Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு வைத்தியசாலை மீது படையினர் எறிகணை வீச்சு: ஒரு வயது குழந்தை பலி, 16 பேர் காயம்

Featured Replies

முல்லைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் செறிவான எறிகணை வீச்சை மேற்கொண்டனர். இதன்போது பச்சிளம் குழந்தை ஒன்று உடல்சிதறி பலியாகியுள்ளது.

முல்லை அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் பல்குழல் வெடிகணை செலுத்திகள் மற்றும் ஆட்டிலறிப் பீரங்கிகள் மூலம் செறிவான எறிகணை வீச்சை மேற்கொண்டனர். இதன்போது பச்சிளம் குழந்தை ஒன்று உடல்சிதறி பலியாகியுள்ளது.

முல்லை அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

படையினர் முல்லை நகரை நெருங்கி விட்டனரா..??! படையினர் வசம் உள்ள ஆட்லறிகள் மற்றும் பல்குழல் வெடிகணை செலுத்திகளின் வீச்செல்லை.. 20 தொடங்கி 40 கிலோமீற்றர்கள்..! ஏன் முல்லை நகர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்..??! அவர்கள் அதனை நெருங்கி விட்டதாலா..??!

ஆனால் இராணுவம் தனது இணையத்தளச் செய்தியில்.. சண்டை இன்னும் ஆண்டாங்குளம்.. ஜானகபுர.. மற்றும் கிரிபன்வெவ பகுதிகளை ஒட்டி நடப்பதாகவே செய்தி வெளியிட்டிருக்கிறதே..??! :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலோன் தியேட்டரில் சண்டை நடப்பதாக எழுதப்பட்டிருந்தது. ஓயாத அலைகள் 3 மூலம் கைப்பற்றப்பட்ட சிலோன் தியேட்டரில் முன்பு இராணுவம் இருந்தபோது முல்லைத்தீவு வரைக்கும் செல் வந்து விழும். இராணுவம் ஒரு பகுதியூடாக மட்டும் தான் முன்னேறியிருக்கின்றது. மற்றய எல்லைக்கோட்டினை முல்லைமண்ணில் தாண்டவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கல்விளான் பகுதியில் தான் சண்டை என்று இராணுவம் சொல்கிறது. :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புலிகளின்குரல் வானொலியில்தான் இச் செய்தி சொல்லப்பட்டது.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின்குரல் வானொலியில்தான் இச் செய்தி சொல்லப்பட்டது.

நானும் கேட்டேன். ஆனால் இராணுவ இணையத்தளம் எதுவும் படையினர் முன்னேற்றம் பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல் முயற்சி முறியடிப்பு என்றுதான் செய்து வெளியிட்டுள்ளன. அதுவும் 7ம் திகதிச் செய்தி. தாக்குதல்கள்.. கஜபாபுர.. கிரிபன்வெவ பகுதியில் நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

அப்போ எங்கிருந்து இராணுவம்.. இந்த செல்வீச்சுக்களைச் செய்தது. செல்வீச்செல்லைக்குள் முல்லை நகர் வந்துவிட்டதா..??! எப்போதிருந்து...??! என்பது.. இன்னும் தெளிவற்றே இருக்கிறது..! :(:icon_idea:

  • தொடங்கியவர்

கல்விளான் பகுதியில் தான் சண்டை என்று இராணுவம் சொல்கிறது. :icon_idea::(

அண்ணை கல்விளான் துணுக்காய்க்கு மேற்கேற்கேயல்லவா இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கல்விளான் துணுக்காய்க்கு மேற்கேற்கேயல்லவா இருக்கிறது.

அதுவும் முல்லைத்தீவு மாவட்டம் தான். முல்லையின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் தற்போது இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

கிழக்கே.. கஜபாபுர.. கிரிபன்வெவ.. ஆண்டாங்குளம்.. பகுதிகளிலும் மேற்கே.. கல்விளான்.. வவுனிக்குளம்.. துணுக்காய்.. மல்லாவி பகுதிகளை ஒட்டியும்.. தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளாங்குளத்துக்கு வடக்கே நகர்ந்துள்ளன.

நான் நினைக்கிறேன் இராணுவம் சமீபத்தில் பெற்ற நீண்ட தூர வீச்செல்லையுள்ள.. வெடிகணை செலுத்திகளைப் பயன்படுத்தி முல்லை நகரைத் தாக்கி இருக்கக் கூடும். அவற்றின் வீச்செல்லை.. 20 - 40 கிலோமீற்றர்கள் என்று செய்திகளில் படித்த ஞாபகம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்கண்ணை சிறிலங்கா படையினர் ஜனகபுரவிற்கு வடக்காக 9கி.மீட்டர்கள் தொலைவில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைக் கைப்பற்றியதாக சில நாட்களிற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தனர். பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் வெளியிடப்பட்ட வரைபடத்தில் குறித்த முகாம் நாயாற்று ஏரியின் தென்புற எல்லைக்கு சமாந்தரமாக மேற்காக காட்டப்பட்டிருந்தது. எனவே அங்கிருந்து பார்த்தால் முல்லை நகர் 25 கிலோ மீட்டர்களிற்குள்தான் வரவேண்டும்.

ஆனால் படையினர் இதுவரை பயன்படுத்திய பல்குழல் வெடிகணை செலுத்திகள் 20 கிலோ மீட்டர்களிற்கு அண்ணளவான வீச்செல்லையையே கொண்டிருந்தன. நீங்கள் கூறுவது போன்று அதிக தூரவீச்சு கொண்ட வெடிகணை செலுத்திகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

முல்லைத்தீவு வைத்தியசாலை மீது படையினர் எறிகணை வீச்சு: ஒரு வயது குழந்தை பலி, 16 பேர் காயம்

[வெள்ளிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2008, 11:28 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]

முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்று நள்ளிரவு சிறிலங்கா படையனர் ஏவிய எறிகணைகள் வீழந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை பலியாகியுள்ளது. முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் வைததியசாலை பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை, அரச அதிபர் இல்லம், வைத்தியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளிவில் சிறிலங்கா படையினர் கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் வைத்தியசாலையிலிருந்த ஒரு வயது குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்தது. முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி. எமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி திருமதி. ரேணுகா உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையை அண்டிய நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம், குமரபுரம் மற்றும் தண்ணீரூற்று ஆகிய பிரதேசங்களிலும் நேற்றிரவு தொடரச்சியான எறிகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

முல்லைத்தீவின் கரையோர பகுதிகளை நோக்கி நேற்றும் நேற்றுமுன்தினமும் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத்தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

புதினம்

பொதுமக்கள் இனி இடம் பெயர இடம் இல்லை!

வன்னியில் தொடர்ந்து இருக்கும் மக்கள் அனைவரும் புலிகள் என்ற வாதத்தை அரசாங்கம் கொண்டுள்ளதால் தயக்கமின்றி தாக்குதல்களை நடத்தும்!

முர்க்கமான மூளப்போகும் போரில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் சிக்கி பாரிய அழிவு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்காக, போரில் ஈடுபடும் இலங்கை அரசாங்கம், மற்றும் புலிகள் ஆகிய இருதரப்பினருக்கும் பொது அமைப்புகள், மற்றும் சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடு;க்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் இனி இடம் பெயர இடம் இல்லை!

வன்னியில் தொடர்ந்து இருக்கும் மக்கள் அனைவரும் புலிகள் என்ற வாதத்தை அரசாங்கம் கொண்டுள்ளதால் தயக்கமின்றி தாக்குதல்களை நடத்தும்!

முர்க்கமான மூளப்போகும் போரில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் சிக்கி பாரிய அழிவு ஏற்படுவதில் இருந்து பாதுகாக்காக, போரில் ஈடுபடும் இலங்கை அரசாங்கம், மற்றும் புலிகள் ஆகிய இருதரப்பினருக்கும் பொது அமைப்புகள், மற்றும் சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடு;க்க வேண்டும்!

அப்ப நீங்கள்.. சரத் ஐயா சொன்னது போல.. மக்கள்.. தடைகளை உடைச்சுக் கொண்டு வவுனியாவுக்கு போய் இராணுவத்தின் பாதுகாப்பில இருக்கிறதுதான் புத்திசாலித்தனம் என்று சொல்லவாறியளோ..!

இதையே நீங்கள் புலிகள் வவுனியாவையோ.. யாழ் குடாவையோ தாக்கும் போது மக்களை பாதுகாக்க ஒரு வழி சொன்னால் உபயோகமா இருக்கும்..! :unsure:

இல்ல வன்னில இவ்வளவு நாளும் விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை தாக்கேக்க.. வராத கரிசணை.. முல்லைத்தீவு மீது.. எறிகணை விழுந்த உடன ஏன் வருகுது என்றதுக்குப் பின்னால பல விடயங்கள் தொக்கு நிற்கத்தானே செய்யும்.

மக்களுக்கு இடம்பெயர இடமில்லை என்று எதை வைச்சுச் சொல்லுறீங்க..! வன்னில.. மாங்குளம்.. முல்லைத்தீவு.. கொக்கிளாய்.. கிளிநொச்சி.. ஆனையிறவு..பூநகரி.. என்றெல்லாம் இராணுவ முகாம்கள் இருந்து.. அதில இருந்து செல்லடிக்கேக்கையும்.. மக்கள் வாழ்ந்து போராட்டத்தில பங்களிச்சுத்தானே இன்றைக்கு இந்த நிலைக்கு வந்தவை. அவைக்கு...??? எங்க போய் இருக்கனும் என்றது..???! தெரியாமல் தான்...???! :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நகர் மற்றும் சுற்றயல் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று சிறீலங்காப் படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தமது படைகள் Nithkaykulam எனும் இடத்தில் முல்லைத்தீவு நகரில் இருந்து 15 கிலோமீற்றர்கள் தொலைவில் நிற்பதாகவும்.. தங்கள் படையினரிடம் அங்கிருந்து முல்லைத்தீவு நகரை தாக்கக் கூடிய வீச்சுல்ல ஆட்லறிகளோ.. வெடிகணை செலுத்திகளோ இல்லையாம்.

புத்தபெருமான் தமிழ் மக்கள் மீது கோபம் கொண்டு அதிகாலையில் ஆகாயம் வழி தாக்கி இருக்கக் கூடுமாம்.

--------

Army denies Mullaitivu shelling

The military denied LTTE allegation that artillery shells fired by the army had fallen inside the Mullaitivu hospital and the Government Agent's (GA) residence injuring several civilians including the GA Ms Emelda Sukumar.

As of today troops of the 59 Division were deployed in Nithkaykulam, about 15 km, south of Mullaitivu center and have in no way directed any artillery fire towards Mullaitivu or its suburbs, Military Spokesman Brigadier Udaya Nanayakkara told the Daily Mirror.

டெயிலிமிரர்.

--------------------

08_08_08_mul_06.jpg

காயமடைந்த முல்லைத்தீவு அரச அதிபர்.

08_08_08_mul_01_70854_445.jpg

சேதமடைந்த மருத்துவமனைக் கட்டிடம்.

08_08_08_mul_10.jpg

வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிகணையின் மூலப் பகுதி.

08_08_08_mul_05.jpg

காயமடைந்த சிறுமி. (சிறீலங்காவின் பார்வையில் குட்டிப் புலி)

tamilnet.com

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=26568

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நித்திகைகுளத்திற்கு ஆட்டியைக் கொண்டுவந்து அடிக்கிறாங்கள் போலிருக்கிறது.. ஆட்டிலறி விழமுடியாத இடங்கள் இனிமேல் வன்னியில் இருக்குமோ தெரியாது..

ஒலிம்பிக்ஸ் இல சனமும் ஊடகங்களும் பிசியா இருப்பினம் எண்டு ஜோர்ஜியா தொடங்கினமாதிரி உவங்களும் ஏதாலும் தொடங்கினாங்களோ? :(

அடுத்துவரும் 15...16 நாட்களுக்கு ஊடகங்களிற்கு இடத்தையும் நேரத்தை நிரப்பிக் கொள்ள தேவை செய்திகள் பீஜிங்கில இருந்தும் ஜோர்ஜியாவில இருந்தும் வரும். சர்வதேச அமைப்புகளும் தலைவர்களும் ஜோர்ஜியாவில பிசியா இருப்பினம். சனத்தை பாதிக்கிற மனித அவலங்களை உருவாக்கிற விடையங்களை அரங்கேற்றிறதுக்கு வசதியான காலமாக சிங்களம் பாக்கும்.

நித்திகைகுளத்திற்கு ஆட்டியைக் கொண்டுவந்து அடிக்கிறாங்கள் போலிருக்கிறது.. ஆட்டிலறி விழமுடியாத இடங்கள் இனிமேல் வன்னியில் இருக்குமோ தெரியாது..

நித்திகை குளம் ஆமியின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது...??? :(

முந்திரிகை குளத்தில் இருந்து அடிக்கப்படும் ஆட்டிக்கள் குமுழமுனை தண்ணீர் ஊற்றுக்கு வழமையாக வந்து விழும்... அந்த வளி தாக்குதல் நடத்தும் சாத்தியம் குறைவு....!!

ஆனால் கொக்குதொடுவாய் இராணுவ முகாமில் இருந்து 24 KM க்கும் குறைவான தூரத்தில்தான் முல்லைத்தீவு நகர் இருக்கிறது...!!

மேல எழுதப்பட்டவை உங்கள் ஆய்வுகளள அல்லது தொகுப்புக்களா?

மேல எழுதப்பட்டவை உங்கள் ஆய்வுகளள அல்லது தொகுப்புக்களா?

நினைவுகள்... :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் படும் துன்பங்கள் எண்ணிலடங்காதவை அதை மேற்குலகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதானே இருக்கு என்ன பிரயோசனமான நடவடிக்கை எடுத்தார்கள்? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசு பின்வரும் வழிகளைப் பாவிக்க முனைகின்றது. சில நாட்களாக மல்லாவி, வெள்ளங்குளம் களமுனைகள் கடுமையான இறுக்கத்தை அடைந்திருந்தன. இராணுவம் மேலும் முன்னேற முடியாமல், பிடித்த சில இடங்களில் இருந்து வெளியேற வேண்டியும் ஏற்பட்டது. எனவே புலிகளின் கவனத்தைத் திருப்புவதற்காக மணலாறுக் களமுனையைத் திறந்துள்ளது. ஏதோ ஒரு வகையில் புலிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதன் மூலம், எந்தவித போர்த்திட்டங்களும் புலிகள் செய்யக்கூடாது என்பதே சிறிலங்கா அரசின் திட்டம்.

இதன் மூலம் புலிகளை அலைக்கழிக்க வைத்து, மனவுளைச்சலை ஏற்படுத்தலாம் என யோசிக்கின்றது. ஆனால் சிறிலங்கா அரசின் சிந்தனைகளுக்கு ஏற்றவகையில் புலிகள் போர் புரிந்தால் தான் அந்த நிலை. புலிகளின் செயற்திட்டங்களுக்கு ஏற்றமாதிரிச் சிங்கள அரசு ஆடும் காலம் வரும். அப்போது சிங்கள அரசு தோற்றுப் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக்ஸ் இல சனமும் ஊடகங்களும் பிசியா இருப்பினம் எண்டு ஜோர்ஜியா தொடங்கினமாதிரி உவங்களும் ஏதாலும் தொடங்கினாங்களோ? :lol:

அடுத்துவரும் 15...16 நாட்களுக்கு ஊடகங்களிற்கு இடத்தையும் நேரத்தை நிரப்பிக் கொள்ள தேவை செய்திகள் பீஜிங்கில இருந்தும் ஜோர்ஜியாவில இருந்தும் வரும். சர்வதேச அமைப்புகளும் தலைவர்களும் ஜோர்ஜியாவில பிசியா இருப்பினம். சனத்தை பாதிக்கிற மனித அவலங்களை உருவாக்கிற விடையங்களை அரங்கேற்றிறதுக்கு வசதியான காலமாக சிங்களம் பாக்கும்.

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் குறுக்ஸ் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.