Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நானும் படம் எடுக்க போறன்..!!

Featured Replies

எருமை..!!

waterbuffalobubalusarnejj2.jpg

எல்லாருக்கும் ஜம்மு பேபியின் வண்ண தமிழ் வணக்(கம்)..என்ன மறுபடி வந்துட்டானே எண்டு ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது..(உங்கள பார்கவும் பாவமா தான் இருக்கு).. :(

சரி அப்ப நாங்க விசயதிற்குள்ள போவோமா..(கவனமா பார்த்து இறங்குங்கோ என்ன ஏன் எண்டா ஆழமறியாம காலை விட கூடாது எண்டு என்ட பாட்டி சொல்லி தந்தவா)..

விசயம் என்னவென்டா..எனக்கு உந்த த(ட)மிழ் சினிமா பார்க்கிறது எண்டா கொள்ளை பிரியம்..முடிந்தவரை புதுசா வாற படம் எல்லாம் பார்த்திடுவன்..சிலதுகள் உங்க சினிமா திரையரங்குகளிள காண்பிக்கிறவை அதையும் தவற விடாம நேரம் கிடைத்தா பார்த்து போடுவன் பாருங்கோ..

மற்றது நாங்கள் சும்மா தென்னிந்திய திரைபடங்களை குறை சொல்லபடாது..அவையள் நல்லா தான் எங்களுக்கு படம் காட்டுறவை பாருங்கோ..அத்தோட வயசு போன பெரியவையில இருந்து நடுதர ஆட்கள் வரைக்கும் நன்னா புதுசா வாற படங்களை பார்த்து போட்டு சொல்லுவீனம்.."அந்த காலத்து படம் போல வருமா" எண்டு..இப்ப அடிகடி நான் கேட்கிற "டயலக்கில" இதுவும் ஒண்டு பாருங்கோ... :lol:

ஓமோம்..அவையளுக்கு அந்த காலத்தில அந்த படங்கள் நன்னா தான் இருந்திருக்கும்..இன்றைய காலகட்டத்தில அப்படியான படங்களை எங்காளாள பார்க்க ஏலுமோ??..

அதுக்காக நான் பழைய மற்றும் நடுதர படங்களை குறை சொல்லவில்லை..நல்ல கதையம்சத்துடன் பல படங்கள் வெளி வந்திருக்கிறது என்பது ஏற்று கொள்ள வேண்டியதொரு உண்மை,ஆனாலும் அந்த குறிபிட்ட காலபகுதிக்கான ரசனையை மட்டும் தான் அந்த படங்கள கவர்ந்தன..(ஒரு சில படங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு)..

அப்படி பார்க்கும் போது இத்தகைய காலதிற்கு ஏற்ற மாதிரி "தென்னிந்திய சினிமா கலைஞர்கள்"..படங்களை தாறீனம் ஒரு தரப்பு இப்படியான படங்களை கண்டு வெறுபுற்றாலும் இன்னொரு தரப்பு அதன் இரசிகராக தான் இருக்கிறார்கள் என்பதனை நாங்கள் ஏற்று கொள்ள தான் வேண்டும்.. ^_^

சரி நாங்கள் அதை விடுவோம் என்ன..(உப்ப வாற புது படங்களை எல்லாம் பார்த்து..பார்த்து)..எனக்கும் மனசில ஒரு ஆசை வந்திட்டு..

என்னென்டு பார்க்கிறது விளங்குது...

அது வேறொன்றுமில்லை நானும் ஒரு கதை எழுதி நானே அந்த படத்தில கதாநாயகனா நடித்தா எப்படி இருக்கும் எண்டு.. :lol: (கூடுதலா யாழ்கள உறவுகளிட்ட இருந்து தான் திரையரங்கிற்கு முதல் கல்லு வரும் எண்டு எனக்கும் தெரியும்)...எண்டாலும் எண்ட ஆசையும் நான் ஒருக்கா சொல்லிட்டு போகவா..

இப்ப நான் படத்தின்ட கதையை சொல்லுறன் கேளுங்கோ என்ன கவனமா..(ஒரு காலத்தில இந்த திரைபடம் திரையரங்குகளிள வெற்றி நடை போடக்க)..என்ன பத்தி யோசிப்பியள் பாருங்கோ..

முதலில படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் எண்டு யோசித்து கொண்டிருந்தா..விஜய் அண்ணாவின்ட "குருவி" படம் எனக்கு ஞாபகதிற்கு வர அவர் பறவை ஒன்னை பெயரா எடுத்தபடியா பதிலிற்கு நான் ஒரு மிருகத்தின்ட பெயரை படதிற்கு வைத்தா தான் "விஜய் அண்ணா" கூடவும் போட்டி போடலாம் எண்டு யோசித்தா..நல்லதொரு பெயர் கிடைத்தது பாருங்கோ அது தான்..

"எருமை"...

எப்படி இருக்குது பெயர்...

அப்ப படம் தொடங்கக்க..

"இளைய இளவரசன்

ஜம்மு பேபியின்

அட்டகாசமான

நடிப்பில்"

ஒவ்வொரு இளைஞனினதும் நாடிதுடிப்பு

"எருமை"

இது எப்படி இருக்கு....

இது எல்லாம் முடிந்தா பிறகு "திரையில" ஜம்முபேபி வர போது எண்டு எல்லாரும் பார்த்து கொண்டிருக்க உடனே நாங்கள் ஒரு எருமையை காட்டுறோம்..(நீங்க நினைக்கிறது விளங்குது ஜம்மு பேபியை காட்டுறதும் ஒன்னு தான் எருமையை காட்டுறதும் ஒன்னு தான் எண்டு)..இது நன்னா இல்ல சொல்லிட்டன்..

கொஞ்ச நேரத்தில எங்கையோ இருந்து நான் தாவி வந்து அப்படியே அந்த எருமை மாட்டிற்கு மேல இருக்கிறன்..அப்ப உடனே ஒரு பாட்டு.. :(

"எருமை மாட்டிற்கு மேலா நான் இருந்தா உனகென்ன

எல்லா கொரங்கும் என் பேர் சொன்னா உனகென்ன"..

இப்படி ஒரு பாட்டை போட்டா தான் "விஜய்" அண்ணாவோட போட்டி மாதிரி இருக்கும்..எப்படி இருக்குது பாட்டு எண்டு சொன்னா எங்கன்ட குரு இசை அமைக்க விகடகவி மாமா பாட்டு பாட அந்த மாதி இருக்கும்..

பாட்டு முடிந்தவுடன நான் ஒரு கருத்து சொல்லுவன் அதுவென்னவெண்டா..நான் யாருக்கும் போட்டியில போட்டியில்ல போட்டியில்ல எண்டு..(அப்ப தான் பார்க்கிற ஆட்களுக்கு எல்லாருக்கும் நான் யாரோடையோ போட்டி போடுற மாதிரி இருக்கும் பாருங்கோ)..

இந்த பாட்டு முடிய ஒருத்தன் ஓடி வந்து.."அண்ணா கபாலியின்ட ஆட்கள் தொல்லை பண்ணுறாங்க எண்டு"..சொல்ல எண்ட கண் எல்லாம் அப்படியே சிவக்கும்..உடனே அப்படியே அந்த எருமை மாட்டிற்கு மேல பாய்ந்து எருமை மாட்டில அந்த இடதிற்கு போறன்..(இது எப்படி இருக்கு)..

அங்க கபாலி ஒருவனை குத்த வாறான் நான் அப்படியே எருமையில போய் நடுவில நிற்கிறன்..(அப்ப நான் கீழே பார்த்து கொண்டு சொல்லுறன் வேணாம் போயிடு..வேணாம் போயிடு)..எண்டு..

உடனே கபாலியின்ட ஆட்கள் பத்து,பதினைஞ்சு பேர் வந்திட்டாங்க..வந்து என்னை அடிக்கிறாங்க நான் அடி விழக்க எல்லாம் வேண்டாம் போயிடு எண்டு மட்டும் தான் சொல்லுறன்..அப்ப ஒருத்தன் அடித்த அடியில எனக்கு வாயில இருந்து இரத்தம் வருது..

அதை தொட்டு பார்த்து விட்டு "ஏய்" எண்டு கொண்டு நான் விட்ட ஒரு அடியில எல்லாரும் போய் விழுவீனம்..உடனே நான் ..

"நான் எருமை

எங்கிட்ட வேண்டாம்

உங்க பெருமை"

அப்படியே சொல்லிட்டு அங்கால பார்த்தா..(அங்க ஒருவா பள்ளி சீருடையில என்னை அப்படியே வைத்த கண் வாங்காம பார்த்து கொண்டு இருக்கு)..

உடனே இன்னொரு பாட்டு..(பல எருமை மாடுகளுக்கு மத்தியில நாங்க இரண்டு பேரும் ஆடுற மாதிரி காச்சியமைப்பு பாருங்கோ)..கனவு பாட்டு இது.. :D

"எருமை எருமை உன்னை தேடி அலைந்தேன்"

எண்ட பாடல் வரிகள் இதற்கு இசை எங்கன்ட குரு தான் பாடலை எங்கன்ட நிலா அக்கா பாடட்டும்...

அந்த பாட்டு முடிய..(அந்த பெட்டைக்கு பின்னால நான் போற மாதிரியும்)..அவாவிற்கும் என் மேல காதல் ஆனா சொல்லாம தடுமாறுற மாதிரியும் காச்சி அமைப்பு எப்படி இருக்கும் பாருங்கோ..

இப்படியே போய் கொண்டிருக்கும் படம் இருந்தா போல "நமீதா அக்காவை" இறக்கி அவா கூட ஒரு பாட்டு..(ஏன் இந்த பாட்டு அதில வருது எண்டு எல்லாம் கேட்க கூடாது)..பழைய பாட்ட ரீமிக்ஸ் பண்ணி விடுவோம்..

"நான் பாத்ததிலே

இந்த எருமையத்

தான் நல்ல எருமை

எண்டேன்"

அப்படி பாட்டு போகும்...

உந்த பாட்டிற்கு டங்குவார் மாமாவே இசை அமைக்கட்டும்...

இப்படி படம் போய் கொண்டிருக்கும் போது திரையில "எருமை எனி எறிக்கும்" எண்டு வரும் அது என்னவென்டா இடவேளை படத்தில பாருங்கோ...

இடைவேளைக்கு பிறகு படம் தொடங்கும் போதே "குப்பை எறிக்கிறதை" காட்டுறோம்..(அப்ப தான் பார்க்கிற ஆட்களுகுள்ள ஒரு "தீ" வரும் பாருங்கோ)..

படம் இப்படியே நகர்ந்து கொண்டிருக்கும் போது..படநாயகி அது தான் அந்த பள்ளிகூட சீருடையில வந்தவா அவாவே தான் அவா "சுடிதார்" போட்டு கொண்டு நடந்து வாறா..(அந்த நேரம் காற்று பலமா அடிக்குது)..அவாவின்ட "துப்பட்டா" பறக்குது..அதை பிடிக்க அவா ஓடுறா..

அப்ப நான் வீட்ட படுத்து கொண்டிருக்கிறன்..(எனக்கு இது கனவில தெரியுது)..பயத்தில எழும்புறன்..எழும்பி ஓடுறன் நான் இங்க இருந்து ஓட அவா அங்க இருந்து ஓட அப்படியே அந்த ஓட்டத்தை கொஞ்ச நேரம் வடிவா காட்ட வேணும் அப்ப தான் நன்னா இருக்கும்.. :(

அப்படியே அந்த "துப்பட்டா" ஒரு எருமை மாட்டின்ட மேல போய் விழுது பாருங்கோ..அப்ப நானும் அங்க வாறன் உடனே என்னையும் அந்த எருமையையும் மாறி மாறி காட்டுறோம்..(ம்ம்..எது எருமை எது ஜம்முபேபி எண்டு தெரியாதளவிற்கு நாங்க காட்ட வேண்டும்)..

அப்ப நான் எருமையை பாத்து சொல்லுறன் "நான் உன்ட வழியிலையும் வர மாட்டன் அதை போல நீ எண்ட வழியில வர வேண்டாம் எண்டு"..எருமை ஒண்டுமே சொல்லாம நிற்குது...

அப்ப மழை பெய்யுது.."எருமை மாட்டிற்கு மேலையும் தான்"..அப்ப நான் எருமையை பாத்து ஒரு கருத்து சொல்லுறன் அதுவென்னவெண்டா..

"அந்த வானம் கருமை

நீயோ எருமை

நானோ பொறுமை"

எண்டு..சொல்லிட்டு கடசி வாட்டியா கேட்கிறன் "அந்த துப்பட்டாவை தா எண்டு"..அப்பவும் எருமை அப்படியே நிற்குது பாருங்கோ..அத பாத்து போட்டு நான் பின்னுக்கு ஓடுறன் ஓடி போட்டு மறுபடி எருமையை நோக்கி வாரன் அப்ப பார்த்தா கன எருமைகள் நிற்குது... :(

அப்ப நான் ஒரு "பஞ்" சொல்லுறன் அது தான்..

"எருமைகளுக்கு முன்னால நடுநிலைமை என்பது இல்லை"...எண்டு போட்டு எனக்கும் எருமை மாடுகளிற்கும் இடையே சண்டை நடக்குது..

சண்டை பிடிக்கும் போதும்..(பிண்ணணியில ஒரு பாட்டு போகும்)..

"எருமை போல நடந்து வாறான்

செல்ல பேராண்டி"

எண்டு இந்த பாட்டை எங்கன்ட நெடுக்ஸ் தாத்தா பாடட்டும் அப்ப தான் நன்னா இருக்கும் பாருங்கோ....

அந்த சண்டையில நான் வென்று அந்த துப்பட்டாவை காப்பாத்துறனா இல்லையா என்பது தான் மிச்ச கதை..(எப்படி இருந்தது கதை)..

இது தான் நான் எடுக்க நினைத்த பட கதை..(எப்படி இருக்கு??)..ஒருத்தரும் ஏசாமா கதை நன்னா இருக்கா இல்லையா எண்டு சொன்னா தான் நானும் "விஜய் அண்ணா" போல வருவன் பாருங்கோ..அதோட எனக்கு கதாநாயகியாக யாரும் யாழ்களத்திள இருந்து நடிக்க போறியள் எண்டாலும் சொல்லலாம் பாருங்கோ.. :lol:

தயவு செய்து எருமையை யாரும் துரத்திபோடாதையுங்கோ...(இந்த படகதைக்கு கிடைக்கிற வரவேற்பில தான் இன்னும் பல படங்களை நான் எடுப்பன்).. :)

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

இஞ்ச யம்மு, முதல் காட்சியை இப்படி வையுங்கோ, பந்தயம் நடக்குற மாதிரி, அதில எருமைகளுக்கு மத்தியில நீங்க ஒடுற மாதிரி, ஒரு 3 சுத்து ஓடினாப்புறம் உங்களுக்கு காலில முள்ளு குத்திடிச்சு. பிறகு நீங்கள் ரத்தம் வழியும் காலோட மிச்ச 7 சுத்தையும் கெந்தி கெந்தி ஓடிறையள், கடைசி சுற்று, உங்களுக்கு முன்னால் 2 KM தூரத்தில ஓடிற எருமையை வெல்வதற்காக, சும்மா பறந்து போய் வெற்றி கோட்டை தொடுறியள்..! அப்படியே உங்கட முதல் பாட்டு..!

அப்பத்தான் விஜய் படத்தை பின்னால தள்ளலாம்

  • தொடங்கியவர்

இஞ்ச யம்மு, முதல் காட்சியை இப்படி வையுங்கோ, பந்தயம் நடக்குற மாதிரி, அதில எருமைகளுக்கு மத்தியில நீங்க ஒடுற மாதிரி, ஒரு 3 சுத்து ஓடினாப்புறம் உங்களுக்கு காலில முள்ளு குத்திடிச்சு. பிறகு நீங்கள் ரத்தம் வழியும் காலோட மிச்ச 7 சுத்தையும் கெந்தி கெந்தி ஓடிறையள், கடைசி சுற்று, உங்களுக்கு முன்னால் 2 KM தூரத்தில ஓடிற எருமையை வெல்வதற்காக, சும்மா பறந்து போய் வெற்றி கோட்டை தொடுறியள்..! அப்படியே உங்கட முதல் பாட்டு..!

அப்பத்தான் விஜய் படத்தை பின்னால தள்ளலாம்

அட..லீ அண்ணா சொல்லுறது நன்னா தான் இருக்கு.. :( (அப்ப முதல் காச்சியை அப்படியே மாத்துவோம் என்ன) :lol: ..அப்ப தான் பார்க்கிற ஆட்களுக்கு "ஜம்முபேபி" எவ்வளவு பாவம் எண்டு யோசிப்பீனம் என்ன..இல்ல அண்ணா கெந்தி கெந்தி ஓடாம நான் கையால ஓட போறன் கொஞ்சம் வித்தியாசமா இருகட்டுமே.. :(

அது சரி லீ அண்ணா என்னோட நீங்களும் சேர்ந்து நடிக்கிறியளோ.. :lol: (அது சரி ஆள காணகிடைக்குதில்ல இங்கால பக்கம் எல்லாம் வேலை பளுவோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol::(
  • தொடங்கியவர்

:lol::lol::lol::(

என்ன..இன்னி தங்கச்சி நீங்களும் உந்த படத்தில நடிக்கிறியளோ.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ வேணாமப்பு விட்டால் காணும் :lol:

அட..லீ அண்ணா சொல்லுறது நன்னா தான் இருக்கு.. :( (அப்ப முதல் காச்சியை அப்படியே மாத்துவோம் என்ன) :lol: ..அப்ப தான் பார்க்கிற ஆட்களுக்கு "ஜம்முபேபி" எவ்வளவு பாவம் எண்டு யோசிப்பீனம் என்ன..இல்ல அண்ணா கெந்தி கெந்தி ஓடாம நான் கையால ஓட போறன் கொஞ்சம் வித்தியாசமா இருகட்டுமே.. :(

அது சரி லீ அண்ணா என்னோட நீங்களும் சேர்ந்து நடிக்கிறியளோ.. :lol: (அது சரி ஆள காணகிடைக்குதில்ல இங்கால பக்கம் எல்லாம் வேலை பளுவோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

அதுவும் நல்லா இருக்கு . அப்படியே செய்யுங்கோ..

நான் நடிக்க வரவில்லை.. ^_^ நீங்களே எல்லாக் கதாபாத்திரத்தையும் செய்யுங்கோ.. அப்பத்தான் இன்னொரு எருமை சீ.. உலக நாயகனாக வரலாம்....

100 வேடங்களில் யம்மு கலக்கும் "எருமை" நல்லாயிருக்கு...

  • தொடங்கியவர்

அதுவும் நல்லா இருக்கு . அப்படியே செய்யுங்கோ..

நான் நடிக்க வரவில்லை.. :lol: நீங்களே எல்லாக் கதாபாத்திரத்தையும் செய்யுங்கோ.. அப்பத்தான் இன்னொரு எருமை சீ.. உலக நாயகனாக வரலாம்....

100 வேடங்களில் யம்மு கலக்கும் "எருமை" நல்லாயிருக்கு...

ரொம்ப நன்றி அண்ணா...(படம் நூறு நாள் ஓடும் தானே).. :(

சரி..சரி நானே எல்லா வேடத்திலையும் நடிக்கிறன்..(அந்த எருமை வேடத்திலையும் நானே நடித்து போடுறன்) :lol: ..உலக நாயகன் ஆசை எல்லாம் எனகில்லையப்பா..என்ன நாமளும் விஜய் அண்ணா மாதிரி படம் எடுகனும் எண்ட ஆசை மட்டும் தான் நமக்கு.. :lol:

ம்ம்..100..வேடங்களிள என்ன 108 வேடங்களிளையே கலக்கி விடுறன் என்ன.. :(

அப்ப நான் வரட்டா!!

ஐயோ வேணாமப்பு விட்டால் காணும் ^_^

என்ன...இப்படி சொல்லிட்டியள்..அண்ணாவிற்காக ஒரு சின்ன வேடத்திலையாவது.. :)

அப்ப நான் வரட்டா!!

கட்டாயம் ஓடும். ஒவ்வொரு வேடத்துக்கும் ஒரு நாள் என்டு பார்த்தாலும் 108 நாள்..! இல்லாட்டில் நம்ம யாழில போடுவோம். பிச்சுக்கிட்டு ஓடும் (நான் படத்தைதான் சொன்னனான் :lol:)

  • தொடங்கியவர்

கட்டாயம் ஓடும். ஒவ்வொரு வேடத்துக்கும் ஒரு நாள் என்டு பார்த்தாலும் 108 நாள்..! இல்லாட்டில் நம்ம யாழில போடுவோம். பிச்சுக்கிட்டு ஓடும் (நான் படத்தைதான் சொன்னனான் :lol:)

சரியா சொன்னியள்...ஓமோம் நன்னா ஓடும் பாருங்கோ யாழில.. :lol: (நானும் படத்தை தான் சொன்னான்)..ஆனா என்ன தணிக்க குழு படத்தை இங்க ஓட்ட விடுவீனமோ தெரியாது... :lol:

அப்ப நான் வரட்டா!!

அச்சோ அச்சோ உந்த எருமை நன்றாக தான் ஓடுது என்று சொல்லுற :lol: அளவுக்கு நல்லா எழுதி இருக்கிறியள் ஜம்மு.

:lol: :lol: :( :

என்கிட்ட மட்டும் லட்சக்கணக்கில் காசு இருக்கணும் உந்த படத்தை ஜம்முவையே ஹீரோவாக்கி படம் எடுத்து கோடிக்கணக்கில் உழைச்சிட மாட்டேனா என்ன? :( ஜம்மு கலாய்க்கிறியள்.

ஆனால் ஒன்று உந்த எருமைக் கூட்டத்தில் ஜம்முவும் நடிகையும் நடிக்க நிலாக்கா பாடமாட்டா. ஏனெனில் அது பிறகு எருமை கத்துற போலாகிடும் எல்லோ ^_^

  • கருத்துக்கள உறவுகள்

"நான் பாத்ததிலே

இந்த எருமையத்

தான் நல்ல எருமை

இப்படியானா பாட்டு கட்டங்களுக்கு என்னையும் போடுன்கோ

நான் நல்லா ஆடுவென் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி , உங்களுடைய படத்திலே நடிக்கும் நடிகர்களிடம் இருந்து கொஞ்ச தயிர் எடுத்து தருவீங்களோ ?

  • தொடங்கியவர்

அச்சோ அச்சோ உந்த எருமை நன்றாக தான் ஓடுது என்று சொல்லுற அளவுக்கு நல்லா எழுதி இருக்கிறியள் ஜம்மு.

என்கிட்ட மட்டும் லட்சக்கணக்கில் காசு இருக்கணும் உந்த படத்தை ஜம்முவையே ஹீரோவாக்கி படம் எடுத்து கோடிக்கணக்கில் உழைச்சிட மாட்டேனா என்ன? ஜம்மு கலாய்க்கிறியள்.

ஆனால் ஒன்று உந்த எருமைக் கூட்டத்தில் ஜம்முவும் நடிகையும் நடிக்க நிலாக்கா பாடமாட்டா. ஏனெனில் அது பிறகு எருமை கத்துற போலாகிடும் எல்லோ

அட..நிலா அக்கா..ஓ..எருமை நன்னா ஓடுதோ.. :lol: (உது ஒன்னும் என்னை எருமை எண்டு சொல்லவில்லை தானே)..அப்படி எல்லாம் என்ன பாத்து சொல்லபடாது என்ன..(நன்றி அக்கா).. :)

சா..நிலா அக்காட்டா லட்ச கணக்கில காசு இல்லாம போச்சே இல்லாட்டி இந்த படத்தை திரையரங்கில ஓட்டி இருக்கலாம் ஆனா என்ன.. :D (திரையரங்குகள் பிறகு வெறும் அரங்குகளாக தான் இருக்கும்)..என்னால முடியல்ல.. :D

அச்சோ..அச்சோ நிலா அக்கா நீங்க இனிமையா பாட பின்னால எருமை பாடுகள் எல்லாம் கத்த பாட்டு அந்த மாதிரி இருக்கும் பாருங்கோ :lol: ..இப்ப எல்லாருக்கும் அப்படியான பாட்டுக்கள் தான் பிடிக்கும் அல்லோ..ஆனபடியா எனக்காக நீங்க தான் பாடனும் எனக்காக பாடமாட்டியளோ.. :D

அதோட நிலா அக்கா நீங்களும் ஒரு சின்ன பாத்திரத்தில நடிக்கலாமே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

"நான் பாத்ததிலே

இந்த எருமையத்

தான் நல்ல எருமை

இப்படியானா பாட்டு கட்டங்களுக்கு என்னையும் போடுன்கோ

நான் நல்லா ஆடுவென்

அட வாங்கோ செல்லம்..(எப்படி சுகமோ??) :lol: ..அட என்ன இப்படி கேட்டு போட்டியள் என்னோட படத்தில கடசி மட்டும் வாற மாதிரி ஒரு "கரக்டரை" உருவாக்கலாம் அதில பிரச்சினை இல்ல..(உங்களுக்கு பிரச்சினை இல்ல தானே).. :D

அதோட முக்கியமா ஒன்னு அண்ணனோட சேர்ந்து நடித்து போட்டு அண்ணணுக்கே ஆப்பு வைக்கிறதில்ல இன்னொரு படத்தில கதாநாயகனா நடித்து. :lol: .

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி , உங்களுடைய படத்திலே நடிக்கும் நடிகர்களிடம் இருந்து கொஞ்ச தயிர் எடுத்து தருவீங்களோ ?

அட..தமிழ் சிறி அண்ணா :D ...உதைபந்தாட்டத்தோட நேரம் போகுது போல..என்னது தயிரோ பேஷா தரலாம் பாருங்கோ ஆனா நீங்களும் எண்ட படத்தில கட்டாயம் நடிக்கனும் பாருங்கோ.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபி , உங்களுடைய படத்திலே நடிக்கும் நடிகர்களிடம் இருந்து கொஞ்ச தயிர் எடுத்து தருவீங்களோ ?

நடிக்கும் நடிகர்கள் தயிர் வியாபாரமா பண்ணுறாங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை பிடிக்கும் போதும்..(பிண்ணணியில ஒரு பாட்டு போகும்)..

"எருமை போல நடந்து வாறான்

செல்ல பேராண்டி"

எண்டு இந்த பாட்டை எங்கன்ட நெடுக்ஸ் தாத்தா பாடட்டும் அப்ப தான் நன்னா இருக்கும் பாருங்கோ....

ஓ.. நா பேஷாப் பாடுவனே.. பாட்டைக் கேட்டு எருமை ஓடி வந்து முட்டாமல் பார்த்துக்கிறது உங்க பொறுப்பு..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எருமைக்கதை நல்லாயிருக்கு ஜமுனன்

  • தொடங்கியவர்

நடிக்கும் நடிகர்கள் தயிர் வியாபாரமா பண்ணுறாங்க :lol:

அது..தானே கறுப்பி அக்கா..அது சரி நீங்களாவது என்னோட நாயகியாக நடிக்கிறியளோ.. :D

அப்ப நான் வரட்டா!!

ஓ.. நா பேஷாப் பாடுவனே.. பாட்டைக் கேட்டு எருமை ஓடி வந்து முட்டாமல் பார்த்துக்கிறது உங்க பொறுப்பு..! :)

அட...அப்ப அந்தளவிற்கு நீங்க நன்னா பாடுவியள் எண்டு சொல்லுங்கோ தாத்தா.. :D (தாத்தாவின்ட பாட்டு படிக்க எருமை கூட மெய் மறந்து என்னை முட்ட வருது எண்டா)..நிசமா என்னால முடியல்ல.. :D

அப்ப நான் வரட்டா!!

எருமைக்கதை நல்லாயிருக்கு ஜமுனன்

நன்றி கு.சா தாத்தா :lol: ...நீங்களும் ஒரு பாத்திரத்தில நடித்தா நன்னா இருக்கும் பாருங்கோ..(அட..நிசமா எருமை பாத்திரம் இல்ல பாருங்கோ)... :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு எருமை நல்லாயிருக்கு கதையை உடைனையே பதிவு செய்து வைக்கவும் இல்லாட்டி யாராவது இந்தக் கதையை சுட்டு காட்டெருமை எண்டு பேரை மாத்தி எடுத்திடுவாங்கள். ஆனாலும்கதையிலை வாற எருமை மாட்டுக்கு மேலை மழைபெய்யிற காட்சி அடஅடஅட நெஞ்சை நனைச்சிட்டுது. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://de.youtube.com/watch?v=LU8DDYz68kM

எருமையின் வீரம்! :lol:

ஜம்மு எருமை எருமை சொறி அருமை அருமை

ஜம்மு உங்களை கதாநாயகனா கண்டதில ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது

கொஞ்ச நேரத்தில எங்கையோ இருந்து நான் தாவி வந்து அப்படியே அந்த எருமை மாட்டிற்கு மேல இருக்கிறன்..அப்ப உடனே ஒரு பாட்டு..

தாவி வரேக்க கோவணம் பறந்து போகேல்லத்தானே?

நல்ல காலம்

அருமை அருமை

  • தொடங்கியவர்

ஜம்மு எருமை நல்லாயிருக்கு கதையை உடைனையே பதிவு செய்து வைக்கவும் இல்லாட்டி யாராவது இந்தக் கதையை சுட்டு காட்டெருமை எண்டு பேரை மாத்தி எடுத்திடுவாங்கள். ஆனாலும்கதையிலை வாற எருமை மாட்டுக்கு மேலை மழைபெய்யிற காட்சி அடஅடஅட நெஞ்சை நனைச்சிட்டுது.

ஓமோம்..சரியா சொன்னியள் சாத்திரி :) அங்கிள் நாளைக்கு முதல் வேளையா இந்த கதையை பதிவு செய்து போட்டு தான் மற்றவேலை எல்லாம்.. :rolleyes: (அது சரி நீங்களும் உந்த படத்தில ஒரு கெளரவ வேடத்தில வந்து போனியள் எண்டா நன்னா இருக்கும் எண்டு நினைக்கிறன்)..இத பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள்... :unsure:

அட..எருமை மாட்டு மேல மழை பெய்யிற காச்சி கதை சொல்லும் போதே நெஞ்சை தொட்டுது எண்டா :D ..திரையில பார்க்கும் போது நினைத்து கூட என்னால பார்க்க ஏலாம இருக்கு.. :lol:

நன்றி சாத்தி அங்கிள்.. :(

அப்ப நான் வரட்டா!!

http://de.youtube.com/watch?v=LU8DDYz68kM

எருமையின் வீரம்!

அட..எருமையின்ட வீரத்தை படம் போட்டு காட்டிய கு.சா தாத்தாவிற்கு ரொம்ப நன்றிகள் :D ..(இதில இருந்து நேக்கு ஒன்னு மட்டும் நன்னா விளங்குது கு.சா தாத்தா வலு கவனமா எருமைகளை உற்று நோக்குகிறார் எண்டு).. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு எருமை எருமை சொறி அருமை அருமை

ஜம்மு உங்களை கதாநாயகனா கண்டதில ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுது

அட..சிவா அண்ணா எப்படி சுகமோ.. :) (கண்டு கனகாலமாகுது)..என்னது ஜம்மு எருமையோ..(அட என்ன தான் இருந்தாலும் இப்படி ஆட்களுக்கு முன்னால உண்மையை எல்லாம் சொல்லி இருக்க கூடாது)..அட எல்லாருக்கும் நம்மள பத்தி தெரிந்து போச்சா.. :(

என்னை கதாநாயகனா கண்டதில உங்களுக்கு ஆனந்த கண்ணீர் பெருகெடுத்து ஓடுது எத்தனை பேர் ஆஸ்பத்திருக்கு ஓடீனமோ யாருக்கு தெரியும் :) ..நன்றி சிவா அண்ணா..(அது சரி நீங்களும் ஒரு வேடத்தில நடிக்கலாமே அது தான் எருமைகளை மெய்பவரா)..இது எப்படி இருக்கு.. :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

தாவி வரேக்க கோவணம் பறந்து போகேல்லத்தானே?

நல்ல காலம்

அது என்னன்டா சிவா அண்ணா..(நான் தாவ மாட்டன் அல்லோ)..வேற ஒருத்தர் தான் தாவுவார் அதை தான் என்ன "டூப்" எண்டு சொல்லுவீனம் :D ..நான் எருமை மாட்டில வந்து இருக்கிறது மட்டு தான் அப்படியான விவரீத விளையாட்டிற்கு எல்லாம் நான் போகமாட்டன் உது தெரியாதா.. :D

அதோட நான் கோமணம் எல்லாம் போடுறதில்ல அல்லோ ஏன் எண்டா நான் "பம்பர்ஸ்" மட்டும் தான்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

அருமை அருமை

மாமோய் நீங்க அருமை..அருமை எண்டு சொல்லுறது :lol: ..எண்ட செவியில எருமை..எருமை எண்டு எதிரொலிக்கிறது..(அது சரி மாமோய் எனக்காக படத்தில ஒரு பாட்டு பாடுவியள் தானே)..நன்றி மாமா.. :D

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.