Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா?

[ செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 12:51.44 PM GMT +05:30 ]

இலங்கையில் இப்படி அதிசய இடமா? என்று கேட்குமளவிற்கு கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. ஆம் பொத்துவில் நகரின் கடலருகே இவ்வதிசய இடம் உள்ளது. இதனை மண்மேடு என மக்கள் அழைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இதனை மண்மேடு என்று சொல்வதை விட மண்மலை என்றே கூறமுடியும். இரண்டு தென்னை மர உயரம் அளவிற்கு மணல் குவிந்து காணப்படுகிறது.

ஆனால் யாரும் குவிக்கவில்லை. அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது.

இம் மண்மலையால்தான் சுனாமி அனர்த்தத்தின்போது பொத்துவில் நகரம் பாதுகாக்கப்பட்டது என்பதனையும் இவ்வண் குறிப்பிடலாம். கடலருகே மண்மேடு அதுவும் மலை போலக் காணப்பட்டால் உல்லாசப்பயணிகளுக்கு கேட்கவும் வேண்டுமா? இதமான காற்று. கடற்காட்சி ரம்மியமான சூழல் என்றால் மக்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?

தினமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு விஜயம் செய்து மண்மலையில் ஏறிச் சறுக்கி விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

அதன் காட்சிகளையே இங்கு காண்கிறீர்கள்.

03001ym0.jpg

03002di6.jpg

03003it9.jpg

03004tk0.jpg

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.... அழகான இடம். சீனி போல் மண் வெண்மையாக உள்ளது. மணல் கொள்ளையர் வந்து மண்ணை அள்ளிக் கொண்டு போகாமல் பாதுகாக்க வேண்டும்.

ஏன் நூணாவிலான் மணற்காடு (வடமாராட்சி) போகவில்லையா?

அங்கே மணற்குன்று நகரும் அதிசயத்தையும் பார்க்கலாம்!

Edited by சாணக்கியன்

வல்லிபுரம், கற்கோவளம் கடற்கரை போல இருக்கே...???

பருத்துத்துறை முனை பகுதியை தாண்டிய பின் மனற்காடுவரை இப்படியான அழகான மன் மலைகள் இருக்கும் அதையும் விட மனற்காட்டில் மனலில் சவுக்கு காடுகளின் அழகு தனிதான் வடமராட்சி மக்களும் சரி வேறு பகுதி மக்களும் சரி பொழுது போக்காக எப்பவாது ஊரவர்கள் சேர்ந்து போவார்கள் சில நேரங்களில் பாடசாலை அல்லது தனியார் கல்வி நிறுவனங்களும் கூட்டி செல்வார்கள்..

அது போக அங்கு ஒரு மரம் இருக்கும் அதைல் அண்ணாசி பழம் போல கலர் கலராக தொங்கும் யாருக்காவது நினைவு இருக்கிறதா?

வலிபுர கோவி தீர்த்த திருவிழாக்கு போனால் நாங்கள் முதலாவது மனல் திட்டியில் ஏற களைத்து விடுவோம் அதே போல இறங்க்கும் போது தள்ளி கொண்டு வருவது போல் இருக்கும்,,,,

ஆனாலும் இந்த மனல் திட்டிகளும் அழகுதான்...

அது போக அங்கு ஒரு மரம் இருக்கும் அதைல் அண்ணாசி பழம் போல கலர் கலராக தொங்கும் யாருக்காவது நினைவு இருக்கிறதா?

அது தாளை மரங்கள்... அன்னாசி போல பூத்து இருப்பது தாளம்பூ...?? அடுத்த முறை அதுக்கை போக்கும் போது கவனமாக போங்கள் தாளம்பூ மணம் எண்றால் பு்டையன் பாம்புகளுக்கு விருப்பம்... அனேகமாக அதுக்குள் இருக்கும்....!!

//அங்கே மணற்குன்று நகரும் அதிசயத்தையும் பார்க்கலாம்!//

விபரிக்கவும் ..நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாகர்கோவிலில் நாவல்மரங்களுடன் கூடிய மணல் திட்டிகளும் மிக அழகு.

புத்தளம் - கற்பிட்டிக்கு அண்மையிலுள்ள கண்டல்குழி என்ற இடத்திலும் இப்படி அழகான வெள்ளை மணல் திட்டு கடற்கரை ஓரமாக உள்ளது.

பூநகரி பள்ளிக்குடா முதல் கல்முனையை( பெரும் கடல் கரை மணல் மேடுகளும்) அண்டிய பகுதிகளிலும் இப்படி அழகான பிரதேசம்.... மணித்தலை ( அந்தோனியார் கோயிலோடு) எனும் இடத்தில் கடலில் ன் கரையோடு 20 அடி உயரத்துக்கு ஒரு மண் பிட்டி இருக்கிறது... அதிலை இருந்து நீரில் பாய்ந்து பார்த்து இருக்கிறேன்...!! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்...!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாவகச்சேரி புகைரதநிலையத்திற்கு அருகிலும் பெரிய மண்மேடுகள் உள்ளன. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாவகச்சேரி புகைரதநிலையத்திற்கு அருகிலும் பெரிய மண்மேடுகள் உள்ளன. :D

கு.மா அண்ணா அது மண்மேடல்ல. கிணறு கிண்டும் போது எடுக்கப்பட்ட மண். :rolleyes::lol:

சாவகச்சேரி புகைரதநிலையத்திற்கு அருகிலும் பெரிய மண்மேடுகள் உள்ளன. :rolleyes:

கண்ணாடிபிட்டி சுடலைக்கையும் அழகான வெள்ளை மண் இருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது போறபோக்கை பாத்தால் உங்கை கனபேர் கண்ணாடிபுட்டி சுடலையிக்கை மினைக்கெட்டுருக்கிறியள் போலை கிடக்கு அதுசரி பக்கத்திலை இருக்கிற தவறணைக்கும் ஆரும் பின்பக்கத்தாலை போனனியளோ :rolleyes:

தம்பி நுணாவில்!அது கிணத்து மேடு இல்லை அது துரவுப்புட்டி ஆருக்கு கதையளக்கிறியள் தம்பி mad02171.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணாடிபிட்டி சுடலைக்கையும் அழகான வெள்ளை மண் இருக்கு...

கண்ணாடிபுட்டி சுடலையில் வெள்ளைமண் இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவிக்க விரும்புகின்றேன் :rolleyes: .அங்கே தண்ணீருடன் கூடிய தரவை நிலமே உள்ளது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே அவுஸ்திரிலியாவில் இப்படியான இடங்களில் (உ+ம் நெல்சன் பேய்) மணல் சறுக்கி விளையாடுவதற்கு சுற்றுலா நடாத்துகிறார்கள். வரப் போகும் தமிழீழச் சுற்றுலாவில் வெள்ளைக்காரர்கள் இங்கு வந்து மணலில் சறுக்கி விளையாடினாலும் விளையாடுவார்கள்.

இணைப்புக்கு நன்றிகள் நுனாவிலான்.

//அங்கே மணற்குன்று நகரும் அதிசயத்தையும் பார்க்கலாம்!//

விபரிக்கவும் ..நன்றி

1995 இல் எனது நண்பர்களுடன் முறை அங்கு சென்ற போது மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. மதியவேளையில் பாலைவனம் போல் இருந்த அந்தப்பகுதியில் சவுக்கு மரங்கள் அடர்ந்த பகுதியில் எமது துவிச்சக்கர வண்டிகளை நிறுத்திவிட்டு உயரமான மணற்திட்டு பகுதிகளை நோக்கி நடந்தோம். ஒரு மணற்திட்டின் மீது ஒரு சிலுவை தெரிந்தது. சமாதி போலத் தெரிந்த அதனை திரும்பி வருவதற்கு அடையாளமாக உதவும் என நினைத்துக் கொண்டோம். பின்னர் கடலில் நீண்ட நேரம் குளித்த விளையாடிய பின் மாலையில் திரும்பி வரும்போது சமாதி இருந்த இடத்தில் ஒரு 25 அடி உயரமான பாழடைந்த கிறீஸ்தவ தேவாலயம் ஒன்று முளைத்திருந்தது. பின்னர் தான் புரிந்தது ஆரம்பத்தில் அது மணலினால் மூடப்பட்டிருந்தது என்பது.

அங்கே சீராகவும் வேகமாகவும் வீசும் காற்றில் நில மட்டத்தில் இருந்து அரைஅடி உயரத்திற்கு மணல் காற்றில் பறந்து கொண்டிருந்தது. இதனால் மணற்திட்டிகள் காற்றின் திசைக்கு ஏற்ப நகர்ந்து கொண்டிருந்தது.

நான் குறிப்பிடுவது கீழ்உள்ள இணைப்பில் உள்ள பகுதியாக இருக்கக்கூடும் ஆனால் உறுதியாக தெரியவில்லை.

http://maps.google.com/maps/mm?f=d&hl=...150375&z=13

எனக்கு என்னமோ நீங்க சொன்ன ஆண்டுகள் இடிக்குது........

95 ஆண்டு என்ன மாதங்களில் போனிர்கள்?

ஆனா நீங்கள் சொன்ன விடய்ங்கள் சரி சாணக்கியன்

மனக்காடு நாவற்காடு என்று நங்கள் சொல்லுவோம்

கப்பல் திருவிழாவேற நடக்கும்

ஆனால் 95 என்ன மாசம்?

Edited by வினித்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.