Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துணுக்காய் பகுதியில் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை எதிலியாகும் மக்களின் நிலை தொடர்பாக புலத்திலிருந்து நீங்கள் சிந்தித்து எழுதும் போது அங்கே களத்திலிருப்பவர்கள் இது பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டார்களா? களத்தில் இருக்கும் பொறுப்பானவர்கள் அந்த மக்களின் துயரங்களை நேரில் பார்ப்பவர்கள், இந்த இடப்பெயர்வுகளல்ல அனைத்து இடப்பெயர்வுகளையும் அதனால் மக்கள் பட்ட துன்பங்களையும் நேரில் பார்த்தவர்கள் அவர்கள். பாதிக்கப்படும் மக்களின் மனநிலை பற்றியெல்லாம் அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே அதுபற்றியெல்லாம் அவர்களிற்கு நாம் போதிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த மக்களை எப்படி விரக்தியடையாமல் பார்த்துக்கொள்வதென்பது அவர்களிற்குத் தெரியும்.

ஜெயசிக்குறுய் உள்ளிட்ட படை நடவடிக்கைகள் வன்னியை நெருக்கியபோதும், பாரிய பொருளாதார மருத்துவ தடைகளிற்குள்ளும் நின்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தித்தும் விரக்தியடையாத மக்கள் தற்போது விரக்தியடைவார்கள் என்ற உங்கள் கவலை சற்று அதிகமானதுதான்.

ஆனாலும் மீண்டும் ........மீண்டும்.

......இடம்பெயர்வும்........அகதிவாழ்க

்கையும்

அங்குள்ள சில மக்களை .......

ஒன்றும் வேண்டாம்....

இங்கையாவது நிரந்தரமாய் இருப்பதற்கு வழிசெய்யுங்கள் என்ற கேள்வியை எழுப்பவழிவகுக்கும்....

அதற்கு பதில் ????? இல்லாதபோது????

  • Replies 68
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு மாங்குளத்தில் இராணுவம் நிற்கின்றது என்று செய்தி வரலாம்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு மாங்குளத்தில் இராணுவம் நிற்கின்றது என்று செய்தி வரலாம்.. :)

இராணுவம் நிக்கிறதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்???

நாம் மக்களின் பிரச்சினைகள் பற்றியே கவலைப்படுகின்றோம்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயசிக்குறுய் உள்ளிட்ட படை நடவடிக்கைகள் வன்னியை நெருக்கியபோதும், பாரிய பொருளாதார மருத்துவ தடைகளிற்குள்ளும் நின்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தித்தும் விரக்தியடையாத மக்கள் தற்போது விரக்தியடைவார்கள் என்ற உங்கள் கவலை சற்று அதிகமானதுதான்.

சரி..

என்னைப் போல மற்றவர்கள் இருக்கப் போவதில்லை. அல்லது நானொரு பயந்தாங்கொள்ளியாக இருக்கலாம். எதுவானாலும் ஜெயசிக்குறு காலத்து நெருக்கடியும் பாரிய மருந்து பொருளாதார நடவடிக்கைகளும் தான் என்னை வன்னியை விட்டு துரத்தின. என்னளவில் இரு உண்மை. எனக்கு மட்டுமல்ல.. தாயகத்தை விட்டு வெளியேறிய எல்லோருக்கும் ஏன்.. மின்னல் உங்களுக்கும் ஏதோ ஒரு நெருக்கடிதான் நாட்டை விட்டு துரத்தியது. அது இராணுவ நெருக்கடியாக பொருளாதார நெருக்கடியாக அரசியல் நெருக்கடியாக எதுவாயும் இருக்கலாம்.

இத்தகைய நெருக்கடிகளை சந்திக்கும் மக்கள் மத்தியில் என்னைப் போல அல்லது மின்னல் உங்களைப் போல நெருக்கடிக்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற எவரேனும் இருந்தால்.. அது அவர்களை விரக்திக்கு தள்ளாதா?

துணுக்காயிலோ மல்லாவியிலோ உள்ள எவரேனும்.. தனக்கும் காவடியைப் போல மின்னலைப் போல தூங்கி உயிரோடு எழுந்து இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா..? அப்படி இருக்கும் எத்தனை பேரால்.. நாட்டை விட்டு ஓடித்தப்பும் பொருளாதார வளம் அமையப் பெற்றிருக்கிறார்கள்.? அவ்வாறில்லாதவர்களுக்கு அவர்களின் இடத்திலேயே.. அமைதியான வாழ்வு எப்போது ?

அங்கிருக்கும் மக்களுக்களும் எம்மைப் போலத்தான். காவடியைப் போலத்தான்.. மின்னலைப் போலத்தான்.. நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் மனவிருப்பும் வேணவாவும் உள்ளவர்கள்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால்.. இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்தவர்களும்.. கொஞ்ச நாட்களில்.. ம்.. நெருக்கடிகளில் முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் ஈழம் கிடைக்கும். என எழுத தொடங்குவது தான்

ஜெயசிக்குறுய் உள்ளிட்ட படை நடவடிக்கைகள் வன்னியை நெருக்கியபோதும், பாரிய பொருளாதார மருத்துவ தடைகளிற்குள்ளும் நின்று பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தித்தும் விரக்தியடையாத மக்கள்

உங்களை முதற்தடவை முகில்களுக்கிடையில் முட்டி வெளியே தள்ளும் போது உங்களுக்கு தோன்றும் உணர்விற்கும் முப்பதாவது தடவை வெளியே இழுத்தெறியும் போது தோன்றும் உணர்விற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது. இத்தகைய மனச்சோர்வு ஏற்படுவதையே சிறிலங்கா இராணுவ இயந்திரமும் விரும்புகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஙரழவந யெஅநஸ்ரீ'காவடி' னயவநஸ்ரீ'துரட 18 2008இ 08:06 Pஆ' pழளவஸ்ரீ'429552'ஸ

இதில் பெரும் சோகம் என்னவென்றால்.. இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்தவர்களும்.. கொஞ்ச நாட்களில்.. ம்.. நெருக்கடிகளில் முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் ஈழம் கிடைக்கும். என எழுத தொடங்குவது தான்

அவர்கள் இங்கு வந்தபின்தான் இங்குள்ள பிரச்சினைகள் புரிகின்றன????

அப்பொழுது அதேமேல் என்பதாக முடிவெடுக்கின்றனர்......

இல்லையா???

நாம் மக்களின் பிரச்சினைகள் பற்றியே கவலைப்படுகின்றோம்???

இடம்பெயர்ந்து போற மக்களிற்கான உதவிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் இதர உள்ளுர் தொண்டு அமைப்புக்களுமே வழங்கி வருகின்றன. எனவே அந்த மக்களைப் பற்றிக் கவலைப் படுகிற நீங்கள் அமைப்புக்களிற்கு கொஞ்சம் கொடை வழங்கினால் சில மக்களின் அடிப்படை வசதிகளை அவரகள் மேற்கொள்ள வசதியாக இருக்கும். அந்த அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெற்ற தேவையற்ற விரக்திகள் மக்களின் மனதில் தோன்றாதல்லவா?

அதுதான் வேண்டும்

இராணுவ நிலைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்தி

இந்த முடிவுக்கு நாமெல்லோரும் வரவேண்டும்

அதுதான் என்வேண்டுகோள்.....

இராணுவம் நிக்கிறதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்???

ஏன் இராணுவம் கிளிநொச்சியில் நின்றால் கூட என்ன செய்வது அது எமது தலமையின் இராணுவ யுக்தியும், அரசியல் பிரச்சனையால் அதாவது புலத்தில் வாழும் நாம் விட்ட தவறின் வெளிப்பாட்டால் கூட தலமை பின்வாங்கலாம்.. எமக்கு அதல்ல பிரச்சனை அங்கு வன்னியில் உள்ளவர்களுடன் கதைதால் ஏற்படும் ஒரு மனிதநேய ஏக்கமே எம்மை இப்படி எழுத வைக்கின்றது...

ஓரே வழி தமிழ்ர் போராட்டத்தை உலகம் அங்கீகரிக்க ஏதாவது ஆக்கபூர்வமான செயற்பாடுகளை தமிழ் புத்தியீவிகள் வெளிப்படையாகாவோ,, அல்லது இரகசியமாகவோ உலக அரசுகளின் தலைவர்களுக்கு புரியவைப்பது மட்டுமே தற்போது தேவை......

அதுதான் வேண்டும்

இராணுவ நிலைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்தி

இந்த முடிவுக்கு நாமெல்லோரும் வரவேண்டும்

அதுதான் என்வேண்டுகோள்.....

ஏன் எல்லோரும் வரவேண்டுமென்று காத்திருக்கிறீர்கள். மற்றவர்கள் வரும்போது வரட்டம். தெளிவு பெற்ற நீங்கள் இப்போதே உங்களின் பங்களிப்புக்களைச் செய்து மக்களின் துயர் துடைக்க வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எல்லோரும் வரவேண்டுமென்று காத்திருக்கிறீர்கள். மற்றவர்கள் வரும்போது வரட்டம். தெளிவு பெற்ற நீங்கள் இப்போதே உங்களின் பங்களிப்புக்களைச் செய்து மக்களின் துயர் துடைக்க வேண்டாமா?

இதற்கு பிரான்சிலிருந்து என்னால் பதில்தர முடியாது

நீங்கள் ........ஆளாக இருந்தால் தெரிந்துகொள்வீர்???

ஆனால் இதில் எழுதுபவர்களில் எத்தனை கை விரிகிறது???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்திற்கு வெளியே இருக்கிற நம்மவர்கள்தான் எதிரியைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் களத்தில் உள்ளவர்களிற்கு எதிரியின் பலம், பலவீனம் என்ன என்பதெல்லாம் நன்கு தெரியும்.

அண்ணே நானும் இப்படியானவர்களைத் தான் "எம்மவர்கள்" என்ற பதத்தினுள் குறிப்பிட்டேன். தவறுதலிற்கு மன்னிக்கவும்.

அதற்குரிய காலத்தை களத்தில் நின்று போராடுபவர்கள் தேர்ந்தெடுத்து சரியாகச் செய்வார்கள்.

இதில் எந்த சந்தேகமும் இல்லை, செய்து முடிப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே போனா ஆமிக்காரன் ஓமந்தைச் சாவடியை மாங்குளத்தில வைச்சிட்டு நிப்பான் போலக் கிடக்குது. அகலக் கால் வைக்க அனுமதிக்கிறது.. பிறகு பின்னால அடியெடுத்து வைக்காத நிலைக்கு ஆகிட்டால் என்ன செய்யுறது.. என்றதைப் பற்றியும் யோசிக்கத்தானே வேணும்..! கருணா அம்மானுக்கு ரெம்பப் புளுகா இருக்கும்.. உதுகளைக் கேட்கிற போது..! என்ன செய்வம் இப்ப அநியாயத்துக்குத்தான் காலம்..! :):)

இதை கேட்டு இரத்தம் கொதிக்கிறவை ஒரு 100 பவுன்ஸ்சையோ இல்லை 100 யூரோவையோ எடுத்து கொதிக்கும் நேரம் எல்லாம் தமிழீழ வைப்பகத்துக்கு அனுப்பி வையுங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவிலாறில தொடங்க ஒரு இரவுக்குள்ள மூதூரில போய் நின்ற புலி.. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மதிச்சு... அப்ப பின் வாங்கினதில இருந்து.. இப்ப வரைக்கும் ஏன் தான் இப்படிப் பதுங்குதோ தெரியல்ல. புலிக்கு பக்க பலமா இருக்கிறதை சரியாச் செய்தால் அது சரியாப் பாயும் என்று நினைச்சால் சரி. :)

சரி..

என்னைப் போல மற்றவர்கள் இருக்கப் போவதில்லை. அல்லது நானொரு பயந்தாங்கொள்ளியாக இருக்கலாம். எதுவானாலும் ஜெயசிக்குறு காலத்து நெருக்கடியும் பாரிய மருந்து பொருளாதார நடவடிக்கைகளும் தான் என்னை வன்னியை விட்டு துரத்தின. என்னளவில் இரு உண்மை. எனக்கு மட்டுமல்ல.. தாயகத்தை விட்டு வெளியேறிய எல்லோருக்கும் ஏன்.. மின்னல் உங்களுக்கும் ஏதோ ஒரு நெருக்கடிதான் நாட்டை விட்டு துரத்தியது. அது இராணுவ நெருக்கடியாக பொருளாதார நெருக்கடியாக அரசியல் நெருக்கடியாக எதுவாயும் இருக்கலாம்.

இத்தகைய நெருக்கடிகளை சந்திக்கும் மக்கள் மத்தியில் என்னைப் போல அல்லது மின்னல் உங்களைப் போல நெருக்கடிக்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற எவரேனும் இருந்தால்.. அது அவர்களை விரக்திக்கு தள்ளாதா?

துணுக்காயிலோ மல்லாவியிலோ உள்ள எவரேனும்.. தனக்கும் காவடியைப் போல மின்னலைப் போல தூங்கி உயிரோடு எழுந்து இயல்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்காதா..? அப்படி இருக்கும் எத்தனை பேரால்.. நாட்டை விட்டு ஓடித்தப்பும் பொருளாதார வளம் அமையப் பெற்றிருக்கிறார்கள்.? அவ்வாறில்லாதவர்களுக்கு அவர்களின் இடத்திலேயே.. அமைதியான வாழ்வு எப்போது ?

அங்கிருக்கும் மக்களுக்களும் எம்மைப் போலத்தான். காவடியைப் போலத்தான்.. மின்னலைப் போலத்தான்.. நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் மனவிருப்பும் வேணவாவும் உள்ளவர்கள்.

இதில் பெரும் சோகம் என்னவென்றால்.. இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்தவர்களும்.. கொஞ்ச நாட்களில்.. ம்.. நெருக்கடிகளில் முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் ஈழம் கிடைக்கும். என எழுத தொடங்குவது தான்

அண்ணை போர்க்காலத்தில் வெறுமனே இடம்பெயர்வு மட்டும்தான் மக்கள் பாதிக்கப்படுவதில்லை. பொருளாதார மருத்துவத்தடை, எறிகணை வீச்சு, வான் வழித்தாக்குதல் இப்படிப் பல. மல்லாவியிலிருக்கிற மக்கள் தற்போது எறிகணை வீச்சினால் துன்பப்படுகிறார்கள் இடம்பெயர்கிறார்கள். ஆனால் எதிரியின் எறிகணை வீச்சிற்கு அப்பாலிருக்கும் புதுக்குடியிருப்பு மக்கள் நாளுக்கு நாள் வான்வழித் தாக்குதலுக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயகத்தின் ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்கிற்கு ஒவ்வொருவிதமான நெருக்கடி. இந்த நெருக்கடிகளால் மக்கள்

மின்னலைப் போன்றோ அல்லது காவடியைப் போன்றோ மக்களிற்கான அமைதியான இயல்பு வாழ்வு கிடைக்க வேண்டும். எந்தவித நெருக்குவாரங்களுமன்று நிரந்தரமாக மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களிற்கான நிரந்தர அமைதியான இயல்பு வாழ்வு போராட்டதின் வெற்றியின் பின்னரேயே முழுமை பெறும்.

எனவே அந்த வெற்றிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த வெற்றிகான தந்திரோபாயத்திற்காக எதிரியை சற்று மக்களின் நிலத்தில் பரவ அனுமதிக்கிறார்கள். அவர்களே அந்தப் பகுதிகளிலிருந்து பாதிக்கப்படப்போகும் மக்களின் துயரையும் சுமக்கப்போகிறவர்கள். அந்த மக்களை விரக்தியடையாமல் அவர்கள் தமது கடமைகளைச் செய்வார்கள். உறுதியாக அவர்கள் மக்களின் இயல்புவாழ்வை பெற்றுக்கொடுப்பார்கள். எனவே நான் அவர்களிற்கு அவர்களின் பொறுப்புக்கள் குறித்து அறிவரைகள் சொல்லத்தேவையில்லை.

இதில் பெரும் சோகம் என்னவென்றால்.. இவ்வாறான நெருக்கடிகளில் இருந்து உயிர்தப்பி வெளிநாடுகளுக்கு வந்தவர்களும்.. கொஞ்ச நாட்களில்.. ம்.. நெருக்கடிகளில் முகம் கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் ஈழம் கிடைக்கும். என எழுத தொடங்குவது தான்

இடம்பெயர்வுகளால் ஏற்படும் துன்பங்கள் துயரங்களை மின்னல் நன்கு அறியும். படையினர் முன்னேற முன்னேற யாழ். குடா நாட்டுக்குள் மட்டும் ஆறிற்கும் மேற்பட்ட இடங்களில் இடம்பெயர்ந்து வசித்திருக்கிறோம். பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டோம். ஏன் ஒருசில நாட்கள் உணவே இன்றி பட்டினி கிடந்திருக்கிறோம். ஆனால் இந்தக் துயரங்களை அறியாமல் கொஞ்ச நாளைக்கு மக்கள் பொறுக்க வேண்டும் ஈழம் கிடைக்கும் என்று மின்னல் எப்போதும் சொன்னதில்லை.

ஆனாலும் இப்போது சொல்கிறேன். நிரந்தர விடிவுகிடைக்கும்வரை தாயகத்தில் உள்ள மக்கள் இப்படியான நெருக்கடிகளைப் பொறுத்துத்தான் போகவேண்டும். அதைத்தவிர வேறு தெரிவு எதுவும் இல்லை. மக்கள் இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட உங்களிடம் நல்ல தெரிவிருந்தால் சொல்லுங்களேன்.

சரி எங்களின் இந்தக் கருத்து பெரும் சோகம் என்றால், புலத்தில் இருந்து கொண்டு மக்களிற்காக கவலை கொள்பவர்கள், களத்தில் மக்களின் துயரையும் தாங்கி நிற்றும் புலிகளிற்கு மக்கள் இடம்பெயர்வுகளால் விரக்தியடையப் போகிறார்கள் எண்டு அறிவுரை கூறுவதை என்னவென்று சொல்ல?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை கேட்டு இரத்தம் கொதிக்கிறவை ஒரு 100 பவுன்ஸ்சையோ இல்லை 100 யூரோவையோ எடுத்து கொதிக்கும் நேரம் எல்லாம் தமிழீழ வைப்பகத்துக்கு அனுப்பி வையுங்கள்....

வைப்பகத்தில் கடனாக பணம் எடுத்து உதவி புரிந்தவர்கள் இங்கு பலர், ஆனால் பெரும் பணவசதி இருந்தும், தாயகத்திற்காக உதவ முன்வராதவர்கள் எத்தனை பேரோ?

  • கருத்துக்கள உறவுகள்

வைப்பகத்தில் கடனாக பணம் எடுத்து உதவி புரிந்தவர்கள் இங்கு பலர், ஆனால் பெரும் பணவசதி இருந்தும், தாயகத்திற்காக உதவ முன்வராதவர்கள் எத்தனை பேரோ?

அள்ளிக்கொடுக்காவிட்டாலும்

கிள்ளிக்கொடுங்கள்போதும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட உங்களிடம் நல்ல தெரிவிருந்தால் சொல்லுங்களேன்.

நல்லது.

இயல்பு வாழ்வு அங்கே திரும்பும் வரை.. அங்குள்ள அனைவரும் மின்னலைப் போல காவடியைப் போல வெளிநாடுகளுக்குத் தப்பி வந்து விடலாம். அல்லது வரவைத்து விடலாம்.

... நெருக்கடியை பொறுத்துதான் ஆக வேண்டுமா?.. அப்ப ஏன் மின்னலாம் அங்கே பொறுத்துப் போக முடியாமல் போனது? காவடியால் முடியாமல் போனது? இங்கு கருத்தெழுதும் எவராலும் முடியாமல் போனது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அள்ளிக்கொடுக்காவிட்டாலும்

கிள்ளிக்கொடுங்கள்போதும்.....

எனது கருத்தை நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லை போலுள்ளது.

ஆமா எல்லாரும் சாப்பிட்டீங்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா எல்லாரும் சாப்பிட்டீங்களா ?

:):)

நல்லது.

இயல்பு வாழ்வு அங்கே திரும்பும் வரை.. அங்குள்ள அனைவரும் மின்னலைப் போல காவடியைப் போல வெளிநாடுகளுக்குத் தப்பி வந்து விடலாம். அல்லது வரவைத்து விடலாம்.

... நெருக்கடியை பொறுத்துதான் ஆக வேண்டுமா?.. அப்ப ஏன் மின்னலாம் அங்கே பொறுத்துப் போக முடியாமல் போனது? காவடியால் முடியாமல் போனது? இங்கு கருத்தெழுதும் எவராலும் முடியாமல் போனது?

இப்படிக் குதர்க்கமாகப் பேசாதீர்கள்.

சண்டை நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது இடம்பெயர்வதைத் தவிர வேறு வழியில்லை. இதைத் தடுக்க மின்னலாலோ அல்லது காவடியாலோ முடியாததது. விரும்பியோ விரும்பாமலோ அந்த துயரத்தை மக்கள் சுமந்துதான் ஆகவேண்டும். நாம் சொகுசாக இருந்து கொண்டு மக்களைக் துயரப்படுங்கள் என்று சொல்லவில்லை. துயரப்படுபவர்கள் போராட்டத்தின் மீது சலிப்படைந்து விடுவார்கள் என்ற உங்களின் கருத்தை தவறென்றும் இது பற்றி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற உங்களின் அறிவுரையும் கூடாதென்றுமே தெரிவித்தேன்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்

அண்னே மின்னல் அண்னே....நாங்க யாருக்கும் உபதேசம் செய்யேல்லன்னே...ஜஸ்ட் ஒரு ஆதங்கம் அம்புட்டு தான்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னே மின்னல் அண்னே....நாங்க யாருக்கும் உபதேசம் செய்யேல்லன்னே...ஜஸ்ட் ஒரு ஆதங்கம் அம்புட்டு தான்....

சுண்டல், நெடுக்ஸ் உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் மனவேதனையும் புரிகிறது. நிச்சயம் நல்லதொரு பதிலடி கிடைக்கும் என்பதில் எனக்கு அசையா நம்பிக்கை இருக்கிறது. அமைதியாக இருங்கள்.

இடைக்காலத்தில் நீங்களும் சோர்வடைந்து மக்களையும் சோர்வடைய வைக்காதீர்கள். நமது யுத்தம் தர்ம யுத்தம், தர்மத்தின் வாழுவுதனை சூது கவ்வும்....மறுபடியும் தர்மம வெல்லும்.

இதே யாழில் நாம் வெற்றிக்களிப்பில் குதூகலிக்கப் போகும் நாட்க்கள் எமக்காக காத்துகிடக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.