Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழும் நானும் (பகுதி 12: குளக்காட்டான் அண்ணா)

Featured Replies

துயா அக்கா தொடருங்கள் உங்கள் மூலம் யாழின் பழைய உறுப்பினர்கள் பற்றி தெரிந்து கொள் ள விரும்புகின்றேன்.

சின்னப்பு இவ்வளவு பெரிய ஆளா தொடருங்கள் சின்னப்பு

என்ன மப்பா சின்னா?

  • Replies 235
  • Views 28.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயாவிடம் ஒரு வேண்டுகோள்:-அங்கை அடுப்படிப்பக்கம் வைச்ச சொதி அலுத்துப்போச்சுது :wub: ஏதும் புதிசாய் நாக்குருசியாய் ஏதும் கண்டு புடிச்சு வைச்சிருக்கிறியளோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவிடம் ஒரு வேண்டுகோள்:-அங்கை அடுப்படிப்பக்கம் வைச்ச சொதி அலுத்துப்போச்சுது ஏதும் புதிசாய் நாக்குருசியாய் ஏதும் கண்டு புடிச்சு வைச்சிருக்கிறியளோ?

:wub::lol::)

தூயாவிடம் ஒரு வேண்டுகோள்:-அங்கை அடுப்படிப்பக்கம் வைச்ச சொதி அலுத்துப்போச்சுது :wub: ஏதும் புதிசாய் நாக்குருசியாய் ஏதும் கண்டு புடிச்சு வைச்சிருக்கிறியளோ? :lol:

கு.சா அப்பு நீங்கள் கல்லு குடிப்பதற்கு சுவைக்காக மீன் தீயல் செய்யிற குறிப்பு வைச்சிக்கிறாவாம். உங்களுக்கு தேவையென்றால் கேளுங்கோ தூயா அக்கா குறிப்பு தருவா

முதலில் துயாவுக்கு நன்றிகள் இன்றுவரை என்னை மறவாமல் வைத்திருப்பதற்க்கு அதுவும் நான் எழுதியவைகளை சரியாக தொகுத்து அருமையா சொன்னதற்க்கு நன்றிகள் மறக்கமுடியாது முன்னம் போல அடிக்கடி வரமுடிவதில்லை ஆணாலும் முடிந்தமட்டும் வரு முயற்சிக்கிறேன் நான் வராவிட்டலும் எனது கூட்டுவள் வருவினம் (முகத்தான் சாத்து குசா மற்றும் தலைமறைவான குத்தியன் )அடுத்து வாழ்துக்கூறியவர்களுக்கும் நன்றி என்றும் கள உறவுகளோடு

சி5

துயா அக்கா தொடருங்கள் உங்கள் மூலம் யாழின் பழைய உறுப்பினர்கள் பற்றி தெரிந்து கொள் ள விரும்புகின்றேன்.

சின்னப்பு இவ்வளவு பெரிய ஆளா தொடருங்கள் சின்னப்பு

என்ன மப்பா சின்னா?

அதில்லாமல் சின்னா இல்லையப்பாாாாா :wub:

தூயாவிடம் ஒரு வேண்டுகோள்:-அங்கை அடுப்படிப்பக்கம் வைச்ச சொதி அலுத்துப்போச்சுது :) ஏதும் புதிசாய் நாக்குருசியாய் ஏதும் கண்டு புடிச்சு வைச்சிருக்கிறியளோ? :lol:

கு சா நம்மட நாக்குக்கு ஊறுகாய் தான் சரி

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சி5, யார் அந்த தலைமறைவான குத்தியன் ? :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் இணையும் போது என்ன பெயருடன் யாழில் வர வேண்டும் என யோசிக்கும் போது சின்னப்புவின் ஆக்கங்கள் என்னைக் கவர்ந்ததினால் சின்னப்புவில் உள்ள அப்புவை எடுத்து கந்தப்புவாக யாழில் வந்தேன். புத்தனும் ஆரம்பத்தில் சின்னப்புவின் பெயரை உபயோகித்து சிட்னி சினப்பு என்ற பெயரில் வந்தார். பெயர் குழப்பம் ஏற்படும் என்பதினால் புத்தனாக மாறினார். யாழ்களத்தின் 8வது அகவையின் போது இளைஞனினால் யாழ் உறவோசைப்பகுதியில் 'யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? ' என்ற தலைப்பினை ஆரம்பித்தார். அதில் பல உறுப்பினர்கள் சின்னப்புவின் நகைச்சுவையினைப் பார்த்துத்தான் யாழில் அறிமுகமானதாகக் குறிப்பிட்டிருந்தார்கள். (http://www.yarl.com/forum3/index.php?showtopic=10130)

சில உறுப்பினர்களின் கருத்துக்கள்

அனிதா

சின்னப்பு எழுதினதுகளையும் பார்த்து சிரிக்கிறனான்... பேந்து சரி நாமளும் முயற்சி செய்து பாப்பம் எண்டு பதிந்தன் 13 வைகாசி 2005 அண்டைக்கு யாழ்ல இணைந்தேன்.

ரமா

முதலில் சின்னப்புவின் பகிடிகள் தான் கண்ணில் பட்டது. அவற்றை வாசிக்கும் நோக்குடன் ஒவ்வொரு நாளும் வர தொடங்கினேன்.

இரசிகை

அவள் சொன்னாள் யாழ் நகைச்சுவை வாசித்து சிரிக்கிறன் என்று நான் கேட்டன் அப்படி என்னதான் அதுல எழுதி இருக்கு என்று அப்ப தான் அவள் சொன்னாள்? சின்னப்புவின் நகைச்சுவை , அத்துடன் கள உறுப்பினர்கள் நகைச்சுவையான கருத்தாடல்கள் , செல்லச்சண்டைகள், புதினங்கள் எல்லாம் இருக்கு பிறகு ஆறுதலாக போய் பார் என்று.

வியாசன்

குருவியார் குளக்காட்டான் போன்றோரின் அறிவாற்றல் மிக்க கட்டுரைகளும் மப்பு மைந்தன் சின்னாவின் நகைச்சுவைகளும் டண்ணின் நகைச்சுவைகளும் மற்றையவர்களின் அன்பும்தான் என்னை களத்தில் இணையவைத்தது.

தூயா அழகாக கோர்க்கிறீங்க. உங்கள் யாழ்ப்பயணம் நேர்ப்பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்.

சின்னப்புவை பற்றி ஹீஹீ மீண்டும் நினைவூட்டியமைக்கு நன்றிகள். <_<:lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு என்ன தான் மப்பு என்று கதைத்தாலும், நான் அறிந்தவரை மதுப் பழக்கமில்லாதவர் சின்னப்பு, அவ்வாறே வயதும் கூட 35ஐத் தாண்டாத ஒரு மனிதர்..

சின்னப்பு என்ன தான் மப்பு என்று கதைத்தாலும், நான் அறிந்தவரை மதுப் பழக்கமில்லாதவர் சின்னப்பு, அவ்வாறே வயதும் கூட 35ஐத் தாண்டாத ஒரு மனிதர்..

:lol::lol::lol::lol::lol::(:lol: தெரிஞ்சமுகமா இருக்கு <_<

  • தொடங்கியவர்

பகுதி 5

சென்ற பகுதியில் சி*5 பற்றி எழுதியிருந்தேன். சின்னப்பு உட்பட பல கள உறவுகள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திடீரென வேலைப்பழு அதிகமாகிவிட்டதால், தினமும் எழுத முடியவில்லை. ஆனால் நிச்சயமாக விடுமுறை நாட்களில் எழுதுவேன். இப்பகுதியிலும் யாழ்கள அப்புக்கள் பற்றி

தொடர்கின்றேன்..

கந்தப்பு

untitledql5.png

சின்னப்புக்கு அடுத்து களத்தை தன் கருத்துக்களால் நிறைத்தது என்னவோ எங்க கந்தப்பு தான். அவரின் பெயர்க்காரணம் பற்றி அவரே கூறியுள்ளார். சின்னப்புவை பார்த்து தானும் கந்தப்பு ஆனேன் என்று. கந்தப்பு யாழோடு மூன்று வருடங்களாக பயணித்து வருகின்றார். முதல் நாளில் இருந்து இன்று வரை எந்த வித பிரச்சனைகளிலும் ஈடுபடாமல், தவிக்கப்பட வேண்டிய விவாதங்களை தவிர்த்து வருகின்றார். என்னை பொருத்த வரை கந்தப்புவின் சிறப்பே இது தான்.

இணைந்த திகதி: 26-November 05

பதிவுகள்: 6,405

நண்பர்கள்: புத்தன்

அதிகம் எழுதுவது: தமிழீழம், உலகநடப்பு

கந்தப்பு என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது தேசப்பற்று தான். கந்தப்புவின் அறிமுகப்பதிவிலேயே அவரின் தேசப்பற்றை பார்க்கலாம். அவரின் அரிச்சுவடியை படித்து பாருங்களேன் "வணக்கம். நான் உங்களுக்குப் புதியவன். ராத்திரி தேசியத்தலைவரின் உரைய சிகரம் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்கு ஒஸ்ரெலியாவில் இரவு என்பதால்

நித்திரை முழித்துப் பார்க்கவேண்டும். பிறகு மாவிரர் நிகழ்வுகள் எல்லாம் பார்த்து முடிய 2மணியாகி விட்டது. ஆச்சியும் என்னொட முழிப்பிருந்து பார்ததார்."

முதல் பதிவில் கந்தப்புவின் தேசப்பற்று தெரிந்தது எனில், அடுத்த பதிவில் அவரின் நல்ல குணம் தெரிந்தது. பொதுவாகவே களத்தில் நீண்ட தலைப்புகளுக்கு பெயர் போனது நான் தான். என்னையே தோற்கடிப்பது போல தன் பதிவுக்கு "அய்யோ நான் தவறு செய்துவிட்டேன். என்னக்கு மன்னிப்பேயில்லை" என தலைப்பு வைத்திருந்தார். கந்தப்புவை யாழ் தனக்குள்ளே அணைத்துக்கொண்டது இந்த பதிவில் தான் என்பது என் எண்ணம். தன் தப்பை உணர்வது சிறப்பு, எனில் அதை பலருக்கு முன் சொல்லி மன்னிப்பு கேட்பது மிக சிறப்பு. அந்த குணம் அனைவருக்கும் வருவதில்லையே.

அடுத்து; யாழ் களத்தை அதிகம் பாதித்த பதிவு எனில் "சிங்கள தேசத்துப் பொருட்களை புறக்கணிப்போம்!" என்ற பதிவைத் தான் நான் குறிப்பிட்டு சொல்வேன். இந்த பதிவின் கருத்தை கொண்டு பலர் பல பதிவுகளை எழுதினார்கள். பலர் தங்கள் வலைப்பூக்களில் சேர்த்துக்கொண்டனர். (அதில் நானும் ஒருத்தி)

சின்னப்பு களத்தில் அதிகம் உலாவராத நேரங்களில் எங்களை வாழ்த்தி பதிவிடும் பழக்கத்தை தொடர்ந்தது கந்தப்பு தான். வாழ்த்துக்கூறியே பிரபலமான எங்க சின்னப்புவையே வாழ்த்தி பதிவு போட்டது எங்க கந்தப்பு தானே: சின்னப்புவுக்கு வாழ்த்துக்கள்

கந்தப்புவின் பல பதிவுகள் மிகவும் அருமையானவை. அதில் குறிப்பிட்டு சிலவற்றை சொல்லலாம். எனக்கு மிகவும் பிடித்த பதிவு "கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்" . சிட்னியில் தமிழ் சமூகத்தில் நடக்கும் பல விடயங்களை அருமையான எழுதியுள்ளார். இது நிச்சயம் தொடர வேண்டிய பதிவு

என்பது என் கருத்து.

கந்தப்புவின் 2000 ஆவது பதிவு மிகவும் சிறப்பானது. ஒரே வரியில் எங்களை அனைவரையும் பற்றி நச்சென சொன்ன விபரங்கள் சேகரித்து வைக்கப்பட வேண்டியவை. அந்த பதிவை நிச்சயம் படித்து பாருங்கள் : யாழில் நான் சந்தித்தவர்கள் பற்றி சிறு குறிப்பு

கந்தப்பு பல காரணங்களுக்காக யாழில் பிரபலாமாகியிருக்கலாம். ஆனால் அதில் முக்கிய காரணம் அவரின் அவதார் படம் தான். இதை பற்றி களத்தில் பேசாதவர்களும் இருக்கிறாங்களா என்ன! மேலிருக்கும் படம் நிச்சயம் அனைவருக்கும் நினைவிருக்குமே! யாழோடு இணைந்த நாளிலிருந்து இன்றுவரை தொடர்ந்து யாழோடு சீரான உறவை கொண்டிருக்கும் சிலரில் கந்தப்புவை நிச்சயம் சொல்லலாம். நாம் அனைவரும் தாயகத்துடனும், யாழோடும் இணைந்திருக்க வேண்டும் என நினைப்பவர். கந்தப்புவை நேரில் பார்த்தால் "இவரா அவர்?" என ஆச்சர்யம் தான் வரும். கந்தப்புவின் அப்பு தான் கந்தப்புவாக இருக்க வேண்டும். கிகிகி.

எனக்கு கந்தப்பு களத்திலிருப்பது நிச்சயம் பாதுகாப்பு தான். களத்தில் என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உண்மையான கருத்தை கந்தப்பு மறைக்காமல் சொல்வார். என்னுடைய எழுத்துக்கள் ஒரு போதும் நிற்க கூடாது என்பதில் கொஞ்சம் கண்டிப்பாகவேயிருப்பார். நான் எழுத ஆரம்பித்த போது எப்படி எழுதினேன், தற்போது எப்படி எழுதுகின்றேன் என என்னை விட கந்தப்புவிற்கு அதிகம் தெரியும். எந்த நிலையிலும் நான் எழுதுவதோ, யாழுக்கு வருவதோ நிற்க கூடாது என அடிக்கடி கூறிக்கொண்டேயிருப்பார். கந்தப்புவின் ஊக்கத்தினாலேயே பல ஆக்கங்கள் எழுதியுள்ளேன். சில நாட்களுக்கு எழுதவில்லை எனில், ஏன் எழுதவில்லை என கேட்டு, என்னை எழுதவைப்பது கந்தப்பு தான். சென்ற பகுதியில் கூட, சின்னப்பு பற்றி எழுதியிருந்ததில் ஒரு இணைப்பை சரியாக குடுக்கவில்லை. அதை கூட சுட்டிக்காட்டி, தொடர்ந்து எழுத வேண்டும் என சொல்லியிருந்தார். என்னுடைய ஆக்கங்கள் வேறு இடங்களில் வெளியாகும் போது, அதை யாழில் தெரிவித்து என்னை மேலும் ஊக்கப்படுத்துவார். அதற்கு ஒரு சின்ன உதாரணம் தான்: ஒரு பேப்பரில் தூயாவின் சினிமாப்புலம்பல்.

கந்தப்பு எங்களுடன் தொடர்ந்து யாழில் பயணிக்க வேண்டும். தொடர்ந்து தாயகத்திற்கும், யாழுக்கும் உங்கள் பணியை செய்ய வேண்டும். தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் ஒரு தடவை, "மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள்" என கூறியுள்ளர். கந்தப்பு நீங்களும் நிச்சயம் ஒரு "போராளி" தான்.

பி.கு: என் உடாங் சம்பல் அது பாட்டுக்கு ஒஸ்திரேலியாவில் மட்டும் பிரபலமாகியிருந்தது. அதை சர்வதேச தரத்திற்கு எடுத்துச்சென்ற பெருமை கந்தப்புவையே சாரும். இணையத்தில் எங்கு போனாலும் "உடாங் சம்பல் தூயாவா நீங்க?" என பலர் கேட்கும் அளவிற்கு கந்தப்புவின் செயல் அமைந்துள்ளது. இந்த நேரத்தில் இதற்காக நான் கந்தப்புக்கு என் நன்றியை தெரிவித்துள்ளேன். எப்படியெல்லாம் உடாங்சம்பலுக்கு விளம்பரம் குத்துள்ளார் என பாருங்கள்:

"படத்தைப்பார்த்தால் மஞ்சள் அரைக்கிறமாதிரி தெரியவில்லை. ஊடாங்சம்பல் அரைப்பது போலக் கிடக்குது"

"குமாரசாமி செய்யும் ஊடாங் சம்பல் பொலியானது. சாப்பிட்டால் ஒன்றும் நடக்காது. உங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்கு உபயோகிக்கும் உண்மையான ஊடாங்சம்பல் இதோ"

Edited by தூயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழையவைகளை மீண்டும் அசை போட வைக்கும் தூயாவிற்கு வாழ்த்துக்களுடன் நன்றிகளும் உரித்தாகட்டும் :rolleyes:

  • தொடங்கியவர்

தூயாவிடம் ஒரு வேண்டுகோள்:-அங்கை அடுப்படிப்பக்கம் வைச்ச சொதி அலுத்துப்போச்சுது :) ஏதும் புதிசாய் நாக்குருசியாய் ஏதும் கண்டு புடிச்சு வைச்சிருக்கிறியளோ? :)

:rolleyes: ஆகா என் பரிசோதனைக்கு ஒரு ரசிகரா..

முதலில் துயாவுக்கு நன்றிகள் இன்றுவரை என்னை மறவாமல் வைத்திருப்பதற்க்கு அதுவும் நான் எழுதியவைகளை சரியாக தொகுத்து அருமையா சொன்னதற்க்கு நன்றிகள் மறக்கமுடியாது முன்னம் போல அடிக்கடி வரமுடிவதில்லை ஆணாலும் முடிந்தமட்டும் வரு முயற்சிக்கிறேன் நான் வராவிட்டலும் எனது கூட்டுவள் வருவினம் (முகத்தான் சாத்து குசா மற்றும் தலைமறைவான குத்தியன் )அடுத்து வாழ்துக்கூறியவர்களுக்கும் நன்றி என்றும் கள உறவுகளோடு

:wub: உங்க மச்சினன் நிஜமாவே காணாமல் போய்விட்டாரா சி*5?

  • கருத்துக்கள உறவுகள்

யாழும் நானும் பகுதியில் என்னைப் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றிகள் தூயா. யாழில் முன்பு நான் எழுதிய பதிவுகளை மீண்டும் யாபகப்படுத்தியுள்ளீர்கள் தூயா. நீங்கள் இணைத்த என்னுடைய பதிவுகளை வாசிக்கும் போது ஆரம்பகாலத்தில் பல எழுத்து, சொல் பிழைகளை நான் விட்டதினை உணரக்கூடியதாக இருக்கிறது. ஆரம்பகாலத்தில் நான் கணனியில் எப்படி தமிழ் எழுத்துக்களை எந்த ஆங்கில எழுத்தினை எழுதுவதினால் எழுதமுடியும் என்று தெரியாமல் இருந்தகாலம். என்னிடமுள்ள ஒரு கேட்ட பழக்கம் என்ன வென்றால், கருத்துக்களை வேகமாக எழுதியபின்பு திருப்பிப் படிக்காமல் பதிந்து விடுவது. இதனால் பல சொல்,எழுத்துப்பிழைகளை விடுவதுண்டு. என்னுடைய பழைய பதிவுகளை வாசிக்கும் போது அக்காலங்களில் இருந்த யாழ் உறுப்பினர்கள் பற்றிய இனிய அனுபவங்கள் ஞாபகத்துக்கு வருகிறது. அக்காலத்தில் இருந்த பலர் இப்பொழுது யாழுக்கு வருவதில்லை. நான் 2005ல் யாழில் எழுதத் தொடங்கினாலும், 2003ல் இருந்து யாழில் கருத்துக்கள் வாசிப்பவன்.

"கந்தப்புவை நேரில் பார்த்தால் "இவரா அவர்?" என ஆச்சர்யம் தான் வரும். கந்தப்புவின் அப்பு தான் கந்தப்புவாக இருக்க வேண்டும். " என்று தூயா பதிந்திருக்கிறார். அப்படியானால் அவதாரில் வரும் கந்தப்புவுக்கு அப்புவாக நான் படு கிழவனாக தெரிகிறேனா?. :icon_mrgreen:

நன்றிகள் தூயா.

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் சுவராசியம் குன்றாத எழுத்துக்கள் இதைப் படிக்கனும் என்று தோன்ற வைக்குது. :icon_mrgreen:

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குமாரசாமி செய்யும் ஊடாங் சம்பல் பொலியானது. சாப்பிட்டால் ஒன்றும் நடக்காது. உங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்குவதற்கு உபயோகிக்கும் உண்மையான ஊடாங்சம்பல் இதோ: <a href="http://www.yarl.com/forum3/index.php?showt...=10428&st=0" target="_blank">http://www.yarl.com/forum3/index.php?showt...=10428&st=0</a>

பதிவுகளில் நீலத்தில் காட்டியது போன்ற தவறுகளையும் . பெரிய அளவு கணக்கில்லாது கோடு போடுறதையும்.. திருத்திவிடுங்கள். பார்ப்பதற்கு.. அந்தரமாக இருக்கிறது. :(

Edited by nedukkalapoovan

கந்தப்புவை பற்றி அறிய கிடைத்தமைக்கு நன்றி........ :icon_mrgreen:

கந்தப்புவை பற்றி அறிய கிடைத்தமைக்கு நன்றி........ :(

  • தொடங்கியவர்

பழையவைகளை மீண்டும் அசை போட வைக்கும் தூயாவிற்கு வாழ்த்துக்களுடன் நன்றிகளும் உரித்தாகட்டும் :icon_mrgreen:

:(

"கந்தப்புவை நேரில் பார்த்தால் "இவரா அவர்?" என ஆச்சர்யம் தான் வரும். கந்தப்புவின் அப்பு தான் கந்தப்புவாக இருக்க வேண்டும். " என்று தூயா பதிந்திருக்கிறார். அப்படியானால் அவதாரில் வரும் கந்தப்புவுக்கு அப்புவாக நான் படு கிழவனாக தெரிகிறேனா?. :unsure:

நன்றிகள் தூயா.

நான் சொல்லக்கூடாது என நினைத்தேன்..நீங்களே சொல்லிட்டிங்க..கிகிகி..:P

சகோதரியின் சுவராசியம் குன்றாத எழுத்துக்கள் இதைப் படிக்கனும் என்று தோன்ற வைக்குது. :(

பதிவுகளில் நீலத்தில் காட்டியது போன்ற தவறுகளையும் . பெரிய அளவு கணக்கில்லாது கோடு போடுறதையும்.. திருத்திவிடுங்கள். பார்ப்பதற்கு.. அந்தரமாக இருக்கிறது. :unsure:

திருத்திவிட்டேன் நெடுக்ஸ்..இப்போ சரியா?

:icon_mrgreen::( கந்தப்புவைப் பற்றி நன்றாக அறிந்து விட்டீர்கள் யாழில்.

தூயா பபா கஸ்டபப்ட்டு தகவல்களை தரப்படுத்தினாலும் அழகாக கோர்த்து எழுதியுள்ளீர்கள்.

சின்னப்புவை பற்றிய ஒரு சுவாரசியமான பாடல்................. பழைய யாழில் இருந்திச்சு... இதோ மீண்டும் ஒருதடவை..........

sinn19wg.jpg

சிரிச்சி சிரிச்சி வந்தார்...

சாந்தமான பார்வையுடனே

சிரிச்சி சிரிச்சி வந்த சின்னப்பு

சிங்காரமாய் நெஷனல் உடுத்தியே

சைக்கிள் மிதிச்ச காலாலே இப்போ

பென்ஸ் கார் காஸ் யை மிதிச்சி மிதிச்சி

பத்து கிலோ மீட்டர் தூரத்தையும்

பவிசாக மின்னல் வேகத்தில் கடந்து

களம் நோக்கி வருகிறார் எங்கள் அப்பு

அறுபது கருத்தென்ன ஆழமான

ஆறாயிரம் கருத்துக்கள் என்ன

வாயெல்லாம் பற்கள் தெரிய அழகாய்

டுத்பேஸ்ட்டுக்கு விளம்பரம் தந்தது போல்

சிரிச்சி சிரிச்சி வாழ்த்துக்கள் கூறுவது

கடவுள் தந்த வரமோ என்றெண்ணியே

சின்னப்புக்கும் இனிதே வாழ்த்துக்கள்

*** குடிச்ச வாயாலே இங்கே

ரெமி மார்டின் என்றும் ஸ்கொட்ச் என்றும் மப்பில்

வாய்க்கு ருசி சிப்சும் கச்சானுமாய் தேடுறார்

பிலாவில குடிச்ச கூழும் மறந்து போய்

கரண்டி கத்தியுடன் சண்டை பிடித்தே

பிட்சா என்றும் இறைச்சி பொறியலுமாய் ஒரு

வெட்டு வெட்டியே உள்ளே தள்ளுறார்

பழசு தான் புதுசு என்ற நினைப்புடன்

இளமை ஊஞ்சலாடுது என்றே

கறுப்புக் கண்ணாடியுடனும் சேட் பொத்தானை

திறந்து விட்டுக் கொண்டும் ஒரு பவுணில்

தோடுடைய செவியனாய் வலம் வந்தே

த்ரிஷாவுடன் ஆடும் நடத்துற லூட்டி

அப்பப்பா கொஞ்சநஞ்சமல்ல

சின்னாச்சிக்கு விஷயத்தை போட்டுக்கொடுக்க

நானும் சின்னாச்சியின் வீட்டுக் கதவைத்தட்ட

பாதி த்ரிஷாவும் பாதி சின்னாச்சிமாய்

மேக்கப் கலைந்தும் கலையாமல் வந்து நின்ற

சின்னாச்சியை பார்த்தே சிலையாய் சமைந்து போனேன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பகுதி 6: யாழில் எம் மரியாதைக்குரியவர்கள்

யாழ்கள அப்புக்களை பற்றி எழுதலாம் என நினைத்தேன். சின்னப்பு, கந்தப்புவை பற்றி எழுதியவுடன் தான் ஒரு சந்தேகம். இவர்கள் இருவரும் பெயரிலையே அப்பு என கொண்டதால் தைரியமாக எழுதிவிட்டோம். ஆனால் மற்றவர்களை அப்பு என சொல்லி, ஏதும் பிரச்சனை வந்தால். அதனால் "மதிப்புக்குரியவர்கள்" எனும் தலைப்பில் எழுதலாம் என புத்திசாலித்தனமாக (யார் அது சிரிப்பது?) முடிவெடுத்துள்ளேன்.

குமாரசாமி

123623814843335f5304067.gif

யாழில் இணைந்த நாட்களில் இருந்து கள உறவுகள் குமாரசாமி அவர்களுக்கு தரும் மரியாதையை பார்த்து நானும் எங்க அப்பப்பா வயதிருக்கும் போல என நினைத்துக்கொண்டேன். நினைத்தது அப்படியே நிலைத்துவிட பேசும் போது ஒரு மரியாதையாவே பேச்சு வருது. ஆனால் கந்தப்பு, சின்னப்பு போல இவரும் எனக்கு அண்ணா வயதுடையவராகத்தான் இருப்பார் என நினைக்கின்றேன்.

இணைந்தது: 26-November 04

நண்பர்கள்: சி*5, கந்தப்பு

அதிகம் எழுதிய பகுதிகள்: வண்ணத்திரை, நலமோடு நாம் வாழ, உலக நடப்பு

குமாரசாமிட பதிவுகளில் மிகவும் பிரபலமான பதிவு என பார்த்தால் "மஞ்சள் அரைக்கும் யாழ்கள சகோதரி" எப்படா என காத்திருந்தது போல எங்க சகோதரர்கள் அப்பதிவுக்கு போட்டிருக்கும் பதில்களையும் தான் படித்து பாருங்களேன். இதில் ஈழவன் எல்லாம் ரொம்ப அதிகம். இப்படி பலரின் மனதை வெளியே கொண்டுவரும் ஒரு பதிவை சாதாரணமா ஒரு படம் மூலம் போட குமாரசாமியால் தான் முடியும்.

அதே போல வந்த பதிவு தான் "விடுப்பு விமலாவின் மறுபக்கம்" என்ன பதில் எழுதுகின்றார்கள் என கேட்க கூடாது. ஆனால் ஒரு நாலு பக்கமாவது பதில்கள் தொடரும். இதில் சில பல வெட்டுக்களும் நடைபெறும். அட வீரத்தளும்பில்லாமல் எப்படி ஒரு வீரனாக முடியும்.

ஒரு சரித்திர புகழ் வாய்ந்த பதிவென்றால் "உடாங்சம்பல்" பதிவு தான். http://www.yarl.com/forum3/index.php?showtopic=20963&hl= ஏதோ எனக்கு ஆதரவா ஒரு ஜீவன் (குமாரசாமி தான்) ஒரு பதிவு போட்டால், அதை கெடுப்பதற்கு என்றே ஆதி, கந்தப்பு போன்ற புண்ணிய்வான்கள் இருக்கார்கள். ஏன் இப்படி என் மேல் கொலை வெறியோ தெரியவில்லை. அன்றோடு சமையல் பதிவே குமாரசாமி போடாத அளவுக்கு கொடுமை நடந்துள்ளது.

குமாரசாமியால் தான் "சூரியாவுக்கு அம்மாவாக சிம்ரன்" பதிவையும் போட முடியும், "செவ்வாய்கிரகத்தில் பெண்" என்ற பதிவையும் போட முடியும். அனைத்து துறைகளையும் கரைத்து குடித்திருப்பாரோ!!

என்ன தான் குமாராசாமி பல நல்ல பதிவுகளை எழுதியிருந்தாலும். அண்மையில் அவர் ஆரம்பித்த "அடி வாங்குவோர் சங்கம்" என்ற பதிவு இந்த அளவு பிரபலமடையும் என அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்பதிவில் சோழிஸ், கந்தப்பு, வசம்பு போன்றோரின் அமோக ஆதரவை பார்த்து யாழ்களமே மிரண்டு போய்விட்டதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

குமாரசாமியில் வண்ணத்திரை பதிவுகளை பார்த்தால், இவர் ஒரு சிம்ரன் ரசிகராக இருப்பாரோ என்ற சந்தேகம் யாழ்கள சிட்னி துப்பறிவாளர்களுக்கு எழுகின்றதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. இதை குமாரசாமி அவர்கள் உறுதிசெய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவாரசியமான திரிகளும், அவரின் ஒவ்வொரு பதிவிலும், பதிகளிலும் இழைந்தோடும் மெல்லிய நகைச்சுவையும் தான் குமாரசாமியின் தனித்துவம் என நினைக்கின்றேன். யாழோடு தொடர்ந்திருங்கள்..மகிழ்ந்திர

ுங்கள்..

சின்னக்குட்டி

av42ki4.jpg

நான் யாழில் இணைந்த நாளிலிருந்து பார்த்துவரும் ஒரு உறவு சின்னகுட்டிஸ். சின்னக்குட்டி வலைப்பூவிலும் அதிகம் எழுதி வருபவர் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். சுவாரசியமான சினிமா தகவல்களை தொகுத்து தருவதில் சின்னக்குட்டிக்கு நிகர் அவரே தான். சினிமா என்றாலே வெறுமே வதந்திகள் என்பதை உடைத்து, சினிமாவில் உள்ள தொழில் சம்பந்தப்பட்ட தகவகல் பலவற்றை எழுதியுள்ளார்.

யாழில் இணைந்தது: Joined: 2-August 05

நண்பர்கள்: சாத்திரி, கானாஸ்

அதிகம் எழுதும் பகுதி: வண்ணத்திரை

சின்னக்குட்டி தன் வலைப்பூவை அறிமுகம் செய்த பதிவு இது தான். "அப்பன் மவனே சிங்கன்டா" ஆரம்பத்தில் யாழில் இருந்து வலைப்பூக்களை ஆரம்பித்த சிலரில் சின்னக்குட்டியும் ஒருவர்.

சின்னக்குட்டியின் "சாயிபாபா மாஜிக் படம் தெரியவில்லையாம்" பதிவு மிகவும் சுவாரசியமானது. பதிகளை வீடியோவில் போட்டே அசத்திவிடுவார். இவரின் பல பதிவுகள் படங்களாகவும், வீடியோக்களுமாகவே அமைந்துவிடும்.

வண்ணத்திரையை தாண்டி சின்னக்குட்டி போட்ட பதிவு தான் "எக்ஸ்யூஸ் மீ உதவி செய்ய முடியுமா?" அதன் பின்னர் எழுதிய "இங்கும் குண்டு சத்தம் கேட்கும்" கதையும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு பதிவு. அதன் பின்னர் எழுதிய "துலைக்கே போறியள்" என்ற கதை எம்மில் பலருக்கு "துலைக்கே" என்ற வழக்காடலை புதிதாக கற்றுத்தந்தது. இதன் பின்னர் சின்னக்குட்டி கதையெழுதுவதில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். கதை கதையாமில் பார்த்தாலும் உங்களுக்கே தெரியும். எம்மில் ஒருவர் நல்ல எழுத்தாளராக வருகின்றார். பாராட்டி மகிழ்வோம்.

பெரிதாக பேசி பழக்கம் இல்லாவிடினும், எனக்கும், சின்னக்குட்டிகும், கானாஸுக்கும் ஒரு இணைப்பு உண்டு. ஆரம்பத்தில் வலைப்பூவிலகில் நாங்கள் மூவரும் தனியே இருந்தோம் என சொல்லலாம். அதாவது யாழில் இருந்து போனவர்கள். என்னுடை ஓவ்வொரு பதிவுக்கும் சரியான கணிப்பு சின்னக்குட்டியிடம் இருந்து கிடைத்துவிடும். யாழிலும் சரி, வலைப்பூவிலும் சரி, என் ஆக்கங்களுக்கு ஊக்கம் தரும் சின்னக்குட்டிக்கு இந்த நேரத்தில் அன்பான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்.

செல்வமுத்து

selvamuththu8av.jpg

எனக்கு அதிகம் தெரியாத ஒருவர். ஆனால் களத்தில் தன் கருத்தாடல் மூலமே மற்றவர்கள தன்னை மதிக்கும் அளவுக்கு உயர்த்திக்கொண்டவர் என்றால் அது செல்வமுத்து "ஐயா" தான். களத்தில் அனைவராலும் "ஐயா" என அழைக்கப்படும் ஒரே கள உறவென்றால் அது செல்வமுத்து ஐயா தானே. ஐயா அவர்கள் ஒரு ஆசிரியர் என களத்தில் பலர் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அதனால் தான் "ஐயா" ஆகினாரா?!

யாழில் இணைந்தது: 23-October 05

அதிகம் எழுதுவது: கவிதை பூங்கா

அதிகம் பதில் எழுதுவது: எங்கெல்லாம் அவருக்கு நல்ல மாணவர்கள் கிடைக்கின்றார்களோ அங்கு

நாளுக்கு ஒரு கருத்து என எண்ணித்தான் எழுதுவார் போல. இத்தனை வருடங்களில் 709 கருத்து எழுதி சாதனை படைத்துள்ளார். ஆனால் அத்தனையும் முத்துக்கள். சேகரிக்கப்பட வேண்டியவைகள். அது போல தான் அவர் ஆரம்பித்த திரிகளும். விரல்களால் எண்ணிவிடலாம் ஆனால் அத்தனையும் கருத்தாழம் கொண்டவை.

ஐயா என கொஞ்சம் ஒதுங்கியிருந்த களத்தை "காதல் சினிமா பாடல் எழுதுங்கள்" என அழைத்தாரே நினைவிருக்கா? ஐயா எழுதிய "அப்பா எங்கே" கதையினை அனைவரும் படித்து பாருங்கள். நல்ல கருத்துடைய கதை. அத்தோடு என்னை மிகவும் கவர்ந்த "உதைப்பந்தாட்டம்" கவிதையையும் முன்னரே படித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். சரியான நேரத்தில் ஒரு நல்ல கவிதை. இல்லையா?

எப்போதும் பதில்கள் எழுதும் போது "ஐயா" என்ற சொல்லை காப்பாற்றும் விதமாக எழுதுவது நாங்க எல்லாருமே அறிந்தது தான். ஆனால் போற போக்கில சில சுவாரசியமான கருத்துக்களையும் சொல்ல தவறுவதில்லை என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை பாருங்களேன்: "இனம் இனத்தைச் சேரும் என்பதுபோல (அடி வாங்கிய) எல்லாக் கள ஆண்களும் இணைந்துவிட்டீர்கள்போல உள்ளது. இதற்குத்தான் சீதனம் வாங்கவேண்டாம் என்று சொல்வார்கள். அப்போது தெரியாது ஆனால் இப்போது எல்லோரும் அதன் பலனை அனுபவிக்கிறீர்களோ? சும்மா சொல்லப்படாது, எல்லோருடைய அனுபங்களுமே மிகவும் சுவையாக உள்ளன. திருமணம் முடிக்கப்போகும் உறவுகளுக்கு நிச்சயம் உதவும். அதுசரி அடிப்போர் (பெண்) சங்கத்தை யாரும் ஆரம்பிக்கவில்லையா? அனுபங்களைக் கேட்க ஆவலாக உள்ளேன்."

பொதுவா யாழ்சமையல்கட்டுக்குள் யார் நுழைந்தாலும் எனக்கு தெரியாமல் போகாது. யார் என்ன என்ன எழுதியுள்ளார்கள் என தூக்கத்தில் கேட்டாலும் சொல்வேன். அப்படி செல்வமுத்து ஐயா எழுதிய ஒர் கருத்தை இங்கே பார்க்கலாம். வசியண்ணாவின் இடியப்ப வாக்கெடுப்பில் ஐயா அவர்கள்.

செல்வமுத்து ஐயா அவர்களில் பல ஆலோசனைகள் எங்களில் பலருக்கு உதவியாக உள்ளது. மற்றவர்களுக்கு எப்படியோ, எனக்கு மிகவும் உதவியாக உள்ளது. அதில் ஒன்று "நான் பொதுவாக ஒன்றைக் கூற அனுமதிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அதிகமானோர் எழுதும்போது விடுகின்ற தவறுகள்: உயிரெழுத்துக்களுக்கு முன்னால் கட்டாயம் 'ஓர்"

என்று வரவேண்டும். 'ற்" 'க்" இரண்டும் அடுத்தடுத்து வரக்கூடாது. ஒரு கதையை எழுதிவிட்டு குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவைகள் வாசித்தால் எழுத்துப்பிழைகள் இருந்தால் தவிர்க்கலாம், எங்கெங்கே மாற்றங்கள் செய்தால் இனிப்பாக இருக்கும் என்பதும் எழுதுபவர் மனத்தில் எழலாம்." ஐயா அவர்கள் என்னை போன்றவர்களுக்கு உதவுவது போல் தமிழ் பற்றிய ஒரு திரியை ஆரம்பிக்கணும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

ஒரு ஆசிரியருக்கே உரிய அளவான கண்டிப்பும், மனம் நோகாது திருத்தும் குணமும் செல்வமுத்து ஐயாவின் பல கருத்துக்களில் உள்ளது. அதில் ஒன்று இதோ: "இதை தினமும் கடைபிடியுங்கள்"

தமிழில் சந்தேகமா? கூப்பிடுங்கள் செல்வமுத்து ஐயாவை எனும் நிலை யாழில் உள்ளது. ஐயா தொடர்ந்து எங்களோடு யாழில் பயணிக்க வேண்டும். மேலும் நல்ல பல படைப்புக்களையும், கருத்துக்களையும் தர வேண்டும்.

இந்த பதிவின் நீளம் அதிகமாகிவிட்டது. இத்தோடு நிறுத்திக்கோ தூயா என பல குரல் எனக்கு இப்பவே கேட்குதே. அதனால் ஒரு சிறிய இடைவெளி. எம்மரியாதைக்கிரியவர்கள் பற்றி நீங்களும் உங்களோட கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன். அடுத்த பகுதியில் எங்கள் அனைவராலும் முகம் என அழைக்கப்படும் சின்னப்புவின் உயிர் தோழன் முகத்தார் பற்றி எழுத நினைக்கின்றேன்.

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் பதிவின் மூலம் கு.சா, செல்வமுத்து,சின்னக்குட்டி போன்றவர்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தூயா.

கு.சாவின் நகைச்சுவை உணர்வு என்னைக் கவர்ந்தது. எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு வராது. "மஞ்சள் அரைக்கும் யாழ்கள சகோதரி" என்ற பதிவில் தூயா சொல்வதைப் போல சாதாரணமாக ஒரு படத்தின் முலம் எல்லோரையும் கவரச் செய்தவர் கு.சா.

சின்னக்குட்டியின் வலைப்பதிவுகளை நான் விரும்பிப்படிப்பதுண்டு. அதில் 70களில், 80களில் நடந்த சில சம்பவங்களைச்( அக்காலங்களில் நடைபெற்ற கொலை வழக்குகள், அக்கால அரசியல், பத்திரிகைச் செய்திகள்) சுவைபடத் தருபவர்.

செல்வமுத்து அவர்கள் ஒரு பொறியியலாளர். புலவர் சிவநாதனின் நண்பர். இலண்டனில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பவர். எழுத்துப்பிழைகளை சுட்டிக் காட்டுபவர். 20 வருடங்களுக்கு மேல் இலண்டனில் வாழ்ந்தாலும் தமிழ் உணர்வு மிக்கவர். ஆனால் யாழுக்கு தற்பொழுது வருவது மிகவும் குறைவு.

மீண்டும் நன்றிகள் தூயா.

வணக்கம் தூயா...என்னையும் உங்கள் நினைவு மீட்டல் பகுதியில் கெளரவ படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்

பெரிதாக பேசி பழக்கம் இல்லாவிடினும், எனக்கும், சின்னக்குட்டிகும், கானாஸுக்கும் ஒரு இணைப்பு உண்டு

உண்மை தான்...எனக்கும் அந்த உணர்வு இருந்தது

]

.

இதன் பின்னர் சின்னக்குட்டி கதையெழுதுவதில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். கதை கதையாமில் பார்த்தாலும் உங்களுக்கே தெரியும். எம்மில் ஒருவர் நல்ல எழுத்தாளராக வருகின்றார். பாராட்டி மகிழ்வோம்

கேட்க சந்தோசமாகத்தான் இருக்கிறது...ஹி ஹி...இதில் ஜோக்குக்கு இல்லை தானே :lol::D

Edited by sinnakuddy

  • கருத்துக்கள உறவுகள்

தூயா, யாழில் பலரை அச்சொட்டாக அறிந்து வைத்துள்ளீர்கள். தொடருங்கள்.

  • தொடங்கியவர்

தூயாவின் பதிவின் மூலம் கு.சா, செல்வமுத்து,சின்னக்குட்டி போன்றவர்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் தூயா.

கு.சாவின் நகைச்சுவை உணர்வு என்னைக் கவர்ந்தது. எல்லோருக்கும் நகைச்சுவை உணர்வு வராது. "மஞ்சள் அரைக்கும் யாழ்கள சகோதரி" என்ற பதிவில் தூயா சொல்வதைப் போல சாதாரணமாக ஒரு படத்தின் முலம் எல்லோரையும் கவரச் செய்தவர் கு.சா.

சின்னக்குட்டியின் வலைப்பதிவுகளை நான் விரும்பிப்படிப்பதுண்டு. அதில் 70களில், 80களில் நடந்த சில சம்பவங்களைச்( அக்காலங்களில் நடைபெற்ற கொலை வழக்குகள், அக்கால அரசியல், பத்திரிகைச் செய்திகள்) சுவைபடத் தருபவர்.

செல்வமுத்து அவர்கள் ஒரு பொறியியலாளர். புலவர் சிவநாதனின் நண்பர். இலண்டனில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் தமிழ் கற்பிப்பவர். எழுத்துப்பிழைகளை சுட்டிக் காட்டுபவர். 20 வருடங்களுக்கு மேல் இலண்டனில் வாழ்ந்தாலும் தமிழ் உணர்வு மிக்கவர். ஆனால் யாழுக்கு தற்பொழுது வருவது மிகவும் குறைவு.

மீண்டும் நன்றிகள் தூயா.

எனக்கு தெரியாத தகவல்கள் சொல்கின்றீர்கள் கந்தப்பு...தொடர்ந்து பகிருங்கள்.. :wub:

வணக்கம் தூயா...என்னையும் உங்கள் நினைவு மீட்டல் பகுதியில் கெளரவ படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்

நன்றியெல்லாம் எதற்கு...இது எங்கள் அன்பின் வெளிப்பாடு..

தொடர்ந்து நிறைய நீங்க எழுதணும்...:)

யாழ் உறவுகளுடன் உங்களின் நினைவுமீட்டல் அருமை.

எல்லாரைப் பற்றியும் அருமையாக எழுதி உள்ளீர்கள்

பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

தூயா, யாழில் பலரை அச்சொட்டாக அறிந்து வைத்துள்ளீர்கள். தொடருங்கள்.

ஐந்து வருடங்களாக தினம் பார்க்கும் மனிதர்களாயிற்றே..:wub: உங்களை பற்றி கூட தான் நிறைய சொல்ல இருக்கு..சொல்லும் போது பாருங்களேன் :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.