Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோர்ஜியாவில் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_40364227_south_ossetia_map203.gif

முன்னாள் சோவியத் குடியரசான ஜோர்ஜியாவில் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான South Ossetia வின் தலைநகரை (Tskhinvali) நோக்கி அமெரிக்கா பக்கம் சாய நினைக்கும் ஜோர்ஜிய அரசு ஆட்லறிகள்.. பல்குழல் வெடிகணைகள், விமானங்கள் மற்றும் தாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியபடி இன்று நள்ளிரவில் இருந்து முன்னேறி வருகிறது.

South Ossetia இல் உள்ள போராளிகளுக்கு ரஷ்சியா நேரடியாக உதவி வருவதுடன்.. ஜோர்ஜியாவை அமெரிக்கா தனது நேட்டோ உறுப்புக்குள் இணைத்துக் கொள்வதன் மூலம் ரஷ்சியாவை பலவீனப்படுத்த எண்ணி இருப்பதால்.. ஜோர்ஜியாவின் இத்தாக்குதலுக்கு அது பச்சைக் கொடி காட்டியுள்ளது.

தென் Ossetia பிரதான ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து செல்ல விரும்புகிறது என்பதும்.. அதற்காக அங்கு போராளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போராளிகளுக்கு ரஷ்சியா ஆதரவளிப்பதால் அமெரிக்கா கொசவோ போன்று அதற்கு சுதந்திரமளிக்க மறுக்கிறது. மாறாக அப்போராளிகளை அடக்கி ஜோர்ஜிய அரசை தனது கைக்குள் போட்டுக் கொண்டு பிராந்தியத்தில் ரஷ்சியாவை நெருங்கி தனது இராணுவ திட்டங்களை நகர்த்த அமெரிக்கா முனைகிறது.

இதற்கிடையே சர்சைக்குரிய பகுதியில் ரஷ்சிய அமைதிகாப்புப் படையினர் நிலை கொண்டிருப்பதுடன் சண்டை ஆரம்பிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னர் தான் ஜோர்ஜிய அரசும் போராளிகளும் ரஷ்சியாவின் மேற்பார்வையின் கீழ் போர் நிறுத்த சமரசத்துக்கு உடன்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அச்சமரசத்திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்துக் கொண்ட ஜோர்ஜிய அரசு.. போராளிகளின் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பான அரசு நடப்பதாகக் கூறி படை எடுப்பை செய்கிறது. அதற்கு அமெரிக்காவும் நேட்டோவும் மெளனமாக இருந்து ஆதவளித்து வருகின்றன.

இதுவரை நடந்த சண்டைகளில், வெடிகணை, ஆட்லறி மற்றும் விமானத்தாக்குதல்களில் பொதுமக்கள் உள்ளடங்க 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

_44902885_2rocketsafp226.jpg

ஜோர்ஜிய பல்குழல் வெடிகணை செலுத்தியில் இருந்து பறக்கும் வெடிகணை. ஜோர்ஜியா போன்ற முன்னாள் சோவியத் அரசுகளே..ஐரோப்பிய ஒன்றிய விதிகளையும் மீறி சிறீலங்கா போன்ற நாடுகளுக்கு இவ்வாறான ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதான செய்தி:

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7548715.stm

Edited by nedukkalapoovan

  • Replies 55
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜியப் படைகள் போராளிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது கண்மூடித்தனமாக வெடிகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தும் காணொளி இங்கு.

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7546639.stm

அமெரிக்கா.. நேட்டோ போன்றவை.. சிறீலங்கா போன்ற அரசுகளுக்கு இவ்வாறான முன்னாள் சோவியத்.. இன்னாள் நேட்டோ சார்பு நாடுகளூடு ஆயுத சப்பிளை செய்து வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் ஜோர்ஜியா South Ossetia பகுதி மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 10 ரஷ்சிய அமைதிகாப்புப் படையினரும்.. 15 பொதுமக்களும் உயிரிழந்துள்ள நிலையில் ரஷ்சியா சுமார் 150 ராங்கிகளுடன் மேலதிக துருப்புக்களை South Ossetia பகுதிக்கு அனுப்பி உள்ளதுடன்.. ரஷ்சிய போர் விமானங்கள் ஜோர்ஜியாவின் தலைநகரில் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை வெளியிட்டிருப்பதுடன் அனைத்துத் தரப்பும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அறிவித்திருக்கிறது.

இதற்கிடையே ரஷ்சியா மேலதிக படையினரை South Ossetia பகுதிக்குள் அனுப்பி ஜோர்ஜியப்படைகள் மீது தாக்குதல் நடத்தினால் அது நாடுகளுக்கிடையேயான யுத்தமாக வெடிக்கும் ஆபத்து இருப்பதாக ஜோர்ஜியா எச்சரித்திருக்கிறது..!

ரஷ்சியாவோ South Ossetia பகுதியில் உள்ள ரஷ்சிய மக்களைப் பாதுகாக்க தனது துருப்புக்களை நகர்த்தி வருவதாகக் கூறியுள்ளது..!

காணொளிகள் இங்கு இணைப்பில்: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7548715.stm

Edited by nedukkalapoovan

இந்தியாவும் தங்கள் விசுவாசிகளை காப்பாற்ற இலங்கைக்கு படைகளை அனுப்புவார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிந்திக் கிடைத்த தகவலின் படி ஜோர்ஜியாவின் கண்மூடித்தனமான வெடிகணை மற்றும் விமானத்தாக்குதல்களில் South Ossetia தலைநகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜோர்ஜியாவில் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் பிரிந்து சென்ற South Ossetia பகுதிப் போராளிகள் அறிவித்துள்ளனர். :D:(

Edited by nedukkalapoovan

பிந்திக் கிடைத்த தகவலின் படி ஜோர்ஜியாவின் கண்மூடித்தனமான வெடிகணை மற்றும் விமானத்தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜோர்ஜியாவில் இருந்து அதிகாரபூர்வமற்ற வகையில் பிரிந்து சென்ற South Ossetia பகுதிப் போராளிகள் அறிவித்துள்ளனர். :D:(

போராளிகள் சொல்வதை யார் நம்புவார்கள்?

இதை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் சொல்வதை யார் நம்புவார்கள்?

இதை பற்றி இலங்கை அரசு என்ன சொல்கிறது?

அண்மையில் சிறீலங்காப் பிரதமர்.. தமக்கு ஐரோப்பிய நாடுகள் தேவையான ஆயுதங்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதில் ஜோர்ஜியாவும் அடங்கும். ஜோர்ஜியா அடிப்படையில் ரஷ்சிய ஆயுதங்களையே பாவித்து வருகிறது..! அது முன்னாள் ரஷ்சியக் குடியரசாகும்.

இந்த மோதலைத் தூண்டி விட்டதே அமெரிக்க தலைமையிலான நேட்டோ தான்..! :D:(

அண்மையில் சிறீலங்காப் பிரதமர்.. தமக்கு ஐரோப்பிய நாடுகள் தேவையான ஆயுதங்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதில் ஜோர்ஜியாவும் அடங்கும். ஜோர்ஜியா அடிப்படையில் ரஷ்சிய ஆயுதங்களையே பாவித்து வருகிறது..! அது முன்னாள் ரஷ்சியக் குடியரசாகும்.

இந்த மோதலைத் தூண்டி விட்டதே அமெரிக்க தலைமையிலான நேட்டோ தான்..! :D:(

இதை எங்களுக்கு சாதகமாக ஏதும் செய்ய கூடியதாக இருக்கோ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்களுக்கு சாதகமாக ஏதும் செய்ய கூடியதாக இருக்கோ :D

ஜோர்ஜியாவில் இருந்து South Ossetia பகுதி தன்னிச்சையாக 1990-92 காலப்பகுதியில் பிரிந்து சென்றுள்ளது. அங்கு வன்னி போல ஒரு நிர்வாக அலகும் போராளிகளால் நடத்தப்படுகிறது. ஆனால் உலகம் இன்னும் அதை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் ரஷ்சியா மறைமுகமாக அந்தப் போராளிகளுக்கு தனது பிராந்திய தேவை கருதி உதவி வருகிறது.

சிறீலங்காவும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளோடு கூட்டுச் சேரும் நிலை உறுதியாக உருவாகுமானால்.. மறைமுகமாக ஈழம் சிறீலங்காவில் இருந்து பிரிவதை இந்தியா அங்கீகரித்தே ஆக வேண்டும் என்ற நிலை தோன்றும்..! ஆனால்.. சிறீலங்கா மிகவும் தந்திரமாக தமிழர்களின் வளங்களை இந்தியாவுக்கு பிச்சுப் போட்டு.. காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலும்.. இந்தியா நிறைய நம்பிக்கையீனங்களோடே சிறீலங்காவை நோக்குகிறது. ஜோர்ஜியா கூட ரஷ்சியாவின் அரவணைப்பை வேண்டும் அதேவேளை நேட்டோவுடன் சேர்ந்து ரஷ்சியாவுக்கு சவாலாகவும் இருக்க விரும்புகிறது. அதன் மூலம் பிராந்தியத்தில் தனக்கென்று ஒரு வலுவான நிலையை உருவாக்க நினைக்கிறது. ஆனால் ரஷ்சியா அதைப் போராளிகளைக் கொண்டு தகர்த்து நேட்டோ ஜோர்ஜியாவூடு தன்னை நெருங்காமல் இருக்க முயற்சிக்கிறது. ஆனால் நேட்டோவோ ஜோர்ஜியாவை தூண்டிவிட்டு ரஷ்சியாவோடு மோதவிட்டு.. ஜோர்ஜியாவை ரஷ்சிய எல்லையில் பகைமை கொள்ள வைத்து தனது இராணுவ மற்றும் பொருளாதார (ரஷ்சியாவின் பிரதான எண்ணைய் விநியோகக் குழாய்கள் ஜோர்சியாவூடு செல்கின்றன) நலன்களைக் காக்கத்துடிக்கிறது..!

தெற்காசியாவிலும்.. இந்த நிலை இந்தியாவைப் பொறுத்து விரைந்து வளர்ந்து வருகிறது..! :(

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

_44906034_8a76b7de-16a0-43cc-9117-daf37eddc506.jpg

ஜோர்ஜியா தன் சொந்த மாகாணம் என்று கூறும் South Ossetia மீது ஒரே இரவில் தாக்குதல் நடத்தி சொந்த மக்கள் 1400 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றொழித்திருக்கிறது.

நேட்டோவின் தூண்டுதலில் ஜோர்ஜியா செய்த இப் போர் வெறியில் 10க்கும் மேற்பட்ட ரஷ்சிய அமைதிப்படையினர் கொல்லப்பட்டதை அடுத்து ரஷ்சியா South Ossetia பகுதியூடு படை நகர்த்தி ஜோர்ஜியப் படை இலக்குகளை தாக்கி வருகிறது.

South Ossetia பகுதியில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது ஜோர்ஜியா செய்த மனிதப் படுகொலையை அடுத்து ரஷ்சியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்சிய தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாம் நடந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைந்துள்ள அமெரிக்காவும் நேட்டாவும் , ரஷ்சியாவை தனிமைப்படுத்தி.. தம்மை மஸ்தியத்துக்கு அழைக்கக் கோரிக்கை விட்டுள்ளன. ஜோர்ஜி அதிபரும் ரஷ்சியாவைக் கண்டித்துக் கொண்டு நேட்டோவை சர்வதேச சமூகம் என்ற போர்வையின் கீழ் உதவிக்கு இழுக்கிறார்.

அமெரிக்க அதிபர் புஷ் அவர்களோ.. கொசவோ விவகாரத்தில் தான் எடுத்த நிலைப்பாட்டை மறந்து.. ரஷ்சியாவுக்கு நெருக்கடியை அதிகரிக்க.. இது ஜோர்ஜியா தனது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு நடத்தும் சண்டை என்று ஜோர்ஜியப் படுகொலைகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார்..!

மூலச் செய்தி: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7550354.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா அங்கு ஆயுத விற்பனைக்கு களம் தேடிவிட்டது போல் உள்ளது .

இன்னும் முன்னாள் சோவியத்குடியரசை எவ்வளவு பலவீனமாக்க போகின்றது .

இந்த விடயம் பக்கத்து நாட்டுக்காரருக்கும் பொருந்தும் .

ஆனால் அவர்கள் தான் பகலில் கனவு காண்பவர்களாச்சே ..........

_44906034_8a76b7de-16a0-43cc-9117-daf37eddc506.jpg

ஜோர்ஜியா தன் சொந்த மாகாணம் என்று கூறும் South Ossetia மீது ஒரே இரவில் தாக்குதல் நடத்தி சொந்த மக்கள் 1400 க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றொழித்திருக்கிறது.

நேட்டோவின் தூண்டுதலில் ஜோர்ஜியா செய்த இப் போர் வெறியில் 10க்கும் மேற்பட்ட ரஷ்சிய அமைதிப்படையினர் கொல்லப்பட்டதை அடுத்து ரஷ்சியா South Ossetia பகுதியூடு படை நகர்த்தி ஜோர்ஜியப் படை இலக்குகளை தாக்கி வருகிறது.

South Ossetia பகுதியில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது ஜோர்ஜியா செய்த மனிதப் படுகொலையை அடுத்து ரஷ்சியா இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்சிய தரப்புச் செய்திகள் கூறுகின்றன.

தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப எல்லாம் நடந்து வருவதை இட்டு மகிழ்ச்சியடைந்துள்ள அமெரிக்காவும் நேட்டாவும் , ரஷ்சியாவை தனிமைப்படுத்தி.. தம்மை மஸ்தியத்துக்கு அழைக்கக் கோரிக்கை விட்டுள்ளன. ஜோர்ஜி அதிபரும் ரஷ்சியாவைக் கண்டித்துக் கொண்டு நேட்டோவை சர்வதேச சமூகம் என்ற போர்வையின் கீழ் உதவிக்கு இழுக்கிறார்.

அமெரிக்க அதிபர் புஷ் அவர்களோ.. கொசவோ விவகாரத்தில் தான் எடுத்த நிலைப்பாட்டை மறந்து.. ரஷ்சியாவுக்கு நெருக்கடியை அதிகரிக்க.. இது ஜோர்ஜியா தனது தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு நடத்தும் சண்டை என்று ஜோர்ஜியப் படுகொலைகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார்..!

மூலச் செய்தி: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7550354.stm

ரஸ்யா அதிக கால அவகாசம் கொடுக்காமல் பெரும் அடி கொடுத்து அடிபனிய வைக்க வேண்டும் இல்லையேல் இத குள்ள நரி கூட்டங்கள் உள்ளே புகுந்து விடும்.....................

அமெரிக்கா அங்கு ஆயுத விற்பனைக்கு களம் தேடிவிட்டது போல் உள்ளது .

இன்னும் முன்னாள் சோவியத்குடியரசை எவ்வளவு பலவீனமாக்க போகின்றது .

இந்த விடயம் பக்கத்து நாட்டுக்காரருக்கும் பொருந்தும் .

ஆனால் அவர்கள் தான் பகலில் கனவு காண்பவர்களாச்சே ..........

பக்கத்து நாட்டை பற்றி சொல்லுவது என்றால் ஒரு வசனத்தில் சொல்லி விடலாம் ஆனனல் அங்கும் எங்கள் உறவுகள் இருக்கிறார்கள் அவர்களின் மனது புன்படகூடாது...

அமெரிக்கா அங்கு ஆயுத விற்பனைக்கு களம் தேடிவிட்டது போல் உள்ளது .

இன்னும் முன்னாள் சோவியத்குடியரசை எவ்வளவு பலவீனமாக்க போகின்றது .

இந்த விடயம் பக்கத்து நாட்டுக்காரருக்கும் பொருந்தும் .

ஆனால் அவர்கள் தான் பகலில் கனவு காண்பவர்களாச்சே ..........

இந்த போர் ரஸ்யாவை விட ஐரோப்பிய கூட்டமைப்புக்குதான் பலவீனமாகும்... ஐரோப்பாவுக்கான எரிவாயு வினியோகத்துக்கு அடி விழலாம்... எரிவாயுவின் விலை அதிகரிப்பும் பாதிப்பை கொண்டுவரும்...!!! காரணம் எரிவாயு வினியோகத்தின் அசைக்க முடியாத சக்தி ரஸ்யா...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தயா , எல்லா இடங்களிலும் மூக்கை நீட்டுவது தான் அமெரிக்காவின் கொள்கை .

அமெரிக்கா எங்கையாவது வீண் சண்டைக்கு போனாலும் ஐரோப்பா தானே பெரும்பாலான வரி கட்டுவது .

இதற்கு பெயர் தனிச்சண்டித்தனம் .

அதனை இந்த உலகம் தாங்காது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுத்தம் தொடர்ந்தால் ஜரோப்பா முழுவதும் என்ரை வீடு உட்பட எரிவாயு வினயோகம் இல்லாமல் போகும் ஏனெனில் என்ரை வீடு வரைக்கும்(நான் இருக்கும் மாநிலம் வரை )இரஸ்ய எரிவாயுக்குளாய்களில் இருந்துதான் எரி வாயு வருகின்றது.ஆனாலும் .விழுந்துவரும் டொலர் பெறுமதியை தக்கவைக்கவும் ஜரோப்பிய கூட்டை உடைத்து கிழக்கு ஜரோப்பிய நாடுகளை தன்வசம் இழுக்கவும் மீண்டும் மெல்ல எழும் சோவியத்தின் பலத்தை தடுக்கவும் அமெரிக்கா என்னவிலையையாவது கொடுக்கவேண்டிய நிலை. அதுக்கு தலையாட்ட ஜரோப்பாவில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் இத்தாலியும்.எந்த நேரமும் தயார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சாத்திரி ஜேர்மனியை மறந்து போனியள் :D இப்ப ஜேர்மனியும் அமெரிக்காவுக்கு குந்தியிருக்கிற பக்கத்தை கழுவிகொண்டுதானே இருக்கினம் :(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சாத்திரி ஜேர்மனியை மறந்து போனியள் :D இப்ப ஜேர்மனியும் அமெரிக்காவுக்கு குந்தியிருக்கிற பக்கத்தை கழுவிகொண்டுதானே இருக்கினம் :(

உண்மைதான் கு.சா .ஆனால் யெர்மனி எப்படியாவது தான் ஜ.நா சபையின் நிதந்தர உறுப்புரிமை பெறுவதற்கான எல்லா வழிவகைகளையும் முயற்சி செய்கிறது. அதன் ஒரு நிகழ்வுதான் சிறீலங்காவிற்கு எதிரான மனிதவுரிமை தீர்மானத்திற்கு ஜ.நா சபையில் சிறீலங்காவிற்காக ஆதரவாக வாக்களித்த சம்பவம். ஆனால் யெமனி மீண்டும் ஒரு காலத்தில் அதன் சாதக நிலைமைகளைப் பயன் படுத்தி தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டவே முயல்கிறது. ஆனால் ஸ்பெயின் . இத்தாலி இங்கிலாந்து என்பனவை அமெரிக்காவிடம் தங்களது இயலாமையையே காட்டி நிற்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

:( இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி ரஷ்ஷிய சண்டை விமானங்கள் ஜோர்ஜியாவிலுள்ள இரு விமானப்படை தளங்கள் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. இதில் பல யுத்த விமானங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும், சில ஜோர்ஜிய விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் ஜோர்ஜியா அறிவித்திருக்கிறது.

தனது எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்தவென ஜோர்ஜியா நடத்திவரும் தாக்குதல்களில் பெருமளவு பொதுமக்கள் இதுவரை பலியாகி இருக்கிறார்கள்.பிரிந்துபோன இந்தக் குடியரசின் தலைநகரிலிருந்து வரும் தகவல்களின்படி அங்கு துப்பாக்கிச் சன்னங்களோ அல்லது குண்டு வீச்சுத்தாக்குதலின் அடையாளங்களோ இல்லாத கட்டிடங்கள் ஒன்றையும் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. கொல்லப்பட்ட பொதுமக்கள் வீதிகளில் வாகனங்களிலும், கட்டிட இடிபாடுகளுக்கிடையிலும் அங்காங்கே சிதறிக்கிடப்பதாக செய்திகள் வருகின்றன.

இக்குடியரசில் உள்ள ரஷ்ஷிய வம்சாவளி மக்களைக் கப்பதற்காக ரஷ்ஷியா தனது யுத்தத் தாங்கிப் படைப்பிரிவொன்றை இக்குடியரசின் எல்லைக்குள் நகர்த்தியுள்ளது.இரு நாடுகளுக்கிடையிலும் முழுமையான யுத்தம் ஒன்று மூளும் படசத்தில் பெரும் அழிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்று அமெரிக்கா உற்பட மேற்குலகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த யுத்தம் தொடர்ந்தால் ஜரோப்பா முழுவதும் என்ரை வீடு உட்பட எரிவாயு வினயோகம் இல்லாமல் போகும் ஏனெனில் என்ரை வீடு வரைக்கும்(நான் இருக்கும் மாநிலம் வரை )இரஸ்ய எரிவாயுக்குளாய்களில் இருந்துதான் எரி வாயு வருகின்றது.ஆனாலும் .விழுந்துவரும் டொலர் பெறுமதியை தக்கவைக்கவும் ஜரோப்பிய கூட்டை உடைத்து கிழக்கு ஜரோப்பிய நாடுகளை தன்வசம் இழுக்கவும் மீண்டும் மெல்ல எழும் சோவியத்தின் பலத்தை தடுக்கவும் அமெரிக்கா என்னவிலையையாவது கொடுக்கவேண்டிய நிலை. அதுக்கு தலையாட்ட ஜரோப்பாவில் இங்கிலாந்தும் ஸ்பெயினும் இத்தாலியும்.எந்த நேரமும் தயார்.

எப்பிடி பாத்தாலும் எல்லாம் சமபலம்தான் சாத்து... வீற்றோ அதிகாரம் கொண்ட பிரான்ஸ், சீனா ரஸ்யா பக்கம்தான் சாயும் போல இருக்கிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நேட்டா உறுப்பு என்பதால்.. அமெரிக்காவுக்கு எதிராக இதில் செயற்படாது.

கொசவோ விவகாரத்தில் ரஷ்சியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து நேட்டோவை விமர்சித்த சிறீலங்கா இந்த விவகாரத்தில் ரஷ்சியா பிரிவினை கோரும் போராளிகளின் பக்கம் என்றவுடன்.. தனக்கு ஆயுத உதவி செய்யும் பிரிவினையை எதிர்க்கும் ஜோர்ஜியாவின் பக்கம் இணைந்து கொண்டுள்ளது.

சேர்பியாவில்.. கொசவோவைப் பிரித்து அல்பேனிய மக்களுக்கு உதவினார்கள்.. அமெரிக்க நேட்டோ காரர்கள்.. காரணம் சேர்பியா ரஷ்சிய ஆதரவு தேசம் என்பதால். இன்று இரு வேறு கலாசாரப் பண்பாடுகளைக் கொண்டிருக்கும் மக்களை ஜோர்ஜியாவுக்குள் அடக்க நினைக்கும் ஜோர்சியாவின் அடக்குமுறைக்கு நேட்டோ ஆதரவளிக்கிறது. ஏனென்றால்.. கருங்கடல் பிரதேசத்தில் ரஷ்சியாவின் ஆதிக்கத்தை தகர்ந்து எதிர்காலத்தில் ரஷ்சியாவை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நேட்டோவின் திட்டத்துக்கு ஜோர்ஜியாவின் பக்களிப்பு அவசியம் என்பதால்.

அமெரிக்க டொலருக்கு விலைபோன ஜோர்ஜியத் தலைவர்களுக்கும்.. மேற்குலக ஆடம்பர பொருளாதார முறைமைக்குள் மயங்கிக் கிடக்கும் ஜோர்ஜிய மக்களுக்கும் தமக்கு நேட்டோ உருவாக்கும் நெருக்கடியின் தார்ப்பரியம் விளங்க வாய்ப்பில்லை.

ஆனால் சிறீலங்கா மட்டும்.. என்னமா.. கோலமாறுது.. தனக்கு ஏற்ற மாதிரி.

இன்றைய சிறீலங்காவின் ஊடகங்கள்.. நேட்டோ உச்சரிப்பது போன்று ரஷ்சியா ஜோர்ஜியாவுக்குள் படையெடுப்பு என்றுதான் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆனால் அதுவல்ல உண்மை. ஏலவே அங்கு போராளிகளிற்கும் ஜோசியாவிற்கும் இடையில் உருவான அமைதி உடன்படிக்கைக்கு அமைய ரஷ்சியா தனது அமைதிப்படையை நிறுத்தி வைத்திருந்தது. அதை ஜோர்ஜிய அரச படைகள் தாக்கியதை அடுத்து தனது அமைதிப்படையின் பலத்தை அதிகரிக்க ரஷ்சியா முனைகிறது.

1987ல் இந்திய அமைதிப்படையை வரவழைத்த சிறீலங்கா.. அதனைப் போராளிகளோடு மோதவிட்டு குளிர்காய்ந்ததால்.. அதனை அமைதிப்படையாக இன்று வரை காட்டி வருகிறது. அதே படை போராளிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருப்பின்.. அது இந்திய ஆக்கிரமிப்புப் படையாக மாறி இருக்கும் சிறீலங்காவைப் பொறுத்தவரை. அதே நிலைதான்.. ஜோர்ஜியாவில்.. ரஷ்சியப்படை போராளிகளுக்கு ஆதரவாக உள்ளதால்.. ஜோர்ஜியா நேட்டோவின் விலைபேசலுக்கு விலை போனதால்.. ரஷ்சியா இவ்வாறு நடந்து கொள்கிறது.

அமெரிக்கா நேட்டோவூடு கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்சியாவின் பலத்தை முழுங்க அனுமதிப்பது.. முழு உலகுக்குமே ஆபத்தானதாக அமையும்..! :(

Edited by nedukkalapoovan

எங்கட ஆசிய வல்லரசு(?) இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆசிய வல்லரசு(?) இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

கொஞ்சம் பயமாகதான் இருக்கிறது

அமெரிக்கா பக்கம் சாய்வதா

அல்லது

ரஸ்யா பக்கம் சாய்வதா என்று

இத்தனை மக்களா?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆசிய வல்லரசு(?) இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

வேறையென்ன கவலையும் , அதிர்ச்சியும் தான் .

சில வேளை நடிகை ஜோர்ஜியாவிற்கு கடிதம் எழுதிப்போடுவினம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலவரப்படி..

_44906805_goriapartmentblockgrab226.jpg

ரஷ்சியா South Ossetia யத் தலைநகரில் இருந்து ஜோர்ஜியப்படைகளை விரட்டி அடித்து அதனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

ரஷ்சியப் போர் விமானங்கள் ஜோர்ஜிய முப்படை இலக்குகளையும் சரமாரியாக தாக்கி வருகிறது. சில இடங்களில் சிவிலியன் இலக்குகளும் தாக்கப்பட்டுள்ளன.

சண்டை தொடங்கியதில் இருந்து 15 ரஷ்சிய அமைதிப்படையினர் கொல்லப்பட்டும் 70 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

சுமார் 1600 South Ossetia மக்கள் ஜோர்ஜியாவின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ரஷ்சியாவின் இரண்டு போர் விமானங்களை ஜோர்ஜியா சுட்டு வீழ்த்தி ஒரு விமானப்படை வீரரை சிறை பிடித்துள்ளது.

South Ossetia போராளிகள் ஜோர்ஜியாவின் இரண்டு ஜெட் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் என்ன வேடிக்கை என்றால் ரஷ்சிய தயாரிப்பு விமானங்களை ரஷ்சிய ஏவுகணைகளே மாறி மாறி சுட்டு வீழ்த்துவதுதான்.

நேட்டோவுக்கோ மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இவை வந்து கொண்டிருப்பதால்.. ஐநா பாதுகாப்புச் சபை கடமைக்கு கூடிக் கூடி தீர்மானங்கள் ஏதும் எட்டாமல் கலைகிறது.

அமெரிக்கா ரஷ்சியப் படைகளை South Ossetia இல் இருந்து வெளியேற விடுத்த வேண்டுககோளை ஏற்க ரஷ்சியா மறுத்துவிட்டது.

செய்திக்கான மூலம்: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7550804.stm

--------

இந்தச் சண்டையால் ஈராக் மக்களுக்குத்தான் கொஞ்சம் நிம்மதி. காரணம்.. இச்சண்டைக்காக 2000 ஜோர்ஜிய கூலிப்படைகளை ஜோர்ஜியா ஈராக்கில் இருந்து வெளியே எடுக்க இருக்கிறது. ஜோர்ஜியா அமெரிக்காவுக்காக ஈராக்கில் படைகளை நிறுத்தி வைத்திருக்கிறது..!

--------

ஈழத்திலும் 2 வருடமா யுத்தம் நடக்குது ஆனால்.. இந்த உலக நாடுகளும்.. ஐநா பாதுகாப்புச் சபையும் ஒரு தடவை கூட கூடினது கிடையாது.மாறாக ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு தமிழர்களைக் கொல்ல சிறீலங்காவுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கின்றனர். தமிழர்களின் உயிர் என்றால் அது கால் தூசிக்கு சமன்..! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.