Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல்.

கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி.

``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இலங்கை அரசாங்கத்தோட தந்தி ரங்கள் அத்தனையையும் அத்துப்படியாகச் சொல்ல முடியும். சிங்களர்கள் மட்டுமே இலங்கையில வாழணும். மத்தவங்களை முடிஞ்ச வரை சாகடிக்கணும். அரசாங்கத்தோட நோக்கமே இதுதான்.

இன்னைக்கும் அந்தக் கொடுமை தொடருது. தேதி சரியா ஞாபக மில்லே. ஆனா, இப்போ நினைச்சாலும் அந்த சம்பவம் என் மனசை உறுத்திகிட்டே இருக்கு.

ஒரு அழகான தமிழ்க் குடும் பம் அது. ஏதோ கோயிலுக்குப் போறதுக்காக வந்துட்டிருந்தாங்க. வழியிலேயே சிங்கள போலீசு மடக்கிடுச்சு. அப்பா, அம்மாவோடு நின்று கொண்டிருந்த அந்த அப்பாவி இளம்பெண்ணைச் சூழ்ந்து கொண்டு `குட்டி நல்லா இருக்கு தில்லே'னு வக்கிர மாய் சிரித்துக் கொண்டே நெருங்கினார்கள். சோதனை என்கிற பெயரில் அந்த இளம் பெண்ணின் மார்பகங்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு `என்னடி குண்டு ஏதாவது வைச்சிருக்கியா'னு ஒருத்தன் சிரிக்கிறான். `குண்டு வைச்ச பெல்ட் போட் டிருக்கியா'னு இன்னொரு காடையன் அந்தப் பெண் பிள்ளையின் பாவாடையை அவிழ்க் கிறான். துப்பாக்கி முனை யில் இப்படி எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு தமிழனா இருந்துகிட்டு அந்தக் கொடுமையை நேர்ல பார்த்தும் ஒண்ணும் செய்ய முடியாத வேதனை இருக்கே... அப்படியே துப்பாக்கிய என் நெஞ்சுல வைச்சு சுட்டுக்கலாம் போல இருந்துச்சு.

1977-ல் ஒரு பெரிய கலவரம் மூண்டது. அப்போ கொழும்புவில் இருக்குற பொருளை ஸ்டேஷன்ல நானும் ஒரு போலீஸ். கண்ணுக்குச் சிக்கின பொண்ணுங்களையெல்லாம் ஒரு கும்பல் துரத்திகிட்டு ஓடுது. ஆனா, எங்களால எதுவுமே செய்ய முடியலை. ஒரு அறைக்குள்ளே எங்களை அடைச்சு வைச்சு பூட்டிட்டாங்க. அப்போ சன்னல் வழியா `நீயெல்லாம் ஒரு தமிழனாடா'ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. இன்றைய வரைக்கும் அந்தக் குரல் என்னோட காதுல எதிரொலிச்சிகிட்டே இருக்கு.'' சண்முகநாதனின் முகத்தில் கனமான இறுக்கம்.

``வெகு நேரம் கழிச்சு ஒரு பெண்ணையும், பையனையும் எங்காளுங்க கூட்டி வந்தாங்க. அந்தப் பொண்ணு அழுதுகிட்டே இருந்துச்சு. மொதல்ல காரணம் புரியாம இருந்தேன். எதேச்சையா பார்த்தப்பதான் ஒரு கணம் என் இதயமே நின்னு துடிக்க ஆரம்பிச்சது. அந்த இளம்பெண்ணின் பாவாடை முழுக்க ரத்தம். உள்ளுக்குள் இருந்து ரத்தம் ஒழுகுவது நிற்கவேயில்லை. கைது செய்யப் போன அந்த மூன்று சிங்கள போலீஸ்காரர்களும் ஜீப்பில் வைத்து அடுத்தடுத்து அந்த இளம் பெண்ணை நாசப்படுத்தியிருக்கிறார்கள

இதையெல்லாம் வாசிக்கும் போது இரத்தம் கொதிக்குது. இதையே திருப்பி சிங்களவனுக்கு கொடுக்கவேணும் அப்பத்தான் இதனுடையவலி அவனுக்கு புரியும் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த எண்ணம் மிகமிகத் தவறானது நண்பரே! பாதிக்கப்படுபவர் ஒரு அப்பாவியாகவே இருப்பார். பழிக்குப் பழியென்று வந்துவிட்டால் மனித இனமே உலகில் இருக்காது. எமது மண்ணை ஆக்கிரமிப்பவனை நேர்நின்று அழித்தொழிக்க வேண்டும். அதற்குச் சத்தியமும் தர்மமும் எப்போதும் துணைநிற்கும். அப்பாவிகளைப் பழிவாங்கினால் தர்மம் செத்துப்போகும். நாம் தோற்றுப் போய்விடுவோம்.

பிறகு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு...

5000 வருடம் போயிடுமாம்,

இலங்கையிலை தமிழர் என்ட ஒரு இனம் வாழ்ந்ததாம் என்டு சரித்திரத்திலை படிப்பாங்களாம்.

அகழ்வாராச்சி செய்து நாங்க விட்டுபோன பொருட்களை தோண்டி எடுத்து பொருட்காட்சிலை வைப்பாங்களாம்.

அடேங்.. சும்மா போப்பா ஆத்திரத்தை கிளப்பாமை.

பிறகு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிறகு என்ன பண்டாரவன்னியன் என்ரது போல் பிரபாகரன் பெயர் இருக்கும் காக்கைவனியன் என்ற பெயரில் ஆனந்த சங்கரி, டக்கிளஸ் . சித்தார்த்தன் , சிறிதரன் என்ற குழ்வின் தலைவர் பதவியில் இந்தியா இருக்கும்.

பண்டாரவனியன் தோற்றால் அது கற்காலம் ஆனால் ஏன் பிரபாகரன் தோக்கவேனும்?

இந்த நவின காலத்தில்?????????????????????

அணுவாயுதம் வலரசுகளுக்கு மட்டுமா சொந்தம் ???????????

காட்டுமிராண்டிகளிடம் துன்பங்களை அனுபவித்த்டவ்ர்களுக்கும் அதனை நேரில்ல்

பார்த்த சண்முக நாதன் போன்ற் பல ஆய்ரக்க்கணக்கான மக்களுக்கும் தான் தெரியும்

அதன் வேதனைகள்......

இவற்றிற்கெல்லாம் விடிவு விரைவில் வரும் என காலத்தை 30வருடங்களுக்கு மேல் தொலத்து

விட்டோம்......

காலம் இனி கனிந்துள்ளது........

தமிழர்களிடம் இனி எமது வெற்றிகரமாக ஆண்ட தமிழ் அரசர்களின் இறூமாப்பும்

ஓற்றுமையும் எதிரிகளை அழித்து ஒழித்தலில் இரக்கMஇண்மையும் எம் மக்களை மேலும் அழிவுகளில்

இருந்து காப்பாற்றும்

சிஙளம் ப்ழைய குருடி கதவை திறவ்டி கதையாக மீண்டும் த்மிழ் மக்களை நசுகி கொள்ளை கொலை பாலியல் வல்லுறவு என இன அழிஉப்புக்களை பகிரங்க மாக செய்ய வெள்ளிக்கிட்டு விட்டது....

மக்கள் எல்லாம் ஆட்டுமந்தைகள் போன்று என்ன செய்வது என அறியாமல் நிர்கதியாகியுள்ளனர்

எல்லாவற்றிகும் தீர்வு விரைவில் மண்மீட்பு ஒன்றே....

அதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த எண்ணம் மிகமிகத் தவறானது நண்பரே! பாதிக்கப்படுபவர் ஒரு அப்பாவியாகவே இருப்பார். பழிக்குப் பழியென்று வந்துவிட்டால் மனித இனமே உலகில் இருக்காது. எமது மண்ணை ஆக்கிரமிப்பவனை நேர்நின்று அழித்தொழிக்க வேண்டும். அதற்குச் சத்தியமும் தர்மமும் எப்போதும் துணைநிற்கும். அப்பாவிகளைப் பழிவாங்கினால் தர்மம் செத்துப்போகும். நாம் தோற்றுப் போய்விடுவோம்.

அப்புறம் என்னங்க சேர்...உங்க உபதேசம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் நல்லது சொல்லியும் புரியல்லெண்ணா சுதியில போய் அப்பாவிச் சிங்களப் பிள்ளையளக் கற்பழியுங்கோ. குழந்தைகளை வெட்டிக் கொல்லுங்கோ

அப்புறம் நல்லது சொல்லியும் புரியல்லெண்ணா சுதியில போய் அப்பாவிச் சிங்களப் பிள்ளையளக் கற்பழியுங்கோ. குழந்தைகளை வெட்டிக் கொல்லுங்கோ

அப்படி இல்ல கரு நாங்கள் செய்தாலும் எங்கள் தலமை அனுமதிக்காது என்பது உலகுக்கே தெரியும், அதனால் தான் மேலும் மேலும் எம் மேல் இப்படியான காட்டு மிராண்டித்தனத்தை எதிரியானவன் செய்கிறான் ...இது உமக்கு புரியவில்லை. போல. தனக்கு தனக்கு வந்தாத்தான் தலையிடி தெரியும் என்பதுபோல இல்ல இது ..இன்று பத்திரிகையில் வாசிக்கும் ஒரு செய்தி, நாளை என் தங்கைக்கு நடந்தது என்று என் வீட்டில் இழவு நடக்கும் இது தொடரும் இதுக்கு முடிவு எவன் பலத்துடன் இவ் உலகில் வாழ்கிறானே அவனே உலகில் வாழலாம் மற்றவர் எல்லாம் பலமானவனின் பசிக்கு இரைதான் என்பதை மறக்கவேண்டாம் .....எனவே நாம் பலமாய் இருக்க வேண்டுமா? அல்லது இரையாக போகப் போகிறோமா? என்பது தான் பிரச்சனை....

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் கிருபா!

தனக்குத் தனக்கு வந்தால்தான் தலையிடி புரியும் என்பதில் எந்தவித கருத்து மாறுபாடுகளுக்கும் இடமில்லை. ஆனால் தலையிடியை வராமல் செய்ய நாம் ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா. ஒன்றுக்கு மேல் ஒன்றாய் அடுத்தடுத்துப் பதிலுக்குப் பதில் செய்து கொண்டேயிருப்பது பெரிய வேலையில்லை. கையிலே ஆட்டிலறி இருக்கிறது, வானத்தில் பறந்து குண்டுபோட முடியும். ஆனால் இதுவரை அவையெல்லாம் சிங்களவர்கள் எமக்குச் செய்கிறார்களென்பதற்காக அவர்களை நோக்கித் திருப்பப்பட்டதா.

பண்பாடு மிக்க எமது தேசியத்தலைமை அவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கவில்லையா.

இங்கே கணனிப் புலிகள் எந்தவித பொறுப்புமில்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் எழுதுகிறார்கள். விளைவுகளால் பாதிக்கப்படப்போவது யார்? ஏதோ தமிழீழமும் தமிழ்த் தேசியமும் அவர்களின் அப்பன் வீட்டு முதுசம். மற்றவர்கள் அவர்களின்; நாட்டாண்மைத்தனமான கருத்துக்களுக் கெதிராக எதுவும் எழுதக் கூடாதென்றல்லவோ நினைக்கிறார்கள். எனது சொந்தம் ஊரில் வாழ்கிறதே. இந்த முட்டாள்க் கருத்துக்களை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தங்கள் அடாவடித்தனங்களால் அவர்களின் கோத்தை கொக்கைமாரைப் பலிகொடுக்கத் தயாராயிருக்கிறார்களா. எங்களுக்கும் தமிழீழவிடுதலையிலும் தேசியத்திலும் அக்கறையுண்டு நாங்களும் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களே. ஏதோ பெரிய தேசியமுனைப்புக் கொண்டு களத்தில் நின்று போராடும் போராளிகள் அல்லது அவர்களின் வால்கள் என்ற எண்ணத்தில் மற்றவர்களைப் புறந்தள்ளி நச்சுத்தனமான கருத்துக்களைத் தமிழ்மக்கள்மீது திணிப்பவர்களை ஆமாஞ்சாமி போட்டு அங்கீகரிப்பதற்கு இஙகுள்ளவர்களெல்லாம் முட்டாள்களல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். அவாகளின் ஊரில்காட்டிய நாட்டாமைத்தனத்தை அவர்களது ஊரோடு வைத்துக்கொள்ள வேண்டும். தமிழீழம் பரந்துபடட்து. நாங்கள் அவர்களின் கருத்துக்களுக்குத் தலையாட்டுவதற்கு அவர்களின் குஞசப்பு மார்களும் அல்ல. எங்களுக்கென்று வேறுபட்ட பண்பாட்டு விழுமியங்களுள்ளன. பேனாக்களால் நச்சை உமிழந்துவிட்டு ஏதோ பெரிய போர்முனைப்புக்கொண்ட விடுதலை வேங்கைகள்போல மற்றவர்களை முட்டாளாக்க முயலவேண்டாம். நல்லதைச் சொன்னால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்து மற்றவர்களை நக்கலடிக்க வெளிக்கிடுவதைப் பொறுத்துக்கொண்டு எப்படியிருக்கமுடியும். எங்களிடமும் பேனாமுனையிருக்கிறது. அதிலிருந்தும் நெருப்புப் பொறிகள் பறக்கும். தேவைப்பட்டால்.

ஈழவன் இந்தச்செய்திய கொஞ்சம்முன்னம் ஊர்ப்புதினத்தில இணைச்சபிறகு இப்பத்தான் இதப்பார்த்தன். வாசிக்க சரியான அதிர்ச்சியாவும், வேதனையாகவும் இருக்கிது.

சிங்கள வே** படைகளுக்கு குடுக்கிறதுக்கு இன்னும் நிறைய இருக்கிது எண்டு தெரியுது. இப்பிடி இவேள் தமிழ்ப்பெண்கள சீண்டி விளையாடினதிண்ட பின்விளைவுகளத்தான் இப்ப அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறீனம்.

இப்பிடி நாம அறியாத எத்தனயோ எத்தனையோ ஆயிரம் சோகக்கதைகள் எல்லாம் இருக்கும். இப்பிடி காந்திவழி வந்த இந்திய மிருகங்களும் தமிழ்ப்பெண்களிண்ட வாழ்க்கைகளோட விளையாடி இருக்கிதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பாணந்து றையில் குருக்களை - பெரும்

பாதைக்கு ஊற்றிடும் தாரினுள் - கலி

நாணிக்கு னிந்திடு மாறிலே - ஓ

நாய்கள் புதைத்துச் சிதைத்ததும்

காணக் கண் கூசிடுமாறிலே - தமிழ்க்

கன்னியர் ஆடைகள் நீக்கியே

வீணர்கள் வீதியில் விட்டதும் - நெஞ்சை

விட்டு அகன்றிடக் கூடுமோ!

இது இன்று நேற்றுத் தொடங்கிய விடயமா! இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தொடர்கிறது. ஐம்பத்தெட்டில் உச்சம்பெற்று இன்றுவரை தொடர்கிறது.

இந்தக் குமுதம் காரருக்கு இப்போதுதான் வெளிச்சமாகியிருக்கிறது.

இந்த அனியாயங்களுக் கெதிராகத்தான் தந்தை செல்வா துடித்தெழுந்தார். தனியரசே எங்களுக்கு இறுதித் தீர்வு என்று பிரகடனம் செய்தார். இந்தியாவுக்கு ஓடினார். அங்கெல்லாம் எங்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி முறையிட்டார். அவர்கள் கண்டும் காணாதமாதிரி இருந்துவிட்டார்கள். அப்போதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இதற்காக எதாவது செய்ய முயன்றிருந்தால் இன்று இத்தனைதூரம் போயிருக்காது. தமிழகமும் எமக்காகப் பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லை.

ஆனால் இப்போதோ பிளவுகள் ஒட்டப்பட முடியாத நிலையை அடைந்தபிறகு எம்மை அழித்துவிடும் நோக்கில் இந்தியா செயற்படுகிறது.

தற்போது வரும் படை என்ன செய்யப்போகிறது. கொழும்பிலும் மலையகத்திலும் தமிழர்களைக் காத்து நிற்க வருகிறதா அல்லது ஈழப்பிரதேசங்களுட் புகுந்து எம்மை எமது கட்டுமானங்களை அடியோடு தகர்த் தெறிந்து சிங்களவரின் கையில் மீண்டும் எம்மை ஒப்புக் கொடுக்க வருகின்றதா?

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். எது எப்படிப் போவதும் எம்மையும் பொறுத்திருக்கிறது. பெரிய வல்லரசுடன் பழையபடி முண்டிக்கொள்ளாது அதேவேளை எங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்காது போராடுவதுதான் ஒரே வழி.

தமிழன் தனக்கேற்பட்டுள்ள அவலத்தை மேலும் மேலும் கூட்டுவானா அல்லது கெட்டித்தனமாக ராஜதந்திரத்துடன் செயற்பட்டுத் தனது பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றித் தனியரசை நிறுவுவானா என்ற கேள்விக்கு விடை எமது நிதானமான செயற்பாட்டில்தான் இருக்கிறது. உணர்ச்சி வசப்படுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. ஏற்கனவே நாம் பலபாடங்களைக் கற்றிருக்கிறோம்.

நண்பர் கிருபா!

தனக்குத் தனக்கு வந்தால்தான் தலையிடி புரியும் என்பதில் எந்தவித கருத்து மாறுபாடுகளுக்கும் இடமில்லை. ஆனால் தலையிடியை வராமல் செய்ய நாம் ஏதாவது செய்தாக வேண்டுமல்லவா. ஒன்றுக்கு மேல் ஒன்றாய் அடுத்தடுத்துப் பதிலுக்குப் பதில் செய்து கொண்டேயிருப்பது பெரிய வேலையில்லை. கையிலே ஆட்டிலறி இருக்கிறது, வானத்தில் பறந்து குண்டுபோட முடியும். ஆனால் இதுவரை அவையெல்லாம் சிங்களவர்கள் எமக்குச் செய்கிறார்களென்பதற்காக அவர்களை நோக்கித் திருப்பப்பட்டதா.

பண்பாடு மிக்க எமது தேசியத்தலைமை அவற்றைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கவில்லையா.

இங்கே கணனிப் புலிகள் எந்தவித பொறுப்புமில்லாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் எழுதுகிறார்கள். விளைவுகளால் பாதிக்கப்படப்போவது யார்? ஏதோ தமிழீழமும் தமிழ்த் தேசியமும் அவர்களின் அப்பன் வீட்டு முதுசம். மற்றவர்கள் அவர்களின்; நாட்டாண்மைத்தனமான கருத்துக்களுக் கெதிராக எதுவும் எழுதக் கூடாதென்றல்லவோ நினைக்கிறார்கள். எனது சொந்தம் ஊரில் வாழ்கிறதே. இந்த முட்டாள்க் கருத்துக்களை நான் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தங்கள் அடாவடித்தனங்களால் அவர்களின் கோத்தை கொக்கைமாரைப் பலிகொடுக்கத் தயாராயிருக்கிறார்களா. எங்களுக்கும் தமிழீழவிடுதலையிலும் தேசியத்திலும் அக்கறையுண்டு நாங்களும் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களே. ஏதோ பெரிய தேசியமுனைப்புக் கொண்டு களத்தில் நின்று போராடும் போராளிகள் அல்லது அவர்களின் வால்கள் என்ற எண்ணத்தில் மற்றவர்களைப் புறந்தள்ளி நச்சுத்தனமான கருத்துக்களைத் தமிழ்மக்கள்மீது திணிப்பவர்களை ஆமாஞ்சாமி போட்டு அங்கீகரிப்பதற்கு இஙகுள்ளவர்களெல்லாம் முட்டாள்களல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன். அவாகளின் ஊரில்காட்டிய நாட்டாமைத்தனத்தை அவர்களது ஊரோடு வைத்துக்கொள்ள வேண்டும். தமிழீழம் பரந்துபடட்து. நாங்கள் அவர்களின் கருத்துக்களுக்குத் தலையாட்டுவதற்கு அவர்களின் குஞசப்பு மார்களும் அல்ல. எங்களுக்கென்று வேறுபட்ட பண்பாட்டு விழுமியங்களுள்ளன. பேனாக்களால் நச்சை உமிழந்துவிட்டு ஏதோ பெரிய போர்முனைப்புக்கொண்ட விடுதலை வேங்கைகள்போல மற்றவர்களை முட்டாளாக்க முயலவேண்டாம். நல்லதைச் சொன்னால் அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். அதைவிடுத்து மற்றவர்களை நக்கலடிக்க வெளிக்கிடுவதைப் பொறுத்துக்கொண்டு எப்படியிருக்கமுடியும். எங்களிடமும் பேனாமுனையிருக்கிறது. அதிலிருந்தும் நெருப்புப் பொறிகள் பறக்கும். தேவைப்பட்டால்.

அன்பின் கரு அண்ணா நீங்கள் சொல்வதும் எழுதுவதும் ஒரு வரலாற்றுக்கட்டுரை அல்லது ஒரு சிறுகதை எழுதுவதற்கு பொருத்தமாகும் என்று நினைக்கிறேன், ஏன் என்றால் உதாரணத்திற்கு உங்கள் தங்கைக்கு ஒன்று இப்படி நடந்தால் இப்படி கவிதை வரந்து கண்டிப்பியளோ, அல்லது பொறுத்து போவியளோ ?

எதிரியானவன் எப்படிப்பட்டவன் , எப்படிப்பட்ட தன்மைகொண்ட அரசின் கீழ் இருக்கிறான் என்பதை வைத்துத்தான் அவன் மீது எப்படி பதில் தாக்குதல்களை நடத்துவது முடிவெடுப்பார்கள்...

உதாரணத்திற்கு. இந்திய ஆமிக்காலத்தில் இந்தியன் அகிம்சை உணர்ந்தவன் என்று அகிம்சையில் போராடினார்கள். அனால் வந்தவன் உங்கள் , எங்கள் சகோதரிகளை கூட்டம் கூட்டமாக கற்பழித்து கொலை செய்தான் அதனால் தமிழ்த்தலமையும் வன்முறையை கையாண்டது,

இது போலவே இலங்கையில் ஏற்றகாலத்தில் தேவைக்கேற்ப நடந்துள்ளது ... ******** ,,,,

பலம் இல்லாது அறிக்கை விட்டால் அது பேனா முனையில் இருந்து வரும் பொறியாகட்டும் எதுவகட்டும் எல்லாம் குப்பைக்கு போகும் குப்பை பேப்பர்களாக இருக்கும்,, அதுவே பலத்துடன் விட்டால் ,,,,,,,

ஆகவே அடிக்க அடிக்க கொம்பு மறந்த மாடுகள் போல் இருத்தலாகாது.....

தயவு செய்து இனி நியாயம் நல்லெண்ணம் தர்மம் பாவம் என்றெல்லாம் சிறங்களவனைப் பாக்கிறவனை கேவலமாக மதிக்க வேண்டும் அப்ப தான் கொஞ்சமாவது புரியும் ஏன் கொஞ்ச நாளைக்கு யாழ்பாணத்தில போய் இருந்து பாருங்கோ தெரியும் நல்லெண்ணம் தர்மம் நியாயம் எல்லாம் வந்திட்hனுகள் புலம்புறதுக்கு ,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிமார் கொஞ்சம் பொறுங்கோ என்ன இது திடீரென்று. நானும் தமிழனெல்லே. எனக்கும் பயமா இருக்குது. உங்களோடை உங்கட தேசிய விடுதலைப் போராட்டத்தில உடனடியாச் சேருறன். சிங்களவரை ஒழிச்சுக்கட்டுவம்.

முதலிலல என்னுடைய மாமனாரும் மாமியாரும். மாமி சிங்களத்தி. ரெண்டுபேரும் செத்துப் போச்சினம் ஆனால் மச்சான் மச்சாள்மாரெல்லாம் ஊரில இருக்கினம். அவையளப் போய் வெட்டுவம். அடுத்தது நம்மட அண்ணன். அண்ணி சிங்களத்தி அவவையும் பிள்ளையளையும் காட்டித்தாறன் போய் வெட்டுங்கோ. என்னோட ஒரே சோத்துப்பாசலில சோறுதிண்ட சிங்களவனெல்லாம் இருக்கிறான் அவங்களையும் கூப்பிட்டால் நாய்க்குட்டிமாதிரி வருவாங்கள். மண்டையில போடலாம். அடுத்ததா யாரு?

****

தயவு செய்து என்னைக் கேவலமா முறுகி மதியாதீங்கோ. ****

தயவு செய்து என்னைக் கேவலமா முறுகி மதியாதீங்கோ. ***

வடிவேலின்ர கிரி பட பகிடிதான் நினைவுக்கு வருகிறது அடிவேண்டிய வடிவேலிட்ட ஏன் திருப்பியடிக்கேல என்றதற்கு வடிவேல் சொன்னது அடிச்சவனில ஒருவன் சொன்னானாம் இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறாண்டா இவன் ரொம்ப நல்லவன் என்று சொன்னானாம் அதுதான் திருப்பியடிக்கேல என்றான் வடிவேல் அதுபோல்

தமிழனை எப்படி அடித்தாலும் ஏன் எல்லா தமிழ் பெண்களையும் கற்பழித்தாலும் தமிழன் தாங்குவான் ஏன் என்றால் தமிழன் ரொம்ப நல்லவன். அப்படித்தானே ,,,,, திருப்பி சிங்களவனுக்கு ஏதும் செய்ய மாட்டாங்கள் என்று சிங்கள மக்களுக்கு தமிழன் மேல் இருக்கிற நல்ல மதிப்பால்தான் ஒருசிங்களத்தாய் தன் மகன் ஒருவன் காவல் துறையில் அல்லது இராணுவத்தில் இருந்து ஒரு தமிழ் பெண்ணை கற்பழித்து விட்டு வந்தால் , அல்லது கொலைசெய்துவிட்டு வந்தால் ஏதோ சாதித்துவிட்டு வந்தது போல் இருக்கிறார்கள் .....

இந் நிலை மாறி ஒரு தமிழ் பெண்ணை கற்பழித்து விட்டு வந்தால் பயத்தில் நாட்டை விட்டு ஓடுற நிலைவரவேண்டும்....

Edited by மோகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாசிக்கும் போதே வலிக்கிறது இரண்டுமடங்காய் துடிக்கிறது மனசு.. இந்தக் கொடுமைகள் கண்டுதானே நம்மை நாம் காத்துக்கொள்ள ஆயுதம் தூக்கினோம்? அதை ஏன் யாரும் புரிந்துகொள்ளவில்லை இல்லைப் புரிந்தும் மறுக்கின்றார்களா?!!!

  • கருத்துக்கள உறவுகள்

திரு மோகன் அவர்கள் ஏன் நான் தடித்த எழுத்தில் எழுதிய முக்கியமான பகுதியை ஏன் வெட்டினார்; பத்திரிகாதர்மம் (மன்னிக்கவும் தர்மமமென்றால் சிலருக்குக் கசக்கும். ஆனால் எனக்கு வேறு சொல் வருகுதில்லை) வழுவுகிறதே.

என் சொந்தங்கள்தான் அவர்கள் சிங்களவர்கள் என்பதால் சாகவேண்டுமா? மற்றவர்கள் சாகக்கூடாதா! சரி அது போகட்டும்.

தம்பி கிருபா! உங்கள் பதிலில்:

*****

இப்படி எழுதியிருக்கிறீர்களே! எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கிறீர்கள். ஒரு பொய்யைப் பலதடவைகள் சொல்லி அதை உண்மையாக்க முயலும் கோயபல்ஸின் தந்திரமா அல்லது உங்கள் நிலைப்பாட்டைச் சரியெனக் காட்டுவதற்காகத் தடுமாறிப் போனீர்களா!

அங்கே களத்தில் நின்று போராடும் போராளிகள் அதைச் செய்யவேயில்லையே! பிறகு நீங்கள் ஏன் தேவையற்ற விதத்தில் இப்படி எழுதுகிறீர்கள். விட்டால் ராஜீவ் காந்திவிடயத்தையும் நமது போராளிகள்தான் செய்தார்கள் என்று இந்தியா கூறுவதையும் சரியென்று ஏற்று விடுவீர்கள் போல இருக்கிறதே. வேண்டாம.; இது விசப்பரீட்சை.

நமக்குள் நாம் மோதிக்கொள்வோம். கருத்துக்களைப் பரிமாறுவோம். ஆனால் தேசியத் தலைமையையும் போராளிகளையம் சந்திக்கு இழுத்து நமது கருத்தைச் சரியென்று நிரூபிக்க முயல்வதை விட்டுவிடுவோம். மோகன் ஏன் அந்த வரிகளை வெட்டாமல் விட்டுவிட்டார் என்று புரியவில்லை. தேசியத்தலைமையைக் களங்கப்படுத்தும் அந்த வரிகளையல்லவோ வெட்டியிருக்கவேண்டும். களநிர்வாகத்துக்கு என்ன நடந்தது. எல்லாரும் குழம்பிப் போனார்களா?

நல்லது புரிந்துகொண்டால் சரி. எப்போது இவர்கள் (சிங்களவர்கள்) சகோதரர்கள் ஆனார்கள்..........ஏன் சிங்களவர்களுக்கு மட்டும் நம்மை சகோதரர்களாக தெரியவில்லை, யாழ்ப்பாணத்தில் தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கப்படும் போதும், மட்டக்களப்பில் தமிழ்ப்பெண்கள் கற்பழிக்கும் போதும் ஏன் நீங்கள் சகோதரர்கள் என்று சொல்லுபவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெளவில்லை.......

100000 க்கு 1 சிங்களவன் சிங்களவன் யோசிப்பான் பாவம் தமிழன் என்று .......

ஈழத்தில் சிறுபிள்ளைக்குக்கூட தெரியும் ராஜீவ் காந்தியை யார் கொலை செய்தது என்று

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி கிருபா!

இலங்கையின் இனப்பிரச்சனை இலங்கை சுதந்திரமடைந்த ஆரம்பகாலத்தில் ஒரு அரசியற் பிரச்சனையாகவே இருந்தது. அதனை இனப்பிரச்சனையாக மாற்றி இரு இனங்களுக்கிடையே மோதலை உருவாக்கிய பெருமை பண்டாரநாயக்கா, ஜே ஆர் ஜெயவர்த்தனா போன்றவர்களையே சாரும். நாம் கேட்ட அரசியல் உரிமைகளை சிங்கள மக்களிடத்தில் எடுத்துச்சென்று அதனைத் தவறாக அவர்கள் மொழிபெயர்த்தது மட்டுமன்றிச் சிங்களவர்களை இனவெறியோடு சிந்திக்கத்தூண்டினார்கள். அதன் விளைவாக ஐம்பத்தெட்டிலும் எழுபத்தேழிலும்; சிங்களவர்கள் எம்மீது பாயந்தார்கள். பின்னர் நிலைமைகள் மோசமாகி தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கியபோது எண்பத்தி மூன்றில் இனப்பிரச்சனை உச்சம் பெற்று இன்றுவரை தொடர்கின்றது.

நான் வரலாறு எழுதுவதாக தயவு செய்து எண்ணவேண்டாம். சிங்களவரின் அனுதாபக் குரல் எமக்காக ஒலிக்கவில்லையென்ற உங்கள் குற்றச்சாட்டுக்கே பதிலெழுதுகிறேன்.

ஆனால் இடது சாரிச் சிங்களவர்கள் எமக்காகக் குரல் கொடுத்துக்கொண்டேயிருந்தார்

தங்களின் கருத்து ஒரு நீதியான அரசுடன் போராடும் போது அல்லது ஒரு யுத்ததர்மத்தை கடைப்பிடிக்கும் அரசுடன் போராடும் போது மட்டுமே சரிவரும் , எனவேதான் பலம் இல்லாதபோது யாரும் வந்து தமிழர்களுடன் பேசப்போவதில்லை,

வரலாறுகளை அந்த அந்த காலகட்டங்களை ஏற்பதான் கண்ணோக்கவேண்டும், தற்போது அப்படியல்ல தமிழினம் அழித்து துடைக்கப்பட வேண்டும் என்று எண்ணம் கொண்ட அரசுடன் எப்படி நீங்கள் சொல்லவது போல் செயற்படுவது,,

மக்கள் மயப்படுத்தப்பட்டது இப்பவல்ல லெப்.கேணல் தீலிபனின் காலத்திலே ஆரம்பிக்கப்பட்டது , தற்போது போராட்டம் விடுதலைபெறவேண்டிய இறுதிக்காலத்தில் நிற்கிறோம்,,,,,

எனவே நாம் கருத்துக்களால் அடிபடுவது தேவையற்றது,,,,ஆனாலும் எதனால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், எதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் மறந்து போகக்கூடாது,

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையாக அடையாளங் காணப்படவேண்டிய எமது போராட்டம் வெறும் பெரும்பான்மை சிறுபான்மையினருக்கு இடையிலான மோதலாகவே இதுவரை சர்வதேசத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியா கூட எமது தாயகக் கோட்பாட்டைக் கொள்கையளவில் கூட இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. வடக்குக் கிழக்கு தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் என்ற அளவிலேயே இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த இனமோதலைக் கூர்மைப்படுத்தி சர்வதேசத்தில் எமது போராட்டத்தின் நியாயத்தைப் பலமிழக்கச் செய்வதா? அல்லது எமது தேசிய விடுதலையைச் சர்வதேசம் அங்ககரிக்ககூடிய வகையில்;, கௌரவமிக்க போராட்டமொன்றை நடத்தி வென்றெடுப்பதா? எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நமது பொறுப்பிலேயே தங்கியுள்ளது நண்பரே.

புகுந்து வெட்டுவதும் ஆட்டிலறி அடிப்பதும் பெரிய வேலையில்லை. அதைச் சிங்களவன் செய்கிறானென்பதற்காக நாமும் தொடர்வோமானால் எமது போராட்டத்தின் சர்வதேசப் பெறுமதி வெறும் இனமோதலென்னும் அளவீடுகளுக்குள்ளேயே நின்றுவிடும்.

ஆத்திரத்தில் எதையும் செய்யலாம். ஆனால் பின் விளைவுகள் பாரதூரமானதாகவே இருக்கும்.

அங்கீகரிக்கப்படாத இனமொன்றின் கையில் ஆயுதமிருப்பது ஆபத்தானது என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே நாம் இன்றுவரை பறந்தள்ளப்பட்டு வருகிறோம். ஏமக்கு அந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு எவ்வளவு காலமாகுமோ தெரியாது. ஆனால் கட்டுப்பாடுள்ள சமுதாயமென்னும் சர்வதேசப் பெறுமதியை நாம் பெறவேண்டுமானால் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடிப்பதைத் தவிர வேறுவழியில்லை.

நமக்குத் தமிழீழம் வேண்டுமா அல்லது நாம் பழிதீர்த்துக் கொள்ளவேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

தமிழீழம் வேண்டுமென்றால் நிதானம் தேவை. பழிதீர்க்கவும் அழிந்து போகவும் அது தேவையில்லை. வெறும் காட்டுமிராண்டிகளாய் இருந்தாற்போதும். காட்டுமிராண்டிகள் ஆட்சியமைத்ததாக வரலாறில்லை.

கரு, உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.