Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

Featured Replies

சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

[ சனிக்கிழமை, 07 யூன் 2008, 06:09.08 AM GMT +05:30 ]

சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதக் குழுக்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளதாக பி.பி.சி. உலக சேவையின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிவில் மக்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

படுகொலைச் சம்பவங்கள் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சிவிலியன்கள் மீதான தாக்குதல்களுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோராத போதிலும் இவை விடுதலைப் புலிகளின் தாக்குதல் பாணியில் அமைந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிவிலியன்கள் மீதான தாக்குதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

மேலும் படைத்தரப்பினரும் சர்வதேச மனித உரிமை நியமனங்களைப் பின்பற்றி அதற்கு அமைவாக செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அர்த்தமற்ற ரீதியில் சிவிலியன்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் மிலோச் பிரறவுண் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இணைந்து சிவில் மக்களின் விலை மதிப்பற்ற உயிர்களை பாதுகாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்வின்.

http://www.tamilwin.com/view.php?2a36QVl4b...3g2hF0cc3tj0Cde

கடைசியில மன்னிப்புச்சபையே கண்டிக்கிற அளவுக்கு போயிட்டு!

இது ஒன்றுதான் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைக்காக உலக அரங்கில குரல்கொடுத்தது!

இனி தமிழீழம் விரைந்து கிடைக்கும்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் படைத்தரப்பினரும் சர்வதேச மனித உரிமை நியமனங்களைப் பின்பற்றி அதற்கு அமைவாக செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சாணக்கியன் உங்கள் தலைப்பு தவறானது. சர்வதேச மன்னிப்புச் சபை.. அரசாங்கம், விடுதலைப்புலிகள், மற்றும் ஆயுதக் குழுக்கள் அனைத்திடமுமே இக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

தாக்குதல் பாணிகளின் ஊகத்தில் விடுதலைப்புலிகள் மீதும் அது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் மட்டும் கண்டிக்கப்படவில்லை. எனவே இத்தலைப்பு விடுதலைப்புலிகளை மட்டும் குற்றம்சாட்டும் விதமாக இருப்பது சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையை விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாகக் காட்டும் அரச ஊடகங்களின் செயலுக்கு ஒப்பானதாக உள்ளது. அதுமட்டுமன்றி அரசின் மனித உரிமை மீறல்களை மறைக்க செய்யப்படும் சதியாகவே கருத வேண்டியுள்ளது.

சாணக்கியன் தெரிந்து இதைச் செய்கின்றார் என்றே தோன்றுகிறது. இவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து உண்மையான மனிதாபிமானமுள்ளவராக இங்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றேல் இவ்வாறான சிறீலங்கா பேரினவாத அரசு சார் போக்கிற்காக இவர் சரியான வகையில் இனங்காணப்படுவது அவசியம். இவரின் மனித உரிமைகள் கூக்குரல் சங்கரியின் கூக்குரலை ஒத்ததாகவே என் பார்வையில் தெரிகிறது. :lol:

Edited by nedukkalapoovan

Amnesty International அறிக்கையை இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்க வில்லை. அதன் மூலம் கிடைக்குமா.

  • கருத்துக்கள உறவுகள்

மூலம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஆரம்பித்தவரை அணுகவும்.

இல்லாவிடில் நூறு பரம்பரையாக புகழ் பெற்ற வைத்தியர் பம்மாத்தும் உதவி செய்வார்.

  • தொடங்கியவர்

இது நாள் வரையில் தமிழ்வின் செய்திகளை கேள்வி கேட்காமல் கொண்டாடியவர்கள், இன்று....

சாணக்கியன் தெரிந்து இதைச் செய்கின்றார் என்றே தோன்றுகிறது. இவர் இந்த நிலைப்பாட்டில் இருந்து உண்மையான மனிதாபிமானமுள்ளவராக இங்கு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றேல் இவ்வாறான சிறீலங்கா பேரினவாத அரசு சார் போக்கிற்காக இவர் சரியான வகையில் இனங்காணப்படுவது அவசியம். இவரின் மனித உரிமைகள் கூக்குரல் சங்கரியின் கூக்குரலை ஒத்ததாகவே என் பார்வையில் தெரிகிறது.

இது பதட்டமடையாமல் சிந்திக்க வேண்டிய நேரம்!

மூலம் இணைக்கப்பட்டுள்ளது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka: Amnesty International calls for an immediate end to attacks on civilians

At least 23 people have been killed and many others injured in two bomb attacks in Sri Lanka.

According to press reports, one bomb exploded on a busy commuter bus at Katubedda, near Colombo, on 6 June, killing 21 civilians, injuring at least 60 others. The second attack targeted a bus in the central Kandy district. Eyewitnesses at the scenes of carnage spoke of the growing fear of travelling just two days after another bomb in Colombo. The recent spate of attacks marks a pattern of deliberate and indiscriminate attacks in the south, as conflict intensifies in the north.

The authorities blamed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the attacks. While no group has publicly admitted responsibility for the attacks, they bear the hallmarks of LTTE attacks.

Amnesty International has repeatedly condemned abuses by the LTTE, including killings of civilians, hostage-taking, torture and other abuses, and has called for an end to such abuses and for those responsible to be brought to justice in conformity with international law.

As the conflict intensifies in the north, Amnesty International is calling on the Sri Lankan government to ensure that its security forces comply with Sri Lanka's obligations under international human rights and humanitarian law, and in particular to ensure that the civilian population are protected at all times.

Amnesty International is also calling on the LTTE and other armed groups to comply with the rules of international law and to respect civilian life.

Amnesty International calls for an immediate end to attacks on civilians.

http://www.amnestyusa.org/

சர்வதேச மன்னிப்பு சபையின் இணையம் http://www.amnesty.org/ இருக்க எதுக்காக USA தளம் அறிக்கை விட்டு இருக்கிறது.? ஏதாவது அரசியல் காரணத்துக்காகவா.?

http://www.amnesty.org.uk/index.asp இங்கிலாந்து தளம் இது. இதிலும் ஒண்றும் இல்லை.

Edited by பொய்கை

  • தொடங்கியவர்

நன்றி சங்கர்லால்....

The authorities blamed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) for the attacks. While no group has publicly admitted responsibility for the attacks, they bear the hallmarks of LTTE attacks.

Amnesty International has repeatedly condemned abuses by the LTTE, including killings of civilians, hostage-taking, torture and other abuses, and has called for an end to such abuses and for those responsible to be brought to justice in conformity with international law.

இன்று அனைவரும் எதிர்பார்ப்பது பட்டவர்த்தனமாக பொதுமக்கள் தாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என்பதே!

இலகுவான, உணர்சிகரமான இந்தச் செயலால் பின்னர் சர்வதேச ரீதியில் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் என்று நிருபிக்க மிகவும் சிரமப்பட வேண்டிவரும்!

அப்ப குண்டை யார் வேண்டுமானாலும் எங்கை வேணும் எண்டாலும் வச்சு போட்டு புலிகள் தான் வைத்தவை எண்டு சொன்னா எல்லாரும் நம்பி புலிகளை கண்டிப்பினம் எண்டுறீயள். இதை புலிகள் வேற நிப்பாட்ட வேணும்.

நான் நினைக்கிறன் அனேகமாய் வன்னீக்கை வெடிக்கிறதும் புலிகள் வைக்கிறதுதான்.

இதில் மன்னிப்புச்ச்பை விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படவில்லை , மாறக ஒரு இன விடுதலைக்கா போராடும் அமைப்பு , ஓர் இராணுவம் எப்படி யுத்த விதிகளை பேணவேணுமோ அதையே கூறியுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் AI விடுதலைப்புலிகள் ஏறைக்குறைய இப்போ 20 ஆண்டுகளுக்கும் மேலாகத்தான் இப்படிக் கேட்டு வருகிறது. இதைத்தான் சிறீலங்கா அரசிடமும் கேட்கிறது. ஏன் அமெரிக்காவையும் தான் கேட்கிறது எவருமே அதற்குச் செவி சாய்ப்பதில்லை.

சாணக்கியன் இதை இப்ப தூக்கிப் பிடிக்கிறது ஏனென்றுதான் புரியவில்லை. அதுமட்டுமன்றி சிறீலங்கா அரசு பற்றிய phrase ஐ அவர் முக்கியப்படுத்தவும் முயலவில்லை என்பது பதட்டத்துக்குரிய விடயமல்ல.. சந்தேகத்துக்குரிய விடயம்.

As the conflict intensifies in the north, Amnesty International is calling on the Sri Lankan government to ensure that its security forces comply with Sri Lanka's obligations under international human rights and humanitarian law, and in particular to ensure that the civilian population are protected at all times. :lol:

இதுபற்றி தமது எதிர்ப்பயை வன்னித்தலமை காட்டமாக வெளியிடவேண்டும்...

அதனைத்தொடர்ந்து நாமும் அவர்களுக்கு மதனிமடல் தீட்டவேண்டியதுதான்... விசாரணை ஏதுமில்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றம் சுமத்துவதும் மனித உரிமைமீறல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் உங்கள் மனிதாபிமானத்தைப் பாராட்டுகிறேன். தெற்கில் புலிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற உங்கள் கருத்தையே இப்போதைக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தெற்கில் புலிகள் அப்பாவிகளைக் கொல்கிறார்கள் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையை( அறிக்கை பொதுவாக எல்லாத்தரப்பையும் சாடியிருந்தாலும் கூட) உதாரணம் காட்டி "இனி ஈழம் கிடைச்ச மாதிரித்தான்" என்று எழுதியுள்ளீர்கள். சரி, அதே சர்வதேச மன்னிப்புச்சபை வன்னியில் நாள்தோறும் கிளேமோரில் கொல்லப்படும் அப்பாவிகளைப் பற்றி என்ன சொல்கிறது என்று கூற முடியுமா? அல்லது அவ்வாறு கொல்லப்படும் அப்பாவிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உதய நாணயக்கார சொல்வதுபோல அவர்கள் அனைவரும் புலிகள் என்ற கருத்தைத்தான் நீங்களும் கொண்டிருக்கிறீர்களா ?

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவத்தின் ஆள ஊடுருவும் அணி அப்பாவிகள் மேல் நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகத்தான் தெற்கில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்று சர்வதேச ஊடகங்களே சொல்லும்போது, நாங்கள் இன்னும் புலிகள் மனித உரிமைகளை மீறி விட்டார்கள், இனி ஈழம் எடுப்பது கடிணம் என்று நினைத்து வருகிறோம்.

நாங்கள் எல்லோரும் வன்னியில் நாள்தோறும் ராணுவ அட்டூழியத்தால் கொல்லப்படும் எமது தாய் தங்கையர், அண்ணா தம்பிமார், அம்மா அப்பாக்கள் போன்றவர்களின் இழப்புக் கணக்குக் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதி ஞாபகத்தில் வைத்திருப்பது நல்லது. தெற்கில் சிங்களவன் கொல்லப்படும்போது வரும் இரக்கமும், கவலையும் எமது மக்கள கொல்லப்படும்போதும் வருவது அவசியம். மனித உரிமைகளைக் காரணம் காட்டி தெற்கில் சிங்களவன் சாவதை கண்டிக்கும் எவரும் வன்னியில் நடக்கும் கொலைகளுக்கு உடந்தையாகி விடுகிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's war turns on civilians

By Frances Harrison

BBC News

The use of two bus attacks in one day is clearly designed to spread fear in Sri Lanka which has seen a series of increasingly frequent attacks targeting civilians on public transport in recent weeks.

Suburbs of both the capital, Colombo, and the central town of Kandy have been targeted - spreading the geographical net wide on the same day.

Powerful fragmentation mines are increasingly being used to target crowded buses and trains in the south of Sri Lanka.

The attacks tend to be in suburbs and primarily kill and injure civilians where once the rebels used mine explosions to attack army buses carrying soldiers or naval personnel in the east of the island.

Suicide bombers

During the 25 years of Sri Lanka's civil war, the Tamil Tiger rebels have frequently changed tactics as they have built up their fighting force and equipped it with multi-barrelled rocket launchers, mortars and artillery.

But the Tigers are best known for their use of suicide bombers - often multiple suicide bombers, male and female.

And they have been blamed for high-profile bombs blasts at major infrastructure sites like the international airport, the port, the central bank or five-star hotels - attacks which psychologically dented financial confidence in Sri Lanka and often damaged the country's tourism industry.

There is nothing to suggest the rebels could not strike at the heart of Colombo if they wanted but it seems they have deliberately decided to cause panic in the public transport system and disrupt civilian life.

Those who suffer are commuters - ordinary people who fear the journey to work and worry about how to take their children safely to school.

The mere rumour of a bomb which may turn out to be caused by the sound of something harmless will send anxious parents rushing to collect their children from school.

Civilians targeted

So why may the Tigers have changed tack when their senior military leaders previously questioned why the Palestinian militant groups used suicide bombers to kill Israeli civilians at bus stops instead of hitting at big economic targets?

Many believe the attacks in the south are conducted by the Tigers in revenge for what they say is a sharp increase in claymore mine attacks on civilians in rebel-controlled territory.

The government does not give journalists access to rebel territory so attacks and their casualty figures there are impossible to verify.

But the Tigers accuse the government of using guerrilla-style tactics against them - employing what are called "deep penetration units", or Tamil-speaking paramilitaries, to infiltrate rebel areas and kill civilians. The government denies this.

Although there are military battles on the frontline between rebel and government territory in the north, it appears the war has descended into small-scale violence targeting civilians on both sides.

Living on the edge

These are attacks which serve little strategic military or political purpose except increasing the general sense of insecurity.

Neither side can hope to win the war like this nor can they hope to change things politically by making civilians suffer more than they already have in decades of conflict.

Those minority Tamils who live in Colombo say they cannot remember ever being as scared as they are now.

It does not matter if they are doctors or lawyers - they expect to be questioned and searched at numerous roadblocks and checkpoints.

After every bomb some Tamils in the nearby locality will be rounded up for questioning and houses searched.

The security forces normally look in particular for anyone from the north-east of the island but even Tamils born and brought up in the south say they are treated with equal suspicion now.

The majority Sinhala community is also on edge like never before - watching who gets on buses, reporting suspicious parcels and avoiding public transport if they can possibly afford it - preferring to pay to hire an expensive private van than risk their lives on a train or bus.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7440183.stm

இப்ப தெரியுது தானே குண்டு வெடிப்பு எவ்வளவு அவலத்தை கொடுக்கிறது. இதைத்தானே தமிழருக்கு எதிராக 30 வருடம் செய்தீர்கள்.

இப்ப சிங்களதேசம் குண்டில் மாட்டு பட ஓடித்திரிகிறீர்கள்.

பேச்சு வார்த்தை மேசைக்கு வாங்கோ சரிசமமாக இருந்து பேசுவோம். இரு இன மக்களும் சுதந்திரம் பெறுவோம்.

ஆயுதத்தால் இனி பலன் இல்லை தமிழரை பொறுத்த மட்டில். தமிழர் ஆயுதத்தால் அடி வாங்கி பழகி விட்டார்கள்.

இப்ப தான் சிங்களம் தொடங்கி இருக்கிறது. இனித்தான் தமிழர் பட்ட வலி தெரியும்.

தமிழீழ நிழல் அரசு இருக்கும் வரை இனி இரு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி தான் தீர்வு காண வேண்டும்.

Sri Lanka's war turns on civilians

By Frances Harrison

BBC News

Civilians targeted

So why may the Tigers have changed tack when their senior military leaders previously questioned why the Palestinian militant groups used suicide bombers to kill Israeli civilians at bus stops instead of hitting at big economic targets?

Many believe the attacks in the south are conducted by the Tigers in revenge for what they say is a sharp increase in claymore mine attacks on civilians in rebel-controlled territory.

The government does not give journalists access to rebel territory so attacks and their casualty figures there are impossible to verify.

But the Tigers accuse the government of using guerrilla-style tactics against them - employing what are called "deep penetration units", or Tamil-speaking paramilitaries, to infiltrate rebel areas and kill civilians. The government denies this.

Although there are military battles on the frontline between rebel and government territory in the north, it appears the war has descended into small-scale violence targeting civilians on both sides.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7440183.stm

தெற்கில் மேற்கொள்ளப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் வடக்கில் படையினர் மேற்கொள்ளும் பாரியளவிலான படைநடவடிக்கையையடுத்தே மேற்கொள்ளப்படுவதாக பிபிசி ஒவ்வொரு குண்டுவெடிப்பின் போதும் குறிப்பிட்டு வந்தது. ஏன் மொரட்டுவ தாக்குதல் தொடர்பான செய்தியில் கூட தொடகத்தில் அவ்வாறே குறிப்பிட்டிருந்தது. பின்னர் கண்டியில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்தே வன்னியில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்கான பதிலடியாக தெற்கில் பொதுமக்கள் தாக்கப்படுவதாக செய்தியில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட பிரான்சிஸ் ஹரிசனின் பத்தி சற்று உண்மையை உலகிற்கு காட்டியுள்ளது.

தயவுசெய்து உறவுகளே பிபிசி போன்ற ஊடகங்களில் தமிழரின் இழப்புக்களை கவனத்தில் கொள்ளாமல் அல்லது தமிழர் விரோத செய்திகள் வந்தால் அது தொடர்பான உங்களின் கருத்துக்களை உடனடியாகவே அனுப்புங்கள். கவனத்தில் எடுப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீனாக 30 வருடத்த இழந்து விட்டோம், இதை முதலிலேயே தொடங்கி இருக்கலாம், சிங்களவனுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது, இது போண்ற அடிகள் சிங்ளவன் பேச்சுக்கு வரும் வரை தொடரவேண்டும், போருக்கு 80% சிங்கள மக்கள் ஆதரவு தெரிவித்த வீதம் 20%ஆக குறையும் வரை தொடரவேண்டும், ஆயுத உதவி கொடுத்து ஆதரிக்கும் உலக நாடுகள் அலறும் வரை இது தொடர வேண்டும். விடுதலை புலிகளின் போராட்டம் பெற்றுத்தராத தீர்வை, சிறிலங்காவில் அதிருப்தி அடைந்து தன்னிச்சையாக செயல் படும் பெரும் போபம் கொண்ட இளைஞர்களின் தாக்குதல்கள் பெற்றுத்தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தென் பகுதியில் இருக்கும் தமிழர்கள் தாங்கள் சிங்களவர்களுடன் அமைதியாக வாழ முடியாது என்பதையும் புரிந்துகொள்வார்கள்.. தமிழர்கள் பலமின்றி இருந்தால் எல்லோரும் ஏறி மிதிப்பார்கள் என்பதை கிழக்கில் நடைபெறும் சம்பவங்களும், மொறட்டுவ பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலையும் தெளிவாகக் காட்டுகின்றன.. சொந்த நாடு இல்லாமல் இருந்தால் அடிமையாக இருந்தாலும் நிம்மதியற்ற அவல வாழ்வுதான்..

வீனாக 30 வருடத்த இழந்து விட்டோம், இதை முதலிலேயே தொடங்கி இருக்கலாம், சிங்களவனுக்கு எங்கு அடித்தால் வலிக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது, இது போண்ற அடிகள் சிங்ளவன் பேச்சுக்கு வரும் வரை தொடரவேண்டும், போருக்கு 80% சிங்கள மக்கள் ஆதரவு தெரிவித்த வீதம் 20%ஆக குறையும் வரை தொடரவேண்டும், ஆயுத உதவி கொடுத்து ஆதரிக்கும் உலக நாடுகள் அலறும் வரை இது தொடர வேண்டும். விடுதலை புலிகளின் போராட்டம் பெற்றுத்தராத தீர்வை, சிறிலங்காவில் அதிருப்தி அடைந்து தன்னிச்சையாக செயல் படும் பெரும் போபம் கொண்ட இளைஞர்களின் தாக்குதல்கள் பெற்றுத்தரும்.

இல்லை சித்தன் அவர்களே 30 வருடம் சரியாகதான் நகர்ந்து வந்திருக்கிறோம் என்று தான் நம்புகிறேன்.கெரில்லா படையணியாக இருந்து கொண்டு தனிய குண்டுதாக்குதல் நடத்துவதன் மூலம் சுதந்திரம் வராது. படிப்படியாக வளர்ந்து ஒரு ஒழுங்கான கட்டமைப்பை உருவாக்கி ஒரு தேசத்திற்கான நிழல் அரசை உருவாக்கி அதன் பின் தான் சில கடுமையான போர் முறைகளை எதிரி மீது திணிக்க வேண்டும். அந்த இடத்திற்கு இப்ப தான் நாங்கள் வந்து இருக்கிறோம் என்று நம்புகிறேன். இனி உலக நாடுகளோ யாரோ போய் நிழல் அரசுடன் பேசுங்கள், பிரச்ச்சனைக்கு தீர்வு காணுங்கள் என்று தான் எதிரிக்கு சொல்வார்கள். நிழல் அரசை அழியுங்கள் என்று சொல்ல முடியாது .எதிரியும் வெறும் கையுடன் பேச்சு வார்த்தைக்கு வரமுடியாது. ஏனென்றால் ஒரு நிழல் அரசாக இயங்குகின்ற ஒரு அமைப்புடன் தான் பேச போகிறார்கள்.

இப்பதான் விடுதலைக்கான அறுவடைக்காலம் என நினக்கிறேன்.

பிபிசியின் அண்மைகால செய்தி சில உண்மைகளை சொல்கின்றது ஆனாலும் நாமாக ஏன் உரிமை கொண்டாட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில மன்னிப்புச்சபையே கண்டிக்கிற அளவுக்கு போயிட்டு!

இது ஒன்றுதான் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைக்காக உலக அரங்கில குரல்கொடுத்தது!

இனி தமிழீழம் விரைந்து கிடைக்கும்!

சர்வதேச மன்னிப்பச்சபையின்ரை அறிக்கையை உங்களுக்கு தெரிந்தவரை மொழி பெயர்த்தற்கு நன்றி ஆனாால் நீங்களாக எழுதிய மேலுள்ள வசனங்களையும் மொழிபெயர்த்து விபரமாகப்போட்டால் உதவியாயிருக்கும். :lol::lol:

  • தொடங்கியவர்

சாணக்கியன் உங்கள் மனிதாபிமானத்தைப் பாராட்டுகிறேன். தெற்கில் புலிகள்தான் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற உங்கள் கருத்தையே இப்போதைக்கு ஆதாரமாக எடுத்துக்கொண்டு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தெற்கில் புலிகள் அப்பாவிகளைக் கொல்கிறார்கள் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்ட அறிக்கையை( அறிக்கை பொதுவாக எல்லாத்தரப்பையும் சாடியிருந்தாலும் கூட) உதாரணம் காட்டி "இனி ஈழம் கிடைச்ச மாதிரித்தான்" என்று எழுதியுள்ளீர்கள். சரி, அதே சர்வதேச மன்னிப்புச்சபை வன்னியில் நாள்தோறும் கிளேமோரில் கொல்லப்படும் அப்பாவிகளைப் பற்றி என்ன சொல்கிறது என்று கூற முடியுமா? அல்லது அவ்வாறு கொல்லப்படும் அப்பாவிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உதய நாணயக்கார சொல்வதுபோல அவர்கள் அனைவரும் புலிகள் என்ற கருத்தைத்தான் நீங்களும் கொண்டிருக்கிறீர்களா ?

கல்வீட்டுக்காரன் கல்வீசுறான் எண்டு கண்ணாடி வீட்டுகாரரான நாங்கள் கல்வீசக் கூடாது என்று சொல்லவாறன்!

சரி நான் உங்கடை கருத்தை ஆதாரமா வைச்சுக் உங்களை மாதிரி கேள்வி கேக்கிறன், தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக பஸ்சுக்கு கிளைமொர் வச்ச புலிகள் ஏன் அதை வெளிப்படையா ஒத்துக்கொள்ளவில்லை? யார் வைச்சது எண்டு தெரிஞ்சா இன்னும் பயப்பிடுவான் தானே!

வடக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவத்தின் ஆள ஊடுருவும் அணி அப்பாவிகள் மேல் நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகத்தான் தெற்கில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்று சர்வதேச ஊடகங்களே சொல்லும்போது, நாங்கள் இன்னும் புலிகள் மனித உரிமைகளை மீறி விட்டார்கள், இனி ஈழம் எடுப்பது கடிணம் என்று நினைத்து வருகிறோம்.

இனி கஸ்டம் எண்டு நினைச்சிருந்தா இங்க மினக்கடத்தேவையில்லை! 60 வருடப்போராட்டமா நீண்டிடக் கூடாது எண்டுதான் விரும்புறம்!

நாங்கள் எல்லோரும் வன்னியில் நாள்தோறும் ராணுவ அட்டூழியத்தால் கொல்லப்படும் எமது தாய் தங்கையர், அண்ணா தம்பிமார், அம்மா அப்பாக்கள் போன்றவர்களின் இழப்புக் கணக்குக் கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதி ஞாபகத்தில் வைத்திருப்பது நல்லது. தெற்கில் சிங்களவன் கொல்லப்படும்போது வரும் இரக்கமும், கவலையும் எமது மக்கள கொல்லப்படும்போதும் வருவது அவசியம். மனித உரிமைகளைக் காரணம் காட்டி தெற்கில் சிங்களவன் சாவதை கண்டிக்கும் எவரும் வன்னியில் நடக்கும் கொலைகளுக்கு உடந்தையாகி விடுகிறீர்கள் என்பதையும் மறக்க வேண்டாம்.

தமிழர்கள் கொல்லப்படேக்கை நான் கவலைப்படேலை எண்டு இஞ்சை சில பேருக்கு கவலை! யாழ்களத்தில வந்து ஏசின உடன உங்கட கோபம் தணியும் தீர்வு கிடைக்குமோ?

"மனிதஉரிமை" என்றதுக்கு எதிர்கருத்துதான் "போர்"!

அதுக்குள்ள "நல்ல போர்", "கெட்ட போர்" எண்டு இந்த உலகம் தரம்பிரித்து வைச்சிருக்கு, போரில சம்பந்தப்படாத தரப்பினரை பாரியளவில் தெரிந்தே கொல்லுறது மனித குலத்திற்கு எதிரான குற்றம்!

இனி இரண்டு தரப்பு பொதுமக்களும்தான் தங்கடை தங்கடை தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்க வேணும்!

அதாலை தான் நான் என்ரை தரப்புக்கு அழுத்தம் கொடுக்கிறன்! நீங்களும் கொடுங்கோ! அவையளும் கொடுக்கட்டும்!

மிச்சம் இருக்கிற ஆக்களையாவது காப்பாற்றுவம்!

கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக குண்டை வைக்கச் சொல்லுற நீங்களும் கொல்லப்பட்ட புலி அண்ணாக்கள் அக்காக்களுக்கும் மற்றும் இனி கொல்லப்பட போகிற அனைவருக்கும் கணக்குக் கூறக் கடமைப்பட்டிருக்கிறீங்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பது நல்லது.

அதோட இந்த கணக்கை நீங்கள் எப்படி திருப்பி செலுத்தப்போறிங்கள் என்றதையும் கூறினால் நல்லது!

Edited by சாணக்கியன்

  • தொடங்கியவர்

நான் நினைக்கிறேன் AI விடுதலைப்புலிகள் ஏறைக்குறைய இப்போ 20 ஆண்டுகளுக்கும் மேலாகத்தான் இப்படிக் கேட்டு வருகிறது. இதைத்தான் சிறீலங்கா அரசிடமும் கேட்கிறது. ஏன் அமெரிக்காவையும் தான் கேட்கிறது எவருமே அதற்குச் செவி சாய்ப்பதில்லை.

சாணக்கியன் இதை இப்ப தூக்கிப் பிடிக்கிறது ஏனென்றுதான் புரியவில்லை. அதுமட்டுமன்றி சிறீலங்கா அரசு பற்றிய phrase ஐ அவர் முக்கியப்படுத்தவும் முயலவில்லை என்பது பதட்டத்துக்குரிய விடயமல்ல.. சந்தேகத்துக்குரிய விடயம்.

As the conflict intensifies in the north, Amnesty International is calling on the Sri Lankan government to ensure that its security forces comply with Sri Lanka's obligations under international human rights and humanitarian law, and in particular to ensure that the civilian population are protected at all times. :rolleyes:

அறிக்கை வெளிவிடப்பட்ட காலகட்டத்தையும், அதன் சாரம்சத்தையும் பார்த்தால் ஒரு பாமரனுக்கே புரியிற விசயம்!

இதுக்குப்போய் 16 வரியில ஒரு 3 வரியை மட்டும் தூக்கிப்பிடித்து கீழ மின்குமிழ் வேற போட்டுக்காட்டி.... அப்பப்பா.. படுகிற பாடு கொஞ்ச நஞ்சமில்லை!

சர்வதேச மன்னிப்பச்சபையின்ரை அறிக்கையை உங்களுக்கு தெரிந்தவரை மொழி பெயர்த்தற்கு நன்றி ஆனாால் நீங்களாக எழுதிய மேலுள்ள வசனங்களையும் மொழிபெயர்த்து விபரமாகப்போட்டால் உதவியாயிருக்கும். :lol::lol:

சாத்திரி நல்லா சிரிக்கிறியள்! உங்களையே சிரிக்க வைச்சுப் போட்டன் என்றதில எனக்கு ரொம்ப சந்தோசம்! :lol::):lol::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கல்வீட்டுக்காரன் கல்வீசுறான் எண்டு கண்ணாடி வீட்டுகாரரான நாங்கள் கல்வீசக் கூடாது என்று சொல்லவாறன்!

சரி நான் உங்கடை கருத்தை ஆதாரமா வைச்சுக் உங்களை மாதிரி கேள்வி கேக்கிறன், தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக பஸ்சுக்கு கிளைமொர் வச்ச புலிகள் ஏன் அதை வெளிப்படையா ஒத்துக்கொள்ளவில்லை? யார் வைச்சது எண்டு தெரிஞ்சா இன்னும் பயப்பிடுவான் தானே!

இனி கஸ்டம் எண்டு நினைச்சிருந்தா இங்க மினக்கடத்தேவையில்லை! 60 வருடப்போராட்டமா நீண்டிடக் கூடாது எண்டுதான் விரும்புறம்!

தமிழர்கள் கொல்லப்படேக்கை நான் கவலைப்படேலை எண்டு இஞ்சை சில பேருக்கு கவலை! யாழ்களத்தில வந்து ஏசின உடன உங்கட கோபம் தணியும் தீர்வு கிடைக்குமோ?

"மனிதஉரிமை" என்றதுக்கு எதிர்கருத்துதான் "போர்"!

அதுக்குள்ள "நல்ல போர்", "கெட்ட போர்" எண்டு இந்த உலகம் தரம்பிரித்து வைச்சிருக்கு, போரில சம்பந்தப்படாத தரப்பினரை பாரியளவில் தெரிந்தே கொல்லுறது மனித குலத்திற்கு எதிரான குற்றம்!

இனி இரண்டு தரப்பு பொதுமக்களும்தான் தங்கடை தங்கடை தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்க வேணும்!

அதாலை தான் நான் என்ரை தரப்புக்கு அழுத்தம் கொடுக்கிறன்! நீங்களும் கொடுங்கோ! அவையளும் கொடுக்கட்டும்!

மிச்சம் இருக்கிற ஆக்களையாவது காப்பாற்றுவம்!

கொல்லப்பட்ட பொதுமக்களுக்காக குண்டை வைக்கச் சொல்லுற நீங்களும் கொல்லப்பட்ட புலி அண்ணாக்கள் அக்காக்களுக்கும் மற்றும் இனி கொல்லப்பட போகிற அனைவருக்கும் கணக்குக் கூறக் கடமைப்பட்டிருக்கிறீங்கள் என்பதை ஞாபகத்தில் வைத்திருப்பது நல்லது.

அதோட இந்த கணக்கை நீங்கள் எப்படி திருப்பி செலுத்தப்போறிங்கள் என்றதையும் கூறினால் நல்லது!

சாணக்கியன் நீங்க எப்ப இருந்து புலிகளின் பேச்சாளராக மாறியிருக்கிறியள் இதை புலிகள்தான் செய்தார்கள் என்றா ஆதாரத்தை மடிக்குள்ள வைச்சுக் கொண்டு போசுறமாதிரியிருக்குது.

அரசு எவளவுதான் வெளிப்படையாக மக்களைப் படுகொலை செய்யும் போதும் எந்த அரசாவது அவர்களை குற்றவாளி ஆக்கி இருக்கிறதா?

அரசால் செய்யப் படுகின்ற படுகொலைக்கும் பழி புலிகளின் மேல் சுமத்தப் படுவதும் ஒன்றும் மரபுக்கு மாறான விடயம் இல்லையே. இவை கூட புலிகளின்பால் உள்ள நியாயங்களை உலகம் விளங்க முற்படும் பொறாமையினால்தான் அரசின் நிழல் கரங்களால்தான் இப்படிப் பட்ட படுபாதக படுகொலைகள் அரங்கேற்றப் படுகிறது.

கடைசியில மன்னிப்புச்சபையே கண்டிக்கிற அளவுக்கு போயிட்டு!

இது ஒன்றுதான் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறைக்காக உலக அரங்கில குரல்கொடுத்தது!

இனி தமிழீழம் விரைந்து கிடைக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.