Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்மைக்கும் வயதுண்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20060828014559_body203.jpg

பொதுவாகவே குழந்தைகளை பெறும் விடயத்தில் பெண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் குறையும் என்பது மருத்துவ உலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை, வயதான காலத்தில் கூட அவர்களால் தந்தையாக முடியும் அதாவது, ஆண்களின் வயதுக்கும் அவர்களின் தந்தையாகக் கூடிய தன்மைக்கும் நேரடி தொடர்பில்லை என்றே இதுவரை பரவலாக கருதப்பட்டு வந்தது.

ஆனால் அந்த கருத்து தவறு என்று சமீபத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் பன்னிரெண்டாயிரம் தம்பதிகளிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், பெண்களைப்போலவே ஆண்களுக்கும் 35 முதல் 40 வயதாகும் போது, அவர்களின் இனப்பெருக்க ஆற்றல் கணிசமாக குறைவதாக தெரியவந்திருக்கிறது.

ஆண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் விந்தணுக்களின் மரபணுவில் ஏற்படும் பாதிப்புகள், கருமுட்டையை சினைப்படுத்தும் விந்தணுவின் ஆற்றலை பாதிப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனப்பெருக்க விடயத்தில், பெண்களைப்போலவே ஆண்களின் வயதும் ஒரு முக்கிய காரணி என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நன்றி குருவி :icon_mrgreen:

http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குருவி :icon_mrgreen:

நெடுக்கண்ணை அங்க எழுதிட்டு இங்க அதைக் கொப்பி பண்ணுறதுக்குள்ள நீங்கள் முந்திரிக்கொட்டை மாதிரி இங்க போட்டுட்டியள்..! இப்ப நெடுக்கண்ணை வந்து உங்களை... vahidrkjk2.gif

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு தானே ஏதோ நயாகரா எண்டு குளிசையள் விக்குதாம் , அது போட்டாலும் சரிவராதோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் பெண்களே கூடின வயசிலதான் திருமணமே செய்யினம்.

ஆண்களுக்கு இனப்பெருக்கும் ஆற்றல் குறைகிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் பெண்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குப் (45 - 55) பிறகு சுயமா இனப்பெருக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.

அதுமட்டுமன்றி இந்த ஒப்பீடு ஒரு வகையில் தவறானது. காரணம்.. வயதான பெண்களுக்கு கருத்தரிப்பதில் மட்டும் அல்ல பிரச்சனை.. பிரசவம் கூடப் பிரச்சனை.. தான்...! ஆனால் ஒரு 80 வயது ஆணால் கருத்தரிக்கச் செய்யக் கூடிய தன்மை இருக்கும்..! அது 20 வயது ஆணுக்கு இல்லாத அளவில் இருந்தாலும் கூட இருக்கும்..! ஆனால் பெண்ணுக்கு அப்படி இருக்காது..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு தானே ஏதோ நயாகரா எண்டு குளிசையள் விக்குதாம் , அது போட்டாலும் சரிவராதோ ?

வயகரா.. வளமான விந்தணுவை உற்பத்தி செய்ய அல்ல பாவிப்பது.

அது பாலுறுப்பின் செயற்பாட்டை ஊக்குவிக்க பாவிக்கிறது. சில ஆண்களுக்கு மன அழுத்தம்.. குருதி அழுத்தம்.. நீரிழிவு.. மது அருந்துதல்.. புகைப்பிடித்தல்.. போன்ற காரணங்களால் அல்லது ஏதேனும் நோய்த்தாக்கம் அல்லது பிறப்புரிமைக் குறைபாடுகள் ஏற்பட்டால் ஆணுறுப்பு சரிவர தொழிற்பட முடியாத நிலை தோன்றலாம். அவர்களுக்கே அவர்களின் உடல்நிலையை பரிசோதித்து வயகரா எடுக்க உடல் ஒத்துழைக்கும் என்றால் மட்டும் அதனைப் பாவிக்க அனுமதி அளிப்பார்கள்..! :lol::icon_mrgreen:

ஆனால் இப்போ எல்லாம் உடலுறவு கொள்ளாமலே ஆய்வுசாலை முறையில் (IVF) தந்தையின் விந்தையும் தாயின் முட்டையையும் கருக்கட்ட வைத்து தாயின் கருப்பையில் வளர்க்கின்றனர். இதனால்.. வயதான பெண்களாலும் கூட குழந்தை பெற முடிகிறது. இதன் படிதான் அண்மையில் 70 வயதுப் பாட்டியார் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். அதுமட்டுமன்றி இப்போ ஓமோன் சிகிச்சை மூலம் பெண்களின் மாதவிடாய் நிற்கும் வயதைக் கூட செயற்கையாகத் தள்ளி வைக்க முடியும்..!

அதுமட்டுமன்றி வளமான விந்தணுவை, முட்டையை பிறப்பிக்கக் கூடிய ஆற்றல் இப்போ எல்லா வயதினர் மத்தியிலும் ஒரு வீழ்ச்சியைக் காட்டி நிற்கிறது. அதற்குக் காரணம் நாம் வாழும் சூழலில் உள்ள மாசுக்கள். நம் உணவுப் பழக்கங்கள். இருப்பினும் ஐ வி எவ் முறையில் மில்லியன் கணக்கான விந்துகள் தேவையில்லை ஒரு முட்டையைக் கருக்கட்ட. ஒரு சில விந்துகள் போதுமானது. எனவே 90 வயதுப் பாட்டா கூட எதிர்காலத்தில் தந்தை ஆகலாம். அதில் சிரமம் இருக்காது.

இந்த ஆய்வுகள் ஒருவகையில், IVF முறையை பிரபல்யப்படுத்த.. அதை வியாபாரமாகச் செய்பவர்களால் அவர்களுக்கு வருமானத்துக்கு என்றும் செய்யப்பட்டு அறிக்கைகளில் விடப்படுவதும் உண்டும். இன்றைய அறிவியல் உலகமே வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கிறது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா இதெல்லாம் ஒரு பிரச்சனையா இப்ப. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் மலட்டுத்தன்மை போக்க கைகொடுக்குது சுண்டெலி

Posted by தமிழ்க்குமரன்

சுவா பாலோ: பிரேசில் நாட்டில் உள்ள கெர்க்கிஸ் ஆராய்ச்சி மையத் தில் உள்ள நிபுணர்கள் ஆண் மலட்டுத் தன்மை போக்குவது குறித்து ஆராய்ச்சி மேற் கொண்டனர். சுண்டெலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர். ஆய்வு அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது: சுண்டெலிகளின் பற்களின் இடையே உள்ள சதைப்பகுதியில் இருந்து முதலில் திசுக்களை எடுத் தோம். எலிகளை பொறுத்தவரை, பற்களில் இந்த பகுதியில் தான் அதிக அளவு ஸ்டெம் செல் கிடைக்கிறது. அந்த வகையில், எங்களின் அடுத்த முயற்சியாக , சுண் டெலியின் பல் பகுதியில் இருந்து ஸ்டெம் செல் எடுத்து, அதை ஆண் எலியின் இன விருத்தி உறுப்பில் செலுத்தினோம். இப்படி செலுத்திய பின், அந்த சுண் டெலியை கண்காணித் தோம். அதில் இருந்து விந்து வை அது உற்பத்தி செய்தது. ஆண்களின் விந்துக்கு ஈடாக இவற்றின் விந்து இருக்கிறது. எலிகளுக்கு உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதிக அளவு ஸ்டெம் செல் பரவி இருக்கிறது. இதயம் முதல் மூளை தசைகள் வரை எங்கும் ஸ்டெம் செல் எடுக்க முடியும். இந்த விந்தை பயன்படுத்தி, கருமுட்டையை உருவாக்க முடியும் என்பதையும் பரிசோதனையில் இருந்து கண்டுபிடித்துள்ளோம். மனிதர்களுக்கும் இதை செலுத்தி செயற்கை கருவூட்டலுக்கு வழி செய்வது பற்றி ஆராய்ந்து வருகிறோம். எலியின் கருப்பையில் இருந்தே விந்தை கருமுட்டையாக மாற்றி, வாடகைத்தாயின் கருவில் பொருத்தவும் முடியும். அதற்கும் ஆய்வு செய்து வருகிறோம்.ஆண் மலட்டுத் தன்மையை போக்க மேற்கொள்ளும் ஆராய்ச்சிகளில் முதன் முறையாக சுண்டெலிகளும் இதற்கு உதவும் என்பது இப்போது தான் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு நிபுணர்கள் கூறினர்.

நன்றி தினமலர்

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.. இனிமல் யாழ்களத்தில கனபேர் எலிக்கறிக்கு ஓடுப்பட்டுத் திரியப்போயினம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.. இனிமல் யாழ்களத்தில கனபேர் எலிக்கறிக்கு ஓடுப்பட்டுத் திரியப்போயினம்..! :lol:

எலிக்கறி எப்படி வைப்பது ? என்று என் நண்பர் கேட்கின்றார் .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எலிக்கறி எப்படி வைப்பது ? என்று என் நண்பர் கேட்கின்றார் .

சிறித்தம்பி சும்மா பகிடி விடாமல் எனக்கெண்டு நேரடியாய் கேக்க வேண்டியது தானே? :lol:

எங்கடை சனத்துக்கு உப்பும் தூளும் கொஞ்ச பச்சைமிளகாய் இரண்டு கருவேப்பிலை இருந்தால் காணுந்தானே :unsure:

இதுக்குப்போய் ஆரையும் சாட்டி கேள்வி கேட்டுக்கொண்டு :o

கடவுளே எண்டு எனக்கு இன்னும் எலி இறைச்சியிலை கைவைக்கவேண்டிய அவசியம் வரேல்லை :(

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி சும்மா பகிடி விடாமல் எனக்கெண்டு நேரடியாய் கேக்க வேண்டியது தானே? :wub:

எங்கடை சனத்துக்கு உப்பும் தூளும் கொஞ்ச பச்சைமிளகாய் இரண்டு கருவேப்பிலை இருந்தால் காணுந்தானே :o

இதுக்குப்போய் ஆரையும் சாட்டி கேள்வி கேட்டுக்கொண்டு :o

கடவுளே எண்டு எனக்கு இன்னும் எலி இறைச்சியிலை கைவைக்கவேண்டிய அவசியம் வரேல்லை :D

நீங்கள் யாருக்கு எலிக்கறி கண்டுபிடித்து விட்டீர்கள் குமாரசாமியண்ணை , :lol:

இதை பிரட்டல் கறியாக வைப்பதா , குழம்பு கறியாக வைப்பதா ? :(

நீங்கள் இன்னும் எலி இறைச்சியிலை கை வைக்கேல்லை எண்டதை எப்படி நாங்கள் நம்புறது ? :lol::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாருக்கு எலிக்கறி கண்டுபிடித்து விட்டீர்கள் குமாரசாமியண்ணை , :o

இதை பிரட்டல் கறியாக வைப்பதா , குழம்பு கறியாக வைப்பதா ? :o

நீங்கள் இன்னும் எலி இறைச்சியிலை கை வைக்கேல்லை எண்டதை எப்படி நாங்கள் நம்புறது ? :lol::lol:

தமிழ்சிறி..

அப்பவே கறுப்புக்கண்ணாடி போடத் துவங்கியிருந்தால் இப்பவும் கோழிக்கறியோடயே இருந்திருப்பியள்..! :o

ஓ..அப்படியே..எனகொரு சந்தேகம்.. :lol: (ஒருத்தரும் ஏச மாட்டியள் தானே??)..அதாவது..எப்படி தொடங்குவோம் விசயத்தை..சரி நேராகவே கேட்கிறன்.. :o

அது என்னவெண்டா..ஆண்மைக்கு வயசு வந்து..து..வேலை செய்தா தானோ..சும்மா இருந்தா..??..அது அப்படியே இருக்குமோ.. :o (எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது)..நிசமா சந்தேகம் தான்..யாரும் தெரிந்தா சொல்லுங்கோவன் ஏசாம.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையில எதையும் காணாதவரைக்கும் வாழ்க்கை இனிக்கும்".. :o

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எலிக்கறி எப்படி வைப்பது ? என்று என் நண்பர் கேட்கின்றார் .

இங்க போய் பாரூங்க

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14260

ஓ..அப்படியே..எனகொரு சந்தேகம்.. :huh: (ஒருத்தரும் ஏச மாட்டியள் தானே??)..அதாவது..எப்படி தொடங்குவோம் விசயத்தை..சரி நேராகவே கேட்கிறன்.. :wub:

அது என்னவெண்டா..ஆண்மைக்கு வயசு வந்து..து..வேலை செய்தா தானோ..சும்மா இருந்தா..??..அது அப்படியே இருக்குமோ.. :lol: (எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறது விளங்குது)..நிசமா சந்தேகம் தான்..யாரும் தெரிந்தா சொல்லுங்கோவன் ஏசாம.. :huh:

ஜம்மு..... இது எல்லாம் ரொம்ப அதிகம் சொல்லிட்டன். ரெயினில போகேக்க நாலு (ஒண்டில்ல நாலு.... ஜம்மு சந்தோசமா....) தேவதைகளை பார்த்தியளா கனவை கண்டியளா எண்டு இருக்கணும் பாருங்கோ. :o:lol::lol:

ஜம்மு..... இது எல்லாம் ரொம்ப அதிகம் சொல்லிட்டன். ரெயினில போகேக்க நாலு (ஒண்டில்ல நாலு.... ஜம்மு சந்தோசமா....) தேவதைகளை பார்த்தியளா கனவை கண்டியளா எண்டு இருக்கணும் பாருங்கோ. :lol::lol::lol:

ஏன்..ன்..ன்..என்ன..ன அதிகம் செல்லம்..(ஏதாச்சும் தப்பா சொல்லிட்டமோ..??)..வழமையா நால தானே பார்க்கிறது பிறகென்ன..பார்த்து...பார்த்து அலுத்து போச்சு..(கனவிலையும் தான்).. :lol:

அது தான்..எனி..யாரையும் காதலிப்போமா எண்டு யோசிக்கிறன் :lol: ..அதை போய் தப்பா நினைத்து கொண்டு..என்ன வேலையை தொடங்கட்டே..(அது தான் காதலிக்கிற வேலையை).. :)

அப்ப நான் வரட்டா!!

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மேலே தரப்பட்ட தகவலுக்கான பிரதான கட்டுரை. உண்மையில் இது ஒரு கருத்துக்கணிப்பே அன்றி அறிவியல் ஆய்வின் முடிவல்ல. அதுமட்டுமன்றி.. வெறும் வயது மட்டும் தானா இதற்கான காரணி என்பதும்.. தெளிவில்லாததாக இருக்கிறது.

பெண்களுக்கு 30 வயதுக்கு மேலே குழந்தை பெறத் தகவு குறைகிறது என்றால்.. அதிலும் 35 வயதை எட்டும் பெண்களுக்கு கருத்தரிக்கும் இயல்பு பாரிய அளவு குறைவடைகிறது என்றால்... அப்போ அவர்களை 16 வயதில் எல்லோ திருமணம் செய்து வைக்க வேண்டும்..! ஆனால்.. சட்டம்.. வாழ்க்கைமுறை.. சமூகக் கட்டமைப்புக்கள் அவற்றுக்கு இடமளிக்குமா..??! :o

It seems that men do not have much time left to have a baby as their biological clock starts ticking in their mid 30s. Scientists found that chances of successful pregnancy drops significantly if a man is over 35 years old and are much lower if he is over 40 years old.

The findings of the French study of 12,200 couples undergoing fertility treatment was presented at the European Society of Human Reproduction and Embryology conference. It says that paternal influence becomes even more important than earlier thought.

The researchers at the Eylau Centre for Assisted Reproduction in France studied couples having artificial insemination as a treatment for infertility between January 2002 and December 2006.

During this procedure called intrauterine inseminations (IUI) the man's sperm is placed into female's uterus during ovulation. IUI treatment is considered to be less invasive in comparison to IVF( in vitro fertilization) method. It is also often used for women without a partner, having no fertility problems to produce children using a sperm donor.

The team analyzed the quantity and motility of the sperm, as well as other characteristics such as the size and the shape of the sperm. The researchers also recorded the number of pregnancies, miscarriages and birth resulting from the fertility treatment. They examined the detailed data on the pregnancies to isolate paternal and maternal factors.

The study showed that the rate of miscarriage increased if the man was in his late 30's. The chances of successful pregnancy decreased even more if a father was over 40 year old.

As expected, women over 35 year old had more difficulties in getting pregnant and higher rates of miscarriage than younger ones, but the paternal factor was strong too. If a father was over 40 years old the risk of miscarriage increased up to 35 percent, while for a man younger than 30 the risk is estimated between 10 to 15 percent, Yves Menezo, one of the researchers said.

Previous studies showed that sperm count and quality declines as a man ages, but until now there was little evidence that the age of a man plays such an important role on fertility.

The researchers think that the reproductive decline is caused by DNA damage in sperm. The samples of the sperm taken from men over 40 showed more defects that might resulted in miscarriage, researchers said.

"Until now, gynecologists only focused on maternal age, and the message was to get pregnant before the age of 35 or 38 because afterwards it would be difficult," Dr Stephanie Belloc, who presented the work at the conference in Barcelona, said. "But now the gynecologists must also focus on paternal age and give this information to the couple."

She said that couples seeking fertility treatment must be offered IVF method to increase their chances of a successful pregnancy. During this process, an egg is fertilized outside the woman's womb, in a lab dish, where the outer membrane of the egg may prevent sperm with DNA decay from fertilization. Couples may also use ICSI method where an egg is fertilized by the best sperm selected for this purpose.

http://health.infoniac.com/men-mid-30s-too...-be-father.html

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.