Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெளனங்கள் கலைகின்றன -2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மௌனங்கள் கலைகின்றன - 2

1-1445640-4552-t.jpg

முட்டிய விழிகளும், முதல்வலியும்

வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும்,

கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு.

அப்பப்போ மேகங்கள் வடிக்கும் கண்ணீரில்,

வானம் பார்த்த என்னில்லம் இல்லாத ஒட்டடையையும், தன்மேல் படிந்திருக்கும் கரியையும் கழுவிக் கொள்ளும்.

எரிகாயங்கள் வடுக்களாக காலடியில் மேடுபள்ளமாக நவீன ஓவியங்கள்போல் சிந்தனைகள் பலவற்றைத் தூண்டும்.

அதே நேரம் மேகத்தின் கசிவை இந்தப்பள்ளங்கள் நான், நீ என்று போட்டிபோட்டு ஏந்தி ஜதியிடும்.

கதிரவனுக்குக் கோபம் வந்தால் பாதங்களைத் தொப்பளிக்கவே படைக்கப்பட்டதுபோல்

நான் தவழ்ந்த அந்த உள்வீட்டுத் தரை சூரிய அடுப்பாக மாறிவிடும்.

ஒரு ஆறுதல் இன்னும் இடியாமல் வெடிப்புகளுடன் நிமிர்ந்து நிற்கும் பிளாட்,

கொஞ்சம் இயற்கையிடம் இருந்து எல்லா நேரமும் என்றில்லாவிடினும்

பல சமயங்களில் பாதுகாப்புத்தரும் தேவதையாகத் இன்று வரைக்கும் திகழ்கிறது.

அன்றிரவு மட்டும் அந்தக் காலநிலைக் குழப்பம் அந்த பெருமழையைத் தோற்றுவிக்காது விட்டிருந்தால்

என்னினத்தின் வலியை நான் முதன்முதலாக உணரும் காரணி வேறு ஏதாவதாக இருந்திருக்கும்.

ஏப்போதுமே வாழ்வில் ஏற்படும் முதல் அனுபவம் என்பது பசுமரத்தாணிபோல் மனக்கூட்டுக்குள் பதிந்துவிடும்.

இதுவும் அப்படித்தான்...

முதல் காதல், முதல் முத்தம் என்று இன்பியல் பக்கம் போவதற்கு முன் நிறையவே விடயங்களை இங்கு எழுத இருக்கிறது.

கிளுகிளுப்புக் கதைகளை வாசித்த பலர் இங்கு வாசிக்கக்கூடும். இவ்வனுபவப் பகிர்வில் கிளுகிளுப்புத் தேடவேண்டாம்.

பெண்மையின் பருவமாற்றங்கள்கூட இன்றைய தமிழீழப் பெண்களுக்கு

எவ்வளவு சோதனையாக அமைகிறது என்பதற்கு ஒரு சாட்சியம் அவ்வளவுதான்.

இது அந்நாள் வலி. இந்நாளில் இதன் வடிவம், வலி எல்லாம் பேசப்படாப் பொருளாக

ஒவ்வொருவருக்குள்ளும் ஆழப்புதையுண்டபடி, எம்மினம் வாழ்விற்கான யாசிப்பையே பிரதானமாகக் கொண்டதாக நகர்கிறது.

ஆகாயம் பார்த்துக்கிடந்த என்வீட்டின்மேல், அந்த நடுச்சாமத்து மழை அனுமதியின்றி நுழைய

நடுவீட்டில் குளம் ஒன்று தன்னை உருவமைக்க, அடங்கமாட்டேன் என்று நாலாபக்கமும் தண்ணீர் கட்டுடைத்துப் பாய,

அப்பப்போ பாதுகாப்புத்தரும் பிளாட் பகுதியின் நிலமெல்லாம் புனல் விரிந்து பரவி வழிதேடி ஓடியது.

நான் படுத்திருந்த பாயை நனைத்து ஓடிய நீரில் மட்டும் செம்மை தன்னை கரைத்தோடி

சற்றுத் தள்ளிப் படுத்திருந்த என் தாய், தந்தையையும் நனைத்து நகர்ந்தது.

பூப்படைந்த இருநாள் பருவமகளாக அனுபவமில்லா அணிகளுடன்

அந்த எரிந்தவீட்டின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை நனைத்த மழைநீர்

என் பருவமாற்றத்தின் உதிரத்துளிகளைக் கரைத்து என் பெற்றேரை நனைத்த அந்தப் பொழுது,

அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

Edited by valvaizagara

கதையை வாசித்து மெளனிக்க வைத்து விட்டியள் சகாரா அக்கா..கா..தொடரட்டும் தங்களின் மெளனங்கள் கரைகின்ற அத்தியாங்கள்.. :o

வெண்ணிலவும், விண்மீன்களும் வெட்கமின்றிப் பார்க்கக் கூரை ஆடையின்றி, அம்மணமாகவும்,

கரிய அழுக்குடனும் தங்கமண் தாம்பாளத்தில் என்வீடு.

கதையில் இந்த வரிகள்..மிக அழகு சகாரா அக்கா..கா..!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனம் படும் வலிகளுக்கு ஒரு எல்லையே இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பதிவு வாழ்த்துக்கள். எத்தனையோ எம் ஈழத்து பெண்கள் அளவில்லா துன்பத்தை அனுபவிக்கிறார்கள் அதுக்கு எல்லாம் விடிவு வரும் காலம் வெகு தூரமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவமானம் பிடுங்கித் தின்ன முட்டிய விழிகளுடன் முதன்முதல் என்னினத்தின் வாழ்வை எண்ணி என்னுள்ளம் முதல்வலி ஏந்தியது.

சொல்லெணா துயரங்களை நெஞ்சில் சுமந்து வாழும் எமது மக்களின் விடிவு வெகு தூரத்தில்ல் இல்லை. நன்றி, சகாறா பதிவுக்கு. மேலும் தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

சகாரா சும்மா பகிடிக்குத்தானே இதை எழுதினனீங்கள் :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கலைக்காத மௌனங்கள் என்றும் ஆறாத காயங்கள்தான்.

உங்கள் சில நூறு வார்த்தைகளில் ஒரு கோடி வேதனைகளை உணர்கிறேன்.

நல்ல கவிதை-வாழ்த்துகிறேன் வல்வைசகாரா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யமுனன், புத்தன், சுப்பண்ணை, நுணாவிலான் உங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி உரைத்தேன்.

இச்சம்பவம் இரு தசமங்களுக்கு முந்தையகாலம்... பிற்பட்ட காலத்தில் பெண்கள் என்ற நிலையில் எங்கள் பெண்கள் சந்தித்த வலிகளும் அவமானங்களும் ஏராளம். மலை நிகர்த்த பெண்மையின் துன்பத்தில் ஒரு மண்ணின் அளவே இப்பதிவு.

எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்குதல் வேண்டும். காலம் எங்கள் கைகளில்கூட சில கடமைகளை திணித்திருக்கிறது. பெண்படைப்பாளிகளே! உங்களை வெளியே கொண்டு வாருங்கள். சந்திக்கு வராத சங்கதிகள் உங்கள் சிந்தைக்குள் அடையுண்டு கிடக்கும். அவையெல்லாம் வெளிக் கொணரவேண்டும்

சகாரா சும்மா பகிடிக்குத்தானே இதை எழுதினனீங்கள் :):lol:

சாத்திரியாரே! எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றால் உங்களுக்குப் பகிடியாக தெரிகிறதா? கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பகிடி அல்லவே.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.

தோழியரே! எனக்குத் தனிமடலில் சொல்லத் துணியும் உங்கள் வலிகளை வெளியே எடுத்து வாருங்கள். நெஞ்சக் கூட்டிற்குள் வைத்துக் குமையும் ஒரு பொழுதை எழுதுகோல் முனைகளுக்குள் புகுத்துங்கள். வெளியே எங்கள் ஈழத் தமிழினத்தின் வலிகள் உணரப்படவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைக்காத மௌனங்கள் என்றும் ஆறாத காயங்கள்தான்.

உங்கள் சில நூறு வார்த்தைகளில் ஒரு கோடி வேதனைகளை உணர்கிறேன்.

நல்ல கவிதை-வாழ்த்துகிறேன் வல்வைசகாரா.

உண்மைதான் வணங்காமுடி கலைக்காத மெளனங்கள் ஆறாத ரணங்கள் என்பது முற்றிலும் உண்மையே. எனக்காகிலும் எழுதுகோல் இருக்கிறது என்வலிகளை, என் சுமையை இறக்கி வைக்க ஒருசில நண்ப,நண்பியர் உள்ளனர் ஆனால் பலருக்கு அப்பாக்கியம் கிடையாது. வேதனைகளை, இழப்புகளை வெளியோ சொல்லவும் முடியாமல், மனதோடும் சுமக்க முடியாமல் திண்டாடுவோரைப் பார்த்திருக்கிறேன். சிலரோடு உரையாடி அவர்களின் சுமைதாங்கியாகவும் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி வணங்காமுடி.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரே! எங்கள் பெண்களின் எழுதுகோல்கள் வெளிப்படையாகப் பேசவேண்டும் என்றால் உங்களுக்குப் பகிடியாக தெரிகிறதா? கால்களுக்கு அடியில் முட்களின் விரிப்பு. அகற்ற நினைத்தல் பகிடி அல்லவே.... காலக்கடமையை உணர்ந்து நிமிர்தல் கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை. வாழ்க்கையின் ஒவ்வொரு விளிம்பிலும், ஈழப்பெண்களின் வாழ்வியல் உலகெங்கிலும் இல்லாத வேதனைகளைச் சுமந்ததாக உள்ள யதார்த்தநிலைகளைப் பேசத் தவறும் ஒவ்வொரு பெண்ணும் தன்னினத்தின் அழிவிற்கு தானும் உடந்தையாகிறாள் என்பதே உண்மை.

தோழியரே! எனக்குத் தனிமடலில் சொல்லத் துணியும் உங்கள் வலிகளை வெளியே எடுத்து வாருங்கள். நெஞ்சக் கூட்டிற்குள் வைத்துக் குமையும் ஒரு பொழுதை எழுதுகோல் முனைகளுக்குள் புகுத்துங்கள். வெளியே எங்கள் ஈழத் தமிழினத்தின் வலிகள் உணரப்படவேண்டும்

சகாரா இப்ப சண் ரி வி இலவசமாய் போகுது அதைவிட கலைஞர் ரிவி வேறை இலவசமாய் போகுது அதிலை மானாட மயிலாட எண்டொரு நிகழ்ச்சி போகுது சும்மா சொல்லக்கூடாது பெடியள் பெட்டையள் என்னமாய் ஆடுகினம் அதைவிடஅதிலை லக்சுமி எண்டொரு சீரியல் வேறை போகுது அதிலை எங்கடை மீனாதான் நாயகி இதுவரை சினிமா சின்னத்திரையிலை சொல்லாத ஒரு புதுவிதமான கதை அதாவது அவா ஒருத்தரை லவ் பண்ணுறா அது அவாவின்ரை தகப்பனுக்கு பிடிக்காமல் அவர் வேறை ஒரு கலியாணம் பேசுறார் ஆனால் அவா யாரை கலியாணம் செய்யப்போறா எண்டதுதான் இப்ப பிரச்சனை முடிவு தெரிய எப்பிடியும் ஒரு இரண்டு வருசமாகும்.இதுகளை விட்டிட்டு பெண்களை எங்கடை பிரச்சனையை எழுதுங்கோ எண்டால் அது பகிடி எண்டாமல் வேறை என்னத்தை சொல்லுறது. முடிஞ்சால் நீங்கள் ஒரு பத்து பெண்களை வேண்டாம் ஒரு 5 பெண்களையாவது எங்கடை பிரச்சனை பற்றி வெளியாலை கதைக்க எழுதப் பண்ணுங்கோ நான் உங்களிட்டை பகிங்கமாய் மன்னிப்பு கேட்டு நான் ஒதுங்கிறன். முடியாட்டி இனிமேல் நீங்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது. அப்பிடியே ஓடிடவேணும். <_<:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகாரா இப்ப சண் ரி வி இலவசமாய் போகுது அதைவிட கலைஞர் ரிவி வேறை இலவசமாய் போகுது அதிலை மானாட மயிலாட எண்டொரு நிகழ்ச்சி போகுது சும்மா சொல்லக்கூடாது பெடியள் பெட்டையள் என்னமாய் ஆடுகினம் அதைவிடஅதிலை லக்சுமி எண்டொரு சீரியல் வேறை போகுது அதிலை எங்கடை மீனாதான் நாயகி இதுவரை சினிமா சின்னத்திரையிலை சொல்லாத ஒரு புதுவிதமான கதை அதாவது அவா ஒருத்தரை லவ் பண்ணுறா அது அவாவின்ரை தகப்பனுக்கு பிடிக்காமல் அவர் வேறை ஒரு கலியாணம் பேசுறார் ஆனால் அவா யாரை கலியாணம் செய்யப்போறா எண்டதுதான் இப்ப பிரச்சனை முடிவு தெரிய எப்பிடியும் ஒரு இரண்டு வருசமாகும்.இதுகளை விட்டிட்டு பெண்களை எங்கடை பிரச்சனையை எழுதுங்கோ எண்டால் அது பகிடி எண்டாமல் வேறை என்னத்தை சொல்லுறது. முடிஞ்சால் நீங்கள் ஒரு பத்து பெண்களை வேண்டாம் ஒரு 5 பெண்களையாவது எங்கடை பிரச்சனை பற்றி வெளியாலை கதைக்க எழுதப் பண்ணுங்கோ நான் உங்களிட்டை பகிங்கமாய் மன்னிப்பு கேட்டு நான் ஒதுங்கிறன். முடியாட்டி இனிமேல் நீங்கள் இந்தப் பக்கம் வரக்கூடாது. அப்பிடியே ஓடிடவேணும். :D:huh:

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? <_<

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? <_<

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :D

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

புத்தன் உங்கள் வீட்டில் இப்படி வேறு பிரச்சினையா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முதல் வலி எமது இனத்தின் விதி.ஆணால் இங்கு வேறும் பல வலிகள் இருக்ின்றனவே அதுவும் எம்மினத்தின் விதிதான் <_<

எழுதவும் கதைக்கவும் வேண்டாம் ,எமது பிரச்சனைகளைப்பற்றி கதைக்கிற புருசன்மாரை திட்டாமல் இருந்தாலே பெரிய உபகாரமாக இருக்கும்

புத்து, புரட்ச்சி வீட்டில அதுவும் புருசனிட்ட இருந்து தான் ஆரம்பிக்க வேனும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ... சாத்திரியாரே!...சவாலா? :lol:

எங்கள் பெண்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா? :)

இப்படிப் பகிரங்க மன்னிப்புக் கேட்பேன் என்று எழுதி இருக்கிறீர்கள்....

சாத்திரியாரே, எதற்கும் ஒரு நாள் அவகாசம் தாருங்கள். சவாலை ஏற்றுக் கொள்ளுமுன் யாழ்க்களத்தோழியர் யாரேனும் கை கொடுப்பார்களா என்று பார்த்து வருகிறேன். என்னைப் பார்த்தால் ரொம்பப் பாவமா...... :D

சாத்திரியாரே! நான் வெற்றிகரமாக சவாலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரே! நான் வெற்றிகரமாக சவாலுக்கு வரவில்லை என்று ஒதுங்கிக் கொள்கிறேன்.

போய் பேசாமல் மானாட மயிலாட வை பாருங்கோ :):lol:

  • 10 years later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/23/2008 at 5:19 PM, sathiri said:

போய் பேசாமல் மானாட மயிலாட வை பாருங்கோ :):lol:

?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.