Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் கடும் இழப்பு - 25 போராளிகள் வீரச்சாவு

Featured Replies

  • தொடங்கியவர்

யாரை சொல்கிறீர்கள்.?

வவுனியாவில் கடும் இழப்பு - 25 போராளிகள் வீரச்சாவு

இப்படி தலைப்பு போட்ட மின்னலையா.?

மின்னலை அப்படிச் சொல்ல வேணுமெண்டு ஆசைப்படுறியள் போல.

25 போராளிகளின் இழப்பு மின்னலுக்கு கடும் இழப்பாகத் தெரிந்தது அதுதான் அப்படிப் போட்டுட்டன். நான் போடவில்லை எண்டா வேறு ஒருவர் போட்டிருப்பார்.

ஆனா அண்ணை இந்த செய்தியை தமிழ்நெட் படத்தோடை போட்டிருக்கே அவையையும் இரண்கர்கள் எண்டு சொல்லாம்தானே?

  • Replies 63
  • Views 10.2k
  • Created
  • Last Reply

பிறக்கும் போதும் புலியடா - நாம்

இறக்கும் போதும் புலியடா

பின்சென்று முன்பாயும் புலியடா - இது

பிறப்போடு வந்த குணமடா

அது பாயும் புலிகள் படையடா

அவதூறுகள் சொல்வோன் கடைப்புளியடா

இப்படி நாம் ஒவ்வொருவரும் நினைத்து ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரம் இது.

நாம் மனோவலிமை இழந்து, நமக்குள் கருத்து வேறுபாடுகள் மிகுந்து, பல நூறு குழுக்களாக ஒற்றுமையிழந்து சிதைந்து போக வேண்டும் என்பது தான் எதிரியின் பிரச்சார நோக்கமே. இதை உணராது வீண்விவாதங்களில் நாம் ஈடுபடுவது நம்மை பலவீனப்படுத்த உதவுமே ஒழிய வேறு எதற்கும் உதவப்போவதில்லை.

அங்கே களத்தில் நிற்பவர்கள் உயிர் இழப்புகளையும், மண் இழப்புகளையும் விரும்பியே செய்வதில்லை. சில இழப்புகள் தந்திரத்தின் அடிப்படையில் செய்யப்படலாம். வேறு சில இழப்புகள் தவிர்க்கப்பட முடியாத சூழலில் நடந்து விடலாம்.

யுத்தத்தின் போக்கு பற்றி மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கடப்பாடு தலைமைக்கு இருந்தாலும், தக்க தருணத்தில், தக்க விதமாக அதை தமிழர் தலைமை செய்தே வந்திருக்கிறது.

ஆனால் இராணுவ தந்திரங்களை முன்கூட்டியே விலாவரியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமும் தற்கொலைக்கு ஒப்பானதும் ஆகும். இதை உலகில் எந்த இராணுவமும் செய்வதில்லை.

தலைமையில் நம்பிக்கை வைப்போம்! தோள் கொடுப்போம்!! தொழிற்படுவோம்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளுக்கு வீரவணக்கம். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். தற்பொழுது வரும் ஒரிரு செய்திகளைக் கண்டு மனம் சோராதீர்கள். தலைவருக்கு தெரியும். என்ன செய்யவேணும் என்று. நீங்கள் தொடர்ந்து தாயகத்துக்கான உங்களின் கடமைகளைச் செய்யுங்கள். விரைவில் சில அதிசயங்களைப் பாருங்கள்.

  • தொடங்கியவர்

சில இழப்புகள் தந்திரத்தின் அடிப்படையில் செய்யப்படலாம்.

அண்ணாத்தை நில இழப்பு என்பது தந்திரோபாயம் என்று சொல்லாம். தயவு செய்து உயிரிழப்புக்களை அப்படிச் சொல்லாதீர்கள். தமது தரப்பினரைக் கொன்று(விட அனுமதித்து) எவருமே தந்திரோயம் கடைப்பிடிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வாரத்தில் 7 + 5 + 1+ 25 என்று விடுதலைப்புலிகளின் உடலங்கள் கையளிப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் எமது ஊடகங்களிலோ முறியடிப்பு முறியடிப்பு என்று தான் செய்தி வருகிறது. இந்தப் போராளிகளின் தியாகங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

சர்வதேசம் அங்கீகரிக்கும் வரை இராணுவம் நிலங்களைப் பிடிக்க அனுமதிக்கலாம் என்றீங்களா நுணாவிலான்.

அப்படி அனுமதித்துவிட்டால் சர்வதேசம் எம்மை அங்கீகரிக்கும் என்றா நினைக்கிறீர்கள்.. எமது போராளிகள் களத்தில் வீழ்வதை சர்வதேசம் கருசணையோடு பார்க்கிறது என்றா நினைக்கிறீர்கள். இல்லவே இல்லை. எமது போராளிகளின் ஒவ்வொரு அடியும் வெற்றி அடியாக என்று மாறுகிறதோ அப்போதுதான் எம்மை சர்வதேசம் அங்கீகரிப்பது பற்றி சிந்திக்கும். இப்படி அடிவாங்கிக் கொண்டிருந்தம்.. ஏறி மிதிப்பார்கள் எல்லோரும். றோட்டில போற சிங்களவன் கூட மிதிப்பான்.

என்ன நெடுக்ஸ் பால் கணக்கா காட்டுகிறீர்கள். :wub: பல இராணுவங்கள் கள முனையில் பலியானதை ஏனோ மறைக்க நீங்கள் படாத பாடு படுகிறீர்கள்.

சர்வதேசம் இன்றல்ல என்றோ அங்கீகரிக்கும் என்பது தான் வி.புலிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.வரலாறும் அது தான். ஏற்கனவே பால குமார் அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது எமக்கௌ அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைக்குமிடத்து அல்லது கிட்டத்தட்டவான முடிவுகள்(சாதகமான)வரும் போது அரசுக்கு எதிரான அதிரடியாகலாம். அதுவரை எமது தமிழ் படை தங்கள் பலத்தை தகுந்த தருணத்தில் பாவிப்பது தான் சாதுரியமானது.

ம், ரோட்டாலே போல சிக்களவர் பஸ்சிலே கூட ஏற பயப்படுவது தான் சிங்கள மக்களின் இன்றைய அவல நிலை.

அண்ணாத்தை நில இழப்பு என்பது தந்திரோபாயம் என்று சொல்லாம். தயவு செய்து உயிரிழப்புக்களை அப்படிச் சொல்லாதீர்கள். தமது தரப்பினரைக் கொன்று(விட அனுமதித்து) எவருமே தந்திரோயம் கடைப்பிடிப்பதில்லை.

சில இழப்புகள் தந்திரத்தின் அடிப்படையில் செய்யப்படலாம்! வேறு சில இழப்புகள் தவிர்க்கப்பட முடியாத சூழலில் நடந்து விடலாம்

என்று தானே எழுதி இருக்கிறேன். புரியவில்லையா உங்களுக்கு இந்த வரியின் அர்த்தம்???!!!

Edited by vettri-vel

அண்ணைமார், சொல்லவேண்டிய விசயங்கள சொல்லவேண்டிய ஆக்கள் சொல்லவேண்டிய நேரத்தில சொல்லுவீனம்தானே? நீங்கள் ஏன் உதுக்குள்ள இருந்து குத்துக்கரணம் அடிச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்? ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக ஏதாவது விசயங்கள் அறிவிக்கப்பட்டா அதன்பின்னர் இழுபறிப்பட்டாலும் பரவாயில்ல. நீங்களே அப்பிடியாம் இப்பிடியாம் எண்டு எங்கையோ வாசிச்சுப்போட்டு பிறகு உங்களுக்க குழம்பி என்னத்த காணப்போறீங்கள்? அதில கொஞ்சப்பேர் மாவீரருக்கு வீரவணக்கங்கள் எண்டு வேற எழுதுறீங்கள். என்ன இஞ்ச நடக்கிது எண்டு புரிய இல்லையுங்க. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க புலிகள். உங்களின் உயிர் அர்ப்பணிப்புக்கு நிகர் எதுவுமில்லை. துரோகிகளை மக்களே இனம் காணுங்கள்.

  • தொடங்கியவர்

நுணாவிலான் நீங்கள் பாலகுமாரன் அண்ணையின் கருத்தினை தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள் எண்டு நினைக்கிறன். அனைத்துலகத்தின் அங்கிகாரத்திற்காக நாம் காத்திருந்து எமது பலத்தை காட்டாமல் இருந்தால் தொடர்ந்து பின்னகர்ந்து கொண்டிருந்தால் அவர்கள் எம்மைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏன் எதிரியின் கை ஓங்கினால் எதிரிக்கு முண்டு கொடுக்கவே அவர்கள் விரும்புவார்கள். தமிழர்களிற்கு தன்னாட்சி கிடைக்க வேண்டுமோ அல்லது குறைந்த பட்ட அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமோ என்பது பற்றியெல்லாம் அனைத்துலக சமூகம் சிந்திக்காது. அவர்களிற்கு ஆயுத வன்முறை முடிவுற்றால் போதும். நெடுக்காலை போவான் குறிப்பிட்ட கீழ்க்காணும் கருத்து 100 வீதம் யதார்த்தமானது.

எமது போராளிகளின் ஒவ்வொரு அடியும் வெற்றி அடியாக என்று மாறுகிறதோ அப்போதுதான் எம்மை சர்வதேசம் அங்கீகரிப்பது பற்றி சிந்திக்கும்.

நீங்கள் கடைசியாகக் குறிப்பிட்ட தென்பகுதிச் சிங்கள மக்கள் பேரூந்தில் ஏற பயப்படுவது போன்றுதான் வான் குண்டுத் தாக்குதல்களிற்கும் கிளைமோர் தாக்குதல்களிற்கும் எமது மக்களும் பயப்படுவார்கள் என்பதும் உண்மை.

Edited by மின்னல்

ஆனா அண்ணை இந்த செய்தியை தமிழ்நெட் படத்தோடை போட்டிருக்கே அவையையும் இரண்கர்கள் எண்டு சொல்லாம்தானே?

அடக் கடவுளே!!! :wub::wub::lol:

மறைந்த மாவீரர்களுக்கு என் அஞ்சலிகள்.

மின்னலை அப்படிச் சொல்ல வேணுமெண்டு ஆசைப்படுறியள் போல.

25 போராளிகளின் இழப்பு மின்னலுக்கு கடும் இழப்பாகத் தெரிந்தது அதுதான் அப்படிப் போட்டுட்டன். நான் போடவில்லை எண்டா வேறு ஒருவர் போட்டிருப்பார்.

ஆனா அண்ணை இந்த செய்தியை தமிழ்நெட் படத்தோடை போட்டிருக்கே அவையையும் இரண்கர்கள் எண்டு சொல்லாம்தானே?

அவ்வளவு கொலை வெறி எல்லாம் எனக்கு கிடையாது.

நாரதரில் ஆரம்பித்து குகதாசன், பரணி வரை எல்லோரும் யாரையோ தீவிரமாக வரிசை கட்டி திட்டுகிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் யார் என்பதுதான் எனது சிறுமூளைக்கு புரியவில்லை.

அனேகமாக தலை்ப்பை ஆரம்பித்த தாங்களாக இருக்குமோ எண்ட ஐயம்.

Edited by அகிலன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்புக்கள் எமக்கு ஒன்றும் புதுசில்லையே! இழப்புக்களை கண்டு இப்படி அழுதுபுலம்பி அஞ்சினால், அப்புறம் எமது விடுதலைப்போராட்டம் எதற்கு? இந்த மூன்று தசாப்தகால ஆயுதவிடுதலைப்போராட்டத்தில் நாம் எத்தினை தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை எமது தாய்நாட்டிற்காக செய்திருப்போம்? இழப்புக்கள் இல்லாமல் விடுதலை பெறுவது/சுதந்திரம் அடைய நினைப்பது அவரவரின் அறியாமையைத் தான் காட்டி நிற்கிறது. எத்தனை இழப்புக்கள் வந்தாலும், நாம் எமது இலட்சியப்பாதையில் இருந்து விலகாமல் ஒன்றுசேர்ந்து போராடுவோமாக.

தாய்நாட்டிற்காக வீரமரணமடைந்த மாவீர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.

முதலில் களமாடி விழுந்துவிட்ட எமதருமை சகோதரங்களின் பாதங்களிற்கு கண்களில் நீர் வழிய வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்.

;

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.