Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சினிமாப் படங்கள் எங்கட சுயவாழ்வில ஏற்படுத்துகின்ற பாதிப்புக்கள்..??

உங்களால சொல்ல முடியுமா? 15 members have voted

  1. 1. நீங்கள் உங்கட சொந்த வாழ்க்கையில எடுக்கிற முடிவுகளில (Decision Making Process) தமிழ் சினிமா எப்பிடியான செல்வாக்கு செலுத்திது?

    • 10 - 20% செல்வாக்கு
      3
    • 20 - 40% செல்வாக்கு
      2
    • 40 - 60% செல்வாக்கு
      0
    • 60% க்கு மேற்பட்ட செல்வாக்கு
      0
    • செல்வாக்கு ஏற்படுத்துவது இல்லை..
      10
    • தெரியவில்லை..
      0
    • வேறு ஏதாவது பதில்..
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

எல்லாருக்கும் இனிய வணக்கங்கள்,

கனகாலம் ஆராய்ச்சி ஒண்டும் செய்ய இல்ல. அதான் யாழ் ஆய்வுகூடத்தில திரும்பவும் ஒண்டு துவங்கி இருக்கிறன். :D

நான் போன கிழமை கனடா தமிழ்விசன் தொலக்காட்சியில "பூவெல்லாம் உன் வாசம்" எண்டுற படம் பார்த்து இருந்தன்.

இதுபழைய படம்தான் 2001 ம் ஆண்டு வந்திச்சிது. எண்டாலும் நான் தமிழ்விசன் தொலைக்காட்சி ஊடாக இந்தப்படத்த ஆகக்குறைஞ்சது மூண்டுதரம் பார்த்து இருக்கிறன் எண்டு நினைக்கிறன். அண்டைக்கு கடைசியா பார்க்கேக்க பின்னேரம் பொழுதுபோகாமல் இருந்திச்சிது. பின்ன சாப்பிட்டுக்கொண்டு படத்த பார்த்தன்.

உளவியல் ரீதியாக எண்டு கூட சொல்லாம்.. என்னைப் பாதிச்ச தமிழ்ப்படங்களில பூவெல்லாம் உன் வாசம் எண்டுற இந்தப்படம் மிக முக்கியமான ஒண்டு. எனக்கு இந்தப்பெண்டுகள் மாதிரி படம் பார்கேக்க அழுவுற விளையாட்டுக்கள் எல்லாம் பிடிக்காது. என்னால அழவும் ஏலாது. ஆனால், இந்தப்படத்தில இறுதிக்கட்டத்தில உண்மையில எனக்கு எண்ட கண்கள் எல்லாம் சரியா கலங்கி அழுதுபோட்டன். :lol: (கடைசியா அஜித்திண்ட குடும்பம் பெட்டி படிக்கைய கட்டிக்கொண்டு வெளியேறேக்க... அவையள் போன காரை நாய் ஒண்டு ஓடிவந்து வழிமறிக்க.. ஜோதிகாவிண்ட குடும்பம் ஒருவர் பின் ஒருவராக கைகூப்பிக்கொண்டு காருக்கு முன்னால வாறகாட்சியில அழுகை வந்திச்சிது.. )அந்தளவுக்கு மிகவும் அருமையான ஒரு முறையில எடுக்கப்பட்ட சூப்பரான ஒரு படம்.

செயற்கைத்தனமாக இல்லாமல் ஓரளவுக்கு யாதார்த்தமா போகின்ற கதையும், யதார்த்தமான சூப்பரான நடிப்புமே இந்தப்படம் மிகவும் அழகாக வந்தமைக்கான காரணம் எண்டு நினைக்கிறன். குறிப்பாக இதில ஜோதிகாவிண்ட நடிப்புக்கு A+++ குடுக்கலாம். :D சரி..

இனி விசயத்துக்கு வருவம். இப்ப எண்ட கேள்வி என்ன எண்டால் நீங்கள் உங்கட சொந்த வாழ்க்கையில எடுக்கிற முடிவுகளில (Decision Making Process) தமிழ் சினிமா எப்பிடியான செல்வாக்கு செலுத்திது? :D

மற்ற ஆக்களுக்கு எப்பிடியோ தெரியாது... ஆனா எண்ட சுயவாழ்வு எண்டு சொல்லப்போனால் சுமார் 20 - 30 % பாதிப்பை ஏற்படுத்திது எண்டு சொல்லாம். நான் படங்கள் பார்த்தால் குழப்பங்கள் ஏற்படும் எண்டுறதுக்காக வழமையாக படங்கள் பார்க்கிறத தவிர்க்கிறது. எண்டாலும் நான் என்னை சுயமாக கட்டுப்படுத்த முடியாத நிலையில படம் பார்க்கேக்க வாற பாதிப்புக்களை என்னால முற்றிலுமாக தவிர்க்க முடிய இல்லை எண்டு இஞ்ச சொல்லவேணும். :D

படம் பார்க்கேக்க எனக்கு எப்பிடியான குழப்பங்கள் வரும் எண்டால்.. :D


  • படம்.. காட்சிகள்.. பாடல்கள் போகேக்க அதில போறத எனது வாழ்கையில நடைபெறுகின்ற அனுபவங்களோட ஒப்பிட்டுப் பார்க்கேக்க வயித்தில புளியக் கரைச்சு ஊத்திறமாதிரி இருக்கும்.
  • படத்தில வாற கூடாத ஆக்களிண்ட பாத்திரங்கள் செய்யுற ஊத்தை வேலைகளைப் பார்க்க எனக்கு எண்ட நிஜ வாழ்க்கையில வாற ஊத்தைவாளிகள் செய்யுற சேட்டைகள் மனதில படமா ஓட அதிகள நினைக்க சரியான கோவம் வரும்.
  • படத்தில சொல்லப்படுகிற அறிவுரைகள்.. மற்றது சில தத்துவங்கள கேட்கேக்க அதை நான் எண்ட வாழ்வில ஒப்பிட்டு அலசி ஆராயேக்க அனலைஸ் பண்ணேக்க ஆகவும் பெரிய குழப்பங்கள் வரும்...

உதாரணமாக..

இப்ப படங்களில சொல்லுவீனம்.. ஒரு உண்மையான காதலன்/காதலி எண்டால் அவனிண்ட/அவளிண்ட காதலி/காதலன் அவனுக்கு/அவளுக்கு கிடைக்காமல் கைநழுவி போகின்ற சந்தர்ப்பத்தில உண்மையில அவன்/அவள் கலங்கமாட்டானாம் /மாட்டாளாம். அவளை / அவனை வாழ்த்துவான்/ள் எண்டு ஏதோ எல்லாம் சொல்லி நல்லா மா அரைப்பீனம்.

எண்ட கேள்வி என்ன எண்டால்.. நாம சாதாரண - சாமானிய மனிதர்கள் நம்மால இப்பிடி எல்லாம் பெருந்தன்மையாக இருக்க ஏலுமா? சுவாமி விவேகானந்தர்.. இராம கிருஷ்ண பரகாம்சர்... ரமண மகரிஷி.. இப்பிடி யோகிகள், ஞானிகளிண்ட ரேஞ்சில (அளவு) சாமானிய மக்களுக்கு வாழ்க்கை முறை பற்றி சொல்லிக்குடுத்தால் அதுகள கேட்க BP (ரத்த அழுத்தம்) ஏறாமல் வேற என்ன செய்யும்?

மற்றது...

பூ வெல்லாம் உன் வாசம் படத்தில வந்த KEY POINT (முக்கியமான கரு) என்ன எண்டால் காதலனும் சரி... இல்லாட்டிக்கு காதலியும் சரி.. தனது காதலியை/காதலனை சந்தேகப்படக்கூடாது. எப்போது அவர்கள் மற்றவனை சந்தேகப்படுறீனமோ.. அந்தநிலையில - சந்தேகம் நுழையிற அந்தக்கட்டத்தில - அவர்களிண்ட காதல் கேள்விக்குறியாகிது. :D

ஆனா.. எண்ட கேள்வி என்ன எண்டால். நாம சாமானிய மனிதர்கள்.. ஞானிகளோ யோகிகளோ அல்ல.. இந்தநிலையில நம்மாள எப்பிடி இந்த சந்தேக உணர்வுகளை தவிர்த்து மரக்கட்டை மாதிரி இருக்கமுடியும்?

இப்பிடிப் பார்க்கேக்க...

நானும் எண்ட வாழ்க்கை அனுபவங்கள அலசி.. மீட்டுப் பார்க்கேக்க.. சினிமாவில சொல்லப்படுற விசயங்கள் பல தடவைகள் எனது சிந்தனைகளில மோதல்களை உருவாக்கி சில சமயங்களில எல்லாம் சூனியமா போறமாதிரி உணரக்கூடியதா இருக்கிது.

சில ஆக்கள் சொல்லுவீனம். படம் பார்த்தமா போனமா பாத்தமா வந்தமா.. எண்டு இருக்கவேணும். படத்தில வாறதுகள நிஜ வாழ்வில போட்டு அனலைஸ் பண்ணி குழம்பக்கூடாது எண்டு. ஆனால் நடைமுறையில இது எவ்வளவு தூரம் சாத்தியம்? எல்லாராலையும் இப்பிடி இருக்க ஏலுமா? அப்பிடி இருக்க ஏலாது எண்டால் நமக்குள்ள குழப்பங்கள் ஏற்படாமலிருக்க ஒரே ஒரு வழி தமிழ் சினிமா படங்கள பார்க்காமல் இருக்கிறதுதான் எண்டு நினைக்கிறன்.

ஏன் எண்டால்... தமிழ் சினிமாவில நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விசயங்களப்பத்தி... சாதாரண மனிதர்களால செய்யமுடியாத விசயங்களப்பத்தி.. கதைச்சு ஒரு கனவு உலகத்த... வாழ்க்கை எண்டால் இப்பிடித்தான் இருக்கவேணும் எண்டு ஒரு மாயையை உருவாக்கிக் காட்டுறாங்கள். அந்த மாயை வாழ்க்கையை நோக்கி நாம நமது வாழ்க்கையை மாற்றி அமைப்பது சாத்தியமானதா? அது புத்திசாலித்தனமானதா?

அப்படியான மாயைத் தோற்றம் எமது சுயவாழ்வில பாதிப்பை ஏற்படுத்துறத எம்மால தவிர்க்கமுடியுமா?

  • சினிமா கதை எழுதுறவன் கதைகள் எழுதுறதில ஒரு வல்லுனன் - நிபுணன்
  • சினிமா பாட்டு எழுதுறவன் பாட்டுக்கள் எழுதுறதில ஒரு வல்லுனன் - நிபுணன்
  • சினிமா படம் நடிக்கிறவன் நடிப்பில ஒரு வல்லுனன் - நிபுணன்
  • இப்பிடி சினிமாவில பங்குபற்றுகின்ற எல்லாருமே தொழில் ரீதியாக நிபுணர்கள்...

ஆனால்..

இவங்களிண்ட இழவுகளப் பார்க்கிற நாம வெறும் சாமானிய மனிதர்கள்.. பல்வேறு துறைகளில கைதேர்ந்த இந்த தொழில் நிபுணர்கள் சாதாரண மக்களிண்ட - நம்ம மனதை - வாழ்க்கையை - படம் பார்க்கேக்க சில மணித்தியாலங்களில குழப்பி அடிக்கிறாங்கள். நம்ம உள்ளங்களை சுக்கு நூறாக்கிறாங்கள். இப்பிடித்தான் சினிமாவப்பத்தி நான் நினைக்கிறன்.

நீங்கள் இதுகள் பற்றி எல்லாம் என்ன நினைக்கிறீங்கள்? உங்களால தமிழ் சினிமாவ வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் அணுகக்கூடியதாக இருக்கிதா? :D

பூவெல்லாம் உன் வாசம் படத்தில வந்த எல்லாப்பாடல்களுமே சூப்பர்... எல்லாத்துக்கும் ஐஞ்சு நட்சத்திரங்கள் (FIVE STARS) குடுக்கலாம். கீழ பாடல் காணொளிகள இணைச்சு இருக்கிறன். நீங்கள் இதுகள பார்த்து மகிழுறதோட, வாசிக்கிறதோட மட்டும் இல்லாமல் உங்கட பொன்னான கருத்துக்களையும், அறிவுரைகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ. :D

இதுகளப் பத்தி இன்னும் நிறைய உங்களோட கதைக்க இருக்கிது. மிச்சம் பிறகு சொல்லிறன். :D

நன்றி! வணக்கம்!

புதுமலர் தொட்டுச்செல்லும் காற்றை நிறுத்து..

தாளாட்டும் காற்றே வா..

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்..

திருமண மலர்கள் தருவாயா..

யுக்தா முகி யுக்தா முகி நீயா..

சின்னா நம்வீட்டுக்கு..

சுரிதார் அணிந்து வந்த சொர்க்கமே..

பி/கு: பூவெல்லாம் உன் வாசம் படத்திண்ட கருவாக இருந்தபடியால இப்போதைக்கு காதல் சம்மந்தமான கருபற்றியும் கொஞ்சம் கதைக்க முடிஞ்சிது. மிச்சம் மற்றைய படங்களில வந்த கருக்கள் பற்றி பிறகு கதைக்கிறன்.

Edited by முரளி

நான் தமிழ் சினிமாவை பொழுதுபோக்காகத்தான் பார்க்கிறது. அதனால என்னோட சொந்த வாழ்க்கையோட ஒப்பிட்டு குழம்புவது கிடையாது. என்னோட வாழ்க்கை என்கையில் மட்டும்தான்..

எனக்கு பெருசா ஜோதிகாவை பிடிப்பதில்லை, விளையாட்டுத்தனமான, துடுக்கான வேடங்களில் ஆரம்பத்தில நடிச்சாலும், மொழியில் அவரின் நடிப்பு நன்றாக முழுமையாக வெளிப்பட்டிருந்தது.

இந்தப்படத்தின் பாடல்கள் நல்லா இருந்தது. வித்தியாசாகர் தான் இசை என்று நினைக்கிறேன், நல்ல மெலடியான பாடல்களை தரக்கூடியவரை இன்று குத்துப்பாட்டுக்களுக்கு பயன்படுத்துவது கவலையான விசயம்.

என்னைப்பொறுத்தவரை இந்தப்படத்தை சும்மா பொழுது போக்குக்காக பார்க்கலாம், கடைசிக்காட்சியில் எல்லாரும் அழுது வழிஞ்சது எனக்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியது

இது விஜயின் லொள்ளுசபா பூரியெல்லாம் கிழங்குவாசம். பார்த்து ரசிங்கோ

http://www.techsatish.net/2008/05/24/poove...a-comedy-video/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளி,

அதீத கற்பனை உலகத்தில் உலவுவீங்கள் போல, எனக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தின படங்கள் என்றால் கெளரவம் 'குட்டி", அரங்கேற்றம்,பாசமலர் சிந்து பைரவி,போன்ற படங்கள் அநேகமாக இயக்குனர் பாலச்சந்தரின் படங்கள் தான்.

அதன் தாக்கம் ஒரு இரண்டு நாள் இருக்கும். ஏன் உலகம் இப்படி இருக்கு? ஏன் ஆம்பிளைகள் இப்படி இருக்கினம்?!! கட்டின பெண்ணுக்கு ஏன் துரோகம் பண்ணுகினம்?! ஒரு மனிசரை அதுவும் குறிப்பாக குட்டி படத்தில் எப்படி குழந்தைப் பிள்ளைகளிடம் இத்தனை வேலை வாங்க முடியுது எப்படி ஒரு சக மனிதரைப் போட்டு குத்திக் கிழிக்க முடியுது என்று தோன்றும்.

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" அதையும் விட நாங்கள் செய்யிற ஒவ்வொரு காரியத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். பிறகு ஏன் மனிதர் இப்படி நடக்கினம் என்று தோன்றும்.

ஆனால் திரையை விட நிஜத்தில் இதைவிட மிக மோசமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை :)

படங்களை வாழ்க்கையோடு சேர்த்துப் போட்டுக் குழப்பாதீங்கோ முரளி.

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்

நான் தமிழ் சினிமாவை பொழுதுபோக்காகத்தான் பார்க்கிறது. அதனால என்னோட சொந்த வாழ்க்கையோட ஒப்பிட்டு குழம்புவது கிடையாது. என்னோட வாழ்க்கை என்கையில் மட்டும்தான்..

எனக்கு பெருசா ஜோதிகாவை பிடிப்பதில்லை, விளையாட்டுத்தனமான, துடுக்கான வேடங்களில் ஆரம்பத்தில நடிச்சாலும், மொழியில் அவரின் நடிப்பு நன்றாக முழுமையாக வெளிப்பட்டிருந்தது.

இந்தப்படத்தின் பாடல்கள் நல்லா இருந்தது. வித்தியாசாகர் தான் இசை என்று நினைக்கிறேன், நல்ல மெலடியான பாடல்களை தரக்கூடியவரை இன்று குத்துப்பாட்டுக்களுக்கு பயன்படுத்துவது கவலையான விசயம்.

என்னைப்பொறுத்தவரை இந்தப்படத்தை சும்மா பொழுது போக்குக்காக பார்க்கலாம், கடைசிக்காட்சியில் எல்லாரும் அழுது வழிஞ்சது எனக்கு எரிச்சலைதான் ஏற்படுத்தியது

இது விஜயின் லொள்ளுசபா பூரியெல்லாம் கிழங்குவாசம். பார்த்து ரசிங்கோ

http://www.techsatish.net/2008/05/24/poove...a-comedy-video/

இல்லை லீ ஆக்களோட சேந்து படம் பார்கேக்க அழுகை வருவதற்கு சாத்தியம் குறைவா இருக்கலாம். ஆனால் வீட்டுக்க இருந்து தனியப்பாக்கேக்க அழுகைவர சந்தர்ப்பம் இருக்கிது தானே. மற்றது, வழமையா படம் பார்க்கிற ஆக்களுக்கு பொழுதுபோக்கா இருக்கும் எண்டு நினைக்கிறன். இருந்திட்டு ஒருக்கால் பார்க்கேக்க பாதிப்பு கொஞ்சம் அதிகமா வருமோ எண்டும் நினைக்கிறன்.

எண்ட கடைசி அக்கா நல்லா படம் பார்ப்பா. தமிழ் மாத்திரம் இல்ல, சிங்களம், ஹிந்தி, மலையாளம் எண்டு எல்லாம் பார்ப்பா. அதுவும் தனியா இரவு இரவா இருந்து பார்ப்பா. வீட்டில அவவுக்கு நல்ல பேச்சு விழும் ஒரே படம் பார்க்கிறது எண்டு. இப்ப கேட்டால் சொல்லுவா தனக்கு அளவுக்கு மிஞ்சி படம் பார்த்ததாலதான் வடிவா படிக்கவும் முடியாமல் போச்சிது எண்டு. படத்தில காட்டிறது எல்லாம் பொய்யும், புரட்டும்... இதுகள ரசிச்சு ரசிச்சு பாத்து தண்ட நேரம் எல்லாம் நாசமாப்போச்சிது எண்டு அடிக்கடி சொல்லி கவலைப்படுவா.

முரளி,

அதீத கற்பனை உலகத்தில் உலவுவீங்கள் போல, எனக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தின படங்கள் என்றால் கெளரவம் 'குட்டி", அரங்கேற்றம்,பாசமலர் சிந்து பைரவி,போன்ற படங்கள் அநேகமாக இயக்குனர் பாலச்சந்தரின் படங்கள் தான்.

அதன் தாக்கம் ஒரு இரண்டு நாள் இருக்கும். ஏன் உலகம் இப்படி இருக்கு? ஏன் ஆம்பிளைகள் இப்படி இருக்கினம்?!! கட்டின பெண்ணுக்கு ஏன் துரோகம் பண்ணுகினம்?! ஒரு மனிசரை அதுவும் குறிப்பாக குட்டி படத்தில் எப்படி குழந்தைப் பிள்ளைகளிடம் இத்தனை வேலை வாங்க முடியுது எப்படி ஒரு சக மனிதரைப் போட்டு குத்திக் கிழிக்க முடியுது என்று தோன்றும்.

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" அதையும் விட நாங்கள் செய்யிற ஒவ்வொரு காரியத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். பிறகு ஏன் மனிதர் இப்படி நடக்கினம் என்று தோன்றும்.

ஆனால் திரையை விட நிஜத்தில் இதைவிட மிக மோசமான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை :(

படங்களை வாழ்க்கையோடு சேர்த்துப் போட்டுக் குழப்பாதீங்கோ முரளி.

படங்களை வாழ்க்கையோட போட்டு குழப்புறது இல்ல. ஆனால்.. படம் பார்க்கேக்க உங்கட வாழ்க்கையில வாற விசயங்கள் மனதில இயல்பாக ஒப்பீடு செய்யப்படுறத உங்களால தவிர்க்கக்கூடியதாக இருக்கிதா? காதல் மட்டும் எண்டு இல்ல. இதர விசயங்களிலயும்... படங்களில சொல்லப்படுகிற சிந்தனைகளை வச்சு நாம நம்மோட வாழ்க்கை நிலமைகளை சீர்தூக்கி அலசி ஆராயுறத தவிர்க்கக்கூடியதாக இருக்கிதா உங்களுக்கு? முக்கியமா இந்த ஆராய்ச்சிகள் படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்கையே நம்மோட மனதுக்க நடக்கக்கூடும் இல்லையா? :)

படம் பார்த்து முடிஞ்ச கையோட.. உங்களுக்கு படம் பார்க்கத்தொடங்கின ஆரம்பத்தில இருந்த அதேமனநிலையில இருக்கக்கூடியதாக இருக்கிதா? படம் பார்த்து முடிஞ்சாப்பிறகு உங்கட மனநிலையில ஓர் தற்காலிக மாற்றம் கூட வருவது இல்லையா? :(

சினிமா படங்கள் என் வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்திறதில்லை. அதை ஒரு பொழுதுபோக்காகத்தான் எடுத்துகிறனான்.காதல் திரைப்படம் தான் கொஞ்சம் மனதை பாதிச்ச படம் , அது உண்மை சம்பவம் என்பதால். மற்றப்படி சினிமாவையும் வாழ்க்கையும் குழப்பிக்கிறதில்ல எதிலும் சுயமாத்தான் முடிவெடுப்பேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை வாழ்க்கையோட போட்டு குழப்புறது இல்ல. ஆனால்.. படம் பார்க்கேக்க உங்கட வாழ்க்கையில வாற விசயங்கள் மனதில இயல்பாக ஒப்பீடு செய்யப்படுறத உங்களால தவிர்க்கக்கூடியதாக இருக்கிதா?

****அந்தக் கணத்தில் தோன்றுவது உண்மைதான்/ ஏமாற்றப்பட்ட வலிகள் படத்திலும் அப்படி வரும் போது ...

காதல் மட்டும் எண்டு இல்ல. இதர விசயங்களிலயும்... படங்களில சொல்லப்படுகிற சிந்தனைகளை வச்சு நாம நம்மோட வாழ்க்கை நிலமைகளை சீர்தூக்கி அலசி ஆராயுறத தவிர்க்கக்கூடியதாக இருக்கிதா உங்களுக்கு? முக்கியமா இந்த ஆராய்ச்சிகள் படம் பார்த்துக்கொண்டு இருக்கேக்கையே நம்மோட மனதுக்க நடக்கக்கூடும் இல்லையா? :)

***

அவ்வளவுதூரம் ஆழமாகப் போறதில்லை முரளி, நிஜமாகவே எங்கள் ஊரில் நடக்கும் நிகழ்வுகள்/ தாயகவலத்தில் வரும் குறும்படங்கள் ஏற்படுத்துகின்ற தாக்கத்தில் ஒரு வீதமேனும் திரைப் படங்கள் என்னைப் பாதிப்பதில்லை என்பது உண்மை.1996ம் ஆண்டு என்று நினைக்கின்றேன் ஒளிவீச்சில் 'தலைப்பு மறந்துட்டேன் " டேய் என்னைச் சுட்டுப்போட்டு துவக்கை எடுத்துக்கொண்டு போடா" அந்த வரிகள் எனக்கு எப்பவும் மனசுக்குள்ள ஒலிச்சுக்கொண்டே இருக்கும் நிஜங்கள் நிறையக் கண்டதால் நிழல்களின் தாக்கம் குறைவுதான் முரளி

படம் பார்த்து முடிஞ்ச கையோட.. உங்களுக்கு படம் பார்க்கத்தொடங்கின ஆரம்பத்தில இருந்த அதேமனநிலையில இருக்கக்கூடியதாக இருக்கிதா? படம் பார்த்து முடிஞ்சாப்பிறகு உங்கட மனநிலையில ஓர் தற்காலிக மாற்றம் கூட வருவது இல்லையா? :(

** சில படங்கள் பார்த்து அழுவதுண்டு நேற்றுப் பார்த்த 'பாண்டி" படத்தில் கூட அழுகை வந்தது என்னவோ உண்மைதான் வெயில் /காதல் இப்படி சில உண்டு. ஆனால் படம் முடிஞ்ச கையோடு அதுவும் போயிடும். ஆனால் திரையரங்கில் பார்த்தால் அந்தத்தாக்கம் அந்த நாள் பூராவும் இருக்கும் 'சூரிய வம்சம், லவ் டுடே, மீண்டும் சாவித்திரி, இவையெல்லாம் அவற்றுள் சில; ஆனாலும் நீங்கள்சொல்லுற அளவுக்கு என் மனசை அவை பாதிச்சதே இல்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா என்னில் ஆதிக்கம் செய்யக் கூடாது என்று விரும்புறவன் நான். அதால உதுகள எப்பவும் இருந்திட்டு "ரைம் பாசிங் மச்சி" என்று பாக்கிறதே தவிர அதில எல்லாம் ஈடுபாடு கிடையாது.

சில படங்களைப் பார்த்து என்னையறிமால அழுதிருக்கிறன். ஆனால்.. அவை என்னில் பாதிப்புத் தந்தன என்று சொல்ல முடியாது. :)

ஏன் எண்டால்... தமிழ் சினிமாவில நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விசயங்களப்பத்தி... சாதாரண மனிதர்களால செய்யமுடியாத விசயங்களப்பத்தி.. கதைச்சு ஒரு கனவு உலகத்த... வாழ்க்கை எண்டால் இப்பிடித்தான் இருக்கவேணும் எண்டு ஒரு மாயையை உருவாக்கிக் காட்டுறாங்கள். அந்த மாயை வாழ்க்கையை நோக்கி நாம நமது வாழ்க்கையை மாற்றி அமைப்பது சாத்தியமானதா? அது புத்திசாலித்தனமானதா?

அப்படியான மாயைத் தோற்றம் எமது சுயவாழ்வில பாதிப்பை ஏற்படுத்துறத எம்மால தவிர்க்கமுடியுமா?

சினிமாவை கனவுத்தொழில்சாலை என்று சொல்லுவார்கள்

நெடுக்ஸ் சொன்னமாதிரி பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்

சில நல்லவிடயங்களும் சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றது

உங்களால் இயலுமானால் அந்த நல்லவிடயங்களை பின்பற்றுவது தப்பில்லை

ஆனால் மாயைகளை நிச்சயமாக இனம் கண்டு தவிர்ப்பது நல்லது

தவிர்க்கலாம் நிச்சயம் நம்மால் முடியும்

  • தொடங்கியவர்

இதில கருத்துக்கணிப்பில பலர் சுயவாழ்வில முடிவுகள் எடுக்கிறதில தமிழ் சினிமா செல்வாக்கு செலுத்திறது இல்லை எண்டு பதில் கொடுத்து இருக்கிறீங்கள். ஆச்சரியமா இருக்கிது. சிலவேளைகளில நான் படங்களை அடிக்கடி பார்க்காமல் இருந்திட்டு ஒருக்கால் பார்க்கிறபடியால எனக்கு படத்தப் பார்க்கேக்க உங்களவிட அதிக பாதிப்பு வருகிதோ தெரியாது. :wub:

மற்றது, இப்ப நீங்கள் ஒரு புத்தகம் படிக்கேக்க ஒரு விசயத்த உள்வாங்கிக் கொள்ளுறீங்கள் தானே, அதமாதிரி படம் பார்க்கேக்க எதையும் உள்வாங்கிக்கொள்ளுறது இல்லையா?

சிலவேளைகளில உங்களை அறியாமலே நீங்கள் தீர்மானங்கள் எடுக்கிறதில சினிமா பாதிப்பு ஏற்படுத்தலாம். அதாவது உள்ளுணர்வு எண்டு ஒண்டும் இருக்கிது தானே? ஏன் எண்டால் சில விசயங்கள பார்க்கேக்க அதுகள் எம்மை அறியாமலே எமக்குள்ள பாதிப்புக்கள ஏற்படுத்தக்கூடும்.

மற்றது, தமிழ்தங்கை சொன்னமாதிரி நான் கனவு உலகத்தில சஞ்சரிக்கிறது கொஞ்சம் அதிகம்தான். அதாவது எப்பிடி அதச்சொல்லலாம் எண்டால் தீர்மானங்கள் எடுக்கேக்க... அலசி ஆராயேக்க நான் அப்பிடியே ஒரு தீர்மானம் எடுத்தால் எப்பிடியான பின்விளைவு வருமோ.. அதனை கற்பனையில உணர்ந்து அதாவது வாழ்ந்து பார்ப்பன். அப்ப அது பிடிச்சால் அதை தேர்வு செய்வது இல்லாட்டிக்கு விடுவது. நான் கற்பனை செய்யுறது கொஞ்சம் அதிகம் எண்டபடியாலயும் ஒப்பீட்டளவில எனக்கு தமிழ் சினிமாவ பார்க்கேக்க பாதிப்பு கொஞ்சம் அதிகம் வருகிதோ தெரியாது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுதளவில் சினிமா பொழுதுபோக்கு மட்டுமே. சினிமாவில் வரும் காட்சிகள் சில உண்மையானவையாக இருந்தாலும் பல காட்சிகள் கற்பனையானவை.

இதற்கு ஒரு உதாரணம்: சினிமா படங்களால் தான் குழுக்கள்(gangs) உருவானதாம் . இது ரொரண்டோ ஆராட்சியாளர்களின் முடிவு. அப்படியெனில். 70களில் வந்த எம்.ஜி.ஆரின் படங்களில் இப்பொழுதை விட சண்டை காட்சிகள் அதிகமாகவே இருந்தன. எனவே அப்போ கூடுதலான குழுக்கள்(gangs) எங்காவது இருந்தது என்றால் இல்லை என்பதே பதில்.

என்றாலும் பல சினிமா பாடல்கள் ஏதோ வகையில் ஒரு பாதிப்பை (affection)ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமா என்பது சில வேளை நல்ல விசயங்களையும் வெளிப்படுத்தும் சில வேளை கெட்ட விசயங்களையும் வெளிப்படுத்தும். சினிமாவைப் பார்த்து அதில் வருகின்ற படி வாழ நினைத்தால் கஸ்டம் தான். சினிமா என்பது அதிகமாக பொழுது போக்கிற்காகத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர அதுதான் வாழ்க்கை என்பதல்ல. இதுவே எனது கருத்து

சினிமா என்னில் ஆதிக்கம் செய்யக் கூடாது என்று விரும்புறவன் நான். அதால உதுகள எப்பவும் இருந்திட்டு "ரைம் பாசிங் மச்சி" என்று பாக்கிறதே தவிர அதில எல்லாம் ஈடுபாடு கிடையாது.

சில படங்களைப் பார்த்து என்னையறிமால அழுதிருக்கிறன். ஆனால்.. அவை என்னில் பாதிப்புத் தந்தன என்று சொல்ல முடியாது. :wub:

அப்ப ஏன் அழுத நீங்க? ஏததாவது வருத்தமே?

கோபாலபுரத்தில் நடக்கின்ற திருமணங்கள் எல்லாம் என்னை மீறி நடைபெறுகின்ற காதல் திருமணங்கள்தான். கோபாலபுரம் தாண்டி சி.ஐ.டி. காலனியிலே நடைபெற்ற திருமணமும் அத்தகையதே. ஆகவே காதலுக்கு வழிவிடுகின்ற கருணாநிதியின் குடும்பம். பாரதியாரின் பாடல்களிலே வருகின்ற காதலையெல்லாம் எடுத்துக்காட்டி விளக்கினேன். அதன்பிறகுதான் பெற்றோர் இந்த காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். அந்த வகையில், இந்தத் திருமணம் நடைபெற பெரிதும் காரணமானவன் நான்தான். அதோடு இது என் தம்பி வீட்டுத் திருமணம்'' என்று கலைஞர் உரிமையுடன் திருமணத்துப் பின்னணியை எடுத்துச் சொல்ல, கூட்டத்தில் கலகலப்பு.

இது குமுதம் பத்திரிகையில் வந்தது..

தமிழ் படங்களில் காதலை பிழிந்து பாடல்கள் எழுதும் வைரமுத்துகூட தனது பிள்ளைகள் என்று வரும்போது காதலுக்கு சிவப்புக்கொடி தான் காட்ட முயற்சித்திருக்கிறார். என்ன செய்வது.. ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி மகளே(மகனே) என்று தான் சொல்லத்தோன்றுகிறது..

  • தொடங்கியவர்

மற்றது இன்னொரு விசயம் என்ன எண்டால் இப்ப படம் பார்க்கேக்க அழுகை வாறதுக்கான காரணம் அப்படியான சம்பவங்கள் எங்களிண்ட வாழ்க்கையில நடந்து இருப்பதால் எண்டுற அவசியம் இல்ல. ஓர் இளகிய மனம் படைச்சவைக்கு (இப்ப என்னை மாதிரி ஆக்கள் :wub: ), இரக்க குணம் மிகுந்தவைக்கு படத்தில காட்டப்படுற அடாவடிகளைப் பார்க்கேக்க கோவமும், படத்தில அப்பாவிகள் தாக்குப்படும்போது அழுகையும் வரக்கூடும்.. மனிசனிண்ட மனச நல்லா புரிஞ்சுகொண்டு அதற்கு ஏற்றபடிதான் அவனுகள் படங்கள் எடுக்கிறாங்கள். எண்டபடியால் படங்களப் பார்க்கேக்க நமக்கு உளவியல் ரீதியா பாதிப்பு வாற சந்தர்ப்பங்கள் அதிகமா நிச்சயம் இருக்கும்.

மற்றது ஈஸ் சொன்னமாதிரி ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு இல்லை கண்ணே எண்டு படம் எடுக்கிற ஆக்கள் சொல்லிக்கொண்டே போகவேண்டியதுதான். :huh::wub:

ஆனால்.. என்னால என்னமோ.. சில நல்ல அருமையான சிந்தனைகள் எண்டால்.. அது வெறும் படம் என்பதற்காக அத பின்பற்றுவது பற்றி சிந்தித்து பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அதாவது படத்தில கூறப்படுற விசயங்கள நிஜ வாழ்வில ஒன்றிணைக்கலாமோ எண்டும் சிலவேளைகளில பார்ப்பது உண்டு.

எல்லா விசுக்கோத்து விசயங்களும் இல்லை. அருமையான ஓரிரு விசயங்கள்.. <_<

வணக்(கம்) குருவே :) ..மறுபடி ஆய்வு கூடத்தில உங்கள சந்திக்கிறதில மிக்க மகிழ்ச்சி..(நாம ஆய்வு கூட பக்கம் வந்தாச்சு எனி எல்லாரும் பாவம் தான்)..சரி அதை விடுவோம் என்ன..

ஓ..பூவெல்லாம் உன் வாசம் ரொம்பவே குருவின்ட இதயத்தை பாதிச்சுது போல..அட அழுது வேறபோட்டியள் சரி சரி அழாதையுங்கோ என்ன..ஒம் "பூவெல்லாம் உன் வாசம்" படம் நன்ன படம் தான் பாட்டுகளும் அந்த மாதிரி மற்றது எங்கன்ட "ஜோ" அக்கா சின்னபிள்ள மாதிரி நன்னா நடிப்பா அல்லோ..

சரி எனி நாங்க விசயதிற்கு வருவோம் அது தான் ஆராய்ச்சிக்கு..என்ன பொறுத்தவரை குருவே வாழ்க்கையும் நம்ம தமிழ் சினிமாவும் ஒன்னு தான் பாருங்கோ.. :wub:

1)முதலாவதா பாருங்கோ சந்திரமுகி படத்தில "ஜோ" அக்கா கட்டின அந்த சேலை வந்து பிரபல்யம் ஆகி சந்திரமுகி சேலை எண்டு கூட வந்தது அல்லோ..(அதுக்காக என்னட்ட கேட்கிறதில்ல நான் சேலை கட்டுறனானோ எண்டு)..அவை போடுற உடுப்புகளிள இருந்து தொடங்குவோம் எங்கன்ட ஆய்வை எண்டு போட்டு தான்..

(நீங்க இதை பத்தி என்ன சொல்லுறியள்)... :huh:

2)நம்ம விஜய் அண்ணா படத்தில ஒரு பஞ் பேசினார் எண்டா அதை பார்த்து நானும் பத்து பேருக்கு சொன்னா தான் எனக்கு சந்தோஷம் பாருங்கோ..(சரி சரி ஒருத்தரும் கோவித்து போடாதையுங்கோ)..என்ன செய்யிறது உது எனக்கு மட்டுமில்ல குருவே பலருக்கு இருக்கு நான் உண்மையை சொல்லுறன்..

3)அடுத்தது எனக்கு சின்னனில காதல் எண்டா என்னது எண்டே தெரியாது இந்த தமிழ்சினிமாவை பார்த்து தான் காதல் எண்டா என்னவெண்டு தெரியும் எண்டா பாருங்கோவன். :(

4)பிறகு குருவே ஒரு பொண்ணை எப்படி மடக்கிறது..என்கிறது பத்தி எல்லாம் உந்த தமிழ் சினிமாவிலை தானே பார்த்து படித்தனாங்க..

5)மற்றது உங்க அடிபிடி படுறதை பார்த்து தானே எத்தனையோ பேர் றோட்டில எல்லாம் அடிபிடி படுறவை பாருங்கோ..(நான் உந்த விளையாட்டிற்கு போறதில்ல)..அடி எல்லாம் என்னால வாங்க ஏலாது அல்லோ.

இப்படி குருவே அடுக்கி கொண்டே போகலாம் பாருங்கோ..மொத்தத்தில சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னு தான் ஆனா சினிமாவில் அதை மிகைபடுத்தி காட்டுகிறார்கள் பாருங்கோ..மற்றும்படி நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு மனிதன் தானே சினிமாவை எடுக்கிறான் அவன் தன்னோடு பிண்ணி பிணைந்ததைம் மற்றும் சில வருடங்களின் பின் இந்த லோகம் எப்படி இருக்கும் எண்ட அவதானத்திலும் ஒரு சினிமாவை உருவாக்க முயல்கிறான்... :wub:

அவன் சில கற்பனைகளை அதில் புகுத்தி பிரமிக்க வைக்கிறான் சினிமாவில்...இப்ப பாருங்கோ எங்கன்ட முகம் வந்து எங்க மனதில அழகாக தான் இருக்கும் என்ன நான் சொல்லுறது சரியோ இதையே நாங்கள் எங்கள புகைபடத்தில் பார்க்கும் போது தான் நம்ம முகத்தின்ட வண்டவாளம் தெரியும்..அதை போல நம்ம மனசில இருக்கிறதை சினிமாவில காட்டும் போது ஏற்று கொள்ளுறது கொஞ்சம் கஷ்டம் தான்..ஆனால் அது தான் நிஜம்.. :lol:

ஆகவே எண்ட ஆய்வின்படி என்னை அறியாமலே தமிழ் சினிமா எண்ட வாழ்வில பாதிப்பை ஏற்படுத்துகிறது..ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது எண்டு சொல்லலாம்..ஏன் குருவே கேட்கிறியள் படுக்க கூட நான் பாவனா அக்கா கூட "டான்ஸ்" ஆடுற மாதிரி தான் நினைத்து கொண்டு படுக்கிறனான் அல்லோ.. :wub:

போக முன்னம் இன்னொரு உதாரணம் சொல்லுறன் 12B எண்ட படம் பார்த்தனியளோ குருவே..அதில அந்த 12B பஸ்ஸை அந்த கதாநாயகன் பிடித்திருந்தா அவரின்ட வாழ்க்கை எப்படி போயிருக்கும் பிடிகாட்டி அவரின்ட வாழ்க்கை எப்படி போகும் எண்டு..

உது எங்கன்ட வாழ்க்கையிலையும் நடக்கிற விசயம் தானே <_< ..நான் கூட எத்தனை தரம் காலம 7.15 "டிரெயினை" விட்டு போட்டு கவலைபடுறனான் ஏன் எண்டா அந்த "டிரெயினை" பிடித்திருந்தா ஒருவாவ சந்தித்திருக்கலாம் பிடிக்காத படியா சந்திக்காம விட்டிட்டன் எண்ட கவலை...(வேணும் எண்டா உதை வைத்து ஒரு கதை எழுதட்டோ)..

இது தான் என்னுடைய ஆராய்ச்சி அறிக்கையின் முடிவு உங்களிட்ட சமர்பித்து போட்டன்..(ஆறுதலா யோசித்து நன்ன விடையை சொல்லுங்கோ)..இந்த ஆய்விற்காக எனக்கு ஏதாச்சும் விருது கொடுக்க போறியள் எண்டா அழையுங்கோ நான் வாரன்..இப்ப போயிற்று வாரன்... :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையே ஒரு சினிமா தான் அதில மனசிற்கு அலங்காரம் பண்ணி நடிக்கிறோம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஓமோம் நான் உந்த சாரிகளப்பத்தி கதைக்க மறந்துபோனன். நம்மோட பொண்ணுகள் சாரிகள் வாங்கேக்க (தீர்மானம் எடுக்கேக்க..) தமிழ் சினிமா படங்களில வாற பெயருகள் பாத்து எடுக்கிறது இல்லையோ? இஞ்ச கனடாவில Asians எண்டு மிகப்பெரிய உடுதுணிகள், புடவைகள் விக்கிற தமிழ் கடை இருக்கிது. தமிழ் விசன் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளிலையும் ஒரு நாளைக்கு இருவது முப்பது தரம் அதிண்ட விளம்பரம் போகும். அப்ப என்ன எண்டால் அதில போற சாரிகளிண்ட பெருகள் எல்லாம் தமிழ் சினிமா நடிகைகள், படங்களிண்ட பெயருகளாத்தான் இருக்கும். <_<:wub:

எனது கணிப்பின் படி சினிமா ஒரு பாரிய தாக்கத்தை விழைவிக்கின்றது ஆனால் அது நேர்மையான ஒரு விழைவா என்பது கேள்விக்குரியது.

மிகவும் இறுக்கமான ஒரு சமுதாயத்தின் இறுக்கத்தை உடைப்பதில் சினிமா பெரும் பங்கு வகிக்கின்றது. ஆனால் அந்த செயலில் நிதானம் என்பது இல்லை. என்னுமொரு இறுக்கத்தில் சமூகத்தை தள்ளிவிடவும் செய்கின்றது.

தமிழ் சமூகம் படைக்கும் இந்த சினிமாவில் தமிழ்ச் சமூகத்தின் நடைமுறை வாழ்வில் இல்லாத விடயங்கள் ஏராளம். ஆனால் ஒரு சமூகத்தின் ஏக்கம் கனவு என்பனவற்றை அதனூடாக உணர்ந்து கொள்ள முடியும்.

காதல் பாடல்கள் , டுயட் பாடல்கள், உறவுகளின் சித்தரிப்புகள் , நாகரீகம் , நளினம், பாவனை, வாழ்க்கை முறை என்று ஏராளமான விடயம் சினிமாவில் காட்சியாகப் பார்ப்பது நடைமுறையில் இருந்தால் பரவாயில்லை என்று எண்ணத் தோன்றும்.

ஒரு நடிகருக்கு ஒரு கோடி ரசிகர்கள், நடிகருக்காக சாகும் அளவுக்கு அவரில் பற்று, சினிமா மீதான வெறிபிடித்த மோகம், இதெல்லாம் எவ்வாறு சாத்தியப்படுகின்றது? உண்மையில் அவ்வாறானவர்கள் மடையர்கள் இல்லை. நிச்சயமாக அவ்வாறு புறந்தள்ளி விட முடியாது. ஒரு கீரோ சினிமாவில் ஜமிந்தாரை எதிர்த்து அரசியல் வாதியை எதிர்த்து வெற்றி பெறுகின்றான், ஓராயிரம் பேர் நடைமுறை வாழ்வில் எதிர்க்க முடியாமல் தோல்வி அடைகின்றனர், நீதி நியாயம் நடைமுறையில் தோல்வி அடைகின்றது. தோல்வியடைந்தவனின் வெற்றி ஒரு கனவு. அதுவே காட்சியாகும் பேது அதில் ஐக்கியமாகின்றான். காட்சிகள் நிதானமாக நகரும் போது தோல்வி அடைந்தவனுக்கு நம்பிக்கை தருவதாக சினிமா அமைகின்றது. ஆனால் நிதானம் இன்றி மோசமான நகரும் போது உனது வெற்றி என்றும் கனவே என்று உள்ள நம்பிக்கையையும் சிதைத்து விடுகின்றது. ஏழை பணக்காரன் ஆகும் கனவு சினிமாவில் அதிகம் சாத்தியப்படுகின்றது. தடைகளை தாண்டிய காதலின் வெற்றி சினிமாவில் சாத்தியப்படுகின்றது. யதார்த்த வாழ்வில் தோல்வியடையும் நிறையவிசயங்கள் சினிமாவில் சாத்தியப்படுகின்றது.

ஐந்து நிமிடத்தில் பால் விற்று பெரும் பணக்காரன் ஆவது, ஒரு ருபாயில் கோடீஸ்வரனாவது, முதலமைச்சர் காவல் துறை அதிகாரிகளை எதிர்த்து வெல்வது என்று காட்சி அமைக்கும் விதம் வெல்ல முடியாத வெற்றி வெறும் கனவு என்று மறுபடி கூறிச்செல்லும்.

சில காட்சிகள் இப்படி ஒரு கொடுமைக் காரனாக கொடுமைக்காரரியாக இருக்கக் கூடாது என்று நினைக்கத் தூண்டும்.

மக்களின் நிறைவேறாத ஆசைகள் கனவுகள் ஏக்கங்களை நாடிபிடித்து நகர்வதில் சினிமா தந்திரத்துடன் செயல்படுகின்றது. இதில் நன்மையும் அதிகளவு தீமையும் இருக்கவே செய்கின்றது.

இன்றுவரை தமிழ்நாட்டு அரசியலில் சினிமா பின்னணியுடன் நுளைந்தவர்களே ஆதிக்கம் செலுத்துவதில் முதலிடத்தில் நிற்கின்றனர். எம் ஜி ஆர் , கலைஞர் ஜெயலலிதா என்று ஆட்சியில் அமர்ந்தவர்கள் தொடக்கம் அதற்கு முனையும் விசயகாந் சரத்குமார் என்றும் இது தொடர்கின்றது.

இந்தப்பாடலில் சினிமாவின் தாக்கத்துக்கு உள்ளானதின் வெளிப்பாடுகளை உணர முடியும்

பாடல் வரிகளில் சில காட்சிகளில் யதார்த்தம் இளையோடுகின்றது. இதில் பெண்ணின் பங்கும் பெண்ணுடன் சம்மந்தப்பட்ட நடனமும் யதார்த்ததுடன் முரண்பட்டது. கனவுகளுடன் சம்மந்தப்பட்டது, கனவை இப்படி காண் என்ற ஒரு அறிவுறுத்தல் மூலம் சினிமாவுடன் சம்மந்தப்பட்டது.

இங்கே கணிசமானளவு சினிமா சம்மந்தப்பட்டவற்றை இணைக்கவும் பார்க்கவும் வாசிக்கவும் செய்கின்றோம். இது சுயவாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் தான். பெழுதுபோக்கு என்றதுடன் நாம் நின்றுவிடுகின்றோம் என்பது நடைமுறைக்கு சாத்தியமா என்பது சந்தேகத்துக்குரியது. எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகின்றோம் என்பதை இனம்காண முடியாதவர்களாக இருக்கலாம் ஆனால் தனிமனிதனை பாதிப்பதில் சினிமாவுக்கு அதிகளவு பங்கு உண்டு. சமூகத்தை பாதிப்பதில் சினிமாவுக்கு அதிகளவு பங்கு உண்டு. அவைகளில் நல்லவிதம் கெட்டவிதம் பற்றி அதிகம் கதைப்பதால் மட்டுமே சமூகத்துக்கு நன்மையை செய்ய முடியும்.

ஒவ்வொரு தனிமனிதனும் சினிமாவுக்காக சீரியலுக்காக செலவளித்த நேரமும் பணமும் அதன் நிமிர்த்தம் சிந்தித்த நேரமும் இவைகள் முறையே ஒட்டுமொத்த மக்கள் செலவளித்த நேரமும் பணமும் என்று நோக்கும் பொழுது பெரியளவு தாக்கத்தை உணர முடியும். பிரத்தியோகமாக எமது தாயக சூழலுடன் ஒப்பிடுகையில் சினிமா எம்மை எமது கடமையை பெழுது போக்கை தாண்டி நிறைய பாதித்துவிட்டதாக உணர முடியும். இவற்றை பற்றி அதிகம் கதைக்க வேண்டும், எமது ரசனை கனவுகள் ஏக்கங்கள் பற்றியும் அவற்றின் பலம் பலவீனம் பற்றியும் அதிகம் ஆழமாக கதைக்க வேண்டும் இதனால் நன்மை ஏற்படும் என்று நினைக்கின்றேன்.

சினிமா யதார்த்தத்தின் கனவுநிலையை தாண்டி கனவு காண்பதை எப்படி என்று சொல்லி கொடுப்பது வரையில் சென்று நிற்கின்றது. சமயத்தில் யதார்த்த சூழலை கூட சினிமாத்தனமாக சொன்னால் தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நிலமையும் வந்துவிடுகின்றது. இந்த நிலமையில் பாதிப்பு என்பது எதிர்பார்ப்பதை விட அதிகம் நடந்து விட்டதாக தான் உணர முடியும்.

மன்னிக்கவும் நான் நன்றாக எல்லா சினிமாவும் பார்ப்பேன். பாதிப்பை உண்டு பண்ணுவது தாயகத்து படங்கள்தான். காரணம் பிரிவின் வலியை அவைதான் வருடிச்செல்கின்றது.

மற்றும்படி மற்றவை எல்லாம் பார்த்த மறுநொடியே மறந்திடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் அழுத நீங்க? ஏததாவது வருத்தமே?

சில சோகமான நிகழ்வுகளோடு காட்சிகள் ஒட்டிப் போகின் அழுகை வரலாம். அது தாக்கத்தின் விளைவல்ல. மறந்து போன சம்பவங்களின் மீட்டல் விளைவாகக் கூட இருக்கலாம்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

சினிமா பார்த்து அழுதிருக்கேன். பார்க்கும்போது மட்டும் படத்தோடு ஒன்றி விடுவேன்.

படம் முடிந்தபின் வழமைக்கு திரும்பிடுவேன்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.