Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணுக்காய் பகுதியில் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் - வவுனியா கள முனையூடு முன்னேறிச் செல்லும் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே துணுக்காய்ப் பகுதியில் சண்டை நடை பெற்றுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இதில் 5 படையினர் பலியாகி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

விடுதலைப்புலிகளின் 3 உடலங்களை தாம் மீட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

துணுக்காய், மாங்குளம் - மல்லாவி வீதியில் உள்ள துணை நகராகும். இப்பாதையை படையினர் கைப்பற்றின் மேற்கே பூநகரி - மன்னார் வீதியில் வெல்லாங்குளம் நோக்கியும்.. கிழக்கே மாங்குளம் நோக்கியும் மேலும் வடக்கு நோக்கியும் பல முனைகளில் நகர முடியும். :D:lol:

Edited by nedukkalapoovan

  • Replies 68
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
:D வன்னிக்குள் ராணுவம் மெதுவாக முன்னேறித்தான் வருகிறது போலத் தெரிகிறது. துணுக்காய்ப் பகுதியில் சண்டை நடைபெறுகிறதென்றால் நிலமை சற்றுத் தீவீரம் தான். பொறுத்திருந்து பார்ப்போம், புலிகளின் தற்காப்புத் தாக்குதல் எதுவரையிலும் என்று !
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

01vr4.jpg

சண்டை நடைபெறும் பகுதிகளாக இராணுவம் இனங்காட்டியுள்ள பகுதிகள்.

அவர்கள் தமிழ் பெயர்களைப் படிப்படியாக சிங்களத்தில் மாற்றி குறிப்பிட்டு வருகின்றனர். இது சிறீலங்கா பாதுகாப்பமைச்சு வெளியிட்ட படம். அதில் ஒட்டாங்குளம் கூட ஒட்டாங்குளம என்றாகிப் போச்சுது. :lol:

புதினத்தின் தகவல் படி துணுக்காயில் வீடு பார்க்கச் சென்ற மக்கள் சிலர் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது தெரிகிறது. ஆக இராணுவம் துணுக்காய்க்குள் ஊடுருவி விட்டது என்பது இதன் மூலம் தெரிகிறது..! :D:lol::D

  • கருத்துக்கள உறவுகள்

:D ஐயா நெடுக்கு,

கெட்ட செய்தி சொல்லேக்கையும் இந்தப் படமெல்லாம் போட்டு காட்ட வேணுமா ? விடுமைய்யா! படமெல்லாம் போட்டு கவலைப்படுத்த வேண்டாம் ? அதுசரி அடுத்த ரஜினிப்படம் எப்ப வருது ?!

  • கருத்துக்கள உறவுகள்

7 இடங்களில் சன்டை நடபெறுகின்றது படத்தின் படி எத்தனை கள முனைகளில் தான் போராளிகளையும் பயன்படுத்த முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
:D சுண்டல் படத்தின்படி 8 முனைகளில் சண்டை நடைபெறுகிறது. இதற்கு ஒரே வழி அதிர்ச்சி வைத்தியம்தான். ஏதாவது ஒரு முனையில் ஊடறுத்துத் தாக்குவது. இது மற்றக் களமுனைகளிலும் எதிரியின் போரிடும் உளவுறனை குறைத்துவிடும்.இதைச் செய்வார்களா புலிகள் ? எல்லாம் அவருக்கே வெளிச்சம் !
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் பாப்பம்...இனி வரபோயினம் கொன்ஞ பேர் எங்களுக்கு இங்க இருந்து கொன்டு கதைக்க தகுதி இல்லனுட்டு நாங்க எஸ்கேப் ஆவம்...

மல்லாவியிலுள்ள மக்கள் செல் பயத்தால் வீட்டுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளிநொச்சியை நோக்கிச் செல்கிறார்களாம்

Edited by Thalaivan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுணிக்குளத்தை நம்பி செய்யப்பட்ட 3500 ஏக்கர் சிறுபோகப் பயிர்ச் செய்கையும் இராணுவ நடவடிக்கையால் நாசாமாகியுள்ளதாக புலிகளின் குரலில் சொன்னார்கள். பாவம் வன்னி மக்கள். எத்தனையோ சிரமங்கள் மத்தியில் செய்த பயிர் செய்கையும் நாசாமாகிப் போயுள்ளது.

பொடியள் விடாங்கள் என்று நம்பி பயிர் செய்கையை ஆரம்பித்திருக்குங்கள்.. போல..! :D:lol:

புதினம்.. பதிவு கொழும்பில 600 குடிசைகள் உடைச்சதுக்கு கவலைப்படுகுது.. வவுணிக்குளம் மக்கள்.. ஓடிறது.. பற்றி செய்தியைக் காணம். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ஹி ஹி நெடுக்ஸ்.........

முடிவின்றி தொடர்கிறது.... பதில்??????????????????????

காலம் கனியும்! காத்திருப்போம்!! வெற்றி நிச்சயம்!!!

தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக வுளன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவ மெய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!

- மகாகவி -

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D சுண்டல் படத்தின்படி 8 முனைகளில் சண்டை நடைபெறுகிறது. இதற்கு ஒரே வழி அதிர்ச்சி வைத்தியம்தான். ஏதாவது ஒரு முனையில் ஊடறுத்துத் தாக்குவது. இது மற்றக் களமுனைகளிலும் எதிரியின் போரிடும் உளவுறனை குறைத்துவிடும்.இதைச் செய்வார்களா புலிகள் ? எல்லாம் அவருக்கே வெளிச்சம் !

அதுசரி ராணுவ வல்லுனர்கள், நாற்க்காலி ஜெனரல்கள் நமக்கே இது புரியும் போது, சண்டை என்டாலே என்னது என்றேதெரியாதா பிஞ்சு பாலகன் பிரபாகரனுக்கு இது ஏன் புரியவில்லை. எங்களிட்ட கேட்டிருந்தா நாம் புலத்தில கணணிக்கு முன்னால இருந்தே புடுங்கி இருப்பம், சிங்கள ஆமீன்ர பல்லை.

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிவில்லாமல் நிலமை மோசமாகிக் கொண்டே போகிறது. நாங்கள் இங்கு கையாலதவர்களாக கவலைப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். : /

மேலே நெடுக்கண்ணே இணைத்த படத்தை பார்த்தால், சிங்கள இராணுவம் மெதுமெதுவாக இப்படியே நகர்ந்து (ஜெயசுக்குறி காலத்தில் நின்ற) மாங்குளத்தை சென்றடைந்து விடுவார்களோ ...? அடுத்ததாக எனது பார்வையில் மன்னாரில் களமாடும் புலிகளின் படையணிகள் சுற்றிவளைக்கப் படுவது போலவும் தோன்றுகிறது. ஆய்வாளர்கள் கூறுவார்கள், படையினர் இப்படி அகலக்கால் வைத்து புலிகளின் பதிலடியில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று திரும்பி பார்க்காமல் ஓடுவார்கள் என்று, ஆனால் களநிலமை அங்கு எப்படியோ? இப்படி எம்மவர்கள் எதிரியை குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது.

இவை அனைத்துக்கும் ஒரே ஒரு விடைதான், இன்னொரு ஓயாத அலைகள் (4) - இறுதி மண்மீட்புச்சமர். அது தலைவரின் ஒரு வார்த்தையில் தான் தங்கியுள்ளது.

கிபீருக்கு தாக்கு பிடிக்க சிறிது கடினமாம் என தகவல் நாம் தான் சேம்- 16,சேம்- 18 ஏவுகணைகள் வாங்க உதவி செய்யணும்

இப்படி எம்மவர்கள் எதிரியை குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது.

களத்திற்கு வெளியே இருக்கிற நம்மவர்கள்தான் எதிரியைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் களத்தில் உள்ளவர்களிற்கு எதிரியின் பலம், பலவீனம் என்ன என்பதெல்லாம் நன்கு தெரியும். எல்லாவற்றையும் சரியாகக் கணித்து நீங்கள் சொல்லும் ஓயாத அலைகள் போன்று இறுதி நிலமீட்புச் சமர் தொடங்கும். அதற்குரிய காலத்தை களத்தில் நின்று போராடுபவர்கள் தேர்ந்தெடுத்து சரியாகச் செய்வார்கள்.

ம்ம் பாப்பம்...இனி வரபோயினம் கொன்ஞ பேர் எங்களுக்கு இங்க இருந்து கொன்டு கதைக்க தகுதி இல்லனுட்டு நாங்க எஸ்கேப் ஆவம்...

கதையுங்கண்ணா நல்லா கதையுங்க, ஆனா களத்திலை நிக்கிறவைக்கு புத்திமதி சொல்லாதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டடில நல்ல ஒரு செய்தி வரும் பாருங்க

ஒரு வருடம் முக்கி முக்கி பிடிச்ச இடத்தை 3நாளிள விட்டுட்டு ஒடினம் என்று..:D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில நான் இராணுவ விடயங்களை கதைக்க வில்லை.

ஆனால் சண்டை நடைபெறும் பகுதி மக்கள் கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்வதாக குறிப்பிடப் படுகிறது. எத்தனைக் காலத்துக்கென்றுதான் இடம்பெயர்வது?

களமுனைகளில் கடும்சண்டை நடைபெறுவதனாலேயே உயிர் அச்சம் காரணமாக மக்கள் வெளியேறுகின்றனர்.

இராணுவத்தினரை அகலக்கால் பதிக்கவிட்டுத் தாக்குவது புலிகளின் திட்டமானால்..

தென்மராட்சியில் அடர்சனத்தின் பாதுகாப்பின் பொருட்டு சண்டையின்றி வெளியேறியது போல.. தாம் பின்னகர நினைத்துள்ள இடங்களிலிருந்து சண்டையின்றி வெளியேறுவது - அப்பிரதேச மக்களின் ஏதிலி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்காதா..?

அன்றாட இயல்பு வாழ்க்கையின் இருப்பா அல்லது அரசியல் உரிமையா என மக்கள் விரக்தியடையும் நிலை...( நான் புலத்து மக்களைச் சொல்லவில்லை. அன்றாட இயல்பு வாழ்வு 200 வீதம் உறுதிப்படுத்த புலத்து மக்களுக்கு அரசியல் உரிமைதானே முக்கியமானது) தோன்றாமல் பார்த்துக் கொள்வது சம்பந்தப் பட்டவர்களின் பொறுப்பு.

தொடரும் இத்தகைய ஏதிலி நிலையும் இடம்பெயர்வும் - - சாதாரண இயல்பான தவறேதும் அற்ற மனநிலையில் மனங்களைச் சிந்திக்க வைத்து- ஒழுங்காத்தானே இருந்தது- கெடுத்தாங்களே என திரும்ப வைக்க கூடாது. இது முழுக்க முழுக்க அங்கு வாழும் மக்களின் மனநிலையில் சிந்திக்க வேண்டிய விடயம்.

அதெப்படி.. என இங்கு வந்து துள்ளிக் குதிக்கத் தயாராக உள்ளோர்.. தயவு செய்து நீங்கள் துணுக்காயிலோ மல்லாவியிலோ இருந்து கருத்து எழுதுவதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

உண்மைதான் காவடி தற்பொழுது கிளிநொச்சியில் உள்ள நண்பருடன் கதைத்தபோது தமிழர் போராட்டம் தொடர்பாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது உண்மைதான் ,,, ஆனால் மக்கள் போராட்டத்தை வெறுக்கவில்லை ஆனால் வெகுசீக்கிரத்தில் ஓர் முடிவையே எதிர்பாக்கிறார்கள் ...அங்கு என்னவோவெல்லாம் நடக்கிறது ஆனால் அதல்லாம் விடுதலையின் பால் கட்டாயநிலையாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை குறை சொல்லமுடியாது ..

ஆனால் காவடி சொன்னதுபோல மக்கள் எந்தநேரத்தில் ஏதிலிகளாக்கப்படும் நிலை தொடர்ந்து நடைபெறுவதை மக்கள் (அங்கு வாழும் ) எவ்வளவு காலம் ஏற்றுக்கொள்வார்கள்....என்பது ஒரு கேள்விக்குறி..

ஆனால் விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் கிளிநொச்சி மட்டும் ஆமி வந்தால்கூட 2நாட்களுக்குள் மதவாச்சி வரை விரட்டும் யுக்தி உள்ளது ஆனால் பாதிக்கப்படும் பாமரமக்களுக்கு பொறுத்திருக்கும் சக்தி இருக்குமா...

மாவிலாற்றிலில் தொடங்கியது துணுக்காயில் .....

நாளை மீண்டும் பரபரபூவோ, ஈழமுரசோ எழுதப்போகிறது "புலிகள் இன்னும் யுத்தத்தை தொடங்கவில்லை" என்று!

அண்ணை எதிலியாகும் மக்களின் நிலை தொடர்பாக புலத்திலிருந்து நீங்கள் சிந்தித்து எழுதும் போது அங்கே களத்திலிருப்பவர்கள் இது பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டார்களா? களத்தில் இருக்கும் பொறுப்பானவர்கள் அந்த மக்களின் துயரங்களை நேரில் பார்ப்பவர்கள், இந்த இடப்பெயர்வுகளல்ல அனைத்து இடப்பெயர்வுகளையும் அதனால் மக்கள் பட்ட துன்பங்களையும் நேரில் பார்த்தவர்கள் அவர்கள். பாதிக்கப்படும் மக்களின் மனநிலை பற்றியெல்லாம் அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே அதுபற்றியெல்லாம் அவர்களிற்கு நாம் போதிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த மக்களை எப்படி விரக்தியடையாமல் பார்த்துக்கொள்வதென்பது அவர்களிற்குத் தெரியும்.

ஜெயசிக்குறுய் உள்ளிட்ட படை நடவடிக்கைகள் வன்னியை நெருக்கியபோதும், பாரிய பொருளாதார மருத்துவ தடைகளிற்குள்ளும் நின்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தித்தும் விரக்தியடையாத மக்கள் தற்போது விரக்தியடைவார்கள் என்ற உங்கள் கவலை சற்று அதிகமானதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'கிருபா' னயவநஸ்ரீ'துரட 18 2008இ 07:52 Pஆ' pழளவஸ்ரீ'429532'ஸ

உண்மைதான் காவடி தற்பொழுது கிளிநொச்சியில் உள்ள நண்பருடன் கதைத்தபோது தமிழர் போராட்டம் தொடர்பாக மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது உண்மைதான் இஇஇ ஆனால் மக்கள் போராட்டத்தை வெறுக்கவில்லை ஆனால் வெகுசீக்கிரத்தில் ஓர் முடிவையே எதிர்பாக்கிறார்கள் ...அங்கு என்னவோவெல்லாம் நடக்கிறது ஆனால் அதல்லாம் விடுதலையின் பால் கட்டாயநிலையாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை குறை சொல்லமுடியாது ..

ஆனால் காவடி சொன்னதுபோல மக்கள் எந்தநேரத்தில் ஏதிலிகளாக்கப்படும் நிலை தொடர்ந்து நடைபெறுவதை மக்கள் (அங்கு வாழும் ) எவ்வளவு காலம் ஏற்றுக்கொள்வார்கள்....என்பது ஒரு கேள்விக்குறி..

ஆனால் விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் கிளிநொச்சி மட்டும் ஆமி வந்தால்கூட 2நாட்களுக்குள் மதவாச்சி வரை விரட்டும் யுக்தி உள்ளது ஆனால் பாதிக்கப்படும் பாமரமக்களுக்கு பொறுத்திருக்கும் சக்தி இருக்குமா...

உங்கள் ஏக்கம் புரிகிறது

எம் எல்லோர் கவலையும் அதுதானே....

ஆனால் தமிழனுக்கு வேறு ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்களேன்???

மாவிலாற்றிலில் தொடங்கியது துணுக்காயில் .....

நாளை மீண்டும் பரபரபூவோ, ஈழமுரசோ எழுதப்போகிறது "புலிகள் இன்னும் யுத்தத்தை தொடங்கவில்லை" என்று!

நெல்லையன், மாவிலாற்று சண்டை தொடங்கியபோது புலிகள் மூதூரிலும், வடபோர் முனையிலும் முன்னகர்வுத் தாக்குதல்களை நடத்திவிட்டு பின்வாங்கியிருந்தனர்.

ஆனால் அதன்பின்னர் தற்காப்பு தாக்குதல் மட்டும்தானே செய்கிறார்கள். இன்னும் வலிந்த தாக்குதலைத் தொடங்கவில்லையே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.