Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சட்டவிரோத ´குடி´ யேற்ற வாசிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சுவாரசியமான பொழுது நேற்றமைந்தது. இணையம் வழி அறிமுகி இப்போது இணைந்து பணியாற்றும் நண்பர்களுடன் போனதப்பொழுது. லண்டனிலிருந்து ஒருபேப்பர்காரன்கள் / காரிகள் பிரான்சில் இருந்து சிறியண்ணன் (சாத்திரி) ஜேர்மனிலிருந்து தோழர் சபேசன் உட்பட்ட சிறு குழுவொன்று சுவிஸ் வந்திருந்தது. சுவிஸ் எனச் சொல்ல முடியாதவாறு பிரான்ஸ் ஜேர்மனி எல்லைப் பகுதிகளிலும் சிலசமயம் அந்த நாடுகளின் உள்ளேயும் என அறக்கப் பறக்க சூறாவளிப் சுற்றாகத்தான் அமைந்தது.

மதியத்துக்குப் பிறகு சாத்திரியண்ணன் தனது விமானத் திகதியை தள்ளிப் போடுவதற்காக விமான நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது. விமான நிலையத்தின் வெளியே காத்திருந்து தனது விமானம் TakeOff ஆனதை உறுதிப் படுத்திக்கொண்டு பிறகு வேர்க்க விறுவிறுக்கிறது போல உட்சென்று ஐயோ அக்கா என்ர பிளேன் போயிட்டுது. வாற வழியில நெரிசல் அது இது எனச் சொல்லி தனது பயணத்திகதியை அடுத்த நாளுக்கு மாற்றினார்.

வரும் வழியில் தொடரூந்து நிலையமொன்றின் படிக்கட்டுகளில் அரசியல் இலக்கிய ஆன்மீக பகுத்தறிவு பொருளாதாரம் என பலதும் பத்துக்குமான சந்திப்பாக அது அமைந்தது. மூன்று வலைப்பதிவர்கள் சந்தித்திருப்பதனாலும் அங்கு உட்கார்ந்து கோப்பி குடித்ததினாலும் அதை ஒரு வலைப்பதிவர் மாநாடு என அழைப்பதற்குரிய முழுத்தகுதியும் உண்டு என்றார் சாத்திரி. அதுவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பதிவர்கள் வருகை தந்திருந்ததனால் அது ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பும் ஆகுமென்று அவர் உறுதிப்படுத்தினார்.

இலங்கை வலைப்பதிவுகளில் ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையைப் போக்க ஏதாவது ஊக்குவிப்புக்களை பரிசுத் திட்டங்களை அறிவிக்கலாம் என ஒருபேப்பர்காரன்கள் காரிகள் சொல்லிக் கொண்டார்கள். அவை கெட்டிக் காரர். சொன்னதைச் செய்வினம்.

இதற்கிடையில் இருட்டத் தொடங்கியது. ஏழுமணிக்கெல்லாம் கடைகள் பூட்டப் பட்டுவிடும் என்றதால எங்களில் ஒருவர் அவசரப் படுத்தினார். கெதியா போய் வாங்க வேணும். வெளிக்கிடுங்கோ என்றார் அவர். சரியென்று இருக்குமிடம் திரும்பினோம். சற்றுமுன்னர் தான் யாரோ சுவிசில ட்ராபிக்கே இல்லைப்பா என சொன்னதன் வாய்முகூர்த்தமோ என்னவோ வீதியில் நடந்த விபத்து ஒன்றிற்காக ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக ஊர்ந்து செல்ல வேண்டியதாய்ப் போனது.

இருந்தாலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் டொச்லாந்து என்றால் என்ன ரவியண்ணையின் கேள்விக்கு நானும் சாத்திரியும் மாறி மாறி விளக்கங்களைச் சொல்லிக் கொண்டு வந்தோம். டொச்லாந்து என்றால் ஜேர்மனி அண்ணை..

இதற்கிடையில் ஏழுமணி தாண்டிவிட்டது. எதிர்பார்த்த கடைகளும் பூட்டிவிட்டது. வீடு திரும்பிய பிறகு மீளவும் நான் சாத்திரி ரவியண்ணை மூவரும் புறப்பட்டோம். ஒரு கடையும் திறந்திருந்ததாக தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக நாக்கு செத்துக் கிடக்கு என்ற புலம்பல்கள் வேறு..

அண்ணை சுவிசிலதான் கடைகள் பூட்டியாச்சு. ஜேர்மனியில திறந்திருக்கும் என்றேன் நான். அப்பிடியோ என மலர்ந்தார் ரவியண்ணை. பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றை பாலத்தின் மேல் ஏறிக் கடந்தால் ஜேர்மனி. சாத்திரியண்ணை திடீரென்று காரை ஜேர்மனுக்குள் திருப்பினார். முடிவில் செக்கிங் போஸ்ட் தெரிந்தது. ஜேர்மனிக்கு போகலாம் எனச் சொன்னது நானேயாகிலும் இன்னமும் சிறிலங்கா பாஸ்போட்டுடன் இருக்கும் எனக்கு ஜேர்மனுக்குள் நுழைய விசா தேவைப்படுகிறது. என்னிடம் அப்போது விசாவோ.. ஏன் கைவசம் பாஸ்போட்டோ இல்லை. அதனால் கொஞ்சம் உதறல் எடுத்தது. ரவியண்ணையும் அப்போது கைவசம் பாஸ்போட் வைத்திருக்கவில்லை.

அண்ணை திருப்புங்கோ.. சட்டவிரோத குடியேற்றகாரர் எண்டு பிடிச்சு அடைச்சிடுவாங்கள் என்றேன் நான். சாத்திரியண்ணைக்கு றிஸ்க் எடுக்கிறது றஸ்க் சாப்பிடுற மாதிரியாம். போவம்.. வழியில விசா கேட்டால்.. ஓ.. இது தான் ஜேர்மனியா sorry எண்டு சொல்லிட்டு திரும்புவம் என்றார் அவர். மெதுவாக காரை ஸ்லோ செய்து எல்லையைக் கடக்கின்றோம். எம்மை ஏன் என்று கேட்க எந்த நாதியும் அங்கில்லை. ஜேர்மனிப் பொலீசாரைக் காணவேயில்லை. ம்.. உலகம் ஒரு கிராமமாக சுருங்கித்தான் விட்டது.

ஜேர்மனிக்குள் நுழைந்து பிறிதொரு கடை தேடி தேவையானதை வாங்கி ஒரு குழந்தையைப் போல் நெஞ்சோடணைத்து வெளியேறினார் ரவியண்ணை. மீளத் திரும்பும் வழியில் எனக்கு பயமில்லை. சுவிஸ் வதிவிட அனுமதியை காட்டி.. ஐயோ தெரியாமல் உள்ளை வந்திட்டம். சொன்னாப் போல இது ஜேர்மனாம் எனச் சொல்லி திரும்பிவிடலாம். சுவிஸ் பொலிசார்தான் சோதனைச் சாவடியில் நிற்பார்கள். ம்.. அவர்களும் நம்மைக் கண்டுகொள்வதாக இல்லை.

சட்டவிரோத ´குடி´ யேற்ற வாசிகள் என்பது நமக்கும்தான் பொருந்துகிறது.

படங்கள் பார்க்கணுமா.. இங்கை வாங்க :rolleyes:

http://blog.sajeek.com/?p=359

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிக்குள் நுழைந்து பிறிதொரு கடை தேடி தேவையானதை வாங்கி ஒரு குழந்தையைப் போல் நெஞ்சோடணைத்து வெளியேறினார் ரவியண்ணை.

உவ்வளவு மினைக்கெட்டு அலைஞ்சு வாங்கி ரவியண்ணை குழந்தையைப்போல நெஞ்சோடை அணைச்சுக்கொண்டு வந்த சாமான் என்னப்பா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உவ்வளவு மினைக்கெட்டு அலைஞ்சு வாங்கி ரவியண்ணை குழந்தையைப்போல நெஞ்சோடை அணைச்சுக்கொண்டு வந்த சாமான் என்னப்பா? :rolleyes:

என்ன கு.சா, கள்ளுக் கொட்டில் எண்டு விலாசம் வைச்சுக் கொண்டு இது கூடத் தெரியாம..? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சயந்தன் நான் நினைச்சன் நாங்கள் சந்தித்ததை "பாசல் இரயில் நிலைய படிக்கட்டில் மாபெரும் மகாநாடு"எண்டு தலைப்பிலை போடுவீங்கள் எண்டு நினைச்சன்.ஆனால் குடி யேற்ற வாசிகள் எண்டு போட்டிட்டீங்கள். ரவியண்ணை கட்டிப்பிடிச்சு அணைச்சுக் கொண்டுவந்த குழந்தையோடை இரவிரவாய் விழையாடினதிலை தலையிடி இன்னமும் தீரவில்லை. அதுக்காக குளிசைக்கு இன்னும் செலவுவேறை

:rolleyes::rolleyes:

பார்த்தப்பு சயந்தன்

:rolleyes: கோவிலே தேங்காய் உடைப்பது அநியாயம் என்பது போல, இதற்கும் இது அநியாயம் என்று யாராவது நோட்டீஸ் அடிச்சு ஒட்டிடுவினம். :rolleyes::D அவைக்கு விளங்குமே மருமகள் உடைச்சாத் தான் அது பொன்குடம், மாமியார் உடைச்சா அது மண்குடமென்று. :D

Edited by Vasampu

வழியில விசா கேட்டால்.. ஓ.. இது தான் ஜேர்மனியா sorry எண்டு சொல்லிட்டு திரும்புவம் என்றார் அவர். மெதுவாக காரை ஸ்லோ செய்து எல்லையைக் கடக்கின்றோம். எம்மை ஏன் என்று கேட்க எந்த நாதியும் அங்கில்லை. ஜேர்மனிப் பொலீசாரைக் காணவேயில்லை. ம்.. உலகம் ஒரு கிராமமாக சுருங்கித்தான் விட்டது.

:rolleyes: :rolleyes: :D

ம்... ஐரோப்பிய வாசிகள் கொடுத்து வைச்சனீங்கள் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வலைப்பதிவர்கள் சந்தித்திருப்பதனாலும் அங்கு உட்கார்ந்து கோப்பி குடித்ததினாலும் அதை ஒரு வலைப்பதிவர் மாநாடு என அழைப்பதற்குரிய முழுத்தகுதியும் உண்டு என்றார் சாத்திரி. அதுவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பதிவர்கள் வருகை தந்திருந்ததனால் அது ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பும் ஆகுமென்று அவர் உறுதிப்படுத்தினார்.

http://blog.sajeek.com/?p=359

தமிழ் முறையில் நடந்த யாழ்கள உறவும் ஒருபேப்பரில் சாய்ந்த கோபுரங்கள் தொடரை எழுதிவந்த இளங்கோவின் திருமணவிழாவுக்குப் போகாமல் எல்லாரும் வலைப்பதிவர் மகாநாடோ நடத்தினனீங்கள் ? :wub:

இளங்கோவிற்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் முறையில் நடந்த யாழ்கள உறவும் ஒருபேப்பரில் சாய்ந்த கோபுரங்கள் தொடரை எழுதிவந்த இளங்கோவின் திருமணவிழாவுக்குப் போகாமல் எல்லாரும் வலைப்பதிவர் மகாநாடோ நடத்தினனீங்கள் ? :mellow:

இளங்கோவிற்கு இனிய திருமண வாழ்த்துக்கள்

சாய்ந்த கோபுரங்கள் இளங்கோ தம்பதியினரிற்கு என்னுடைய வாழ்த்தையும் தெரிவிக்க போன இடத்தில் என்னுடைய எதிர்பார்ப்புக்கள் கற்பனைகளின் கோபுரம் குண்டுவைத்தே தகர்க்கப்பட்டுவிட்டது.நடந்த

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

:mellow: ஒருபேப்பர்காரன்களும் ´காரியளும் ஏதாவது புரட்சி அருட்சியென்று புலம்பியிருப்பியள் அதுதான் அங்கை வந்த சனம் திட்டியிருக்கும். மணமகனுக்கும் மணமகளுக்கும் சொந்தம் உறவு ஊர் என கூடிவர இதென்ன குழப்பவாதிகளின் புரட்சியென்று அடிதராமல் விட்டதில் தப்பித்தியள் ஒருபேப்பர்காரன்கள் காரியள். :huh:

��ு தமிழர் முறை திருமணமா?? அல்லது தமிழ் மொழியில் நடந்த திருமணமா?? தமிழில் நடந்த சனாதனமுறைத்திருமணமா?இப்படிப்பட்ட ஏகப்பட்ட குழப்பங்கள். திருமணம் செய்தது யாரோ. அதனைத் தீர்மானித்ததும் யாரோ. ஆனால் வாழ்த்துவதற்காக வேலையையும் விட்டு நேரத்தையும் செலவளித்து போன ஒரு பேப்பர் காரருக்கு கிடைத் வசைபாடலில் உண்மையில் மகிழ்ச்சி ஏனெனில் ஒரு பேப்பர்காரன்கள் காரிகளை பலர் திட்டித்தீர்ததை பார்த்த பொழுது எங்களைப்பார்த்து பலர் பயப்பிடினம் எண்டு மட்டும் விழங்கியது.யாராவது அடிபோடுவாங்கள் எண்டு பாத்தன் ஆனால் ஒருத்தரும் அடிக்கேல்லை. அதுவரை மகிழ்ச்சி. :(:D

பயமாக இருக்காது. அட இந்தப்பயலுகளுக்கா பயப்பிட்டம் இவ்வளவு நாளுமெண்டு நினைச்சிருப்பினம். பாவங்கள் போகட்டுமென்று பேசாமல் இருந்திருப்பினம். இனித்தான் பெரும்பாலும் அடிவிழலாம். பாவம்பாத்து பேசாமல் விட்டது பிழையாப்போச்செண்டு. :(

என்னப்பா சயந்தன்...அங்கை போனால் போட்டோ பார்க்கலாம் என்றியள் ..ஒன்றையும் அங்கையும் காணலை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா சயந்தன்...அங்கை போனால் போட்டோ பார்க்கலாம் என்றியள் ..ஒன்றையும் அங்கையும் காணலை?

நானும் உள்ள இடமெல்லாம் தடவிப்போட்டு பேசாமல் விட்டுட்டன் :D கேக்க வெளிக்கிட்டால் தையக்கதையக்க எண்டு கத்துவினம் ஏன் சோலியப்பா :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமா..

தடவிப் போட்டு பேசாமல் விடக்கூடாது.

சின்ன மிஸ்டேக்.. இப்பச் சரி.

படம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உள்ள இடமெல்லாம் தடவிப்போட்டு பேசாமல் விட்டுட்டன் :) கேக்க வெளிக்கிட்டால் தையக்கதையக்க எண்டு கத்துவினம் ஏன் சோலியப்பா :lol:

கு.சா. இரவு ம.பி. தடவியிருக்கறியள்பேலை அதுதான் தெரியேல்லை. ம.மு .விலை தடவிப்பார்க்கவும். படம் போடுறன்

photo.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம.மு .விலை தடவிப்பார்க்கவும்

ச்சீசீ....

கு.சா. இரவு ம.பி. தடவியிருக்கறியள்பேலை அதுதான் தெரியேல்லை. ம.மு .விலை தடவிப்பார்க்கவும். படம் போடுறன்

photo.jpg

இந்த போட்டோவில் இருக்கிற ஆட்கள் யார் யார் என்று ஒரு குத்து மதிப்பாக சொல்றன் சரியோ என்று சொல்லுங்கோ

இடம் இருந்து வலமாக.லேனா தமிழ் வாணன்,சாத்திரி,புதுசு ரவி,சயந்தன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லேனா தமிழ்வாணனா..

ங்கொய்யால..

சாத்திரி உம்ம நிலை இப்பிடியா போச்சே :lol:

லேனா தமிழ்வாணனா..

ங்கொய்யால..

சாத்திரி உம்ம நிலை இப்பிடியா போச்சே :)

உண்மையாய் ..உந்த ஆளா ..சாத்திரி

சாத்திரி ..எழுத்துகளை வைத்து கற்பனை வைத்து பார்க்கக்கை அசல் யாழ்ப்பாணி மாதிரி இருப்பார் என நினைச்சன்...

இவர் தசவதார வெள்ளைக்கார பிளெச்சர் மாதிரி இருக்கார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாய் ..உந்த ஆளா ..சாத்திரி

சாத்திரி ..எழுத்துகளை வைத்து கற்பனை வைத்து பார்க்கக்கை அசல் யாழ்ப்பாணி மாதிரி இருப்பார் என நினைச்சன்...

இவர் தசவதார வெள்ளைக்கார பிளெச்சர் மாதிரி இருக்கார் :lol:

ஒய் சி.குட்டி நான் அமெரிக்காவிலை இருந்து ஆளை கூப்பிட்டு மேக்கப்போட்டுக் கொண்டு போனான்.சிவப்பு சேட்டோடை கண்ணாடியோடை இருக்கிறது கள்ளச்சாத்திரி. அடுத்தது பிரபல ஆய்வாளர் சபேசன். அடுத்தது புதுசு இரவி. சயந்தன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது பிரபல ஆய்வாளர் சபேசன்

இப்பிடி மொட்டையாய்ச் சொன்னால் எப்பிடி ?

பிரபல கள நிலவர அரசியல் இராணுவ ஆய்வாளர் எண்டு சொல்ல வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வரும் வழியில் தொடரூந்து நிலையமொன்றின் படிக்கட்டுகளில் அரசியல் இலக்கிய ஆன்மீக பகுத்தறிவு பொருளாதாரம் என பலதும் பத்துக்குமான சந்திப்பாக அது அமைந்தது. மூன்று வலைப்பதிவர்கள் சந்தித்திருப்பதனாலும் அங்கு உட்கார்ந்து கோப்பி குடித்ததினாலும் அதை ஒரு வலைப்பதிவர் மாநாடு என அழைப்பதற்குரிய முழுத்தகுதியும் உண்டு என்றார் சாத்திரி. அதுவும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பதிவர்கள் வருகை தந்திருந்ததனால் அது ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பும் ஆகுமென்று அவர் உறுதிப்படுத்தினார்.
ஓமோம் கட்டாயம் கட்டாயம் :) அதோடை சிஎன்என் மற்ரது பிபிசி எல்லாத்திலையும் நேரஞ்சல் செய்திருக்கோணும் எல்லாம் லேட்டாய்ப்போச்சுது :lol:

photo.jpg

அதுசரி கண்ணாடியோடை இருக்கிற இரண்டு பேரும் என்ன சீரியல் சூட்டிங் முடிஞ்சு வந்திருக்கிறியளோ அந்தமாதிரி அட்டகாசமாய் போஸ் குடுக்குறியள் :D

ம் . .ம் . . . நடக்கட்டும் . . நடக்கட்டும் . . .

அடுத்த மாநாடு எங்கயெண்டு சொல்லுங்கப்பா . . .

நாங்களும் வாறம் . . .

மாநாட்டு முன்னம் தண்ணி . .வெண்ணி . . எல்லாம் இருக்குத்தானே?

அதுதான் முக்கியம்!

இப்பிடி மொட்டையாய்ச் சொன்னால் எப்பிடி ?

பிரபல கள நிலவர அரசியல் இராணுவ ஆய்வாளர் எண்டு சொல்ல வேணும்.

:lol:அப்படி என்ன களநிலவரம் மற்றும் அரசியல் இராணுவ ஆய்வில் தங்களுக்கு வெறுப்பு. அதற்காக இப்படியா அவற்றை அவமானப்படுத்தவது. :)

ம் . .ம் . . . நடக்கட்டும் . . நடக்கட்டும் . . .

அடுத்த மாநாடு எங்கயெண்டு சொல்லுங்கப்பா . . .

நாங்களும் வாறம் . . .

மாநாட்டு முன்னம் தண்ணி . .வெண்ணி . . எல்லாம் இருக்குத்தானே?

அதுதான் முக்கியம்!

நீங்கள் உப்படி எழுதகக் கூடாது. நாம் என்ன சந்தோசத்திற்காகவா தண்ணியடிக்கின்றோம். வன்னி மக்களின் நிலைமையை எண்ணி எண்ணி கவலை தாங்க முடியாமல் தான் தண்ணி அடிக்கின்றோம். :D:lol:

:lol:அட தண்ணியிலை எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரிய கருத்தும் ரெண்டு தரம் வந்திட்டுது. இப்ப தெளிஞ்சதும் ஒண்டை நீக்கிட்டன். :)

Edited by Vasampu

கு.சா. இரவு ம.பி. தடவியிருக்கறியள்பேலை அதுதான் தெரியேல்லை. ம.மு .விலை தடவிப்பார்க்கவும். படம் போடுறன்

photo.jpg

உங்களை இனங்கண்டதில் மகிழ்ச்சி. இருந்தாலும், நான் நினைத்திருந்த உருவத்திற்கும் உண்மை உருவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். முக்கியமாக சாத்திரி, மற்றும் சபேசனின் உருவங்களை நம்ப முடியவில்லை. :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை இனங்கண்டதில் மகிழ்ச்சி. இருந்தாலும், நான் நினைத்திருந்த உருவத்திற்கும் உண்மை உருவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள். முக்கியமாக சாத்திரி, மற்றும் சபேசனின் உருவங்களை நம்ப முடியவில்லை. :o:o

தமிழிச்சி இது எங்கடை உருவங்கள் இல்லை . இப்பகொஞ்ச நளைக்கு வாடைகைக்கு எடுத்து போட்டிருக்கிறம். அதனாலை போலிகளை நம்பி ஏமாறாதீர்கள். :):lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.