Jump to content

மாயாவி


Recommended Posts

பதியப்பட்டது

மாயாவி

ஒரு பேப்பரிற்காக சாத்திரி

மாயாவி எண்டதும் சின்ன வயதிலை படிச்ச சித்திரக்கதை மாயாவிவேதாளன் கதை பலபேருக்கு ஞாபத்துக்கு வரும். ஆனால் இது சித்திரக்கதையில்லை ஊரிலை நடந்தகதை. முந்தி ஊரிலை காலத்துக்குக்காலம் மர்ம மனிதர். இல்லாட்டி மாயாவி மனிதர் உலாவுவினம். இல்லாட்டி உலாவுறகதை (வதந்தி) அடிக்கடி அடிபடும்.கதையளைக்கேட்டாலே ஒருவித மர்மம் நிறைஞ்ச ஒரு பரபரப்பாத்தான் இந்த மர்மமனிசனின்ரை கதை ஊரிலை கதைப்பினம்.கதையைக் கேட்டால் ஏதோ திகில் நிறைஞ்ச ஒரு இங்கிலிஸ் படம் பாத்தமாதிரி இருக்கும்.பெரும்பாலும் இந்தமாயாவி மனிசர் தோட்டங்களிலை விழைச்சல் இல்லாட்டி அருவிவெட்டு(நெல்லு வெட்டு)காலங்களிலைதான் அதிகமாய் உலாவுவினம்.அப்பிடித்தான் எங்கடை ஊரிலையும் திடீரெண்டு மர்ம மனிசனின்ரை கதை அடிபடத்தொங்கிச்சுது.அந்த மனுசனுக்கு உடம்பெல்லாம் முள்ளு முள்ளாய் இருக்குமாம்.யாராவது பிடிக்கப்போனால் முள்ளம்பண்டி மாதிரி முள்ளு சிலிர்த்து பிடிக்கிறவரை குத்திப்போடும். இப்பிடி ஒருகதை. ஆளை பிடிக்க ஏலாதாம் பிடிச்சால் வழுக்கிக்கொண்டு ஓடிடுவானாம்.உடம்பு வழுக்கிற மாதிரி இருக்காம். சிலநேரம் திடீரெண்டு மறைஞ்சிடுவானாம்.இப்பிடி ஒருகதை . அதுக்கும் மேலைபோய் சிலநேரம் ஆகாயத்திலை எழும்பி பறக்கத்தொடங்கிடுவானாம். இருட்டுக்குள்ளை அவனின்ரை கண்கள் பச்சைக்கலரிலை மின்னுமாம்.இப்பிடி ஆளாளுக்கு அவிட்டு விட்டு வதந்தி ஊரெல்லாம் பரவி. ஊர்ச்சனத்துக்கெல்லாம் பயம்தொட்டிட்டுது. இரவிலை வெளியாலை போறதையும் சனம் குறைச்சுப்போட்டுது.

இரவு கள்ளடிக்க தனியப்போறவை கூட பொழுதுசாயமுதலே போத்தில்லை வாங்கியந்து வீட்டிலை வைச்சு அடிக்கத்தொடங்கிட்டினம்.அது மட்டுமில்லை இரவிலை தோட்டக்காவலுக்கு போறவையள் இரவு செக்கன்சோ (9 மணி கடைசிக் காட்சி ) படம் பாக்கப்போற வாலிபக்கூட்டங்களும் போகாமல் விட்டிட்டினம்.அந்த மர்ம மனிசனை சிலபேர் இரவிலைபாத்தும் இருக்கினம் ஆனால் ஆக்களைக் கண்டதும் அவன் எப்பிடியோ திடீரெண்டு இருட்டுக்குள்ளை மறைஞ்சிடுறான். அது வயற்கரை வைரவர்தான் உலாவுறார் பயப்பிடாதைங்கோ அப்பிடி யாரும் கண்டால் ஒரு தேவாரத்தை சொல்லுங்கோ ஒண்டும் நடக்காது எண்டு ஊருக்குள்ளை சில பழசுகளின்ரை புராணம். அதே நேரம் ஊருக்குள்ளை களவும் போகத்தொடங்கிட்டுது.சரி வைரவர்தான் இரவிலை உலாவுறாரெண்டால் கடவுள் ஏன்களவெடுக்கவேணும் எண்டொரு குளப்பம்.இந்த மர்ம மனிசன் திரியிறதை சாட்டா பயன்படுத்தி வேறை யாரோ களவுக்கு வெளிக்கிட்டினமோ எண்டும் இல்லை அந்த மர்ம மனிசன்தான் களவெடுக்கிறானோ எண்டும் சந்தேகம்.இப்பிடியான குளப்பத்திலை ஒருநாளிரவு வெள்ளரித் தோட்டத்துக்கு காவலுக்கு படுத்திருந்த வைத்திலிங்கத்தார் ஏதோ சத்தம் கேட்டு எழும்பி ரோச்லைற்றடிச்சு பாக்கிறதுக்கிடையிலை மர்மமனிசன் அவருக்கு கண்ணைப்பொத்தி அடிச்சுப்போட்டு ரோச்லைற்ரையும் பறிச்சுக்கொண்டு பறந்திட்டான். பயத்திலை அய்யோ எண்டு கத்திக் கொண்டு ஊருக்குள்ளை ஓடியந்த வைத்திலிங்கத்தார் மயங்கிவிழ. சனமெல்லாம் சேந்து தூக்கிக்கொண்டு போய் சங்கானை ஆஸ்பத்திரியிலை போட்டிச்சினம்.

அடுத்தநாள் ஊர்ச்சனமெல்லாம் ஒட்டுமொத்தமாய் நான்உட்பட சங்கனை ஆஸ்பத்திரியிலைதான் . போனவை எல்லாரும் வைத்திலிங்கத்தாரை வருத்தம் பாக்குறதுக்கில்லை . எல்லாருக்கும் அந்த மர்ம மனுசனை பற்றி அறியிறதுதான் முக்கிய நோக்கம். அவன் எப்பிடியிருப்பான் உயரமா கட்டையா??கறுப்பா சிவப்பா ??இல்லை கலர்கலரா இருப்பானா??உடம்பிலை முள்ளு இருந்ததா?? பறக்கிற செட்டை (இறக்கை)இருந்ததா?? எண்டு ஆளாளுக்கு கேட்ட கேள்வியிலை மயக்கம் தெளிஞ்ச வைத்திலிங்கத்தார் திரும்ப மயங்கிட்டார். எல்லாரும் வெளியாலை போங்கோ அந்தாளுக்கு உங்களாலை விசர் பிடிக்கப்போகுது எண்டு அங்கை நிண்ட நேர்ஸ் மார் சனத்தைக் கலைக்க. அதுக்குள்ளை ஒருத்தன் அய்யோ வைத்திலிங்கத்து விசராம் எண்டு சொல்ல. மர்மமனிசன் அடிச்சு வைத்திலிங்கத்துக்கு பைத்தியமாம் எண்டு புதுசா ஒரு புரளிவேறை உலாவத்தொடங்கிட்டுது.வைத்தி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்டையனை கலைச்சுப் பிடிக்கஏலாம கோட்டை விட்ட கதைய மேதாவித்தனமா சொல்லியிருக்கிறீங்க. என்றாலும்நீங்க ஏமாந்தவர் இருக்குமிடத்திற்கு வராமல் இருந்திருந்தால் மானிப்பாய் ஒருதிகில் நிறைந்த இங்கிலிஸ்பட இயக்குனரை இழந்திருக்காது. பாராட்டுக்கள்

Posted
கன காலத்துக்குப் பிறகு ஒருநாள் நான் சைக்கிளிலை போய்க்கொண்டிருக்கேக்குள்
Posted

கட்டையனை கலைச்சுப் பிடிக்கஏலாம கோட்டை விட்ட கதைய மேதாவித்தனமா சொல்லியிருக்கிறீங்க. என்றாலும்நீங்க ஏமாந்தவர் இருக்குமிடத்திற்கு வராமல் இருந்திருந்தால் மானிப்பாய் ஒருதிகில் நிறைந்த இங்கிலிஸ்பட இயக்குனரை இழந்திருக்காது. பாராட்டுக்கள்

கண்மணியக்கா நான் பத்தாம் வகுப்பு பெயில் எண்டதையே 9 ம் வகுப்பு பாஸ் எண்டு மேதாவித்தனமாய் சொல்லித்தான் பழக்கம் :wub:

:D நல்ல பகிடிதான்...கட்டையனைப் பார்த்து ஓட வேண்டிய நிலைமைக்கு வந்ததைப்பார்க்க வடிவேலு ஞாபகம் தான் வருகிறது

நன்றிகள் லீ உங்களிட்டை ஒரு கேள்வி நீங்கள் வெறும் லீ யா அல்லலது புருஸ்லீ ஜெற்லீ மாதிரி ஏதாவது லீயா. அல்லது பல்லி.மல்லி இப்பிடி ஏதாவது லியா?? சும்மா பொது அறிவை வளர்க்கலாமெண்டுதான் கேட்டான் கோவிக்கவேண்டாம். :wub::lol:

Posted

நன்றிகள் லீ உங்களிட்டை ஒரு கேள்வி நீங்கள் வெறும் லீ யா அல்லலது புருஸ்லீ ஜெற்லீ மாதிரி ஏதாவது லீயா. அல்லது பல்லி.மல்லி இப்பிடி ஏதாவது லியா?? சும்மா பொது அறிவை வளர்க்கலாமெண்டுதான் கேட்டான் கோவிக்கவேண்டாம். :wub::wub:

அது சந்தர்ப்பத்தை பொறுத்து.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அந்த கட்டையன் எங்க முதல் அமைச்சராக இருக்கிறான்?அல்லது மாகிந்தாவுக்கு மெய்பாதுகாவலனோ?

Posted

அந்த கட்டையன் எங்க முதல் அமைச்சராக இருக்கிறான்?அல்லது மாகிந்தாவுக்கு மெய்பாதுகாவலனோ?

புத்தன் இந்தியனாமி காலம் இந்தியனாமியோடை சேர்ந்து மானிப்பாயிலை திரீஞ்சதாய் கேள்விப்பட்டன் பிறகு என்ன நடந்தது எண்டு தெரியாது.. :wub::wub:

Posted

சாத்(திரி) அங்கிள் உங்கன்ட "மாயாவி" கதைக்கு முன்னால "ஜேம்ஸ்பாண்ட்" படம் எல்லாம் பிச்ச வாங்கனும் அந்த மாதிரி இருக்கு கதை பாருங்கோ :wub: ..அதிலையும் எங்கன்ட சாத்(திரி) 007 ஆசுபத்திரியில வைத்தியலிங்கத்தை பார்க்க கூட்டமா போன காச்சி முடியல என்னால.. :wub:

ரொம்ப நன்னா இருந்துச்சு கதை சாத்திரி அங்கிள் :D ..நான் உதை தனியா இருந்து வாசித்து சிரித்து கொண்டிருக்க என்னை எல்லாரும் வீட்ட ஒரு மாதிரி பார்க்கீனம்..(கடசியா வைத்தியலிங்கதிற்கு வந்த நிலை தான் எனக்கும் வந்திட்டாலும் எண்டு போட்டு)..அறை கதவை பூட்டி போட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Posted

சாத்(திரி) அங்கிள் உங்கன்ட "மாயாவி" கதைக்கு முன்னால "ஜேம்ஸ்பாண்ட்" படம் எல்லாம் பிச்ச வாங்கனும் அந்த மாதிரி இருக்கு கதை பாருங்கோ :wub: ..அதிலையும் எங்கன்ட சாத்(திரி) 007 ஆசுபத்திரியில வைத்தியலிங்கத்தை பார்க்க கூட்டமா போன காச்சி முடியல என்னால.. :D

ரொம்ப நன்னா இருந்துச்சு கதை சாத்திரி அங்கிள் :) ..நான் உதை தனியா இருந்து வாசித்து சிரித்து கொண்டிருக்க என்னை எல்லாரும் வீட்ட ஒரு மாதிரி பார்க்கீனம்..(கடசியா வைத்தியலிங்கதிற்கு வந்த நிலை தான் எனக்கும் வந்திட்டாலும் எண்டு போட்டு)..அறை கதவை பூட்டி போட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நன்றிகள் ஜம்மு வைத்திலிங்கத்தாரைப் பார்க்க ஏதோ திருவிழாவிற்கு போன மாதிரித்தான் ஊர்ச்சனம் போனது எல்லாம் விடுப்பு பாக்கத்தான்

Posted

சாத்திரியார் கிறீஸ் பூசி வழுக்கிற மனிசன், உடம்பெல்லாம் முள்ளு இப்பிடி கதையளை நானும் கேள்விப்பட்டிருக்கிறன். எந்த ஊரிலை எண்டெல்லாம் தெரியாது. ஆனா அப்ப அரிவரி/ முதலாம் வகுப்பு படிச்சிருப்பம் எண்டு நினைக்கிறன். உந்த மாயாவியை பற்றி கனக்க கதைச்சிருக்கிறம். அதை ஞாபகத்துக்கு கோண்டு வந்திருக்கிறியள்.

Posted

சாத்திரியார் கிறீஸ் பூசி வழுக்கிற மனிசன், உடம்பெல்லாம் முள்ளு இப்பிடி கதையளை நானும் கேள்விப்பட்டிருக்கிறன். எந்த ஊரிலை எண்டெல்லாம் தெரியாது. ஆனா அப்ப அரிவரி/ முதலாம் வகுப்பு படிச்சிருப்பம் எண்டு நினைக்கிறன். உந்த மாயாவியை பற்றி கனக்க கதைச்சிருக்கிறம். அதை ஞாபகத்துக்கு கோண்டு வந்திருக்கிறியள்.

அது சரி குளக்காட்டான் நீங்களே இப்ப மாயாவியாய் மாறிவிட்டீங்கள். உங்களையும் இப்ப யாழிலை காணக்கிடைகுதில்லை நீங்கள் எடுக்ககிற புகைப்படங்களையும் காணக்கிடைக்குதில்லை. :wub:

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமைபோல விறுவிறுப்பாக உங்களின் அனுபவத்தைச் சொல்லியிருக்கிறியள். களவெடுக்கிறவர்களைத்தான் இந்திய இராணுவமும், சிறிலங்கா இராணுவமும் சேர்க்கிறது. உப்பிடித்தான் உறுப்படாத மாணவருக்கு அடி போட்ட ஆசிரியர் ஒருவர், இந்திய இராணுவ காலத்திலே மருதனாமடம் ஈபிஆர்.எல்.எவ் முகாமின் முன்பு, அந்த உறுப்படாத மாணவரால் துப்பாக்கி முனையில் வெறுட்டப்பட்டார். நல்ல காலம் கட்டையனிட்ட நீங்கள் அடிவாங்கவில்லை சாத்திரி.

லீ சிங்கப்பூரில் வசிப்பதினால் சிங்கப்பூர் அதிபரின் பெயரில்( லீ குவான்) வந்திருக்கலாம் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையை வாசிக்கும் போது எங்கே சாத்திரியாரின் வழமையான கதைகளின் சோகமுடிவு போல் தான் முடியுமோ என நினைத்தேன்.

"ஏனெனில் கல்வியங்காட்டில் இயக்கம் கட்டி வைத்த கள்வனுக்கு அறிவுரை சொன்னவர்களும், ஏசியவர்களும், குட்டியவர்களும் பின்னர் இந்தியன் ஆமி காலத்தில் அந்தக் கள்ளனால் ஒன்றாகக் கடத்தப்பட்டு அதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்."

ஆனால் இம்முறை சாத்திரியார் ஏசியாவில் பறந்துபோய் நகைச்சுவையாக முடித்துள்ளார்.

கட்டையனுக்கு நன்றி.

Posted

சுதந்திரன் பத்திரிகையிலும் மாயாவி பற்றிய செய்திகள் வந்தது. பிள்ளைகளைப் பிடிக்கிறான் என்று வகுப்பு மாணவன் ஒருவன் சொல்ல சிறுவர்கள் எல்லோரும் பயத்துடன் இருந்தார்கள். மாயாவி மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி விட்டார் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்தது. பிறகு கர்ப்பமாகி விட்ட பெண் ஒருத்தி பரப்பிய கட்டுக்கதையே மாயாவி என்று பெரியவர்கள் சிலரும் அக்காலத்தில் கதைத்தார்கள்.

Posted

சுதந்திரன் பத்திரிகையிலும் மாயாவி பற்றிய செய்திகள் வந்தது. பிள்ளைகளைப் பிடிக்கிறான் என்று வகுப்பு மாணவன் ஒருவன் சொல்ல சிறுவர்கள் எல்லோரும் பயத்துடன் இருந்தார்கள். மாயாவி மூலம் பெண் ஒருவர் கர்ப்பமாகி விட்டார் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்தது. பிறகு கர்ப்பமாகி விட்ட பெண் ஒருத்தி பரப்பிய கட்டுக்கதையே மாயாவி என்று பெரியவர்கள் சிலரும் அக்காலத்தில் கதைத்தார்கள்.

இது எப்போழுது நடந்தது அரவிந்தன்.அந்த காலகட்டங்களிள் நானும் அந்த பத்திரிகையை வாசித்துள்ளேன்.

Posted

இது எப்போழுது நடந்தது அரவிந்தன்.அந்த காலகட்டங்களிள் நானும் அந்த பத்திரிகையை வாசித்துள்ளேன்.

நான் நினைக்கிறேன். 79,80,81 களில் என்று

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.