Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

* -- தமிழர்களுக்கு ஒரு குழப்பம் --*

Featured Replies

தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஒரு குழப்பம்.

இது ஊருக்கு உலைவைக்கும் உலகபுதினம் .

தமிழ்

இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது.

1, Tamil

2, Thamil

3, Thamiz

4, Tamiz

5, Tamizh

6, Thamizh

ஈழம்,

இதை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவது.

1, ம்ம்ம்.... பெருச்சாளியே போக வளை காணாது, இதுல விளக்குமாறு வேற!!

Edited by Panangkai

என்ன பனங்காய் நீங்களும் மொழிமீட்பில இறங்கி இருக்கிறீங்களோ? <_< ஆங்கிலத்தில எப்பிடி எழுதினால் என்ன அந்த உச்சரிப்பு வந்தால் சரி எண்டு நினைக்கிறன். நான் TAMILEELAM எண்டு எழுதுவது ஆங்கிலத்தில

பனங்காய் நீங்கள் எழுதிய ஐந்தும் தமிழ் என்பதற்கான சரியான உச்சரிப்பைக் கொடுக்காது. Thamizh என்பதே சரியானது. ஆனால் zh என்பதை ழ் என்று எல்லோரும் உச்சரிக்க மாட்டார்கள்.

ஈழம் = Eezham

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்வரையில் Thamil ஓரளவு பொருத்தமானது. 'ழ'கரத்துக்கு zh பாவிப்பதைவிட 'L' பாவிப்பது பரவாயில்லை. ஆனால் 90 வீதப் பெரும்பான்மை zh பயன்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் ------- iizam

தமிழ் --------- thamiz

தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது தமிழில் வாசிக்கத் தெரியாதவர்கள் தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் வாசிக்கும் வசதியையும் கருத்திற்கொண்டே.

என்ற ஓசை Z க்கு எப்படி சமனாகும்? ஆங்கிலம் மட்டுமே வாசிக்க தெரிந்தவர்கள், அல்லது பிற மொழிகள் பேசுபவர்கள் Zஎன்று எப்படி புரிந்து கொண்டு உச்சரிப்பார்கள்?

ஆகவே THAMIL or TAMIL என்று எழுதுவதே ஓரளவுக்காவது பிறமொழி பேசுபவர்களை தமிழ் என்று சரிவர உச்சரிக்க செய்யும். THAMIZ என்று எழுதினால் தமிஸ் அல்லது தமிஜ் என்று தான் உச்சரிப்பார்கள் தமிழ் வாசிக்க தெரியாதவர்கள்.

இன்று தமிழ் ஒரு உலகளாவிய மொழியாக இருப்பதால், தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் போது பிறமொழி பேசுபவர்களின் உச்சரிப்பு பாணியையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது தமிழில் வாசிக்கத் தெரியாதவர்கள் தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் வாசிக்கும் வசதியையும் கருத்திற்கொண்டே.

என்ற ஓசை Z க்கு எப்படி சமனாகும்? ஆங்கிலம் மட்டுமே வாசிக்க தெரிந்தவர்கள், அல்லது பிற மொழிகள் பேசுபவர்கள் Zஎன்று எப்படி புரிந்து கொண்டு உச்சரிப்பார்கள்?

ஆகவே THAMIL or TAMIL என்று எழுதுவதே ஓரளவுக்காவது பிறமொழி பேசுபவர்களை தமிழ் என்று சரிவர உச்சரிக்க செய்யும். THAMIZ என்று எழுதினால் தமிஸ் அல்லது தமிஜ் என்று தான் உச்சரிப்பார்கள் தமிழ் வாசிக்க தெரியாதவர்கள்.

இன்று தமிழ் ஒரு உலகளாவிய மொழியாக இருப்பதால், தமிழ் சொற்களை ஆங்கிலத்தில் எழுதும் போது பிறமொழி பேசுபவர்களின் உச்சரிப்பு பாணியையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன்

உந்த 'Z' எண்டைக்கு பழக்கத்திற்கு வந்தது?

ஈழம் ------- iizam

ஆமாய்யா ஆமா.. ஆளாளுக்கு எடுத்து உடுங்கோ!..... :wub:

நீங்க குழப்பிறது போதாது எண்டு.. தமிழ்நெட் வெற!

பனங்காய் நீங்கள் எழுதிய ஐந்தும் தமிழ் என்பதற்கான சரியான உச்சரிப்பைக் கொடுக்காது. Thamizh என்பதே சரியானது. ஆனால் zh என்பதை ழ் என்று எல்லோரும் உச்சரிக்க மாட்டார்கள்.

ஈழம் = Eezham

எல்லோரும் அல்ல.... எனக்குத்தெரிந்து யாரும் உச்சரிப்பதில்லை. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் : Tamil

ஈழம் : Eelam

தமிழீழம் (தமிழ் ஈழம்) : Tamileelam (Tamil Eelam)

  • தொடங்கியவர்

ஆனால் 90 வீதப் பெரும்பான்மை zh பயன்படுத்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.

பச்சைபொய்..... கூகுளில் Tamil / Tamiz எண்டு அடிச்சுபாருங்கோ :rolleyes::wub::):):):):(

தமிழ் : Tamil

ஈழம் : Eelam

தமிழீழம் (தமிழ் ஈழம்) : Tamileelam (Tamil Eelam)

:D

என்ன பனங்காய் நீங்களும் மொழிமீட்பில இறங்கி இருக்கிறீங்களோ? :D ஆங்கிலத்தில எப்பிடி எழுதினால் என்ன அந்த உச்சரிப்பு வந்தால் சரி எண்டு நினைக்கிறன். நான் TAMILEELAM எண்டு எழுதுவது ஆங்கிலத்தில

சரியாக சொன்னீர்கள் முரளி. ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கிலம் எழுதவேண்டும்.

Edited by Panangkai

சரியாக சொன்னீர்கள் முரளி. ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கிலம் எழுதவேண்டும்.

:rolleyes::wub::)

  • தொடங்கியவர்

இந்த குழப்பம் LTTEயை ZTTEஎண்டு சிங்களவன் கூப்பிடும்வரை போய்விட்டது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி எனி அப்போ எங்களை தடைசெய்துள்ள நாடுகள் ZTTE'யிக்கு தடை போட்டுவிட்டு, LTTE'யை தடைப்பட்டியலில் இருந்து நீக்கிவிடவும்! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது பிறரால் எவ்வாறு உச்சரிக்கப்படும் என்பதையறிய விரும்புகிறீர்களா? அப்படியானால் பின்வரும் இணையத் தளத்தில் குறிப்பிட்ட சொற்களை நிரப்பி அதன் ஒலி வடிவத்தை கேட்டுப் பாருங்கள்.

http://www.research.att.com/~ttsweb/tts/demo.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று வருடங்களுக்கு முன்பு மெல்பேணில் ஓர் இன்னிசை நிகழ்விற்குப் போயிருந்தேன். தமிழீழ பொருளாதர வள ஆலோசகரும் ஒரு கனவினைப் போல் முடிவடைந்து விட்ட கடந்த சமாதானப் பேச்சுக்களில் புலிகள் சார்பில் கலந்து கொண்டவருமான ஜோய் மகேஸ்வரனின் சொந்த இசைக்குழுவின் இன்னிசை நிகழ்வு அது. மேடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டியில் Melbourne Innisai Kulu என்றிருந்தது இலேசான ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தமிழில் அதன் உச்சரிப்பு மெல்பேர்ண் இன்னிசைக் குலு என்றானதுதான் என் ஆச்சரியத்துக்கு காரணம். குழு என்பதற்கு Kuzhu என்பது தானே பயன்பாட்டில் உள்ள வழக்கம்? தமிழ் தெரியாதவர்கள் அதனை குலு என்றல்லவா வாசிப்பார்கள் என்ற என் முடிபு - kuzhu ஐத் தமிழ் தெரியாதவர்கள் குழு வென வாசிப்பார்கள் என்ற தவறான கற்பிதத்தில் முடிந்தது.

விக்கியில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்குத் தொடர்பான ஒரு கட்டுரையில் யாழ்ப்பாணத்தவருக்கு ழ, ள போன்றவற்றில் உச்சரிப்பு வித்தியாசம் கிடையாதென சொல்லப்பட்டிருந்தது. அது உண்மைதான். என்னளவில் உச்சரிப்பின் போது கிழியும் ஒன்றுதான். கிளியும் ஒன்றுதான். (ஆனால் கிலியில் அழுத்தமானதும் தெளிவானதுமான வேறுபாடு உண்டு).சிறுவயதுகளில் உச்சரிப்புச் சொல்லித்தந்த ஆசிரியர்கள் கூட லகரத்தில் ஏற்படுத்திக் காட்டிய வேறுபாட்டை ழகரைத்தில் சொல்லித்தந்ததில்லை. ஒருவேளை அவர்களுக்கும் அது முடியாததாயிருக்கலாம். ழ என்பதன் உச்சரிப்பு ய என்பதற்குச் சற்றுக்கிட்டவாக வரும் எனத் தெரிகிறது. ஆனால் முயற்சித்துப் பார்த்தால் பழம் பயமாகித்தான் வருகிறது. இரண்டுக்குமான நுண்ணிய வேறுபாட்டினை உச்சரிப்பில் ஏற்படுத்த முடியவில்லை.

ழ எனும் ஒலி தமிழின் சிறப்பு ஒலியென்பது தெரிந்ததுதான். ஆனால் அதனை ஆங்கிலத்தில் எழுதும் வழக்கமான Zha என்பது தமிழரல்லாத எல்லோரிடத்திலும் ழ எனும் உச்சரிப்பைத்தான் ஏற்படுத்தும் என ஏன் நம்பியிருந்தேனோ தெரியவில்லை. Zha எனும் ஆங்கில எழுத்துக்களீனூடாக ழ வினைக் குறிக்கலாம் என்பது இடையில் வந்தவொரு வழக்காக இருக்க வேண்டும். தமிழகத்தில் முன்னும் ஈழத்தில் பின்னும் இது ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். இதை யார் கண்டு பிடித்தார்கள் ?

இன்னொரு அதிக பிரசிங்கித்தனமாக தமிழில் ழ எனும் ஒலியை உணர்த்தப் பயன்படும் zh உடன் நிறுத்தாமல் இன்னொரு படி மேலே போய் பிறமொழிகளில் zh காணப்படுகையில் அதனைத் தமிழில் ழ் என ஒலிபெயர்ப்பதைச் சொல்லலாம். பல வருடங்களுக்கு முன்பு லெபனான் நாட்டு இஸ்லாமிய நண்பன் ஒருவனிடம் ஏன் நீ ரம்ழானை சரியாக உச்சரிக்காமல் ரம்ஷான் என தவறாக உச்சரிக்கிறாய் எனக் கேட்டபோது அவன் என்னை ஒரு வினோதப்பொருளாகப் பார்த்தான்.

zh இனை ழ் ப்படுத்தும் கைங்கரியத்தினால்த்தான் ரம்ஷான் திரிபாகி ரம்ழான் ஆனது. zhak zhan என்ற பெயர்களெல்லாம் ழாக் என்றும் ழான் என்றும் ஆயின.

Zh இனை ழ் என உய்த்துணர தமிழரல்லாத பிறரால் முடியாத போது இது தனியே தமிழருக்குள்ளான பயன்பாட்டுத் தேவை கருதியே கொண்டு வந்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

மீண்டும் மெல்பேண் இன்னிசைக் குழுவிற்கே வருகிறேன். அவர்களும் ஆரம்பத்தில் Kuzhu என்றுதான் எழுதியும் விளம்பரப்படுத்தியும் வந்துள்ளார்கள். ஒரு தடவை நிகழ்ச்சியொன்றின் போது விருந்தினராக வந்த யாரோ ஒரு வெள்ளைக்காரர் தனது பேச்சினிடையே ஐ விஷ் மெல்பேண் இன்னிசை குசு என்று ஆரம்பித்து நிறையத்தடவை குசுவைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். அன்று தான் குசுவினை அழித்து விட்டு குலு ஆக்கினார்களாம். சரிதானே ? kulu என எழுதினால் நம்மால் அதனை குழு புரிந்து கொள்ள முடிகிறது. அதனை பிறமொழியாளர் ஒருவரால் குலு என்றாகிலும் உச்சரிக்க முடிகிறது.

வீல்வது நாமாயினும் வால்வது தமிலாகட்டும் என்னும் போதும் என்னை வால வைத்துக்கொண்டிருக்கும் தமிலக மக்களே எனும் போதும் தமிழ் தமிலாக வளைந்து கொடுக்கின்றது தானே ?

http://blog.sajeek.com/?p=320

  • தொடங்கியவர்

சூப்பர் காவடி..........

இதுக்கு ஒரு முடிவு கட்டினபிறகுதான்.... எனக்கு மற்றவேலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விக்கியில் யாழ்ப்பாணப் பேச்சு வழக்குத் தொடர்பான ஒரு கட்டுரையில் யாழ்ப்பாணத்தவருக்கு ழ, ள போன்றவற்றில் உச்சரிப்பு வித்தியாசம் கிடையாதென சொல்லப்பட்டிருந்தது. அது உண்மைதான். என்னளவில் உச்சரிப்பின் போது கிழியும் ஒன்றுதான். கிளியும் ஒன்றுதான். (ஆனால் கிலியில் அழுத்தமானதும் தெளிவானதுமான வேறுபாடு உண்டு).சிறுவயதுகளில் உச்சரிப்புச் சொல்லித்தந்த ஆசிரியர்கள் கூட லகரத்தில் ஏற்படுத்திக் காட்டிய வேறுபாட்டை ழகரைத்தில் சொல்லித்தந்ததில்லை.

http://blog.sajeek.com/?p=320

இப்படிக்கூறி யாழ்களத்தில் பிரதேசவாதம் தூண்டுவதை நான், வாசகன் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • தொடங்கியவர்

கிளம்பீட்டாங்கய்யா.... கிளம்பீட்டாங்க!

YARLயை YARZ எண்டு மாத்தினா என்ன? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் தமிழில் எழுதப் பழகுங்களப்பா! "ழ்" என்று சொல்கின்றபோது நாக்கு அண்ணத்திலும், வாய் ஒரு குவியவும் வேண்டும்."ள்" என்கின்ற போது வாய் கிழிவது போல மாறவேண்டும். "ல்" என்கின்றபோது நாக்கு முன்னுக்கு வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.