Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோர்ஜியாவில் சண்டை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்திலும் 2 வருடமா யுத்தம் நடக்குது ஆனால்.. இந்த உலக நாடுகளும்.. ஐநா பாதுகாப்புச் சபையும் ஒரு தடவை கூட கூடினது கிடையாது. தமிழர்களின் உயிர் என்றால் அது கால் தூசிக்கு சமன்..!

தமிழர்களை இந்த உலகம் மனிதர்களாக கருதவில்லையா ? :lol:

இதற்கு என்ன காரணம் இருக்கும் என்று நம்புகின்றீர்கள் நெடுக்ஸ் . :lol:

  • Replies 55
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை இந்த உலகம் மனிதர்களாக கருதவில்லையா ? :lol:

இதற்கு என்ன காரணம் இருக்கும் என்று நம்புகின்றீர்கள் நெடுக்ஸ் . :lol:

தமிழீழம் இன்னும் நேட்டோவுக்கோ.. ரஷ்சியாவுக்கோ.. இந்தியாவுக்கோ.. சீனாவுக்கோ பிரதானம் என்ற நிலை பிராந்தியத்தில் உறுதியாகவில்லை. அது உறுதியானால்.. எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு தமிழர்களைப் பாதுகாக்க ஓடி வருவினம். ஆனால் அதற்குள் சிங்களம் காலில கையில விழுந்து.. அவர்களை வசப்படுத்திப் போடும். தமிழர்களின் வளங்களை பிடிச்சுப் பிச்சையாப் போடுறன் என்று சொல்லி..!

தமிழர்களில் பெரும்பான்மையானோரில் இருக்கும் ஒற்றுமையற்ற சிந்தனையும்.. தேசப் பற்று அற்ற போக்கும் அவர்களுக்கு ஒரு பலவீனமே..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர் வரலாற்றில் இரத்ததுடன் கலந்து உள்ளது . இதற்கு எப்போது தான் முடிவு கிடைக்குமோ .................. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழர் வரலாற்றில் இரத்ததுடன் கலந்து உள்ளது . இதற்கு எப்போது தான் முடிவு கிடைக்குமோ .................. :lol:

இப்படி அங்கலாய்த்தால் முடிவு வராது.

ஒற்றுமைப்படக் கூடியவர்கள் தேசத்தின் நலனுக்காக தமிழீழத்தின் விடிவுக்காக.. உலகின் கண்களில் அதன் முக்கியத்துவம் தெரிய ஒற்றுமைப்பட்டு உழைக்க வேண்டும். எல்லோரும் 100% ஒற்றுமைப்படும் வரை காத்திருந்தால் விடிவு என்பது கிடைக்காது. ஒற்றுமையோடு உழைக்க முனையும் பெரும்பாலான கரங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். தொடர்ந்து அதைச் செய்ய வேண்டும். அப்போதுதான் போராடும் சக்திகளுக்கும் ஊக்கமும் உறசாகமும்.. சர்வதேசத்தில் அவர்களின் பெறுமதியும் அதிகரிக்கும்.

தமிழனின் பலத்தை தமிழன் தீர்மானிப்பது மிக முக்கியமானது. அதற்கு தேசப்பற்றும் ஒற்றுமையும் சுயநலம் எதிர்பார்பற்ற தொடர்சியான பங்களிப்புக்களே அவசியம். ரகசியம் காத்தலும் அவசியம்..! :lol:

Edited by nedukkalapoovan

ரஸ்யாவின் பார்வையில் ஜோர்ஜிய போர்....!!! RussiaToday Video

எங்கட சண்டையை விட இது நல்லா இருக்கு 2 நாளில செம அடி...

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் காதில் பாலை வார்க்க. :lol::lol:

ஜரோப்பிய ஓநாய்களும் அமெரிக்க நரிகளும் நடுநிலையாளராக செல்வதாக செய்தியில் பார்த்தேன்......

ஒசிற்றியா சுதந்திரம் கோரும் பகுதியில் ஜோர்ஜிய இராணுவத்தின் ஒரே கட்டுப்பாட்டு பகுதியான தஸ்கின்வல் (Tskhinvali) இல் மக்கள் மீதான வன்முறையை தடுக்கும் நடவடிக்கையில் ரஸ்ய படைகள் ஈடு பட்டு உள்ளதாக இரஸ்யா அறிவித்து செயற்படுகிறது... முழு ஒசீரியாவின் பகுதிகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாகத்தான் படுகிறது...!!

ஒலிம்பிக் நடக்கும் தறுவாயில் ஊடகங்களின் கருத்தை கவரா வண்ணம் ஒரு ஒடுக்கு முறை போரை ஒசீற்ரிய மக்கள் மீது திணித்த ஜோர்ஜியா வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் பிடித்து விட்டதாகத்தான் தெரிகிறது....!!

வல்லரசு போட்டியில் இன்னும் ஒரு நாடு சுந்தந்திரம் அடையும் சாத்தியங்கள் அதிகரித்து உள்ளன.... மகிழ்ச்சி..

Russian troops in Tskhinvali to help stop violence

RussiaToday

Edited by தயா

ஜோர்ஜியா வேலியில் போகும் ஓணானல் வேட்டிக்குள் பிடித்து விட்டதாகத்தான் தெரிகிறது....!!

வேட்டிக்குள்ள மட்டும் இல்லை அது இந்த அமெரிக்கா நரிகளை நம்பி தன் குண்டியை கொண்டு போய் ஆப்புக்கு மேலே வைத்து விட்டது பார்போம் அமெரிக்கா ஆப்பில் இருந்து எடுத்து விடுகிறதா இல்லை அடி வயிறு வரை போக விடுகிறதா என்று.

ரசியர்களும் நல்லவர்கள் இல்லை

என்ன அமெரிக்கா ஆதரவு நாடுக்கு ரஸ்யா தாக்குறது என்பது மனதிலா ஒரு சின்ன சந்தோசம் மட்டும் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: வல்லரசுகளின் உதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தும் நாடுகளுக்கு இது நல்ல உதாரணம். அமெரிக்க வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பாவிகள் மீது தனது காட்டு மிராண்டித்தனத்தைக் காட்ட நினைத்த ஜோர்ஜியா இன்று ரஷ்ஷியாவிடம் மூக்குடைபட்டு நிற்கிறது.

இவ்வளவுக்கும் காரணம், ஒசிடிஷியாவில் தனது வம்சாவளியினரான ரஷ்ஷியர்கள் இருப்பதால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ரஷ்ஷிய வல்லரசு நினைத்ததுதான். எங்களுக்கும் ஒரு வல்லரசு அயல் நாடு இருக்கிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் உறவுகள். ஆனால் அந்த வல்லரசோ எம்மை அழிக்கும் எதிரிக்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுக்கிறது.

ரஷ்ஷியா ஒரு வல்லரசுதான்..அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தியா...???புல்லரசு !!!!!!!!!!!

:lol: வல்லரசுகளின் உதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தும் நாடுகளுக்கு இது நல்ல உதாரணம். அமெரிக்க வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பாவிகள் மீது தனது காட்டு மிராண்டித்தனத்தைக் காட்ட நினைத்த ஜோர்ஜியா இன்று ரஷ்ஷியாவிடம் மூக்குடைபட்டு நிற்கிறது.

இவ்வளவுக்கும் காரணம், ஒசிடிஷியாவில் தனது வம்சாவளியினரான ரஷ்ஷியர்கள் இருப்பதால் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ரஷ்ஷிய வல்லரசு நினைத்ததுதான். எங்களுக்கும் ஒரு வல்லரசு அயல் நாடு இருக்கிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களின் உறவுகள். ஆனால் அந்த வல்லரசோ எம்மை அழிக்கும் எதிரிக்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுக்கிறது.

ரஷ்ஷியா ஒரு வல்லரசுதான்..அதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தியா...???புல்லரசு !!!!!!!!!!!

எங்கை இன்னும் பெரியாருக்கு சிலை வைக்கிற பிரச்ச்னையே தீர்க்க முடியவில்லை....

எங்கட தலைமையை இவர்கள் பாதுக்காத்து?

300க்கு மேற்ப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் பலி கொடுத்தும் கொலைக்கான பழியை புலிகள் மீது போட்டு விட்டு தப்பி விடுகிரார்கள் இவர்கள் எமக்காக கி கி..........

எங்கை இன்னும் பெரியாருக்கு சிலை வைக்கிற பிரச்ச்னையே தீர்க்க முடியவில்லை....

எங்கட தலைமையை இவர்கள் பாதுக்காத்து?

300க்கு மேற்ப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் பலி கொடுத்தும் கொலைக்கான பழியை புலிகள் மீது போட்டு விட்டு தப்பி விடுகிரார்கள் இவர்கள் எமக்காக கி கி..........

அது ஒரு புலனாய்வு நடவடிக்கை அண்ணை... இருக்கிற பெரிய பிரச்ச்சினைக்கு பக்கத்திலை அதைவிட பெரிசா ஒரு கேட்டை போட்டு திசை திருப்ப பாத்தவை....!!!

சுருக்கமாக சொன்னால் பிரபாகரன் எனும் மலைக்கு பக்கத்திலை கொஞ்சம் கொஞ்சமா மண் போட்டு இன்னும் ஒரு மலையை உருவாக்கும் முயற்ச்சி அது....!!!

தென் ஒசிற்றியாவில் இருந்து வலிந்த தாக்குதல் நடத்த வந்த ஜோர்ஜிய படைகள் பின்வாங்கி உள்ளன... அதை ஜோர்ஜிய அரச பேச்சாளர் இது எங்களது இராணுவ தோல்வி அல்ல , ஆனால் அப்பாவி மக்களின் உயிர்களையும் உடமைகளையும் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட பின்வாங்கல் எண்று அறிவித்தார்...! மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இரஸ்யா மேலும் 10 ,000 துருப்பினரை களம் இறக்கி உள்ளதாக அறிவிக்கப்படுகிறது...

ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கும் போது இது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே, ஜோர்ஜியா அரசு சொல்வது போல பழைய ரஸ்ய கூட்டரசை அமைக்கும் முயற்ச்சி என்பது புழுகு எண்று கண்டனம் தெரிவித்தார்...

ஆனாலும் ஜேர்வியாவின் கட்டுக்குள் இருக்கும் ஒஸ்ற்றியாவின் தஸ்கின்வல் (Tskhinvali) பிரதேசத்தின் மீது ரஸ்ய தற்போது படைகள் தாக்குதல் மேற்கொள்வதாக ஜோர்ஜியா அறிவித்து உள்ளது...!!!

(BBC ஆங்கில தொலைக்காட்ச்சியில் இருந்து பெற்ற தகவல்)

குறிப்பு படைபலத்தில் ஜேர்ஜிய ரஸ்ய நிலைமை..

ARMED FORCES COMPARED

GEORGIA

Total personnel: 26,900

Main battle tanks (T-72): 82

Armoured personnel carriers: 139

Combat aircraft (Su-25): Seven

Heavy artillery pieces (including Grad rocket launchers): 95

RUSSIA

Total personnel: 641,000

Main battle tanks (various): 6,717

Armoured personnel carriers: 6,388

Combat aircraft (various): 1,206

Heavy artillery pieces (various): 7,550

Source: Jane's Sentinel Country Risk Assessments

[url="http://news.bbc.co.uk/1/hi/world/europe/7552012.stm"]http://news.bbc.co.uk/1/hi/world/europe/7552012.stm/url]இலங்கை படைகளை விட 10 இலை 1 பங்கு கூட பலம் இல்லாத படைகளை கொண்டது ஜோர்ஜியா....!!!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ஜோர்ஜியா மீது ரஷ்ய விமானங்கள் தாக்குதல்

வீரகேசரி வாரவெளியீடு 8/10/2008 9:16:15 AM - ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்து சென்ற தெற்கு ஒஸ்ரியாவின் போராளிகளுக்கும் ஜோர்ஜிய படைகளுக்குமிடையிலான மோதல் தீவிர மடைந்த நிலையில் ஜோர்ஜியா மீது ரஷ்ய நேற்று கடும் விமான தாக்குதல்களை நடத்தி யுள்ளது. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கா னோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. அதேவேளை ரஷ்யாவின் 10 விமானங் களை தமது படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் 30 ரஷ்ய இராணுவ டாங்கிகளை அழித்ததாகவும் ஜோர்ஜியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்ஸில் அறிவித்துள்ளது. ஆனால் தனது இரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான ஜோர்ஜியாவிலிருந்து தெற்கு ஒஸிரியா மாகாணம் 1990களின் முற்பகுதியில் பிரிந்து சென்றது. சர்வதேச நாடுகள் பல இப்பிரிவினையை அங்கீகரிக்காத போதிலும் தெற்கு ஒஸிரியா ரஷ்யாவுக்கு நெருக்கமாக செயற்பட்டது. அங்குள்ள சுமார் 70000 மக்களும் ரஷ்ய கடவுச்சீட்டுகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தெற்கு ஒஸிரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு ஜோர்ஜியா தாக்குதலை மேற்கொண்டது. அதற்கு எதிராக ரஷ்யா ஜோர்ஜியாவின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. நூற்றுக்கணக்கான இராணுவ டாங்கிகள் சகிதம் படையினரை தெற்கு ஒஸிரியாவுக்குள் அனுப்பியதுடன் விமான தாக்குலையும் நடத்தியது.

ஜோர்ஜியாவின் தாக்குதலினால் சுமார் 1400பேர் கொல்லப்பட்டதாக தெற்கு ஒஸிரிய ஜனாபதி எடுவர்ட் கொகே தெரிவித்துள்ளார். 1500 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் வெளியுறவுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தெற்கு ஒஸிரியா தலைநகர் ஷ்கினவலியில் 2000 பொதுமக்களும் 13 ரஷ்ய ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக ஜோர்ஜியாவுக்கான ரஷ்ய தூதுவர் கெவலென்கோ நேற்று கூறியுள்ளார்.

இந்த எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியாதபோதிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வெளியேறியோர் தெரிவித்துள்ளனர். தெற்கு ஒஸிரியாவின் அருகிலுள்ள கோரி நகரின் இராணுவ நிலைகள் மீது ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. ஆனால் சில குண்டுகள் குடியிருப்பு பகுதிகள் மீதும் விழுந்து பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை ஜோர்ஜியாவிலிருந்து பிரிந்த மற்றொரு மாகாணமான அக்காஸியாவின் போராளிகளும் ஜோர்ஜிய படைகள் மீது தாக்குதலை வான் மற்றும் பீரங்கி தாக்குதலை நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளனர். ஜோர்ஜிய ஜனாதிபதி மிகைல் சாகாஷ்விலி தெற்கு ஒஸ்ரியா மாகாணத்தில் போர்நிறுத்த யோசனையை நேற்றுமுன்வைத்தார்

இதேவேளை ரஷ்ய ஜோர்ஜிய மோதல் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இவ்விரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் கோரியுள்ளன. ஆனால் ஜோர்ஜிய படைகள் பழைய நிலைகளுக்கு திரும்பிச் சென்றால் மாத்திரமே ஜோர்ஜியாவுடன் பேச்சு நடத்தப்படும் நேட்டோவுக்கான ரஷ்ய தூதுவர் ரோகோஸின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஈராக்கிலுள்ள தனது 2000 படையினரில் 1000 பேரை திருப்பியழைக்க போவதாக ஜோர்ஜியா அறிவித்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

70,000 மக்கள் சனத்தொகை கொண்ட South Ossetia சுதந்திர தேசத்தில் (தானாக பிரகடனம் செய்து பிரிந்து சென்ற தேசம்) ஆக்கிரமித்த இடங்களில் இருந்து ஜோர்ஜியப் படைகள் வெளியேறியுள்ளன. ஆனால் ஜோர்ஜியா தனது படைகளை இன்னும் முற்றாக விலக்கிக் கொள்ளவில்லை என்று ரஷ்சியா தெரிவித்திருக்கிறது.

ரஷ்சியாவின் படைப்பலப் பிரயோகமும்.. உலக நாடுகளின் அழுத்தமும் மனிதாபிமானப் பிரச்சனைகளுமே ஜோர்ஜியாவின் பின்வாங்கலுக்கு காரணமாகக் காட்டப்படுகின்றன.

ஆனால் 3 இலட்சம் மக்கள் வாழும் ஈழத்தில் வன்னியில் பெரும் படைநடவடிக்கையை.. அங்கு நிகழும் மனிதாபிமானப் பிரச்சனைகளை சிறீலங்கா அரசு மிகவும் மிலேச்சத்தனமாகக் கையாள இந்த உலகு பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது.

ஐநா கூட அறிக்கை விட்டுப் பார்த்தது. ஆனால்.. இடம்பெயர்ந்த ஒரு இலட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களுக்கு உதவ எவரும் முன் வரவில்லை.

ரஷ்சியாவின் பலம் இருந்ததால் South Ossetia மக்களில் 30,000 பேரின் இடம்பெயர்வும் சுமார் 1600 பேரின் மரணமும் ஜோர்ஜியாவை.. South Ossetia ல் இருந்து வெளியேறச் செய்திருக்கிறது.

எமது மக்களின் பிரச்சனையை.. சிறீலங்கா பேரழிவுப் போர் செய்து தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை செய்வதை.. வெளி உலகுக்கு சொல்வது போதாதா.. ஐநாவின் அறிக்கை கூட இந்த மேற்குலகின் செவிகளுக்கு எட்டவில்லையா..??! ஏன் ஏன்..??!

மக்களே விழித்திருப்போம்.. எம் மக்களுக்கும்... இப்படி ஒரு தீர்வு வர.. செயற்பட வேண்டியவர்களாக உலகத் தமிழினம் இருக்கிறது...! உணர்வோம், களத்தில் இருந்து வெற்றிச் செய்திக்காகக் காத்திராமல்.. எமது பக்கமும் நியாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து.. களத்துக்கு வெளியில் உலகின் கண்ணைத் திறக்க சாத்தியமான வழிகளில் எல்லாம் போராட முன் வருவோமாக..! :lol:

மூலச் செய்தி இங்கு: http://news.bbc.co.uk/1/hi/world/europe/7552012.stm

Edited by nedukkalapoovan

ஜார்ஜியா மீதான ரஷ்ய தாக்குதல்- ஐ.நா. முயற்சி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 10, 2008

இலவச நியூஸ் லெட்டர் பெற

திபிலிசி: ஜார்ஜியாவின் தெற்கு ஒசேஷியா பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு ரஷ்ய விமானப்படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். போரை நிறுத்துமாறு ரஷ்யா, ஜார்ஜியாவுக்கு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதை ரஷ்யா நிராகரித்து விட்டது.

ஜார்ஜியா - ரஷ்யா எல்லையில் உள்ள தெற்கு ஒசேஷியா பகுதி, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இது ஜார்ஜியாவுக்கு சொந்தமானதாகும். இப்பகுதி திடீரென தனியாகப் பிரிவதாக அறிவித்தது. இதற்கு ஜார்ஜியாவும் ஆதரவளித்தது.

இதையடுத்து அங்கு ரஷ்ய படைகள் தாக்குதலில் இறங்கியுள்ளன. குண்டு வீச்சு விமானங்கள் மூலம் ரஷ்ய படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் 1500 பேர் இறந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த திடீர் போருக்கு ஐ.நா. அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

ஆனால் முதலில் ஜார்ஜியாதான் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தியது. எனவேதான் நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் ஒசேஷியா மாகாணத்தில் பெரும் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஜார்ஜியா தலைநகர் திபிசிலி மீதும் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. அங்குள்ள வாசியானி ராணுவ தளம் மீதும் குண்டு வீசித் தாக்கின.

இதில் இரண்டு ராணுவ தளங்கள் மற்றும் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகமும் சேதமடைந்துள்ளன. சில எண்ணைக் கப்பல்களும், கப்பல் கட்டும் துறைமுகமும் எரிந்து போய் விட்டன.

8 முதல் 11 ரஷ்ய விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன என்று ஜார்ஜியா தெரிவிக்கிறது. பொது மக்கள் வசிக்கும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி இருப்பதை ஜார்ஜியா கண்டித்துள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் 1,500 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்க்கெய் லெவ்ரோவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஜார்ஜியாவின் இறையாண்மையை மதித்து அந்நாட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ள ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

ஐ.நா. கண்டனம்

ஜார்ஜியா-ரஷ்யா இடையிலான சண்டையில் பலியாகும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. வன்மையாக கண்டித்துள்ளது. இதை கண்டித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்ைல.

இந்த மோதலில் எப்படி ரஷ்யாவை கட்டுப்படுத்துவது என்பதில் வல்லரசு நாடுகளுக்கு குழப்பம் ஏற்பட்டதால் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. மேலும், இதில் ராணுவ ரீதியாக ஜார்ஜியாவுக்குஉதவ அமெரிக்கா விரும்பவில்ைல என்று கூறப்படுகிறது. அப்படி செய்தால் அது ரஷ்யா - அமெரிக்கா இடையே நேரடியான மோதலுக்கு வழி வகுத்து விடும் என அமெரிக்கா அஞ்சுகிறது.மேலும், இந்த விவகாரத்தில் எந்த நாடும் தலையிடுவதை ரஷ்யா அனுமதிக்காது. உரிய பதிலடி தரப்படும் என ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடினும் எச்சரித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/08...-ceasefire.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னங்க "தட்ஸ்தமிழ்" நடந்தவற்றை, நடப்பதை அப்படியே மாற்றி எழுதுகிறது. :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

South Ossetia மக்களின் படுகொலைக்கு அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் ஜோர்ஜிய அதிபர் ஆகியோரே பொறுப்பு என்று South Ossetia வாழ் அமெரிக்கப் பிரஜை ரஷ்சிய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்.

South Ossetia வில் தலைநகருக்குள் புகுந்த ஜோர்ஜியப் படைகள்.. ராங்கிகளை பிள்ளைகள்,பெண்கள் மீது ஏற்றிக் கொன்றுள்ளன. அடைக்கலம் தேடி மக்கள் பதுங்கிய இடங்களுக்கு கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

(ஈழத்தில் இந்தியப் படை கொக்குவில் பொற்பதியில் இவ்வாறு நடந்து கொண்டமை நினைவு கூறத்தக்கது.)

உண்மையில் South Ossetia பகுதியில் ஜோர்ஜியா நடத்திய வெறும் தாக்குதல் அல்ல. அது ஒரு பெரும் மனிதப்படுகொலை. அதற்கு அமெரிக்காவே தூண்டுதலாக இருந்துள்ளது. எனவே அமெரிக்கா அதிபரும் ஜோர்ஜிய அதிபரும் போர்க் குற்றவாளிகளாக இனங்காணப்பட வேண்டும் என்று ஜோர்ஜியப் படுகொலைகளை நேரில் கண்ட அமெரிக்கர் விபரித்துள்ளார்.

இதற்கிடையே கருங்கடல் பிரதேசத்தில் ரஷ்சியக் கடற்படை தனது கடற் பகுதியை பாவிக்க உக்ரைன் தடை விதித்துள்ளது. ரஷ்சியா தனது கடற்படைக் கப்பல்களை கொண்டு ஜோர்ஜிய இலக்குகளை தாக்கி வருகிறது.

ரஷ்சிய SU-22 போர் விமானங்கள் இரண்டு நேற்றைய தினம் ஜோர்ஜியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு உக்ரைன் C-200 விமான எதிர்ப்பு கருவிகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரஷ்சியா சந்தேகிக்கிறது.

ரஷ்சிய - ஜோர்ஜிய சண்டையில் உக்ரைன் நடுநிலை வகிப்பதாகச் சொல்லிக் கொண்டாலும்.. நேட்டாவின் கோரிக்கைக்கு அமைய உக்ரைன் ஜோர்ஜியாவுக்கு ரகசிய ஆயுத உதவிகளைச் செய்து வருவதாக ரஷ்சியா வலுவாகச் சந்தேகிக்கிறது.

American says U.S. and Georgia to answer for violence in South Ossetia

Joe Mestas, American citizen living in South Ossetia, who witnessed everything that happening in the region, talked to RT and blamed U.S. and Georgian leaders for the outbreak of violence.

I thought that since U.S. is supporting Georgia there would be some control over the situation in South Ossetia and that there would be a peaceful solution to the conflict. But what is happening there now it’s not just war, but war crimes. George Bush and [Georgian president] Mikhail Saakashvili should answere to the crimes that are being committed the killing of innocent people, running over by tanks of children and women, throwing grenades into cellars where people are hiding, Joe Mestas said.

The war is when military fight against military. But the Georgina army is killing innocent civilians. This is genocide, he added.

http://www.russiatoday.ru/news/news/28788

Edited by nedukkalapoovan

American says U.S. and Georgia to answer for violenc

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலில் சில மாற்றங்கள் வரலாமென எதிர்பாக்கலாம் . ஆனால் பழைய சோவியத் குடியரசில் உக்கிரைனின் இரும்புவளத்திற்காக ரஸ்யா அங்கேயே பல ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகளை நிறுவியிருந்தது அது இண்டைக்கு ரஸ்யாவிற்கு ஆப்பாக அமையபோகுது அதைவிட உலகின் கள்ளசந்தை ஆயுத விற்பனையில் உக்கிரைன் கொடிகட்டி பறக்கிது.இதை ரஸ்யா எப்படி கையாளப்போகிறதென்டிறதூான் பிரச்சனை . காரணம் அமெரிக்காவிற்கு பிடிக்காத ஆக்களிற்கும் உக்கிரென் ஆயுதம் வழங்கிது. ஆனால் ஜரோப்பா உக்கிரெனை உள் வாங்க நினைக்கிது. பாப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் நேட்டோவின் ஆதரவோடு வலிந்து சண்டையை ஆரம்பித்த ஜோர்ஜியாவை ரஷ்சியப் படைகள் மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றன.

ரஷ்சிய விமானங்கள் விழ விழ பறந்து தாக்குகின்றன.

இதுவரை ரஷ்சியா அதன் 8 விமானங்களை இழந்துள்ளது. 18 வீரர்களையும் இழந்துள்ளது. சுமார் 2000 மக்கள் South Ossetia இல் ஜோர்ஜியாவால் கொல்லப்பட்டுள்ளனர். :lol:

ரஷ்சிய விமானங்கள் ஜோர்ஜிய தலைவரை இலக்கு வைத்து தாக்க வர அவரும் ஐரோப்பிய ஒன்றிய சமாதானத் தூதுக்குழுவினரும் பதுங்கிடம் நோக்கி ஓடும் காட்சி கீழுள்ள இணைப்பி. :lol:

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7554417.stm

Edited by nedukkalapoovan

ரஷ்யாவிடம் போர்விமானங்கள் ஈசல்களை விட அதிகம் எனவே எத்தனை விழுந்தாலும் கவலைப்படாமல் தாக்குவார்கள்.... ஆப்பிழுத்த ஜார்ஜியா அனுபவிக்கிறது!!!

அமெரிக்காவின் நேட்டோவின் ஆதரவோடு வலிந்து சண்டையை ஆரம்பித்த ஜோர்ஜியாவை ரஷ்சியப் படைகள் மீண்டும் மீண்டும் தாக்கி வருகின்றன.

ரஷ்சிய விமானங்கள் விழ விழ பறந்து தாக்குகின்றன.

இதுவரை ரஷ்சியா அதன் 8 விமானங்களை இழந்துள்ளது. 18 வீரர்களையும் இழந்துள்ளது. சுமார் 2000 மக்கள் South Ossetia இல் ஜோர்ஜியாவால் கொல்லப்பட்டுள்ளனர். :lol:

ரஷ்சிய விமானங்கள் ஜோர்ஜிய தலைவரை இலக்கு வைத்து தாக்க வர அவரும் ஐரோப்பிய ஒன்றிய சமாதானத் தூதுக்குழுவினரும் பதுங்கிடம் நோக்கி ஓடும் காட்சி கீழுள்ள இணைப்பி. :lol:

http://news.bbc.co.uk/1/hi/world/europe/7554417.stm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்காஸி ஊடாக முன்னேறும் ரஷ்யப் படைகள்

_44912717_3ac51040-829b-46a0-a9d1-dee79f4e4278.jpg

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காஸி பகுதியூடாக ரஷ்யப் படைகள் ஜோர்ஜியாவுக்குள் படைநடப்புச் செய்துள்ளதாகவும், மேற்குப் புற நகரான செனெகி நோக்கி முன்னேறியிருப்பதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற மற்றுமொரு பகுதியான தெற்கு அசட்டியா மீது புதிய தாக்குதல்களை நடத்தும் நோக்குடன், ஜோர்ஜியப் படைகள் மீண்டும் அணிதிரள்வதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள ஜோர்ஜியப் படைகள் தமது ஆயுதங்களை கைவிட வேண்டும் அல்லது ரஷ்யத் தாக்குதலை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று ரஷ்ய இராணுவம் முன்னர் காலக்கெடு விதித்திருந்தது.

--------------------------------------------------------------------------------

தெற்கு அசட்டியாவில் பெரும்பாலான இராணுவ நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்ய அதிபர் அறிவிப்பு

ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற தெற்கு அசட்டியாவின் தலைநகரான ஸ்கின்வாலி கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு, ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளதாக ரஷ்ய அதிபர் மெட்வெடேவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால், எமது பிபிசியின் மாஸ்கோவுக்கான நிருபர் அனுப்பியுள்ள செய்தியில், ரஷ்யா மேலும் மேலும், துருப்புக்களையும் ஆயுதங்களையும் போர்முனைக்கு அனுப்பிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்.

இதனிடையே இராக்கில் பணியாற்றிவரும் ஜோர்ஜியத் துருப்புக்களை ஜோர்ஜியாவுக்கு திருப்பிக் கொண்டுசெல்வதில் அமெரிக்கா உதவியதாக ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் பூட்டின் அமெரிக்கா மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜோர்ஜியா படையினரை கொண்டுசெல்ல தாம் உதவியதை அமெரிக்க இராணுவமும் உறுதிசெய்துள்ளது.

bbc/tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.