Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு மகிந்த அரசுக்கு பாரிய இராஜதந்திர அழுத்தம்

Featured Replies

கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு மகிந்த அரசுக்கு பாரிய இராஜதந்திர அழுத்தம்

[சனிக்கிழமை, 21 யூன் 2008, 08:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவுக்கு திடீர் பயணத்தினை மேற்கொண்ட இந்தியாவின் சிறப்பு அதிகாரிகள் குழு, மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் அரசியல் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய இராஜதந்திர அழுத்தத்தினைக் கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது.

முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரண்டு நாள் பயணமாக திடீரென கொழும்பு சென்று இறங்கிய இக்குழுவினர், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர்.

இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவதாக இருந்தால் அதற்கு கொழும்பின் பாதுகாப்பு முதலில் உறுதிசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இக்குழுவினர் முன்வைத்துள்ளனர்.

அவ்வாறு தமது நாட்டுப் பிரதமரின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் உத்தரவாதமளிக்கப்பட்டு அவர் கொழும்பு சென்றாலும், சார்க் மாநாட்டில் அவர் ஆற்றவுள்ள உரையில் சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு சாத்தியமாகாது. பேச்சு மூலமே அது தீர்க்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் நிலைப்பாட்டை முன்வைப்பார் என்ற பொருள்பட அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்த அதிகாரிகள் குழு எடுத்துக் கூறியுள்ளனர்.

தற்போது வடக்கில் நடைபெற்று வரும் போரில் விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதல்களை மட்டுமே மேற்கொண்டு வருகிறார்கள். அப்படியானால், இராணுவ ரீதியாக இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்று இந்தியப் பிரதமர் ஆற்றப்போகும் உரை, இலங்கையில் போரை நடத்திக்கொண்டிருப்பது அரசாங்கமே என்ற விடயத்தை இந்தியாவே சுட்டிக்காட்டுவதாக அமையப்போவது மட்டுமல்லாமல் அனைத்துலக ரீதியிலும் சிறிலங்காவை இந்தியாவே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் ஒரு செயலாக அமையும் என்றும் இந்த அதிகாரிகள் குழு மகிந்தவுக்கு விரிவாக விளக்கமளித்துள்ளனர்.

இது தொடர்பில் இராஜதந்திர வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில் சீனா, பாகிஸ்தான் என தனது அதிருப்திக்குரிய நாடுகளுடன் கூட்டணி வைத்துள்ள சிறிலங்காவை தக்க தருணம் பார்த்து இந்தியா சிக்கலுக்குள் மாட்டி விட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தியாவின் இந்த எச்சரிக்கையையும் மீறி தனது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் மகிந்த அரசு தனது பயணத்தை மேற்கொள்ளுமா இல்லை இந்தியாவின் "பேச்சுக்கு இணங்க" நடந்துகொண்டு அதனை அனுசரித்துப்போகுமா இல்லை இந்தியப் பிரதமரை அவ்வாறான உரையை ஆற்றி தம்மை அனைத்துலக அழுத்தத்திற்குள் தள்ளிவிடவேண்டாம் எனக் கோருமா என்பவை தொடர்பில் இனியே பதில் கிடைக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதோடு தற்போது மகிந்தவே முடிவு எடுக்கவேண்டிய தரப்பாக உள்ளார் (...The ball in the Mahinda’s court) என்று குறிப்பிட்டன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பவே மாட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்மலாட்டம் நடக்குது ரொம்ப பழமையாக இருக்குது

தாடியுடன் தொப்பிக்காரன் நடுவிலே...

சுற்றிச் சுற்றி கோட்சூட்டுடன் மற்றவர்கள்..

நெசனல் சால்வையுடன் எதிரிலே....

அடபோங்கப்பா.....

இன்றைய உலகமகா.............மகாப்பிரச்சனையான பயங்கரவாதம் பற்றித்தான் எழுதிக் கொடுத்ததை அங்கிள் வாசிப்பார்.

மகிந்துவை அதுவும் சிறிலங்கா அதிகாரத்தளத்தை இந்தப் பயந்தாங்கொள்ளி இந்திய அதிகாரத்தளம் எதுவுமே செய்துவிடாது.

டெல்லியில் வைத்து சிறிலங்கா அமைச்சர் இந்தியத் தலையீட்டை உடைத்துப் போட்டே வந்திருந்தார். ஆனால் இந்திய அதிகாரவர்க்கம் ஏன் கொழும்பிலிருந்தே உருப்படியாக எதையும் சொல்லவில்லை?

இப்ப தாடித்தொப்பிக்காரன் இப்படித்தான் படிக்கிறாராம்!

"நான் சிரிக்கிறேன்... சிரிக்கிறேன் சிரிப்பு வர்லே(!)

நான் அழுகிறேன்... அழுகிறேன் அழுகை வர்லே(!)...."

<_<

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உயர் அதிகாரிகளின் இந்தத் திடீர் விஜயம் யாழப்பாணத்திற்குள் போராளிகள் நுழைய முற்படுகிறார்கள் என்ற இலங்கை அரசின் அபயக்குரலைத் தொடர்ந்துதான் நிகழ்ந்திருக்கிறது. என்னென்ன இரகசிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன என்று யாருக்கும் தெரியாது. ராணுவ ரீதியான தீர்வுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமானது. அதை வலியுறுத்துவதற்காக இப்படியோரு திடீர் விஜயம் தேவையில்லை. இந்தியப் பிரதமரின் வருகை நடைபெற வேண்டுமாயின் இலங்கை தன் தற்போதைய நண்பாகளுடனான கூட்டை மீள்பரிசீலனை செய்யவேண்டுமென்னும் வலியுறுத்தல் மிக உயர்ந்தமட்டத்தில் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கலாம். அதற்கான சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருக்கலாம். அதிலொன்று யாழ் தொடர்பானதாக இருக்கக்கூடும். அதாவது யாழ்ப்பாணத்தைப் போராளிகள் கைப்பற்றவிடாமல் பாதுகாத்துக் கொடுக்கப்படும் என்னும் நிபந்தனைகூட வழங்கப்பட்டிருக்கலாம். எதுவும் ஈழத்தமிழருக்குச் சாதகமானதாக இருக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புதினத்துக்கு என்ன ஆச்சு ? எங்கிருந்து இந்தச் செய்தியை எடுத்தார்கள் ? எவருமே இன்னும் உரையாற்றவில்லை, அப்படியிருக்கும்போது அந்த உரையில் என்ன சொல்லப்படப்போகிறது என்று அறியுமளவிற்குப் புதினத்துக்குத் "தொடர்புகள்" இருக்கிறதா ?????

ஈழதமிழருக்கெதிரான இந்தியாவின் நிலைப்பாடு நாளொரு வண்ணமும், பொழுதொரு மேணியாகவும் அதிகரித்து வரும் நிலையில் இப்படியொரு செய்தியை வெளியிடுவது எல்லோரையும் குழப்பும் வேலை !

பொய்களைத்தவிர வேறொன்றுமில்லை....

உப்பிடியே சுத்திச்சுத்தி எழுதுங்கோ எண்டும் சொல்லி இருப்பாங்கள்.....

சத்தியமா சொல்லுறன் வந்தவங்கள் ஒண்டும் லேசுப்பட்டவங்கள் இல்லை... தங்களுக்கு ஒரு இலாபம் இல்லாம் உப்பிடி வரமாட்டாங்கள்...

ஏனெண்டா வயித்துக்குத்தை விட வலிகூடினவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

லக்பிமா பத்திரிகை இவ்வாறு சொல்கிறது

Indians here because of Mullathivu?

* IS IT AS IT WAS IN 1987

* TO APPEASE TAMILNADU

Sources said that the visit of the high level Indian delegation to Sri Lanka was not for reasons of SAARC and security as previously reported, but due to rapid developments in the Sri Lankan warfront, though no official confirmation was available of this fact.

The Indian National Security Adviser M. K. Narayan, the Defence Secretary Vijay Singh and the Foreign Secretary Shivshankar Menon reached Colombo Friday morning for talks with the government.

The visit comes just days after the Sri Lankan Army chief talked of a military solution, saying also that “the Sri Lankan Army will capture LTTE leader Prabhakaran alive.’’ In other words, the rapid troops thrust into the LTTE heartland Mullaithivu has caused the Indian delegation to rush to Sri Lanka to avert a rout of the LTTE, sources said.

The officials met Sri Lankan Defence Secretary and are also meeting an important pro-LTTE leader. The delegation was scheduled to meet the Sri Lankan president yesterday, but there was no word of the outcome of this meeting. Delegates also met TULF MP Mr R. Sambandan yesterday.

Analysts were abuzz with deja vu comparisons with 1987, when the Indian government engineered parripu drops over Jaffna in the face of imminent success for Sri Lankan troops in the Vadamarachchi campaign.

Meanwhile, the visiting delegation we are reliably informed, is not here at the behest of the Indian Ministry of External Affairs but at the behest of a higher Indian authority, a fact that added to the speculation about the nature of the Indian visit.

There has also been widespread speculation and some reportage of a move by the Indian delegation to moot a new political solution that would address Tamil grievances.

Other analysts said that the Indian delegation may be in Sri Lanka “purely to assuage Tamil feelings which always run high in the state of Tamilnadu when there are favourable developments for the army in the Sri Lankan war front.”

http://www.lakbimanews.lk/news/laknew1.htm

இந்துப் பத்திரிகை இவ்வறு சொல்கிறது.

No military solution to Sri Lankan strife

B. Muralidhar Reddy

New Delhi’s stance conveyed to Rajpaksa

Solution possible within framework of a united Sri Lanka

Team briefed on efforts to forge consensus

COLOMBO: New Delhi on Saturday expressed hope that Colombo would find a peaceful solution to the ethnic conflict within the framework of a united Sri Lanka and reiterated its position that there was no military solution to the strife.

The Indian viewpoint was articulated by the Indian team represented by National Security Adviser M.K. Narayanan, Foreign Secretary Shiv Shankar Menon and Defence Secretary Vijay Singh in a meeting with President Mahinda Rajapaksa.

As per an agreement between the two sides, all the meetings of the Indian team were held away from the media glare and even the President’s Office chose not to release the customary handshake photograph. There was no official statement on the visit.

In-depth discussions

A senior Indian official told Indian journalists that the team held in-depth discussions with senior Sri Lanka government officials on a issues of bilateral interest including the current security situation in the country against the backdrop of the war in the north between the forces and the LTTE as well as matters related to the SAARC Summit scheduled here in August.

“It is a very successful visit. The nature of discussions was constructive and useful,” was how the Indian official visit summed up the outcome of series of meetings between the Indian team and their Sri Lankan counterparts.

Among those with whom the Indian side held extensive talks were Lalith Weeratunga, Secretary to the Sri Lankan President, Defence Secretary Gothabhaya Rajapaksa, Basil Rajapaksa, Senior Adviser to the President, and the service commanders.

Besides, the team exchanged views with representatives of three Tamil parties. These were the Ceylon Workers Congress (CWC) leader and Minister, Arumugam Thondaman, PLOTE leader Dharmalingam Siddarthan and pro-LTTE Tamil National Alliance Parliamentary Leader, R. Sampanthan.

In addition to the situation on the ground in the battle scarred north, the issue of fisher folk straying into the territorial waters of each other’s countries and the preparations for the forthcoming SAARC Summit figured prominently in the talks.

The Sri Lankan side gave a detailed briefing on the efforts being made by the President to forge a consensus within the country on a solution to the ethnic conflict acceptable to all sides, the commitment on the part of the regime for full implementation of the 13th Amendment to the Constitution pertaining to devolution of powers to provinces and the recent election to the Eastern Provincial Council.

http://www.hindu.com/2008/06/22/stories/2008062260271000.htm

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இராணுவப் பலத்தை அதிகரிப்பதே நாராயணன் குழு வருகையின் முக்கிய நோக்கம்

* சீனா, பாகிஸ்தான் பக்கம் கொழும்பு அதிகளவுக்கு ச?யாமல் தடுப்பதில் இந்தியா முனைப்பு

இலங்கையின் இராணுவப் பலத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் இந்தியா மேலும் ஆயுதங்கள், யுத்ததளபாடங்களை விநியோகிக்கும் சாத்தியமுள்ளதாகவும் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடமிருந்து கொழும்பு தொடர்ந்தும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைத் தடுத்துநிறுத்துவதற்காக அதிகளவில் இலங்கைக்குத் தான் வழங்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதலிலிருந்து தடுத்து நிறுத்தும் வகையிலான உபகரணங்களே இந்த ஆயுத விநியோகத்தில் அதிகளவு இடம்பெற்றிருக்குமெனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிடுவதாக "ரைம் ஒப் இன்டியா' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ ரீதியில் தீர்வு சாத்தியமில்லையென இந்தியா நம்புகின்றது. நாட்டின் ஆட்புல எல்லைக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கவேண்டுமெனவும் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் மறுபுறத்தில் புதுடில்லி கொழும்பைத் தூண்டிவருகிறது.

அரசியல் ரீதியான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை குறித்து மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு புதுடில்லி தெரியப்படுத்தியுள்ளது. கடந்தவார இறுதியில் கொழும்புக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் விஜேசிங் ஆகியோரடங்கிய உயர்மட்டத் தூதுக்குழுவூடாக இந்தச் செய்தியை புதுடில்லி விடுத்திருக்கிறது.

அதேசமயம் தனது பின்புறத்தில் அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் சீனா ஊடுருவுவதை இந்தியா புறக்கணித்துவிடவோ அலட்சியமாக இருந்துவிடவோ முடியாது. புலிகளுடனான யுத்தத்தில் இலங்கையின் இராணுவ வலிமையை அதிகரிக்க பரந்தளவிலான ரக ஆயுதங்களை சீனா கொழும்புக்கு விநியோகித்து வருகிறது.

"மியான்மாரில் இடம்பெற்றதைப் போன்றதொன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. ஆயுத விற்பனை, எண்ணெய் ஆய்வு, அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற துறைமுக செயற்றிட்டங்கள் என்பனவற்றில் இலங்கையில் சீனா நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது' என்று சிரேஷ்ட அதிகாரியொருவர் ரைம் ஒவ் இன்டியாவுக்குக் கூறியுள்ளார்.

சீனா, பாகிஸ்தானிடமிருந்து பாரியளவில் இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக இந்தியாவின் அதிருப்தியை நாராயணன் தலைமையிலான குழுவினர் கொழும்பிடம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ மற்றும் ஏனையோருடனான பரந்துபட்ட கலந்துரையாடல்களின் போது இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இராணுவ விநியோகங்கள், புலனாய்வு, பயிற்சி என்பனவற்றை உள்ளடக்கிய "சகல உதவிகளையும்' வழங்குவதாக இந்தியத் தூதுக்குழு உறுதியளித்திருக்கிறது.

சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதை இலங்கை நிறுத்த வேண்டுமென முன்னர் நாராயணன் பகிரங்கமாகத் தெரிவித்திருந்ததுடன், பிராந்தியத்தில் அதிகளவு அதிகாரமுடையதாக இந்தியா இருப்பதாகவும் கொழும்பின் நியாய பூர்வமான பாதுகாப்புத் தேவைகளைப் புதுடில்லியால் பூர்த்திசெய்யமுடியுமெனவும் கூறியிருந்தார்.

ஆனால், தமிழ்நாட்டின் அரசியல் உணர்வுகளைக் கருத்திற்கொண்டு பாதுகாப்புக்கான ஆயுதங்களையும் உபகரணங்களையும் இதுவரை இந்தியா விநியோகித்துவந்தது. 40 மி.மீ. எல் 70 விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் தொடக்கம் இந்திரா ராடர்கள் போன்றவற்றையே இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், சீனாவும் பாகிஸ்தானும் அண்மைக்காலங்களில் இலங்கையின் ஆயுதத்தேவைக்கான வெற்றிடத்தை நிரப்ப அதிகளவுக்கு முன்வந்திருந்தன. 1990 களில் மியான்மாரின் ஜூன்டா இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களை வழங்காமல் புறக்கணித்ததைப் போன்றதொரு நிலைமையே இங்கும் ஏற்பட்டிருந்தது.

உதாரணமாக கொழும்பு 37.6 மில்லியன் டொலர் தொகையில் பெய்ஜிங்கைத் தளமாகக் கொண்டியங்கும் பல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஆயுதங்கள், ரவைகள், மோட்டார்கள், குண்டுகளைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

அத்துடன், சீனாவிடமிருந்து ஜியான் 7 யுத்த விமானங்கள், ஜே.வை. 1 முப்பரிமான ராடர்கள், கவச வாகனங்கள், ரி 56 துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புத் துவக்குகள், ரொக்கட்டுகள், கிரனைட் லோஞ்சர்கள், ஏவுகணைகள் என்பனவற்றையும் பெற்றுவருகின்றது.

அதேவேளை, இந்தியா சர்வதேச கடற்பரப்பில் இலங்கையுடன் கூட்டாக கடற்படை ரோந்தை மேற்கொண்டுள்ளது. புலிகளின் நடவடிக்கைகளை கடற்பிராந்தியத்தில் தடுக்கவே இந்தியா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஆயுத உதவி : இந்தியா முடிவு

டெல்லி : இலங்கைக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதால் இலங்கை தமிழர்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் 3 பேர் கொண்ட உயர்மட்டக்குழு இலங்கை சென்றுள்ளது. இவர்கள் அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிநவீன ஆயுதங்களை இந்தியா வழங்க வேண்டும் என்று இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. ஏற்கெனவே எல்-70 வகை துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் 4 அதிநவீன ரேடார்களை இந்தியா இலங்கைக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மேலும், ரேடார்கள், தானியங்கி பீரங்கிகள், ஆளில்லா குட்டி விமானங்கள் போன்றவைகளை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்க சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தயாராக இருப்பதாகவும், அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால், இந்திய பாதுகாப்பிற்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. இதன்காரணமாக, இலங்கையில் மேலும் பதற்றம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தற்போது கடும் பீதி ஏற்பட்டுள்ளது.

-குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.