Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்..!

Featured Replies

அனைவருக்கும் இனிய பொங்குதமிழ் வணக்கங்கள்!

நேற்று நோர்வேயில் நிகழ்ந்த பொங்குதமிழ் நிகழ்ச்சியை தொலைக்காட்சியூடாக காணும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அங்கு உரையாற்றிய ஒருவர் (பெயர் தெரியவில்லை மன்னிக்கவும்) எமது தலைவரைப் பற்றி கூறிய ஒரு கதைகேட்டு உண்மையில் மனம் நெகிழ்ந்துவிட்டேன். இந்தக்கதையை பலரும் அறிந்து இருப்பது நல்லது போல தோன்றுகின்றது. எனவே, அதன் முக்கியத்துவம் கருதி இந்த சம்பவத்தை பற்றி அறியாதவர்களுக்காக அதை இங்கு பதிகின்றேன்.

முன்னொரு பொழுது ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் விடுதலைப்புலிகளிடம் பிடிபட்டு இருந்தான். விடுதலைப் புலிகள் அவனை யுத்தகைதியாக சிறைப்பிடித்து வைத்து இருந்தனர். காலங்கள் கடந்தது. வழமையாக நடைபெறுவதுபோல்... சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்ட செய்தி குடும்பத்தினருக்கு பறந்தது. சிப்பாயின் மனைவி மிகவும் கலக்கமுற்றாள். என்ன செய்வதென்று தவித்தாள். இறுதியில் தலைவருக்கு ஒரு உருக்கமான மடல் ஒன்று வரைந்தாள். தலைவரிடம் அவளது மடல் சேர்ப்பிக்கப்பட்டது. மடலில் அவள் தன்னை தனது கணவனை வன்னிக்கு வந்து பார்ப்பதற்கு அனுமதி தருமாறு கேட்டு இருந்தாள். தலைவரும் மனம் இரங்கி அவள் தனது கணவனை வந்து பார்ப்பதற்கு அனுமதி அளித்தார். பதில் சென்றடைந்ததும்... அந்தப்பெண் உடனடியாகவே சொல்லியபடி... பேருந்தில் ஏறி வன்னியை வந்தடைந்தாள்.

அவளுக்கு தனது கணவனான சிங்கள இராணுவச் சிப்பாயை கண்டு கதைப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. ஆனால் அவள் தங்கிநிற்க வசதி இல்லை. அன்றே அவள் கடைசிப் பேருந்திலாவது ஏறி ஊருக்கு திரும்பிச் செல்லவேண்டும். ஆனால்.. அவள் தனது கணவனுடன் நீண்டநேரம் மினக்கெட்டு விட்டதால் வவுனியாவுக்கு செல்லும் இறுதிப்பேருந்தை தவறவிட்டு விட்டாள். அவளது பிரயாணச் சந்திப்பிற்கு பொறுப்பானவர் இந்தவிடயத்தை தலைமைக்கு அறிவித்தார்.

தலைவருக்கு இந்தச்செய்தி பறந்தது. என்ன செய்வதென்று யோசித்தார். சிறிதுநேரத்தில் அவளையும், சிப்பாயையும் ஒன்றாக ஒரு தனி அறையில் தங்குவதற்கு வசதி செய்துகொடுக்கும்படி அறிவித்தல் கொடுத்தார். பொறுப்பாளரும் ஆகவேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார். கணவன், மனைவி இருவரும் அன்றைய பொழுதை ஒன்றாக இருந்து மகிழ்ச்சியாக களித்தபின்.. மறுநாள் அவள் தனது ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டாள்.

பின்னர் மூன்று மாதங்களின் பின், அந்த சிங்களப்பெண்ணிடம் இருந்து மீண்டும் ஒரு மடல் தலைவருக்கு வந்தது. அந்த மடலில் அவள் தலைவரின் மனிதாபிமானத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்து இருந்த அதேசமயம்.. தனக்கு உருவாகி இருக்கும் ஒரு புதிய பிரச்சனை பற்றி சொல்லி இருந்தாள். அதில் அவள் தான் மூன்று மாதம் கற்பிணியாக இருப்பதாகவும், கணவன் தன்னுடன் இல்லாத நிலையில் தான் கற்பிணியாக இருப்பது எப்படி என்று பிறரால் எழக்கூடிய பிரச்சனைகள் பற்றிதான் கவலை கொண்டு இருப்பதாகவும், மேலும்... எதிர்காலத்தில் பிறக்கப்போகும் குழந்தை வளர்ந்து "எண்ட அப்பா வன்னியில எதிரிகளிண்ட பிடியில இருக்கேக்க தனியா இருந்த நீ எப்பிடி என்னப் பெத்து எடுத்தாய்?" எண்டு ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தான் என்ன பதில்கூறுவது என்றும்... இவ்வாறு தனது மன உலைச்சல்கள் பற்றி தலைவருக்கு விரிவாக எழுதி இருந்தாள்.

மடலை வாசித்த தலைவர் நெகிழ்ந்துவிட்டார். சிந்தித்தார்... உடனடியாகவே சிறைப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட சிங்களச் சிப்பாயை விடுவிக்குமாறு உத்தரவு பறந்தது. சிப்பாயும் விடுதலை செய்யப்பட்டு மனைவியுடன் சேர்ப்பிக்கப்பட்டான்.

கதை இதுதான்.. இது சிலருக்கு ஒரு சின்னக் கதையாகவே இருக்கலாம். ஆனால்... இந்தக்கதை மூலம் நாங்கள் எதை அறியக்கூடியதாக இருக்கின்றது என்பதை சற்று சிந்தித்து பார்த்தால் எம்மில் பலர் வழமையாக கேட்கின்ற பல கேள்விகளிற்கு - குழப்பங்களிற்கு பதில்கள் கிடைத்துவிடும்.

அதாவது... பயங்கரவாதி என்பவன் யார்? பயங்கரவாதம் என்பது என்ன? சிறீ லங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எங்கள் தலைவரின் நிலமையில் தான் இருந்தால் இதே மாதிரியான நடவடிக்கையை எடுத்து இருப்பாரா? சிறைபிடிக்கப்பட்ட சிங்கள இராணுவ வீரன்... விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில்.. குற்றவாளி.. தமிழர்களை அழிக்கவென புறப்பட்டு வந்த எதிரி... ஆனால்.. இதேநிலமையை மற்றைய புறம் திருப்பிப் பார்க்கும்போது.... அதாவது ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் சிறீ லங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டால்.. தலைவரின் பாணியில் சிறீ லங்கா ஜனாதிபதி மூலம் நடவடிக்கை எடுத்து இருக்க முடியுமா? சிறீ லங்கா ஜனாதிபதி தேவையில்லை... சிறீ லங்கா நீதிமன்றம் ஒன்றின் மூலம் மனிதாபிமான முறையில் ஒரு விடுதலைப்புலி உறுப்பினர் இவ்வாறு நடாத்தப்பட்டு இருக்க முடியுமா? இவ்வாறான ஒரு சம்பவம் சிறீ லங்கா நாட்டில் நடைபெற சந்தர்ப்ப்பம் இருக்கின்றதா?

நிச்சயமாக இல்லை. ஆனால்.. ஒரு பயங்கரவாதிகள் கூட்டம் என்று சொல்லப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரால் எப்படி இப்படி செய்ய முடிந்தது? சட்டபூர்வமான, நேர்மையான, நீதியான, ஜனநாயக நாட்டில் நடக்காத ஒரு அருமையான விசயம் பயங்கரவாதிகள் என்று உலகம் முத்திரைகுத்தி பட்டம் அளித்தவர்களின் கட்டுப்பாட்டு பகுதியில் எவ்வாறு நிகழமுடிகின்றது?

எப்போதோ நடைபெற்ற இந்தச்சம்பவம் மூலம் விடுதலைப் புலிகளிற்கு விளம்பரம் கூட ஏற்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை. இப்படியான செய்கைகள் மூலம் விளம்பரம் வருகின்றது என்று நினைத்தால் கூட சரி... விளம்பரத்திற்காக இப்படி செய்தார்கள் என்று சொல்லலாம். அப்படி நடக்கவில்லை. ஆனால்... ஒரு நாட்டிற்கு ஒப்பான தலைவனுக்கு... இப்படியான ஒரு சிறிய விசயத்தினுள் மூக்கை நுழைக்கவேண்டிய தேவை என்ன? இப்படியான ஒரு சிறிய விசயம் பற்றி அக்கறை கொள்ளவேண்டியதன் தேவை என்ன?

ஒரு நாட்டின் தலைவன் என்றால் அவனுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். மூச்சுவிடுவதற்கே நேரம் போதாமல் இருக்கும். இந்தநிலையில் அவன் சில்லறை விசயங்கள் பற்றி யோசிச்சுக்கூட பார்க்க மாட்டான். ஆனால்... எங்கள் தலைவன் இவ்வாறு செய்ய வேண்டியதன் தேவை என்ன? யாரோ ஒரு சிங்களச் சிப்பாய்.. யாரோ ஒரு சிங்களச்சி.. இப்போது சிப்பாய் வசமாக மாட்டுப்பட்டு விட்டான். இதுபற்றி அலட்டிக்கொள்ள என்ன தேவை இருந்தது? ஆனால் எமது தலைவன் அப்படி செய்யவில்லை.. ஏன்.. ??

அங்கேதான் அவனின் தலைமைத்துவம் தெரிகின்றது. தனது தனிப்பட்ட சுகங்களைப்பற்றி மட்டும் யோசிக்கும் - நேசிக்கும் ஒருவனால் இப்படி எல்லாம் நிச்சயமாக செய்ய முடியாது. இப்படி எல்லாம் சிந்திக்கக்கூட முடியாது. மற்றவனின் உணர்வுகளை புரிந்து நடக்கும் ஒருவனாலேயே இது எல்லாம் சாத்தியப்படும். இறுதியாக...

நான் முன்பு ஒரு தடவை.. தலைவருடனான செவ்வி ஒன்றை கேட்டு / வாசித்து இருந்தேன். அதில் பேட்டி காண்பவர் எமது தலைவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். அதாவது "நீங்கள் தமிழீழம் கிடைச்சதும் என்ன செய்வீர்கள்? தமிழீழ அரசின் தலைவராக இருப்பீர்களா?" என்று... அதற்கு தலைவர் அளித்த பதில்... "நான் தாயகப் போரில் காயப்பட்ட.. உடல் ஊனமுற்ற போராளிகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்துகொண்டு ஒரு மூலையில் இருப்பேன்" என்று...

எமது தலைவனைப் பற்றி விளங்கிகொள்ள இதற்கு மேல்... விளக்கம் தேவை இல்லை என நினைக்கின்றேன்.

பி/கு: இந்தப்பதிவு ஏற்கனவே விளக்கம், தெளிவு உள்ளவர்களுக்கானது அல்ல. விளக்கம் குறைஞ்சவர்களுக்கானது. :D நன்றி! வணக்கம்!

IMG4930-1213468844.jpg

எண்ணக்கரு: உள்ளூர்வாசி | ஓவியம்: உள்ளூர் வாசி (ஓவியரல்ல)

உண்மைதான்...

தடுமாறிக்கிடந்த தமிழினத்துக்கு இயற்கையால் வழங்கப்பட்டவன் தான் எங்கள் தலைவன்... அவர்காலத்தில் வாழ்ந்தோமென்பதெ எமக்குப்பெருமை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னொரு பொழுது ஒரு சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவன் விடுதலைப்புலிகளிடம் பிடிபட்டு இருந்தான். விடுதலைப் புலிகள் அவனை யுத்தகைதியாக சிறைப்பிடித்து வைத்து இருந்தனர். காலங்கள் கடந்தது. வழமையாக நடைபெறுவதுபோல்... சிப்பாய் சிறைப்பிடிக்கப்பட்ட செய்தி குடும்பத்தினருக்கு பறந்தது. சிப்பாயின் மனைவி மிகவும் கலக்கமுற்றாள். என்ன செய்வதென்று தவித்தாள். இறுதியில் தலைவருக்கு ஒரு உருக்கமான மடல் ஒன்று வரைந்தாள். தலைவரிடம் அவளது மடல் சேர்ப்பிக்கப்பட்டது. மடலில் அவள் தன்னை தனது கணவனை வன்னிக்கு வந்து பார்ப்பதற்கு அனுமதி தருமாறு கேட்டு இருந்தாள். தலைவரும் மனம் இரங்கி அவள் தனது கணவனை வந்து பார்ப்பதற்கு அனுமதி அளித்தார். பதில் சென்றடைந்ததும்... அந்தப்பெண் உடனடியாகவே சொல்லியபடி... பேருந்தில் ஏறி வன்னியை வந்தடைந்தாள்.

அவளுக்கு தனது கணவனான சிங்கள இராணுவச் சிப்பாயை கண்டு கதைப்பதற்கு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. ஆனால் அவள் தங்கிநிற்க வசதி இல்லை. அன்றே அவள் கடைசிப் பேருந்திலாவது ஏறி ஊருக்கு திரும்பிச் செல்லவேண்டும். ஆனால்.. அவள் தனது கணவனுடன் நீண்டநேரம் மினக்கெட்டு விட்டதால் வவுனியாவுக்கு செல்லும் இறுதிப்பேருந்தை தவறவிட்டு விட்டாள். அவளது பிரயாணச் சந்திப்பிற்கு பொறுப்பானவர் இந்தவிடயத்தை தலைமைக்கு அறிவித்தார்.

தலைவருக்கு இந்தச்செய்தி பறந்தது. என்ன செய்வதென்று யோசித்தார். சிறிதுநேரத்தில் அவளையும், சிப்பாயையும் ஒன்றாக ஒரு தனி அறையில் தங்குவதற்கு வசதி செய்துகொடுக்கும்படி அறிவித்தல் கொடுத்தார். பொறுப்பாளரும் ஆகவேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார். கணவன், மனைவி இருவரும் அன்றைய பொழுதை ஒன்றாக இருந்து மகிழ்ச்சியாக களித்தபின்.. மறுநாள் அவள் தனது ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டாள்.

பின்னர் மூன்று மாதங்களின் பின், அந்த சிங்களப்பெண்ணிடம் இருந்து மீண்டும் ஒரு மடல் தலைவருக்கு வந்தது. அந்த மடலில் அவள் தலைவரின் மனிதாபிமானத்திற்கு தனது நன்றிகளை தெரிவித்து இருந்த அதேசமயம்.. தனக்கு உருவாகி இருக்கும் ஒரு புதிய பிரச்சனை பற்றி சொல்லி இருந்தாள். அதில் அவள் தான் மூன்று மாதம் கற்பிணியாக இருப்பதாகவும், கணவன் தன்னுடன் இல்லாத நிலையில் தான் கற்பிணியாக இருப்பது எப்படி என்று பிறரால் எழக்கூடிய பிரச்சனைகள் பற்றிதான் கவலை கொண்டு இருப்பதாகவும், மேலும்... எதிர்காலத்தில் பிறக்கப்போகும் குழந்தை வளர்ந்து "எண்ட அப்பா வன்னியில எதிரிகளிண்ட பிடியில இருக்கேக்க தனியா இருந்த நீ எப்பிடி என்னப் பெத்து எடுத்தாய்?" எண்டு ஒரு கேள்வி கேட்டால் அதற்கு தான் என்ன பதில்கூறுவது என்றும்... இவ்வாறு தனது மன உலைச்சல்கள் பற்றி தலைவருக்கு விரிவாக எழுதி இருந்தாள்.

மடலை வாசித்த தலைவர் நெகிழ்ந்துவிட்டார். சிந்தித்தார்... உடனடியாகவே சிறைப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட சிங்களச் சிப்பாயை விடுவிக்குமாறு உத்தரவு பறந்தது. சிப்பாயும் விடுதலை செய்யப்பட்டு மனைவியுடன் சேர்ப்பிக்கப்பட்டான்.

இதை விட வேறென்ன உதாரணம் எமது தலைவன் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் சிங்களம் செய்தது என்னவெனில் சுனாமி மூலம் அகதிகளாக்கப்பட்டு நிர்க்கதியான தமிழ் மக்களுக்கு உலக நாடுகளின் உதவி போய் சேராமல் சட்டம் என்றொரு நாடகமாடி எந்த ஒரு உதவியும் கிடைக்காமல் அநாதரவாக விடப்பட்ட மக்கள் இன்றும் தெருவோரங்களில் தமது வாழ்க்கையை நடத்துவதை காணலாம். இதற்குள் எமக்கு பயங்கரவாதிகள் என்ற முத்திரை உலக நாடுகளால் பொறிக்கப்பட்டது வேறு.

  • தொடங்கியவர்

கீழ வாசகன் இணைச்சு இருக்கிற படத்தில பொதுச்சுடர ஏத்துற, கையில புலிக்கொடிய வச்சு இருக்கிற அண்ணைதான் நான் மேல சொல்லிய கதையச் சொன்னவர். இவரிண்ட பெயர் அறிவுமதி எண்டு எழுதப்பட்டு இருக்கிது.

நோர்வேயில் பொங்குதமிழ் : 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு

நேர்வே ஓஸ்லோ, பேர்கன், துர்னெயம், ஸ்ரவங்கர், மொல்ட்டே, ஓலசூண்ட், புலூரா போன்ற நகரங்களில் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். நோர்வே ஒஸ்லோவில் மாபெரும் பொங்குதமிழ் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பொங்கு தமிழ் நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழகத்தைச்சேர்ந்த உணர்வாளர்கள் பாவலரும், தமிழீழ ஆதரவாளருமான அறிவுமதி அவர்கள் ஏற்றிவைத்தார்கள். தேசியக் கொடியினை தமிழகத்தில் வருகைதந்திருந்த பாவலர் அவர்களும் புலமைப்பித்தன் ஆகியோர் ஏற்றினர்.இதனைத் தொடர்ந்து தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களின் உரை காணொளியில் காண்பிக்கப்பட்டது.

14_017.jpg

14_018.jpg

நன்றி கலைஞன் இணைப்பிற்க்கு, நேற்று இரவு நானும் இன் நிகழ்வை பார்த்திருந்தேன், தலைவருடைய சிறந்த குணத்திற்க்கு இந்த சம்பவமே போதும்

  • கருத்துக்கள உறவுகள்

நமது தலைவரைப்பற்றி நாம் அறியாததா ? சரித்திரத்தில் எத்தனையோ தலைமுறைகளுக்கு ஒருமுறை மட்டுமே அபூர்வமான மனிதர்கள் தோன்றுவார்கள். அப்படித் தமிழினத்தில் பிறந்த ஒரு அபூர்வ மனிதன் தான் பிரபாகரன். இதை நான் இந்தச் சம்பவத்திற்காகச் சொல்லவில்லை. ஒரு சமூகத்தின் முற்றுமுழுதான நம்பிக்கையையும், ஏக்கங்களையும், துன்பங்களையும் சுமந்துகொண்டு அந்தச் சமூகத்திற்கு ஒரு விடிவெள்ளியாய் இருப்பதென்பது எம்மில் எவராலும் எண்ணிப்பார்க்க முடியாதது.

பிரபாகரன்...எமக்குக் கிடைத்த வரம் ! அந்த வரமிருக்கும் காலத்திலேயே எமது கனவுகளை நனவாக்கிக் கொள்வோம் !!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட தலைவருக்கு எந்த பெரிய மனசு..முரளி அண்ணா இதை வாசிச்சதும் கண்கள் களங்குது

இப்படி பட்ட ஒரு தலைவர் எங்களுக்கு கிடைச்சத நினச்சு நாங்க பெருமை படனும்..!

ஈழ தமிழருக்கு என்டைக்கும் இவர் தான் தலைவர்..!

100 வருசம் வாழனும்

  • கருத்துக்கள உறவுகள்

இது நேற்று பிரான்சில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில்

அண்ணர் அறிவுமதி அவர்களால் வாசிக்கப்பட்டது

நிறைந்த கரகோசங்களுக்கு மத்தியில்...

எங்கள் தலைவரின் தீர்க்கதரிசனம் - இதோ இந்திய முன்னணி ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பின் வார்த்தைகளில்.

Anita Pratap is one of India’s best journalists, was the South Asia Bureau Chief of CNN till January 1999. Before joining CNN, she worked for eight years as a correspondent for TIME magazine. She is the author of Island of Blood: Frontline Reports From Sri Lanka.

-> Won the American George Polk Award in 1997 for excellence in television reporting for coverage of the Taliban takeover of Kabul.

->Won the Eminent Indian Award conferred by the Indo-American Society in 1997.

->Won all three nominations in the television news category for the Pinnacle Award for stories on Kashmir, Sri Lanka and Afghanistan.

-> Won the Chameli Devi Jain Award in 1998 given to an "Outstanding Woman Media Person".

-> Was conferred the "Woman Achiever of the Year" award by Giants International in December 1998

உண்மைதான். நம் தலைவர் உண்மையில் மக்களின் தலைவர்..!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு ஒரு பாடல் http://www.imeem.com/people/JBElonW/music/...i_periya_manam/

  • தொடங்கியவர்

தலைவரைப்பற்றிய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.