

அட..நாம வழமையா ஊர் சுத்துற இடங்களிள் "சுடலையும்" ஒன்னு தான் என்ன பார்க்கிறீங்க...சும்மா சொல்ல படாது அங்க இருக்கிற அமைதி வேறேங்கையும் இல்ல. :( .(ஆனா என்ன கொஞ்சம் பயமா இருக்கும் இப்ப பழகி போச்சு அல்லோ)..தம்பி சுடலை பக்கம் போகவில்லையோ??.. :D

ஆனா என்ன அங்க போனா இரவிற்கு நித்தா வராது..கூட நாளா அந்த பக்கம் போகல்ல போகணும் பாருங்கோ..(இரவில ஒருக்கா போய் பார்க்க ஆசை தான்)..ஆனா போக ஏலாதே.. :)

அப்ப நான் வரட்டா!!

எல்லாம் அனுபவிச்சவர் சொல்லக்க கேட்கவேணும்..... கேட்டுக்கிறமுங்கோ....(எங்க போய் சொல்ல... எல்லாம் நேரம்... :D)

இப்படியும் இன்னும் பலவற்றை அடிக்கிட்டே போகலாம்..! இதையெல்லாம் கடந்து.. வாழுறது என்பது சாதாரண விசயம் அல்ல. அதற்கேற்ப ஒரு துணை கிடைப்பதும் இலகு அல்ல..!

பெண்ணே/ ஆணே கதி என்று தனது சுயத்தை இழந்தல். சில ஆண்கள் கருவாட்டை கண்ட பூனை போல கலியாணம் கட்டிட்டா.. குறித்த பெண்ணை ஏதோ கடவுள் போல பாவிக்கிறதும்.. அவள் சொல்லுறதே வேதவாக்கு என்று நடக்கிறதும்.. தன்ர பாலியல் தேவைக்காகவே அவளுக்காக வழியிறதும்.. இது பெண்கள் பக்கமிருந்தும் வரலாம்.

நெடுக் தாத்தா உங்களால் பதியப்பட்ட அனைத்து கருத்துக்களும் பேஷ் பேஷ். :icon_idea:

எப்பவுமே அடுத்த வீட்டு ரோஜா தான் வாசண கூட என்ன

ஜம்முபேபி

என்ன நடக்குது இங்கை?

நல்லா இருக்கு கருத்துக்கள். அதிலும் இந்த வசனம்............ யார் இபப்டி எல்லாம் சொல்லி தாறாது ஆ? :icon_idea:

சிந்திக்கிரேன் சிந்திக்கிறேன் னு சொலிட்டு உதுகளை தான் சிந்திக்கிறியள் போல.

எல்லாம் அனுபவிச்சவர் சொல்லக்க கேட்கவேணும்..... கேட்டுக்கிறமுங்கோ....(எங்க போய் சொல்ல... எல்லாம் நேரம்...

ம்ம்..அண்ணா சொன்னா எப்பவுமே நல்லதா தான் இருக்கும் என்ன :D ..(அட எல்லாம் அநுபவிக்க இல்லையப்பா ஆனா அநுபவித்தவை எல்லாம் சொன்னதை பொறுக்கினது தான் பாருங்கோ).. :lol:

அட ஒருத்தருக்கும் சொல்லிடாதையுங்கோ நம்மளுகுள்ளையே இருகட்டும் என்ன :D ..(அட இப்ப நேக்கு நன்ன நேரம் தான் தம்பிக்கு எப்படி :lol: )..

அப்ப நான் வரட்டா!!

ஜம்முபேபி

என்ன நடக்குது இங்கை?

நல்லா இருக்கு கருத்துக்கள். அதிலும் இந்த வசனம்............ யார் இபப்டி எல்லாம் சொல்லி தாறாது ஆ?

சிந்திக்கிரேன் சிந்திக்கிறேன் னு சொலிட்டு உதுகளை தான் சிந்திக்கிறியள் போல.

உங்கை வந்து அக்கா...(கல்யாணதிற்கு முன்/பின் ஒப்பு நோக்கு நடக்குது :lol: )....உந்த கேள்வியை கேட்டது வேற யாரும் இல்ல நம்மன்ட தம்பி தான் அது தான் அண்ணாவை மாதிரியே இவ்வளவு அறிவுபூர்வமாக் கேட்டிருக்கிறார் பாருங்கோவன்.. :lol:

அட கருத்து நன்ன இருக்கா..(நிசமாவோ என்னால முடியல்ல :D )..உப்படி எல்லாம் சுண்டல் அண்ணா தான் பேபிக்கு சொல்லி தாறவர் நேக்கு ஒன்னுமே தெரியாது.. :)

ம்ம்..பலதையும் சிந்திக்கிறேன் அதில் இதையும் யாசிக்கிறேன் என்னை மட்டும் நேசிக்கிறேன் இது எப்படி இருக்கு.. :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் கட்டவிருப்பவரின் சில குணங்கள் பிடித்திருக்காவிடினும் "அவர் திருமணத்திற்கு பின்னர் மாறிவிடுவார் அல்லது மாற்றிவிடுவேன்" என்ற நினைப்பில் கட்டுவார்கள் ஆனால் அநேகமான ஆண்கள் மாற மாட்டார்கள். ஆனால் ஆண்களோ ஒரு பெண்ணின் குணங்கள் பிடித்திருப்பதால் அவாவை கட்ட விரும்புவர் அத்துடன் "அவா அப்படியே மாறாமல் இருப்பா" என நினைத்துக்கட்டுவர் ஆனால் அநேகமான பெண்கள் மாறிவிடுவர்.

நகைச்சுவையாக இதை பல இடங்களில் படித்திருக்கிறேன் ஆனால் அனுபவத்தில் உண்மை.

நேக்கு அரியண்டம் கொடுக்காம இருந்தா நன்னது..(என்ன எல்லாரும் பார்க்கிறியள் இது என்ட கனவு ஆனா நடக்காது என்று நேக்கு நன்னா தெரியும் பாருங்கோ அது தான் கனவாச்சும் காண்போம் என்டு).

விளங்கினாச் சரி.

எப்பவுமே அடுத்த வீட்டு ரோஜா தான் வாசண கூட என்ன :wub:

உண்மைதான் :wub::(

  • கருத்துக்கள உறவுகள்

* அடுத்தவரை உதாரணமாக்கி அவரைப் போல வாழ விளைதல். தனக்குள்ள முயற்சி.. ஆளுமை.. தன்மை இவற்றை இனங்காணாமல்.. அடுத்தவனின் முன்னேற்றம் நிலை இவற்றை தானும் அடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு செயற்பட ஆரம்பிக்கும் போதும் அதில் தோல்விகள் எழும் போது ஏற்படும் கசப்புணர்வுகள், ஒருவர் மீது மற்றவரின் இயலாமை வெளிப்படும் போது சலிப்புக்களாகின்றன.

* அடுத்தவரின் பேச்சுக்கு முக்கியம் அளித்தல். சிலர் தங்கள் நெருங்கிய நண்பர் அல்லது நண்பி சொல்லுறாள் என்று அதன் படி சுயசிந்தனையின்றி அல்லது தவறான எண்ணப்படி வழி நடத்தப்பட்டு கணவன் அல்லது மனைவி பற்றி தவறான எண்ணங்களை வளர்த்தல்.

* சுவாரசியமற்ற வாழ்க்கை முறை. பல ஆண்களும் பெண்களும் காலங்காலமா ஒரே மாதிரியே வாழ்தல். விடிய எழும்பிறது.. சாப்பிடுறது.. வேலைக்குப் போறது.. வீட்டுக்கு வாறது.. ரீவி பார்க்கிறது.. மீளச் சாப்பிடுறது.. போய் படுத்துக்கிறது.. அப்பப்ப குட்டியைப் போட்டுக்கிறது.. இதுவே வாழ்க்கை என்று வாழுதல். இது காலப்போக்கில் இதுதானா வாழ்க்கை என்ற சலிப்பை ஏற்படுத்தும். இவள்/இவன் இப்படித்தானா என்ற கேள்வியை எழுப்பும். இவன்/இவள் இவ்வளவுதானா என்று சிந்திக்க வைக்கும்.

நெடுக்கு சொன்ன அநேகமானவை பொதுவானவை ஆனால் இவை மூன்றும் புலம் பெயர்ந்த நம்மவர்க்கு சாலப் பொருந்தும். (ஆனால் எனக்கு தெரிய புலத்தில் இவை மூன்றும் ஒரு பிரச்சனை இல்லை)

  • 2 weeks later...

பெண்களுக்கு திருமணத்திற்கு முன்னர் கட்டவிருப்பவரின் சில குணங்கள் பிடித்திருக்காவிடினும் "அவர் திருமணத்திற்கு பின்னர் மாறிவிடுவார் அல்லது மாற்றிவிடுவேன்" என்ற நினைப்பில் கட்டுவார்கள் ஆனால் அநேகமான ஆண்கள் மாற மாட்டார்கள். ஆனால் ஆண்களோ ஒரு பெண்ணின் குணங்கள் பிடித்திருப்பதால் அவாவை கட்ட விரும்புவர் அத்துடன் "அவா அப்படியே மாறாமல் இருப்பா" என நினைத்துக்கட்டுவர் ஆனால் அநேகமான பெண்கள் மாறிவிடுவர்.

நகைச்சுவையாக இதை பல இடங்களில் படித்திருக்கிறேன் ஆனால் அனுபவத்தில் உண்மை.

:D:lol: அனுபவத்தில் கண்ட உண்மையா? :rolleyes::(

எப்படிப்பட்டோராக இருந்தாலும் அன்பால் மாற்றிவிடலாம் என்கிறார்களே. உது பொய்யோ அப்ப :lol:

Edited by வெண்ணிலா

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

:D:D அனுபவத்தில் கண்ட உண்மையா? <_<:lol:

எப்படிப்பட்டோராக இருந்தாலும் அன்பால் மாற்றிவிடலாம் என்கிறார்களே. உது பொய்யோ அப்ப :icon_idea:

ஏன் இப்படி ஒரு சந்தேகம் வருது...(மன்னிச்சிடுங்கோ... நான் இதற்கு பதில் சொல்லேலாது பாருங்கோ) :D:D:D

ஏன் இப்படி ஒரு சந்தேகம் வருது...(மன்னிச்சிடுங்கோ... நான் இதற்கு பதில் சொல்லேலாது பாருங்கோ) :lol::icon_idea::D

ஏனுங்கோ சொல்ல முடியாது சரி விடுங்கோ.

எனக்கு வாற சந்தேகம் எல்லாம் தம்பி ஜம்முபேபி தான் தீர்த்து வைப்பார். எங்கே ஜம்மு? ஜம்மு ஜம்மு ஜம்மு இருக்கிறியளோ இந்த பக்கம் ஒருக்கா வந்துட்டு போங்கோவன் <_<:D

  • தொடங்கியவர்

கலியாணம் கட்டினவை தான் இதை தீர்த்து வைக்கலாம்... ம்...ம்.. ஜம்மு தான் சரியான ஆள்.... கிகீகிகீ. <_<

கலியாணம் கட்டினவை தான் இதை தீர்த்து வைக்கலாம்... ம்...ம்.. ஜம்மு தான் சரியான ஆள்.... கிகீகிகீ. :)

:lol: என்னாது கல்யாணம் கட்டினவையோ.............

சரி ஜம்மு இப்ப வந்து இதுக்கு பதில் சொல்லிட்டு போங்கோ

எப்படிப்பட்டோராக இருந்தாலும் அன்பால் மாற்றிவிடலாம் என்கிறார்களே ஆம் முடியும் எனில் , இது எத்தனை வீதம் சரி? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:) என்னாது கல்யாணம் கட்டினவையோ.............

சரி ஜம்மு இப்ப வந்து இதுக்கு பதில் சொல்லிட்டு போங்கோ

எப்படிப்பட்டோராக இருந்தாலும் அன்பால் மாற்றிவிடலாம் என்கிறார்களே ஆம் முடியும் எனில் , இது எத்தனை வீதம் சரி? :lol:

ஆடுற மாட்டை ஆடியும் பாடுற மாட்டை பாடியும் கறக்கனும்.மாறிச்செய்தால் கோவிந்தா :lol:

நெடுக்கு

அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அதுசரி இவையென்ன மலர்உம் நினைவுகளோ??? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

அற்புதமான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். அதுசரி இவையென்ன மலர்உம் நினைவுகளோ??? :rolleyes::unsure:

அடப்பாவிகளே.. மலர் உம் நினைவும் என்றாப் போல எழுதிறியளே.. முடியல்ல..! சமுதாயத்தில போகேக்க வரேக்க அவதானிச்சது மட்டும் தான் வசம்பு அண்ணோய். மலர் உம் நினைவு ம்.. எழுத மலர் வரட்டாம்..! மலர் கோவிச்சிடாது தன்னைப் பற்றி எழுதிறது என்று. :o:rolleyes:

  • தொடங்கியவர்

அடப்பாவிகளே.. மலர் உம் நினைவும் என்றாப் போல எழுதிறியளே.. முடியல்ல..! சமுதாயத்தில போகேக்க வரேக்க அவதானிச்சது மட்டும் தான் வசம்பு அண்ணோய். மலர் உம் நினைவு ம்.. எழுத மலர் வரட்டாம்..! மலர் கோவிச்சிடாது தன்னைப் பற்றி எழுதிறது என்று. :D:lol:

:unsure::lol::lol::D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.