Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது:

"உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது.

சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான்.

சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால், அதே தண்ணீரை சுத்தம் செய்து மலேசியாவுக்கே திரும்பி விற்கின்றனர்.

சிங்கப்பூரில் 77 சதவிகித சீனர்களும், 14 சதவிகித மலாய்களும், 8 சதவிகித இந்தியர்களும் உள்ளனர். 8 சதவிகித இந்தியர்களில் 65 சதம் பேர் தமிழர்கள்.

தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு பல்வேறு வசதிகளை அங்குள்ள அரசு செய்து வருகிறது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினால் ஏதோ தரம் குறைந்தவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், ஆங்கிலத்திலேயே பேசி வருகின்றனர். குழந்தைகளும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசி வருவதால் எதிர்காலத்தில் தமிழ்மொழி வழக்கற்றுப் போகும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழை தெளிவாக பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழில் பேச கூச்சப்படுவதால் வாய்மொழித் தேர்வில் அவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர்.

தமிழ் பண்பாடு சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப்போல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள செண்பகவிநாயகர் கோயிலில் ஞாயிறு பள்ளி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு தமிழும், சைவமும் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணமே, அங்குள்ள மக்கள் சட்டத்தை மதிப்பதுதான். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருமுறை தவறு செய்தவர்கள், மறுமுறை தவறு செய்யும் போது தண்டனை மேலும் அதிகரிக்கப்படும். சாதாரன குடிமகன் முதல் அரசு பதவிகளில் இருப்பவர்கள் வரை யாருக்கும் பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் தண்டனை ஒன்றே.

தமிழகத்தைப் போல் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவுகள் கிடையாது. பெரும்பாலான திருமணங்கள் கலப்பு திருமணங்களே. ஜாதியால் தனித்து இயங்கும் நிலை இல்லை.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கியது போல் தற்போது ஹிந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மொழிக்கான அரசின் சலுகை ஏதும் குறைந்து விடப்வதில்லை.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழாசிரியர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொழி, கலாசாரம், பண்பாடு என அரசு எதற்கும் வேறுபாடு காட்டுவது கிடையாது' என்றார் சிவக்குமாரன்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே. அன்பரசு, தத்துவப் பேரவை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி தற்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள ஈழத்தமிழர்களையும் இந்தியர் என்றே கணக்கிடுகினம் போல இருக்கிறது. சிலோன் வீதியில் இருக்கிற செண்பக விநாயகர் ஆலயம் ஈழத்தமிழர்களினால் கட்டப்பட்டது. அதனால் தான் தமிழும் சைவமும் அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் பேராசிரியர், இந்தியத்தமிழர்களினால் தான் அங்கு தமிழும் சைவமும் வளர்க்கப்படுகிறது போலச் சொல்கிறார். புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் பல நிகழ்வுகளை இந்தியத்தமிழர்கள் நடாத்துகிறார் என்று அண்மைக்காலங்களில் தினமலர் பத்திரிகையின் உலகத்தமிழர் பகுதியில் செய்திகள் வருவது தெரிந்ததே.

எனினும் சிங்கப்பூரில் உள்ள சில ஈழத்தமிழர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் சீனா மொழியினைக் கற்பிக்கிறார்கள்.

ஓ..அப்படியா அது என்னவெண்டா எங்கன்ட "பொன்னி தாத்தா" சிங்கபூரை விட்டு வெளியேறியமை தான் முக்கிய காரணியாக இருக்கும் எண்டு நான் நினைக்கிறன்.. :wub:

அப்ப நான் வரட்டா!!

அந்தக்கோயில் இன்னும் எங்கள் ஈழத்துக்கோயிலை நினைவு படுத்துகிறது... அங்குள்ள பூசாரிகளும் ஈழத்து பூசாரிகளே... இது ஒரு 3 வருடத்துக்கு முந்தின கதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கப்பூரில் உள்ள சில ஈழத்தமிழர்கள் தங்களது பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிக்காமல் சீனா மொழியினைக் கற்பிக்கிறார்கள்.

இப்போது பல நாடுகளில் சீன மொழியை விரும்பி கற்கின்றார்கள் . எதிர்காலத்திற்கு பிரயோசனமாக இருக்குமென்று கூறுகின்றார்கள்

சில வேளைகளில் அடுத்த வல்லரசு சீனாவாக இருக்குமோ?

19ம் நூற்றாண்டு பிரித்தானியா

20ம் நூற்றாண்டு அமெரிக்கா

21ம் நூற்றாண்டு சீனா??????

சிங்கப்பூர் இல் ஈழதமிழர் மிகக்குறைவு ஆனாலும் எமகென தனி இடமுண்டு.

இப்போது பல நாடுகளில் சீன மொழியை விரும்பி கற்கின்றார்கள் . எதிர்காலத்திற்கு பிரயோசனமாக இருக்குமென்று கூறுகின்றார்கள்

சில வேளைகளில் அடுத்த வல்லரசு சீனாவாக இருக்குமோ?

19ம் நூற்றாண்டு பிரித்தானியா

20ம் நூற்றாண்டு அமெரிக்கா

21ம் நூற்றாண்டு சீனா??????

22ம் நூற்றாண்டு தமிழ்... ளொள்ளு.. :lol::rolleyes:

லா லா என எல்லாமே லா ஆகிவிட்டது போல ;)

சிங்கப்பூருக்கு பல தடவைகள் சென்றுள்ளேன்... விடுமுறைக்கு போகலாம்..இருப்பதற்கு..ம்ஹிம் எனக்கு பிடிக்கவில்லை.. நெருக்கமான வீடுகள் எனக்கு பிடிக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவிலேயே துப்பரவான நாடு என்று சிங்கப்பூரைத்தானே குறிப்பிடுகின்றார்கள் தூயா .

ஆசியாவிலேயே துப்பரவான நாடு என்று சிங்கப்பூரைத்தானே குறிப்பிடுகின்றார்கள் தூயா .

அது உண்மை தான்.

வீதியில் எப்போதும் துப்பரவாக்கும் பணி நடந்து கொண்டேயிருக்கும்.

ஆனால் என் கண்ணிற்கு சிங்கப்பூர் செயற்கைதனமாக படுகின்றது.

இங்கே தமிழ் மெல்ல செத்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழர்கள் பலரும் தம்மை இந்தியர் என்றுதான் இனத்தால் கருதப்படுவதும், தமிழ் கற்பதனால் அப்படி என்ன பெரிசா நடக்கப்போகின்றது (பொருளாதாரரீதியாக) என்ற நினைப்பும் முக்கிய காரணங்கள். ஆனாலும் இங்கே தாய்மொழிக்கல்வி அவசியம், அப்படி இருந்தும் பலர் தமிழை வெறுத்து ஒதுக்குவது வேதனையானது. சீனர்கள் ஆர்வமாக சீன மொழியும், மாலாய் காரர் மலாய் மொழியும் ஆர்வமாக கற்று வளர்த்து வருகையில் தமிழர்களின் செயல்களால் சில ஆண்டுகளில் தமிழை இந்தி மொழி பின் தள்ளினாலும் ஆச்சரியமில்லை.

நம்ம ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். சிலோனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்கையில் ஆரம்ப காலத்தில் குடியேறியவர்களாக குறிப்பிடப்படுகின்றனர். பிரபல தலைவர்களான மறைந்த ராஜரட்ணம்(சிங்கையின் பிதாமகர்களில் ஒருவர்), தற்போதைய நிதி அமைச்சர் தர்மன் சண்முகரட்ணம் என்று பலர் நம்மவர்களே. தற்போது பல இலங்கை பட்டதாரி மாணவர்கள் இங்கே வேலை செய்கிறார்கள், பல்கலைகழகங்களில் படித்தும் கொண்டிருக்கிறார்கள்

தவிர அங்கிருக்கும் பல தமிழர்கள் தமிழ்+மலே+ஆங்கிலம் கலந்து ஒரே நேரத்தில் கதைப்பார்கள்...ரொம்ப சிக்கலா இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

தவிர அங்கிருக்கும் பல தமிழர்கள் தமிழ்+மலே+ஆங்கிலம் கலந்து ஒரே நேரத்தில் கதைப்பார்கள்...ரொம்ப சிக்கலா இருக்கும்..

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

இப்பிடியா? <_<

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

என்ன டங்குவார்... ஒன்னுமே புரியலனு!

ஏதோ புலம்புராபில?

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

இப்பிடியா? <_<

அதே அதே :o:lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாவா? இன்னிக்கு காலேல காடில ஏறி ஜாகா வேலைக்குப் போனே. என் கூட்டாளியும் கூட வந்தாப்ல. அவுங்க சிகரட் தண்ணி அதிகமா பக்கப் பண்றாப்ல.

இப்பிடியா? :o

இதைக்கொஞ்சம் எங்களுக்கும் விளங்கிறமாதிரி சொன்னால் நாங்களும் சேர்ந்து சிரிப்பமெல்லே <_<

  • கருத்துக்கள உறவுகள்

என்ன டங்குவார்... ஒன்னுமே புரியலனு!

ஏதோ புலம்புராபில?

புலம்பல் தூயாவுக்கு விளங்கீட்டுது கண்டியளோ? <_<

  • கருத்துக்கள உறவுகள்

இதைக்கொஞ்சம் எங்களுக்கும் விளங்கிறமாதிரி சொன்னால் நாங்களும் சேர்ந்து சிரிப்பமெல்லே <_<

குமாரசாமி அண்ணை.. அதை விளங்கிற மாதிரி சொன்னால் அதில சிரிக்கிறதுக்கு ஒண்டுமில்லை. :o சரி உங்களுக்காக,

அரும்பொருள் விளக்கம்:

காடி: மகிழுந்து

ஜாகா: காவலர் வேலை (செக்யூரிட்டி)

பக்கப் பண்ணுதல்: உபயோகித்தல் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணை.. அதை விளங்கிற மாதிரி சொன்னால் அதில சிரிக்கிறதுக்கு ஒண்டுமில்லை. <_< சரி உங்களுக்காக,

அரும்பொருள் விளக்கம்:

காடி: மகிழுந்து

ஜாகா: காவலர் வேலை (செக்யூரிட்டி)

பக்கப் பண்ணுதல்: உபயோகித்தல் :o

டங்குவார் இடைக்கிடை லா..லா..வையும் போடவேணும். அப்பதான் நல்லா இருக்கும். நானும் கொஞ்சக்காலம் அங்கை லோ..லோ...எண்டு அலைஞ்சனான்லா.... :lol::lol:

இப்போது பல நாடுகளில் சீன மொழியை விரும்பி கற்கின்றார்கள் . எதிர்காலத்திற்கு பிரயோசனமாக இருக்குமென்று கூறுகின்றார்கள்

சில வேளைகளில் அடுத்த வல்லரசு சீனாவாக இருக்குமோ?

19ம் நூற்றாண்டு பிரித்தானியா

20ம் நூற்றாண்டு அமெரிக்கா

21ம் நூற்றாண்டு சீனா??????

ஓமென்ன கு.சா தாத்தா.. <_<

22 நூற்றாண்டில வந்து - சோமாலியா... :o

யார் கண்டது என்ன நடக்குமோ அது தான் எண்ட தீர்கதரிசனமான பார்வையால நான் கண்டு பிடித்தது பாருங்கோ எப்படி தாத்தா... :lol:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கப்பூரில் மட்டும் அல்ல, தமிழர்களின் பூர்வீக தேசம் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில் கூட சரியான தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவது வருத்தத்திற்குரியது. அங்கே வாழும் ஆறு கோடி தமிழர்களில் எத்தனை பேருக்கு சரியான தமிழ் பேச, எழுதத் தெரியும் (அதாவது வேற்றுமொழி கலக்காத தமிழ்)? ஏன் புலம்பெயர் நாடுகளை எடுத்துக்கொள்ளுங்களேன், இங்கையும் இதே நிலமைதான். தமிழில் சில வார்த்தைகளை தவிர மற்றும்படி அந்தந்த நாட்டுமொழிகளிலேயே உரையாடுகிறார்கள் (விரும்புகிறார்கள்?!). இந்த நிலமையை மாற்றியமைக்க ஒரே ஒரு வழிதான், அது தமிழீழம் மலர்வதிலேயே உள்ளது.

Edited by Tigerblade

அனைத்துக்கும் தேவை உடனடி ஒரு தேசம் எங்களுக்காய்... சரியா சொன்னிங்க டைகர்

சிங்கப்பூரில் மட்டும் அல்ல, தமிழர்களின் பூர்வீக தேசம் என்றழைக்கப்படும் தமிழ்நாட்டில் கூட சரியான தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவது வருத்தத்திற்குரியது. அங்கே வாழும் ஆறு கோடி தமிழர்களில் எத்தனை பேருக்கு சரியான தமிழ் பேச, எழுதத் தெரியும் (அதாவது வேற்றுமொழி கலக்காத தமிழ்)? ஏன் புலம்பெயர் நாடுகளை எடுத்துக்கொள்ளுங்களேன், இங்கையும் இதே நிலமைதான். தமிழில் சில வார்த்தைகளை தவிர மற்றும்படி அந்தந்த நாட்டுமொழிகளிலேயே உரையாடுகிறார்கள் (விரும்புகிறார்கள்?!). இந்த நிலமையை மாற்றியமைக்க ஒரே ஒரு வழிதான், அது தமிழீழம் மலர்வதிலேயே உள்ளது.

ம்ம்.."டைகர் பிளேட்" அண்ணா நீங்கள் கூறுவது ஏற்று கொள்ள கூடிய விடயம் தான் :lol: ..அதாவது "தமீழீழம்" மலர்ந்தவுடன் எங்களுக்கு அந்த அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.. :o

அவ்வாறான நேரத்தில் புலத்தில் வேற்று மொழிகளிள் பேசி திரிகிற இன்றைய எங்கன்ட இளையோர் சமுதாயம்..(நான் இதில் எல்லாரையும் குறிபிடவில்லை).. :lol: உடனடியாக மாறுவார்களோ எங்கள் மொழிக்கு இல்லை எண்டு தான் நினைக்கிறேன்..இது தொடர பார்க்கும் சந்தர்ப்பதில் அதிவும் ஒரு பாதகாமன முடிவை நோக்கி அல்லவா நகரும் இதை பத்தி உங்களின் கருத்து என்ன..?? <_<

அப்ப நான் வரட்டா!!

நான் யம்மு எல்லாம் தமிழில் தான் பேசுகின்றோம்... இல்லையா யம்ஸ்?

நான் யம்மு எல்லாம் தமிழில் தான் பேசுகின்றோம்... இல்லையா யம்ஸ்?

ஓம்..தங்கச்சி ஆனா நீங்கள் சிட்னியை மையமாக எடுத்து கொண்டால் எத்தனை விகிதமானவர்கள் தமிழில் பேசுகிறார்கள் குறிப்பாக தங்களின் வயதை ஒத்த தமிழ் நண்பர்களுடனே..?? <_<

அப்படி அவதானித்தால் ஒரு சிலரே அந்த பிரிவினுள் அடக்கபடுகிறார்கள் மிகுதியானவர்களின் நிலை..?? :o

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.