Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாரம் ஒரு வலைத்தள அறிமுகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிமும்.

logo.png

இயல், இசை. நாடகம் என்ற முத்தமிழ் கொண்டது பழந்தமிழ். அறுசுவை அமுதம் கொண்டது புதுத்தமிழ் என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணமே வகுத்திருக்கிறார் வலைத்தள வடிவமைப்பாளர்.

வலைத்தளத்துக்கு முத்தாப்பாய்.. சிந்தனைச் செல்வர் என்று புனையிடப்பட்ட (நான் தனிப்பட்ட முறையில் இப்படியான புனையிடல்களை வெறுப்பவன்.. இருந்தாலும் இங்கு அதைத் தவிர்க்கவில்லை.) எழிலனின் .. இருவரி முத்துக்கள் சிந்திக்கிடக்கின்றன.

அவற்றுள் ஒன்றில்..

கல்லிலே கடவுளைக் கடவுளாய் உணர்வரைக் கள்வராய்ச் சொல்கிறார்

தம் மாண்ட தலைவரின் சிலை வைத்து மலர் சூட்டித் "தலைவா" என வணங்குகிறார்.. என்று தனி மனிதத் துதிபாடலுக்கு சாட்டையடி கொடுக்கிறார்.

அப்பாவி அப்பாசாமியின் "கவர்மேந்து எதுக்கு சார்.." நம்ம உதயனின் முச்சந்தி முரளி மற்றும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் ஈழக்கிழவனை கண்முன் கொண்டு வருகிறது.

பல புலம்பெயர் எழுத்தாளர்களின் பல தரப்பட்ட விடயங்கள் சார்ந்து எழுந்திருக்கும் படைப்புகளை வெளியிட்டு.. அவர்களின் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் அதேவேளை தனது தமிழின் மேலான, தமிழ் தேசியத்தின் மேலான அக்கறையை வெளிப்படுத்தி வரும் தமிழமுதம்-இராஜன் முருகவேல் எனப்படும் நாமறிந்த சோழியானை இது தொடர்பில் பாராட்டுதல் தகும் என்றே எண்ணுகிறேன்.

நீங்களும் தமிழின் அறுசுவை அறிய வேண்டுமா.. இங்கு கொஞ்சம் உலாவித்தான் பாருங்களேன்.. இதற்குமேல் நான் சொன்னால்.. சோழியானுக்கு நெடுக்ஸ் ஐஸ் வைக்கிறார் என்றாகிடும்.

இச்சிறிய அறிமுகத்துடன்.. ஆறுதமிழ் அமுதம் உண்டு களிப்புற்று வர கேட்டுக் கொள்கிறேன்.

களிப்புறுவதோடு மட்டும் நின்று விடாது உங்களின் பங்களிப்புக்களையும் நீங்கள் விரும்பின் தமிழமுத்திற்கு வழங்கலாம்..!

-தமிழமுதம்- http://tamilamutham.net/home/

நன்றி வணக்கம்.

------------------------------

நீங்களும் நீங்கள் படிக்கும் அல்லது வடிவமைத்திருக்கும் வலைத்தளங்களை இங்கு அறிமுகம் செய்யலாம். அவை தமிழ் தளங்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மனித சிந்தனையை வளப்படுத்தக்கூடிய பயனுள்ள தளங்களாக இருப்பது கட்டாயம்.

"பகுத்தறிவு" "கடவுள்" என்று இவை சார்ந்து அடுத்தவரைக் கோமாளியாக்கும் தளங்களை அறிமுகம் செய்வதை தயவுசெய்து செய்ய வேண்டாம். :icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பேஸ்.கொம்

இது ஒரு ஆங்கிலத் தளம். இன்றைய நாட்களில் அதிகம் பேசப்படும் விண்வெளி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் ஆதாரங்கள் சகிதம் வெளியிடும் ஓர் அற்புதமான தளம்.

நீங்களும் கொஞ்சம் விண்வெளியில் உலா வர விரும்புகிறீர்களா.. இதோ இந்த ஏவுதளத்துக்குச் செல்லுங்கள்... உங்கள் பிள்ளைகளையும் பயமின்றிக் கூட்டிச் செல்லலாம்..!

ஸ்பேஸ்.கொம்:- http://www.space.com/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ்.

Edited by தமிழ் சிறி

தற்பொழுதுதான் 'தமிழமுதம்' பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். மிகவும் நன்றி நெடுக்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தளமும் ஆங்கில தளம் தான். அதாவது அனேகமாக எல்லோரும் செய்திகளை ஈ--மெயில்(e-mail) மூலம் தான் அனுப்புகின்றனர். அதிலும் பலர் நிறைய சுருக்கமான சங்கேத(code word) சொற்களை பாவித்து பெரிய செய்திகளை சொல்லி விடுவார்கள்.உ+ம் f 2 f. என்றால் Face to face

இந்த சங்கேத சொற்களை கூறும் தளம் இது.

http://netlingo.com/emailsh.cfm

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நுணாவில் நன்றியப்பு. :D உங்களிட்டை என்ரை கேள்வி என்னவெண்டால் உதேமாதிரி தமிழிலையும் சங்கேத சொல்லுகள் ஏதும் வைச்சிருக்கிறியளோ?ஏனெண்டால் இஞ்சையும் ஒருக்கால் எழுதிப்பாக்கலாந்தானே :rolleyes:

எல்லாம் சரிவந்துது எண்டால் எங்கடை மட்டுறுத்தினர்மாருக்கு சிதம்பரசக்கரத்திகை பேய்பாத்தமாதிரி இருக்கும் :lol:

தம்பி நுணாவில் நன்றியப்பு. :D உங்களிட்டை என்ரை கேள்வி என்னவெண்டால் உதேமாதிரி தமிழிலையும் சங்கேத சொல்லுகள் ஏதும் வைச்சிருக்கிறியளோ?ஏனெண்டால் இஞ்சையும் ஒருக்கால் எழுதிப்பாக்கலாந்தானே :rolleyes:

எல்லாம் சரிவந்துது எண்டால் எங்கடை மட்டுறுத்தினர்மாருக்கு சிதம்பரசக்கரத்திகை பேய்பாத்தமாதிரி இருக்கும் :lol:

கிகிகிகி காரியத்தில கண் தான் அப்பு உங்களுக்கு..;)

  • கருத்துக்கள உறவுகள்

பல விதமான அலகுகள் பல நாடுகளில் அளவுகளை பாவிக்கிறார்கள். உ+மாக வெப்பநிலைய சில நாடுகளில் பரனைட்டிலும், இன்னும் சில நாடுகள் செல்சியசிலும் அளக்கிறார்கள். இவற்றை ஒரு நொடியில் நீங்கள் மாற்ற கீழ் கூறும் தளம் உங்களுக்கு நண்பனாக உதவும் என நினைக்கிறேன். :)

http://www.onlineconversion.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேச்சர்.கொம்

இதுவும் ஒரு ஆங்கிலத் தளம். அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை உடனுக்குடன் வலைத்தளத்தில் தரும் தளங்களில் முக்கியமான ஒரு தளம் இதுவாகும். இலவசமாக குறிப்பிட்ட ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்க முடியும். அங்கத்துவம் பெறுவதன் மூலம் மொத்த ஆய்வுக் கட்டுரைகளையும் படிக்க முடியும். அதுமட்டுமன்றி அறிவியல் செய்திகளையும் படிக்க முடியும்.

அறிவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதக் கற்றுக் கொள்ளவும்.. அறிவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை தேடிப் பெறவும்.. அறிவியல் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளுக்கு உசாத்துணை வழங்கக் கூடிய குறிப்புகளை எடுக்கவும் என்று பல நோக்கங்களுக்கு இத்தளத்தைப் பயன்படுத்த முடியும்.

பல்வேறு துறைகளில் உயர்தர தொழில் வாய்ப்புக்களுக்கான விளம்பரங்களையும் இங்கு காணலாம்.

உண்மையில் இது Nature அறிவியல் சஞ்சிகைக்குரிய தளமாகும்.

Natureக் கான இணைப்பு:- http://www.nature.com/news/index.html

http://www.nature.com/news/index.html

Edited by nedukkalapoovan

உலக இணைய தொலைக்காட்சிகள்.!!!?

இது ஒரு நல்ல முயற்ச்சி....

பிரியோசனமாகிறது.... மற்றவர்கள் இருந்த இடத்திலையே பார்த்து ரசித்த நல்லவிடயங்களை...

நாமும் பார்க்க.... செய்ய... என்னும் எம்மை தூண்ட.... வீடியோக்களை நாமே தயாரிக்க தூண்டும் நல்ல முயற்சி....

ஆனால் எங்கபோய் முடிகிறதோ தெரியா இந்த இணயபோட்டிகளில்... யூருப்பும் , கோகிளும் என்னும் செய்வார்கள் .... !என்னசெய்யபோகிறார்கள் ? என பொறுத்திருந்துபார்ப்போம்..

.. விரைவில் ஒரு புதிய இணைய தொலைக்காட்சிகள் யுகத்தை பார்க்கலாம்........ நிற்க.

நீங்களும் முந்துங்கள் உங்கள் இணைய தொலைக்காட்சி தயாரிப்பிலும் பெயர்கள் பதிவதிலும்...

இலகுவான செய்முறை...

போய் பாருங்கள் செய்யுங்கள்... இதுவும் ஓர் புதிய இணையஉலகம் !!! அதைவிட எல்லாம் இலவசம்..!! :D^_^

http://worldtv.com/eelamboys இது எனது...... :( :(

நிங்கள் இங்கு போய் செய்யுங்கள் :lol: :lol: :)

http://worldtv.com

நன்றி

Edited by Netfriend

சுமார் 50000 ஆங்கிலச் சொற்களுடன் தமிழ் - ஆங்கில, ஆங்கில - தமிழ் இணைய அகராதி

மிக அருமையாக இருக்கிது. தமிழில எழுதினால் ஆங்கிலத்தில சொற்கள் காட்டிது. ஆங்கிலத்தில எழுதினால் தமிழில பொருள் சொல்லிது. சூப்பர் அக்கா. இது உங்கட இணையமோ? நான் favorite இல போட்டு வச்சு இருக்கிறன். அறியத்தந்தமைக்கு நன்றி! :D

உலக இணைய தொலைக்காட்சிகள்.!!!?

இது ஒரு நல்ல முயற்ச்சி....

பிரியோசனமாகிறது.... மற்றவர்கள் இருந்த இடத்திலையே பார்த்து ரசித்த நல்லவிடயங்களை...

நாமும் பார்க்க.... செய்ய... என்னும் எம்மை தூண்ட.... வீடியோக்களை நாமே தயாரிக்க தூண்டும் நல்ல முயற்சி....

ஆனால் எங்கபோய் முடிகிறதோ தெரியா இந்த இணயபோட்டிகளில்... யூருப்பும் , கோகிளும் என்னும் செய்வார்கள் .... !என்னசெய்யபோகிறார்கள் ? என பொறுத்திருந்துபார்ப்போம்..

.. விரைவில் ஒரு புதிய இணைய தொலைக்காட்சிகள் யுகத்தை பார்க்கலாம்........ நிற்க.

நீங்களும் முந்துங்கள் உங்கள் இணைய தொலைக்காட்சி தயாரிப்பிலும் பெயர்கள் பதிவதிலும்...

இலகுவான செய்முறை...

போய் பாருங்கள் செய்யுங்கள்... இதுவும் ஓர் புதிய இணையஉலகம் !!! அதைவிட எல்லாம் இலவசம்..!! :(:)

http://worldtv.com/eelamboys இது எனது...... :(:lol:

நிங்கள் இங்கு போய் செய்யுங்கள் ^_^:lol::(

http://worldtv.com

நன்றி

இணையநண்பனை நீண்டநாட்களுக்கு பின்னர் யாழில மீண்டும் சந்திச்சது மிக்க மகிழ்ச்சி. உங்கட தளம் பார்த்தன். அந்தமாதிரி அட்டகாசமா இருக்கிது. ரீமிக்குசுகளூம், பாட்டுகளூம், கும்மாளமும் எண்டு ஒரே துள்ளல் கலர் கலரா இரூக்கிது. இந்த இணையம் பற்றி அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து இஞ்சயும் இணைஞ்சு இருந்து தகவல்கள் தாருங்கள்.. :( இதயும் நான் நான் favorite இல போட்டுவிட்டனான். நீங்கள் சொன்னது சரிதான். விரைவில எல்லாம் காணொளி யுகமா வரப்போகிது. :D

என்னுடைய தளம் <_<:lol::lol:

www.eelamhomeland.com

Videossssss

www.eelamhomeland.com/eelamclipz

  • கருத்துக்கள உறவுகள்

www.eelamhomeland.com

தளம் அழகு.

வாழ்த்துகள்

http://www.valary.tv/

வளரி ! வளரி ரிவி !!

தமிழ் வெப்ரிவியின் தலை ரிவியோ இது.... :lol::D

வாருங்கள்.... வளருவோம்... :unsure::rolleyes::)

அபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்

நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.

அதாவது பேன்யன் ட்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது மரத்தின் பாகங்களை விளக்கும் படமும் கிடைக்கும்.

ஆரம்பக் கல்வி படித்து வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவே இந்த ஆன்லைன் டிக்‌ஷனரி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்று வாழ்வில் நாம் காணும் ஒரு 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன் லைன் அகராதியில் உள்ளன.

20,000 வார்த்தைகளுக்கு அது பயன்படுத்தப்படும் கான்டெக்ஸ்சுவல் அர்த்தங்களை, அருஞ்சொல் நிபுணர்களைக் கொண்டு த்யாரித்துள்ளது.

இணையதளத்தின் சைடு பாரில் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி, விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆன் லைன் அகராதி.

பான்கிரியாஸ் என்றால் கணையம் என்று நமக்கு தெரியும், லிவர் தெரியும், பெருங்குடல், சிறுகுடல் போன்ற வார்த்தைகளெல்லாம் நமக்கு தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும்? விளக்கத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா உடனே செல்லுங்கள் விஷுவல்.மெரியம்வெப்ஸ்டர்.காம

். இணையதளத்திற்கு.

1996-ம் ஆண்டு தி விஷுவல் டிக்‌ஷனரி என்ற புதிய அகராதி சி.டி. ரோம்களில் வந்தது. இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் வெளியானது. அப்போது முதல் பல்வேறு விதத்தில் மேம்பட்ட சி.டி. ரோம் டிக்‌ஷனரிகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் இதனை கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளது மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம்.

http://www.merriam-webster.com/

msn

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெப்தளம் தமிழக வரலாறு மற்றும்,கதை,கட்டுரை,இலக்கியம,

http://wsws.org/tamil/

world socialist we site

Edited by SIVARAMAN

இதுவரை நான் கண்ட வலைத்தளங்களிலேயே அருமையான தளம் இது :

http://madippakkam.blogspot.com :):rolleyes::wub:

அப்படியா?::P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

InfoTamil.ch

தமிழ், ஜேர்மன், ஆங்கிலம், பிரான்ஸ் மற்றும் இத்தாலிய மொழிகளில்.

Edited by Tigerblade

http://www.valary.tv/

வளரி ! வளரி ரிவி !!

தமிழ் வெப்ரிவியின் தலை ரிவியோ இது.... :o:lol:

வாருங்கள்.... வளருவோம்... :lol::wub::lol:

என்னங்க சொல்லுறீங்க இணையநண்பன்? யாழிண்ட தலையில போட்டால் தமிழ்வெப்பிண்ட தலை ரீவியோ? :( உள்ளுக்க போனால் 10 9 8 7 6.. எண்டு COUNTDOWN போய்க்கொண்டு இருக்கிது. கடைசியில நன்றி! வணக்கம்! எண்டு சொல்லிறதோட விசயம் முடியக்கூடும். வலையில என்ன தமிழீழத்த சட்டலைட்டுக்கால காட்டப்போறீனமோ? விளம்பரத்தவிட உள்ளுக்க இருக்கிறதுதான் முக்கியம் எண்டுறது உதச்செய்யுற ஆக்களுக்கு விளங்கினால் சரி. வெட்டி ஒட்டுறதுக்கு யூரியூப் இருக்கிது. சுயமாக ஏதும் இல்லாமல் இதுவும் வெட்டி ஒட்டுற இணையமாக இருந்தால் தலையில வச்சு கூத்து ஆடுறதுக்கு ஒண்டும் இல்லையுங்கோ. :D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

WWF

நாங்கள் எங்களைப் பற்றியே சிந்திச்சு எங்கள் தேவைகளை எப்படித் தீர்க்கிறது என்றே சிந்திச்சு சுயநலத்தோட வாழவும் செயற்படவும் ஆரம்பித்து நாம் வாழும் இயற்கையும் அதனைச் சார்ந்த பிற உயிரினங்களையும் சிறுகச் சிறுக அழிச்சிட்டே வந்திட்டு இருக்கிறம்.

அந்த இயற்கையும் அது சார்ந்த மனிதரல்லாத பிற உயிரினங்களும் எம்மால் படும் அவஸ்தைகள் பற்றி அறியவும் அவற்றுக்கு நாம் விளைவித்த ஆபத்தில் இருந்து அவற்றை விடுவிக்கவும் என்று உங்கள் ஒத்துழைப்புக்களைக் கோரும் ஒரு தளம் இது.

இதுவும் ஒரு ஆங்கிலத் தளமே.

தளத்துக்கான இணைப்பு:

Edited by nedukkalapoovan

உங்களுக்கு தினமும் தேவைப்படும் அல்லது தினமும் நீங்கள் பார்க்கவிரும்பும் வலைத்தளங்களை ஒரே வலைத்தளத்தில் சேமித்திருக்கிறார்கள்.கீழே உள்ள இணைப்பில் பாருங்கள்.இது உங்களுக்கு மிகவும் பிரயோசனமாக அமைவதோடு உங்கள் காலத்தையும் மிச்சப்படுத்தும்.

http://www.allmyfaves.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.