Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா?

Featured Replies

நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா?

செய்திகள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நடைமுறை நீக்கப்பட்டு விட்டதா?

http://www.yarl.com/forum3/index.php?showt...view=getnewpost

  • Replies 50
  • Views 7.6k
  • Created
  • Last Reply

ஓவியன் அண்ணா நீங்கள் தந்துள்ள இணைப்பை அழுத்தும்போது இப்படி கூறப்படுகின்றது.

Board Message

Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information.

The error returned was:

Sorry, the link that brought you to this page seems to be out of date or broken.

  • தொடங்கியவர்

அந்தச் செய்தி தற்போது அகற்றப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். ஆனால் அது குறித்த அறிவிப்பு எதனையும் காணவில்லை.

நிர்வாகத்தினரால் ஒவ்வொரு செய்தியாகப் பார்த்து அகற்றுவது சிரமமானதே. ஆனால் இப்படியான இணைப்புகளைச் சேர்ப்பவர்கள் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமல்லவா?

அல்லது உங்கள் நிபந்தனைகளை நீக்கி விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா?

செய்திகள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நடைமுறை நீக்கப்பட்டு விட்டதா?

http://www.yarl.com/forum3/index.php?showt...view=getnewpost

இதற்கு யாழில் பல பேர் விதிவிலக்காக உள்ளார்கள். :)

  • தொடங்கியவர்

அப்படியானால் அந்த நிபந்தனை நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு செய்திகளை முழுமையாக இணைக்கின்ற அல்லது யாழில் இணைக்காமல் இருப்பவர்கள் நிலை?????

நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா?

ஹீஹீ நல்லதொரு கேள்வி கேட்டுள்ளீர்கள் ஓவியன்.

இதற்கு யாழில் பல பேர் விதிவிலக்காக உள்ளார்கள். :lol:

யார் அந்தப் பலபேர் என்பதையும் சுட்டிக்காட்டினால் நல்லது.

யார் அந்தப் பலபேர் என்பதையும் சுட்டிக்காட்டினால் நல்லது.

வலைஞன் அண்ணா,

மன்னிகவும் அவரிடம் கேட்ட வினாவிற்கு நான் பதில் அளிப்பதிற்கு :) ..நீங்கள் அறிந்து செய்கிறீர்களோ அல்லது சில சமயம் தவறுதலாக விடபடுகிறதோ என்பது பற்றி நான் அறியேன்...ஆனால் நுணா அண்ணா தொடுத்த கேள்வி அவரின் மன ஆதங்கமா இருக்கு என்டு நான் கருதுகிறேன்.. :lol:

நீங்கள் கேட்டதன் பிரகாரம் இந்த உதாரணத்தை நான் காட்டவேண்டும்..(மற்றும்படி எனக்கு உதில ஒரு பிரச்சினையும் இல்ல)..யாரும் எப்படியும் செய்தி இணையுங்கோ.. :(

குறிப்பாக "மே" மாதம் 20 திகதி அவுஸ் நேரம் காலை 2.55 மணி அளவிள் அரைகுறையாக வந்த செய்தி ஒன்டு யாழ்பிரியாமாமி அவர்களாள் நீக்கபட்டது..(கருத்துகள மாற்றங்களிள் அறிவிக்கபட்டும் இருக்கிறது அங்க சென்று பார்க்கலாம் பாருங்கோ).. :(

இங்கே அழுத்தவும்..!!

அதற்கு பிறகு அவுஸ் நேரம் 3.11 அளவிள் இன்னொரு செய்தி இன்னொருவரால் பதியபட்டது..(அதுவும் அரைகுறையா தான் பதியபட்டு இருக்கிறது)..அதற்கு ஏதாவது விளக்கம் நீங்கள் தரலாம்..(அது பற்றி எனக்கு தெரியாது)..இன்னும் அந்த செய்தி யாழில காச்சி அளிக்கிறது.. :(

இங்கே அழுத்தவும்..!!

அட நான் உங்களிள பிழை என்டு சொல்லல்ல தெரியாம விடுபட்டிருக்கலாம்..(சில பேரை மட்டும் நீங்கள் பார்த்து பார்த்து கருத்துகளை நீக்கும் போது)..அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வதிற்காக மட்டுமே இந்த உதாரணத்தை உங்களுக்கு சமர்பிக்கிறேன்.. :lol:

தயவு செய்து இதற்கு ஒரு கொள்கை விளக்கம் தரவேண்டாம்..(பிழை என்டு உங்களாள் ஏற்று கொள்ளமுடியாவிட்டால் அதற்கு நான் வருந்துகிறேன்)..இதை விட பல உதாரணங்கள் இருக்கின்றன..அதை எல்லாம் சுட்டி காட்டி கொண்டு இருக்க நான் விரும்பவில்லை.. :lol:

உங்களையோ அல்லது நிர்வாகத்தையோ குறை சொல்லவில்லை ஆனால் ஒரு சிலரின் கருத்தை மட்டும் உன்னிப்பாக கவனித்து வெட்டு போது எல்லா விடயங்களிளும் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்..மற்றது சில பேர் யாழ் உறவோசை பகுதில் நிர்வாகம் பற்றிய கலந்துரையாடலை ஆரம்பித்தால் அந்த பதிவு அழகாக இருக்கிறது சிலர் ஆரம்பித்தால் காற்றாக மறைந்துவிடுகிறது..அருமை.. :(

நன்றி

வணக்கம்!!

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

வலைஞன் அண்ணா,

குறிப்பாக "மார்ச்" மாதம் 20 திகதி அவுஸ் நேரம் காலை 2.55

"மார்ச்" சா இல்ல "மே" யா கண்ணா..??! :lol::lol:

"மார்ச்" சா இல்ல "மே" யா கண்ணா..??! :lol::(

அட...தாத்தாவுற்கு வயசு போனாலும்..(கண் பார்வை அந்த மாதியாக்கும் :lol: )..இதையாச்சு அவர் கண்டுபிடிகட்டும் என்டு பார்த்தா நீங்க கண்டு பிடித்திட்டியள் பாருங்கோ..இப்ப மாற்றி விடுறன் என்ன.. :(

அது சரி இப்ப நீங்க சொன்ன "மே" ஆடு கத்துற "மே"..இல்ல தானே தாத்தா.. :)

அப்ப நான் வரட்டா!!

அது சரி இப்ப நீங்க சொன்ன "மே" ஆடு கத்துற "மே"..இல்ல தானே தாத்தா.. :lol:

நீங்கள் என்னதான் "மே" "மே" என்று ஆட்டுக்கத்தல் போட்டாலும் ஒன்றுமே ஆகப் போவதில்லை என்பதை அவர் சிம்பாலிக்காக சொல்லுறார். :lol::)

  • தொடங்கியவர்

நிர்வாகத்தினருக்கு ஒவ்வொரு செய்தியாகக் கவனித்தக் கொண்டிருப்பது கஎனம் என்பதை உணர்கிறேன். ஆனால் இப்படி செ;யதிகளை இணைப்பவர்களுக்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

காரணம் இங்கு செய்திகளை இணைத்த ஐசூர்யா என்னும் உறவு இந்த நடைமுறை இணைக்கப்பட்ட பின் ஒன்றிரண்டு செய்திகளை முழுமையாக இணைத்த பின்னர் பின்னர் ஒரு செய்தியை அரைகுறையாக இணைப்பார். பின்னர் மேலும் இரண்டு செய்திகளை முழுமையாக இணைப்பார். அதைத் தொடர்ந்து சில செய்திகள் அரைகுறையாக வரும். இது நிர்வாகத்தையும் அதன் நிபந்தனைகளையும் ஏளனம் செய்வது போல இருக்கிறது.

இது போன்றவர்களுக்கு எச்சரிக்கை வழங்கி தொடர்ந்தும் இதுபோலச் செயற்பட்டால் செய்திகளை இணைக்கும் வாய்ப்பைத் தடை செய்ய வேண்டும்.

Edited by oviyan

யார் அந்தப் பலபேர் என்பதையும் சுட்டிக்காட்டினால் நல்லது.

யாழில் தயவுதாட்சண்யம் இல்லாமல் எல்லாரும் ஒரே மாதிரி கண்ணியமாக நடாத்த படுகிறார்கள்....!!

விதிமுறையில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. சில செய்திகள் தவறவிடப்பட்டிருக்கலாம். அவற்றை சுட்டிக் காட்டினால் அவை நீக்கப்படும். குறையாக எழுதப்பட்டு இணைப்பு கொடுக்கப்படுகிற செய்திகளுக்கு பதிலெழுதப்பட்டிருந்தால், அவற்றை நீக்காமல் முழுச்செய்தியையும் நிர்வாகத்தினர் நேரம் செலவளித்து இணைக்கவேண்டியிருக்கும்.

மீண்டும் இங்கு குறிப்பிடுவது புதினம் செய்திச் சேவையை யாழ் இணையம் பயன்படுத்தி - தாயக செய்திகளை உடனுக்குடன் பெற்று - யாழ் இணைய வாசகர்களுக்கு வழங்குகிறது. எனவே அந்தச் செய்திகளை குறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுக்கப்படுகிறது. புதினம் செய்திச் சேவை தவிர்ந்த வேறு எந்த செய்திச் சேவையை யாழ் இணையம் (நிர்வாகம்) உடனுக்குடன் பயன்படுத்த விரும்பினாலும் அவர்களுடன் எட்டப்படும் உடன்பாட்டுக்கு அமைய குறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுக்கப்படும்.

இன்றைய நிலையில் ஏனைய தளங்களின் செய்திகளை கருத்துக்கள உறவுகள் இணைக்கிறார்கள். அந்தச் செய்திகளை இணைப்பதும் இணைக்காமல் விடுவதும் உறுப்பினர்களின் விருப்பம் + அந்த இணையத்தளங்களின் விருப்பம். ஆனால் அப்படி இணைக்கப்படுகிற செய்திகள் முழுமையாக இணைக்கப்பட்டு மூலமும் குறிப்பிடப்படவேண்டும். இது தான் விதிமுறை.

அப்படி குறையாக இணைத்து மிகுதிச் செய்தியை படிக்க இணைப்பு கொடுத்தால் - அது உங்கள் தளத்துக்கு அதிகமான பார்வையாளர்களை வரவைப்பதற்கான முயற்சியாகவும் - அதன்வழி உங்கள் தளத்தில் உள்ள விளம்பரச் சேவைகளினூடாக பணம் சம்பாதிக்கும் முயற்சியாகவும் கருதப்படும். இப்படி வியாபார நோக்கம்கொண்டு அல்லது விளம்பர நோக்கம் கொண்டு உங்கள் செய்திகளை அல்லது ஆக்கங்களை அரைகுறையாக இணைத்து இணைப்பு கொடுக்க விரும்பினால் - யாழ் இணைய நிர்வாகம் அதற்கு வழி செய்து தரலாம் என யோசிக்கிறது. இப்படியான விளம்பரப்பதிவுகளை (அரைகுறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்பு கொடுக்கப்படுகிற செய்திகள்) இணைப்பதற்கு மாதம் தோறும் ஒரு கட்டணத்தை (விளம்பரக் கட்டணம்) அறவிடலாம் என்று நினைக்கிறோம். அது ஒரு மாதத்தில் நீங்கள் மொத்தம் எத்தனை செய்திகளை இணைப்பீர்கள் என்பதன் அடிப்படையில் 1000 பவுண்ட்சிலிருந்து 3000 பவுண்ட்ஸ் வரை (மாதக் கட்டணம்) அமையலாம். விரும்பினால் தனிமடலில் மோகனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

- இந்த இடத்தில் - தமிழ்த் தேசியத்துக்கு எதிரான, தாயக விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுக்கும் அமைப்பையும் கொச்சைப்படுத்தும் அல்லது எதிர்ப்பிரச்சாரம் செய்யும் செய்திகளுக்கு எப்போதும் அனுமதியில்லை என்பதையும் - குறிப்பிட விரும்புகிறோம்.

- இதுவரைக்கும் எவரும் விளம்பரக்கட்டணம் செலுத்தவில்லை. எனவே, அரைகுறையாக செய்திகளை இணைத்து மிகுதிக்கு இணைப்புக் கொடுக்க எவருக்கும் அனுமதியில்லை.

இணைப்பதற்கு மாதம் தோறும் ஒரு கட்டணத்தை (விளம்பரக் கட்டணம்) அறவிடலாம் என்று நினைக்கிறோம். அது ஒரு மாதத்தில் நீங்கள் மொத்தம் எத்தனை செய்திகளை இணைப்பீர்கள் என்பதன் அடிப்படையில் 1000 பவுண்ட்சிலிருந்து 3000 பவுண்ட்ஸ் வரை (மாதக் கட்டணம்) அமையலாம். விரும்பினால் தனிமடலில் மோகனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

:lol:இக்கட்டணம் மிகக்குறைவாக உள்ளது. ஏன் இதை கிழமைக்கு 1000 பவுண்ட்சிலிருந்து 3000 பவுண்ட்ஸ் வரை என மாற்றினால் இன்னும் நன்றாக இருக்குமே?? :lol:

நீயா?? நானா??

ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது. அவசியமின்றி ஆங்கில சொல்லை தமிழ் உச்சரிப்பில் எழுதியதால்.

:(

வலைஞன் அண்ணா வலைஞன் அண்ணா இருக்கிறீங்களோ

ஓ அதில் அபப்டி நான் என்னதான் எழுதிட்டேன் என நீக்கினியள்?

சரி நான் ஆங்கிலப்பதம் உபயோகித்தேன் எனில்

இவை எல்லாம் என்னங்கோ ஒருக்கா சொல்ல முடியுமா?

டீன் ஏஜ் வயதில் அட்வைஸ் பண்ணுவது யாருக்கும் பிடிக்காது

நான் மணிவாசகரென்றால் அலர்ஜியில் உடனே நீங்கள் சிலிர்த்தெழுந்து விடுவீர்கள்

பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் உயிரின் தோற்றத்தையும் விளக்கும் மிகச் சிறந்தவோர் அறிவியல் வீடியோ கிளிப்.

கௌன்சில் ராக்ஸ்,

மோடகேஜ் , விஸா , கிறனேற், இப்படி இன்னும் பல சொற்பிரயோகங்கள் செய்யப்பட்டு கருத்துக்கள் எழுதி இருக்கின்றார்களே பல கருத்தாளர்கள். இது எல்லாம் கண்ணுக்கு தெரியல்லையா? :lol::lol::):(

வலைஞன் மாமா,

நல்லதொரு யோசனை தான் வரவேற்கிறேன்.. :( (எவ்வளவு தூரம் சாத்தியமாகும் என்டு தெரியல)..இருந்து பார்க்க தானே போறோம்..சரி அத பற்றி நேக்கு ஒரு பிரச்சினையுமில்ல அத விடுவோம் பாருங்கோ.. :lol:

அடுத்ததாக வலைஞன் மாமா மேலே நீங்கள் குறிப்பிட்டதை வாசித்தேன்.."பவுண்ட்ஸ்" எனும் சொற்பதம் தமிழா??..(நிசமா நேக்கு தெரியாது) :lol: ...அது தான் உங்ககிட்ட கேட்கிறன் நீங்க சொல்லி தருவியள் என்ட நம்பிக்கையில பாருங்கோ.. :(

அல்லது "பவுண்ட்ஸ்" எனும் சொற்பதம் உங்க பாசையில் சொல்ல வேண்டுமாகின் தமிழை சிதைக்கும் "கோமாளிதனமான" சொற்பதமா??... :)

ஏன் இதனை வினாவுகிறேன் என்டா கடசியில நீங்களே "கோமாளிதனமான" சொற்பதத்தை ஒரு வேளை பாவித்திருந்(தால்)..நெஞ்சு பொறுகுதில்லை..!!..ஏனேனின் நீங்கள் விரித்த "வலையில்"..நீங்களே சிக்கி கொண்டு தவிப்பது தான்... :lol:

அச்சோ ஏதாச்சும் பிழையா இருந்தா என்னோட கோபம் போட வேண்டாம் என்ன..(ஏன் நான் இதை சொல்லுறன் என்டா இன்னைக்கு நீங்க சில கருத்துகளை யாழில் பதிந்ததை அவதானித்தன்)..அப்படி கருத்துகளை எழுதும் போது எதைச்சையாக சில சொற்கள் வருவதுண்டு..(புரியும் என்டு நம்புகிறேன்)..

அவ்வாறு தான் சக கருத்தாளர்களிற்கும்..நீங்கள் இதற்கு விளக்கம் கொடுக்கலாம் அதாவது "பவுண்ட்ஸ்" எனு பதம் வந்து வேற ஏனைய சொற்பதங்கள் வேற என்டு..(தயவு செய்து அவ்வாறான விளக்கங்களை தந்து பிழைகளை மறைக்க வேண்டாம் பாருங்கோ).. :(

அத்துடன் நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள் 3000 பவுன்ட்சிலிருந்து என்று..ம்ம் இப்ப இதை அதாவது பவுன்சை ஆங்கிலத்தில் எழுதி பிறகு "லிருந்து" என்ற சொற்பதத்தை பாவித்திருந்தா எப்படி இருக்கும்..(அது தான் கோமாளிதனமான சொற்பிரயோகம்)..

அவ்வாறான சந்தர்ப்பங்களிள் நேரடியாக தமிழில் தான் எழுத வேண்டும்..(அப்படி எழுதும் போது கருத்தை தூக்கினா உண்மையான "கோமாளி")..யாரென்டு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்டு நினைக்கிறன்.. :(

உங்களை குறை கண்டுபிடிப்பதில்லை என் நோக்கம் இல்ல..நீங்கள் அமுல்படுத்திய சட்டதிட்டம்..(அது தான் தமிழ் சொற்களை பாவிக்கும்படி)..ஏற்றுகொள்ளளா

நீங்கள் அண்மைக் காலங்களில் (விதிமுறைக்குப் பின்) பயன்படுத்திய சில ஆங்கிலச் சொற்கள்:

வாவ் சூப்பர்ப்

ஆட்டோகிராப்

சேர்

பேபி

ஐஸ்

சூப்பர்ப் கதை

சேவ்டிக்கு தான்.

ரொம்ப நன்றிகள் அங்கிள்

வொறி பண்ணாதீங்க ஓகேயா.

தமிழ்சிறி அங்கிள்

விரைவில் விடையுடனும் அடுத்த போட்டியுடனும் வருவேன். ஓகேயா

என்னமோ டென்சனில்

டவுண்ட்லோட் பண்ன கூடியதாக / தனிமடலில் தரவிறக்க

சிட்டுவேசன் கவிதை

பிளீஸ்

இன்ரநெட் புரவுசிங் கிளிக் செய்தாலே

ரைப் செய்யாமல்

உங்கள் அவதார் சூப்பர்ப்

கொஞ்சம் ஓவராக்கும்

பவர் கட் ஆகினால்

பிளேன் வந்துடுமோ

- இவையும் இன்னும் நீக்கப்படவில்லை வெண்ணிலா. இன்று நீக்கப்பட்ட கருத்தில் இருந்த சொல் "சூப்பர்ப்". இதனை நீங்கள் பல இடங்களில் தொடர்ந்தும் பயன்படுத்துகிறீர்கள். அதேபோல் "அங்கிள்" என்ற சொல். சில இடங்களில் "மாமா" என்று பயன்படுத்துகிற நீங்கள், சில இடங்களில் "அங்கிள்" என்று பயன்படுத்துவது அவசியமில்லாததே. ஒரு கருத்தில் "தரவிறக்க" என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறீர்கள் - அதே கருத்தில் முதல் வசனத்தில் "டவுண்லோட்" என்று பயன்படுத்தியிருக்கிறீர்கள். இவையெல்லாம் தவிர்த்துக் கொள்ளக்கூடியதே. சில சொற்கள் கவனிக்கப்படாமல் விடப்படுகின்றன. சில இடங்களில் இன்னும் நெகிழ்வுப் போக்கை கருத்துக்கள நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. ஆனால் இந்த நெகிழ்வுப்போக்கு எல்லா நேரத்திலும் இருக்கும் என்றில்லை. எனவே, நீங்கள் உங்கள் கருத்துக்களில் தெரிந்த தமிழ்ச் சொற்களை புறக்கணிக்காமல் பயன்படுத்தினால் - அவர் எழுதுகிறார் இவர் எழுதுகிறார் - என்னுடையது மட்டும் நீக்கப்படுகிறது என்று குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லையல்லவா.

நீங்கள் என்னதான் "மே" "மே" என்று ஆட்டுக்கத்தல் போட்டாலும் ஒன்றுமே ஆகப் போவதில்லை என்பதை அவர் சிம்பாலிக்காக சொல்லுறார். :lol::(

ஓ..அப்படியோ வசபண்ணா.. :lol: !!..ஆனா இப்ப என்ன சொல்லுறன் என்டா.."வவ் வவ்" என்று நாம குரைக்காம "மே மே" என்டு நன்னா மேயனும் பாருங்கோ..வாறியளோ என்னோட சேர்ந்து மேய..."மே".."மே".. :)

அப்ப நான் வரட்டா!!

அப்படி குறையாக இணைத்து மிகுதிச் செய்தியை படிக்க இணைப்பு கொடுத்தால் - அது உங்கள் தளத்துக்கு அதிகமான பார்வையாளர்களை வரவைப்பதற்கான முயற்சியாகவும் - அதன்வழி உங்கள் தளத்தில் உள்ள விளம்பரச் சேவைகளினூடாக பணம் சம்பாதிக்கும் முயற்சியாகவும் கருதப்படும். இப்படி வியாபார நோக்கம்கொண்டு அல்லது விளம்பர நோக்கம் கொண்டு உங்கள் செய்திகளை அல்லது ஆக்கங்களை அரைகுறையாக இணைத்து இணைப்பு கொடுக்க விரும்பினால் - யாழ் இணைய நிர்வாகம் அதற்கு வழி செய்து தரலாம் என யோசிக்கிறது. இப்படியான விளம்பரப்பதிவுகளை (அரைகுறையாக இணைத்து மிகுதிக்கு இணைப்பு கொடுக்கப்படுகிற செய்திகள்) இணைப்பதற்கு மாதம் தோறும் ஒரு கட்டணத்தை (விளம்பரக் கட்டணம்) அறவிடலாம் என்று நினைக்கிறோம். அது ஒரு மாதத்தில் நீங்கள் மொத்தம் எத்தனை செய்திகளை இணைப்பீர்கள் என்பதன் அடிப்படையில் 1000 பவுண்ட்சிலிருந்து 3000 பவுண்ட்ஸ் வரை (மாதக் கட்டணம்) அமையலாம். விரும்பினால் தனிமடலில் மோகனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆதோட யாழ்களத்தை வந்து பாக்க நுளைவு கட்டணமும், ஆக்கங்களை இணைத்து வெளியிடுவதுக்கும் கட்டணம் வசூலித்தால் மிக நண்றாக இருக்கும். (அதுக்கும் ஆளுக்கு £ 1000 வாங்கலாம்)

தேசியத்தின் பெயரை யாரும் பாவித்து பெயர் எடுத்து விடக்கூடாது எனும் நல்ல மனது புரிகிறது. தமிழன் ஊயர்ந்துவிட்டால் தலையிடிதான் . ஆகவே கட்டணத்தை மாதம் ( £1000- £ 3000 வரை) மிகவும் உயரமாக வரை வசூலிப்பது நல்லதுதான். அப்பதான் யாரும் யாழின் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டார்கள்.

மாதம் 1000- 3000 பிரித்தானிய பவுன்ஸ் எண்டால் வருசம் 12000 தொடக்கம் 36000 பவுண்ஸா ?

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்தப் பலபேர் என்பதையும் சுட்டிக்காட்டினால் நல்லது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=39570&hl=

ஏன் பா தேவை இல்லாம யாழ்களத்தை சீண்டி கொண்டு?

எங்களை பொறுத்த மட்டில் நல்ல செய்திகளைம் யாருமே யாழைவிட வெகு விரவில் கொடுத்தது இல்லை

எனக்கு தெரிச்சதை யும் அவரவர்க்கு தெரிச்சததயும் யாழ்முலமே எல்லாருக்கும் தெரிய படுத்தினம்...

அது போக யாழை வைத்து பணம் சமாதிக்க நினைக்கும் போது யாழ்மட்டும் ஏன் அவர்களிடம் பனம் வாங்க கூடாது???????????????????????????

யாராவது இதுவரை யாழ்களத்தை தொடர்ந்து நடத்த காசு கொடுத்தார்களா?

நான் கொடுக்கவில்லை கொடுக்க போறதும் இல்லை மோகன் அண்ணா தன்னால் முடியும் வரை தமிழ் தேசியத்துக்காக் யாழை இழுத்து செல்லட்டும் என்னகும் நேரமும் ஆர்வமும் இருக்கும் வரை எனது கருத்தை யாழ்களம் மேலே வைப்பேன் அதையும் யாழ்களம் விரும்பினால் இழுத்து செல்லட்டும் , முடியாத போது என்னை இறக்கி விடட்டும்.

ஏதோ கோர்ட்டில் நிக்க வைத்து கேள்வி கேட்ப்பது போல கேட்டு கொண்டு?????????

யாழ்களம் என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப் பட்டது என்று மோகன் அண்ணா நினைக்கிறாறோ அதை அவர் செய்யட்டும். என்ன நோக்கத்துக்காக நாங்கள் யாழிலை இனைத்தோமோ அது நடக்கும் வரை நாங்களும் இனைத்து இருப்போம்..........

சும்மா சும்மா பக்கம் பக்கமாக எழுதி தலையிடியை கொண்டு வாறது

2 கருத்தாடளர்களுக்குள்ள பிரச்சனையா அதுக்கும் யாழ்களம் மீது தான் பழி

தங்கட கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையா அதுக்கும் யாழ்ததன் பலிகாடாகும்

உண்மையாக எனது கருத்து எத்தனை முறை நீக்க பட்டது என்று தெரியாது அப்படி நீக்கிய போது எல்லாம் அட கோவம் வருவது இல்லை அட எனது கருத்தையும் மதித்து நீக்கிவிட்டார்களே என்றும் அல்லது ஏதோ யாழ்களத்துக்கு பிரச்சனையை கொடுக்கிற பதிவை போட்டு விட்டேன் என்று நினைப்பேன்.......

யாழுக்கும் நங்கள் தேவை(?) அதே போல் எனக்கு யாழ் தேவை..............

புதினம்

பதிவு

தமிழ்நெற்

தினக்குரல்

வீரகேசரி

சங்கதி

தமிழ்நாதம்

தட்ஸ்தமிழ்

லங்காசிறி

சுவிஸ்முரசம்

தமிழ்கார்டியன்

சூற்யா

இவை அணைத்து செய்திகளையும் யாழ்தான் சுமையாக தாங்கி நிக்கிறது.......

சும்ம சும்மா யாழை பழி பொடாமல் பிரச்சனையா கதையுங்கள் மதன் கூட பேசுங்கள் மதன் ஒன்றும் சொல்லவில்லையா வலைஞன் கூட பேசுங்கள் வலைஞன் ஒன்றும் திருப்தியாக பதில் தரவில்லையா மோகன் அண்ணா கூட பேசுங்கள் அதுக்கும் உங்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லையா? அதுக்கு பிறகு எழுதுங்கள்

யாழின் எதிரிகள் செய்யும் வேலையை நாமே செய்வது போல் இருக்கிறது அல்லவா?

- - -

இந்த களம் மூலம் பெற்ற நன்மைகளை நினைப்பதை விட யாழ்களத்தத மூட நினைப்பவர்களுக்கு வெறும் வாயில்

அவல் கிடைத்த மாதிரி நாங்களே செய்யலாமா?

Edited by வலைஞன்
நீக்கப்பட்டுள்ளது

நெடுக்காலபோவான் ஆங்கிலத்தில இருந்தத சுருக்கமா போட்டு இருக்கிறார் நுணாவிலான்.

ஆதோட யாழ்களத்தை வந்து பாக்க நுளைவு கட்டணமும், ஆக்கங்களை இணைத்து வெளியிடுவதுக்கும் கட்டணம் வசூலித்தால் மிக நண்றாக இருக்கும். (அதுக்கும் ஆளுக்கு £ 1000 வாங்கலாம்)

:lol: நல்ல ஒரு யோசனை. இதுமாதிரி எழுதுற ஆக்களுக்கும் உதுள கொஞ்சத்த வெட்டினால் புண்ணியமா போகும் சாமிகளா.

அது போக யாழை வைத்து பணம் சமாதிக்க நினைக்கும் போது யாழ்மட்டும் ஏன் அவர்களிடம் பனம் வாங்க கூடாது???????????????????????????

யாருங்க அது? :lol:

Edited by முரளி

வலைஞன் மாமா,

அடுத்ததாக வலைஞன் மாமா மேலே நீங்கள் குறிப்பிட்டதை வாசித்தேன்.."பவுண்ட்ஸ்"எனும் சொற்பதம் தமிழா??..(நிசமா நேக்கு தெரியாது) :lol: ...அது தான் உங்ககிட்ட கேட்கிறன் நீங்க சொல்லி தருவியள் என்ட நம்பிக்கையில பாருங்கோ.. :lol:

அல்லது "பவுண்ட்ஸ்" எனும் சொற்பதம் உங்க பாசையில் சொல்ல வேண்டுமாகின் தமிழை சிதைக்கும் "கோமாளிதனமான" சொற்பதமா??... :(

ஹிஹி.. நல்ல கேள்வி. இப்பிடி $ இந்த அடையாளம் போட்டு இருக்கலாம். டொலரை தமிழில எப்பிடி சொல்லிறது? :lol:

புதினம்

பதிவு

தமிழ்நெற்

தினக்குரல்

வீரகேசரி

சங்கதி

தமிழ்நாதம்

தட்ஸ்தமிழ்

லங்காசிறி

சுவிஸ்முரசம்

தமிழ்கார்டியன்

சூற்யா

இவை அணைத்து செய்திகளையும் யாழ்தான் சுமையாக தாங்கி நிக்கிறது.......

உண்மையாவா? :(

சுமைதாங்கியே நின்று அழுகின்றது. பாவம்

சுமைதாங்க முடியாமல் விழுகின்றது...! :)

Edited by முரளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.