Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் உடனான தீபம் தொலைக்காட்சியின் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரவுச் சாப்பாடு சாப்பிட்டுவந்து திரும்பவும் மச் விளையாட துவங்கீட்டாங்கையா. நான் இனித்தான் சாப்பிடவேணும். சாப்பிட்டு வந்து உதுக்கு ஆறுதலா பதில் சொல்லுறன். :):D

இரசிகப் பெருமக்களே..

தற்போதைய ஸ்கோர் விபரம்:

அஜீவன் அணி:

இனிங்ஸ் 01: அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 100 ஓட்டங்கள்

இரண்டாவது இனிங்ஸ்: விக்கற் இழப்பின்றி 100 ஓட்டங்கள் :)

நெடுக்காகபோவான் அணி:

இனிங்ஸ் 01: அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 101 ஓட்டங்கள்

அஜீவன் அணியின் தலைவர் முரளி சிறப்பான முறையில் பந்துவீசி 8 விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார். :D

அஜீவன் அணியின் அதிரடி வீரர் வசம்பு ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று உள்ளார்.

நெடுக்காலபோவான் அணி வீரர் வினித் சிறப்பான முறையில் பந்துவீசி ஐந்து விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார்.

அணித்தலைவர் நெடுக்காலபோவான் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விக்கற் பாதுகாப்பாளர் வெற்றிவேலின் திறமையான விளையாட்டு மூலம் ஸ்டம்ப் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார். அணியின் அதிரடி வீரர் மருதங்கேணி அஜீவன் வீசிய பந்திற்கு வெற்றிவேலிடம் பிடிகொடுத்து இரண்டு சிக்ஸர்கள் உட்பட 20 ஓட்டங்கள் எடுத்தநிலையில் ஆட்டம் இழந்தார். :D

தொடர்ந்து இணைந்து மகிழ்ந்து போட்டியை கண்டுகளிக்கவும்.. :D

நாங்கள் முரளி நேர்முக வர்ணனையாளர்கள் அணி (அணித்தலைவரும் அவரே).. இறுதியா என்ன செய்யப் போறம். இப்படி ஏத்திவிட்டு மோத விட்டு விளையாட்டுக் காட்டிட்டு.. தலைப்பில இருந்து ஒதுங்கப் போறம். நடைமுறைக்கு எதுவும் சாத்தியமாகாமல் பார்த்துக் கொள்ளப் போறம்.. அப்படித்தானே..! இடையில் தோதான அம்பயர் மாரை செற்பண்ணி இறக்கிவிட்டால்.. கேம் முடிஞ்சிடும். :)

முரளி.. நான் இந்த இடைவெளில வேலைக்குப் போய் சமைச்சு சாப்பிட்டும் வந்திட்டன். எனிப் படிக்கப் போறன். நீங்கள் என்னடான்னா...???! :):D

Edited by nedukkalapoovan

  • Replies 181
  • Views 21.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

''அதுதான் நானும் கேட்டுக் கொண்டேன். தாயகக் கலைஞர்களை திருமண வீட்டுக்கும் சாமத்தியவீட்டுக்கும் கமரா தூக்கிற கூட்டத்துக்குள் அடக்கி அவர்களின் இதயங்களை புண்படுத்தக் கூடாது என்று."

இவ்வாறு அஜீவன் எங்கும் குறிப்பிடவில்லையே.. நீங்கள் ஏன் தாயகக் கலைஞர்களை இங்கே கூப்பிடுகிறீர்கள்?! :D

கலக்காரர் இங்கு வந்துட்டார் எல்லோ.... உங்கள் திட்டம் சந்தி சிரிக்கப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

''அதுதான் நானும் கேட்டுக் கொண்டேன். தாயகக் கலைஞர்களை திருமண வீட்டுக்கும் சாமத்தியவீட்டுக்கும் கமரா தூக்கிற கூட்டத்துக்குள் அடக்கி அவர்களின் இதயங்களை புண்படுத்தக் கூடாது என்று."

இவ்வாறு அஜீவன் எங்கும் குறிப்பிடவில்லையே.. நீங்கள் ஏன் தாயகக் கலைஞர்களை இங்கே கூப்பிடுகிறீர்கள்?! :D

அண்ணா நான் நினைத்தேன் நீங்களாவது நேர்மையாக இருப்பீர்கள் என்று.. ஆனால்...

அவரின் செவ்வியில் திரைப்படக் கல்லூரி இல்லாத குறை வெளிப்பட்டது... புலம்பெயர் நாடுகளில் அதற்கு பற்றாக்குறையில்லை. சிறீலங்காவில் இந்தியாவிலும் குறைவில்லை. அதையும் அவரே சொல்லியுள்ளார். இது இல்லாத இடத்தில் இருந்துதான் திருமணவீட்டு மற்றும் சாமத்தியவீட்டு திறமையற்ற கமராக் காரர்கள் முளைக்கிறார்கள்... அது எங்கிருந்து அண்ணா..???! அதை நீங்களாவது தெளிவுபடுத்துறீங்களா..??!

தாயகத்தில் உள்ள.. மற்றும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த கலைஞர்கள்...(சிறீலங்கா அல்ல).. இதற்குள் அடக்கப்படுவது தானே நியாயம்.. அப்படி இருக்க ஏன் இப்படி நீங்க கேட்கிறீங்க.. நீங்கள் வேறேதாவது ஆபிரிக்காக் கண்டக் கலைஞர்களை அப்படிக் குறிப்பிட்டார் எங்கிறீர்களா..???! :D:D

இறுதில ஆராவது வந்து இந்த கலகத்தின் முடிவை வேறொரு தலைப்பில் தெரியப்படுத்துங்கோ...

இப்பிடி அரிதாத்தான் எங்கட ஆக்கள் பதிலெளுதுவாங்கள்... இதை குளப்பிப்போடாதேங்கோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு இது நல்ல தலைப்பு தான் பொழுது போக்க :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்க. உங்களையும் சேர்க்க மறந்துவிட்டீர்கள்.

அனைவருக்கும் வணக்கம்..

இப்ப சிறீ லங்கா சிறைச்சலை பிரச்சனை பற்றிய ஒரு ஆவணப்பதிவு செய்யலாம் எண்டு யோசனை சொல்லுறீங்கள்...

எனது கருத்துக்கள்:

1. ஆவணப்பதிவு யாரை நோக்கியது? தமிழர்களுக்கானதா? அல்லது வேற்று மொழியினருக்கானதா? என்னைப்பொறுத்தவரையில வேற்றுமொழியினருக்காக ஆவணப்பதிவு ஒன்றை செய்வதே சிறப்பானதாக தெரிகின்றது. எங்கட ஆக்களுக்கு எங்கட பிரச்சனைகள் பற்றி ஏற்கனவே தெரியும்.. அப்பிடி எண்டால்...

2. இதற்கு ஆகும் செலவை எப்படி சமாளிப்பது? இந்த ஆவணப்படம் எவ்வளவு நீளமானது?

3. சிறீ லங்காவில் தற்போது உள்ளவர்களை பேட்டிகாண்பது, சிறையிற்கு சென்று படம் பிடிப்பது எல்லாம் சாத்தியப்படக்கூடிய விசயங்கள் இல்லை. நாம் செய்யக்கூடியது எல்லாம் இதுவரை சிறை சென்று வந்தவர்களின் அனுபவங்கள்... மற்றும்... இணையத்தில் தேடிப்பெறக்கூடிய விசயங்கள்... உதாரணமாக பிந்துனுரேவல படுகொலை (தீபாவளி படுகொலை), வெலிக்கடை கொலைகள் போன்றவற்றை ஆவணப்படுத்துவது

4. சரி... அப்பிடி எண்டால் இதை யார் எழுதுவது? Script எழுத நல்ல மொழிப்புலமை கொண்டவர்கள் தேவை. ஆங்கிலம், பிரன்ச், ஜேர்மன், ஸ்பானிஸ், தமிழ், ஹிந்தி (இந்தியர்களுக்காக) மொழிகளில் இதை ஆவணப்படுத்தலாம். படங்கள், காட்சிகளுடன் பின்னணியாக குறிப்பிட்ட மொழிகளில் ஒருவர் விபரணத்தை சொல்லலாம் அல்லது படங்கள், காட்சிகளுக்கு கீழ் அடிக்குறிப்புக்களை ஓட வைக்கலாம்.

5. நான் நினைக்கின்றேன்.. முதலில் பெரிய அளவில இறங்காமல் சுமார் ஐந்து பத்து நிமிடங்கள் வரக்கூடிய சிறிய காணொளிகளை அல்லது பகுதி 01, பகுதி 02, பகுதி 03... என இவ்வாறு.. காணொளிகளைச் செய்து யூரியூப், ஏஓஎல், மைஸ்பேஸ், கூகிள்... இப்படி வீடியோ தளங்களில் பரப்ப வேண்டும்.

6. குறுந்தட்டாக உதாரணமாக டீவீடியில் வெளிவிட்டால் அதை வாங்கிப் பார்க்கும் ஆட்களைவிட யூரியூப்.. கூகிள் போன்றவற்றில் பரப்புவதன் மூலம் குறைந்த செலவில் அதிக பிரச்சாரத்தை செய்ய முடியும். மேலும்.. மனித உரிமை அமைப்புக்களிற்கும் மின்னஞ்சலில் இதுபற்றி பரப்ப முடியும்.

7. ஒளி, ஒலி அமைப்புக்களிற்கு - அவற்றை கொஞ்சம் professional ஆக செய்வதற்கு அஜீவன் அண்ணாவின் உதவியை நாடலாம். ஆனால்.. அடிப்படையில்... அதற்கு முன் செய்யப்படவேண்டிய எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன.

8. தகவல் சேகரிப்பிற்கு யாழ் இணையத்தை பாவிக்கலாம். யாழில் ஒரு அறிவித்தல் விடலாம். இந்த அறிவித்தலை முகப்பில் போடுமாறு நிருவாகத்திடம் கேட்கலாம்.

9. எல்லாத்துக்கும் முதல்... இதை நாங்கள் செய்வதன் நோக்கம் என்ன என்பது எங்களுக்கு முதலில் தெரியவேண்டும். யாருக்காக செய்கின்றோம். இதன்மூலம் சாதிக்கவேண்டியது என்ன? இவ்வாறான கேள்விகள்..

10. இறுதியாக... இது ஒரு குறும்படம் போன்றது அல்ல.. வித்தியாசமான ஒரு படைப்பு. அதாவது பிரச்சாரத்திற்கானது. எனவே... கலைரசனை என்பதைவிட.. காட்சிப்படுத்தல் - விளம்பரம் - செய்திப்படுத்தல் இவைகள் பற்றியே அதிக கவனம் எடுக்கவேண்டும்.

இப்ப நித்தா வருகிது. மிச்சம் வாற பதிலுகளப் பார்த்து பிறகு கதைக்கிறன். நன்றி! வணக்கம்! :D

தீபம் தொலைக்காட்சியின் பழைய நேர்காணலை போட்டு விவாதம் நடத்தி வாதப்பிரதிவாதங்கள் செய்வதை விட யாழ் களத்தின் சார்பில் புதிய விவாதத்தை பிரயோசனமாகச் செய்யலாமே

நெடுக்ஸ்

இப்போது நடக்க வேண்டியதை விட்டு விட்டு

அதைச் செய்யாமல்

திரும்ப திரும்ப பழைய ஒரு நிகழ்வுக்குள் உங்களை ஐக்கயப்படுத்துவது ஏன் என தெரியவில்லை?

நீங்கள் ஒரு சிறந்த கல்வியாளர்

புலம் பெயர் நாடொன்றில் உயர் கல்வி கற்பவர்

உலகம் அறிந்தவர் என்பது பலருக்கு

உங்கள் எழுத்தாற்றலே எடுத்தியம்பும்!

அதை என்னால் உணர முடிகிறது!

கள உறவுகளாலும்

உணர முடியும் என்றே கருதுகிறேன்.

கல்விமான்களான உங்களைப் போன்றவர்கள்

இப்படிப் பேசும் போது

அடிமட்ட மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது

என்னைப் போல் பலரது இதயங்களில் வினாக்களை தொடுக்கும்

என்றே நினைக்கிறேன்?

இங்கே நடக்கும் விவாதத்தை

வேறு நாடுகளில் வாழும் தமிழர் படித்தால்

என்ன நினைப்பார்கள் என்று

எவராவது யோசிக்கிறார்களோ தெரியாது?

பழமையை அறுத்து கொண்டு

புதுமை படைக்க முயலும்

மக்கள் மத்தியில்

நமக்குள் எதிரிகளை உருவாக்கிக் கொள்வதில் முனைப்பாகுவதை விட

உறவுகளை உருவாக்குவதே மேன்மை தரும்!

இப்போது இருப்பது

நீங்கள் முன் வைத்த யோசனைகளை நிறைவேற்ற முயல்வது?

அதை மீண்டும் கோடிட்டு காட்டுகிறேன்.

எனது விருப்பங்களில் ஒன்று சிறீலங்காச் சிறைகளுள் வாடும் எமது இளம் சமூகத்தின் உண்மை நிலை என்ன.. என்பதை வெளி உலகுக்குச் சொல்ல வேண்டும் என்பது.

உதாரணத்துக்கு தமிழர் தாயகத்தில் போர் அழுத்தங்கள் மத்தியில் கல்வி கற்கும் ஒரு மாணவன்.. பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து படித்துப் பரீட்சையில் சித்தி பெற்று கொழும்புக்கு வரும் ஒரு மாணவன்.. சந்தேகத்தின் பெயரில் கைதாகி படுகின்ற சித்திரவதைகள்.. அதற்கு மனிதாபிமானப் பார்வையை செலுத்தாத உலகம் என்று ஒரு குறும்படத்தை உருவாக்கி தமிழ் சிங்களம் ஆங்கிலம் மற்றும் சில முக்கிய ஐரோப்பிய மொழிகளில் சப் ரைற்றில் இட்டு.. யாழ் களம் சார்பாக உருவாக்கி வெளியிட வேண்டும் என்பது.

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள். முடிந்ததைச் செய்கிறேன்..!

இது ஒன்றும் அரசியலோ.. புலி சார்ந்ததோ அல்ல. ஜனநாயக அரசு என்று கூறிக்கொள்ளும் அரசு அதன் பிரஜைகள் மீது நடத்தும் கொடூரத்தைச் சொல்லும் விடயமாகவும்.. அந்தப் பிரஜை சொந்த மண்ணில் அனுபவிக்கும் கொடூரத்தை வெளிக்கொணர்வதாகவும் அமைய வேண்டும். பல உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

இவ்வாறான குறும்படங்களை பல்கலைக்கழக மாணவர்கள் மட்டங்களில் கொண்டு செல்லக் கூடிய வகைக்கு தயாரிக்க வேண்டும். அமெரிக்க படைகள் கியூபத்தீவில் வைத்துள்ள சிறைச்சாலைகளில் செய்யும் மனித உரிமை மீறல்களைச் சொல்ல வந்தவை போன்று இவையும் உலகின் விழிகளைத் திறக்கக் கூடிய வகையில் வெளி வர வேண்டும். :D

இதை செய்ய முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள்

இல்லை முடியும்!

இதற்காக சிறீலங்காவின் சிறைகளுக்கோ அல்லது

சிறீலங்காவுக்கோ கூட போகத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

புலம் பெயர் நாடுகளில்

இப்படி வதை பட்ட

அனுபவங்களைக் கொண்டவர்கள்

அகதியாகி இருக்கிறார்கள்!

ஒருவேளை அது போன்ற ஒரு தாக்கம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.

அல்லது பாதிக்கப்பட்டிருக்கலாம்!

அவர்களை பேட்டி காணலாம்?

இது சாத்தியமே?

இது உங்கள் கருத்துகளின் பின்

எனக்குள் ஏற்பட்ட விழிப்பு!

இலங்கையில் இருந்து கூட

இது போன்ற பேட்டிகளை FTP வழி பெற முடியும்.

இலங்கையிலிருந்து மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலிருந்தும்?

மேலே உள்ளவை தொடர்பான குறும்படத்தை அல்லது

ஆவணப்படத்தை தவிர்த்து

இங்கு எழும் எந்தக் கேள்விகளுக்கும் எனது பதிவும் இல்லை

இனி பங்களிப்பும் இல்லை.

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது!

மீண்டும் சந்திக்கும் வரை

அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெறுவது

உங்கள்

அஜீவன் :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு சிறந்த கல்வியாளர்

புலம் பெயர் நாடொன்றில் உயர் கல்வி கற்பவர்

உலகம் அறிந்தவர் என்பது பலருக்கு

உங்கள் எழுத்தாற்றலே எடுத்தியம்பும்!

அதை என்னால் உணர முடிகிறது!

கள உறவுகளாலும்

உணர முடியும் என்றே கருதுகிறேன்.

கல்விமான்களான உங்களைப் போன்றவர்கள்

இப்படிப் பேசும் போது

அடிமட்ட மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்பது

என்னைப் போல் பலரது இதயங்களில் வினாக்களை தொடுக்கும்

என்றே நினைக்கிறேன்?

ஐயோ நான் கல்விமான் எல்லாம் கிடையாது. ஏதோ எல்லாரையும் போல நாலு எழுதப்படிக்க படிச்சதுதான்.

உங்களுக்குள்ளேயே ஒரு கலைஞனிடத்திலேயே.. இப்பதிவுகளில் சில அம்சங்கள் ஒரு விழிப்புணர்வைத் தூண்டச் செய்திருக்கிறது என்ற வகையில்.. இத்தலைப்புக்கு ஒரு தனித்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மற்றும்படி..

தேவையற்றவற்றை நானும் தவிர்த்துக் கொள்கின்றேன்..!

நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கும். சில கருத்துப் பகிர்வுகளால் ஏதேனும் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மன வருத்தங்கள். அடிச்சுப் போட்டு "சொறி" சொல்லிறதா எண்ணப்படாது. ஆதங்கத்தைச் சொல்லப் போய்... அது அடிச்சதாக ஆகியிருக்கலாம் என்ற ரீதியில்..! :D

வேலை வெட்டி இல்லாதவங்களுக்கு இது நல்ல தலைப்பு தான் பொழுது போக்க :)

ஐயோ நான் கல்விமான் எல்லாம் கிடையாது. ஏதோ எல்லாரையும் போல நாலு எழுதப்படிக்க படிச்சதுதான்.

உங்களுக்குள்ளேயே ஒரு கலைஞனிடத்திலேயே.. இப்பதிவுகளில் சில அம்சங்கள் ஒரு விழிப்புணர்வைத் தூண்டச் செய்திருக்கிறது என்ற வகையில்.. இத்தலைப்புக்கு ஒரு தனித்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மற்றும்படி..

தேவையற்றவற்றை நானும் தவிர்த்துக் கொள்கின்றேன்..!

நன்றி உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கும். சில கருத்துப் பகிர்வுகளால் ஏதேனும் மன உளைச்சல்கள் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மன வருத்தங்கள். அடிச்சுப் போட்டு "சொறி" சொல்லிறதா எண்ணப்படாது. ஆதங்கத்தைச் சொல்லப் போய்... அது அடிச்சதாக ஆகியிருக்கலாம் என்ற ரீதியில்..! :lol:

ஒளவையார்

அப்ப இனி நன்றி வணக்கம் என்று ஒன்று அழகாகச் செய்து இங்கு கொண்டு வந்து இணைத்து விடுங்கள். :wub::lol: சாய் வேலைவெட்டி இல்லாத நாங்கள் ஒரு பக்கத்தை தொடங்கி வேலைவெட்டியுள்ள விபரமான விடயங்களை மட்டும் களத்திலை பதியும் tamillinux போன்றவர்களையும் மினக்கெடுத்திவிட்டோம். :):lol:

Edited by Vasampu

அதானே.. நானும் ஒருத்தன் மினக்கட்டி எழுதி இருக்கிறன்.. சிறீ லங்கா சிறையப்பற்றி ஏதோ ஆரம்பிச்சுபோட்டு இப்ப நன்றி வணக்கம் சொல்லி இத முடிக்கப்போறீங்கள் போல இருக்கிது நெடுக்காலபோவான். எங்க நிக்கிறீங்கள்? வெளியில ஒருக்கால் வாங்கோ.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அதானே.. நானும் ஒருத்தன் மினக்கட்டி எழுதி இருக்கிறன்.. சிறீ லங்கா சிறையப்பற்றி ஏதோ ஆரம்பிச்சுபோட்டு இப்ப நன்றி வணக்கம் சொல்லி இத முடிக்கப்போறீங்கள் போல இருக்கிது நெடுக்காலபோவான். எங்க நிக்கிறீங்கள்? வெளியில ஒருக்கால் வாங்கோ.. :lol:

நாங்க எழுதேக்க.. நீங்கள் கிரிக்கெட் விளையாடினீங்களே. இப்ப நாங்க மைதானத்தை விட்டு வெளியேறிறம் என்ற உடன கடுப்பாகுதோ..!

கண்ணாடி வீட்டில இருந்து கல்லெறியப்படாது என்றது இதற்குத்தான்..! :wub:

Edited by nedukkalapoovan

திரு அஜீவள் அவர்களே நீங்கள் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் என்றும் பல நிறுவனங்களில் பணியற்றிய அனுபவம் உள்ளவர் என்றும் இந்த யாழ் களத்திலே சொல்லியிருக்கிறீர்கள்உங்கள

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

நாங்க எழுதேக்க.. நீங்கள் கிரிக்கெட் விளையாடினீங்களே. இப்ப நாங்க மைதானத்தை விட்டு வெளியேறிறம் என்ற உடன கடுப்பாகுதோ..!

கண்ணாடி வீட்டில இருந்து கல்லெறியப்படாது என்றது இதற்குத்தான்..! :wub:

நீங்கள் கண்ணாடி வீட்டுக்க இருந்து தற்கொலை தாக்குதல் எல்லாம் செய்யூறீங்கள் நாம கல்லு எறியப்படாதோ? என்னமோ உங்கள் விருப்பம். சிறைச்சாலை பற்றிய ஆவணம் ஏதாவது செய்யுறதாய் இருந்தால் நானும் என்னால் முடியுமான ஆதரவு தரமுடியும். அதத்தான் சொல்லவந்தன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை பற்றிய ஆவணம் ஏதாவது செய்யுறதாய் இருந்தால் நானும் என்னால் முடியுமான ஆதரவு தரமுடியும். அதத்தான் சொல்லவந்தன். :lol:

அதற்கான முயற்சி தொடரும். உங்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. அதெற்கென ஒரு தனித்தலைப்பை ஆரம்பிப்பது நல்லம் என்று நினைக்கிறேன்..! :wub:

அதற்கான முயற்சி தொடரும். உங்கள் பங்களிப்பும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது. அதெற்கென ஒரு தனித்தலைப்பை ஆரம்பிப்பது நல்லம் என்று நினைக்கிறேன்..! :wub:

நிச்சயம் நெடுக்காலபோவான். நான் என்னால் முடியுமான உதவி செய்வேன். நீங்கள் தலைப்பை தொடங்கி பூசைபோடுங்கோ. இத யாழ்நாற்சந்தியுக்க போடுறது நல்லம் எண்டு நினைக்கிறன். தகவல் சேகரிக்கிறதுக்கு வேணுமெண்டால் இன்னொரு திரிய வெளியில துவங்கலாம்.

திரு அஜீவள் அவர்களே நீங்கள் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர் என்றும் பல நிறுவனங்களில் பணியற்றிய அனுபவம் உள்ளவர் என்றும் இந்த யாழ் களத்திலே சொல்லியிருக்கிறீர்கள்உங்கள

Edited by AJeevan

செய்தி தளத்தில் போட

செய்தி சேகரிக்கப் போனால்

அனுமதி மறுக்கப்படுகிறது?

இது போல் பல நிகழ்வுகள் இடம் பெற்று உள்ளது!

000000000

இவ்வாறான அனுமதி மறுப்புக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?உங்கள் மீதான தனிப்பட்ட கோபதாபமா? இல்லை உங்கள் செயற்பாட்டின் மீதான சந்தேகமா? அல்லது வேறு ஏதாவதா? தவறு யார் பக்கம்?.....

***

நீங்கள் உங்கள் பிரச்சனைகள் பற்றி பொறுப்பானவர்களுடன் கதைத்திருக்றீர்களா?

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

யாழ் நூலகம் குறித்தோ

அல்லது

வேறு விடயங்கள் குறித்தோ

அது குறித்து தெரிந்தவர்களால்தான் முடியும்!

நான் ஆவணப்படத் துறையை சார்ந்தவனல்ல.

அது குறித்த ஞானம் எனக்கில்லை

00000

யாழ் நூலகம் பற்றி அதுவும் இந்த இன்ரர்நெட் யுகத்தில் எதுவும் தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..........கமெராவுக்கான அடிப்படை இலக்கணம் தெரிந்த ஒருவரால் குறம்படம் ஒன்றை தயாரிக்கத் தெரிந்த ஒருவரால் ஒரு ஆவணப் படத்தை தயரிக்கும் ஞானத்தை பெறமுடியாது என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அஜீவன் அவர்களே§ மனமிருந்தால் இதை செய்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை.

நீங்கள் உங்கள் பிரச்சனைகள் பற்றி பொறுப்பானவர்களுடன் கதைத்திருக்றீர்களா?

பொறுப்பானவர்களுடன்தான்........... :lol:

பெயர் தேவையா?

எழுதட்டுமா?

வாறீங்களா என்னோடு போய் பேச?

இவை குறித்து பெயர் சொல்லி

பேசினால் பலரது மனம் புண்படும்.

யாழ் நூலகம் பற்றி அதுவும் இந்த இன்ரர்நெட் யுகத்தில் எதுவும் தெரியாது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..........கமெராவுக்கான அடிப்படை இலக்கணம் தெரிந்த ஒருவரால் குறம்படம் ஒன்றை தயாரிக்கத் தெரிந்த ஒருவரால் ஒரு ஆவணப் படத்தை தயரிக்கும் ஞானத்தை பெறமுடியாது என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது அஜீவன் அவர்களே§ மனமிருந்தால் இதை செய்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் முடியாது என்று ஒன்றும் இல்லை.

நெட்டில் வருவது அனைத்தும் உண்மையல்ல.

அப்போ சிறீீலங்கா அரசு அப்பாவி தமிழர் மேல் குண்டு போட்டு விட்டு

விடுதலைப் புலிகள் மேல் குண்டு போட்டது

என்பதும் உண்மையா?

http://www.defence.lk/

இதில் வருவது எல்லாம் உண்மையா?

வைத்தியர்கள்

என்று இருக்கிறார்கள்.

ஒவ்வோரு நோய்க்கும்

சத்திர சிகிச்சைக்கும்

வெவ்வெவ்வேறு துறை வைத்திய தகமை கொண்ட

வைத்தியர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு தங்கள் துறையில் திறமை இருக்கும்.

அது போல

எனக்குத் தெரிந்த துறை குறித்து மட்டுமே

எனக்கு தெரியும்.

தெரியாத துறையை தெரியாது என்பது சிறப்பு!

நான் பெற்ற கல்வி முறை அது!

அரை குறை வேலை செய்து வழக்கமில்லை.

அதனால்தான் ஒரு துறை குறித்து கற்றவர்கள்

உருவானால் நம் படைப்புகள் செழுமை பெறும் என்று

நினைத்து பேசினேன்.

நம்மவர்கள் முன்னேறி சரித்திரம் படைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்....

நமக்கென்று ஒரு ஆரோக்கியமான சினிமா வேண்டுமென்ற

நோக்கில் தவறு செய்திருக்கிறேன்.

இப்போது அது தவறு என்று கருதுகிறேன்.

மன்னிக்கவும் :lol:

இனி அந்த தவறை செய்ய மாட்டேன்.

இங்கு கிடைத்த அறிவு எங்கும் கிடைக்காது <_<

இதை விடுத்து

இப்போது செய்ய நினைத்த

படைப்பு குறித்து உங்கள் மேலான கருத்து என்ன?

உதவுவீர்களா?

அது குறித்து எழுதுங்கள்?

அதற்கு உங்கள் பங்களிப்பென்ன?

அதை சொல்லுங்கள்..........

அப்போது நேரில் விபரமாக பேசலாம்............

இது எத்தனையாவது அவதாரம்?

நானும் தஸவதாரமாகப் போகிறேன்.

அப்போது நானும் எதையும் பேசலாம்!

நானே கேள்வி கேட்டு : நானே பதில் சொல்லி : நானே அனைத்துமாகப் போகிறேன்!

Edited by AJeevan

இனி என்னோடு தேவையற்ற வார்த்தை பிரயோகங்கள் நடந்தால்

களம் நாறும்..............

அது உறுதி

good_bye_comment_02.gif

Edited by AJeevan

கருத்துக்களை பகிர வாய்ப்புத் தந்த யாழ் களத்தை நாறடிப்பதால் பயனென்ன?

இதன் மூலம் அம்சாவின் ஆட்களுக்குத் மகிழ்வை தரவா?............சோகம். <_<

கருத்துக்களை பகிர வாய்ப்புத் தந்த யாழ் களத்தை நாறடிப்பதால் பயனென்ன?

இதன் மூலம் அம்சாவின் ஆட்களுக்குத் மகிழ்வை தரவா?............சோகம். <_<

ஒளவையார்

யாரது அம்சா??

களம் நாறும் என அஜிவன் குறிப்பிட்டது களத்தை நாறடிப்பதென்ற அர்த்தத்திலல்ல. களத்தில் சிலர் எழுதும் விதண்டாவாதங்களுக்கு நேரடியாக

பொறுப்பானவர்களுடன்தான்...........

பெயர் தேவையா?

எழுதட்டுமா?

வாறீங்களா என்னோடு போய் பேச?

எனச் சம்மந்தப்பட்டவர்களை குறிப்பிட்டு எழுத வேண்டிவருமென்பதையே. இதனால் பலரின் பொய் முகங்கள் வெளிச்சத்திற்கு வரும். மேலே அதியன் என்பவர் சுவிசில் என்ன நடக்கின்றது என்று தெரியாமல் ஏதோ வாதம் செய்கின்றார். அவருக்குத் தெரியுமா இங்கு நடக்கும் அட்டூழியங்கள்.

உண்மைகளை எழுதினால் நிர்வாகம் ஓடோடி வந்து தூக்கும். பொய்யையும் புரட்டையும் சாமரம் வீசி வரவேற்கும். இவைகள் எல்லாம் யாரை ஏமாற்ற??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.