Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது குண்டுத் தாக்குதல்: 12 பேர் பலி- 20 பேர் காயம்

Featured Replies

வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தின் அருகில் சற்று முன் தற்கொடைத் தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக இராணுவ பேச்சாளன் தற்போது ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இத் தாக்குதலில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊந்துருளியில் வந்த ஒருவரே தற்தகொடைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது.

Edited by Janarthanan

  • Replies 56
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காலை 7.10மணியளவில் குண்டு வெடித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைத் தாக்குதல் என டெய்லி மீரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

suicide blast was reported in Vavuniya at approximately 7.15a.m today morning. The blast which had taken place near the Vavuniya SSP office had killed 11 people and injured 40.

Blast targets policemen

The blast had targeted a group of policemen who were outside the SSP office waiting to go for the day's duty, sources claimed. The suicide cadre had come on a motorbike at the policemen and blasted himself.

  • கருத்துக்கள உறவுகள்

3 பெண் காவல்துறையினர் உட்பட 12 சிறிலங்கா காவல்துறையினர் பலி. 20க்கு மேற்பட்ட காவல்துறையினர் காயம். இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

  • தொடங்கியவர்

இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஐந்து பொலிஸாரும் அடங்குவர் என செய்திகள் தெரிவிக்கின்றன. 23 பேர் காயமடைந்த வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

Ten feared dead in powerful Sri Lanka blast 16 Jun 2008 02:26:05 GMT

Source: Reuters

COLOMBO, June 16 (Reuters) - Ten people were feared killed and several injured in a powerful blast in Sri Lanka's northern town of Vavuniya on Monday, the military said.

"There is an explosion in Vavuniya town," Military spokesman Brigadier Udaya Nanayakkara said.

Military sources said the blast happened near a police facility, but further details were not immediately available. (Reporting by Ranga Sirilal; Editing by David Fox)

http://www.alertnet.org/thenews/newsdesk/COL181230.htm

வவுனியா வைத்தியசாலையில் காயப்பட்ட 19 காவல்துறையினரும், 4 பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்களில் பாடசாலை மாணவி ஒருத்தியும் அடங்குவதாக வைத்தியசாலைச் செய்திகள் கூறுகின்றன.

வவுனியா நகரில் உள்ள சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 12 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

12 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 19 காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற வேளை அப்பகுதியால் சென்று கொண்டிருந்த பொது மக்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உந்துருளியில் வந்த உறவு தன்னுடன் குண்டினை வெடிக்கச் செய்து தன்னையும் அர்ப்பணித்திருக்கிறது. சாவினை அணைத்துக் கொண்ட அந்த உறவிற்காக தலை வணங்குவோம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாவீரனுக்கு வீரவணக்கம் !

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட அனைவரும் சிங்களப் பொலீஸ் காடையர்கள் தானே ? எமது மக்கள் எவரும் கொல்லப்படவில்லையல்லவா ?

தாயக விடுதலைக்காக இன்னுயிரை ஈந்த மாவீரனுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லப்பட்ட அனைவரும் சிங்களப் பொலீஸ் காடையர்கள் தானே ? எமது மக்கள் எவரும் கொல்லப்படவில்லையல்லவா ?

இறந்தவர்கள் காவல்துறையினர். காயப்பட்டவர்களில் 4 பொதுமக்களைத்தவிர மற்றையவர்கள் காவல்துறையினர். பொதுமக்களில் 3 பேர் பாடசாலை மாணவிகள். ஒருவர் வயோதிபர். இதில் வயோதிபர் - ஜெயசேகரா, மாணவிகள் - டில்கானி, நிமாலி சண்ரிகா, செவ்வந்தி. இதில் செவ்வந்தி தமிழரா அல்லது சிங்களவரா?

Three school girls, one elderly man and nineteen Police personnel are among the injured, Police confirmed. SEVVANDHI (10), NAMALI CHANDRIKA (12), G. DILHANI (17) of THEKKAWATTA, VAVUNIYA and JAYASEKARA (63) of ALUTHGAMA, ALAGALLE injured in the blast were rushed to VAVUNIYA hospital.

Police personnel who died in the brutal suicide attack have now been identified;

Woman Police Constable RENUKA (2440), Woman Police Constable SANDAMALI (2439), Woman Police Constable JAYAMALI (6630), Police Sergeant SENEVIRATHNE (19617), Police Sergeant PUSSELLA (41561), Police Sergeant JAYASIRI (18419), Police Constable PRASAD SUNANDA (44490), Police Constable LIONEL (57087), Police Constable SENEVIRATHNE (60939), Police Constable KARUNAPALA (45484), Police Constable DUSHMANTHA (48016) and Police Constable GUNASIRI (58863).

Among the injured were Woman Police Constable CHAMPIKA (6661), Woman Police Constable NAMALI (6513), Woman Police Constable PRASADHI (2596), Sub Inspector T.V. ANURA, Sub Inspector PINTO, Sub Inspector KODITHUWAKKU, Sub Inspector SENAVIRATHNA, Police Sergeant WIJERATHNE (20864), Police Sergeant WANIGASEKARA (57235), Police Sergeant SUGATHADASHA (19934), Police Sergeant JAYASIRI (24811), Police Constable UDAYANGA (61324), Police Constable RATHNAYAKA (36587), Police Constable WEERAWRDANA (49118), Police Constable BANDARA (35410), Police Constable BENADICT (7645), Police Constable RAJAKARUNA (54995), Police Constable NAWARATHNA (7256) and Police Constable SAMANTHA (49719).

- அரசாங்க இணையத்தளம்

20080616ep01yl6.jpg

20080616ep02tj2.jpg

கொல்லப்பட்ட அனைவரும் சிங்களப் பொலீஸ் காடையர்கள் தானே ? எமது மக்கள் எவரும் கொல்லப்படவில்லையல்லவா ?

இறந்தவர்கள் காவல்துறையினர். காயப்பட்டவர்களில் 4 பொதுமக்களைத்தவிர மற்றையவர்கள் காவல்துறையினர். பொதுமக்களில் 3 பேர் பாடசாலை மாணவிகள். ஒருவர் வயோதிபர். இதில் வயோதிபர் - ஜெயசேகரா, மாணவிகள் - டில்கானி, நிமாலி சண்ரிகா, செவ்வந்தி. இதில் செவ்வந்தி தமிழரா அல்லது சிங்களவரா?

கந்தப்பு, செவ்வந்தியின் தகப்பனார் கந்தசாமியாகவும், டில்கானியும் செவ்வந்தியும் நெருங்கிய நண்பிகளாக இருந்தால் உங்கள் அபிப்பிராயம் என்ன?

காயமடைந்த பொதுமக்களின் இரத்தங்களிடையே தமிழ் இரத்தம் எது சிங்கள இரத்தம் எது என்று தேடும் அளவிற்கு நிலமை முன்னேறி இருக்கிறது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளேயுமா உங்கள் மனிதாபிமானம் ? நீங்கள் பேசாமல் லண்டனில் இருக்கும் " இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்" போன்றவர்களுடன் சேர்ந்து இயங்கலாமே ? அவர்களுக்குத்தான் தமிழினம் அழிவது தெரிவதில்லை. அல்லது மகிந்தவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழர் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது தமது புலியெதிர்ப்பு வாதத்தையும் வீதிக்குக் கொண்டுவந்து கத்துவார்களா?

உங்கள் மனிதாபிமானம் எங்களுக்கு அலுத்துவிட்டது. வேண்டுமென்றால் சிங்களவர்களுக்குச் சொல்லிப்பாருங்கள். ரத்தத்தில் தமிழ் ரத்தம் எது சிங்கள ரத்தம் எதுவென்று கண்டுபிடித்துச் சொல்லுவார்கள். எங்களை விட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியன் உங்கள் மனிதாபிமானம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நேற்று வன்னியில் சிங்கள வான்படை நடத்திய தாக்குதலில் நான்கு தமிழர் கொல்லப்பட்டும் இன்னும் பலர் காயமடைந்தும் உள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஒரு பாடசாலை. எங்கே உங்கள் மனிதாபிமான இயந்திரத்தை தட்டி விடுங்கள் பார்ப்போம். தமிழர் சாகும்போது அது இயங்க மறுக்கிறதோ என்னவோ... ஆனால் சிங்களவருக்கு இழப்பு என்று வரும்போது மட்டும் அதி வேகமாக இயங்குகிறது.

சரி, இதுவரை காலமும் வன்னியில் கொல்லப்பட்ட தமிழர்க்காய் ஒரு அனுதாபத்தையாவது சொல்லியிருப்பீர்களா ? கேட்டால், " யாழ்க் களத்தில் அனுதாபம் தெரிவிப்பதால் மட்டும் உலகம் அறிந்துவிடுமா?" என்று அதி புத்தி சாலித்தனமாகக் கதை சொல்லுகிறீர்கள். ஆனால் சிங்களவன் சாகும்போது மட்டும் அதே யாழ்க் களத்தில் வந்து மணிக்கணக்கில் மனிதாபிமானப் பாடம் நடத்துகிறீர்கள்.

யாழ்க்களம் வெளியார் பார்ப்பதற்காக இயங்கவில்லை என்று நினைக்கிறேன். தமிழர் தமது பிரச்சனை தொடர்பான கருத்துக்களை அலசுவதற்குறிய ஒரு களம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாவீரனுக்கு வீரவணக்கம்

கந்தப்பு, செவ்வந்தியின் தகப்பனார் கந்தசாமியாகவும், டில்கானியும் செவ்வந்தியும் நெருங்கிய நண்பிகளாக இருந்தால் உங்கள் அபிப்பிராயம் என்ன?

காயமடைந்த பொதுமக்களின் இரத்தங்களிடையே தமிழ் இரத்தம் எது சிங்கள இரத்தம் எது என்று தேடும் அளவிற்கு நிலமை முன்னேறி இருக்கிறது!

உண்மை தான் சாணக்கியன் நேற்று விமான குண்டு வீச்சில் கொல்லப்பட்ட அனைவரும் புலிகள்..

***

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய விமர்சனம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரி இணையம் 6/16/2008 08:27:40 AM - வவுனியா கண்டிவீதியில் உள்ள பொலிசாரின் விடுதிக்கு எதிரில் கடமைக்குச் செல்வதற்காக குழுமியிருந்த பொலிசார் மீது இன்று காலை 7.10 மணியளவில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட 12 பொலிசார் கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் 2 பாடசாலை மாணவிகள், 2 சிவிலியன்கள் உட்பட 23 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா கண்டிவீதியில் வவுனியா பிரதி மா பொலிஸ் அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் பொலிசாரின் விடுதிக்கு (பொலிஸ் பெரக்ஸ்) எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு இடங்களுக்கும் கடமைக்குச் செல்வதற்காக வீதியோரத்தில் தமது விடுதிக்கு முன்னால் உள்ள கேட்டிற்கு அருகில் குழுமி நின்றிருநத போதே இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது, இவ்விடத்தில் பாடசாலைக்குச் செல்வதற்காக பாடசாலை மாணவர்களும், ஒருசில சிவிலியன்களும் பஸ் வண்டிக்காகக் காத்து நின்றதாகவும், இவர்களிலேயே 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்தச் சம்பவத்தில் 19 பொலிசார் காயமடைந்துள்ளனர்.

வவுனியா நகரின் பிரதான படைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கண்டிவீதியோரத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அலுவலகங்கள் அமைந்தள்ள இடத்திலேயே இந்தத் துணிகரத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவத்தையடுத்து, அந்த வீதி ஊடான போக்குவரத்துக்களைத் தடைசெய்த பொலிசார் தடயங்களைத் தேடுவதிலும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டனர். காலை நேரத்தில் பெரும் சத்தத்துடன் இடம்பெற்ற இந்தக் குண்டுத் தாக்குதலைய:டுத்து, பாடசாலைகளுக்கு குறைந்த அளவிலான மாணவர்களே சென்றனர். நகரில் மக்கள் நடமாட்டம் குறைந்து எங்கும் ஒருவித பதட்டம் நிலவியது. சம்பவம் குறி;த்து வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

  • கருத்துக்கள உறவுகள்

12 policemen killed, 23 injured in Vavuniyaa explosion

[TamilNet, Monday, 16 June 2008, 02:57 GMT]

An unidentified rider in a motorbike detonated an explosive in front of the office of the Senior Superintendent of the Police (SSP) around 7:15 a.m. killing 12 Sri Lankan policemen and himself, and injuring 23, according to Vavuniyaa Police. Two of the wounded were civilians.

The attacker rode into a police barrack while the group of policemen were emerging from the office located along the A-9 road

ரகுநந்தன்,

வழமைபோல நான் சொல்லும் விடையத்தை நீங்கள் புரிந்து கொள்ள முயலவில்லை!

தமிழர்களின் விடுதலைக்கான போராட்டத்தில் மனிதாபிமானத்தை தொலைத்துவிடாதீர்கள்!

புலிகளே செய்யத்துணியாத ஒன்றை நீங்கள் செய்ய முன்நிற்கிறீர்கள்!

(அதாவது எல்லாளன் படைக்கும் தமக்கும் தொடர்பில்லை என இளந்திரையன் அறிக்கைவிட்டது)

Edited by சாணக்கியன்

மனிதவழிநடத்தி குண்டு..... இலத்திரனியல் வழிநடத்தி குண்டு...... எது மனிதாபிமான குண்டு?

மனிதாபிமானம் என்பது மனிதர்களின் சிறப்பியல்பு, பொருட்களினதோ கருவிகளினதோ அல்ல!

இன்றைய தாக்குதல் பொதுமக்களை நேரடியாக குறிவைத்து அன்றி ஆயுததாரிகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!

இதனை சிரிலங்கா அரசாங்கத்தை தவிர வேறுஓருவரும் கண்டிக்கப் போவதில்லை!

சாணக்கியன் உங்கள் மனிதாபிமானம் மெய்சிலிர்க்க வைக்கிறது. நேற்று வன்னியில் சிங்கள வான்படை நடத்திய தாக்குதலில் நான்கு தமிழர் கொல்லப்பட்டும் இன்னும் பலர் காயமடைந்தும் உள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஒரு பாடசாலை. எங்கே உங்கள் மனிதாபிமான இயந்திரத்தை தட்டி விடுங்கள் பார்ப்போம். தமிழர் சாகும்போது அது இயங்க மறுக்கிறதோ என்னவோ... ஆனால் சிங்களவருக்கு இழப்பு என்று வரும்போது மட்டும் அதி வேகமாக இயங்குகிறது.

சரி, இதுவரை காலமும் வன்னியில் கொல்லப்பட்ட தமிழர்க்காய் ஒரு அனுதாபத்தையாவது சொல்லியிருப்பீர்களா ? கேட்டால், " யாழ்க் களத்தில் அனுதாபம் தெரிவிப்பதால் மட்டும் உலகம் அறிந்துவிடுமா?" என்று அதி புத்தி சாலித்தனமாகக் கதை சொல்லுகிறீர்கள். ஆனால் சிங்களவன் சாகும்போது மட்டும் அதே யாழ்க் களத்தில் வந்து மணிக்கணக்கில் மனிதாபிமானப் பாடம் நடத்துகிறீர்கள்.

யாழ்க்களம் வெளியார் பார்ப்பதற்காக இயங்கவில்லை என்று நினைக்கிறேன். தமிழர் தமது பிரச்சனை தொடர்பான கருத்துக்களை அலசுவதற்குறிய ஒரு களம்.

குறிப்பிட்ட சம்பவங்களில் உங்கள் இரங்கற்பாவோ அல்லது ஒரு மலர்வளைய படமோ இடப்படாத நிலையில் நீங்கள் என்னை நோக்கி தயங்காமல் விரலை நீட்டுவதற்கு காரணம், இங்கு சிலர் நடத்தும் கூட்டணி மற்றும் சுயநல அரசியலில் நிலை தடுமாறி விட்டீர்கள் என நினைக்கிறேன்!

2006 ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் யாழினை தரிசிப்பவராக இருந்தால், நான் இராணுவத்தால் முகமாலையில் பாதை மூடப்பட்டதையும், அதே வேளை வாகரையில் பொதுமக்களை வெளியேற விடாமல் புலிகள் தடுத்தமையையும் கண்டித்திருக்கிறேன் என்பது புரியும். நான் அறிந்தவரையில் நான் எப்போதுமே எந்த ஒரு தரப்பினதும் தவறுகளை மூடிமறைப்பதிலோ அல்லது நியப்படுத்துவதிலோ ஈடுபட்டதில்லை (சுய தம்பட்டத்திற்கு மன்னிக்கவும்!)

சாணக்கியன் வேண்டுகோள்:

நீங்கள் எந்த ஒரு தரப்பையும் சார்ந்தவராக இருங்கள் தவறில்லை! ஆனால் எப்போதுமே மனட்சாட்சியை தொலைத்து விடாதீர்கள்.

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் சாணக்கியன்.

பொதுமக்கள் கொல்லப்படுவதை நான் விரும்புவதில்லை. ஆனால் எமது தரப்பில் பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு அதை ஒரு வழியாகப் பாவிப்பதால் எமக்கு பயன் கிடைக்குமானால் அதில் பிழையுமில்லை என்றுதான் நினைக்கிறேன்( ஏனென்றால் வேறு எந்தச் செயலும் சிங்களவர்களால் தமிழ்ப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கப்போவதில்லை, அதுமட்டுமல்லாமல் தமது வாழ்விடங்களில் இருந்து பல நூறு மைல் தூரத்தில் நடக்கும் யுத்தம் பற்றி சிங்களவர் கவலைப்படுவதில்லை, சாவது புலிகளாயிருந்தாலென்ன, தமிழ்ப் பொதுமக்களாயிருந்தாலென்ன அது தமிழராக இருக்கும் பட்சத்தில் அது அவர்களுக்கு மகிழ்ச்சியே. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை)

மற்றும்படி நீங்கள் சொன்னதுபோல அரசாங்கத்தைத் தவிர வேறு எவரும் இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதற்கும் வாய்ப்பில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.