Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் ஒரு தோற்கின்ற விளையாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல ஆங்கிலப் பாடகி Amy Winehouse (24) இன் பிரபல்ய பாடலான.. " Love is a losing game " பாடல் வரிகள் பற்றி.. ஒப்பீட்டு விமர்சனம் அளிக்க.. (இரு வெவ்வேறு கால பாடல்களுக்குரிய பாடல்களில் அமைந்த வரிகளின் தன்மைகளை ஒப்பிட்டு..) கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆங்கில பாடப் பரீட்சையில் கேட்கப்பட்டுள்ளது.

எங்கே.. எம் கவி வித்தர்கள்.. நீங்களும்.. உங்கள் கருத்தை இவ்வரிகள் தொடர்பில் சொல்லுங்கள் படிப்போம்...

(உங்களை ஒப்பிடச் சொல்லவில்லை)

Though I battled blind

Love is a fate resigned

Memories mar my mind

Love is a fate resigned

Over futile odds

And laughed at by the Gods

And now the final frame

Love is a losing game

Amy Winehouse இன் இணையத்தளத்தில் பாடலை முழுமையாகக் கேட்கலாம். அது ஒரு பரிசு பெற்ற பாடலாகும்... http://www.amywinehouse.co.uk/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்காலபோவான் காதல் ஒரு தோற்கின்ற விளையாட்டுக்கு ஒருவரும் கவிதை எழுத வரவில்லையா? முதலில் நீங்கள் எழுதி ஆரம்பித்து வையுங்கள் யாழ்க்களக் கவிஞர்கள் தொடருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என் காதலின் நிறம் என்ன?

நம் இருமத குடும்பத்துக்கும் இடையே

ஒரு சமாதானக் கொடியாய் பறக்கும் என்று நினைத்திருந்தேனே!

வெள்ளை நிறத்தில் இருந்ததோ என் காதல்?

உன்னிடம் சொல்லிவிடத் துடித்த போதெல்லாம்

ஓடி ஒடி ஒளிந்து கொண்டதே!

அப்படி வெட்கப் பட்டு வெட்கப்பட்டு சிவந்து கிடந்ததோ என் காதல்?

எப்போதும் உன்னுடைய நினைவுகளை மட்டுமே

பசுமையாய் சுமந்து திரிந்ததே!

ஒரு வேளை பச்சை நிறமாய் இருந்ததோ என் காதல்?

உன் காதல் எவ்வளவு பெரியது என்று கேட்டவர்களிடமெல்லாம்

வானைப் போலப் பரந்தது என்பேனே!

நீல நிறமாயிருந்ததோ என் காதல்?

உன்னைப் பார்த்துப் பிறந்ததுதானே என் காதலும்?

ஒருவேளை உன்னைப் போல அதுவும் மாநிறமோ?

உன்னிடம் என் காதலைச் சொல்லும் வரை

அது எந்த நிறமென எனக்கும் சந்தேகம்தான்

ஆனால் உன்னிடம் சொல்லியபின்தான்

நீ மறுத்துவிட்ட துக்கத்தை சுமந்து

எப்போதும் கறுப்பாய் திரிகிறதடி என் காதல்!

என்னைப் போல

என்னிடம் நீ கொண்ட காதலையும்

உன் மேல நான்கொண்ட காதலையும்

நீ எனக்கு சொல்வாய் என்றும்

நான் உனக்கு சொல்வேன் என்றும்

நாம் இருவரும் நினைத்திருக்கையில்

ஒருவருக்கொருவர் காதலை

இயம்ப முடியாமல் ஈகோ தடுக்கையில்

முடிவில் இருவருமே காதலை சொல்லாமலே

சாவைத் தழுவினோமே

காதல் ஒரு தோற்கும் விளையாட்டா

இல்லை உயிர் கொல்லியா

காதலர்களே

நீங்களே பதில் சொல்லுங்கள் :lol:

ம்ம்..நெடுக்ஸ் தாத்தா நன்னா இருக்கே அட நான் பாடல் வரிகளை சொன்னான் பாருங்கோ :D ..(காதல் ஒரு தோற்கின்ற விளையாட்டு)...தாத்தா விளையாடமா இருக்கிறதை விட விளையாடி தோற்கிறது மேல் அல்லவா..ஏனேன்டா தொடர்ந்து விளையாடக்க ஒரு போட்டியிலையாவது வெல்லுவோமல்லோ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் அட இது எல்லாம் சகஜமப்பா)..

சரி எனி விசயதிற்கு வாரன் என்ன..அட "கவி வித்தகர்கள்" என்டு "போர்ட்" போட்டு இருந்ததாலே நான் வந்திட்டு திரும்பி போயிட்டன் அல்லோ..(பிறகு "கவி வித்தர்களிட்ட" என்னால் ஏச்சு வாங்க ஏலாது தானே)..

அவை ஒருத்தரையும் உந்த பக்கம் காணாதபடியா..(ஏதோ நமக்கு தெரிந்த அளவிள என்ட கருத்தை சொல்லி போட்டு போறன்)..பிழையா இருந்தா ஏசி போடாதையுங்கோ..என்ன.. :lol:

முதலில் நாம ஒவ்வொரு பாடல் வரிகளையும் பார்போம் என்ன...

Though I battled blind

(I couldn't see)

Love is a fate resigned

(That the other person didn't love me,nor could I make him love me..!!)

Memories mar my mind

(The good times I remembered..!!)

Love is a fate resigned

(I could't tell the other person didn't love me..!!)

Over futile odds

(He doesn't love me & never did love me..!!)

And laughed at by the Gods

(others knew & could see it,but I couldn't..)

And now the final frame

(Now it's over..)

Love is a losing game

(I have lost in love & am alone..!!)

அட என்ன அழகான வரிகள்...(அட சொன்னது சரியோ தெரியாது பிழையா இருந்தா திருத்திவிடுங்கோ என்ன)..சரி எனி இந்த பாடல் வரிகள் தொடர்பில் என்னுடைய கருத்து என்னவென்டா.. :)

என்னுடைய பார்வையில்...

1)This individual is in love with another & through this love,the individual is unable to see that the other person is not with her...

2)Some events are predetermined unalterably,that is,there is no way you can make or force another person love

you..!!

3)The individual is thinking of the good memories & times she enjoyed which,perhaps,clouded her better judgment..

4)As in (2) above..

5)As the other person didn't love the individual the odds were stacked against her & incapable of producing any result..

6)Perhaps others knew the situation,that the individuals was in love,but her affections were not reciprocated by the other person..

7)And now it is over..!!

8)Love is a losing game when you love some one but the other person doesn't love you..... :)

இது தான் என்னுடைய "மொண்டசூரி" அறிவின் படி இந்த பாடல் வரி தொடர்பான கருத்து நெடுக்ஸ் தாத்தா..ம்ம் கருத்தில் ஏதாச்சும் பிழை இருந்தால் சொல்லவும் சரியோ.. :)

சரி விசயதிற்கு வாரன் அதாவது நாம ஒருவாவை காதலித்து அவா நம்மள காதலிகாட்டி அந்த காதல் "தோற்கின்ற விளையாட்டு" பாருங்கோ..உதுக்காக விளையாடாம இருக்க ஏலுமோ விளையாடி பார்கனும் பாருங்கோ என்ன நான் சொல்லுறது சரியோ.. :lol:

ம்ம்..எதிலையும் வெற்றியும் இருக்கு தோல்வியும் இருக்கு அல்லோ அத போல தான் காதலும்..(பங்கு சந்தையில முதலீடு செய்கிறோம் இலாபமும் வரலாம் நட்டமும் வரலாம் பாருங்கோ)...எல்லாத்தையும் நாம பொறுத்து கொள்ளனும் அது தான் வியாபரத்திலையும் வெற்றி இன்றைய காதல் வியாபாரத்திலையும் வெற்றி.. :lol:

என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்..(எல்லாமே கேள்விஞானம் தான் பாருங்கோ)..அத்தோட என்னை மிகவும் கவர்ந்துவிட்டது இந்த பாடல் வரிகள் நன்றி தாத்தா.. :D

சரி கடசியா நான் எப்படி காதலிப்பன் என்டு சொல்லிட்டு போகட்டோ..(ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ என்ன)...

I love you soulfully and body fully

properly and improperly,evey way

that..

a

woman can be loved...

அட என்ன பார்க்கிறியள்..(நான் உதை எழுதல்ல பாருங்கோ)...உப்படி எல்லாம் நான் எழுதுவனா என்ன இதை எழுதினவர்.. :lol:

George Bernard shaw..!!

சரி உதுக்கு மேலையும் நான் அலட்டவிரும்பல்ல...(வாழ்க்கையே ஒரு தோற்கின்ற விளையாட்டு தான் பாருங்கோ)..ஆனா கடசி மட்டும் விளையாடனும்.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

நெடுக்கு....

காதல் ஒரு தோற்கின்ற விளையாட்டு என்பது எப்படி என்று காதலிச்சுத் தோத்துவிட்டு வந்து எழுதிறன்.

நெடுக்கு....

காதல் ஒரு தோற்கின்ற விளையாட்டு என்பது எப்படி என்று காதலிச்சுத் தோத்துவிட்டு வந்து எழுதிறன்.

ஆதி ஏன் உங்களுக்கு உந்த வேண்டாத வேலை. <_<:icon_idea::D

நெடுக்கு....

காதல் ஒரு தோற்கின்ற விளையாட்டு என்பது எப்படி என்று காதலிச்சுத் தோத்துவிட்டு வந்து எழுதிறன்.

ஆதி கிளம்பிடிச்சு <_<

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி வோல்வியைப்பற்றி கவவைப்படமால் விளையாட வேனும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதி ஏன் உங்களுக்கு உந்த வேண்டாத வேலை. :lol::lol::)

அவர் கலியாணம் கட்டிட்டு.. காதலில் தோற்றுக் காட்டுறன் என்பது.. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வெடுத்த பின்னர் சதம் அடித்துக் காட்டிறன் என்பது போல இருக்குது. இது ஆதியின் வழமையான வெறும் வாய் ஜாலம். :lol:

வெற்றி வோல்வியைப்பற்றி கவவைப்படமால் விளையாட வேனும் :lol:

அடிச்சா "சிக்ஸர்".. இல்லைன்னா "கிளீன் போல்ட்" என்று அதிரடியா இருக்கனும் என்றீங்க. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.