Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Google Chrome (New browser)

Featured Replies

Google Chrome (BETA) for Windows

dlpage_lg.jpg

http://www.google.com/chrome/

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல். நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும் பல தகவல்கள் எளிதாக விளங்ககூடிய வகையில்

http://books.google.com/books?id=8UsqHohww...ntcover#PPT1,M1

இதில் தமிழ் எழுத்துக்கள் தெரிய ஏதோ பிரச்சனை இருப்பதாக சொல்கின்றார்களே...அது பற்றி ஏதும் தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் இருப்போர் Google map ல் உங்கட வீடுகளைப் பார்க்கலாம். உ+ம் கோம்புஸ்ஸில் இருக்கும் ஜனனி உணவகத்தினைப் பார்க்க வேண்டுமென்றால்

http://maps.google.com.au/maps?hl=en&q...sa=N&tab=wl

32,Burlington Road, Homebush

Search Mapனை அழுத்தவும்

இலக்கம் , வீதி, இடம் என்று எழுதினால் நீங்கள் பெரும்பாலான இடங்களைப் பார்க்கலாம். சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரெலியாவில் பெரும்பாலான வீதிகளை படம் பிடித்து Google map ல் இணைத்திருக்கிறார்கள்

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழ் எழுத்துக்கள் தெரிய ஏதோ பிரச்சனை இருப்பதாக சொல்கின்றார்களே...அது பற்றி ஏதும் தெரியுமா?

நான் இந்த மென்பொருளை நிறுவி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. குறிப்பாக்க வலைப்பூக்களில் பரிசோதித்துப் பார்த்தேன். :rolleyes:

படங்கள்.. வீடியோ எக்ஸ்புளோரரை விட மிகத் தெளிவாக.. காட்டப்படுகின்றன. மிகவும் வசதியாக இருக்கிறது.

நன்றி கந்தப்பு தகவலுக்கு, உங்கள் வீட்டை பார்த்தேன், நீங்கள் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு BMW ல் ஏறுவது தெரிகிறது.

நான் இப்போது Google Chrome ஐ தான் பயன்படுத்துகிறேன். படங்கள் முதலியன தெளிவாகதான் இருக்கின்றன. ஆனால், முதலில் யாழ் களத்தின் முகப்பு பக்கம் ஒழுங்கு குலைந்தது போல தென்பட்டது. இப்போது சரியாகிவிட்டது. ஏன் என்று தெரியவில்லை...

Edited by Mallikai Vaasam

தேடுதல், மெயில் என சகல மேட்டர்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள், அடுத்து பிரெளசரையும் ஆரம்பிக்கவுள்ளது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.

இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரெளசர்.

தற்போது பல வகையான பிரெளசர் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர பயர்பாக்ஸ் (19.73%), சஃபாரி (6.73%), ஒபேரா (0.74%) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன.

முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால் பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது.

இந் நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரெளசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. தனது பிரவுசருக்கு குரோம் என பெயரிட்டுள்ளது கூகுள்.

இதுதொடர்பான அனைத்து விவரங்களும் கூகுள்குரோம் இணையதளத்தில் உள்ளன (http://www.gchrome.com/). இந்த பிரெளசர் பல விசேஷங்கள் உள்ளடங்கியுள்ளன.

தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரெளசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.

இந்த பிரெளசரின் 'பீட்டா வெர்சன்' நாளை அறிமுகமாகவுள்ளது.

இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

http://www.tamilskynews.com/index.php?opti...&Itemid=105

  • தொடங்கியவர்

கூகுள் 'குரோம்'- அசத்தலான ப்ரெளசர்!

பெங்களூர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கூகுள் குரோம் ப்ரெளசர், விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று ரிலீஸானது. மற்ற ப்ரெளசர்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இதில் இருப்பதால், விரைவில் குரோம், ப்ரெளசர் உலகில் புரட்சி படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ப்ரெளசர் குரோம். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ் ஆகியவற்றுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், பயர்பாக்ஸ், ஆப்பிள் சஃபாரி, ஓபேரா ஆகிய ப்ரெளசர்களில் இல்லாத பல அருமையான அம்சங்கள் குரோமில் உள்ளன.

1. இணையதளங்களுக்கான 'டாஸ்க் மேனேஜர்':

கூகுள் குரோமுக்குள் போன பின்னர், 'Shift+esc' கீயை அழுத்தினால், 'டாஸ்க் மேனேஜர்' திறக்கும். அதில், குரோம் ப்ரெளசரில் திறந்திருக்கும் அனைத்து இணையதளங்களின் பட்டியலும் காணப்படும்.

இதன் மூலம் பல்வேறு வகையான இணையதளங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் 'மெமரி'யின் அளவை நாம் அறிந்திட முடியும். ஏதாவது ஒரு இணையதள பக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால், டாஸ்க் மேனேஜரிலிருந்தபடியே அதை மூடவும் வசதி உண்டு.

2. விஷூவல் ப்ரெளசர் ஹிஸ்டரி (Visual Browser History):

'Ctrl+H' கீயை அழுத்தி 'ப்ரெளசர் ஹிஸ்டரி'யை திறந்து அதில் தேவைப்படும் பக்கங்களைத் தேடலாம்.

பொருத்தமான பக்கங்களைத் தேடுவதோடு, சம்பந்தப்பட்ட இணைய தள பக்கங்களின் 'தம்ப்நெய்ல்'களையும் இந்த ஆப்ஷன் நமக்குக் காட்டும்.

3. சூப்பர் க்ளீன் கன்டெக்ஸ்சுவல் மெனு (Super Clean Contextual Menu):

ஏதாவது ஒரு இணையதளத்தின் 'ஹைப்பர்லிங்கில்' ரைட் கிளிக் செய்தால், ஐந்து 'ஆப்ஷன்கள்' மட்டுமே அதில் இருக்கும். 'இமேஜ்' மீது 'ரைட் கிளிக்' செய்தால், நான்கு ஆப்ஷன்கள் இருக்கும். இது பயர்பாக்ஸில் குழப்பமானதாக இருக்கும்.

4. அட்ரஸ் பாரிலிருந்து 'சைட்' தேடலாம்:

இது பிரில்லியன்ட் ஆன ஆப்ஷன். இணையதளத்தை தேடக் கூடிய வசதியுடன் கூடிய இணையதளத்திற்குப் போகும்போது - குரோம் அதை தானாகவே உணர்ந்து கொண்டு, அந்த தளத்தை 'அட்ரஸ் பாரில்' பதிவு செய்து விடும். அடுத்த முறை அந்த சைட்டுக்குப் போக விரும்பினால் 'அட்ரஸ் பாருக்குப்' போனால் போதும்.

5. பயன்படுத்தப்பட்ட 'மெமரி'யை அறிய..

இந்த ஆப்ஷன் மூலம் ப்ரெளசர்களில் பயன்படுத்தப்பட்ட மெமரியை அறிந்து கொள்ளலாம்.

குரோம் ப்ரெளசருக்குள் போய், ஒரு புதிய 'டேப்' (Tab) பை திறந்து, அதில் about:memory என்று டைப் செய்யவும். அப்போது ப்ரெளசருக்கு மேல், உங்களது கம்ப்யூட்டரில் எந்தெந்த ப்ரெளசர் பயன்பாட்டில் உள்ளது என்பது தெரிய வரும். அதில் எவ்வளவு மெமரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலும் கூடவே இருக்கும்.

6. தவறாக மூடிய 'வெப்சைட் டேப்'களை திறக்க..

பயர்பாக்ஸ்-3 ப்ரெளசரில் "Undo Closed Tab" ஆப்ஷன் உள்ளது. அதேபோல ஓபேராவில், Ctrl+Z கீயை அழுத்தினால் மூடிய டேப்களை திறக்கலாம்.

குரோமில், Ctrl+T கீயை அழுத்த வேண்டும். அப்போது, Recently closed tabs என்ற ஆப்ஷன் வரும். அதில் போய் எந்த டேப் தவறுதலாக மூடப்பட்டதாக நினைக்கிறீர்களோ அதை திறக்கலாம்.

7. Start Menu / Quick Launch பாரிலிருந்து 'சைட்' திறக்கலாம்:

இணையதளங்களுக்கான 'டெஸ்க்டாப் ஷார்ட் கட்'கள் அனைத்து ப்ரெளசர்களிலும் உள்ளன. இது கூகுள் குரோமில் எளிமையாக உள்ளது.

ஏதாவது ஒரு தளத்தை திறந்து, அதில் 'பைல்' மெனுவிலிருந்து "Create application shortcut" என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அந்த தளத்தின் ஷார்ட் கட் டெஸ்க் டாப்பில் உட்கார்ந்து கொள்ளும்.

இப்படி பல வசதிகள் குரோமில் கொட்டிக் கிடக்கின்றன. குரோம் நிகழ்த்தப் போகும் புரட்சி, ப்ரெளசர் உலகில் நிச்சயம் பெரிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://thatstamil.oneindia.in/news/2008/09...r-browsers.html

இது இன்னும் BETA நிலையில் இருப்பதால் சற்று பொறுத்திருப்பது நல்லது.

நானும் இம்மென்பொருளை நிறுவியிருக்கினறேன். அசத்தலாகவும் தெளிவாகவும் வேலைசெய்கின்றது. ஆரம்பத்தில் யாழ் இணையத்தை திறந்தபோது மல்லிகை வாசம் குறிப்பிட்டது போல் வந்தது. பின்பு சரியாகி விட்டது. நிச்சயம் இம்மென்பொருள் explor மென்போருளிற்கு பெரும் சவால் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்படி இணைய உலாவியை பயன்படுத்தி.. கீமானைக் கொண்டு நேரடியாக யாழில் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை. தொடர்சியாக தட்டச்சுச் செய்யும் போது முன்னைய எழுத்துக்கள் இல்லாமல் போய் விடுகின்றன.

அதுமட்டுமன்றி படங்களோடு விபரம் சொல்லும் alt பொப் அப் வருகுதில்லை..!

உங்களுக்கு அப்படிப் பிரச்சனைகள் இருக்கிறதா. அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா..??! :mellow::huh:

Edited by nedukkalapoovan

மேற்படி இணைய உலாவியை பயன்படுத்தி.. கீமானைக் கொண்டு நேரடியாக யாழில் தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை. தொடர்சியாக தட்டச்சுச் செய்யும் போது முன்னைய எழுத்துக்கள் இல்லாமல் போய் விடுகின்றன.

அதுமட்டுமன்றி படங்களோடு விபரம் சொல்லும் alt பொப் அப் வருகுதில்லை..!

உங்களுக்கு அப்படிப் பிரச்சனைகள் இருக்கிறதா. அல்லது ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா..??! :mellow::huh:

நான் கீமானை பாவித்துத் தான் பதில் எழுதுகின்றேன். எனக்கு இதுவரை ஒரு பிரைச்சினையும் வரவில்லை.

எனக்கு alt பொப் உம் பிரைச்சினையில்லாமல் வருகின்றது. சிலவேளை நீங்கள் இந்த மென்பொருளை கணினியில் நிறுவும் போது ஏதாவது தடைகள் ஏற்பட்டதோ தெரியவில்லை. எனவே ஒருமுறை அழித்துவிட்டு மீண்டும் நிறுவிப் பாருங்கள்.

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

நான் கீமானை பாவித்துத் தான் பதில் எழுதுகின்றேன். எனக்கு இதுவரை ஒரு பிரைச்சினையும் வரவில்லை.

எனக்கு alt பொப் உம் பிரைச்சினையில்லாமல் வருகின்றது. சிலவேளை நீங்கள் இந்த மென்பொருளை கணினியில் நிறுவும் போது ஏதாவது தடைகள் ஏற்பட்டதோ தெரியவில்லை. எனவே ஒருமுறை அழித்துவிட்டு மீண்டும் நிறுவிப் பாருங்கள்.

உங்கள் தகவலுக்கு நன்றிகள். :mellow:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் google toolbar இனைப்பது எப்படி யாருக்காவது தெரியுமா

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உலாவியில் எல்லாம் (Opera) ஓப்பரா'வின் பிரதி. ஆனால் ஒவ்வொரு (tab) ரப்'ம் ஒவ்வொரு (browser) மாதி இயங்குவது மட்டும் வித்தியாசம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.